தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
Page 1 of 1
வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு காது கேட்காது!
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு
சிறு வயதிலிருந்தே காது கேட்காது.
ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் எவ்வளவு தெரியுமா?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு அவர்
சொந்தக்காரர்.
அவர் நினைத்திருந்தால் காது கேட்க ஒரு கருவியையும் கண்டு
பிடித்திருக்கலாம்.
ஆனால், அவர் செய்யவில்லை, ஏன் என்று கேட்டவர்களுக்கு
அவருடைய பதில்:
""என்னிடம் வந்து பேசுபவர்கள், எனக்குப் புரிய வேண்டும்
என்பதற்காக மிக உரக்கக் கத்திப் பேசவேண்டிய நிலைமை
ஏற்படும். இப்படி உரக்கப் பேசுபவர்களால் பொய் சொல்ல
முடியாது தெரியுமா?'' என்பாராம் சிரித்தபடியே!
எவ்வளவு பெரிய மனோதத்துவ உண்மை!
-
-----------------------------------
-ஆர்.பாலாஜிராஜா, திருநெல்வேலி.
dinamani

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
சுவாமி விவேகானந்தருக்கு அவருடைய பெற்றோர்
சூட்டிய பெயர் நரேந்திரன். பள்ளியில் நரேந்திரன்
படித்துக் கொண்டிருந்தபோது, ஒருசமயம், ஆசிரியர்
அவனைப் பார்த்துக் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அதற்கு நரேந்திரன் பதில் சொன்னான்.
அவன் சொன்ன பதில் தவறு என்று ஆசிரியர்
சொன்னார்.
"இல்லை, அய்யா... இதுதான் சரியான விடை'
என்று நரேந்திரன் சொன்னான். ஆசிரியர் கோபப்பட்டு,
"தவறான விடையைச் சொன்னதோடு அல்லாமல்,
இதுதான் சரியான விடை என்று கூறுகிறாயா?'' என்று
கேட்டு, அவனைப் பிரம்பால் அடித்தார்.
நரேந்திரன் மீண்டும் அதையே கூறினான்.
ஆசிரியருக்குக் கோபம் அதிகமாகி மீண்டும் பிரம்பால்
அடித்தார். நரேந்திரன் மீண்டும் தான் சொன்னதே
சரியான விடை என்று கூறினான்.
ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது. புத்தகத்தை எடுத்து
அவசர அவசரமாகப் புரட்டிப் பார்த்தார். நரேந்திரன்
சொன்ன விடைதான் சரியான விடை என்பதைத்
தெரிந்து கொண்டார்.
தலைகுனிந்து நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார். அவனுடைய மன உறுதியைப் பாராட்டவும்
அவர் தவறவில்லை!
-
-----------------------------
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

புத்திசாலித்தனம்!
சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பந்து பக்கத்திலிருந்த மரப் பொந்தில் போய் விழுந்தது.
என் பந்து எனக்கு வேண்டும் என்று பந்துக்குச்
சொந்தக்காரப் பையன் பிடிவாதம் பிடித்து அழ
ஆரம்பித்தான்.
பொந்துக்குள் பாம்போ, தேளோ இருக்கலாமென்று
எல்லோரும் பயந்தனர். கையை விட்டு எடுக்கமுடியாத
அளவுக்குப் பொந்தும் ஆழமாக இருந்தது!
அப்போது அந்த வழியே வந்த ஒரு சிறுவன் அழுது
கொண்டிருந்தவனை விசாரித்து நடந்ததை அறிந்தான்.
உடனே, இரண்டு பக்கெட் தண்ணீர் கொண்டு வரச்
சொல்லி, அந்தப் பொந்துக்குள் நீரை ஊற்றினான்.
பொந்துக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பித்ததும் பந்து
அதில் மிதந்து மேலே வந்தது. அழுது கொண்டிருந்த
பையன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.
பொந்துக்குள் தண்ணீர் ஊற்றிப் பந்தை,
புத்திசாலித்தனமாக எடுத்துக் கொடுத்த பையன் யார்
தெரியுமா?
பின்னாளில் பாரதப் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான்!
-
------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.

நல்ல பழக்கம்!
இங்கிலாந்தின் மன்னராக இருந்த ஏழாம் எட்வர்ட்
பேரக் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பேரன் ஆல்பர்ட், தாத்தாவிடம் ஏதோ
பேச வாய் எடுத்தான். அதற்கு ஏழாம் எட்வர்ட்,
""குழந்தாய், சாப்பிடும்போது பேசுவது நல்ல
பழக்கமல்ல; ஆகையால் சாப்பிட்டு முடிக்கும் வரை
பேசாதே!'' என்று சொல்லி அவன் வாயை அடக்கிவிட்டார்.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பிறகு, மன்னர் ஆல்பர்ட்டை
அழைத்து, ""நான் சாப்பிடும்போது ஏதோ சொல்ல வந்தாயே,
அதை இப்போது சொல்...'' என்றார்.
ஆல்பர்ட் முகத்தை வருத்தத்துடன் வைத்துக் கொண்டு,
"இப்பொழுது அதற்கு அவசியமில்லை!'' என்றான்.
"ஏன்?'' சக்கரவர்த்தி கேட்டார்.
"தாங்கள் சாப்பிடும்போது உங்கள் சாப்பாட்டில் ஒரு
பூச்சி இருந்தது. அதைத்தான் சொல்ல வந்தேன்.
ஆனால் தாங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்!
இப்போது அதைச் சொல்லி, என்ன பிரயோசனம்?
நீங்கள்தான் அதைச் சாப்பிட்டு விட்டீர்களே!'' என்றான்
ஆல்பர்ட்.
-
------------------------------
-முக்கிமலை நஞ்சன்

ஏன்?
ஒருமுறை இளைஞன் ஒருவன் ரசிகமணி டி.கே.சி.யின்
வீட்டுக்கு வந்தான். தான் கொண்டுவந்த பணம்
செலவாகிவிட்டதால் ஊருக்குச் செல்ல பணம் தேவை
என்று கேட்டான்.
அவன் பொய் சொல்கிறான் என அங்கே இருந்த
அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் டி.கே.சி. அந்த
இளைஞன் கேட்ட பணத்தைக் கொடுத்து அனுப்பினார்.
அங்கிருந்த அவருடைய நண்பர்களில் ஒருவர் டி.கே.சி.யிடம்,
""ஐயா, அந்த இளைஞன் பொய் சொல்கிறான் எனத்
தெரிகிறது. உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும்
அவனுக்கு நீங்கள் பணம் கொடுத்தனுப்புகிறீர்களே, ஏன்?''
என்று கேட்டார்.
அதற்கு டி.கே.சி. சிரித்துக் கொண்டே சொன்னார்,
"அவன் சொன்னது பொய் என்று எனக்கும் நன்றாகப்
புரிந்தது. பணம் கிடைக்கவில்லை எனில் அவன்
எல்லோரையும் தொல்லை செய்வான். இப்போது
அவன் யாரையும் தொல்லை செய்ய மாட்டான் அல்லவா?
அதற்காகத்தான் நான் பணம் கொடுத்தேன்!''
-
-------------------------------
-விசாகன், திருநெல்வேலி.

குருபக்தி!
முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை,
மஸ்கட் மன்னர் தன் ஊருக்கு வரும்படி ஒருமுறை
அழைப்பு விடுத்திருந்தார். சர்மாவும் போனார்.
அங்கு சென்று இறங்கியதும், மன்னர் தனது காரில்
சங்கர் தயாள் சர்மாவை அமர வைத்து, தானே காரை
ஓட்டிக்கொண்டு சென்றார்.
பின்னர் சர்மா செல்லுமிடத்துக்கெல்லாம் மன்னரே
காரை ஓட்டிக்கொண்டு அழைத்துச் சென்றார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மன்னரின்
உதவியாளர்களுக்கு இது பிடிக்கவில்லை.
அவரிடம் தனிமையில், ""நீங்களோ இந்த நாட்டின் மன்னர்,
நீங்கள் போய் ஒரு இந்திய குடியரசுத் தலைவருக்குக் கார்
ஓட்டிச் செல்கிறீர்களே?'' என்று கேட்டனர்.
அதற்கு மன்னர் பொறுமையாக, ""நான் இந்திய நாட்டு
குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கார்
ஓட்டவில்லை. எனக்கு சின்ன வயதில் பாடம் கற்பித்த
ஆசிரியர் அவர்.
இது எனது ஆசிரியருக்கு நான் செலுத்தும் மரியாதை!''
என்றார்.
மன்னரின் குருபக்தியைக் கண்டு கேள்வி கேட்டவர்கள்
வியப்பில் ஆழ்ந்தனர்.
-
-----------------------------------------
-சுகந்தாராம், சென்னை.

மனசாட்சி!
சுதந்திரப் போராட்ட வீரரான ஈஸ்வர சந்திர வித்யாசாகரின்
நாணயம் மிக அலாதியானது. தனித்தன்மையானது.
அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், தம் சொந்த
வரவு செலவுக் கணக்குகளைப் பரிசோதனை செய்தார்.
அவரிடம் இருக்க வேண்டிய இருப்புத் தொகையை விடப்
பன்மடங்கு அதிகமான தொகை இருப்பில் இருந்தது.
ஒரு காலத்தில் தாம் பள்ளிக்கூட ஆய்வாளராகப்
பணியாற்றிய காலத்தில் அரசாங்கப் பணத்தைத் தவறுதலாக
வைத்துக் கொண்டுவிட்டோமோ என்ற சந்தேகம் அவருக்கு
ஏற்பட்டது.
உடனே அரசு கணக்கு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதி,
தம்மிடமுள்ள அதிகத் தொகையை அரசாங்கத்தின்
சார்பாகப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தப் பணம் எப்படி அரசாங்கத்துக்குப் பாக்கி என்பதை
கணக்கு அதிகாரி எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க
முடியவில்லை!
அவர் இந்த விஷயத்தை வித்யாசாகருக்குத் தெரியப்படுத்தினார்.
இருந்தாலும் அந்தப் பணத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்த
பிறகுதான் வித்யாசாகர் மன அமைதி
-------------------------
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.

கணக்கு கணக்குதான்!
மகாத்மா காந்தி தான் செலவு செய்த ஒவ்வொரு
காலணாவுக்கும் கணக்கு வைத்திருந்தார்.
செலவு செய்வதைத் தீர யோசித்தே செய்வார்.
வண்டிக் கூலி, தபால் செலவு, பத்திரிகைகள் வாங்க
செலவிட்ட தொகை போன்ற சிறு செலவினங்களையும்
கூடக் கணக்கில் எழுதி வைப்பார். தினந்தோறும்
படுக்கைக்குப் போவதற்கு முன்னால் கணக்கைக் கூட்டிப்
பார்த்து மிச்சமிருக்கும் பணம் எவ்வளவு என்று குறித்து
வைத்துக் கொள்வார்.
இந்தப் பழக்கம் காந்தியிடம் இறுதிக்காலம் வரை
நிலைத்திருந்தது. இதனால் பொதுப்பணத்தை லட்சக்
கணக்கில் கையாள நேர்ந்தபோது, அதைச் செலவிடுவதில்
கண்டிப்பான சிக்கனத்தை அனுசரிக்க அவரால் முடிந்தது.
அவர் நடத்திய எல்லா இயக்கங்கள் தொடர்பாகவும்
வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதும் கையில்
மிச்சத் தொகை வைத்திருப்பார்.
தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த இந்தக் கொள்கையை
இளைஞர்கள் பாடமாகக் கொண்டு தம்மிடம் வரும்
ஒவ்வொன்றுக்கும் செலவிடும் தொகை ஒவ்வொன்றுக்கும்
கணக்கு வைக்கவேண்டியதை ஒரு கடமையாகக் கொள்ள
வேண்டும் என்பார் காந்தி.
-
--------------------------------
-புலவர் கோ.தமிழரசன், செஞ்சி.

Similar topics
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
» பல்சுவை - தொடர் பதிவு
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
» பல்சுவை - தொடர் பதிவு
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum