தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:59 pm

உரிமை!

இங்கிலாந்து பார்லிமெண்டில் சர்ச்சிலின் நண்பர் 
வில்லியம் ஹிக்ஸ் என்பவர் பேசும்போது, அக்கருத்து
 தனக்கு உடன்பாடில்லை என்பதைக் காட்டுவதற்காக, 
சர்ச்சில் மறுப்பது போலத் தலையை ஆட்டினார்.

 அதைப் பார்த்து வில்லியம் கிண்டலடித்துவிட்டு, 
"என் நண்பர் தனது தலையை அசைப்பதைப் 
பார்க்கிறேன். ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
என் கருத்தைக் கூற எனக்கு எப்போதும் உரிமை 
உண்டு'' என்றார் கேலியாக.

 உடனே சர்ச்சில் எழுந்து, "என்னுடைய சொந்தத் 
தலையை அசைப்பதற்கு எனக்கு எப்போதும் உரிமை 
உண்டு'' என்றார். நண்பர் தலை கவிழ்ந்தார்.
-
---------------------------------

-அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:59 pm

தரிசனம்!
 
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது கோயில் 
தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்.

 அந்தக் கோயில் நிர்வாகத்தினர், மற்ற பக்தர்களைக் 
கவனியாது, ராஜாஜியை கோயிலுக்குள்ளேயும் 
கவர்னர் ஜெனரலாகவே மதித்து சிறப்பு 
மரியாதைகளோடு வரவேற்க ஆரம்பித்தார்களாம்.

 இந்த ஏற்பாடுகளைக் கவனித்த ராஜாஜிக்குக் கோபம் 
வந்தது.

 "எல்லாவற்றையும் நிறுத்துங்கள். நான் வாசலில் எனது 
செருப்பைக் கழற்றி வைத்தபோதே என்னுடைய கவர்னர்
 பதவியையும் கழற்றி வைத்துவிட்டேன். 

வெளியே போகும்போது இரண்டையும் மாட்டிக் 
கொள்வேன். ஆண்டவன் சந்நதியில் அனைவரும் சமம். 
எல்லோரையும் போலவே என்னையும் நடத்துங்கள்'' 
என்றாராம்.
-
-----------------------------------
 தணுஜா
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:59 pm

வெற்றி!

 கன்னியாகுமரியில் கம்பீரமாக நிற்கின்றது 
விவேகானந்தர் பாறை.

 விவேகானந்தர், அந்தப் பாறைக்குச் செல்வதற்கு முன்பு 
மொட்டைப் பாறை, வழுக்குப் பாறை என்ற பெயர்களில் 
அதை அழைத்து வந்தார்கள்.

 எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும் அப்பாறைக்குச் 
சென்று தியானம் செய்ய விரும்பினார் விவேகானந்தர். 
எப்படிச் செல்வது?

 படகுக்காரர்களிடம் தன்னைக் கொண்டுபோய் விடும்படி 
கேட்டுக் கொண்டார்.

 விவேகானந்தரிடம் காசு இல்லையென்பதால் அவரைப் 
படகில் ஏற்ற மறுத்துவிட்டனர்.

படகுக்காரரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க விரும்பவில்லை 
விவேகானந்தர்.

 சரேலெனக் கடலில் குதித்தார். நீச்சல் அடிக்க ஆரம்பித்தார். 
பாறைக்கு நீந்தியே சென்று பாறை மீது ஏறி கம்பீரமாக 
நின்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.
-
---------------------------------------

-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:24 pm

உணர்வு!
 
ஜோசப் டோக் என்ற ஆங்கிலேயர், காந்தியடிகளைச் 
சந்தித்து உரையாடியபோது, ""சத்தியாகிரகம் என்ற 
தத்துவ உணர்வு உங்களுக்குத் தோன்ற அடிப்படையாக 
இருந்தது எது?'' என்று கேட்டார்.

 காந்தியடிகள்,
 ""நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது 
பாடத்தில் வந்த ஒரு குஜராத்திப் பாடல்தான் சத்யாகிரக 
உணர்வை எனக்குத் தந்தது. 
தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதன் மூலம், 
அவனுக்குத் தீமையை உணரச் செய்ய வேண்டுமென 
அந்தப் பாடல் அறிவுறுத்தியது. 

பின்னர் இயேசுநாதரின் மலைச் சொற்பொழிவை 
பைபிளில் படித்த போது அந்த குஜராத்திப் பாடலின்
 உண்மையான பொருள் என்னவென்று எனக்கு
 நன்றாகப் புரிய வந்தது. 

மீண்டும் இயேசுநாதரின் மலைப் பொழிவை படித்துப் 
படித்து அதன் ஆழ்ந்த கருத்துகளை மனதில் நன்கு 
வாங்கிக் கொண்டேன். இப்படித்தான் சத்யாகிரக 
உணர்வு எனக்குள் தோன்றியது'' என்றார்.
-
------------------------------------------

-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:25 pm

சலுகை!

முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 
தந்தை ஆசிரியராக வேலை பார்த்தவர்.

 அவர் வீட்டிலிருக்கும்போது ஒருமுறை கூட 
மொரார்ஜிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது 
கிடையாது.

 ""உனக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தால், 
மற்ற மாணவர்களைவிட உன்னை அதிகமாகக் 
கவனிக்கிறேன் என்று அர்த்தமாகும். 

என்னுடைய மாணவர்களுக்கிடையே பேதம் 
கற்பிக்கவோ ஒருவனுக்கு மட்டும் அதிக சலுகை
 காட்டவோ நான் தயாராக இல்லை. 

அதனால் வீட்டில் என்னிடம் பாட சம்பந்தமாக 
எந்த சந்தேகமும் கேட்க வேண்டாம்'' என்று தனது 
மகனிடம் கூறிவிட்டார்.

 ஆசிரியர்கள் நெறிமுறையோடும் சேவை 
மனப்பான்மையோடும் வாழவேண்டும் என்பதற்கு 
மொரார்ஜியின் தந்தை உதாரணமாகத் திகழ்ந்தார்.
-
--------------------------------------------

-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:26 pm

பஞ்சம்!

 பெர்னார்ட்ஷாவும் செஸ்டர்டனும்
 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமகால எழுத்தாளர்கள். 

ஷா மிகவும் மெல்லிய உடல்வாகு உடையவர். 
செஸ்டர்டனோ பருமனாக இருப்பார்.

 செஸ்டர்டனும் பெர்னார்ட்ஷாவும் ஒருநாள் சந்தித்துக் 
கொண்டனர். அப்போது செஸ்டர்டன் ஷாவைப் பார்த்து,
 ""உன்னைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்தது 
போலத் தெரிகிறதே!'' என்று கிண்டலடித்தார்.

 பெர்னார்ட்ஷாவிடமிருந்து தயக்கமின்றி பளிச்சென்று 
பதில் வந்தது.

 ""உன்னைப் பார்த்தால் அந்தப் பஞ்சத்துக்குக் காரணம் 
என்ன என்பது புரிகிறது.''

 இதைக் கேட்டதும் செஸ்டர்டனுக்கு சிரிப்பு வர, 
இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
-
---------------------------------------------

-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:27 pm

வழக்கு!

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் 
வழக்கறிஞராக இருந்தபோது, ஒருநாள் பணக்காரர் 
ஒருவர் லிங்கனிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் 
ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது.

 பணக்காரர் விவரத்தைச் சொல்லி, வழக்குப் போட
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 ""வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப் 
போகிறீர்கள்?'' என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச் 
சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக 
இல்லை.

 ""சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் 
கட்டணமாக நீங்கள் தர வேண்டும்'' என்று லிங்கன் 
கேட்டார்.

 பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம் 
கொடுத்தார்.

 அதைப் பெற்றுக் கொண்ட லிங்கன் அந்த ஏழையை 
அழைத்து அவரிடம் 5 டாலர்களைக் கொடுத்துக் 
கடனை அடைக்கச் சொன்னார்.

 பணக்காரரும் கடன் கிடைத்த மகிழ்ச்சியில் தமது 
இல்லம் திரும்பினார்.
-
--------------------------------------

-இராதை இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:28 pm

ஆலயம் செல்!

புக்கர் டி.வாஷிங்டன், புகழ்பெற்ற பேராசிரியர்
மற்றும் எழுத்தாளராக இருந்தவர்.

இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச் 
சென்றார்.

அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள் 
விட மறுத்தனர்.

""நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் 
பரவாயில்லை. நான் என்ன செய்யவேண்டும் 
என்பதைக் கடவுள் எனக்குச் சொல்வார்...'' என்று 
கூறிவிட்டுத் திரும்பினார்.

ஆண்டுகள் பல கடந்தன... புக்கர் டி.வாஷிங்டன் 
புகழ்மிக்க எழுத்தாளரானார்.

மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார்.

அப்போதும் அவரை உள்ளே செல்ல 
அனுமதிக்காதவர்கள், ""என்ன கடவுள் உங்களிடம் 
ஏதாவது சொன்னாரா?'' என்று ஏளனமாகக் கேட்டனர்.

உடனே வாஷிங்டன், ""இப்போது நான் உங்களைப்
 பார்க்கவே வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை. 
ஏனென்றால் கடவுள் என்னிடம்,

 "நானே அந்த ஆலயத்துக்குச் செல்வதில்லை... 
நீ ஏன் செல்கிறாய்?' என்று கேட்டார்'' எனப் பதிலடி
 கொடுத்தார்.
-
------------------------------------

-என்.இராஜப்பா, மன்னார்குடி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:29 pm

நாணயம்! 

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. "தேசபக்தன்' என்னும்
 தின இதழை நடத்தி வந்தார். அந்தச் சமயத்தில் 
திரு.வி.க.வும் பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் 
இருந்தனர்.

தேசபக்தன் இதழுக்கு நிதி உதவியாக, தம்முடைய 
பங்காக ரூபாய் ஆயிரம் அனுப்பியிருந்தார் பெரியார்.

இச்செய்தியை ""பெரியார் இராமசாமி நாயக்கர் 
ஆயிரம் ரூபாய் அளித்தார்'' என்று தேசபக்தனில் 
வெளியிட்டார் திரு.வி.க.

அதைப் படித்த பெரியார், திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம் 
எழுதினார். அதில்-

""நான் ஆயிரம் ரூபாய் அளித்ததாக வந்திருப்பதிலே
 ஒரு திருத்தம் போடுங்கள். இராமசாமி நாயக்கர்
 மூலமாக வந்த தொகை ஆயிரம் ரூபாய் என்று செய்தி 
போடுங்கள்.''

இதற்குக் காரணம், அவர் மற்றவர்களிடமிருந்தும் 
வசூலித்துச் சேர்த்த பணத்தோடு தனது பணத்தையும் 
போட்டுத்தான் அனுப்பியிருந்தார்.
எத்தகைய நேர்மை!
-
----------------------------------------

-எல்.நஞ்சன், முக்கிமலை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:30 pm

காலம்... 

சிறந்த விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 
ஒரு புத்தகக்கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்குப்
 புத்தகம் வாங்க வந்த ஒருவர், ஒரு புத்தகத்தைத் 
தேர்ந்தெடுத்து, அதன் விலை என்ன என்று கேட்டார்.

அதற்கு ஃப்ராங்க்ளின், ""ஒரு டாலர்...'' என்றார்.

வாடிக்கையாளர், புத்தகத்தின் விலையைக் குறைக்க 
15 நிமிடங்கள் பேரம் பேசினார்... 

பொறுமையிழந்த பெஞ்சமின், ""புத்தகத்தின் விலை 
இப்போது ஒன்றரை டாலர்'' என்றார். 

அதிர்ச்சியுற்ற அந்த மனிதர், ""நான் புத்தகத்தின் 
விலையைக் குறைக்க முயற்சிக்கிறேன்... நீங்களோ, 
விலையை ஏற்றிவிட்டீர்களே..!'' என்று கேட்டார்.

""உன்னோடு பேசியதால் எனக்கு 15 நிமிடங்கள் 
வீணாகிவிட்டது. அதனால் புத்தகத்தின் விலை 
அதிகமாகிவிட்டது'' என்றார் ஃப்ராங்க்ளின்.
-
--------------------------------------

-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை. 
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:31 pm

முன்மாதிரி...

சர்.சி.வி.ராமன் பாரத் ரத்னா விருதுக்குத் தேர்வு 
செய்யப்பட்டிருந்தார். விருது பெற வரும்போது 
தனது சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் 
மாளிகையில் தங்க வேண்டும் என அழைப்பு 
விடுத்தார், 

அப்போதைய குடியரசுத் தலைவர்
 டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

 ஆனால், ""டாக்டர் பட்டம் பெற இருக்கும் எனது 
மாணவன் ஒருவனின் ஆய்வறிக்கையை நெறிப்படுத்தி 
உதவும் பணிக்கு அவருடன் தங்கவிருப்பதால், 
தங்கள் அழைப்பை என்னால் ஏற்க இயலாது'' என்று 
தெரிவித்துவிட்டார் ராமன்.

 குடியரசுத் தலைவரின் விருந்தினராகும் கெüரவத்தை
விடத் தன்னுடைய மாணவனின் வளர்ச்சியில் அக்கறை 
காட்டிய சர்.சி.வி.ராமனின் கடமை உணர்ச்சியை 
எல்லோரும் மெச்சிப் பாராட்டினார்கள்.
-
----------------------------------------

-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:32 pm

உயர்ந்த உள்ளம்

 ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் 
அமரகவி பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை 
அன்புடன் வழங்கினார். 

அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் 
பாரதியார். அவர் சென்ற வழியில் ஒருவன் 
உடையின்றிக் கிடப்பதைப் பார்த்த பாரதியார் 
அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்திவிட்டார்.

 துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் 
கண்ட நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். 

பாரதியார் நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் 
தெருவில் உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் 
காட்டினார். 

இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,"
"பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இந்த 
உலகம் நன்றாக இருக்க வேண்டும்'' என்று உளம் 
கசிந்தார்.
-
------------------------------------

ஜி.அருள்குமார், மன்னார்குடி
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:40 pm

இதிலென்ன அதிசயம்!

காந்தி ஒருமுறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார். 
அவருடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரும் 
சென்றிருந்தனர். 

""இங்கே ஜோக் ஃபால்ஸ் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. 
இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம். அதைப் 
பார்க்கலாமே!'' என்றனர் அவர்கள்.

 ""எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 
நீங்கள் போய்ப் பாருங்கள்'' என்றார் காந்தி.

 ""என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். 
நயாகராவைவிட மிக உயரத்திலிருந்து விழுகிறதாம். 
இந்த அதிசயத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்'' 
என்றனர் அவர்கள்.

 காந்தி சொன்னார்,""இதிலென்ன அதிசயம்! 
ஆகாயத்திலிருந்து விழும் மழைத் தண்ணீரை
விடவா இது உயரத்திலிருந்து கொட்டுகிறது?''
-
--------------------------------------

ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:41 pm

கருணை உள்ளம்

ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த 
சமயம், அவருடைய சொற்பொழிவைக் கேட்க 
அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம்
 கூடினார்கள். 

மாட்டு வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார்
 பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னால் அங்கு 
சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மாட்டை 
அடித்து வேக வேகமாக ஓட்டி வந்தார்.

 பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார்,
 நுரை தள்ளியபடியே மூச்சிரைத்தப்படி நின்று 
கொண்டு இருந்த மாட்டைப் பார்த்தார். 
உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே 
சென்றார்.

 அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு,
 ""என்னால் அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' 
என்று கண்ணீர் பெருகினார்.

 செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார். 

 வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், 
கண்ணீர் சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
-
--------------------------------

மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:42 pm

கவலைகள் எப்படி இருக்கும்?

விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில் 
சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை.
 அப்போது ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,
""நீ கோயிலுக்குச் சென்று அன்னையிடம் முறையிடு. 
அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள், 
கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில் 
அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள் 
அனுப்பினார்.

 பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம்
,""முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர்
,""அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார். 
இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது. 

 இறுதியாக அவர் கூறினார்,""இது என்னால் முடியாது.
 நான் அன்னையின் முன் சென்றதுமே என் கவலைகள் 
பறந்தோடிவிடுகின்றன. நானே அங்கே இருப்பதில்லை. 
என் கவலைகள் எப்படி இருக்கும்?'' என்றார். 

இராமகிருஷ்ணரும்,""நீ வீணாகவில்லை, 
எங்கே வேண்டுதல் உள்ளதோ அங்கே பிரார்த்தனை 
இல்லை'' என்றார்.
-
----------------------------------------

அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:43 pm

முதல் ஓட்டம்! 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு துறையூரில் 
ஒரு சினிமா கொட்டகை இருந்தது. ஒருநாள் 
துரைராஜ் என்பவர் அவரிடம் வந்து ஒரு வேலை 
போட்டுத் தரும்படி கேட்டார். 

துரைராஜ் பார்க்க உடற்கட்டோடு, சுறுசுறுப்பாகவும் 
காணப்பட்டார். கலைவாணர் அவரிடம் ஒரு கேள்வி
 கேட்டார்.

 ""திடீரென்று கொட்டகையில் தீ பிடித்துவிட்டது 
என்று வைத்துக்கொள்! அப்போது நீ என்ன செய்வாய்?''

 ""அதைப்பற்றி அண்ணா நீங்கள் கொஞ்சமும் 
கவலைப்பட வேண்டியதில்லை. கொட்டகையில்
 இருந்து ஓடுகிறவர்களிலேயே நான்தான் 
முதலாவதாக இருப்பேன்'' என்றார் துரைராஜ். 

அங்கிருந்த எல்லோரும் "பக்' என்று சிரித்து
விட்டனர்.
-
----------------------------

தேனி முருகேசன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ... Empty Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum