தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Aug 13, 2020 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 8:59 pm

நாட்டுப் பற்று!

நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

 தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.

 தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.

 அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.

 ""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.

 அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.


-மு.சஹானா மர்லியா, கோயம்புத்தூர்.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:00 pm

அறிவுத் தாகம்!

1740-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதான் இருந்ததாம். இங்கிலாந்திலிருந்துதான் அங்கு புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு அமைப்பு இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனத்தில் தோன்றியது.

 அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து, இரண்டே ஆண்டுகளில் பெரிய நூலகமாக அது உருவானது. அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள். அதன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன.

 நூலகம் தோன்றக் காரணமாக இருந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.


-ஆச்சா, செவல்குளம்.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:00 pm

முதல் கடமை!

கொல்கத்தாவில் (அப்போது கல்கத்தா) பிளேக் நோய் பரவி, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருந்தார்கள். விவேகானந்தரும் அவரது சீடர்களும் நோயாளிகளைத் தேடி, ஓடி ஓடி சிகிச்சை செய்து, சேவை செய்து கொண்டிருந்தனர்.

 ஒரு சீடர் கவலையுடன் விவேகானந்தரிடம், ""சுவாமி, இந்தத் தொண்டுக்குப் பணம் நிறையச் செலவாகும். நம்மிடம் இருக்கும் பணம் போதாது. பணம் இல்லாமல் இவ்வளவு பெரிய காரியம் எப்படி நடைபெறும்?'' என்று கேட்டார்.

 உடனே விவேகானந்தர், ""பணம் தேவைப்பட்டால், பேலூர் மடத்தை விற்று விடுவோம். இந்த சேவைதான் நமது முதல் கடமை! ஊரில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்து விழும்போது, மடத்தில் கைகட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க என்னால் முடியாது...'' என்றார்.


-இ.ராஜு நரசிம்மலு, சென்னை.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:01 pm

சிக்கனம்!

ஒருமுறை தந்தை பெரியார் கோவையிலிருந்து ஈரோடு வருவதற்காக ஜி.டி.நாயுடு, பெரியாருக்கு முதல் வகுப்பில் ரயிலில் செல்ல டிக்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரும் அதே ரயிலில் வேறு ஒரு பெட்டியில் பயணம் செய்து வந்தார்.

அடுத்த ஸ்டேஷன் வந்ததும், ஜி.டி.நாயுடு, பெரியாரை முதல் வகுப்புப் பெட்டியில் தேடினார். அங்கு அவரைக் காணாமல் அடுத்தடுத்த பெட்டிகளில் தேட ஆரம்பித்தார்.தேடிக் கொண்டு வருகையில், மூன்றாவது வகுப்பு பெட்டியில் பெரியார் இருப்பதைப் பார்த்து, ""ஏன்? முதல் வகுப்பு டிக்கெட்தான் வாங்கிக் கொடுத்தேனே... அதில் வராமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து வருகிறீர்களே!'' என்று ஆச்சரியப்பட்டார்.

""நாயுடு சார், இந்தப் பெட்டியும் நாம் போக வேண்டிய இடத்துக்குத்தானே போகிறது. எதற்கு வீண் செலவு என்று டிக்கெட் பரிசோதகரிடம் முதல் வகுப்பு டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கிக் கொண்டேன்.. மீதிப் பணமும் பெற்றுக் கொண்டேன்! நாமும் சாதாரண மனிதர்கள்தானே சார்...'' என்றார் பெரியார்.

பெரியாரின் சிக்கனத்தைக் கண்டு நாயுடு வியந்து போனார்.


-கலைப்பித்தன், கடலூர்.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:01 pm

இரக்கம்!

1951-ஆம் ஆண்டு தெலுங்கானா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே பயங்கரமான கலவரம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது வினோபாஜி தெலுங்கானா பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். தெலுங்கானா கலவரத்துக்கு அடிப்படைக் காரணம், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்காததுதான் என்ற உண்மையைக் கண்டார்.

போச்சம்பள்ளி என்ற கிராமத்தில் வினோபாஜி தங்கியிருந்தபோது, பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும், சிலர் அவரைச் சந்தித்து, தாங்கள் விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்கள் என்றும் உழைத்துப் பிழைக்க தங்களுக்கு நிலம் ஏதும் இல்லை என்றும் கூறி வருத்தப்பட்டார்கள்.

வினோபாஜி கூட்டத்தினரை நோக்கி, ""இந்த விவசாயத் தொழிலாளர்களின் தாகம் தீர வழி சொல்லக் கூடியவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

உடனே, ஒரு நில உரிமையாளர் எழுந்து, ""என்னுடைய நிலங்களில் 100 ஏக்கரை நான் உடனடியாகக் கொடுக்கத் தயார்...'' என்றார்.

அவர் தந்த 100 ஏக்கர் நிலமும் உடனடியாக அந்த விவசாயத் தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

வினோபாஜியின் மனதில் அப்போது ஏற்பட்ட அந்த இரக்கம்தான் "பூமிதான இயக்கம்' என்று உருவாகி நாடெங்கும் வளர்ந்தது.


-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:02 pm

பணம்!

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.

இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், வானெலியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சரியான நேரத்துக்கு, உதவியாளருடன் வானொலி நிலையத்துக்குப் புறப்பட்டார் சர்ச்சில். அப்போது அவர் செல்ல இருந்த வாகனம் பழதடைந்திருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்துக்கு வானொலி நிலையம் போய்ச் சேரவேண்டுமே என்ற கவலையில், அந்த வழியே வந்த வாடகைக் கார் ஒன்றைக் கைகாட்டி நிறுத்தினார் சர்ச்சிலின் உதவியாளர்.

டாக்ஸி டிரைவரோ, ""டாக்ஸி வராது சார்... இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்காக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன்...'' என்றார்.

சர்ச்சிலுக்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. அந்த டிரைவருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டுமென்று எண்ணி, தனது பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினார்.

அதை அவசர அவசரமாக வாங்கித் தனது சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்ட டிரைவர், ""சீக்கிரம் வண்டியில் ஏறுங்க... சர்ச்சில் பேச்சாவது ஒண்ணாவது, எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள்... அங்கே கொண்டு போய்விடுகிறேன்'' என்றாரே பார்க்கலாம்!

பணம் படுத்தும் பாட்டைப் பார்த்து, சர்ச்சில் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.


-முக்கிமலை நஞ்சன்.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:02 pm

தமிழ்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

 அவருடைய தாத்தா, ""சாமிநாதா, நீ ஆங்கிலம் படிக்க விரும்புகிறாயா, சமஸ்கிருதம் படிக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டார்.

 அதற்கு சுவாமிநாதர், ""நான் தமிழ் படிக்க விரும்புகிறேன்..'' என்றார்.

 தாத்தா உடனே, ""நீ ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். இரண்டும் இல்லாமல் தமிழ் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறாயே?'' என்று கேட்டார்.

 சுவாமிநாதரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது, ""தாத்தா, ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். தமிழ் படித்தால் இரண்டு லோகங்களிலும் பெருமையுடன் வாழலாம்!'' என்று கூறினார்.

 இந்தத் தமிழ்ப்பற்றினால்தான் அழியும் நிலையில் இருந்த எண்ணற்ற சாகாவரம் பெற்ற நூல்களை அச்சுப் பதிப்பேற்றி அழியாமல் காப்பாற்றினார் உ.வே.சாமிநாதய்யர்.


-கி.கிருஷ்ணசாமி, தூத்துக்குடி.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:04 pm

பதில்

நேருஜி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தந்தை மோதிலால் நேரு, வாரம் ஒருமுறை அவருக்குப் பணம் அனுப்புவார்.

 ஒருமுறை நேரு, மேலும் பணம் தேவை என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார்.

 கடிதத்தைக் கண்ட மோதிலால் நேரு, இரண்டாம் முறையாகப் பணம் கேட்கிறானே பிள்ளை, என்ன செலவு செய்கிறானோ? என்ற எண்ணத்தில்,

 ""முன்பு அனுப்பிய பணத்துக்குக் கணக்கு அனுப்பவும்..'' என்று கடிதம் போட்டார்.

 கடிதத்தைப் படித்த நேரு, பதில் கடிதம் அனுப்பினார். அந்தப் பதிலைக் கண்டதும் மோதிலால் நேரு மறுவார்த்தை பேசாமல் மகன் கேட்ட பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தார். தந்தை அப்படிச் செய்வதற்கு நேரு அனுப்பிய பதில் இதுதான் -

 ""என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னிடம் கணக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்பிக்கையில்லாத பட்சத்தில் நான் அனுப்பும் கணக்கினால் உங்களுக்கு பலனில்லை..!''


-முக்கிமலை நஞ்சன்.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:04 pm

நல்ல அரிசி!

காமராசர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.

 தன்னுடைய உதவியாளர் வைரவனிடம், ""இந்த வீட்ல நாம ரெண்டு பேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேஷன் கடையில வாங்கிக்கோ. ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம்ம சாப்பாடு!'' என்றார்.

 ""ரேஷன்ல வாங்குற அரிசி ஒரு மாதிரி வாடை வீசுதுய்யா... வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார் வைரவன்.

 இதைக் கேட்ட காமராசருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.

 ""முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியைச் சாப்பிடணும்! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ, அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார்.


-ஆச்சா, செவல்குளம்.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 31, 2020 9:05 pm

நாசூக்கு!

ஒருமுறை கலைவாணர் இல்லத் திருமண விழாவில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 கலைவாணரின் திரையுலக நண்பர்கள் மற்றும் ஏராளமான பேர் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கலைவாணரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 அப்போது சோற்றில் இருந்த கல்லை நறுக்கென்று கலைவாணர் கடித்துவிட்டார்.

 அந்தக் கல்லை கையில் எடுத்துக் கொண்டு, சமையல்காரரைக் கூப்பிட்டார்.

 அவர் வந்ததும், ""தம்பி, உன் முதலாளியை மட்டும் தனியாகக் கவனிக்கிறது மத்தவங்களை அலட்சியப்படுத்துவது மாதிரியில்லே இருக்கும்! இப்படிச் செய்யலாமா? ஒரு விருந்துன்னா எல்லோரையும் சமமா, ஒன்னு போலக் கவனிக்கணும். அவங்களுக்கும் ஆளுக்கு இதமாதிரி கல்லைப் போடுப்பா!''

 என்று தன் சோற்றில் கிடந்த கல்லைக் காட்டினார்.

 நகைச்சுவையோடு நாசூக்காக சமையல்காரரின் தவறை, இப்படிச் சுட்டிக் காட்டினார் கலைவாணர்.


-க.பரமசிவன், மதுரை.
dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் Empty Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum