தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
Page 1 of 1
சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
சில மாதங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலைச் சம்பவத்தை நம்மில் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சாதி என்ற பெயரில் அரங்கேரிய அந்த மனிதாபிமானமற்ற செயலைப் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் சில நாட்களுக்கு வந்து சென்றன. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் இவ்வநீதியை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை.
[You must be registered and logged in to see this link.]
ஒருபுறம் அறிவியல், தொழில்நுட்பங்கள் என்று இச்சமூகம் வளர்ச்சியடைந்து வந்தாலும், மறுபுறம் இதுபோன்று சாதி வெறியின் கொடூரங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமுள்ளன. இதுபோன்ற அநியாயக் கொலைகளுக்கு என்னதான் தீர்வு?
கடுமையான நீதிமன்றச் சட்டங்களினால் இதுபோன்றக் குற்றங்களைத் தடுக்க முடியுமா? கொடுமையான தண்டனைகளின் மூலம் இவற்றை குறைக்க முடியுமா? இதில் அரசு, போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கு என்ன? இவர்கள் மட்டும்தான் இதற்குக் காரணமா, குடிமக்களாகிய நாம் இவற்றை எதிர்த்து என்ன செய்தோம்? நல்ல வேளை நம் வீட்டில் இதுபோன்று எதுவும் நிகழவில்லை என்ற மெத்தனப் போக்கில் வாழ்கிறோமா?
சாதிக் கொலைகள் தமிழகத்தில் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களிலும் நடந்து வருகின்றன. ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, கேரளா, மகாராஸ்டிரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறிப்பாக கிராமங்களில் இவை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
இன்று தமிழகத்தில் சாதிக் கட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சாதிக் கட்டிகள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள பயந்த நிலை மறைந்து, கலர் கலரான கொடிகளும், கட்சிக் கூட்டங்களும் புற்றீசல் போல் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சாதிக்கட்சிகளினால் அவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை, மாறாக இதுபோன்ற கட்சிகள் வெறும் ஓட்டு வங்கிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளாக உள்ளன. படித்த கல்வியாளர்களும் சாதிப்பற்றுடன் அவரவர் தம் சாதிக்கு ஆதரவளித்து இந்த அலங்களை மேலும் மேலும் வளர்த்து வருகின்றனர்.
எங்கிருந்து வந்தது இந்தச் சாதியும், பேதமும்??
காதல் திருமணம், கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் – இவைகளில் எத்தலைப்பு இது போன்ற திருமணங்களுக்குப் பொருந்தும் என்பது போன்ற பயனற்ற விவாதங்கள் அரங்கேறும் அவலமிகு மாநிலமாக நம் தமிழகம் விளங்கி வருகிறது.
சாதி எதிர்ப்பைப் பற்றிப் பேசும் இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், மறுபக்கம் ஆடம்பரத் திருமணங்களுக்குச் சென்று தலைமை தாங்கி வருகின்றனர். நாளிதழ்களும், தொலைக்காட்சி சேனல்களும் இதுபோன்ற செய்திகளை சரியான முறையில் பயன்படுத்தி தங்களின் TRP வரிசையை உயர்த்திக் கொள்வதோடு நின்று விடுகின்றன. இவர்களால் இங்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.
இதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டில் நடந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்வோமா? ஆதரிப்போம் என்ற நிலை வருமேயானால் அன்றுதான் இதுபோன்ற கொடுமைகள் அழியும்.
எனது பார்வையில் சாதி/மதம் என்ற பெயரில் நிகழும் இக்கொடூரங்கள் மறையும் காலம் வெகுதொலைவிலில்லை, இவை மெல்ல மெல்லக் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. நான் பள்ளி/கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் பயின்ற நண்பர்களின் சாதியை இதுவரை நான் அறியேன், அதே நிலைப்பாடுதான் அவர்களிடத்தும். பள்ளியிலும் சரி, கல்லூரி விடுதியிலும் சரி அதைப் பற்றி நண்பர்களிடத்தில் பேசியதில்லை.
கல்வியினால் இச்சமூகம் சிறப்படையும், அது சாதியை அழிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்தச் சான்றாகும்.
இன்று என்னுடன் படித்த, அலுவகத்தில் வேலை செய்துவரும் பல நண்பர்களும் காதல் திருமணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் வேற்று சாதியினரை மணமுடித்து வாழ்ந்து வருகின்றனர் (நிச்சயம் இத்திருமணங்களில் எதிர்ப்பில்லாமல் இருந்திருக்காது).
இன்று கற்றவர்கள் பலரும் சாதிப் பேய் என்ற போர்வையினுள் உள்ளனர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூற வேண்டும். காதலும் கல்வியும் ஒன்றல்ல, எனினும் இக்காதலும் ஒருநாள் சாதியை அழிக்கும். சாதியினால் அழியும் இதுபோன்ற காதலும் திருமணங்களும், நாளை அந்தச் சாதியையே ஒழித்தழிக்கும்.
சாதி, மதவெறியை பிரசவிக்கும் இன்றைய சாதிக்கட்சிகள் நாளைய கல்விக் கடலில் நிச்சயம் அழியும்.
இன்றைய கலப்பு மணங்கள் நேற்றைய சாதியை அழித்து நாளைய சமூகத்தை ஒன்றிணைக்கும்! எனக்கு நம்பிக்கையுள்ளது!
இன்றைய கலப்பு மணங்கள் நேற்றைய சாதியை அழித்து நாளைய சமூகத்தை ஒன்றிணைக்கும்! எனக்கு நம்பிக்கையுள்ளது!
varun19- புதிய மொட்டு
- Posts : 28
Points : 84
Join date : 04/03/2016
Age : 40
Location : Dubai
Similar topics
» "குப்பை தொட்டி கொலைகள்"
» காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
» மூன்று கொலைகள் - ம. ரமேஷ் சென்ரியு
» கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு
» சாதி...
» காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
» மூன்று கொலைகள் - ம. ரமேஷ் சென்ரியு
» கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு
» சாதி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum