தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் ஒரு பூக்காடு
3 posters
Page 1 of 1
தமிழ் ஒரு பூக்காடு
தமிழ் ஒரு பூக்காடு
பாவலர் கருமலைத்தமிழாழன்
முத்தமிழே ! ஞாலத்தில் முந்தி வந்தே
மூவாமல் கன்னியென இலங்கு கின்றாய்
தித்திக்கும் அமுதமெனச் சுவையாய் நாவில்
திகழ்கின்றாய் ! முச்சங்கப் புலவ ராலே
எத்திக்கும் புழ்மணக்கும் ஏற்றம் பெற்றாய் !
எழுந்துவந்தே கடற்கோள்கள் அழித்த போதும்
வித்தாக முளைத்துநின்றாய் ! மூவேந் தர்தம்
வளர்ப்பினிலே பூக்காடாய் செழித்து நின்றாய் !
எழுத்திற்கும் சொல்லிற்கும் நெறிவ குத்தே
எழுதுகின்ற உலகத்து மொழிக ளுக்குள்
எழுத்திற்குள் அடங்காத உணர்வை; காதல்
எழுப்புகின்ற மெய்ப்பாட்டை இல்ல றத்தை
தழுவுகின்ற கூடலினை ஊடல் தன்னை
தாய்செவிலி பாங்கிபாங்கன் வாயில் கூற்றை
வழுவாத மறத்தைவாழ்வின் பொருளைக் கூறும்
வண்தமிழோ இலக்கணத்துப் பூக்கா டென்பேன் !
நிலம்ஐந்தாய் பகுத்ததனைத் திணைக ளாக்கி
நிகழ்கின்ற நிகழ்வுகளைத் துறைக ளாக்கிப்
புலப்பண்பைக் கருஉரியாய் அகத்தில் வைத்தும்
புகழ்வீரம் புறமாக்கிப் பத்துப் பாட்டாய்
நிலவிடும்எட் டுத்தொகையாய் அறமு ரைக்கும்
கீழ்க்கணக்காய்க் காப்பியமாய் தொன்னூற் றாறாய்ப்
பலப்பலவாய் வாழ்வியலை எதிரொ லிக்கும்
பசுந்தமிழோ இலக்கியத்துப் பூக்கா டென்பேன் !
நங்கையிடம் தூதாக நடக்க வைத்து
நரிதன்னைப் பரியாக்கி சாம்பல் தன்னை
மங்கையாக உயிர்ப்பித்து முதலை உண்ட
மதலையினை உமிழவித்துப் பாய்சு ருட்டி
இங்குனக்கோ இடமின்றேல் எனக்கு மில்லை
என்றாழ்வார் பின்செல்ல வைத்துப் பாட்டால்
எங்குமுள்ள இறைவனையே ஆட்டி வைத்த
எழிற்றமிழோ பக்திமணப் பூக்கா டென்பேன் !
கீர்தனைகள் எனப்புரியா மொழியில் பாடக்
கீழ்மேலாய்த் தலையாட்டும் மாடாய் ஆனோம்
சீர்த்தகுரல் கைக்கிளையும் துத்தம் தாரம்
விளரியொடு உழைஇளியும் ஏழாய் நின்று
ஆர்த்தசுரம் பன்னிரண்டு பாலைக் குள்ளே
அரும்பண்கள் நூறோடு மூன்றில் தேனைச்
சேர்த்தளிக்கும் துளைநரம்பு கருவி கொண்ட
செந்தமிழோ இசைநிறைந்த பூக்கா டென்பேன் !
போர்க்களத்தில் அறம்பார்த்தும் விழுப்புண் மார்பைப்
பொருதுபெறப் போட்டியிட்டும் பிறர்இல் நோக்கா
பேர்ஆண்மைக் காளையரைக் களவில் பார்த்தும்
பெருங்காளை அடக்கிவரக் கற்பில் சேர்ந்தும்
பார்சுற்றிக் கடல்கடந்து பொருளை ஈட்டிப்
பகிர்ந்தளித்தும் சாதியற்ற சமத்து வத்தில்
ஊர்இணைந்தும் வாழ்ந்திருந்த சங்க கால
ஒண்தமிழோ வாழ்வியலின் பூக்கா டென்பேன் !
அன்றில்போல் அன்பிணைந்த காதற் பண்பை
அழகான இல்லறத்தை மக்கட் பேற்றை
துன்பத்தை இன்முகமாய் ஏற்கும் நெஞ்சை
துவளாமல் வினையாற்றும் பக்கு வத்தை
நன்மைதரும் மக்களாட்சி மாண்பை செங்கோல்
நடத்துகின்ற அமைச்சர்தம் மதியைச் சொல்லும்
சின்னவடி முப்பாலால் செழித்தி ருக்கும்
சீர்தமிழோ குறள்மணக்கும் பூக்கா டென்பேன் !
வானத்தில் ஊர்தியினைப் பறக்க விட்டு
வளியடக்கிக் கடல்நீரில் கலத்தை விட்டு
ஞானத்தால் அணுப்பிளந்து பூமிக் கோளோ
ஞாயிற்றைச் சுற்றுகின்ற செய்தி சொல்லி
வானளாவ நிற்கின்ற கோபு ரங்கள்
வழியடைத்து நீர்தேக்கும் அணைகள் என்றே
நானிலமும் வியக்கின்ற அறிவைப் பெற்ற
நற்றமிழோ அறிவியலின் பூக்கா டென்பேன் !
நெருப்பாக இருந்தவளோ நெருப்புக் குள்ளே
நிதம்வெந்து மாயும்மன் றல்கை யூட்டை
ஒருகுலமாய் வாழ்ந்தவரைப் பகைமை யாக்கி
ஒற்றுமையைச் சிதைத்திட்ட சாதிப் பேயை
உருக்குலைக்கும் மூடத்தை ஏற்றத் தாழ்வை
உழல்கின்ற பெண்ணடிமை ஆண வத்தைக்
கருவறுக்கும் பாரதியார் பாவேந் தர்தம்
கனல்தமிழோ புரட்சியூட்டும் பூக்கா டென்பேன் !
கொடிபடரத் தேரீந்தும் காட்டிற் குள்ளே
கோலமயில் குளிர்போக்கப் போர்வை தந்தும்
துடித்திட்ட பறவைக்குச் சதைய ரிந்தும்
துலக்கிட்டார் கருணையொன்றே துணையா மென்று
வடித்திட்ட யாதும்ஊர் கேளிர் என்னும்
வகையான கருத்தாலே உலகைச் சேர்க்கும்
விடியலுக்கோ அன்பென்னும் விளக்கைக் காட்டும்
வியன்தமிழோ மனிதநேயப் பூக்கா டென்பேன் !
முத்தமிழோ அறிவியலின் மொழியாய் ஓங்கி
முன்னேறிக் கணிப்பொறியில் இடம்பி டித்தே
எத்திசையில் இருப்போரும் அறியும் வண்ணம்
ஏற்றவகைக் குறியீட்டில் எழுத்த மைத்து
வித்தாக மென்பொருளும் சொல்தொ குப்பும்
விசைப்பலகை எனப்பொதுவாய் ஆக்கி ஞாலம்
மொத்தமுமே ஒருநொடியில் படிக்க மாறு
முகிழ்ந்ததமிழ் இணையத்துப் பூக்கா டென்பேன் !
ஆட்சிமொழி தமிழ்என்னும் பூவைச் சேர்த்தே
அங்காடிப் பெயரெல்லாம் தமிழ்ப்பூ வாக்கி
மாட்சிதரும் மழலையர்தம் பள்ளி யெல்லாம்
மணக்கின்ற தமிழ்ப்பூவை மலரச் செய்து
காட்சிதரும் பொறியியலை மருத்து வத்தைக்
கவின்கொஞ்சும் தமிழ்ப்பூவின் தோட்ட மாக்கி
நாட்டிலெல்லா துறைகளிலும் பதியம் வைத்து
நற்றமிழின் பூக்காட்டை வளர்போம் நன்றாய் !
பாவலர் கருமலைத்தமிழாழன்
முத்தமிழே ! ஞாலத்தில் முந்தி வந்தே
மூவாமல் கன்னியென இலங்கு கின்றாய்
தித்திக்கும் அமுதமெனச் சுவையாய் நாவில்
திகழ்கின்றாய் ! முச்சங்கப் புலவ ராலே
எத்திக்கும் புழ்மணக்கும் ஏற்றம் பெற்றாய் !
எழுந்துவந்தே கடற்கோள்கள் அழித்த போதும்
வித்தாக முளைத்துநின்றாய் ! மூவேந் தர்தம்
வளர்ப்பினிலே பூக்காடாய் செழித்து நின்றாய் !
எழுத்திற்கும் சொல்லிற்கும் நெறிவ குத்தே
எழுதுகின்ற உலகத்து மொழிக ளுக்குள்
எழுத்திற்குள் அடங்காத உணர்வை; காதல்
எழுப்புகின்ற மெய்ப்பாட்டை இல்ல றத்தை
தழுவுகின்ற கூடலினை ஊடல் தன்னை
தாய்செவிலி பாங்கிபாங்கன் வாயில் கூற்றை
வழுவாத மறத்தைவாழ்வின் பொருளைக் கூறும்
வண்தமிழோ இலக்கணத்துப் பூக்கா டென்பேன் !
நிலம்ஐந்தாய் பகுத்ததனைத் திணைக ளாக்கி
நிகழ்கின்ற நிகழ்வுகளைத் துறைக ளாக்கிப்
புலப்பண்பைக் கருஉரியாய் அகத்தில் வைத்தும்
புகழ்வீரம் புறமாக்கிப் பத்துப் பாட்டாய்
நிலவிடும்எட் டுத்தொகையாய் அறமு ரைக்கும்
கீழ்க்கணக்காய்க் காப்பியமாய் தொன்னூற் றாறாய்ப்
பலப்பலவாய் வாழ்வியலை எதிரொ லிக்கும்
பசுந்தமிழோ இலக்கியத்துப் பூக்கா டென்பேன் !
நங்கையிடம் தூதாக நடக்க வைத்து
நரிதன்னைப் பரியாக்கி சாம்பல் தன்னை
மங்கையாக உயிர்ப்பித்து முதலை உண்ட
மதலையினை உமிழவித்துப் பாய்சு ருட்டி
இங்குனக்கோ இடமின்றேல் எனக்கு மில்லை
என்றாழ்வார் பின்செல்ல வைத்துப் பாட்டால்
எங்குமுள்ள இறைவனையே ஆட்டி வைத்த
எழிற்றமிழோ பக்திமணப் பூக்கா டென்பேன் !
கீர்தனைகள் எனப்புரியா மொழியில் பாடக்
கீழ்மேலாய்த் தலையாட்டும் மாடாய் ஆனோம்
சீர்த்தகுரல் கைக்கிளையும் துத்தம் தாரம்
விளரியொடு உழைஇளியும் ஏழாய் நின்று
ஆர்த்தசுரம் பன்னிரண்டு பாலைக் குள்ளே
அரும்பண்கள் நூறோடு மூன்றில் தேனைச்
சேர்த்தளிக்கும் துளைநரம்பு கருவி கொண்ட
செந்தமிழோ இசைநிறைந்த பூக்கா டென்பேன் !
போர்க்களத்தில் அறம்பார்த்தும் விழுப்புண் மார்பைப்
பொருதுபெறப் போட்டியிட்டும் பிறர்இல் நோக்கா
பேர்ஆண்மைக் காளையரைக் களவில் பார்த்தும்
பெருங்காளை அடக்கிவரக் கற்பில் சேர்ந்தும்
பார்சுற்றிக் கடல்கடந்து பொருளை ஈட்டிப்
பகிர்ந்தளித்தும் சாதியற்ற சமத்து வத்தில்
ஊர்இணைந்தும் வாழ்ந்திருந்த சங்க கால
ஒண்தமிழோ வாழ்வியலின் பூக்கா டென்பேன் !
அன்றில்போல் அன்பிணைந்த காதற் பண்பை
அழகான இல்லறத்தை மக்கட் பேற்றை
துன்பத்தை இன்முகமாய் ஏற்கும் நெஞ்சை
துவளாமல் வினையாற்றும் பக்கு வத்தை
நன்மைதரும் மக்களாட்சி மாண்பை செங்கோல்
நடத்துகின்ற அமைச்சர்தம் மதியைச் சொல்லும்
சின்னவடி முப்பாலால் செழித்தி ருக்கும்
சீர்தமிழோ குறள்மணக்கும் பூக்கா டென்பேன் !
வானத்தில் ஊர்தியினைப் பறக்க விட்டு
வளியடக்கிக் கடல்நீரில் கலத்தை விட்டு
ஞானத்தால் அணுப்பிளந்து பூமிக் கோளோ
ஞாயிற்றைச் சுற்றுகின்ற செய்தி சொல்லி
வானளாவ நிற்கின்ற கோபு ரங்கள்
வழியடைத்து நீர்தேக்கும் அணைகள் என்றே
நானிலமும் வியக்கின்ற அறிவைப் பெற்ற
நற்றமிழோ அறிவியலின் பூக்கா டென்பேன் !
நெருப்பாக இருந்தவளோ நெருப்புக் குள்ளே
நிதம்வெந்து மாயும்மன் றல்கை யூட்டை
ஒருகுலமாய் வாழ்ந்தவரைப் பகைமை யாக்கி
ஒற்றுமையைச் சிதைத்திட்ட சாதிப் பேயை
உருக்குலைக்கும் மூடத்தை ஏற்றத் தாழ்வை
உழல்கின்ற பெண்ணடிமை ஆண வத்தைக்
கருவறுக்கும் பாரதியார் பாவேந் தர்தம்
கனல்தமிழோ புரட்சியூட்டும் பூக்கா டென்பேன் !
கொடிபடரத் தேரீந்தும் காட்டிற் குள்ளே
கோலமயில் குளிர்போக்கப் போர்வை தந்தும்
துடித்திட்ட பறவைக்குச் சதைய ரிந்தும்
துலக்கிட்டார் கருணையொன்றே துணையா மென்று
வடித்திட்ட யாதும்ஊர் கேளிர் என்னும்
வகையான கருத்தாலே உலகைச் சேர்க்கும்
விடியலுக்கோ அன்பென்னும் விளக்கைக் காட்டும்
வியன்தமிழோ மனிதநேயப் பூக்கா டென்பேன் !
முத்தமிழோ அறிவியலின் மொழியாய் ஓங்கி
முன்னேறிக் கணிப்பொறியில் இடம்பி டித்தே
எத்திசையில் இருப்போரும் அறியும் வண்ணம்
ஏற்றவகைக் குறியீட்டில் எழுத்த மைத்து
வித்தாக மென்பொருளும் சொல்தொ குப்பும்
விசைப்பலகை எனப்பொதுவாய் ஆக்கி ஞாலம்
மொத்தமுமே ஒருநொடியில் படிக்க மாறு
முகிழ்ந்ததமிழ் இணையத்துப் பூக்கா டென்பேன் !
ஆட்சிமொழி தமிழ்என்னும் பூவைச் சேர்த்தே
அங்காடிப் பெயரெல்லாம் தமிழ்ப்பூ வாக்கி
மாட்சிதரும் மழலையர்தம் பள்ளி யெல்லாம்
மணக்கின்ற தமிழ்ப்பூவை மலரச் செய்து
காட்சிதரும் பொறியியலை மருத்து வத்தைக்
கவின்கொஞ்சும் தமிழ்ப்பூவின் தோட்ட மாக்கி
நாட்டிலெல்லா துறைகளிலும் பதியம் வைத்து
நற்றமிழின் பூக்காட்டை வளர்போம் நன்றாய் !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
Re: தமிழ் ஒரு பூக்காடு
அழகிய கவிப் பாட்டு...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ் ஒரு பூக்காடு
அழகு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum