தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

கவிஞர் இரா  இரவி - வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Empty வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Fri Jun 23, 2023 10:17 pm

வாழ்க்கை வாழ்வதற்கே!
சிறுகதை தொகுப்பு
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்
 நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி
எழுத்தாளர் சோ. பரமசிவம் அவர்கள் சிவகங்கை மாவட்டம், முனைவென்றி என்ற கிராமத்தில் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து பட்டம் பெற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பல பணிகளில் பணிபுரிந்து கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.
‘செல்ல மகன்’ என்ற சிறுகதை தொகுப்பு, மதுரை வாசகர் வட்டத்தில் கோலாகலமாக மாநாடு போல வெளியிடப்பட்டது. இவரது நண்பர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியனின் கவிதை நூலும் அன்று தான் வெளியிடப்பட்டது.  அந்த நூலின் வரவேற்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த சிறுகதை தொகுப்பு நூல் சிறப்பாக வந்துள்ளது. பத்து முத்திரைக் கதைகள் உள்ளன.
இவரது கதைகளைப் படித்தபோது இலக்கிய இமயம் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் குருவான மு.வ. என்று அழைக்கப்படும் மு.வரதராசன் அவர்களின் நினைவு தான் வந்தது.  அவரது பல கதைகள் படித்துள்ளேன். நூலாசிரியர் சோ. பரமசிவம் அவர்களும் படித்து இருப்பார்கள். அவரது பாதிப்பு இவரது எழுத்துக்களில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் அறநெறி கற்பிக்கும் வண்ணம் மு.வ. பாணியிலேயே எழுதி உள்ளார்.
எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் எழுதி உள்ளார். மதுரை நகரத்தையும் கோவை நகரத்தையும் எழுத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சில எழுத்தாளர்கள் வலிய பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை இவர் பயன்படுத்தவில்லை. பெரும்பாலும் நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி உள்ளார்.
தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை, எளிதில் விளங்கும் வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கதை படிக்கும் போதும் நம் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றன. நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வை தருகின்றன. திரைப்படம் பார்ப்பது போல உள்ளது. படித்து முடித்ததும் மறந்து விடாமல் மனதில் காட்சியாக வந்து நினைவில் வருகின்றன. இதுதான் எழுத்தாளரின் வெற்றி. சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்து நாவல் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் வைக்கின்றேன்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றவுடன் மனதளவில் சோர்ந்து தன் வீடு, தன் குடும்பம் என்று சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோ.பரமசிவம் அவர்கள் ஓய்வுக்குப் பின், ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இளைஞனைப் போல இயங்கி வருகின்றார்.
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வார்கள். ‘இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று. அதுபோல நூலாசிரியர் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அதிக நூல்கள் படிக்கிறார். மதுரை வாசகர் வட்ட நிகழ்வுகளில் உலகத் தமிழ்ச்சங்கம்-மதுரை நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சமுதாயத்தை உற்றுநோக்கி சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பண்பை ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக சிறுகதைகளை எழுதி உள்ளார்.
கவிதைகள் போல சிறுகதைகளை மேற்கோள் காட்ட முடியாது. பதச்சோறாக இரண்டு சிறுகதைகள் பற்றி மட்டும் எழுதுகிறேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல உள்ளே சென்று படித்து பாருங்கள். படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் சில திருப்பங்களுடனும் கதைகளை எழுதி உள்ளார்.
கதையில் வரும் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளார். தமிழமுது, அறிவுக்களஞ்சியம், தமிழ்குழலி, தமிழினியா - இப்படி தமிழ்ப்பற்றுடன் பெயர் சூட்டி உள்ளார். இன்றைக்கு சமுதாயத்தில் குழந்தைகளுக்கு வாய்க்குள்  நுழையாத வடமொழிப் பெயரை பொருள் புரியாமல் வைத்து வருகின்றனர். தமிழ்ப்பெயர் சூட்டிட அறிவுறுத்தும் விதமாக கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளமைக்கு பாராட்டுகள்.
இன்றைக்கு வீடுகளில் குழந்தை அழுதால் அலைபேசியை விளையாட வழங்கி அழுகை நிறுத்துவது, சாப்பிட மறுத்தால் அலைபேசி தந்து சோறு ஊட்டுவது என நடந்து வருகின்றது. குழந்தைகளிடம் அலைபேசியைத் தந்து விளையாட வைப்பது அவர்களது கண்களைப் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஒரு கதையில் விதைத்துள்ளார்.
மற்றொரு கதையில் பணக்கார மாப்பிள்ளை பார்ப்பதை விட, ஏழையானாலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்காமன மாப்பிள்ளையை மகளுக்குப் பாருங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். ‘உழைத்தால் உயரலாம்’ என்று வலியுறுத்தி உள்ளார். பி.காம். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் புட்டு விற்பவன் பின்னாளில் எழுத்தாளனாக உயர்ந்து விருதும் பத்து இலட்சம் பரிசும் பெறுவதாக முடித்துள்ளார்.
இப்படி ஒவ்வொரு கதையிலும் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான நற்கருத்துக்களை விதைத்து உள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

கவிஞர் இரா  இரவி - வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 09, 2023 4:58 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர் இரா  இரவி - வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 09, 2023 4:58 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர் இரா  இரவி - வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Empty Re: வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum