தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

3 posters

Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:54 pm

* சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
* சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
* சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
* சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
* சாண் ஏற முழம் சறுக்கிறது.
* சாது மிரண்டால் காடு கொள்ளாது.
* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
* சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
* சித்திரையில் செல்வ மழை.
* சிறுதுளி பெரு வெள்ளம்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:55 pm

* சுக துக்கம் சுழல் சக்கரம்.
* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
* சுட்ட சட்டி அறியுமா சுவை.
* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
* சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:55 pm

* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
* செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
* செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
* செயவன திருந்தச் செய்.
* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
* செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
* சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
* சேற்றிலே செந்தாமரை போல.
* சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:55 pm

* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
* சொல் அம்போ வில் அம்போ?
* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
* சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
* சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
* சொல்வல்லவனை வெல்லல் அரிது.
* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 11:45 pm

[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 1:31 am

தொகுப்பிற்கு நன்றி...!!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum