தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

2 posters

Go down

கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்  Empty கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Apr 13, 2011 11:25 am

கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்


எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
முன்னுரை

முதன் முதலில் மானுட இனம் தோன்றிய போதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வளர்ந்த போதும், ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வழியேதும் கிடையாது. பிறகு, நாளடைவில் அவனின் அறிவுத் தூண்டுதலினால் செய்கை மூலம் கருத்தைப் பரிமாறிக் கொண்டான். பிறகு ஒலிக்குறிப்பு, வரிவடிவக் குறியீடு என வளர்ச்சிப் பெற்றுள்ளான். அறிவு வளர்ச்சிக்கும் கருத்துப் பகிர்விற்கும் மொழி இன்றைய தினம் இன்றியமையாததாகி விட்டது.

உலகில் பல மொழிகள் பேசப்படுகிறது. அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழி சிறப்பிற்குரியது. தாய்மொழி மூலம் கற்றுத் தேர்வதே சிறந்தது. அத்தகைய நோக்கில் ‘‘அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை’’ தாய்மொழியாய்க் கொண்டவர்கள் அம்மொழியைச் சிறந்த முறையில் பேசிட, எத்தகைய நன்முறைகளைப் பின்பற்றுதல் நலம் பயக்குமென இக்கட்டரை வாயிலாகக் காண்போம்.

பேச்சு தான் அனைவருக்கும் மூச்சு
உலகிலுள்ள மொழிகளனைத்திலும் பேச்சு மொழி உண்டு. ஒலியைக் குறிப்பிட்ட ஒழுங்கில் உச்சரிப்பதே பேச்சு. மனிதன் எல்லா தேவைகளையும் ஒருவரை ஒருவர் சார்ந்தே பூர்த்திச் செய்து கொள்கிறான். அதற்குப் பேச்சு தான் துணைப்புரிகிறது. பேச்சு மனிதனுக்கு ‘மூச்சு’ப் போன்றது என்று சொல்வது மிகையல்ல. அத்தகைய பேச்சில் தேர்ச்சிப் பெருவது - மாணவப் பருவத்தில் மிகவும் நலம் பயக்கும். பள்ளிச் சூழலில் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த மொழி ஆற்றலையும் ஆளுமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்த்தக் கொள்ள முடியும். மாணவர்கள் பேச்சத் திறனுடையவர்கள் ஆகுதற்கு அதிலும் குறிப்பாகச் சிங்கப்பூர் போன்ற பல இனமக்கள் வாழும் சூழலில் ஆசிரியர்கள் மிகுந்த திறனையும் ஆர்வமும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.


தேமதுர தமிழோசையில் தேர்ச்சி வேண்டும்
மகாகவி பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று கூறியதன் வாயிலாகத் தமிழை இனிய மொழி என்று கூறினார். அவர் மேலும்,
‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவிம் வகை செய்தல் வேண்டும்’ என்றார். அத்தகைய தமிழ் மொழியைத் அதன் சுவை, ஓசை குறையாமல் போற்றி வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆங்கில மோகம் தலை விரித்தாடும் இக்காலக் கட்டத்தில் மொழியாசிரியர்கள், புத்தம் புதிய உத்திகளாலும் தளராத உழைப்பினாலும் மட்டுமே மாணவர்களை ஆர்வமுடன் தமிழைப் பேச வைக்க இயலும். இல்லையென்றால் பேசுகின்ற ஆர்வம் குறைந்து போய் விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திறன்வளர் பயிற்சிகள்

மொழி ஆற்றல்


பெறுதல் அளித்தல் (வெளிப்பாடு)


கேள்வியறிவு படிப்பறிவு பேச்சு எழுத்து

மேலே குறிப்பிட்டுக் காட்டிய வழிமுறைகளில் - திறன்களின் கூறுபாடுகள் விரிவடைகிறது. இத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்ள ஆர்வமும் புத்தம் புதிய சிந்தனையும் இருக்க வேண்டியதொரு நல்ல சூழலும் திறமையான வழிகாட்டலும் மாணவனுக்கு அமைதல் வேண்டும்.

பேச்சுப் பயிற்சிக்குரிய செயல்பாடுகள்

‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற நான்றோர் வாக்கை நாம் மறத்தல் கூடாது. பாத்திரத்தில் இருந்தால் தான் பரிமாற முடியும் - அதாவது ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’. நிறைய சொற்களை அறிந்திருந்தால் தான் அவற்றைப் பயன்படுத்திப் பேச முடியும். இத்தகைய சொற்களை நிறையப் பெறுவதற்குப் பள்ளிச் சூழலில் பல்வேறு பயிற்சிகளை ஆசிரியர்கள் அறிமுகம் செய்தல் வேண்டும்.
நமது பகுதியில் நடைபெறுகின்ற விழாக்கள் குறித்து மாணவர்களை உரையாடும் படி ஆயத்தம் செய்தால் அவர்கள் மிகவும் ஆர்வமும் அத்தகைய உரையாடலில் பங்கேற்றுப் பேசத் தொடங்குவார்கள்.

உரையாடல்: திருவிழாவில் கண்ட நிகழ்ச்சிகள்

I. விளையாட்டுச் சாதனங்களின் பெயர்கள்
II. நடனங்கள் - பெயர்கள், (சிங்க நடனம்) முதலியன
III. சிங்கனடனத்தின் சிறப்பு / வரலாறு

இத்தகைய கோணங்களில் மாணவர்கள் உரையாடலைத் தொடங்கும் போது, ஒருவக்கொருவர் ஆர்வமுடன் சளிப்பின்றித் தங்கள் கருத்தகளைசட கூறுவர் - இதன் மூலம், மாணவர்களின் மனதின் உற்சாகம், கற்கும் ஆர்வம் நிரம்பி வழியும் என்பதில் ஐயமே கிடையாது.

விலங்குகள் பறவைகள்

மாணவர்களின் பேச்சுப் பயிற்சியைத் துரிதமாகவும் என்றும் நினைவில் நிற்கும் படியும் வளர்ப்பதற்கு அவர்கள் கண்டு ரசித்த பறவைகள், விலங்குகள் முதலியவற்றைப் பற்றி உரையாடச் செய்வது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
எ.டு: பருந்து - புறா - மயில் - காகம்
சிங்கம் - மாடு - புலி - யானை

இவை போன்ற மற்ற பறவைகளின் பட்டியல்களை மாணவர்கள் தயாரிக்க வேண்டும். பிறகு, அதனைப் பற்றி கருத்தப் பரிமாற்றம் செய்தல் வேண்டும். இதன்படி ‘பருந்து மேலே பறந்து சென்றது’ என்ற சொற்றொடரில் ‘ரு’, ‘ற’ வேறுபாட்டை மாணவர்கள் எளிதில் உணர முடியும்.

‘சிங்கையில் சிறந்தது சிங்க நடனம்’

இத்தொடரில், சிங்கை - சிங்கம் என்ற சொற்றொடரின் தன்மையை உணர்ந்த மாணவர்கள் எதுகை மோனை முதலிய இலக்கணச் சிறப்பையும் அறிந்து கொள்கிறார்கள்.
(முதலெழுத்து ஒன்றாய் அமைவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை)
‘ஜல்லிக் கட்டுக்காளைத் துள்ளிக்கிட்டு ஒடுது’
இச்சொற்றொடரை உச்சரிக்கும் போது, ‘ல’, ‘ள’ என்ற வேறுபாட்டுடன் உச்சரிக்க கற்றுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு ர,ற, ர,ள,ழ, ண,ந,ன முதலிய எழுத்துக்களை அதன் தன்மையறிந்து ஒலிக்கும் முறையை அறிந்து நுட்பமாக ஒலிக்க வேண்டும் என்பதை அறிகிறார்கள். இல்லையென்றால், பேச்சில் பிழை ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதை அவர்கள் அறிய முடிகிறது. அதற்கு ஆசிரியர்கள்,
பÄம் பவÇம் பÆம்
ப½ம் ¿லம் மÉம்
முதலிய சொற்களை முறையான ஒலிக் குறிப்புகளோடு உச்சரிக்கும் பயிற்சியினை வழங்க வேண்டும்.
பேச்சுப் பயிற்சிக்கு மேலும் சில வழிமுறைகள்
1. ஊரின் பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் குறித்து விவாதம்; உரையாடல் நடத்துதல்
2. மாணவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளைப் (அவரவர்களுக்குப் பிடித்த) பற்றிக் கலந்துரையாடல் செய்யச் சொல்லலாம். விளையாட்டு வீரர்களின் பெயர்களைச் சொல்லுவதன் மூலமும் கடினமான சொற்கள் எளிதாய் உரையாடலில் கலந்து விடவதால் மாணவர்களுக்கு நல்ல பலனுண்டு.
3. தொலைக்காட்சிகளில் கண்டு சுவைத்து, மகிழ்ந்த நிகழ்ச்சிகளை உரையாடச் செய்யலாம். இது பற்றி மாணவர்கள் உரையாடும் போது, ஆசிரியர் துணை நின்று - ஒருவர் கூறும் கருத்தை மற்றவர் ஒட்டியும் வெட்டியும் பேசுமாறு வழிகாட்டுதல் மிகவும் நலமாகும். இதன் மூலம் உடனுக்குடன் சிந்திக்கும் ஆற்றலையும் மாணவர்கள் பெறுகிறார்கள்.
பள்ளி, கோயில், கடல், மலை, நதி முதலிய மாணவர்கள் அறிந்த தலைப்புகளில் - தலைப்புகள் தந்து சொற்பொழிவு ஆற்றச் செய்யலாம்.
எ.டு: பள்ளியின் பயன்கள், ஆலயமும் ஆண்டவனும், கடலும் கப்பல் பயணமும், மலையும் மண்ணும், நதிகளும் நாட்டு வளமும்
இதனால் புதுப்புதுச் செய்திகளையும் சொற்கட்டு முறையும் மாணவர்களை எளிதில் சென்றடைகிறது.
4. விளையாட்டு மையத்தில் ‘கிரிக்கெட்’ நடைபெறுகிறது; அல்லது காற்பந்து நடைபெறுகிறது; அல்லது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வர்ணனை செய்யச் சொல்லலாம். இதனால் கண்ணால் காணும் நிகழ்ச்சியை உடனே மனதில் நிறுத்தி, அதை பிறருக்கு விளங்குபடி எடுத்துரைக்கும் ஆற்றலை மாணவன் பெறுகிறான். இத்தகைய நிகழ்வின் மூலம்,
பெறுதல் - தருதல்
படித்தல் - படைத்தல்
ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே சமயத்தில் மாணவரிடம் நடைபெறுகிறது. இதனால் மாணக்கரின் ஆற்றல் பெருகுகிறது.
5. பள்ளியில் நடைபெறும் இறைவழிபாட்டுக் கூட்டம், வகுப்பறைக் கூட்டம், இலக்கியக் கூட்டம் ஆகியவை பற்றி உரையாடச் செய்யலாம்.
6. பறவை, விலங்கு, மனிதர்கள், வாகனங்கள் போன்றவை எழுப்புகின்ற ஓசையைப் போல் ஓசை எழுப்பச் செய்தல் பலகுரல் (மிமிக்கிரி) நடிப்பு முதலியனவையும் நற்பலன் தரும்.
தொடக்கநிலை மாணவர்கள் பேச்சுத் திறனில் சிறந்து விளங்கிட கூடுதலாகச் சில யோசனைகள்.
1. பயிற்சி என்பது தொடர்ந்து எல்லாச் சூழலிலும் இருத்தல் வேண்டும். புதுமுறை பயிற்சிகள் முக்கியம்.
2. மாணவர்கள் பயன்படுத்துகின்ற அல்லது அவர்களுக்குப் பிடித்தமான சொற்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும்
எளிய இனிய பாடல்களைக் குழுக்களாகச் சேர்ந்து பாடுதல்.
நன்றாக அறிந்து தகவல்களைப் பற்றி சரி - தவறு என்று பதில் வருமாறு விடையளிக்கும் பயிற்சியளித்தல்.

வேறுமுறை: விளையாட்டுக் கட்டம்
கட்டங்கள் அமைத்து அக்கட்டங்களுக்குள் சொற்களை நிரப்பி சில குறிப்புகளைத் தந்து அக்குறிப்புகளைக் கொண்டு கட்டத்தில் உள்ள சொற்களைக் கண்டுபிடிக்கச் செய்தல்.
மாதிரி எ.டு
ம னி த ன் வ தீ ப ம்
சி ங் க ம் ண் நீ ர் தே
ப தி க் ம் டி ம தி நீ
உ ல க ம் பு து மை ர்
த ங் கம் சி ங் க பூ ர்
குறிப்பு: 1. காட்டில் ராஜா சிங்கம்
2. உலகின் சந்தை சிங்கப்பூர்
இதன் வாயிலாக, பேச்சுத் திறன் மட்டுமல்ல சிந்திக்கும் திறனும் உருவாகும் அல்லவா?

வரைதலும் அறிதலும்
மாணக்கர்களை அவர்கள் விரும்பும் படத்தை வரையச் செய்து அதற்கு எதிரே அதன் பெயரை, எழுத்துக்களை மாற்றி எழுதி முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சொல்லச் சொல்லி உற்சாகப் படுத்தலாம்.
மாதிரி எ.டு Å ளை த
1. குழந்தைகளுக்குப் பிடிக்கும் ‘பு’ இனிப்‘பு’.
2. வானில் வரும் ‘லா’ நி‘லா’.
3. வீட்டில் வளர்க்கும் ‘னை’ பூ‘னை’
இப்படிப்பட்ட விளையாட்டு முறைகளாலும் பேச்சுத்திறன் மிளிரும்.
சொல்லகராதியின் பயன்
அகராதி என்பது சொற்களஞ்சியம், சொற்பட்டியல் என்பதாகும். நிறைய சொற்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம், உரையாடலின் போது தங்கு தடையின்றி புதிய புதிய சொற்களை கையாண்டு இனிமையாகப் பேச முடியும், திரும்பத் திரும்ப ஒரே சொல்லைப் பயன் படுத்தும் நிலை ஏற்படாமல் இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் இத்தனை சொற்களை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.
முடிவுரை
தமிழ்மொழி கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு வழிமுறைகளைக் கண்டோம். இத்தகைய வழிகளையும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற நல்ல அனுபவங்களையும் பயன்படுத்தி தாய்மொழியாம் தமிழ்மொழியை மாணவர்கள் செம்மையுடன் பேசி வழி செய்வோம்.


பார்வை நூல்கள் விவரம்
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன்
தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000

• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா பப்ளிஷ்ர், சென்னை, 2002

• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை.
• Skinner, B.F., (1967), “A Functional Analysis Of Verbal Behaviour”.
• Bright Ideas – Teacher Handbooks – Developing Children’s Writing , Scholastic Publications.


Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்  Empty Re: கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 13, 2011 1:12 pm

நல்ல முயற்சி பாராட்டுக்கள் முனைவர் ஐயா அவர்களே.. தொடருங்கள் உங்கள் பணிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளிகளின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தமிழ்மொழி கற்பித்தலில் எழுத்துத் திறனின் பங்குசிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum