தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி

2 posters

Go down

பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Empty பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Mon Dec 21, 2015 9:01 pm

பீப் பாடல்!
கவிஞர் இரா. இரவி
*****
       நடிகர் சிம்பு பீப் பாடல் பாட அனிருத் இசையமைக்க அப்பாடல் யூடியூபில் இணையத்தில் வலம் வர பிரச்சனை வந்தவுடன் இருவருமே உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று சொல்லி இருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சிம்பு வீர வசனம் பேசியது.  எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக இருந்தது.நான்  இசை அமைக்கவில்லை என்று பல்டி அடித்தார் அனிருத்.பிரச்சனை மேலும் பெரிதானது.  கண்டன ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையில் புகார்களும் ஆரம்பமானது.

       நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மிக உருக்கமாக தொலைக்காட்சியில் பேசி இருந்தார்.  டி. ராஜேந்தர் சகலகலா வல்லவர், திறமையானவர், பல ஆண்டுகள் அவர் சம்பாதித்த புகழை, அவரது மகன் சிம்பு சில நொடியில் சிதைத்து விட்டார்.  குடிபோதையில் ரௌடிகள் கத்தும் கெட்ட வார்த்தையை பாடலாகப் பாடலாமா? என்று ஒரு கனம் சிந்தித்து இருக்க வேண்டும். இப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கலாமா? என்று இசையமைத்தவரும் சிந்தித்து இருக்க வேண்டும்.

       இணையத்தில் சிம்பு ஏற்றவில்லை என்கிறார் டி. ராஜேந்தர் சரி.  தவறாக வேண்டுமென்றே யாரோ ஏற்றி விட்டனர்.  ஆனால் பாடியது சிம்பு இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த பாடலுக்கு நடிகை சினேகா சொன்னது போல ஊடகங்களும் அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அந்த ஆபாசப் பாடல் பிரபலமடைந்து இன்று இளைஞர்கள் பலர் அலைபேசியில் வைத்து கேட்டு வருகின்றனர்.  சத்தமாகவும் பாடலை ஒலிக்க விடுகின்றனர்.  நமது சகோதரிகள் அப்பாடல் ஒலிக்கும் நேரம் சென்றால் எவ்வளவு சங்கடப்படுவார்கள்.  இதனை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து இருந்தால் சிம்பு இவ்வளவு கேவலமான கீழ்தரமான பாடலை பாடி இருக்க மாட்டார்.

நடிகர் சிம்பு இசையமைப்பாளர்  அனிருத் இருவருக்கும் நேர்ந்த துன்பத்திற்கு காரணம் கூடா நட்பு .

       புகழ்பெற்ற பெரிய மனிதர்களுக்கு அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் மகன்கள் அமைந்து விடுவது உண்டு.  அதுபோலவே டி. ராஜேந்திரன் பெயரைக் கெடுக்கும் வண்ணம் அவரது மகன் சிம்பு அமைந்து விட்டார்.  இந்தப் பாடல் பிரச்சனை வந்த நிமிடமே மன்னிப்பு கேட்டு இருந்தால் அத்தோடு முடிந்து இருக்கும்.  அதை விட்டு விட்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது போல இந்தப்பாடல் எதிர்ப்பவர்கள் வீட்டில் எல்லாம் கேமிரா வைத்தால் என்னாகும் என்று அகராதியாக பேசி அவரே அவருக்கு மண் போட்டுக் கொண்டார்.

       இனியாவது இவ்வளவு நடந்த பின்பாவது இருவரும் ஊடகத்தின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வரும்.  ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை.  இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

       திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.

       திரைப்படப் பாடல் சிறு குழந்தைகள் வரை மனப்பாடம் செய்து பாடுகின்றனர்.  தொலைக்காட்சிகளிலும் பாடுகின்றனர்.  எனவே திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்தப்பாடலுக்கு கண்டனம் செய்து கட்டுரை எழுதிய சாருநிவேதா  என்ற எழுத்தாளர் பாடலில் பாடிய கெட்ட வார்த்தையை நான் நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு நாவல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் படிப்பது என்று விளக்கம் தந்து இருந்தார் .அவரும் திருந்த வேண்டும் .இனி எந்த நாவலிலும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துக் கூடாது .

       எவ்வளவு பணம் தந்தாலும் சமுதாயத்தை சீரழிக்கும், பாடலையும், தமிங்கிலப் பாடலையும் எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்.

       இந்த நிகழ்வை திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் எச்சரிக்கையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் தமிழ்ப்பாடல்களில் ஆங்கிலச்சொல் கலந்து எழுதுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.  இயக்குனர் கேட்கிறார், தயாரிப்பாளர் கேட்கிறார், நடிகர் கேட்கிறார் என்று ஆங்கிலச் சொல் கலந்து எழுதும் அவலத்திற்கு முடிவு எடுங்கள். சிம்புக்கு நேர்ந்த நிலைமை இனி உங்களுக்கு நேரலாம்.  கவனமாக எழுதுங்கள்.  தமிங்கிலம் தவிர்த்திடுங்கள்.  தமிழ்க்கொலையை நிறுத்திடுங்கள்.
*****
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Empty Re: பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி

Post by Ponmudi Manohar Wed Dec 23, 2015 12:48 pm

மிக  மென்மையாக  எழுதப்பட்ட  ஆனால் ,வன்மையாக கண்டிக்கும்  கட்டுரை .கொலைவெறியாய் தொடங்கிய பாடல் விறுவிறுப்பு.இன்று   
நிலை மாறி ,இந்த வெறுப்பில்  முடிந்திருக்கிறது .தமிழ்ப் படமென்றாலும் தமிழில்  எழுத  ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்  என்று தெரியவில்லை . தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள்  மிகக்  கண்டிப்புடன்  செயல்படுவதே நல்லது ;முறையும்  கூட. நடந்தவைகளுக்கு ,நடப்பவைகளுக்கு  சிம்பு மன்னிப்புக் கேட்பதில்  தவறே இல்லை . அதுதான்  சரி !.
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைப் பாடல் கவிஞர் அழ .வள்ளியப்பா வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பறத்தலுக்கான பாடல்! நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum