தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீர்க்கதரிசி: திரை விமர்சனம்

Go down

தீர்க்கதரிசி: திரை விமர்சனம் Empty தீர்க்கதரிசி: திரை விமர்சனம்

Post by அ.இராமநாதன் Mon Jun 19, 2023 12:32 am

[You must be registered and logged in to see this image.]
மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி வரும் மர்மக் குரல், கொலை, கொள்ளை, திட்டமிட்ட விபத்து என பல குற்றச் செயல்கள் அடுத்தடுத்து நடக்கப் போவதாகவும் தடுக்கும்படியும் தகவல் கொடுக்கிறது.


முதலில் அலட்சியப்படுத்தும் காவல்துறை, குரல் சொன்னது அப்படியே நடக்க, மர்மக் குரல் மனிதரைத் தேடிகொண்டே, குற்றச் செயல்களைத் தடுக்கவும் ஓடுகிறார்கள். அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததா, நடக்கப்போகும் நிகழ்வுகள் அவருக்கு மட்டும் எப்படி முன்னதாகத் தெரிய வருகின்றன என்பது கதை.


தலைப்பை நியாயப்படுத்தும் ஒருவரிக் கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை எழுத முயற்சித்திருக்கிறார் பி.சதீஷ்குமார். ஆனால், மர்மக் குரலுக்கும் காவல் துறைக்கும் இடையிலான இந்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ ஓட்டம் ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது.


அதற்குத் தர்க்க ரீதியாக விலகல்கள் இருப்பது ஒரு காரணம். இருப்பினும் அந்த மர்மக் குரலை மிடுக்குடன் ஒலிக்க வைத்து, நடக்கப்போகும் சம்பவங்களைக் காட்சிப்படுத்திய விதத்தால் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இக்குறைகளைச் சமாளித்திருக்கிறார்கள்.


இன்னும் பல இடங்களில் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசையும் ரஞ்சித் சி.கே.வின் படத்தொகுப்பும் ஈடுகட்ட முயன்றுள்ளன.


சி.சி.டி.வி பதிவு, ஜி.பி.எஸ்ட்ராக்கிங், கால் ட்ராக்கிங் ஆகியவற்றையே காவல்துறை அதிகமும் நம்பியிருப்பது, இவற்றைப் பலமுறைப்பார்த்துச் சலித்தப் பார்வையாளர்களுக்கு அவையே பெருந்துன்பம்.


மர்மக் குரலுக்குரிய மனிதரைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் காவல் அதிகாரியாக வரும் அஜ்மல், கதாபாத்திரத்துக்குரிய ஆளுமையை நடிப்பில் கொண்டு வந்துவிடுகிறார். ஆனால் அவரது துடிப்புக்குப் போதுமான தீனி கிடைக்கவில்லை.


அவருக்குக் கைகொடுக்கும் சக காவல் அதிகாரிகளாக வரும் ஜெய்வந்த், துஷ்யந்த் இருவரும் கவனிக்கவைக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீமன், மதுமிதா, மூணாறு ரமேஷ் உரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


மாறுபட்ட கவுரவக் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனக்கேயுரிய பகடியுடன் அலட்டாத நடிப்பை, கிளைமாக்ஸில் அதிர்ச்சியையும் கொடுத்து, கதைக்கும் களத்துக்கும் தோள் கொடுத்திருக்கிறார்.


பரபரப்பான சாலைகளில் சுழலும் ஜெ.லட்சுமணனின் கேமரா, அதே பரபரப்பைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் பதிவு செய்திருப்பதுதிறமை. அவசியமற்ற நகைச்சுவைக் காட்சிகள், காவல் துறைக்கான போற்றிப் பாடல் ஆகியன இக்களத்துக்கு தொங்கு சதைகள்.


காவல் கட்டுப்பாட்டு அறையை மையப்படுத்தி, அதனுடன் இன்றைய முக்கியச் சமூகப் பிரச்சினை ஒன்றைப் பரபரவெனத் தொடர்புபடுத்தியிருப்பதைப் பாராட்டலாம். அதற்குத் திரைக்கதையின் நகர்வு, படத்தொகுப்பின் வேகம் ஆகியவை மட்டுமே உண்மையான விறுவிறுப்பைக் கொடுத்துவிட முடியாது.


அதைத் தாண்டி படத்தின் இறுதியில் பார்வையாளர்களின் கவனத்துக்குத் தெரிய வரும் அப்பிரச்சினையின் ஆழமும் அரசியலும் பேசப்பட்டிருக்க வேண்டும். அதை இந்தத் தீர்க்கதரிசி தவறவிட்டிருக்கிறார்.


-நன்றி: இந்து தமிழ் திசை
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum