தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
2 posters
Page 1 of 1
தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
முன்னுரை:
நீட்டோலை வாசியானை நெடுமரம் என்றார் தமிழ்ப்பெரு மூதாட்டி ஒளவையார். இதன் வாயிலாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘வாசிப்பு’ என்ற சொல்லாட்சியின் ஆளூமையும், அதன் அவசியமும் உணர்த்தப்- பட்டுள்ளதை அறிந்திட இயலும். படித்தல், வாசித்தல் என்ற சொற்கள் ஒரே பொருளையே விளக்குகின்றன.
‘செந்தமிழும் நாப்பழக்கம்’என்பதைத் தமிழுலகம் அறியும். தமிழ் மொழியைப் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நமது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமெனில், மொழித்திறன் வளர் பயிற்சியில் முக்கியமாகப்படித்தல் திறனை மாணவர்களிடையே எளிய வழிகளைப் பின்பற்றி போதித்தலின் வாயிலாக சிறந்த நிலையை எய்த இயலும்.
வாசிப்புத்திறனின் பயன்கள்
ஒரு மனிதனைச் சந்திக்கின்ற பொழுது என்ன படிக்கிறாய் என்றோ அல்லது என்ன படித்திருக்கின்றாய் என்றோதான் கேட்கிறோம். பெரும்பாலான பகுதிகளில் திருமண நிகழ்வின் போதுகூட பெண் என்ன படித்திருக்கின்றாள், மாப்பிள்ளை என்ன படித்திருக்கின்றார் என்றோதான் கேட்கிறோம். அந்தக் கேள்வியின் பொருள் கல்வித்தகுதியை உணர்த்துகிறது. இருப்பினும், படித்தல் அல்லது வாசித்தல் என்றால் இங்கே வாய் மொழியால் நாம் பெறுகின்ற மொழியறிவைத் தெளிவாக உணர்த்துகிறது.
‘கண்டதைப்படித்தால் பண்டிதனாகலாம்’ என்ற அனுபவக் கூற்றை நாம் இங்கே சிந்திக்க வேண்டும். கண்டது என்றால் கண்ணில் படுபவையெல்லாம் என்று பொருளாகும். அவ்வாறு, கண்ணில் பட்டதையெல்லாம் படித்தால் பண்டிதராக முடியுமா? என்றால், முடியும். படித்துத் திறன் வளர, வளர அறிவு வளர்ச்சி கூடுதல் அடையும். சொல்லாட்சி, சொல்வளம் முதலியவை மனதில் நிற்கும்.
வாசிப்புத் திறனை வளர்ப்பது எப்படி?
‘தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவி வகை செய்தல் வேண்டும்’, என்றார் மகாகவி பாரதி. அத்தகைய தேன்போன்ற இனிமையுடைய தமிழ்மொழியைப்பேசிகின்றவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் நவநாகரீக உலகில் ஆங்கில மொழியின் தாக்கம் தமிழ் மொழியை அதிகம் பேசுவதில் ஆர்வம் காட்டாத தமிழர்களின் மனப்போக்கு இத்தகைய சூழ்நிலையில், தமிழை, அதன் படிப்புத்திறனை வளர்ப்பதெற்கென்று கல்வியல் சிந்தனையாளர்கள் பல்வேறு கருத்துரைகளை வழங்கி வருகின்றனர். படிப்புத்திறன் ஒரு சில இடையூறுகளைக்கொண்டுள்ளது. அது என்ன இடையூறு?
1. தமிழ் எழுத்துக்கள் குறில், நெடில் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. குறிலுக்கு ஒரு மாத்திரை என்றும், நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்றும், அளவுமுறை கையாளப்படுகிறது. வாசிப்புத்திறன், இத்தகைய ஒலிப்பு அளவீட்டு முறையைப்பின்பற்றி வளர்க்கப்பட வேண்டும்.
2. மாணவர்கள் வகுப்பறையில் பாடத்தை (உரைநடை) காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, நிறுத்தற்குறி, வினாக்குறி, ஆச்சர்யக்குறி, ஒற்றை மேற்கோள் இரட்டை மேற்கோள், முதலிய ஏற்ற இறக்கப் பொருள் மாறுபாடு ஆகியவற்றை உணர்ந்து படிப்பதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாய் இருக்க வேண்டும்.
3. படித்தல் திறன் வளர்ச்சிக்கு செய்யுள் வகுப்புகள் தமிழாசிரியர்களால் திறம்பட கையாளப்பட வேண்டும். செய்யுள் வகுப்புகளைக் கையாளுகின்ற மொழியாசிரியர்கள் முதலில் தாங்கள் செய்யுள் பிரித்துப்படித்துக்காட்டுதல் வேண்டும். முடிந்தால் இசையோடு பாடியும் காட்டலாம். அவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை படித்துக்காட்டிவிட்டு மாணவர்களைப் படிக்கச்செய்தல் வேண்டும். மாணவர்கள் அவ்வாறு பிரித்துப்படிக்கும்பொழுது உச்சரிப்பு ஏற்ற இறக்கம், பொருள் முதலியவற்றைப்பின்பற்றுகிறார்களா என்பதை மொழியாசிரியர்கள் கவனிக்க வேண்டும்.
வாசிப்புத்திறனின் நோக்கங்கள்
வாசிப்பதன் மூலம் எழுத்துக்களைக்கூட்டிப் பொருளை அறிகின்ற ஆற்றல் வளர்கிறது. மொழி கட்டமைப்பிலுள்ள ண,ன- ல,ள,ழ- ர,ற முதலிய எழுத்துக்களை சொற்களின் இடையில் வைத்து, வேறுபாடறிந்து உச்சரிக்கப்பழகுதல் முதலிய பயன்களே நோக்கங்கள் ஆகும்.
வாசிப்புத்திறனை மேம்படுத்த எளிய, புதிய யோசனைகள்
இன்றைய அறிவியல் யுகத்தில் பல்வேறு சாதனங்கள் படிப்புத்திறனை வளர்ப்பதற்கு துணை நிற்கிறது. இச்சூழலில் படிப்புத்திறனை வகுப்பறையில் மாணவர்களிடம் வளர்த்திட எளிய வழிகள் ஏராளமாய் உள்ளது.
1. இன்றைய தினம் அனைவரும் தொலைக்காட்சிகளில் செய்திகளைக் காணுகின்ற வழக்கம் உடையவராய் இருக்கின்றோம். அதுவும் நம்முடைய சிங்கப்பூரில் இத்தகைய வாய்ப்பும், பழக்கமும் அதிகமாக உள்ளன.
2. மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவரே குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினரைப் பார்வையாளராகவும் மற்றொரு குழுவினரைச் செய்தி அறிவிப்பாளராகவும் பிரித்து செய்தித்தாட்களிலுள்ள செய்தி வெட்டுகளைச் சேகரித்து வரிசைப்படுத்தி வாசிக்கச்சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வாசிக்கின்ற மாணவர் ஆர்வத்துடனும், கவனத்துடனும் வாசிப்பான். கேட்கின்ற குழுவில் உள்ளவர்கள் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். இதன்மூலம் இரண்டு குழுக்களுக்கும் மாறி மாறி வாய்ப்பு கிட்டும். இதனால், ஒவ்வொருவரும் பிழையின்றி வாசிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். படிப்புத்திறன் எளிதில் வளரும். இவ்வாறு செய்தி வாசிக்கும் மாணவர் தன்னை ஒரு செய்தி வாசிப்பாளராகவே எண்ணிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தன்னம்பிக்கையும், உச்சரிப்புத்திறனும் வாசிக்கும் ஆற்றலும் பெருகும்.
மேலும் சில விளையாட்டு முறைகள்
சாலைகளில் உள்ள விளம்பரப்பலகையை கவனிக்க அதிலுள்ள எச்சரிக்க்களைப்படிக்கும் பழக்கம், பேருந்து நிலையங்கலிளுள்ள கால அட்டவணைகளைப்படித்தல். ‘லிட்டில் இந்தியா’போன்ற மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான விளம்பரப்பலகைகள் முதலியவற்றின் மாதிரிகளை அட்டைகளில் தயார் செய்து, வகுப்பறைகளில் அத்தகைய சூழலை உருவாக்கிப்படிக்கச்செய்தல்.
1. இங்கே வாகனங்களை நிறுத்தக்கூடாது
2. ஒருவழிப்பாதை
3. சாலைப்பணி நடைபெறுகிறது, கவனமாகச்செல்லவும்
4. அனைத்துப்பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும்
போன்றவை. மேலும், ‘ஒன்று இங்கே, மற்றொன்று எங்கே’ என்ற தலைப்பில் விளம்பரங்களை ஒரு அட்டையில் எழுதி அதை இரண்டாக வெட்டி, அது போல பல விளம்பர அட்டைகளைச்சேகரித்து வெட்டி கலந்து வைக்க வேண்டும். குழுவினரை ஆளுக்கொன்று எடுக்கச்சொல்லி - ‘தலை இங்கே, வால் எங்கே’ என்று கேட்டு விளையாடலாம்.
எ.கா ‘லிட்டில் இந்தியா’ என்ற அட்டையை இரண்டாக வெட்டினால் லிட்டில் / இந்தியா என்று ஆளுக்கொரு அட்டை பிரிந்து விடும். இதனை எடுத்த மாணவர் படித்து ‘லிட்டில்’ இங்கே, இந்தியா எங்கே? என்று கேட்டால், இந்தியா இங்கே, என்று கூறி இணைய வேண்டும்.
i) சிங்க நட னத் திருவி ழா - இதனை பொருள் மாறாமல் வார்த்தைகளை இடம் விட்டு எழுதுமாறு சொல்ல, அதனை உரக்க படித்து இணைத்தல்.
ii) பூங்காவில் உள்ள புல் தரையில் நட க்கா தீர்.
மேற்கண்டவாறு நிறைய விளம்பரங்களை, எச்சரிக்க்களைச்சேகரித்து வாசிப்புத்திறனை மேம்படுத்தலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மருந்துப் பெயர்களை படிக்கத்தெரியாதவன் படிக்கும் போது, ‘சுக்குமி ளகுதி ப்பில¢’என்று படித்ததாகக் கூறுவார்கள். இது எத்தனை வேடிக்கையாக உள்ளது.
அதனால்தான் படிக்கும் பயிற்சி முக்கியமானதாக இருக்கிறது. அதனை முறையாக வளர்க்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.
தனிவேலை
வாசிப்புத் திறன் வளர்ச்சிக்கு தனிவேலை என்று வரும்போது, செய்தித்தாள், மாத இதழ், வார இதழ், போன்றவைகளில் வருகின்ற செய்திகள், நகைச்சுவைத்துணுக்குகள், சிறுகதைகள், வினாடி-வினா பகுதிகள் முதலியவற்றைச் சேகரித்து அவற்றைப்படிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து பெறுதல்.
இணைவேலை
‘இணை’ என்றால் இணைந்து செயல்படுதல்.’ஒருவருக்கு இருவர் துணை’ என்று சொல்வார்கள். இணைந்து செயல்படும்போது ஒருவருக்கு ஒருவர் புதிய புதிய யோசனைகளைப்பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் வாசிப்புத் திறனில் எற்படும் குறைபாடுகளைச் சகமாணவர் சுட்டிக்காட்டும் வாய்ப்பும் அத்தகைய தவறு தனக்கு ஏற்படாமல் இருக்கவும் பயன் தருகிறது.
குழுவேலை
மாணவர்கள் எப்போதும் நண்பர்களோடு சேர்ந்து கூட்டமாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த சூழலைப் பயன்படுத்தி வாசிப்புத் திறனை எளிதாக வளர்க்க முடியும். நூல்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்கள், திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்கள், முதலியவற்றைச்சேகரித்து அவற்றை அட்டைகளிள் எழுதி கையில் தூக்கிப்பிடித்துக்கொள்ளச் செய்து குழுக்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக அதனைப் படிக்கச்செய்தல் வேண்டும். அத்துடன், அவற்றோடு தொடர்புடைய செய்திகளையும் கூறச்செய்தல் வேண்டும்.
கிரிக்கெட் (அட்டை 1) சச்சின் (அட்டை 2)
கேள்வி இந்தியாவின் (கிரிக்கெட்) நட்சத்திர ஆட்டக்காரர் யார்?
திருக்குறள் (அட்டை 1) திருவள்ளுவர் (அட்டை 2)
உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவர் யார்?
மேற்கண்டவாறு தொடர்புடைய அட்டைகளைக் குழுவினர்களிடையே கொடுக்கவேண்டும். அவர்களே முயன்று அட்டைகளைத்தயாரிக்க ஆசிரியர் வழிகாட்டலாம். இத்தகைய முயற்சிகளால் வாசிப்புத் திறன் நன்கு வளரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பார்வை நூல்கள் விவரம்
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம்
வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000
• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002
• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை
• Sandra Siberstein, 1994 Techniques And Resources in Teaching Reading. Oxford university Press.
• Wendy A.Scott and Lisbeth H.treberg Teaching, 1990 English to Children.Longman
• H.Clark, 1986, Secondary And Middle School Teaching Methods, Fifth Edition, Macmillan Publishing Company, New York.
• கோவிந்தசாமி, நா.,(1986), வாசிப்புக் கற்பித்தல்: தமிழ்ப் பள்ளியின் வரலாறு 1946-1982.
• கோபால் மீராபாய், (1979), Diagnostic Test of Reading Comprehension Skills at Secondary School Level, RELC.
• லாவ் டெக் இங், (1975), கோடிட்ட இடத்தை நிரப்புதல் வழி மெளன வாசிப்புக் கற்பித்தல், ஆங்கிலமொழி நிலையம், சிங்கப்பூர்.
• வாங் கிம் லாவ், (1979), Measuring Readability of Reading Comprehension Materials in English, RELC.
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
நல்ல முயற்சி பாராட்டுக்கள் முனைவர் ஐயா அவர்களே.. தொடருங்கள் உங்கள் பணிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தமிழ்மொழி கற்பித்தலில் எழுத்துத் திறனின் பங்குசிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளிகளின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தமிழ்மொழி கற்பித்தலில் எழுத்துத் திறனின் பங்குசிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளிகளின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|