தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

கவிஞர் இரா  இரவி - இப்பவே கண்ணை கட்டுதே!   நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

இப்பவே கண்ணை கட்டுதே!

நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.  பக்கங்கள் : 96.
விலை : ரூ.80. தொலைபேசி : 0442 24342810

 
******
கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் நோய் தொற்று காலமான இந்த ஒரு வருடத்திலும் ஓய்ந்திருக்கவில்லை.  எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மாமனிதர். முகநூலில் அவ்வப்போது பதிந்து கொண்டே வந்த புதுக்கவிதைகளை தொகுத்து ‘இப்பவே கண்ணை கட்டுதே’ என்ற பெயரில் நூலாக்கி விட்டார்கள். புகழ்பெற்ற வானதி பதிப்பகம் தொற்றுக் காலத்திலும் சுறுசுறுப்புடன் இயங்கி சிறப்பாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுகள்.

திருமிகு ராசி அழகப்பன் அவர்கள் நீண்ட நெடிய அணிந்துரை நல்கி சிறப்பித்துள்ளார். ஏர்வாடியாரின் இனிய நண்பர் புலவர் சு. மதியழகன் அவர்களுக்கு இந்நூலை காணிக்கை ஆக்கியுள்ளார்.

மிச்சத்தை விட்டுப்போகும்
      எச்சமாய்த் தன்
      எழுத்துகளை விட்டுச்செல்கிற
      எழுத்தாளன் செல்வந்தன்!



காலத்தால் அழியாத செல்வம் நூல். அசையா சொத்துக்களை விட மதிப்பு மிக்கது அசையும் சொத்தான நூல். சொத்து விட்டுச் செல்பவன் பணக்காரன் அல்ல, வருங்கால சந்ததிக்கு எழுத்தை, நூலை விட்டுச் செல்பவனே பணக்காரன் என்கிறார்.  உண்மை தான். இது எழுத்தாளன் பார்வை. ஆனால் வாரிசுகளின் பார்வை வேறு.

போவதற்கென்ன
      வரட்டுமா ... என்ற அனுமதி?

போறேன் என்று சொல்லக் கூடாது, வாறேன் என்று சொல்லி விட்டு போக வேண்டும் என்று சொல்வார்கள். இந்த மூட நம்பிக்கை இன்றும் பலரிடம் உள்ளது. எள்ளல் சுவையுடன் சுட்டியது சிறப்பு.

பிரிந்திருக்கலாமே
      என்று சேர்ந்த பிறகும் ;
      சேர்ந்திருக்கலாமே
      என்று பிரிந்த போதும் ;
      தோன்றுகிறதா?
      அது தான் காதல்!



      இணைந்து விட்ட காதலர்கள் ஏன் இணைந்தோம், பிரிந்திருக்கலாமே என்று ஏங்குவதும், பிரிந்திட்ட காதலர்கள் இணைந்திருக்கலாமே என்று ஏங்குவது தான் காதல் என்பதை அழகாக காட்டி உள்ளார். ஊடல், கூடல் என்ற பொருளிலும் பொருள் கொள்ளலாம். சொற்கள் குறைந்த, பொருள் நிறைந்த  புதுக்கவிதை நன்று.

      பேச்சு புகழ் தரும்
      புத்தகம் மட்டுமே நிரந்தரம்!



      தமிழறிஞர், துணைவேந்தர், எழுத்தாளர் மு. வரதராசன் அவர்களுக்கு, பேச்சில் உடன்பாடு இல்லை ; ஆனால் எழுத்தில் ஈடுபாடு அதிகம். அவருடைய செல்லப்பிள்ளையான தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, பேசும் பேச்சு காற்றோடு கலந்து விடும். ஆனால் எழுதும் எழுத்து, நூலே காலம் கடந்து நிற்கும் என்று அறிவுறுத்தியதன் பேரில் அவர் எழுதத் தொடங்கி 150 நூல்களை எழுதிக் குவித்தார். அவர் உடலால் மறைந்திட்ட போதும் எழுத்தால், நூலால் இன்றும் வாழ்கிறார். அவரது செல்லப்பிள்ளையான என்னையும் எழுதிட அறிவுறுத்தியதன் பேரில் 22 நூல்கள்  நான் எழுதி விட்டேன். ஏர்வாடியாரும் பல நூல்களை எழுதி குவித்து வருகிறார் இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இந்த புதுக்கவிதை.

      காந்தி சிலையைக்
      காணவில்லை
      யாரோ ‘சுட்டு’ விட்டார்கள்.



எள்ளல் சுவையுடன் எழுதிய புதுக்கவிதை நன்று. காந்தியைத்தான் கொடிவன் கோட்சே சுட்டு விட்டானே, மறுபடியுமா சுட்டு விட்டார்கள் என்று வியந்து படித்தால், சுட்டு விட்டார்கள் என்றால், ‘திருடி விட்டார்கள்’ என்பது இன்றைய இளைய தலைமுறையினர் அரத்தம். அந்த அர்த்தத்தில் எழுதிய கவிதை சிறப்பு. சிலைகளைத் திருடுவது மட்டுமல்ல, சில கயவர்கள் அவமானப்படுத்தியும் விடுகிறார்கள். சிலைகளைப் பாதுகாப்பதே காவலர்களுக்கு பெரிய தலைவலி ஆகிவிட்டது இன்று.

உன்னை நான்
      மதிக்கிற போது
      மதிக்கத் தெரியாத நீ
      உன்னையே
      அவமதிக்கக் கற்றுக் கொள்கிறாய்!



பிறர் உன்னிடம் எப்படி மதிக்க நடந்து கொள்ள வேண்டுமேன்று எதிர்பார்க்கின்றாயோ அது போல நீ பிறரை மதிக்க வேண்டும்.  நம் மதிப்பை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் மதித்தால் திருப்பி மதிக்க வேண்டியது கடமை, பொறுப்பு என்பதை உணர்த்திடும் வைர வரிகள் நன்று.

ஒரே பாட்டில்
      உயர்ந்து காட்டுவதல்ல வாழ்க்கை
      படாத பாட்டில்
      பெறுகிற வெற்றியே வாழ்க்கை !



இன்றைய இளைய தலைமுறையினர், திரைப்படங்கள் பார்த்துவிட்டு, அதில் வரும் கதாநாயகன் ஒரே பாட்டில் உயர்வதாக காண்பிக்கப்படுவது போல, நிசத்தில் நாமும் உயர்ந்து விடலாம் என்று எண்ணுகின்றனர். அது கற்பனை. ஆனால் வாழ்க்கை அப்படி அல்ல, படாத பாடு பட்டுத்தான் வாழ்க்கையில் உயர முடியும் என்ற பாடத்தை உணர்த்திடும் கவிதை நன்று.

எழுத வருகிறது
      என்பதெல்லாம் சரி
      எழுதியென்ன வருகிறது?
      என்கிறாள் மனைவி !



இன்றைய எழுத்தாளர்கள் அனைவரின் மனைவியும் கேட்[size=16]கும் கேள்வி இது தான். ஒரு நகைச்சுவை சொல்வார்கள். என்ன செய்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஒருவர் எழுத்தாளராக உள்ளேன் என்றாராம். அது சரி, அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க? என்று திருப்பி கேட்டாராம். அதுபோல நன்றாகத் தான் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் அந்த எழுத்திற்கான சன்மானம் என்ன வருகிறது என்ற கேள்விக்கு மௌனமே விடையாகின்றது. நாட்டு நடப்பை உணர்த்திடும் கவிதை. நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகளின் அணிவகுப்பு, பாராட்டுகள்.[/size]

--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எப்போதும் போல் இல்லை எப்போதும் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்  !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum