தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

Go down

‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்! Empty ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:34 pm

By கவிதைமணி
--------------------



பாப்பா சொல்லும் 
கதைகளால் 
நிரம்பிக்கொண்டிருக்கிறது, 
அவள்
முன்னிரு பற்கள் விழுந்ததால்  
வந்த இடைவெளி!

- சுபர்ணா


**


காட்சியின் தூரமே கண்களின் இடைவெளி ! 
கனவின் தூரமே உறக்கத்தின் இடைவெளி !
வாழ்வின் தூரமே இறப்பின் இடைவெளி !
மௌனத்தின் தூரமே வார்த்தையின் இடைவெளி !
அன்பின் தூரமே நமக்கான இடைவெளி !

- கோபிநாத் பாரதி
--------------------------------

பணத்திற்க்கும்,
நல்ல குணத்திற்க்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
அன்பு-பாசத்திற்க்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
நிறைந்த மனத்திற்க்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
பெறுகின்ற மதிப்பிற்க்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
அடைகின்ற பதவிக்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
கிடைக்கின்ற உதவிக்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
வாங்குகிற மருந்திற்க்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
வேண்டுகிற மகிழ்ச்சிக்கும்
இடையே,


பணத்திற்க்கும்,
அதைப்பெருக்க எடுக்கின்ற முயற்ச்சிக்குமிடையே,


பணத்திற்க்கும்,
நிலைத்த வசதி-வாய்ப்புக்கும்
இடையே,


இருக்கின்ற இடைவெளி;
நடக்கின்ற போராட்டம்,
அதுவே வாழ்க்கை

- ம.சபரிநாத்,சேலம்


தாய்மார்பில் பாலூட்டித்  தமிழை  யூட்டித்
    தமிழ்ப்பண்பை  ஒழுக்கத்தை   அதிற்க  லந்தே
சேய்தன்னை  அன்பாலே  வளர்த்த  தெல்லாம்
    செப்புகின்ற  கனவாகிப்  புட்டிப்  பாலை
வாய்புகட்டித்  தாதியவள்  காசுக்  காக
    வளர்க்கின்ற  கடமையாலே  குழந்தை  யிங்கே
**
தாய்மொழியைப்  பாசத்தை  மண்கு  ணத்தைத்
    தாம்மறந்தே   இடைவெளிதாம்  பெருகிற்  றின்று !


பெற்றோரும்   சுற்றமுடன்  உடன்பி  றந்த
    பெருமுறவும்  இணைந்ததொரு  குடும்ப  மாகப்
பற்றுடனே  இன்பதுன்பில்  பங்கு  கொண்டு
    பகுத்துண்டு  வாழ்ந்ததெல்லாம்  கனவாய்ப்  போகப்
பெற்றவரை  முதியோரின்  இல்லில்  விட்டும்
    பெயர்சொல்லும்  உறவுகளைத்  தள்ளி வைத்தும்
வற்றிட்ட  பால்மடியாய்ப்  பாச  மின்றி
    வாழ்கின்றார்  இடைவெளிதாம்  அமைத்துக்  கொண்டே !


பக்கத்து  வீட்டாரின்  முகத்தைப்  பார்த்துப்
    பழகியவர்  குடும்பமுடன்  தாமு  மொன்றித்
தக்கதொரு  நட்புடனே  இருந்த  தெல்லாம்
    தமிழ்பேசி  மகிழ்ந்ததைப்போல்  கனவாய்ப்  போகக்
குக்கிராமம்  என்றபோதும்  குடிசைக்  குள்ளே
    குத்துக்கால்  இட்டமர்ந்து  தொலைப்பே  சிக்குள்
பக்கத்து  வீட்டாரை  முகநூல்  தம்மில்
    பார்க்கின்ற  இடைவெளிதாம் வந்த  தின்று !
                
மண்சட்டி   விறகடுப்பில்   உலைகொ   திக்க
    மணம்வீசும்   கஞ்சியொடு   சோற்றை  யுண்டு
கண்காது   தெளிவாக   நேய்க  ளின்றிக்
    கல்போன்ற   வலிமையுடன்   வாழ்ந்த  தெல்லாம்
மண்மீது   மாறியின்று   மேலை  நாட்டின் 
    மாசான   உணவுண்டு   நோயைப்   பெற்றும்
பண்பாட்டை   ஒழுக்கத்தைத்  தொலைத்து  விட்டே
    பாழானோம்  இடைவெளியைப்  பெருக்கிக்  கொண்டே !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**
நெருக்கமாய் இருந்த 
நம் இருவருக்கும்
இடையில் விழுந்த 
இந்த வெளியை
உனது அகங்காரம் கொண்டு
நீ கொஞ்சமும்
எனது அகங்காரம் கொண்டு
நான் கொஞ்சமுமாய்
ஊதிப் பெருக்கிக் 
கொண்டே போகிறோம்..


முதலில் யார் 
இறங்கி வருவது
என்பதில் மட்டும்
உடன்பாடு ஒன்றை 
எட்டி விட்டால் போதும்..


ஊதிப் பெருத்து நிற்கும்
அந்த இடைவெளி
ஊசி குத்திய பலூனாய்
நொடியில் மாயமாகி விடும்..


இந்த முறையும் நீயே 
பிடிவாதம் தளர்த்திப்
பேசி விடேன்..ப்ளீஸ்..!

- ஆதியோகி

**
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்! Empty Re: ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:34 pm

என் னுருவமதை உன் 
கண்ணில் நான் பார்க்கிறேன் 
உன் னுருவமதை என் 
கண்ணில் நீ பார்க்கிறாய் 
நம்பிக்கை நிலவுகிறது 

உன் மனக் கண்ணில் நான் 
என் மனக் கண்ணில் நீ நிஜமாகவே 
இருக்கின்றோமா எனும் சந்தேகம்
இருவர் நெஞ்சிலும் அலைமோதிட 
இடைவெளி மதிலாகி நிற்கிறது 

ஆதலால் நம்முடைய உறவு
தாமரை இலையில் விழும் 
மழை துளிபோல் ஒட்டாது தெரித்தோடிடுமோ இல்லை 
சிப்பியின் மடியில் விழுந்து 
முத்தாக பிறந்து ஜொலிக்குமோ

இருவருக்கும் உள்ள இடைவெளி
சூறாவளி யாகிடுமோ இல்லை ஆறாவலி யாகிடுமோ என்னும் 
மனக்கிலி பிடித்து க்கொண்டு 
பலியாக் கப்போவது யாரோ 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்", மும்பை

**
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்! Empty Re: ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

சலவை செய்த துணியை மீண்டும் நனைத்து
   காயவைத்து அணிந்த  கலாச்சாரம் அந்த காலம்
 சலவை செய்து தேய்த்து மடிப்பு குலையாமல்
   சேலை வேட்டி  சட்டை அணிவது இந்தக்காலம்
 இடைவெளியில் நாகரிகம் வந்ததாலே வந்தகோலம்
   எல்லாமே சாத்திரமென்பதை மாற்றினோம் நாம்
 இடைவெளிதான் காரணமாய் அமைகிறது இதற்கு
    இதனை வரவேற்பதா? தவறென்பதா?

முல்லைக்கு தேர் கொடுத்தான் வேட் பாரி மழை
  முகிலினிலும் பெயர் படைத்த உபகாரி
சொல்லுக்கு தலை கொடுத்தான் அருள் மீறி
  அந்த வள்ளலாம் குமணன் என்ற அரசன்
மயிலுக்கு போர்வை போற்றினான் மன்னன் பேகன்
  மகிழ்ச்சியாய் சொல்கிறது  தமிழர் வரலாறு

பாரிக்கும் நமக்கும் பார்வையில் வித்தியாசம்
  மன்னன் விருமிபினால் நிரந்தர கொழு கொம்பை
அமைத்து மகிழ்ந் திருக்கலாம் அதுதான்  சரியாகும்
  அவருக்கும் நமக்கும் உள்ள இடைவெளி அது தானே!
பேகனும் அது போல மாற்று வழிசெய்திருக்கலாம்
   குமணமும் தலையை கொடுத்திருக்க வேண்டாம்
பேகனுக்கு நமக்கும் இடைவெளி அதுதான் அதனை
   குளிராத சரணாலயம் அமைத்து மகிழ்ந் திருக்கலாம்
காலத்துக்கு காலம் கருத்து மாறும் இதுதான் உண்மை!

- கவிஞர் ஜி.சூடாமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்! Empty Re: ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

ஒட்டியத் தென்னையாய் 
ஒன்றாக ஆற்றங்கரையில் 
அழகாய்ச் சாய்ந்து. 

அந்த அந்திச் செவ்வானத்தின் 
அழகிய நிலவை 
இடையினில் ஏந்தி. 

நாறைப் பறவைகள் நானூறு 
நடு வானில் பறந்திட. 

மஞ்சள் முகில்கள் 
மதியின் அழகில் மயங்கி 
கொஞ்சிக் கொஞ்சி 
கொள்ளை அழகோடு 
துள்ளித் துள்ளி மிதந்திட. 

அன்பை அள்ளி அள்ளி 
ஆற்று நீரால் என்மேல் 
நீ தெளித்திட. 

ஆசையில் 
"ஏரிக்கரையின் மேல் 
போறவளே பொன்மயிலே" 
என்று நான் பாட. 

பதிலுக்கு 
"மாமன் ஒரு நாள் 
மல்லிகைப்பூக் கொடுத்தான்" 
என்று நீபாட. 

அப்படியே இருவரும் 
இருட்டும்வரையில் அங்கேயே 
அமர்ந்து ரசித்த காலத்தை 
கனவில் சுமந்துபடி 
இன்றோடு பத்தாண்டுகள்
கடந்தாலும். 

அதே ஆற்றங்கரையில் 
காத்திருக்கிறேன் 
நீ மீண்டும் வருவாய்யென!

- கவிஞர் பி.மதியழகன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்! Empty Re: ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum