தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» குறும்பா ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:44 pm

» புனிதம் தேடும் புதினம் நூல் ஆசிரியர் : கௌதமன் நீல்ராஜ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Nov 21, 2020 10:19 am

» உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Mon Nov 16, 2020 8:12 pm

» வெளியானது மாஸ்டர் டீசர்!
by அ.இராமநாதன் Sat Nov 14, 2020 9:50 pm

» சிவகாத்திகேயன் பட இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி…இன்று புதிய படத்திற்கான பூஜை!
by அ.இராமநாதன் Sat Nov 14, 2020 9:49 pm

» மஞ்சள் நிறத்தில் ஒரு வெட்டுக்கிளி! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 13, 2020 8:44 pm

» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : “தமிழ்ச்செம்மல்” சு. இலக்குமணசுவாமி, அரசு விருதாளர், திருநகர், மதுரை-5.
by eraeravi Wed Nov 11, 2020 10:49 pm

» எப்போதும் போல் இல்லை எப்போதும் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்  !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Nov 11, 2020 10:13 pm

» கொள்கைக் குறள் (ஆய்வுக் கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி தமிழியக்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Nov 11, 2020 9:52 pm

» காக்கிச்சட்டை அப்பா! நூல் ஆசிரியர் : முனைவர் தனுஸ்கோடி லாவண்யசோபனா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Nov 11, 2020 9:43 pm

» உதிராப் பூக்கள் ! இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்) தொகுப்பு ;கவிஞர் ஆத்மார்த்தி – ஒரு பார்வை – பொன். குமார் 9003344742
by eraeravi Tue Nov 10, 2020 9:32 pm

» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு
by eraeravi Tue Nov 10, 2020 8:59 pm

» கழுதையின் வாழ்வு!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:31 pm

» ஷாப்பிங் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:31 pm

» மறதி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:29 pm

» லவ் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:28 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:21 pm

» ராசி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:20 pm

» மொழி – சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:20 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:19 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:18 pm

» நோ வொர்க் நோ பே..!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:18 pm

» மெளனம் சிறந்தது…!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:17 pm

» துணைவி!- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:17 pm

» கேள்வி! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:16 pm

» நன்றி! -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 10:15 pm

» கைலி எங்கே?
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:59 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:58 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:57 pm

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:56 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:55 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:54 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:53 pm

» கொரோனா காமெடி..!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:52 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:51 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:50 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:50 pm

» மாமூல் வேணாம்…மரியாதையா…
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:49 pm

» சுந்தர்.சி-யை இனி சுந்தர்.ஜி-னுதான் கூப்பிடணுமா?
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:47 pm

» தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு...
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:46 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:45 pm

» தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்..!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:43 pm

» இந்த தேர்தல்லேயும் நீங்கதான் ஜெயீப்பிங்க..!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:40 pm

» கோட்டின் மேல் நேராக நடக்க முடியாது…
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 9:40 pm

» மைசூர்பாகை எடுத்து மண்டையில அடிச்சிட்டா!
by அ.இராமநாதன் Wed Nov 04, 2020 8:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தென்கிழக்குத் தென்றல் ! தாவோ – சூஃபி ஜென்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

தென்கிழக்குத் தென்றல் !   தாவோ – சூஃபி ஜென்!   நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு !      நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty தென்கிழக்குத் தென்றல் ! தாவோ – சூஃபி ஜென்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Thu Oct 01, 2020 9:21 pmதென்கிழக்குத் தென்றல் !

தாவோ – சூஃபி ஜென்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு !


  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001.
பக்கங்கள் : 480, விலை : ரூ.360.

******
நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மகாகவி பாரதியார் அவர்களின் கூற்றுப்படி பிறமொழியில் உள்ள நல்ல கருத்துக்களை தமிழுக்கு கொண்டு வந்து தமிழுக்குப் பெருமை சேர்த்து உள்ளார்கள்.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு எழுத்து என்ற இரு வேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வரும் பண்பாளர் .மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக மாணவர்களால் நேசிக்கப்படும் மாமனிதர் .மாணவர்களை நேசிக்கும் மாண்பாளர் .எழுத்துக்கும் ,பேச்சுக்கும் ,செயலுக்கும் வேறுபாடு இல்லாத நல்லவர். இனியவர் .நேர்மையான அரசு  அலுவலர் .கூடுதல் தலைமைச் செயலர் என்ற உயர்  பதவியில் இருந்தபோதும் எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் சிறந்த மனிதர் .அவரது நூல்களில் இந்த நூலுக்கு சிறப்பிடம் உண்டு .

‘தாவோ - சூஃபி – ஜென்’ என்ற பிறமொழி தத்துவங்களை அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி உள்ளார்கள். விஜயா பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர்.

விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் அய்யாவின் பதிப்புரையிலிருந்து சிறு துளிகள்.

“ஜென் தத்துவங்களும் கதைகளும் நுட்பமான அர்த்தங்களை உள்ளடக்கியவை. சூஃபிசம் - அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிப்பது, தாவோயிசம் கருணை, அடக்கம், பணிவு என்ற மகத்தான கருத்தியல்களுக்கு அடிப்படைக் கோட்பாடாக விளங்குகிறது.”

ஜென் தத்துவங்கள் பற்றி சில நூல்கள் வந்துள்ளன. படித்தால் பாமரருக்குப் புரியாது. கடுமையான மொழியிலேயே இருப்பதால் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். ஆனால், இந்நூலில் தாவோ, சூஃபி - ஜென் என்ற மூன்று தத்துவங்களையும் எளிமைப்படுத்தி பலாப்பழங்களை உரித்து பலாச்சுளை தருவது போல மிக எளிமையாகவும் இனிமையாகவும் அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள்.  மூன்றும் முக்கனிகள் போன்று இனிக்கின்றன.

படிக்கும் வாசகர்களின் மனதை செம்மைப்படுத்தும் விதமாக கோபம் அகற்றி குணம் தரும் விதமாக மனிதநேயம், சகோதரத்துவம் கற்பிக்கும் விதமாக மனிதன் மனிதனாக வாழ்வதற்கு, வழி சொல்லும் விதமாக விலங்கிலிருந்து வந்த மனிதன் விலங்கு குணம் அகற்றும் விதமாக பல்வேறு தத்துவங்களை மிகவும் எளிமைப்படுத்தி புரியும் விதமாக கொட்டி வரும் அருவி போன்ற நடையில் அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள். பாராட்டுகள்.

ஒரே நூலில் மூன்று தத்துவங்கள் இருப்பதால் அதற்கு பொருத்தமான மூன்று ஆளுமைகள் அணிந்துரை வழங்கி உள்ளனர். தாவோ அணிந்துரை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சூஃபி அணிந்துரை மௌலவி படகறை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிஃபி, ஜென் – இனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தி ஆகியோர் வழங்கி உள்ளனர். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் என்பது போல ஒரே நூலில் மூன்று தத்துவங்கள் அடங்கி உள்ளன.

“மனிதர்களும் முழுமையானவர்களல்லர். அவர்களிடம் பூரணத்-துவத்தை எதிர்பார்ப்பது பயனளிக்காது. குறைபாடுகளுடன் அவர்களை எற்றுக்கொள்வதே நலம். நாம் எதிர்பார்க்கும் சர்வ சாமுத்திரிகா லட்சணங்களுடன் உலகத்தில் ஒருவர் கூட இருக்க முடியாது. நாம் பூரணமானவர்களைத் தேடி வாழ்வைத் தொலைத்து விடுகிறோம்”.

இந்த வைர வரிகளை தாவோ தத்துவத்தை புரிந்து உள்வாங்கி நடந்து கொண்டால் வீட்டில், வெளியில், அலுவலகத்தில் எங்கும் பிரச்சனை வராது. புரிதல் வேண்டும், ஏற்றல் வேண்டும், விட்டுக்-கொடுத்தல் வேண்டும், மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்கள் தாவோ-வில் கடல் போல் உள்ளன. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல முத்தெடுத்து அழகிய முத்துமாலையாக வழங்கி உள்ளார்கள்.

ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் சிறிய பெட்டிக் கதை உள்ளது. இந்த பெட்டிக் கதைகளை நம் மனப்பெட்டியில் உள்வாங்கிக் கொண்டால் மென்மையான மனிதராக, பண்பான மனிதராக, பாசக்கார மனிதராக, மன்னிக்கும் மனிதராக, நேசிக்கும் மனிதராக, நேயமிக்க மனிதராக மாறி விடுவோம் என்பது முற்றிலும் உண்மை.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், இந்த நூல் எழுதுவதற்காக பல நூல்களை தருவித்து படித்து ஆய்ந்து ஆராய்ந்து வடித்துள்ளார்கள். அவரது கடின உழைப்பை உணர முடியும்.

“சூஃபி என்பது அன்பின் ஒருவகை வெளிப்பாடு. அர்ப்பணிப்பின் இன்னொரு வடிவம். அறிவின் மற்றொரு பரிணாமம். எப்படி அன்பைச் சொற்களால் சொல்ல முடியாதோ அப்படி சூஃபியையும் வார்த்தைகளால் வடிவமைத்து விட முடியாது. அதன் ஞானத்தை கதைகளில், கவிதைகளில், கலைகளில், நடன அசைவுகளில், வழிபாடுகளில் உணரலாம். தேடத் தெரிந்தவனுக்கே தென்படும் புதையல் அது”.

நூலாசிரியருக்கு தேடத் தெரியும் என்பதால், தேடித்தேடி புதையலில் உள்ள தத்துவமென தங்கத்தை உருக்கி அணிகலன்-களாகவே வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

“ஜென் இந்தியாவில் வேரூன்றி சீனத்தில் கிளை விரித்து ஜப்பானில் பூத்த அதிசய மலர். ஜென் தத்துவமல்ல, குழப்பிக் கொள்வதற்கு கோட்பாடு அல்ல, அத்து மீறுவதற்கு, அதில் நிபந்தனைகளும் இல்லை. நிர்ப்பந்தங்களும் இல்லை, விதிகளும் இல்லை, தண்டனைகளும் இல்லை.”

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகை மூன்றின் மணத்தை நுகர்ந்து வாசகர்களுக்கு தத்துவ விருந்து வைத்துள்ளார். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் சிறந்த நூல் வரிசையில் இந்நூலிற்கும் இடமுண்டு.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2512
Points : 5972
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum