தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
மணி விழா மலர் மதிப்புரை,கருத்துரை :முனைவர்.ச.சந்திரா
2 posters
Page 1 of 1
மணி விழா மலர் மதிப்புரை,கருத்துரை :முனைவர்.ச.சந்திரா
:மணிவிழா மலர் கருத்துரை :முனைவர் ச.சந்திரா
நூல் :மணிவிழா மலர் கருத்துரை :முனைவர் ச.சந்திரா
( முனைவர் இரா.மோகன் முனைவர் நிர்மலா மோகன் )
பதிப்பாசிரியர்கள் :மதிப்புறு முனைவர் இரா.இரவி
முனைவர் செ.வனராசா இதயகீதன்
இலக்கிய விருந்து :
” அறுசுவை உணவை சமைப்பது எளிது ; அதனைப் பரிமாறுவது அரிது! ” என்பர். இலக்கிய வாழ்வின் அனுபவங்களை எண்ணத்திலும் ஏட்டிலும் சேமிப்பது எளிது.அனுபவ முத்துக்களை அழகுற கோர்த்து வண்ணமயமான மாலையாக மாற்றுவது அரிது.மகோன்னத மடாதிபதிகள் முதல் மாணவச் செல்வங்கள் வரை-என இருவேறு பேரெல்லைகளைத் தொட்டுச் செல்லும் இந்த தொகுப்பு மலருக்கு கிடைத்த பெருமையில் பதிப்பாசிரியர்களுக்கும் பங்குண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒற்றைத்தேரும் இரட்டைச்சாரதியும் :
மூதறிஞர் மு.வரதராசன் அவர்களின் வாழ்த்துரையில்துவங்கி இளைய தலைமுறையின் இனிய வாழ்த்துடன் நிறைவு செய்து , முதல் தலைமுறையினரோடு மூன்றாம் தலைமுறையினரை இணைத்திருக்கும் பதிப்பாசிரியர்களின் செயல்பாடு வியக்கத்தக்கது. பதிப்புப்பணி தரப்பட்டதா ? அல்லது பேரன்பில் கேட்டுப் பெறப்பட்டதா ? என்று யூகிக்க முடியாத அளவிற்கு, பொதுநல நோக்குடன் ‘ இரு சாரதிகள் ‘ மனம் ஒன்றிணைந்து, மலர்த் தேரை இலக்கியச் சாலையில் செலுத்தும் விதம் அதிசயிக்கத்தக்கது.
சிறுகதையா ? நாவலா ?
படைப்புலகம்,சொல்லுலகம்,ஆய்வுலகம் என தமிழன்னை உலாவும் மூவுலகங்களுக்கும் பயணித்து வாழ்த்துரை ,கட்டுரை ,கவிதை என புகைப்படங்களோடு படைப்புகளை நேரிலும் அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் பதிப்பாசிரியர்கள் பெற்று மலரை உருவாக்கியிருக்கும் தன்மை பாரட்டத்தக்கது.மலர் அறிமுகவிழா நாள் முதல் மலர் வெளியீட்டு நாள் வரை பதிப்பாசிரியர் இருவரும் பெற்ற அனுபவங்கள் ஒரு நாவல் படைக்கும் அளவிற்கு இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
பகுப்பும் தொகுப்பும் :
படைப்பாளிகளின் இலக்கிய அனுபவம் ,தர நிலை ,தகுதி -இவற்றை அடிப்படையாக வைத்து படைப்புகளுக்கு முன்னுரிமையும் ,முக்கியத்துவமும் வழங்கியிருப்பது பதிப்பாசிரியர்களின் நடுவுநிலைத்தன்மையை புலப்படுத்துகிறது.எழுத்துப்பிழை ,கருத்துப்பிழை ,இலக்கணப்பிழை- என எங்கு தேடினாலும் எப்பிழையும் கண்டறிய முடியாத அளவிற்கு மலர் செம்மையாய்த் திருத்தம் செய்யப்பட்டு , அம்சமாய் அச்சிடப்பட்டிருக்கிறது.இப்பெருமை பதிப்பாசிரியர்களைத்தான் சாரும்.
வானவில்லும் வர்ண ஜாலமும் :
பார்க்கவும் அழகு ;படிக்கவும் அழகு எனும்படியாக இலக்கியப் பயணங்கள் சார்ந்த புகைப்படங்கள் மலரில் அணிவகுத்து நிற்கும் திறம் அருமை.படைப்பின் கீழிருக்கும் சிற்றிடத்தைக் கூட வெகு சாமர்த்தியமாக பொன்மொழிகளாலும் ,புகழ் பெற்ற அறிஞர்களின் வாசகங்களினாலும் நிரப்பியிருக்கும் பதிப்பாசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது.
சிற்பக்கூடம்:
இலக்கிய இணையரின் மணிவிழா மலரை வாசித்த பொழுதில் அது தொகுப்பு மலர் போலல்லாது தன்முன்னேற்றச் சிந்தனையை இலக்கிய ஆர்வலர்களுக்கு வலியுறுத்த வந்த ஓர் ஒப்பற்ற நூல் எனும் உணர்வை வரவழைக்கிறது. ஒரு சிலையானது செதுக்கி முடிக்கப்பட்ட பின் நிறைவாக அச்சிலையின் விழிகளை சிற்றுளி கொண்டு நுணுக்கமாய் திறக்கும் சிற்பியின் செயல்பாட்டை ஒத்தது பதிப்பாசிரியரின் பணி. அப்பணியை இந்த மலர்ப்பதிப்பில் செவ்வனே செய்திருக்கின்றனர் கவிஞர்.இரா.இரவி அவர்களும் ,முனைவர் இதயகீதன் அவர்களும். இலக்கியம் சார்ந்த சமூகப்பணிகளைச் சீராகப் புரிந்துவரும் இவ்விருவரின் பேரும் புகழும் தமிழுலகில் ஒளிர, என்போன்ற இலக்கியப் பிரியர்களின் உளமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.
கருத்துரை :முனைவர் ச.சந்திரா
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
நூல் :மணி விழா மலர்
முனைவர்இரா.மோகன்,முனைவர் நிர்மலா மோகன்
பதிப்பாசிரியர்கள் :கவிஞர் இரா.இரவி
முனைவர்.வனராசா இதயகீதன்
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
ஈரைந்து மாதங்கள் ஆகும் ஒரு கரு உலகத்தை தரிசிக்க
ஓரைந்து மாதங்களில் ஒர் உன்னத மலர் இலக்கிய உலகில் பூத்துள்ளது.”சும்மா இருப்பதே சுகம் ” -என்று மனிதர்கள் பொழுதைப்போக்கும் இக்காலத்தில் சுற்றியிருப்போர் ஏந்துபுகழெய்த முனைப்புடன் செயல்பட்டு அனுபவ மலர்களை அபூர்வ மாலையாகத் தொடுத்த பதிப்பாசிரியர்களாம் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கும் முனைவர் இதய கீதன் அவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களின் சார்பாய் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மலருக்குள் மலர் :
தெள்ளுதமிழ் பேசும் தென்பாண்டி நாட்டில் இலக்கிய தென்றலாய் உலா வரும் இணையரது மணிவிழா மலர் தனக்கு மட்டுமில்லாமல் தரணிக்கே நறுமணம் பரப்பும் தாழைமலர்.இணையரின் பண்புநலன்கள் ஒளிர்விடும் பொழுதில் இது பாரிஜாதமலர்.பட்டிமன்ற அனுபவங்கள் சொல்லும் வேளையில் இது இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.உள்ளத்திற்கு மருந்தாய் மகிழம்பூ போல அறிவுறுத்தலோடு கூடிய சில வாழ்த்து மடல்கள்.மயக்கும் மல்லிகையாய் கவிதைப் பூக்கள்.கற்பகச்சோலையில் மலரும் மந்தார மலர் போல் அயல்நாடு வாழ் அறிஞர்களின் ஆசியுரைகள்.மொத்தத்தில் கொன்றை மலர் போல அடுக்கடுக்காய் அழகிய இலக்கிய அனுபவங்கள்.
கதம்ப மாலை:
அன்பு கட்டளையாய் ” இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் ” எனும் குரல் ,”நான் வாழும் நாள் வாழிய” எனும் பாசக்குரல், “அந்தண்மை செல்வம் தேடு ” என ஆணையிடும் குரல் ,”எல்லைக்கோட்டை உற்று நோக்குக ” எனும் நேசக்குரல் ,”பதவி,விருதுகளை பொருட்படுத்தாமல் படைத்தல் வினைப்பாட்டில் கவனத்தைச் செலுத்துக ” எனும் ஆர்வக்குரல் -என அடுக்கு மல்லியாய் சற்றே வித்தியாசமான வாழ்த்துரைகள் .
பொற்றாமரை:
இணையரைக் குறித்து கவிஞர் பொன் ரவீந்திரன் எழுதியிருக்கும் கட்டுரை வாசிக்கும் அனைவரையும் ஈர்க்கும் பொலிவு நிரம்பிய கட்டுரை.மோகனமான இதனை கட்டுரை என்பதா ?கவிதை என்று சொல்வதா? சிறுகதை என யூகிப்பதா ?உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இக்கட்டுரை இந்த மலர்த்தொகுப்பில் பொன்னாய் மிளிர்கின்றது.
மலர்ச்சோலை :
இணையரின் இலக்கிய சமூகப்பொது வாழ்விற்கு சான்றாய் , சாட்சியாய் வண்ண வண்ண புகைப்படங்கள் உதகை மலர் கண்காட்சியாய் காண்போர் விழிகளை அதிசயிக்க வைக்கிறது.இலக்கிய மன்றம் முதல் சட்ட மன்றம் ,இசைத்துறை முதல் இதழியல் ,சின்னத்திரை முதல்வெள்ளித்திரை,கவிக்கோ முதல் கவிப்பேரரசு ,வேழவேந்தன் முதல் வித்தகக் கவிஞன் ,முன்னாள் மூதறிஞர் முதல் இந்நாள் ஆய்வியல் அறிஞர் வரை என அங்கிங்கெனாதபடி எல்லோர் இருதயத்திற்குள்ளும் இணையரின் இலக்கியவாசம்பரவியிருப்பதை உய்த்துணர முடிகிறது.
பூங்கொத்து :
இணையரின் மலர்த்தொகுப்பில் மனதைக்கவரும் மலர்க்கொத்துக்கள் இதோ !
“எண்பது நூல்கள்
இவருக்கு
எட்டாம் படி மட்டுமே
எட்டும் படியோ
பதினெட்டாம் படி .”_ கவிஞர் புவியரசு
வித்தகக் கவியின் வியப்பு !
“அசைச்சொற்களையும்
இசைச்சொற்களாய் மாற்றிய
அழகான கவிதை தொகுப்பு”- பா.விஜய்
பூச்செண்டு :
இவர்கள் இணையர்தான் என்பதனை நான்கே வரிகளில் ‘நச்’ -என்று உரைக்கிறார் குமுதம் பத்திரிகையாளர் ப.திருமலை
” பச்சை மருதாணிக்குள் மறைந்திருக்கும் சிவப்பு
கடல் நீருக்குள் ஒளிந்திருக்கும் உப்பு
உண்மைக்குள் மறைந்திருக்கும் நேர்மை
இதுபோல் தங்கள் வெற்றிக்குள்ளும் சகோதரி”
இதய மலர்கள் :
” மண் மூடிய விதையில் இருந்த என்னை கண்மூடாமல் வளர்த்தெடுத்த என் இரண்டாம் கருவறை” -என மூத்த மாணவராம் முனைவர் குமார் கூற ,”அன்பு அறிவு அடக்கம் இந்த மூன்றும் சேர்ந்த அபூர்வம் “- என அருள் தந்தை பிரான்சிஸ் சொல்ல, “இயன்றதைச்செய்தார் ; எழுந்து நிற்கிறேன் ” என ஆய்வு மாணவர் குருசாமி உணர்வு பொங்க உரைக்க இத்தனையையும் இதய மலர்கள் என்று கூறாமல் வேறு என்னவென்று பகர்வது ?
மலர் மாரி :
.
‘ஆயிரம் பிறை கண்டு அனைவரும் அதிசயிக்கதக்க வாழுங்கள்’ -என்பது முதுமொழியாய் இருக்க ,’ ஆயிரம் நூல்கள் படைத்து அறிவுத்தடாகத்தில் பேரின்பம் பொங்க மலருங்கள் ‘ -என்ற புதுமொழியைக் கூறி மதிப்புரையை நிறைவு செய்கிறேன்.நன்றி.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
» ஹைகூ வானம். நூலாசிரியர் :வீ.தங்கராஜ். மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.
» நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
» ஹைகூ வானம். நூலாசிரியர் :வீ.தங்கராஜ். மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.
» நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum