தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

3 posters

Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:40 pm

# அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
# அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
# அகல இருந்தால் பகையும் உறவாம்.
# அகல உழுகிறதை விட ஆழ உழு.
# அகல் வட்டம் பகல் மழை.
# அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
# அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
# அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
# அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
# அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.


Last edited by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 1:48 pm; edited 1 time in total
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:41 pm

* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடியாத மாடு படியாது.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:42 pm

* அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:42 pm

# அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
# அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
# அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
# அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
# அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
# அரசு அன்று கொல்லும்,தெய்வம் நின்று கொல்லும்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:43 pm

# அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
# அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
# அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
# அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
# அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
# அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
# அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
# அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
# அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
# அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:44 pm

* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
* அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
* அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
* அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
* அவிசாரி என்று ஆனை மேல் போகலாம் திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
* அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
* அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
* அழச் சொல்லுவார் தமர்,

சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:45 pm

* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
* அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:46 pm

# அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
# அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
# அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
# அறச் செட்டு முழு நட்டம்.
# அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
# அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
# அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
# அறிய அறியக் கெடுவார் உண்டா?
# அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
# அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:47 pm

* அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
* அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
* அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
* அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:47 pm

* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அற்றது பற்றெனில் உற்றது வீடு.
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
* அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 11:23 pm

தொகுப்பிற்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 1:25 am

அருமையான தொகுப்பு... காப்பி பண்ணி சேமித்து வைக்கிறேன்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum