தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்

Go down

நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள் Empty நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 4:09 pm

இராமாயணத்தை எழுதுவதாகக் குலோத்துங்க சோழனிடம் காசு, பணம் ம்ற்றும் இன்ன பிற வாங்கிவிட்ட, கம்பர். ஒப்புக்கொண்ட பின்னரும் காவியத்தைப் பாட ஆரம்பிக்காமல் சும்மாவே இருந்தார்.
சில மாதங்கள் கழிந்தன.
ஒட்டக்கூத்தரும் வழமை போல் சோழனிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்.
ஆகவே சோழன் கம்பரைப் பார்த்து, "என்ன கம்பரே, காவியமெல்லாம் எப்படி?",
என்று கேட்டான்.
"ஓ! ரொம்ப நல்லாப் போகுதே!" எவ்ரி திங் இஸ் ஃபைன். வீ ஆர் வெல் அஹெட் ஆஃப் ஸ்கெட்யூல் என்று அள்ளி விட்டார்.
சோழனும் "அப்படியா? இப்போ எந்த இடம்வரைக்கும் வந்துவிட்டீர்?"
கம்பர் அசரவில்லை.
"வானரப்படை, கடலுக்கு மேல் ஃப்ளை ஓவர் போடுவது வரைக்கும் வந்தாயிற்று.".
"ஓஹோ! எங்கே ஒரு பாடலைச் சொல்லும் பார்ப்போம்."


குமுதனிட்ட குலவரைக் கூத்தரின்
திமிதமிட்டுத் திரியும் திரைக்கடல்
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழுமெனும் ஆசையால்

குமுதன் என்னும் வானரத்தலைவன் ஒருவன் பெரும் மலையைப் பிடுங்கி
விளையாட்டாகக் கொண்டுவந்து கடலில் போட்டான். அப்போது நுரையும்
திரையுமாக கொந்தளித்தெழுந்த கடலின் நீர்த்துளிகள் விண்ணுக்கும் சென்று
அங்கிருந்த விண்ணவர் உலகையும் எட்டியது. அதைக் கண்ட விண்ணவர், (தேவர்கள்)
'மீண்டும் கடல் கடையப்பட்டு அமுதம்தான் மீண்டும் பிறக்கிறதோ; இந்த முறை நாம் கடையாமலேயே அமுதமறுந்தப் போகிறோமே. ஹே ஜாலி', என்ற மகிழ்ச்சியால் துள்ளினார்கள்.

அதனைக் கேட்ட ஒட்டக்கூத்தர், 'வாடி மாப்ள வா. இதுக்குத் தான்டி மாமன் கொள்ள நாளா காத்துக்கிட்டுக் கிடந்தேன்' என்று எண்ணிக்கொண்டு, "அது சரி மரியாதைக்குரிய கம்பர் அவர்களே, துளியைத் துமி என்றீரே, அது எப்படி எந்த டிக்ஷனரியில் இருக்கு? காட்டுவீரா?",
என்றார்.
கம்பர், "அது எந்த நரியிலும் இல்லை. விக்கிபீடியாவில் கூட இருக்காது. அது சொல்வழக்கு".
"சரிதான். அப்படியானால் அந்த சொல்வழக்கையாவது காட்டும்."

'நானும் அறியேன்; அவளும் பொய்சொல்லாள். நாம் பாடுவது எல்லாமே அவள் வாக்குதான்.
அது பொய்க்காது', என்று எண்ணிக்கொண்டு, கம்பர் வீட்டுக்குச் சென்று சரஸ்வதியை
அழைத்தார்.
அவர் நினைக்கும்போது சரஸ்வதி அவருக்குப் பிரசன்னமாவதுண்டு.
கலைவாணி தோன்றியதும் அவளிடம்,

"என்னம்மா இது! 'நானும் அறியேன்; அவளும் பொய்சொல்லாள்',

என்ற வண்ணம், நான்பாட்டுக்கு 'துமி' என்ற சொல்லைச் சொல்லிவிட்டேன். இப்போது ஒட்டக்கூத்தன் பிடித்துக்கொண்டு உலுப்புகிறானே? என்ன செய்வது?"
கலைவாணி, "டோன்ட் ஒரி கிட், ஐ வில் டேக் கேர்.நாளை இரவு, ஊருக்கு வெளியில் இன்ன இடத்திற்கு மன்னனையும்
கூத்தனையும் கூட்டி வா." என்றாள்.

அவ்வாறே அடுத்த நாள், கம்பன் அவ்வருவரையும் கூட்டிக்கொண்டு கலைவாணி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றான்.

அந்த இடத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் ஒரு யாதவப்பெண் தயிர் கடைந்துகொண்டிருந்தார். அருகில் நான்கு குழந்தைகள். அவர்களிடம் அந்தப்பெண், "பிள்ளைகளே! உங்கள்மேல்
மோர்த் துமி தெறிக்கப்போகிறது எட்ட நின்று விளையாடுங்கள்," என்றாள்.

ஒட்டக்கூத்தர் அயர்ந்துபோனார்.

ஏனெனில் அந்த இடத்தில் அதுவரைக்கும் ஏதும் வீடு இருந்ததில்லை. ஒரு கணம் கண்மூடி, கலைவாணியைத் தியானம் செய்துகொண்டு கண்களைத் திறந்துபார்த்தார். அவர் கண்களுக்குக் கலைவாணி தெரிந்தாள். அருகில் நான்கு வேதங்களும் குழந்தைகளாக விளையாடிக்கொண்டிருந்தன.

ஒட்டக்கூத்தரும் கலைவாணியின் பேரருளைப் பெற்றவர்தாம். 'ஈட்டியெழுபது' என்னும்
நூலை சிர சிம்மாதனத்தின்மீது அமர்ந்தவாறு கலைவாணியின் மீது பாடியவராயிற்றே! தக்கயாகப்பரணி பாடும்போது வெளிச்சத்திற்காக திருவொற்றியூர் காளியே வந்து பந்தம் பிடித்திருக்கிறாளே!

வாக்தேவியாகிய கலைவாணியே 'துமி' என்ற சொல்லைச் சொன்னதால் அதுவும் ஒரு
சொல்தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏனெனில், 'நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்' - இன்னுமொறு முறை கம்பர் வாணியைப் படுத்தியது பெத்த கொடுமைக்காக. அதாவது அவர் பெற்றெடுத்த பிள்ளைக்காக, அவன் காதலுக்காக. அதையும் பகிர்வேன் நேரம் இருப்பின்.

நன்றி மதுரை ராஜா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum