தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1

2 posters

Go down

பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1 Empty பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1

Post by அ.இராமநாதன் Wed Oct 22, 2014 7:33 pm

சமயோசிதம்!
அரேபிய குதிரை வணிகன் ஒருவன் மாசிடோனிய மன்னர் பிலிப் என்பவரிடம் தனது குதிரையை விற்பதற்காகக் கொண்டு வந்தான். தளபதிகளிடம், "'உங்களில் யாராவது ஒருவர் இந்தக் குதிரையை அடக்க முடியுமா?'' என்று கேட்டார் மன்னர்.
 எவருக்கும் அடங்காமல் தறிகெட்டு ஓடியது அந்தக் குதிரை. எல்லோருக்கும் அதன் அருகில் நெருங்குவதற்குக்கூட அச்சமாக இருந்தது.
 வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்னரின் மகன், தனது தந்தையை நோக்கி, ""நீங்கள் அனுமதித்தால் இந்தக் குதிரையை நான் அடக்கிக் காட்டுகிறேன்'' என்றான்.
 மன்னரும் அனுமதியளிக்க, சிறிது நேரத்தில் அந்தக் குதிரை அவனிடம் அடங்கிப் போனது.
 குதிரை அதனுடைய நிழலைப் பார்த்து, மிரண்டு ஓடியதை அந்த இளவரசன் கவனித்துவிட்டான். அதனால் சூரியன் இருக்கும் திசையை நோக்கி, குதிரையை அவன் செலுத்தியதால், பின்னால் விழும் நிழல் குதிரைக்குத் தெரியவில்லை. அதனாலேயே குதிரை கட்டுக்குள் அடங்கியது.
 அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கியடித்த அந்த இளவரசன்தான் மாவீரன் அலெக்ஸôண்டர்.
-சு.இலக்குமண சுவாமி, மதுரை.
dinamani
-
மானம்!
 ஒரு சமயம் மகாகவி பாரதியார், வெளியில் சென்றுவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, அவரது வீட்டின் முன்பு குடுகுடுப்பைக்காரன் ஒருவன் நின்று கொண்டு "பழைய துணி இருந்தா போடுங்க சாமி..' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
 சற்றும் தாமதியாத பாரதியார் தன் இடுப்பு வேட்டியைக் கழற்றி அவனிடம் கொடுத்தார். கோவணத்துடன் நின்று கொண்டிருந்த பாரதியைப் பார்த்த அவரின் மனைவி கோபத்தில் வீட்டுக்கதவை அடைத்துவிட்டார்.
 உடனே பாரதி, ""செல்லம்மா என்ன இது? உடனே கதவைத் திற...'' என்றார்.
 அதற்கு செல்லம்மா, ""உங்களால அக்கம்பக்கத்துல என் மானம் போகுது'' என்று வீட்டுக்குள்ளிருந்தபடியே குரல் கொடுத்தார்.
  அதற்கு பாரதி, ""அய்யோ செல்லம்மா, இப்போது உன் மானத்தோடு என் மானமும் சேர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரம் கதவைத் திற'' என்று அவசரப்படுத்தினார். இதைக் கேட்டதும் கோபத்தில் இருந்த செல்லம்மா, கொல்லென்று சிரித்து விட்டார். உடனே வந்து கதவைத் திறந்தார்.
-ம.உலகநாதன், உடன்குடி.
dinamani
-
சிரிப்பு!
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நன்றாக வயலின் வாசிக்கத் தெரியும்.
 ஓய்வு நேரத்தில் வயலின் வாசிப்பது அவரது வழக்கம்.
 அப்படி ஒருநாள் தன்னை மறந்து வயலின் வாசித்துக் கொண்டிருந்தபோது அவருடைய நண்பரும் ஹங்கேரி நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகருமான மால்நார் ஐன்ஸ்டீனைப் பார்க்க வந்தார்.
 அவருக்கு ஐன்ஸ்டீன் வயலின் வாசிப்பதைப் பார்த்து ஆச்சரியமாகப் போய்விட்டது.
 இந்த மனிதரால் வயலின் வாசிக்க முடியுமா என்று எண்ணியிருப்பார் போலும். ஆகவே, வயலின் வாசிக்கும் ஐன்ஸ்டீனைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
 அதைக் கவனித்த ஐன்ஸ்டீன், ""நான் வயலின் வாசிப்பதைப் பார்த்து, நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? என்றாவது நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும்போது அதைப் பார்த்து நான் சிரித்திருக்கிறேனா?'' என்று அமைதியாகக் கேட்டார். அந்த நகைச்சுவை நடிகர் வாயடைத்துப் போனார்.
-நா.பிரியதர்ஷிணி, 9-ஆம் வகுப்பு, செஞ்சி.
dinamani
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1 Empty Re: பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 24, 2014 9:48 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum