தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாவேந்தர் போல் நாமெழுவோம்

Go down

பாவேந்தர் போல் நாமெழுவோம் Empty பாவேந்தர் போல் நாமெழுவோம்

Post by karumalaithamizhazhan Wed Apr 29, 2015 12:29 pm

(பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின்  பிறந்தநாள் 29-4-15 )
பாவேந்தர் போல்  நாமெழுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
வான்கதிர்தான்   சிதறித்தூள்   பூமி   யாக
            வந்தபோதே   பிறந்தமொழி   தமிழ்தான்   என்றும்
தேன்என்றும்   பால்என்றும்    தெவிட்டி   டாத
            தெள்ளமுதாம்   எனத்தாசன்   புகழ்ந்து   ரைத்தும்
ஊன்உணர்வில்    கலந்தென்னை     இயக்கு    கின்ற
            உயிரென்றும்    தமழ்மொழியை   உயர்த்திச்    சொல்லக்
கூன்மொழியாய்    ஆக்கியின்று   குனியச்    செய்தே
            கூறுகின்றோம்    செம்மொழிக்குச்     சொந்த    மென்றே !
 
தமிழாய்ந்த   தமிழன்தான்   தமிழ  நாட்டின்
            தலைஅமைச்சாய்   வரவேண்டும்   என்று   ரைத்த
அமிழ்தான   கவிஞனிவன்   கருத்தை  ஏற்றே
            அரியணையில்   தமிழனைநாம்    அமர்த்தி   னோமா
நிமிர்ந்திங்கே    தமிழர்காள்   எண்ணிப்   பார்ப்பீர்
            நிலைகுலைந்து   தமிழ்நாடு   போவ   தெல்லாம்
தமிழ்நாட்டில்   தமிழன்தன்    ஆட்சி   யின்றித்
            தமிழல்லார்    அமர்ந்திருக்கும்    அவலத்    தாலே !
 
இருட்டறையில்    உள்ளதடா    உலகம்   சாதி
            இருக்கின்ற   தென்பானும்   இருக்கின்  றானே
உருபடுமா   இந்நாடு   என்று   ரைத்தும்
            ஊர்ஊராய்ப்    பெரியார்தாம்   சுற்றி   வந்து
கருத்தாலே   சமத்துவத்தை    ஊட்டி   விட்டும்
            காணுகின்றோம்   இன்னுமிங்கே    சாதிக்    கொடுமை
அரும்புலவன்   பாவேந்தன்     சொல்லை    ஏற்றே
            அகற்றிடுவோம்     சாதிகளைப்     பொதுமை    காண்போம் !
 
 
 
வேடமிட்டே   ஆரியர்கள்   சூழ்ச்சி    செய்து
            வேதத்தில்   புராணத்தில்    உலவ    விட்ட
மூடத்தின்   மூக்கறுக்கக்   கவிதை   தன்னில்
            மூட்டிவிட்டார்    விழிப்புணர்வை   பாவேந்   தர்தாம்
ஏடகமாம்   குயிலேட்டில்    பஞ்சாங்   கத்தை
            ஏற்றிடாமல்    பகுத்தறிவை   ஏற்றி   டென்றார்
வீடகத்தில்    இன்னும்நாம்   முட்டா    ளாக
            விதிப்படித்தான்    நடக்குமென்றே   வீழு   கின்றோம் !
 
வீட்டினிலே     தமிழில்லை    தெருக்கள்    தம்மில்
            விளம்பரப்    பரகைகளில்    தமிழே   இல்லை
காட்சிதரும்    தொலைக்காட்சி    திரைப்ப   டங்கள்
            காண்கின்ற    செய்தித்தாள்   கல்வி    தன்னில்
தீட்டென்றே    தமிழ்மொழியைத்    துரத்தி   விட்டார்
            தீந்தமிழ்தான்    அழிந்துவிட்டால்    இனமும்   மாயும்
மீட்டெடுக்க    எழவில்லை   என்றால்   ஞாலம்
            மீதினிலே    பெயரின்றிப்    போவோம்   நாளை !
 
வீட்டிற்குள்    முடக்கிவைத்த    பெண்க   ளுக்கு
            விழிப்புணர்வைத்    தருவதுவே    கல்வி   என்று
பாட்டினிலே    பாவேந்தர்   எழுச்சி   ஊட்டிப்
            படிப்பறிவு    பெறுவதற்கே    வழிவ    குத்தார்
நாட்டினிலே    பெண்களின்று    அமைச்ச   ராக
            நாடுவிட்டுப்    பணியாற்றும்    அறிஞ   ராக
காட்சிதரா    கோள்களுக்கும்    செல்வோ   ராகக்
            காண்கின்ற   பெருமையெல்லாம்   அவர்பாட்  டாலே !
 
பாரதிபோல்   யாப்பினையே   சீர்தி   ருத்திப்
            பாமரர்க்கும்   புரியுமாறு   கவிதை   நெய்தோன்
ஊரதிரக்    கருத்தினிலே   புரட்சி   ஏற்றி
            உயர்குடும்பம்   உருவாகப்   பாப்பு  னைந்தோன்
சீரழிந்த    தமிழகத்தைத்    தமிழு   ணர்வை
            சீர்செய்யக்   கனல்தெறிக்கம்   பாபொ   ழிந்தோன்
வேரழிக்க   வந்தபிற    மொழிய   ழிக்க
            வெகுண்டெழுந்த    பாவேந்தர்   போல்நா  மெழுவோம் !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum