தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
2 posters
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
3. வீரம்
கல்வி தறுகள் இசைமை கொடைமேனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
(தொல்-பொருள்-9)
வீரம் எவ்வெவற்றின் நிலைக்களனாய்ப் பிறக்கும் என்பதை விளக்கும் தொல்காப்பியனாரின் நாற்பாதான் மேலே குறிப்பிட்டுள்ளது. கல்வியாலும், அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமையாகிய தறுகண்ணாலும், பழியொடு வருவன செய்யாமையாகிய இசையாலும், எல்லாப் பொருளும் கொடுக்கும் கொடையாலும் வீரம் பிறக்கும்.
மெய்ப்பாடு எட்டு எனச் சொல்லிய தொல்காப்பியன், நகை முதலாகத் தொடங்கிக் கூறும் போது பெருமிதத்திற்கு அடுத்தாற்போல் வெகுளியை வைத்தார். வீரத்தின் பயனாகிய பிறர்க்கு வரும் வெகுளியை வீரமாகிய பெருமிதத்திற்குப் பின் வைத்தார் என்பது பேராசிரியர் மெய்பாட்டின் வைப்பு முறைக்குக் கூறும் விளக்கம். எனவே வீரத்தின் பயன் வெகுளி என்பது வெள்ளிடை மலை. ஆகவே வெகுளியை - சினத்தை வீரத்தோடு சேர்த்தே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வீரத்தைப் பற்றிப் பல பாடல்களில் வைரமுத்து பாடியுள்ள கருத்துக்கள் சுவையானவை.
தண்ணீருக்காகப் போராடும் இந்நாட்டு மன்னர்களின் - மக்களின் தாக யுத்தம். அஞ்சாமை வெளிப்படுகிறது.
வானம் இங்கு வந்தபோதும்
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு (1 - 7)
‘‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே’’ என்ற பாரதிக்குத் தன்னை வாரிசாகக் காண்பித்து விட்டார் வைரமுத்து. காலச் சூழல் மாறினாலும் கருத்தின் அடித்தளம் ஒன்று தானே.
இரவில் சுதந்திரம் பெற்றதாலோ என்னவோ இந்நாட்டு மக்களுக்கு விடியவே இல்லை. எனினும் சிந்திக்கத் தெரிந்த மனிதன் சும்மா இருப்பானா? உழைப்பாளிகள் உழைத்து உழைத்து அவர்கள் கையில் ஆயுள் ரேகையே இல்லை. அப்படியானால் அவர் தம் ஆயுளின் நிலை என்ன என்பதை உட்பொருளாகக் கொண்டு கவிஞர் வினாத் தொடுக்கிறாரா? அவர்கள் வீட்டில் என்ன வசதி இருக்கிறதோ இல்லையோ, வறுமை மட்டும் வசதியாக வாழ்கிறது. அவர்கள் கண் சிவந்தால் இந்த மண்ணே சிவந்து போகும் என்பதைக் கவிஞர் எச்சரிக்கிறார்.
காச்சுப்போன எங்கள் கையில்
ஆயுள் ரேகை இல்லையே
வறுமை எங்கள் வீட்டில் வந்து வசதியாக வாழுதே
கண் சிவந்து போன பின்பு மண் சிவந்து போகுமே.
(1 - 7)
கவிஞரின் சினத்தின் நியாயம் நன்றாகவே புரிகிறது.
‘ஓடப்பராயிருப்போர் உதையப்பராய் மாறிவிடுங்கள்; அப்போது தான் ஓடப்பரும் உயரப்படும் எல்லாம் மாறி ஒப்பப்பராய் விடுவர்’ என்று எழுச்சியூட்டுகிறார்.
சிங்கக் கூட்டங்கள் குவிந்து கிடக்கக் கூடாது. வேர்வை விதைத்தவர் ரத்தப் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் - துன்பச்
சிறையின் கதவு தெறிக்கும்
...
ஏரு பிடித்தவர்; இருமி இளைத்தவர்
ரத்தப்பொட்டு வைத்துக்கொண்டால்
தர்மங்கள் தூங்காது. (1 - 8)
இனியும் இச்சமுதாயம் கோழையாக நிற்குமா?
பெண்கள் துவளும் கொடியாகலாம். காலம் சூழும்போது காளியாக மாறுவர் என்று கவிஞர் பெண்ணின் வீரத்தைப படமாக்குவார்.
பெண் என்பவள் காளியல்லோ
தர்மத்துக்கு வேலியல்லோ
சூலம் எடு சாணையிடு ஆணையிடு. (1 - 21)
பெண்களின் இந்த எழுச்சியால் தான் தர்மம் இன்றும் காப்பாற்றப்படுகிறது.
ஏழை மக்கள் படும் துன்பம் சொல்லும் தரமன்று. எனினும் உலகம் இயங்கவதே அவர்களால் தான். அவர்கள் சினம் கொண்டால்?
சுற்றி உரு வானெடுத்தால்
சுற்றும் பூமி நின்றுவிடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்துவிடும். (1 - 22)
அவர்கள் அன்னை பராசக்தியிடம் சூலத்தை இரவல் கேட்கிறார்கள்.
சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே. (1 - 22)
இனி போருக்கு அறை கூவல் விடுக்கிறார்.
மீசையில் கைபோடு
கத்திக்கு நெய்போடு தோழா தோழா (1 - 22)
எழுச்சி நிச்சயம் தானே.
தன் மச்சானின் வீரத்தில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. வீட்டில் தங்கமாக இருப்பவன் வெளியில் வேட்டைக்குப் போனால் சிங்கமாகிறான்.
பொண்ணுமச்சான் போற வழி பூவு உண்டாகும்
வீரமச்சான் கோபப்பட்டா பூமி ரெண்டாகும்
வீட்டுக்கு வந்தா தங்கமல்லோ
வேட்டைக்குப் போனா சிங்கமல்லோ!
யானைக்கொம்பு விறகொடிச்சு அடுப்பெரிப்பானே!
(1 - 26)
சங்க இலக்கியத்தை இங்கே தெளிவாக்குகிறார் கவிஞர்.
அத்தகைய வீரமிக்கவர்கள் இம்மண்ணில் கணக்கிலடங்கார். அவர்கள் விழி சிவந்துவிட்டால் எரிமலைக் குழம்பாக வடியும். தெருவினில் பாய்ந்தோடும் வேங்கைகள் சங்கீதம் கேட்டு உறங்குமா? கங்கைகளைக் கைகளால் தடுத்து நிறுத்த இயலுமா? நாடு முழுவதும் தீயின் மணம் வீசத்தொடங்கி விடும் என்பது கவிஞரின் எச்சரிக்கை.
சிறுத்தைகள் இருவிழி சிவந்தன
கதவுகள் திறந்தன வழிவிடுங்கள்
எரிமலைக் குழம்பு ஊருகுது
தெருவினில் வருகுது வரவிடுங்கள்
......
சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள்
கைகொண்டு மூடினால் நில்லாது கங்கைகள்
கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம்?
தோழனே காலம் வரும்.
அட தேசம் எங்கும் தீயின் வாசம் வீச
வேண்டுமே. (1 - 54)
நெடுத்தொகையாகிப் போன ஒருவனின் வீர வரலாறு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. வீரத்தைப் பறை சாற்றுகிறது.
மம்பட்டியான் பேரு சொன்னாப்
புலி ஒதுங்கும் பாரு. (1 - 69)
கொடியவர்கள் தலைகளை வெட்டிச் சந்தையில் குவித்து வைத்தவன் மம்பட்டியான். கொடுமை எல்லாம் குட்டுப்பட்டன.
எட்டுத்தலை வெட்டி வெச்சான்
சந்தையில் கொட்டி வச்சான்
கொடுமையைத் தட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்? (1 - 69)
எனவே நீதியும் நியாயமும் கிடைக்காத போது போரிடத் தயக்கம் ஏன்?
நீதி எங்னே? அட நியாயமெங்கே?
நீயொரு வாளெடு பகையுடன் போரிடு--தயங்காதே
(1 - 97)
பூக்கிள்ளும் கூட்டம் கூடப் போராட வந்து விட்டால் கயவர்களின் மானம் கப்பலேறித் தானே போகும்.
சுமந்து வரும் காற்றாயிற்றே.
நெற்றியில் வியர்வை விட்டு - நீ
நேற்று என்பதை மாற்று - நம்மைக்
கட்டுப்படுத்த முடியாது - நாம்
கந்தகம் சுமந்த காற்று - (1 - 126)
அழுகை கோழையின் ஆயுதமல்லவா? அவர்கள் அடுப்பைக் கரையான் அரித்துவிடும். ஆயுதம் ஏந்தினால் அடிமைச் சங்கிலி நொறுக்கப்படும். குறைந்த அளவு, ஆளுக்கு ஒரு தலையாவது ஆறுத்திடல் வேண்டும்! கவிஞரின் எழுச்சி வரிகள் கோழையையும் நிமிர்ந்து நிற்கச் செய்யும். விதைத்த வீரம் முளைத்து எழும்.
அழுது ஒதுங்கிக் கிடந்தால் - உங்கள்
அடுப்பைக் கரையான் அரிக்கும்
ஆயுதம் ஏந்தி நடந்தால் - அந்த
அடிமைச் சங்கிலி தெறிக்கும்
ஆணவ நரிகளை அழிப்போம் - அட
ஆளுக்கொரு தலை அறுப்போம். (1 - 157)
கவிஞர் தம் வீரமிக்க செய்தியால் புதியதொரு பாதை காட்டுகிறார். மக்கள் உள்ளங்களைப் பண்படுத்தி, ஏழை என்ற சொல்லை இல்லாமல் ஆக்க வேண்டுகிறார். இதுவோர் சமுதாய மாற்றம்.
எல்லோரும் வாளெடுப்போம்
பொற்காலம் நாளையடா
பேச்சினால் செயல் வீச்சினால்
மக்கம் மனங்களை உழுது
ஏழையே இனி இல்லையே
என்னும் நரித்திரம் எழுது. (2 - 42)
இங்கே கவிஞர் ஒரு சமுதாயச் சிற்பியாகக் காணப்படுகிறார்.
இக்கூற்றுக்கு உரம் சேர்க்கிறது. மற்றோரு பாட்டு. கதவு திறக்காது. அதனை உடைத்துப் படையை நடத்து என்று பாடுவார். இன்று தடையாகிய கதவு உடைக்கப்பட்டால் என்றேனும் அமைதி வந்தே தீரம்.
கதவை உடைத்துப் படையை நடத்து
மனிதன் தலைவிதி மாறும்
கதவை உடைப்பது இன்று
அமைதி கிடைப்பது என்று? (2 - 63)
அவன் இளைஞன். ஆண் அல்லவா! எனவே வீரம் கொப்புளிக்கிறது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்கிறான். இரத்தம் சிந்தாமல் மாற்றம் இல்லை. எனவே ஆயுதம் ஏந்திடுவோம். அங்கே நக்சலிசம் விதைக்கப்பட்டுவிட்டது.
ரத்தம் சிந்தாமல் நடந்நது என்ன?
.....
ஆயுதம் ஏந்தாமல் எது இங்கு மாறும்?
.....
விழிகள் சிவந்தால்
உலகில் ஒளியுண்டு
.....
முள்ளை முள்ளால் எடுத்தால் தவறல்ல. (2 -65)
மந்தையாகிப் போன மக்கள், இங்கே காந்திக்கு வேலையில்லை. அவர் கைத்தடிக்குத்தான் வேலை. இரசாயன மாற்றம் நடைபெற வேண்டுமானால் சூடு பிறந்து தானே ஆக வேண்டும். அதைத்தான் கவிஞர் எடுத்துக் காட்டுகிறார்.
காந்தி போல வாழ்ந்திருந்தோம் ஏழைங்க -
இப்போ கைத்தடிக்கு வேலைதரப் போறாங்க
செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க (2 - 71)
குடும்ப மானம் பாழ்படுத்தப்பட்ட போது சினம் எழுகிறது. அவன் இரத்தத்தால் வாய் கொப்பளித்தான். அழிக்கும் கடவுளாகிய அரனாக மாறுகிறான். அச்சினத்தின் அடிப்படையும் மானம் காக்கும் வீரம் தானே.
தங்கச்சியப் பண்ணை கற்பழிச்சான் - இவன்
ரத்தத்துல வாயக் கொப்புளிச்சான்
இன்னும் பழிவாங்காது
கண்ணில் இமை சாயாது
எனவே இவனே சிவனாய் ஆரம்பிச்சான். (2 - 84)
இத்தகைய தனி மனித வீர உணர்வும் இல்லையெனில் இத்தரணியே கொடியவர்களின் வேட்கைக் காடாக மாறிவிடுமே.
இந்தத் தனிமனித வீரம்தான் சமுதாயத்தில் ஒன்று சேரும்போது யுகப்பிரளயம் பிறக்கிறது. அங்கே இரத்தம் தெறிக்கட்டும்.
சுரண்டும் நரிகள் எங்கே? எங்கே?
திரண்டு வருகிறோம் அங்கே! அங்கே!
வரம்பு கடந்து நரம்பு எழுந்து துடிக்குதே
யுத்தம் பிறக்கட்டுமே ரத்தம் தெறிக்கட்டுமே.
(2 - 117)
காரி கதனஞ்சான் பாய்ந்த களையைக் குத்திக் சூடர் சரியக் கிழிந்தது. அவனுக்கே அவள் மலையிட்டாள். இல்லையில்லை அவன் வீரத்துக்கு மாலையிட்டாள். இதுபோன்ற முல்லைக் கலிக் காட்சியையும் கவிஞர் காட்டாமல் விடவில்லை.
பெண்மை ணென்றால் வீரனுக்கே மாலை
தந்துவிடும்
தீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடு (2 - 120)
பிள்ளைக்குச் சோறூட்டும் போதே வீரத்தையும் சேர்ந்தே ஊட்டுகிறாள்; பண்பாட்டையும் தான்.
மானம் ஒன்றே வாழ்க்கை என்றே
மண்ணை ஆளவா
வீரம் ஒன்றே வேதம் என்றே
விண்ணை சாடிவா. (2 - 137)
அவன் நாட்டைக் காக்கும் வீரன் - போர்வீரன் போரென்று வந்துவிட்டால் அன்னியர்கள்-பகைவர்கள் நுழையாவண்ணம் அவன் கூட்டம் தானே வேலியாக நின்று நாட்டைக் காக்கிறது. அவர்களுக்குள்ளே பாசம் பந்தம் என்ற உணர்வுகளெல்லாம் ஓடிப்போய் விடுகின்றனவே. இது தான் வீரத்தக்கு இலக்கணமோ?
யுத்தங்கள் வந்தா - இங்கு நாம் தானே வேலி
ஆடுங்கடா!
தேசத்தைக் காப்பாற்றப் பாசத்தை விட்டோமடா
பலே! பலே! பலே! பலே! (2 - 141)
கோழைகளாக, பூனைகளாக முடங்கிக் கிடந்த மனித இனம் நேரம் வந்தபோது யானையாக மாறிப் போருக்குத் தயாராகும். களிறுகள் பிளிறத் தொடங்கும். சின்னஞ்சிறுசுகள் கூட ஆயுதம் ஏந்திப் படையாக மாறும்.
பூனைகளாகக் கெடந்த சினம்
யானையானதே
சின்னஞ்சிறுசும் கத்தி எடுத்து
சேனையானதே
வீரம் சுயமானம் அது வேணும் - இனி
ஊரெல்லாம் ஒண்ணாகிப் போரடும். (2 - 155)
‘பகை என ஒன்று எழுந்து வந்து விட்டால் வாளெடுத்துப் போருக்குச் செல்லுங்கள். எனக்கும் செய்தி அனுப்புங்கள். நானும் தோளோடு தொள் கொடுத்துப் போராடுவேன்’ என்கிறது ஒரு காளை.
சுற்றி ஒரு பகை எழுந்தால் வாளை எடுங்கள்
தோள்கொடுப்பேன்-எனக்கு ஒரு ஓலை விடுங்கள்.
(2 - 194)
அராஜகம் அழிய வேண்டும். போர் தான் உடனடி நிவாரனம். தலைகள் உருளட்டும். அப்பகைவர் பிணத்தின் மீது தான் சொர்க்கம் தெரியும்.
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம். (2 - 187)
சினம் இல்லாமல் வீரமில்லை. வீரமில்லாமல் போரில்லை. அது சமுதாயக் கேடுகளாகிய பகையானாலும் நாட்டையே நாசமாக்கும் உட்பகையானாலும் வெளிப்பகையானாலும் எழுச்சி சினம் போர் என்ற அளவிலேதான் பாதுகாப்புப் பெற முடியும் - சமுதாயச் சீர்திருத்தம் பெற முடியும், என்பதை எல்லாம் வைரமுத்து அவர்கள் எடுத்துக் காட்டிப் பாடியிருப்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுவனவாம்.

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
அருமையான ஆய்வு அதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி முனைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 27. தொலைக்காட்சித் தொடர்கள்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -34. பழமொழிகள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum