தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நம்பிக்கை கொடு!
நம்பி கை கொடு
நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.
******
நூலில் முதல் பக்கத்தில், “‘நன்றி’ எனக்கு முதல் வகுப்பு முதல் கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும்” என்று நன்றி சொல்லிய விதத்திலேயே நூலாசிரியர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களின் உயர்ந்த உள்ளம் உணர முடிகின்றது.
இவரது இயற்பெயர் ந.கிருஷ்ணவேணி. ஈரோடு மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளவையில் இருந்து சிறு துளிகள்.
"தன் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் ரூ.8000 கடன் தவணைத் தொகை செலுத்தி வருகிறார். "
வங்கியில் கடன் பெற்று தன் பள்ளிக்குத் தேவையான பெஞ்சுகள், நாற்காலிகள், கணினி வாங்கித் தந்துள்ளார். இவரைப் போன்று பலர் அரசுப் பள்ளிகளுக்கு தன் சொந்தப் பணத்தில் உதவி வருவது நெகிழ்ச்சி, மகிழ்ச்சி.
எழுத்தாளர் ஈரோடு கதிர், குழந்தை எழுத்தாளர் விழியன், தலைமை ஆசிரியர் வ.பாபு ஆகியோரின் வாழ்த்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்து உள்ளன. பாராட்டுக்கள்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள் என மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவனுக்கு பாராட்டுக்கள்.
கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்தாழம் மிக்க வரிகள். தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். படிக்கும் வாசகர் உள்ளத்தில் தன்னம்பிக்கைப் பயிரை நடவு செய்திடும் நல்ல வரிகள். பாராட்டுக்கள். முதல் கவிதையிலேயே முத்திரை பதித்து உள்ளார்.
“ஒவ்வொரு நொடியும் நமக்காகத் தான் / அதில்
உயர்வதும் தாழ்வதும் / நம் கையில் தான்
திட்டமிட்டு பயன்படுத்தினால் தான் /
தினம் வெற்றிகள் வந்து மாலை ஆகும்
வீணாய நாமும் செலவழித்தால் /
தோல்விகள் தானே துரத்தி வரும்
செய்வதை முறையாய் செய்யாமல் /
நேரத்தை குறை சொல்லுதல் சரியாமோ?
பொன்னை விட மேலானது பொழுது என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார். ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாகச் செலவழித்தால் சாதனைகள் நிகழ்த்தலாம். சிகரம் தொடலாம்.
அளவிற்கதிகமான இன்பத்தை விட
அளவுக்கதிகமான துன்பமோ
அளவுக்கதிகமான அவமானமோ
அளவுக்கதிகமான காயமோ
நேரும் போது தான்
மாபெரும் வெற்றி அடைகிறான் மனிதன்!
உண்மை தான். நாம் பட்ட காயங்கள், அவமானங்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியை நமக்குள் உருவாக்கி வெற்றி பெற சாதிக்க உதவிடும் என்பது உண்மை.
விரும்பிய பூக்களைக் கண்டால்
கண்களும் காதல் கொள்ளும் !
விரும்பிய இடம் செல்ல
தொலைவும் குறைவாகத் தோன்றும் !
விரும்பி கண்கள் கண்டால்
மௌனம் மொழியாய் ஆகும் !
இப்படி விரும்பிச் செய்தால்
நாம் செய்யும் செயல் எல்லாம்
எத்தனை எளிமையாய் ஆகும்?
எந்த ஒரு செயலையும் விருப்பமின்றி, வேண்டா வெறுப்பாக செய்யாமல் விரும்பி செய்தால் வெற்றி பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையே.
எழுத வருகிறதா / எழுதிப்பாருங்கள் !
பேச வருகிறதா / பேசிப் பாருங்கள் !
வரைய வருகிறதா / வரைந்து பாருங்கள் !
ஓட வருகிறதா / ஓடிப் பாருங்கள் !
உங்களுக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டறியுங்கள்
பேராற்றலாக மாற்றுங்கள் / தொடவியலாத சிகரம் தொடுங்கள்!
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய பேராற்றல் மறைந்து இருக்கும். அது, எது, என்று கண்டுபிடித்து செயலாற்றினால் வாழ்க்கை சிறக்கும், சாதனை பிறக்கும், பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல் பிறந்தோம் சாதித்தோம் என்று வாழ வேண்டும். இப்படி பல சிந்தனைகள் விதைக்கும் விதமாக நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன.
நூலின் பெயருக்கு ஏற்றபடி நூல் படிக்கும் வாசகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் தான் உண்டு, தன் பள்ளி உண்டு என்று சராசரி தலைமையாசிரியர்கள் போல சுருங்கி விடாமல் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதமாக கவிதைகள் எழுதி நூலாக்கி இருப்பது சிறப்பு.
நூலாசிரியர் கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள். இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது கணவர் திரு. செல்லப்பன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
காவி ஆடையில் / உலகையே வலம் வந்த / விவேகானந்தர் !
அரையாடையில் / கோடான கோடி மனங்களில் / இடம் பிடித்த காந்தி !
வெள்ளைப் புடவையில் / உலகமே வணங்கும்படி வாழ்ந்த தெரசா!
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உளதென நாமும் வாழப் பழகுவோம்!
எண்ணங்கள் நன்றாக இருந்தால் செயல்கள் நன்றாக இருக்கும்
நன்றாக இருக்கும் செயல் நன்றானால் சிறப்புகள் கிடைக்கும். வண்ணங்களால் ஆவது ஒன்றுமில்லை என்று உணர்த்தியது சிறப்பு.
வீடு என்பது / உயிரற்ற பொருள் அல்ல
உணர்வுடன் கலந்து உயிர்ப்புடன் விளங்கும்
உன்னத உறவில் விடும் ஒன்று
உறவுகள் சுமந்து உவகையுடன் வாழ்ந்து
உள்ளம் மகிழ்ந்து / உற்சாகமாய் உலாவரும்
அற்புத உலகம் வீடு மட்டுமே / வீடே உலகம்
என உணர்வாய் தோழா!
குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். அன்போடு வாழும் வாழ்க்கை வரம். குடும்பத்தில் மகிழ்வோடு வாழ்வது சுகம். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். என்னடா வாழ்க்கை என்று வெறுக்காமல், நன்மையடா வாழ்க்கை என்று வாழ வேண்டும்.
கொள்கையில் நெருப்பாய் இருங்கள் /
பிறர் மரியாதை கொள்வார்கள்
உதடுகளில் / புன்னகையோடு இருங்கள் /
பிறர் மகிழ்ச்சியோடு அணுகுவார்கள்
உள்ளத்தில் / கருணையொடு உதவுங்கள் /
பிறர் கைகூப்பித் தொழுவார்கள்
அன்பான / சொற்களை பேசுங்கள்
பிறர் உங்களை நேசிப்பார்கள் !
வாழ்வியல் தத்துவம் கூறும் விதமாக கவிதைகள் உள்ளன. எப்படியும் வாழலாம் என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறையோடு வாழ்வாங்கு வாழ்ந்திட வழி சொல்லிடும் வைர வரிகள்.
வாசிக்க வாசிக்க / உன் சுவாசம் கூட சுத்தமாகும்
வாசித்தலை நேசித்தால் / உன் வாழ்வு பிரகாசமாகும்
வாசித்தலே தியான உணர்வு தரும் / பேராற்றல் மிளிரும்
வாசித்தால் தவம் போன்றது / தன்நிலை மறக்கச் செய்யும்!
வாசித்தல் தவம் என்றது சிறப்பு. பல சாதனையாளர்களையும், திறமையாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியது வாசிப்பு தான். வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் வாசிப்பின் மேன்மையை உணர்த்தியது சிறப்பு, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» வணக்கம் தமிழன்ப ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» வணக்கம் தமிழன்ப ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum