தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Aug 13, 2020 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! விளக்கின் கீழே விதை! நூல் ஆசிரியர் : ஓஷோ தமிழில் : நரியம்பட்டு எம்.ஏ. சலாம். நூல் மதிப்புரை : பேரா. G. ராமமூர்த்தி

Go down

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !  விளக்கின் கீழே விதை! நூல் ஆசிரியர்    : ஓஷோ    தமிழில்     : நரியம்பட்டு எம்.ஏ. சலாம். நூல் மதிப்புரை   : பேரா. G. ராமமூர்த்தி Empty படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! விளக்கின் கீழே விதை! நூல் ஆசிரியர் : ஓஷோ தமிழில் : நரியம்பட்டு எம்.ஏ. சலாம். நூல் மதிப்புரை : பேரா. G. ராமமூர்த்தி

Post by eraeravi on Sat Apr 04, 2020 7:04 pm

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

விளக்கின் கீழே விதை!
நூல் ஆசிரியர்       : ஓஷோ
      தமிழில்          : நரியம்பட்டு எம்.ஏ. சலாம்.

நூல் மதிப்புரை      : பேரா. G. ராமமூர்த்தி


பதிப்பாசிரியர்         : காந்தி கண்ணதாசன்
பதிப்பகம்              : கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17.
முதற்பதிப்பு            : டிசம்பர் 1998, ஐந்தாம் பதிப்பு : ஏப்ரல் 2014
விலை                 : ரூ.
100.                    பக்கம் : 206.


ஓஷோ

 • அரசியல் பிரச்சனைகளுக்கும், வெகு அவசரமான சமூகப் பிரச்சனைகளுக்கும், விடை தேடும் தனி நபர்களின் தேடல் தாகத்தைத் தணிப்பவர்.

 • அக மாற்று அறிவியலையும், தியான அணுகுமுறையையும் தந்த ஒரு புரட்சியின் மறுவடிவம்.

 • ஓஷோவின் ஆக்டிவ் தியான முறை, தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

 • ஓஷோவின் சிந்தனைகளை, நமது வாழ்க்கையில், நடைமுறைப்படுத்தினால், மனித இனத்தின் தராதரத்தில் ஒரு புரட்சி மலரும்.

 • 20-ஆம் நூற்றாண்டை உருவாக்கிய 1000 சிற்பிகளில் ஒருவர் ஓஷோ – சண்டே டைம்ஸ்.

 • இந்திய தேசத்தின் தலைவிதியை மாற்றிய மாமனிதர்கள்
  (காந்தி, நேரு, புத்தர் போன்றோர்) 10 பேரில், இவரும் ஒருவர் – சண்டே – மிட் – டே இதழ்.


 • ஓஷோ என்பது, “வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்.


இந்நூல் “விதைகள் என்ற தலைப்பில்,

 1. உடலின் பற்றே, உயிரின் இருட்டு

 2. உறுதியான உள்ளமே, உண்மையின் உதயம்

 3. சுயத்தில் சமூகத்தைப் புறக்கணி, உறைந்துள்ள மூலாதாரத்தைத் தேடு.

 4. ஜீவனுள்ள சத்தியத்தை அடைவது, உயிரற்ற வார்த்தைகளால் அசம்பாவிதம் – என்ற துணைத் தலைப்புகளில், அவர் ஆற்றிய உரைகள், புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


உடலின் பற்றே, உயிரின் இருட்டு:-
      வாழ்க்கையில், நமக்கு ஏதோ ஒரு வெற்றிடம் இருப்பதாகத் தோன்றுகிறது. வாழ்க்கை என்பது, ஒரு 24 மணி நேரப் பிரச்சினை, எவ்விதப் பயமும் இல்லாத போது, நீ கவலையின்றி அமர்ந்து விடுவாய், செல்வந்தர்கள் விரைவில் தூங்கி விடுவார்கள், திருடர்கள் இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருப்பார்கள், தன்னைப் போலவே, யாராவது வந்து தன்னிடம் திருடிச் சென்று விட்டால், என்ன செய்வதேன்றே பயம் தான், கடந்து விட்ட நேரம் திரும்பப் போவதில்லை.
      கிழக்கில் உள்ள மனிதர்கள், எவ்வித அவசரத்திற்கும், அவசியம் இல்லாமல், பதட்டம் இல்லாமல் உள்ளனர். ஆனால், மேற்கில் உள்ளவர்கள், எங்கே நேரம் மிகக்குறைவாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் மிக வேகமாக செயல்படுவார்கள். ஆன்மா நிலையானது, உடல் அழியக் கூடியது. நீங்கள் விளக்கை தலைகீழாகப் பிடித்தாலும், அதன் ஒளி, மேல்நோக்கியே செல்லும். ஆகவே, ஞானத்தைப் பெறுபவர்கள் அனைவரும், ஆன்மாவை  நெருப்புக்கு உதாரணம் காட்டி இருப்பார்கள்.
      சட்டத்தை மீறுவதில், அகங்காரத்திற்கு பெருமை கிடைக்கிறது. வரையறையைக் கடப்பதில் தான், நான் என்னும் தன்மைக்கு திருப்தி ஏற்படுகிறது.  எங்கு உங்கள் இன்பம் யாவும் துன்பமாக மாறி விடும் எல்லையைத் தொடுகிறதோ, அங்குதான் சந்நியாசத்தின் ஆரம்பம். கொஞ்சம் பாவத்தையும், கொஞ்சம் புண்ணியத்தையும் சேமிப்பது தான் நல்லதென்கிறீர்கள். வேசியின் வீட்டிற்கும் செல்கிறீர்கள், கோயிலுக்கு செல்கிறீர்கள், மதுவும் அருந்துகிறீர்கள், ஆலயத்திற்குச் சென்று தான தருமங்களையும் செய்து வருகிறீர்கள்.  பிரம்மசாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த விநாடியே, ஓர் அற்புதமான சுவை, அந்தப் பெண்ணிலே தோன்றிவிடுகிறது, மனிதனுக்கு.
      மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் :- கணவன், மனைவி இருவரும் ஒரே அறையில் இருக்கக் கூடாது. அதனால், இன்பத்தில் குறைவு உண்டாகிறது. அவர்கள் தனித்தனியே இரு அறைகளில் இருக்க வேண்டும். மனைவி, சிலசமயம் பெற்றோர்களிடம் சென்று இருக்க வேண்டும். இன்பம் கூட, இது போன்ற நடவடிக்கை தேவை.
உலகம், ஒரு சிறந்த பல்கலைக்கழகம். ஒரு அனுபவக் கடல், அனுபவங்களை, ஏன் காயாகப் பறிக்க நினைக்கிறீர்கள்? அதைக் கனிய வைத்து, தானாகவே விழச் செய்யலாமே? தன்னைத் தான் அறியாமலிருப்பது தான், மனிதனின் மிகப்பெரிய துன்பம்.
விளக்கின் கீழ் இருட்டு இருப்பதைப் போலவே, மனிதனும், தன் ஆத்மாவைப் பற்றிய உண்மையைக் கொண்டு, இருட்டில் இருக்கிறான். நம்மை நாடு அறிந்து கொள்ளவே இல்லை, இதனால், நம் வாழ்க்கைத் தடமே தவறான பாதையில் உழன்று கொண்டிருக்கிறது.
      ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரேயடியாக எரியும் அளவுக்கு, உங்களுக்குள் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
கபீர் வாழ்க்கை விசித்திரமானது. இங்கு எல்லோருமே தோற்று விடுகிறார்கள். மரணம் எல்லாவற்றையும் சமமாக்கி விடுகிறது. கண்ணாடி யாரையும் அவலட்சணமாக்குவதில்லை, நீ எப்படி இருக்கிறாயோ, அதை பிரதிபலித்துக் காட்டுவது தான், கண்ணாடியின் வேலை. உண்ணாது இருக்கும் போது உணவின் பக்கமே தியானம் செல்லும். விரதம் என்றால் அது உணவையே அது நினைக்கிறது. ஆசைகளைத் துறக்கும் வரை தியானம் அமையாது. இந்த உலகத்தை, நல்ல விழிப்புணர்வுடன் நன்கு அனுபவியுங்கள். விழிப்பின்றி, மயக்கத்தில் இந்த உலகத்தை அனுபவித்தீர்கள் என்றால், இது உங்களை விட்டு என்றுமே விலகாது. உடலுறவையும் உளப்பூர்வமாக அனுபவியுங்கள். பெண்களை விட்டு விடுபட்டு விடுவீர்கள். ஆண்களை விட்டு விலகி விடுவீர்கள். அழகை ரசித்தாலும் உளப்பூர்வமாக ரசியுங்கள். புத்தர் மரணிக்கும் தருவாயில் கூடிய கடைசி சொல், “அப்பதீயோ பவ்”, அதாவது, நீங்களே விளக்காக மாறுங்கள்.
      உணவை, தியானமாக்கிக் கொள்ளுங்கள். உடலுறவைத் தியானமாக்கிக் கொள்ளுங்கள். செல்வத்தைத் தியானமாக்கிக் கொள்ளுங்கள். விரோதத்தைத் தியானமாக்கிக் கொள்ளுங்கள். இங்கு தியானம் மட்டுமே நிலைக்கும், மற்றவை பறந்து போகும்.
உறுதியான உள்ளமே – உண்மையின் உதயம்:-
      மனித குணத்தின் மேற்பரப்பு தான் மனம். காற்றில் கொடி அசைவது, கொடியினாலும் அல்ல, காற்றினாலும் அல்ல, மனம் தான் அசைந்து கொண்டிருக்கிறது – ஜென்.
      புயல் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும், கடலின் மேற்பரப்பு தான் அசையும். அதன் உள்பரப்பு அசையாது. எல்லையற்றது அசையாது, எல்லைக்குட்பட்டது ஆடிக் கொண்டிருக்கும், தமக்குள்ளே, எப்போதும் எவ்வித அதிர்வும் ஏற்படாத அந்த இடத்திற்கு நகர்ந்து விடுவதே, ஆத்ம ஞானக் கலையாகும்.
பிடிவாதமாக, முட்கள் மீது படுத்துக் கொண்டிருந்தால், வெகுசில நாட்களுக்குள், அந்த முட்களின் கூர்மையும், குத்தலும் நின்று விடும். காரணம், தொடு உணர்ச்சியை, தைக்கிற அனுபவத்தை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். ஐம்புலங்களில் உயர்ந்தது தொடு உணர்ச்சி. சாதுக்கள் முதலில் தொடும் உணர்வை தொலைத்து விடுகிறார்கள். நிர்வாணமாகி விடுவான். வெயிலில், மழையில் நனைவான். பனிக்கட்டியில் அமர்ந்து கொள்வான், நெருப்பிலும் உட்கார்வான், மேலும் அவர்கள் சுவையற்ற தன்மையிலேயே இருக்க முனைகிறார்கள். காந்தியின் 11 வகை விரதங்களில் முக்கியமாக சுவையும் ஒன்று. காந்தி தம் உணவோடு வேப்பிலை சட்னியும் சேர்த்துக் கொள்வார்.
தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் மனிதன், அடுத்தவர்களையும் துன்புறுத்தான் செய்வான். அது அவனுடைய இன்பமாக மாறிவிடும்.
      மலம் நிறைந்த கூடையை, தோட்டி தலையில் சுமந்து செல்வதை, நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவளுக்கு அது அசிங்கமாகத் தெரிவதில்லை. அவள் தான் மாபெரும் சந்நியாசி. நீங்கள் அவளை பூஜை செய்யலாம். அவளுடைய நாசி பாழடைந்து விட்டது. மலம் தூக்குவதே வேலையாக இருப்பவன் நாசி எதுவரை உணர்வு பெற்றிருக்கும். ஒரு புலன் இங்கு செத்து விடுகிறது. கண்கள் இருந்தால் தானே, அழகான பெண்களைப் பார்க்க முடிகிறது. எனவே, கண்களை பறித்துக் கொள்வது என்பது போல், தற்கொலை செய்பவர்களும் வாழ்க்கையை அழித்துக் கொண்டால், துன்பம் விலகுமென்று நினைக்கிறார்கள். சாதுக்கள், வாழ்க்கையில் விஷத்தைப் பரப்புபவர்கள். எல்லாவற்றையும் விஷமாக மாற்றி விட்டார்கள். நான், உங்களுக்கு சாவிற்கு வழிகாட்ட மாட்டேன். எந்த ஞானியும் அவ்வாறு சொன்னது கிடையாது.  ஞானி, உங்களுக்கு அமிர்தம் தான் தருவான். விஷத்தை அல்ல, ஜென் குருக்கள், மலையிலும் நீரோடைகளிலும், சோலைகளிலும் தான், தம் ஆசிரமத்தை அமைத்தார்கள். ஆனால் காந்தி இதற்கு நேர் மாறாக, தன் ஆசிரமத்தை, வெப்பக் காற்றை தவிர வேறெதுவும் இல்லாமல் அமைத்துக் கொண்டார். ஆன்மாவுக்கு மரணமில்லை, உடலுக்குத் தான் மரணம்.
      மனம் புழுதியானது, பழமை வாய்ந்தது. தூசி எப்போதும் மேற்பரப்பில் படியும், தூசி படிந்தால், நாம் எங்கும் சென்று ஆபரேசன் செய்து கொள்வதில்லை. உடலைப் பொறுத்தவரை, தினமும் குளித்து சுத்தமாக்கி விடுகிறீர்கள். ஆனால், தியானம், அதன் நினைவே விடுவதில்லை. மனத்தின் குளியலே, தியானம். தர்க்கத்தில் ஈடுபட்டால், அது உங்களை கடைசி எல்லைக்கு இழுத்துச் செல்லும். பைத்தியக்காரன், உங்களை விட அதிக தர்க்கம் புரிபவன். மனம், ஒரு எல்லையிலிருந்து, மறு எல்லைக்கு பெண்டுலம் போல், ஆடிக்கொண்டே இருக்கும். போகத்தின் பின் சென்று பைத்தியமாக திரியாதீர்கள். தியாகத்தின் பின்னாலும், உங்களை இழந்து கொள்ளாதீர்கள். நடுநிலை என்பது மிகவும் சிரமமானது.
      காதல் மட்டும் இருந்தால், ஒரு பெண்ணே போதுமானவள். அது இல்லையென்றால், 6000 பெண்கள் இருந்தாலும் போதாது. அகங்காரம் காதலின் பகையாகும். அது எப்போதும் திருப்தியடையாது. உலகப் பெண்கள் அனைவரும் கிடைத்து விட்டாலும், அது திருப்தி கொள்ளாது. விழித்தெடுங்கள், உங்களை, யாரும் வழிதவறச் செய்ய முடியாது. உங்கள் வழி தவறுவதற்கு, நீங்கள் தான் காரணகர்த்தா. மிக அதிகமாக உண்பவனும், இன்றே இறந்துவிடப் போவதில்லை. 50 வருடங்களாக வாழ்வான். ஆனால் விரதம் இருப்பவன், 3 மாதங்களில் இறந்து விடுவான். இது இயற்கைக்கு மாறானது. உலகம் அனைத்துமே, விவாதத்தில் இன்பம் காண்பது. காற்று அசைகிறதா, கொடி அசைகிறதா என்பதல்ல விவாதம். இதைக் கொண்டு பெரும் போராட்டமே கூட ஏற்படலாம்.
      இந்துக்கள், முஸ்லீம்களின் பள்ளிவாசலை இடித்துக் கொண்டிருக்கிறான். முஸ்லீம், இந்துக்களின் கோயிலை இடிக்கிறான். இது மூடதனத்தின் எல்லை. அப்படியாவது, அடுத்தவர்களைத் தோற்கடித்து இன்பம் அடைய வேண்டும். கோடிக்கணக்கானோர் டி.வி.க்கு முன்பும், ரேடியோவுக்கு முன்பும் அமர்ந்து கொண்டு, கிரிக்கெட்டை ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பர். யாரோ வெற்றி பெறுவதில், நமக்கு இன்பம் என நினைக்கின்றனர். கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்பதே தவறானது. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதமும் இன்னும் முடிவுறவில்லை. எங்கெங்கு விவாதத்தின் முடிவு இல்லையோ, அங்கே இரண்டும் தவறானவை என்பதை முடிவில் கொள்ள வேண்டும். தர்க்கம் மிகச் சிறியது. உண்மையோ, மிகப்பெரியது. தர்க்கத்தால் நீங்கள் எப்போதும் உண்மையை மூட முடியாது. ஞானம் என்றால், தன்னை அறிந்து கொண்டு (மனம்) ஆடாமல், அசையாமல் நிலைத்து நின்றால், உங்கள் சுயத்தை நீங்கள் அடைந்து விடுவீர்கள். சுயத்தை அடைதல், சத்தியத்தை அடைவதற்குச் சமமாகும்.
சுயத்தின் சமூகத்தைப் புறக்கணி, உறைந்துள்ள மூலாதாரத்தை தேடு:
      சமூகம், மக்களின் மனோதத்துவத்தில் தான் வாழ்கிறது. மனிதன் தனியானவன், சமூகமோ மிகப் பெரியது. மனிதனை, யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. தனிமனிதன் கலப்பில்லாதவன். அவனை, யாருமே ஏற்க முன்வருவதில்லை. இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்துவனாக,  ஜைன்னாக, யாராகவாவது இரு. உலகில் 300 (மதங்கள்) பைத்தியங்கள் இருக்கின்றன. ஏசு கூறியுள்ளார்.  குழந்தை போல் இருப்பவர் மட்டுமே கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரகாசிக்க முடியும். ஆனால், சமூகம் உன்னை குழந்தை போல் இருக்க விடாது. அறுத்து, நறுக்கி, பதப்படுத்தி, வடித்தெடுத்து உருவாக்குகிறார்கள். தோட்டத்தைச் சீர்படுத்துவது தோட்டக்காரனின் செயல், அழகுபடுத்துதல் இயற்கைக்கு மாறானது.
மனோ வைத்தியர் ஆர்.டி.லைங் கூறுகிறார் : பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைபட்டிருக்கும் பெரும்பாலானோர், அங்கிருந்து விடுபட்டதும், முக்தி நிலையை ஏற்கும் அளவுக்கு பண்பட்டிருக்-கிறார்கள். பகுத்தறிவாளன் எப்போதும் சம்பிரதாயங்களில் அடைபடுவதில்லை. மூடர்கள் தான், அதில் கட்டுண்டு வருகின்றனர்.
      கபீர் கூறுகிறார் : சிங்கத்திற்கு, மந்தை கிடையாது. துறவிக்கு கூட்டம் கிடையாது. ஆடுகள் தான் மந்தையோடு செல்லும். துறவி, எப்போதுமே தனியாக மிளிரக் கூடியவன். பைத்தியக்காரன், ஒரு பைத்தியக்காரனைத் தான் தலைவனாக ஏற்பான். நீங்கள், சாக்ரடீசை  நஞ்சு வைத்து கொன்றீர்கள், புத்தர் மீது கல் எறிந்தீர்கள், ஏசுநாதரை சிலுவையில் அறைந்தீர்கள். சிந்திப்பது தேசத்துரோகமாகி விடும். அது விரோதியின் செயல். உடல்நிலை மோசமான நேரத்தில் கூட, மொரார்ஜி தேசாய், தம் கண்களைத் திறந்து, டாக்டர்களை நோக்கி, “பரவாயில்லை, கொஞ்ச நேரம் எதிர்பார்க்கலாம், மலர்மாலைகள் வந்து விடட்டும், எனக்கு மலர்கள் மிகவும் பிடிக்கும்” என்று கூறினாராம்.
      எந்த பைத்தியக்காரனும், தன்னை பைத்தியக்காரன் என்று ஒத்துக் கொள்வதில்லை. பெரிய பைத்தியக்காரனும், தன்னை சீரானவன் என்று நினைத்துக் கொள்கிறான். எல்லா பைத்தியங்களும் அடுத்தவர்களையே பைத்தியம் என்று நினைக்கிறது.
எந்த வடிவத்தில் தந்தை உள்ளாரோ, ஒரு தாய் உள்ளாரோ, ஓர் ஆசிரியர் உள்ளாரோ, அதே வடிவத்தில் குழந்தைகளையும் வடித்தெடுப்பார்கள். ஒரு சிலையை உடைத்தால் போராட்டம், பள்ளிவாசலை எரித்தால் பதட்டம், கலகம், போராட்டம். பரமாத்மா எங்கே இல்லை, அவர் இல்லாத இடம் ஏது? அவனுக்கு ஒரு உருவமும் கிடையாது. குழந்தையிலிருந்து தந்தையின் மடியோ, தாயின் மடியோ, பரம்பரையின் மடியோ புகட்டப்படுகிறது.
எல்லா மதங்களும் மனிதனை துண்டு துண்டாக்கி விட்டுள்ளன. ஒவ்வொரு மதத்திலும் ஏழு வித பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. எல்லா மதங்களும் சகோதரத்துவத்தைத் தான் வலியுறுத்துகின்றன. ஆனால் எங்கும் மதச்சண்டை. 3000 வருடங்களுக்குள் 15000 யுத்தங்கள் நடந்து விட்டன.
பள்ளிக்கூட ஆசிரியர் ஒரு மாணவனை நோக்கி, உனக்கு தெரிந்த யுத்தத்தைப் பற்றி கூறு என்றாராம். அதற்கு அவன், மாபெரும் யுத்தம் என் தந்தை, தாய்க்கு இடையே தான் நடைபெறுகிறது. ஆனால் அதை வெளியில் சொல்லக்கூடாது என்றானாம். இதுதான் இன்றைய குடும்ப சூழல். முல்லா நஸ்ருதீன், தன் நண்பனிடம், தன் திருமண நாள் - துக்க நாள் என்றும், அந்த நாளை தான் மறக்க முடியாது என்றும் கூறினாராம்.
      மனோ வைத்தியர்கள் கூறுகிறார்கள் : குரோதம் என்பது ஒரு நிலையற்ற வெறி. இந்த வெறி, தினமும் எல்லோரையும் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் ஒரு பைத்தியக்-காரனுக்கும், எவ்வித குணவேறுபாடும் கிடையாது.
உடல் ஆரோக்கியம் என்பது, ஒரு பொருட்டல்ல, எல்லா மிருகங்களும் ஆரோக்கியமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் மிருகத்தைச் சார்ந்தது. ஆனால் மனநலம் விழிப்புணர்வைச் சார்ந்தது. குழந்தை பிறந்ததும், அதை நம்முடைய வண்ணம் பூசி, நம்முடன் இணைத்துக் கொள்கிறோம். பையன், நம்மைப்போலவே இருக்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். குழந்தைகளுக்கு அஞ்ஞானத்துடன் அறிவு பகர்வதை விட்டு, விட்டு அவர்கள் வழியைப் பின்பற்றக் கேட்டுக் கொள்ளலாம். ஞானத்தில் வாழ முற்படுங்கள். அனுபவத்தில் அல்ல, பண்டிதருக்கும், காளிக்கும் இருக்கும் வேறுபாடே இது தான். பண்டிதன் இறந்தகால அனுபவத்தில் வாழ்கிறான். ஆனால், ஞானியோ, புத்தியில் வாழ்கிறான்.
      சிந்திப்பது என்பது, தவிர்ப்பதற்குரிய வழி. தள்ளிப்போடுவதற்-காகச் செய்யும் தந்திரம். தப்புவதற்கு ஏற்கும் பாதை. ஞானிகள் கூறுகின்றனர். தீமையைத் தள்ளிப் போடுங்கள். அதைப் பற்றி சிந்தியுங்கள். புண்ணியங்களை கவனியுங்கள். உடனே செய்யுங்கள். பரமாத்வாவின் சூத்திரம் : புண்ணியம் இப்போதே, பாவம் நாளை.
      எண்ட்ரூ கார்னோகி : மனைவியாலும் செலவழிக்க முடியாத அளவுக்கு ஒரு கணவன் சம்பாதித்து விட்டானேயானால், அதுவே மாபெரும் வெற்றியாகும். தம்மாலும் செலவழிக்க முடியாத அளவுக்கு சம்பாதிக்கும் ஒரு ஆண்மகனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே ஒரு பெண்ணின் வெற்றி.
      மகாகவி மில்டன், தன் கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்டு தன் மனைவியை, ரோஜாவின் மென்மையை உணருவதை விட, அதன் முட்கள் குத்துவதை தான் உணர்கிறேன் என்றாராம். சந்நியாசத்தின் அர்த்தமே இவ்வளவு தான். சமூகத்தை விட்டு விலகி விடு. உங்கள் கண்கள் நிர்மூலமான தியானத்தைக் கொண்டு நிரம்பி விட வேண்டும். சமூகம் உங்களுக்குக் கொடுத்ததை உங்கள் மீது கவிழ்த்துக் கொள்ளாதீர்கள்.
ஜீவனுள்ள சத்தியத்தை அடைவது –
உயிரற்ற வார்த்தைகளாய் அசம்பாவிதம் :

      சத்தியம், ஒவ்வொரு நிமிடமும் புதியது. சத்தியம் நிலையானது. மதவாதிகளின் கருத்து. சத்தியம் நிலையானதல்ல. விஞ்ஞானம் ஒருமுறை ஏற்றுக் கொண்டால், அடிக்கடி கண்டுபிடிக்க வேண்டிய-தில்லை. நியூட்டன் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்ததை, ஒரு பையன் அரை மணி நேரத்தில் படித்துப் புரிந்து கொள்கின்றான். மதத்தின் உண்மை என்பது, வாழ்க்கையின் ஆராய்ச்சியை நாம் அறிந்து கொள்ளாமல், அனுபவிக்காமல் சொற்களைப் பிரயோகிக்கிறான். அதைக்கேட்டு, கேட்டு நம் உள்ளத்தில் எழும் கீதத்தையும் செவியுறத் தவறி விடுகிறோம். மகாவீரருக்கும், புத்தருக்கும் 20 அல்லது 30 வயது வித்தியாசம் தான். ஆனால் மகாவீரர் உயிரோடிருக்கும் போதே, புத்தருக்கு புதிய புதிய வார்த்தைகளைச் சொல்ல வேண்டியதாய் இருந்தது. புதிய, புதிய மதங்கள் பிறக்கின்றன. சத்தியம், ஒவ்வொரு கணமும் புதிய உருவெடுக்கிறது.
      ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்கின்ற ஒருவரிடம் சத்தியம் நிலைத்திருக்க வாய்ப்பில்லை. வெறும் நினைவுகளைக் கொண்ட பண்டிதர்கள் தான் இருப்பார்கள். ஞானிகள் இருக்க முடியாது. ஞானிகள் எப்போதும் பெருக்கெடுத்தோடும் அருவியைப் போன்றவர்கள். அவர்களை, ஒரே வண்ணத்தில் பார்க்க முடியாது. உயிரோட்டம் உள்ள நீரோட்டம், பண்டிதர்கள், உயிரற்றவர்களையே அதிகம் விரும்புவார்கள். உண்மைகளை விட, புரட்சி வேறெதுவும் கிடையாது. மதம், பண்டிதர்கள் கையில் வரும்போது, அது சிறைச்சாலி ஆகி விடுகின்றது.  ஞானிகளின் கையில் அது மோட்சமாகி விடுகிறது. நோய் தீர்ப்பதற்கு, ஒரு பழைய முறை உண்டு. நோய்க்கு சிகிச்சை அல்ல. நோயாளிக்கு சிகிச்சை. பண்டிதன் வியாதியைப் பார்க்கிறான். கேள்வியைப் பார்க்கிறான். ஞானியோ, நோயாளியைப் பார்க்கிறான். கேள்வி கேட்பவனைப் பார்க்கிறான்.
      புத்தர், ஒரு கண்ணாடியைப் போன்றவர். பண்டிதன் புகைப்படம் போன்றவன். புகைப்படம் உயிரற்ற ஜடம், கண்ணாடி உயிருள்ள ஜீவன். மாற்றம் உன்னிலே உண்டு. கண்ணாடியில் இல்லை. நேற்று வசந்தம் இருந்தது, மலர்கள் மலர்ந்தன. இப்போது, இலையுதிர் காலம், இலைகளை உதிர்ந்து கொண்டுள்ளன. புத்தர், உயிருள்ள ஜீவனையே பிரதிபலிப்பார். “ஸம்யக்” என்ற சொல்லுக்கு, “நேரே முன்னேறிச் செல்” என்பது பொருளாகும். “துலாதர்” என்றும் பொருள் கொள்ளலாம். புத்தரும், மகாவீரரும் இச்சொல்லுக்கு முக்கியத்துவம் தந்தனர். மையமற்ற சமாதி நிலை, இந்துக்களை அழித்து விட்டது. நீங்கள், காதுகளால் வாழ்கிறீர்கள்.  ஞானிகள், கண்களால் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் அதிகமாக தடுமாறுவது காதுகளின் காரணத்தால். யார், எது சொன்னாலும், உடனே இணங்கி விடுகிறீர்கள். எதையும் பார்த்த பிறகே ஏற்க வேண்டும். யாரையாவது குறை கூறினாலும் போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. யாரையாவது புகழ்ந்தால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது. இவர் நல்லவர், மகான் என்று யாரையாவது குறிப்பிட்டால் போதும், நீங்கள் பலவிதக் கேள்விகளால், துளைத்து விடுவீர்கள். செய்தி உண்மை தான் என்றாலும், ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என சந்தேகம் கொள்கிறீர்கள்.
      மனோ வைத்தியர்கள் கூறுகிறார்கள் : பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோ, வீட்டில் பெற்றோர்களோ, மற்றவர்களோ, ஒரு சிறுவனை நோக்கி, “நீ ஒரு கழுதை” – என்று கூறி விட்டால், ஏறக்குறைய 50% கழுதைத் தன்மை அவனிடம் ஏற்பட்டு விடுகிறது.  உங்கள் நினைப்பு தான், உங்கள் வாழ்வை நிர்ணயிக்கிறது. அந்த மன உறுதியை ஏற்படுத்துவோர், உங்களைச் சுற்றி இருப்பவர்களே. சாகப் போகும் ஒருவனுக்கு, பரிபூரண ஆரோக்கியம் கிடைப்பதில்லை. பரிபூரண ஆரோக்கியம், மரணமற்றோர்க்கே சாத்தியம். யாருக்கு மரணமில்லையோ, அவருக்கே சிறந்த ஆரோக்கியம் கிடைக்கும். மெய்ஞானி ஒரு கண்ணாடி. நீங்கள் எப்படி உள்ளீரோ, அப்படியே, அவர் உங்களை பிரதிபலித்துக் காட்டக் கூடியவர். பண்டிதர்களால் அறிவுரை கிடைக்கும். மெய்ஞானிகளால் ஞானம் கிடைக்கும்.

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2481
Points : 5879
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum