தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழக்குச் சொல் அகராதி

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:23 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:26 pm

புகுந்து விளையாடுதல்  _  நன்கு எளிதாகச் செயற்படுதல்.
புகைச்சல் _  மனக்குமுறல்.
புக்கை _ அரிசியையும் பருப்பையும் சேர்த்துக் குழைவாக வடித்துச் செய்யும் உணவு.
புசுபுசு என்று _ மிகவும் மிருதுத் தன்மையுடையது.
புடம் போட்டது _  தூய்மையுடையது.


புடைசூழ  _  பலர் பின் தொடர்தல்.
புட்டிப்பால்  _  தாய்ப் பாலுக்குப் பதிலாக தரும் குழந்தை உணவு.
புத்தகப் புழு _  புத்தகம் படிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவன்.
புத்திர பாக்கியம் _  குழந்தைப் பேறு.
புரட்டன்  _  உண்மையில்லாதவன்: பொய்யன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:27 pm

புரவியாட்டம் _ பொய்க் கால் குதிரை ஆடுதல்.
புருஷன் _ கணவன்.
புருஷ லட்சணம் _ ஆணுக்குரிய சிறப்பு.
புருஷார்த்தம் _ உறுதிப் பொருள்.
புரையிடம் _ வீட்டை யொட்டிய காலியிடம்.


புரையேறுதல் _ மூச்சுக் குழாயினுள் உணவுப் பொருளில் சிறிது சென்று எரிச்சல் உண்டாதல்.
புலி வேஷம் _ புலி வேடம் கொண்டு ஆடுதல்.
புளகாங்கிதம் _ மெய் சிலிர்ப்பு : மகிழ்ச்சிப் பெருக்கால் தோன்றும் உணர்வு.
புளி மூட்டை _ உடல் கொழுத்து விளங்கும் மூடன்.
புளுகன் , புளுகுணி _ பொய் பேசுபவன்.


புறுபுறு _ கோபம் காணுதலைக் குறிப்பது.
புனப்பாகம் _ வடித்த சோற்றை மீண்டும் கொதிக்க வைத்துத் தயாரிக்கும் கஞ்சியுணவு.
புஜம் _ தோள் பட்டைக்குக் கீழ் உள்ள கைப்பகுதி.
புஷ்டி _ பருமன்.
புஷ்பம் _ மலர்.


புஷ்பவதி _ பருவமடைந்த பெண்.
புஸ் என்று _ ஒன்றுமில்லாமல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:08 pm

பூகோளம் _ புவியியல்.
பூசி மெழுகு _ குற்றமாயினும் வெளிப்படுத்தாது மறைத்து விடு.
பூச்சாண்டி காட்டுதல் _ அச்சுறுத்தும் நோக்கத்தில் விரட்டுதல்.
பூச்சிக் காட்டு _ குழந்தைகளுக்குக் அச்சம் உண்டாக்குமாறு செய்.
பூதாகரம் _ மிகப் பெரிய வடிவம்.


பூம்பூம் மாடு _ அலங்காரம் செய்து பெருமாள் மாட்டுக் காரன் அழைத்து வரும் மாடு.
பூர்வாங்கம் _ முதல் நிலை.
பூர்வாசிரமம் _ துறவியின் கடந்த வாழ்க்கையின் பகுதி.
பூஜ்யம் _ ஒன்றுமில்லை எனப்படுவது.
பூஜை புனஸ்காரம் _ வழிபாட்டு நியமம்.


பூஜை போடுதல் _ யாருக்கும் கொடுக்காது பாதுகாக்கும் தன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:09 pm

பெட்டிக் கடை _ சிறிய கடை.
பெட்டி போடு _ துணிகளை மடிப்பு செய்யப் பயன்னடுத்தும் நெருப்புப் பெட்டி.
பெட்டி வண்டி _ கூண்டுள்ள வண்டி.
பெண்சாதி _ மனைவி.
பெண் வீட்டார் _ திருமணப் பெண்ணுடைய பெற்றோர் முதலானோர்.


பெயரளவில் _ வெறும் தோற்றம்.
பெயரெடு _ புகழ் பெறு.
பெயர் பெற்ற _ புகழுடைய.
பெரிது படுத்து _ முக்கியத்துவம் கொடு.
பெரிய ஆள் _ வல்லோன் : அறிவுடையோன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:09 pm

பெரிய புள்ளி _ செல்வாக்குடையவர்.
பெரிய மனம் _ தாராள மனம் : இரக்க சுபாவம்.
பெரியவர் _ வயதில் முதிர்ந்தவர்.
பெருந்தகை _ பெருமையுடையவர் : சான்றோர்.
பெருந் தன்மை _ தாராள மனப்பாங்கு.


பெருநோய் _ தொழு நோய் : குட்டம்.
பெரும் பாலும் _ பல : அனேகமாக.
பெரும் போக்கு _ பெருந் தன்மை.
பெருமக்கள் _ சான்றோர்.
பெருமாள் மாடு _ பூம் பூம் மாடு.

பெருவிரல் _ கட்டை விரல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:10 pm

பேக்கு _ அறிவற்றவன்.
பேசா மடந்தை _ மெளனம் சாதிப்பவள்.
பேச்சு வாக்கில் _ முக்கியம் காட்டாதவாறு.
பேச்சு வார்த்தை _ சமாதான நாட்டத்தில் பேசி வழக்கைத் தீர்த்தல்.
பேட்டை _ ஏழை மக்கள் வசிக்கும் பகுதி.



பேத்தல் _ உளறுதல் : பிதற்றல்.
பேந்தப் பேந்த _ ஒன்றும் புரியாமல் விழித்தல்.
பேரண்டம் _ பிரபஞ்சம்.
பேர்வழி _ ஆள்.
பேறு காலம் _ மகப் பேறு தருணம்.


பேனா நண்பர் _ கடித வாயிலான நண்பர்.
பேஜார் _ சிரமம் : தொந்தரவு.
பேஷாக _ மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தருவது.
பேஷ் _ பாராட்டுச் சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:10 pm

பைசல் _ தீர்வு காணுதல்.
பைய _ மெதுவாக.
பைராகி _ துறவி.
பைஜாமா _ இறுக்கம் இல்லாத கால் சட்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:11 pm

பொக்கிஷம் _ உயர்ந்த பொருள்.
பொக்கை வாய் _ பல் இல்லாத வாய்.
பொசுக்கு _ கருகச் செய்.
பொடிசு _ சிறியது.
பொடியன் _ சிறுவன்.


பொட்டை _ குருடு : வீரமில்லாதவன்.
பொத்தான் _ பித்தான் ( காண்க)
பொத்து _ உள்ளங்கையில் மூடுதல்.
பொத்துக் கொண்டு வருதல் _ துக்கம் அல்லது சினம் திடீரெனத் தோன்றுதல்.
பொது ஜனம் _ பொது மக்கள்.

பொய்க்கால் _ மரக்கட்டை.
பொல்லாப்பு _ வெறுப்பு : வேண்டாத பழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:12 pm

போகப் போக _ நாளடைவில்.
போக்குக் காட்டு _ பாவனை செய்.
போட்டா போட்டி _ பலத்த போட்டி.
போதாக் குறைக்கு _ கூடுதலாக.


போயும் போயும் _ பயனற்றதாக.
போஜனம் _ சாப்பாடு.
போஷகர் _ பாதுகாவலர்.
போஷனை _ பராமரிப்பு.
போஷாக்கு _ சத்துப் பொருள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:12 pm

பெளத்திரன் _ மக்கள் வழிப் பேரன்.
பெளத்திரி _ மக்கள் வழிப் பேர்த்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:13 pm

மகசூல் _ தானிய விளைச்சல்.
மகத்தான _ பெரிதான : நிரம்ப.
மகத்துவம் _ பெருமை.
மகமை _ வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கிச் சமூகத்தின் பொது வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் நிதி.
மகராசன் _ செல்வம் மிகுந்த தருமவான்.


மகராசி _ மகராசன் என்பதன் பெண்பால்.
மகரிஷி _ முனிபுங்கவர்.
மகாசந்நிதானம் _ சைவ மடத்தின் பீடாதிபதி.
மகாத்மா _ உன்னத மனிதர் : மகான்.
மகாத்மியம் _ மகிமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:13 pm

மகால் _ அரண்மனை.
மகானுபாவன் _ ஒருவரை ஏளனக் குறிப்பில் உரைப்பது.
மகிஷம் _ எருமைக்கடா.
மகோன்னதம் _ உன்னதமானது.
மக்கர் _ இயந்திரம் பழுதடைதல்.


மக்கல் _ கெட்டுப் போனது.
மக்கு _ மூடன் : மெழுகு போன்ற பொருள்.
மங்களம் பாடுதல் _ நிகழ்ச்சியை முடித்தல்.
மசக்கை _ கர்ப்பவதி.
மசமசஎன்று _ அசமந்தமாக.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:14 pm

மட்டம் போடுதல் _ வேலை செய்யாதிருத்தல்.
மட்டுப் படு _ குறை : வேகம் : தணி.
மட்டுப் படுத்து _ குறைவுப் படுத்து.
மட்டு மரியாதை _ உரிய மரியாதை.
மடிப்பிச்சை _ இரந்து பெறுவது.


மண்டியிடு _ பணிந்து வணங்கு.
மண்டூகம் _ மூடன்.
மண்டைக் கர்வம் _ மடடைக் கனம் : இறுமாப்பு : செருக்கு.
மண்டையை உடைத்துக் கொள் _ தீவிரமாகச் சிந்தனை செய்.
மண்ணாங்கட்டி _ உருப்படாதது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:14 pm

மண்ணைக் கவ்வுதல் _ தோல்வியடைதல்.
மத்தியஸ்தம் _ சமரசம்.
மந்தகாசம் _ புன்சிரிப்பு.
மந்தணம் _ இரகசியம்.
மந்தம் _ சோர்வு.



மந்த மாருதம் _ தென்றல்.
மந்தை வெளி _ மேய்ச்சல் நிலம்.
மப்பும் மந்தாரமாக _ மழை வரும் குறிப்பு.
மமதை _ செருக்கு.
மயான வைராக்கியம் _ தற்காலிக உறுதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:14 pm

மயிரிழையில் _ நல்வாய்ப்பின் பேறு.
மரப்பாச்சி _ குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் மரப் பொம்மை.
மரியாதையாக _ அச்சுறுத்தும் குறிப்பு.
மருத்துவச்சி _ அனுபவத்தால் மருத்துவம் செய்யும் மாது.
மருந்துக்குக் கூட _ சிறிதளவிலும்.


மலங்க மலங்க _ குழப்பமாக.
மலைமலையாக _ குவியலாக.
மல்லாந்து _ முதுகு கீழாகவும் முகம் மேல் நோக்கியும் இருத்தல்.
மல்லாடுதல் _ சிரமப் பட்டுப் போராடுதல்.
மல்லுக் கட்டு _ தகராறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:15 pm

மவுசு _ மதிப்பு.
மற்றபடி _ வேறு.
மனக் கோட்டை _ கற்பனை.
மனப்பான்மை _ கருத்து.
மனப்பிராந்தி _ மனத்தில் உண்டாக்கும் உணர்வு : பயம் : வீண் கற்பனை.


மனம் போனபடி _ விரும்பிய படி.
மனஸ்தாபம் _ மனத் தாங்கல்.
மனுஷன் _ மனிதன்.
மனுஷி _ பெண்.
மனோபாவம் _ மனப்பான்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:15 pm

மாசு மருவற்ற _ சுத்தமான.
மாட்டல் _ காதணி.
மாந்திரீகம் _ மந்திர வித்தை.
மாப்பிள்ளை _ மணமகன்.
மாமாங்கம் _ 12 ஆண்டுகாலம் நெடுங்காலம்.


மாமிசப் பட்சிணி _ பிற விலங்கின் இறைச்சியை உணவாகக் கொள்ளும் பிராணி.
மாமியார் வீடு _ சிறைச்சாலை.
மாமூல் _ சகஜம் : அன்பளிப்பு : லஞ்சம்.
மாய்மாலம் _ பாசாங்கு.
மாரடித்தல் _ விருப்ப மில்லாத வேலை செய்தல்.


மார்வாடி _ வட்டிக்குப் பணம் தருபவன்.
மாவுத்தன் _ யானைப்பாகன்.
மாறி மாறி _ அடுத்தடுத்து.
மாஜி _ முன்னாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:16 pm

மிஞ்சிப் போனால் _ மிக அதிகமான அளவு காணின்.
மித்திரன் _ நண்பன்.
மினுமினுப்பு _ ஒளிர்வு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:20 pm

முகத்திரை _ மறைவான பொய்ம்மை.
முகங் கொடுத்துப் பேசு _ இன்னுரை செய்.
முகம் செத்துப் போதல் _ அவ மதிப்பு காணல்.
முகராசி _ நற்பேறு.
முக வெட்டு _ முகப் பொலிவு.


முகாந்தரம் _ அடிப்படை : ஆதாரம்.
முக்கி முனகி _ சிரமப் பட்டு.
முடிப்பு _ பணம்.
முடியைப் பிய்த்துக் கொள் _ மன அலைச்சல் : அவதிப்படு.
முடிவு கட்டு _ தீர்மானம் செய்.


முடுக்கி விடு _ துரிதப் படுத்து : தூண்டுதல் செய்.
முடை நாற்றம் _ துர் நாற்றம்.
முட்டி மோது _ அலைமோது.
முட்டுக்கட்டை _ தடை.
முண்டியடி _ நெருக்கிக் கொண்டு செல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:20 pm

முதலிரவு _ மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்ளும் நாள்.
முதலைக் கண்ணீர் _ போலி அன்பு.
முதுகில் குத்துவது _ துரோகம் செய்வது.
முதுமக்கள் தாழி _ முற்காலத்தில் இறந்தவரை அடக்கம் செய்யப் பயன் படுத்திய மட்பாண்டம்.
மும்முரம் _ தீவிரம் : செயல் துரிதம்.



முரண்டு _ பிடிவாதம் : எதிர்த்தல்.
முழம் போடு _ அளந்து பார்.
முழுக்க முழுக்க _ முழுமையாக.
முழுக்குப் போடு _ தொடர்பை விட்டுவிடு.
முழுங்குதல் _ அபகரித்தல்.


முழு மூச்சாக _ சிரத்தையாக.
முளையிலே கிள்ளி எறி _ ஆரம்பத்திலேயே அழித்து விடு.
முறை வாசல் _ பல குடித்தனங்கள் உள்ள வீட்டில் தூய்மை செய்யும் பங்கு முறை.
முன்பின் தெரியாத _ பழக்கமில்லாத.
முஸ்தீபு _ முன்னேற்பாடு : ஆயத்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:21 pm

மூக்கணாங் கயிறு _ வாலிபத் துடிப்பை அடக்கும் வகையில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல்.
மூக்கறு _ அவமானப் படுத்து.
மூக்கறுபடு _ அவமானப்படு.
மூக்கில் விரலை வை _ ஆச்சரியப் படுத்தலைக் குறிப்பது.
மூக்கில் வேர்தல் _ பிறர் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொள்ளும் தன்மை.


மூக்குடைபடு _ அவமானப்படு.
மூக்குப்பிடிக்க _ அளவுக்கு அதிகமாக.
மூக்கும் முழியுமாக _ அழகாக.
மூக்கு முட்ட _ வயிறு நிரம்ப.
மூக்கைச் சிந்துதல் _ நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விட்டு அழுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:21 pm

மூக்கைத் துளைத்தல் _ சுவையான உணவு வகை.
மூக்கை நுழைத்தல் _ பிறர் விவகாரத்தில் தலையிடுதல்.
மூச்சுப் பேச்சு காணோம் _ அமைதியாக உள்ள தன்மை.
மூச்சு விடாதே _ எதையும் சொல்லாதே.
மூடு மந்திரம் _ இரகசியம்.


மூட்டை முடிச்சு _ பயணத்துக்குரிய பொருள்கள்.
மூட்டி விடு _ கலகம் செய்.
மூலவர் _ அதிகாரம் கொண்ட பெரிய அதிகாரி.
மூலை முடுக்கு _ எல்லா இடமும்.
மூளியாக _ மங்கலத் தோற்றமின்றிக் கை,கழுத்து முதலியவற்றில் அணிகலன் இன்மை குறிப்பது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:21 pm

மெத்தென்று _ மிருதுவாக.
மெத்தனம் _ ஆர்வமின்மை.
மெய்க் கீர்த்தி _ அரசனது வரலாற்றுச் செய்தி.
மெய்சிலிர்த்தல் _ பரவசம் கொள்ளுதல்.
மெனக் கெட _ இதற்கெனத் தனிக்கவனம் செலுத்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:26 pm

மேடை ஏற்று _ பலர்க்கும் அறிமுக மாக்கு.
மேதா விலாசம் _ மேன்மை வெளிப்பாடு.
மேலோட்டம் _ கருத்தின்றி.
மேம்போக்கு _ உண்மையான கருத்தில்லாது.
மேல் வரும்படி _ இலஞ்சம் : துணைவருவாய்.

மேஜர் _ நன்கு புத்தி தெரிந்தவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:27 pm

மைசூர்பாகு _ ஓர் இனிப்பு பண்டம்.
மைல்கல் _ சாதனை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 6 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum