தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
சுயசிந்தனை!
அரிஸ்டாட்டிலிடம் அலெக்ஸôண்டர் மாணவராக இருந்த நேரம். அரிஸ்டாட்டில் தமது மாணவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
""நீங்கள் மன்னராக இருந்தால், உங்கள் நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?''
ஒரு மாணவன் சொன்னான், ""ஐயனே, அமைச்சரவையைக் கூட்டி அவர்கள் ஆலோசனைப்படி நடப்பேன்...''
மற்றொரு மாணவன் சொன்னான், ""என் முன்னோர்களின் வழிமுறைகளைக் கேட்டறிந்து அதன்படி நடப்பேன்.''
அடுத்ததாக அலெக்ஸôண்டர் கூறினார்: ""சூழ்
நிலைக்கு ஏற்றபடி முடிவெடுப்பேன்...''
அதைக் கேட்ட அரிஸ்டாட்டில், ""சபாஷ், சரியான முடிவு!'' எனப் புகழ்ந்தார்.
அலெக்ஸôண்டரின் இந்த சுயசிந்தனைதான் அவருக்கு வெற்றிகளைத் தேடித் தந்தது.
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
படிப்பது எதற்காக?
நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,""படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு லிங்கன்,""நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
நெ.இராமன், சென்னை.
dinamani
-
உழைப்பு...
அமெரிக்காவில் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சில வீரர்கள் ஒரு பெரும் உத்திரத்தை சிரமப்பட்டு நகர்த்திக் கொண்டிருந்தனர்.
அக்குழுவின் தலைவன் குதிரை மீது அமர்ந்து, அவர்களை அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது அவ்வழியே குதிரையில் வந்த மற்றொரு வீரன், அந்தக் குழுத் தலைவனைப் பார்த்து, ""நீயும் இறங்கி இவர்களுக்கு உதவக்கூடாதா?'' என்று கேட்டான்.
""நான் இந்தக் குழுவின் தலைவன், இவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதா?'' என்று உறுமினான்.
வந்த வீரன், தனது குதிரையிலிருந்து இறங்கி, அந்த வீரர்களோடு சேர்ந்து உத்திரத்தை நகர்த்தி வைத்துவிட்டுத் தனது குதிரையில் ஏறிக் கிளம்பினான்.
""நீ யார்?'' என்று அந்தக் குழுத் தலைவன் கேட்டான்.
""என் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன்'' என்று கூறிவிட்டு விரைந்தான்.
அவர்தான் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி.
-வீ.ராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
-
முன்னேற்றம்...
ஐன்ஸ்டீன். நண்பர் பிலிப் பிராங்குடன் பெர்லினில் இருந்த வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குச் செல்ல விரும்பினார்.
இருவரும் போஸ்டாம்ப் என்ற பகுதியிலுள்ள பாலத்தில் சந்தித்துக் கொள்வது என ஏற்பாடு.
பிலிப், பெர்லினுக்குப் புதியவர். அதனால் குறித்த நேரத்துக்குத் தன்னால் வர முடியாதே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
உடனே ஐன்ஸ்டீன், ""பரவாயில்லை. எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்'' என்றார்.
""உங்கள் பொன்னான நேரம் வீணாகுமே?'' என்றார் பிராங்க்.
""நான் செய்யும் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்வேன். வீட்டிலிருந்து செய்யும் ஆராய்ச்சியை பாலத்தின்மீது அமர்ந்து செய்தால் போச்சு'' என்றார் ஐன்ஸ்டீன் அலட்சியமாக.
சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் பொருட்படுத்தாதவர்கள்தான் சாதிக்கிறார்கள்.
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
-
தலைசிறந்தவர்...
எச்.ஏ.ரெüலண்ட் என்ற புகழ்பெற்ற அமெரிக்க பெüதிக விஞ்ஞானி, ஒருமுறை நீதிமன்றம் சென்று சாட்சி சொல்ல வேண்டி வந்தது. அப்போது அரசாங்க வழக்கறிஞர் அவர் ஒரு விஞ்ஞானிதானா என்றறிய அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
""அமெரிக்காவின் மிகச்சிறந்த பெüதிக விஞ்ஞானி யார்?'' என்றார்.
அதற்கு ரெüலண்ட், மிகவும் தெளிவாக ""நான்தான்'' என்று பதிலளித்தார்.
அரசாங்க வக்கீல் அவரை மடக்குவதற்காக ""நீங்கள்தான் அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானி என்று நீங்களே சொல்லிக் கொண்டால் எப்படி?'' என்று கேட்டார்.
அதற்கு விஞ்ஞானி அமைதியாகச் சொன்னார்: ""நான் அவ்வாறு சொல்லிக் கொள்ளும் வழக்கமில்லைதான். ஆனால், சாட்சி கூறுவதற்கு முன் சட்டப்புத்தகத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது, உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை என்று கூற வேண்டியிருந்தது. எனவேதான் இந்த உண்மையை நான் கூற வேண்டி வந்தது.''
-முக்கிமலை நஞ்சன்
dinamani
-
கதர்...
ஒருமுறை கஸ்தூரிபாய் காந்திக்கு காலில் சிறு காயம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. காயத்துக்குக் கட்டுப் போட ஆசிரமப் பெண்மணி ஒருவரிடம் துணி கேட்டார் கஸ்தூரிபாய்.
அதற்கு அப் பெண்மணி மில் துணி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அம்மையாரோ, கதர் துணியைக் கொடுத்தால்தான் கட்டுப் போட்டுக் கொள்வேன் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
அதற்கு அந்தப் பெண், கதர்த் துணி காயத்தின் மீது பட்டால் உறுத்தலாக இருக்கும் என்று கூறினார்.
கதர் துணி உறுத்தத்தான் செய்யும். ஆனால் கதருக்குப் பதிலாக மில் துணியை உபயோகிப்பது காந்திஜியின் கொள்கைகளுக்கு மாறாகப் போய்விடும் என்று கூறிவிட்டு, கதர் துணியாலேயே காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டார்.
-அ.கற்பூரபூபதி, சின்னமனூர்.
dinamani
-
துறவி...
கடவுள் இருப்பதை நம்பாத செல்வந்தர் ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர், ""சுவாமி, தாங்கள் கடவுளுக்காகத் தங்கள் வாழ்க்கையையே துறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே...'' என்றார்.
பரமஹம்சரோ, ""நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட நீர்தான் பெரிய துறவி'' என்றார்.
செல்வந்தருக்கோ அதிர்ச்சியாகப் போய்விட்டது.
""உங்களைவிட நான் பெரிய துறவியா, எப்படி?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
""ஆமாம்... நானோ கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன். நீங்களோ சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்துவிட்டீர்களே. ஆகவே என்னைவிட நீர்தானே பெரிய துறவி...'' என்றார்.
செல்வந்தருக்கு வெட்கமாகப் போய்விட்டது.
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
-
பக்தி...
சர்தார் வல்லபாய் படேல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கைக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலேயரும் ஒரு பிரெஞ்சுக்காரரும் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து படேலை மட்டம் தட்டும் விதமாகப் பேச முயற்சித்தனர்.
ஆங்கிலேயர், ""ஒருவேளை, நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்காவிட்டால் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருப்பேன்'' என்றார்.
அதைக் கேட்ட பிரெஞ்சுக்காரர், ""நான் மட்டும் என்ன... பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயம் ஆங்கிலேயனாகத்தான் பிறந்திருப்பேன்...'' என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த படேல், மெல்லப் புன்னகைத்தவாறே, ""ஒருவேளை நான் இந்தியனாகப் பிறந்திருக்காவிட்டால், அதற்காக வெட்கித் தலைகுனிந்திருப்பேன்'' என்றார்.
அதைக் கேட்ட இருவரும் வாயடைத்துப் போனார்கள். படேலின் தேச பக்தியைக் கண்டு வியந்து போனார்கள்.
-கே.ஆர்.இரமேஷ், கீரனூர்.
dinamani
-
நுண்ணறிவு!
தலைமறைவாகி இருந்த ரஷியப் புரட்சியாளர் லெனினை கைது செய்ய ஜார் அரசு, காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மாஸ்கோ நகரத்தில் அனைத்து தெருக்களிலும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
போலீஸ்காரர்களின் கெடுபிடி நிறைந்த தெரு ஒன்றில், லெனின் ஒரு குடையைப் பிடித்தபடி, ஜாலியாக விசிலடித்துக் கொண்டு மெல்ல நடைபோட்டு வந்து கொண்டிருந்தார்.
""இவரைப் பார்த்தால் லெனின் மாதிரி தெரிகிறதே?'' என்றார் ஒரு போலீஸ்காரர்.
அதற்கு மற்றவர், ""லெனினாக இருந்தால் இப்படி ஜாலியாக விசிலடித்துக் கொண்டு, அதுவும் நம் முன்னே செல்வாரா? அவர் எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறாரோ...? இவர் வேறு யாரோ...'' என்றார்.
அதற்குள் லெனின் அந்தத் தெருவைக் கடந்து வேறு தெருவுக்குச் சென்று தப்பிவிட்டார்.
தைரியம், நுண்ணறிவோடு சமயோசிதமும் வேண்டும்.
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
-
தாய்மண்!
இந்திய விடுதலைப் போராட்ட சமயம். ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் கலந்திருந்தது.
இதைக் கண்ட நேரு, ""ரொட்டியை இப்படிக் கொடுத்தால் எப்படி? சுத்தமான ரொட்டியைக் கொடுங்கள்'' என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டார்.
அதற்கு அதிகாரி ஏளனமாக, ""இதில் இருப்பது உங்கள் தாய்மண்தானே... அதற்காகத்தானே போராடி சிறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இது சுவையாகத்தான் இருக்கும். சாப்பிடுங்கள்...'' என்று சொன்னார்.
உடனே நேரு, ""நாங்கள் போராடுவது மண்ணை மீட்பதற்குத்தானே தவிர, தின்பதற்கு அல்ல'' என்று கோபமாகக் கூறினார்.
சிறை அதிகாரி வாயடைத்துப் போனார்.
-ஆ.விஜயலட்சுமி, பத்தமடை.
dinamani
-
வேலை!
ஹிட்லரின் படைகள் செய்த அட்டூழியங்களை ஓவியமாகத் தீட்டியிருந்தார் பிரபல ஓவியர் பிகாúஸô.
இதையறிந்த ஹிட்லரின் தளபதி ஒருவர் கடும் கோபமடைந்தார்.
பிகாúஸôவிடம் அந்த ஓவியத்தைக் காட்டி, ""இது நீ செய்த வேலைதானே?'' என்று சீறினார்.
அதற்கு, பிகாúஸô அமைதியாக, ""இல்லையில்லை.... எல்லாம் நீங்கள் செய்த வேலை...'' என்றார்.
தளபதி கேட்டது ஓவியத்தைப் பற்றி. பிகாúஸô சொன்னது ஓவியம் சித்திரித்திருந்த சம்பவங்களைப் பற்றி..!
-நெ.இராமன், சென்னை.

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1
» மேன்மக்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - தொடர் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum