தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
நினைவெல்லாம் உன்னோடு
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****
‘நினைவெல்லாம் உன்னோடு’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பன்முக ஆற்றலாளர். சிறந்த கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.
இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராக இருந்து பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விரும்பி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முத்திரை பதித்து வருகிறார். வழக்கறிஞர்களிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். நான், அப்போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தேன். அப்போதே அவரிடம் சொன்னேன். விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்று. என்னுரை ஏற்று வெளிவந்துள்ள நூலிற்கு எனது எளிய அணிந்துரை.
உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை, நூலாசிரியர் செ. குகசீலரூபன், கவிஞராக இருந்த காரணத்தால் தான் அவரால் பல துறைகளில் முத்திரை பதிக்க முடிகின்றது என்பது என் கருத்து.
முதல் கவிதையில் முத்திரை பதித்து உள்ளார். வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
எனக்குப் பிடிக்கும்!
நீ அழுவது கூட / எனக்குப் பிடிக்கும் /
ஆறுதல் சொல்ல எனக்கு ஆசையாக இருப்பதால்!
நீ பிடிவாதம் செய்வது / எனக்குப் பிடிக்கும் /
அப்போது என் / பிள்ளையாக மாறுவதால்!
நீ வியர்வையில் குளிப்பது / எனக்குப் பிடிக்கும் /
பனித்துளிகளுக்கு நடுவே / ரோஜாவைக் காண்பதால்.
பொதுவாக பெண்கள் அழுதால் பிடிக்காது, பிடிவாதம் செய்தால் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இவர் உடன்பாட்டுச் சிந்தனையுடன் ‘பிடிக்கும்’ என்பது நமக்கும் பிடிக்கின்றது.
காதல் கவிதை பலரும் எழுதுகிறார்கள், ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகிறார்கள். நூலாசிரியரின் முதல் நூல் காதல் கவிதைகள் வித்தியாசமாக எழுதி வெற்றி பெற்றுள்ளார். சமுதாயக் கவிதைகளும் நூலில் உள்ளது, கூடுதல் சிறப்பு!
தோல்வி!
நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்.
அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசையை, இருக்கை ஆசையை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். கவிதையைப் படிக்கும் வாசகர்கள் உண்மையில் சிரித்து விடுவார்கள்.
அரசியல்வாதி!
நெஞ்சுக்கும் தொண்டைக்கும் / இழுத்துக் கொண்டிருந்ததுகடைசி நிமிட உயிர் / நாற்காலியில் அமர வைத்தார்கள்
நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தது.
நூலின் தலைப்பான “நினைவெல்லாம் உன்னோடு” நெடிய கவிதை நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். படிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் துணையின் நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.
நாட்டில் நடக்கும் அவலங்களை, ஊடகங்களில் காணும் போது, படிக்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை. அதனை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!
மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.
அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!
இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!
பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். முதுமை பற்றி தன்னம்பிக்கை பற்றி, காதல் பற்றி பல கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
ஏ! பாரத மாதாவே! கவிதையில் உரத்த சிந்தனை சிந்திக்க வைக்கின்றார். பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்!. பிடித்த கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன். எல்லாக் கவிதைகளையும் மடித்து விட்டேன். அணிந்துரையில் அனைத்தையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் மீண்டும் மறுவாசிப்பு செய்து மிகவும் கவர்ந்த வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.
ஹைக்கூ வடிவில் சில கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. எதிர்காலத்தில் ஹைக்கூ 3 வரிகளில் மட்டும் எழுதி, தனியாக ஹைக்கூ நூல் படைப்பார் என்ற நம்பிக்கை உண்டு.
சிகரெட் !
பற்ற வைப்பதேவிரைவில்
பற்ற வைக்கத்தான்.
விரைவில் மடிவாய், தீ மூட்ட வேண்டி வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். புகைப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும்.
உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி சொற்சிக்கனத்துடன் வடித்த கவிதை மிக நன்று.
திருக்குறள் !
வார்த்தைப் பூக்களால்தொடுக்கப்பட்ட
வாழ்க்கை மாலை!
தமிழகத்தில் ஒரு படத்தில் நடித்தவுடன், தமிழக முதல்வர் ஆகி விட வேண்டும் கனவு வந்து விடுகிறது பலருக்கும்.சினிமா பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது, நீண்ட கவிதை என்ற போதிலும் மிகவும் பிடித்த வரிகள் இதோ!
சினிமா!
சாதியும் சினிமாவும் / ஆட்சிக் கட்டிலில்அமர் வைக்கும் என்று / மனப்பால் குடித்தவர்கள்
ஏற்கெனவே சூடுபட்ட / பூனைகளை
ஏனோ நினைப்பதில்லை.
இசைக்கருவிகளில் ஒன்றான சிறிய புல்லாங்குழல் பற்றிய கவிதை மிக நன்று. படிக்கும் போது மனக்கண்ணில் புல்லாங்குழல் தெரிய வைத்து வெற்றி பெறுகின்றார், கவிஞர் செ. குகசீலரூபன்.
புல்லாங்குழல்!
உடம்பிலே பட்ட காயத்திற்குஉதடுகளால் ஒத்தடம்
நன்றிக்கடனாய் / நாதம்!
நன்றி மறவாத காவல் காக்கும் நாய் பற்றிய ஹைக்கூ நன்று.
நாய் / பேசியது / வாலால்!
வாயில்லா ஜீவன் என்பார்கள் நாயை. அது வாலால் பேசிடும் என்பதை உணர்த்துகின்றார்.
பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது, மிக நுட்பமானது, ஆழமானது, அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
கடலை விட / ஆழமானது / கன்னியின் மனது.
நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர்கள் பணிக்கு இடையே கவிதைகள் எழுதுவது பாராட்டுக்குரியது. புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை விருந்தாக உள்ளது. பன்முக ஆற்றலாளரின் ஒருமுகமான உன்னத படைப்பு. இலக்கிய உலகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களே! கவிதை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். படித்துப் பாருங்கள். என் கூற்று உண்மை என்பதை உணர்வீர்கள்.
-- .
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum