தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

3 posters

Go down

தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Mon Jun 20, 2011 6:21 pm

தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
drthyagarajan2010@gmail.com



முன்னுரை:
‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’என்றார் வான்புகழ் வள்ளுவனார். அத்தகைய செவிச்செல்வம் மனித இனத்தின் அறிவு வளர்ச்சி மேலோங்கி நிற்பதற்கு முன்னனியாய் நிற்கிறது. கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அறிது என்றார் ஒவையார். செவிடு, என்னும் தன்மையை அவர் ஊனமாகவே குறிப்பிடுகிறார். அத்தகைய செவிச்செல்வத்தின் வாயிலாக தமிழ் மொழியை வகுப்பறைகளில் செம்மையாகக் கற்பிக்கும் வழியினை இக்கட்டுரையின் வாயிலாக விளக்குவோம்


கேட்டல்திறன் என்பது யாது?
கேட்டல் திறன் என்பது ஒருவர் கூறுகின்ற கருத்தை மற்றொருவர் செவியின் வாயிலாக உணர்ந்து கொள்ளுதலாகும். இத்தகைய கேட்டல் திறனின் வாயிலாகவே ஒருவருக்கொருவர் அறிவு நுகர்ச்சியைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. ஒரு மாணவன் ஏனைய திறன்களைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், அவனிடம் பெரிய குறை ஒன்றும் வந்து விடாது. ஆயினும்
கேட்டல் திறனை ஒருவன் பெற்றிருப்பானேயானால் அது அவனை உயர்த்திக்காட்டும். இதனை,

‘ கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந்துணை’

என்ற குறளின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம்



கேட்டல் திறனை வளர்ப்பது எப்படி?
மொழியைப் பயிற்றுவித்தலில் மொழியாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும், பொதுவானதொரு வழிமுறையைப் பின்பற்றுதலால் மிகப்பெரிய நன்மை ஏற்படும்.

கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளில் பல்வேறு திறன்களை மொழியாசிரியர்கள் வரையறை செய்திருந்தாலும், குறிப்பாக, எழுத்துத்திறன், வாசிப்புத்திறன், பேச்சுத்திறன், கேட்டல் திறன் ஆகிய திறன்களை வளர்ப்பதன் வாயிலாகவே
மொழியாசிரியர்கள் மாணவர்களுக்கு செம்மையாக மொழி கற்பித்தலை போதித்து வருகிறார்கள். குறிப்பாக, நமது சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழை இரண்டாம் நிலையாகப்பேசிகின்ற நாடுகளில் மேற்காணும் திறன்களை மாணவர்களிடையே வளர்த்தலுக்கு மொழியாசிரியர்கள் தேர்ந்த சிந்தனையும் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத் தாக்கங்களினால் பயன்பாட்டில் நிற்கின்ற வழக்குச்சொற்களை மிகுதியாகக் கையாளும் நிலை இருக்கின்றது.

அறிவியல் யுகத்தில் இத்தகைய திறன்களை வளர்ப்பதில் மொழியாசிரியர்கள் புதுப்புது உத்திகளை பின்பற்றுதல் தவிர்க்க முடியாது. அதனால்,
கேட்டல் திறன் வளர்த்தலில் மொழியாசிரியர் முற்படும்போது உச்சரிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தல் வேண்டும். ஆசிரியர் பேசுகின்ற பேச்சை ஒலி வேறுபாட்டிற்கு ஏற்றவாறு உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு சொற்களை பயன்படுத்துகின்ற முறையினை மாணவர்கள் கவனமாகக் கேட்கவேண்டும்.
அறிஞர்கள், சமயவாதிகள், சிறந்த அரசியல் தலைவர்கள் முதலியவர்களின் பேச்சுக்கள் அடங்கிய (ஆடியோ கேசட்டுகளை) ஒலி நாடாக்களைத் திரும்பத்திரும்ப கேட்கச் செய்தல்வேண்டும்.

கேட்டல் திறனை வளர்ப்பதில் புதிய உத்திகள்
கேட்டல் திறனில் முழுமையாக அமைந்திருக்க வேண்டிய நோக்கம் மொழி வளர்ச்சியே. மாணவர்களுக்கு எளிதாக மனதில் நுழையக்கூடிய சொற்கள், மாணவர்களை கவரக்கூடிய செய்திகள் ஆகியவற்றைக்கூறினால் மட்டுமே அவர்களால் எளிதாய் உணர்ந்து கொள்ள முடிகிறது.

இன்றைய அறிவியல் யுகத்தில் இத்தகைய திறன்களை வளர்ப்பதற்கு ஊடகங்கள் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி இவற்றின் வாயிலாக கேட்டல் திறனைப் பெருக்கிக் கொள்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் இக்காலகட்டத்தில் பெருகியுள்ளது.

வானொலியில் ஒலிபரப்பப்படுகின்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், நாடகங்கள், கவியரங்கம் மற்றும் உரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றை மாணவர்களைக் கேட்கச்செய்தல்.

பள்ளிகளில் நடைபெறுகின்ற பல்வேறு விழாக்களில், குறிப்பாக, இலக்கிய நிகழ்ச்சிகளில் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு ஆற்றுகின்ற உரைகளைக் கவனமாகக் கேட்டு, பிறகு, அதுபற்றிய விவாதங்களில் மாணவர்களை ஈடுபடச் செய்தல் மூலமாக கேட்டல் திறனை வளர்ப்பதோடு அவர்களின் நினைவாற்றல் திறனையும் வளர்க்க முடியும்.

ல,ள,ழ- ண,ன- ர,ற போன்ற எழுத்துக்கள் தமிழ் மொழியில் ஒரேவிதமான ஒலிக்குறிப்புகளை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருப்பதால் அவற்றின் ஒலி வேறுபாடுகளை நுட்பமாகக் கையாளுதல் வேண்டும். மேற்கண்ட எழுத்துக்களுக்கு தனித்தனியாக நுட்பமான ஒலிப்பு வேறுபாடுகள் இருப்பதை மொழியாசிரியர்கள் வேறுபட்ட சொற்களைப் பயன்படுத்தி அவற்றிற்கான பொருள் வேறுபாடுகளை சுவையான எடுத்துக்காட்டுகளின் மூலம் உணர்த்தி திரும்பத்திரும்ப அப்பணியைச்செய்து வருதலால் கேட்டல் திறன் வளரும்.

உச்சரிப்பு வேறுபாடுகளை விளக்குதல்
இதற்கு மாணவர்களைச் சிறு சிறு குழுக்களாகப்பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு எழுத்தின் பெயரையே சூட்டி, உதாரணமாக, ‘ல’ குழு, ‘ள’குழு, ‘ழ’ குழு என்று ஒவ்வொரு குழுவையும் அக்குழுவின் எழுத்துக்களுக்குரிய சொற்களைச்சேகரித்து அட்டையில் பட்டியல் இட்டுக்கொள்ளச்செய்து அவற்றைக்கையில் வைத்துக்கொண்டு எதிரெதிரே நிற்கச் செய்தல் வேண்டும். ‘ல’ குழுவைச் சார்ந்தவர்களின் கையிலுள்ள அட்டையில்,

1.பலம் 3.நிலம் 5.பலா 7.வாலி
2.பல்லி 4.பல் 6.உலா 8.கல்
போன்ற சொற்கள் இருக்க வேண்டும்.
‘ள’, குழுவைச் சார்ந்தவர்களின் கையிலுள்ள அட்டையில்,

1.வளம் 3.பள்ளி 5.கொள்ளை 7.அள்ளு
2.களம் 4.பள்ளம் 6.கொள்கை 8.தள்ளு

போன்ற சொற்கள் இருக்க வேண்டும், இவ்வாறே மேற்குறிப்பிட்ட எழுத்துக்கள் அனைத்திற்கும் குழுக்கள் அமைத்து ஆசிரியர் முன்னின்று வழிகாட்டி ஒவ்வொரு குழுவையும் அவர்களுக்குரிய சொற்களைச் சொல்லச் சொல்லுதல். அல்லது எதிர் குழுவில் உள்ளவர்களின்அட்டைகளில் உள்ள சொற்களைச் சொல்லச் சொல்லுதல். இதன்மூலம் உச்சரிப்புத்திறன் தெளிவாக விளங்கி உச்சரிப்புப் பிழையில்லாமல் அதாவது எழுத்துப் பிழையில்லாமல் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.


திரைப்படங்களின் வாயிலாகக் கேட்டல்திறன்
படிக்கின்ற மாணவர்கள் சினிமா, தொலைக்காட்சி முதலியவற்றைப் பார்ப்பதினால் கெட்டு விடுகிறார்கள் அல்லது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திசை திருப்பப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பெற்றோர்கள் மத்தியிலே பரவலாக எழுவது என்பது ஒருபுரம் இருக்க இன்றைய அறிவியல் வளர்ச்சியால் தவிர்க்க முடியாத அத்தகைய சாதனங்களின் மிகுதிப்பாட்டைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பித்தலில் கேட்கும் திறனை வளர்க்ககொள்ள முடியும் என்பதை ஆராய்வதே நன்மை தருவதாகும்.

பொதுவாக, தொலைக்காட்சி திரைப்படங்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, தொடக்க நிலை மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை வாழ்வில் ஓர் அங்கமாக, அன்றாடப் பணிகளில் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் அவற்றைத்தவிர்ப்பதற்காக முயல்வைத விட்டு சாதகப்படுத்திக்கொள்வதுதானே அறிவுடைமையாகும். அவ்வாறெனில், இன்றையதினம் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் காணப்படுகின்ற பயனுள்ள செய்திகளை, உரையாடல்களை, வசனங்களை, கேட்டு, அவற்றை மாணவர்கள் குழுக்களோடு விவாதித்தல் கேட்டல் திறனில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதை சிந்தித்து அத்தகைய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
கேட்டல்திறனுக்கு மேலும் சில யோசனைகள்
இத்தகைய முறைகள் தமிழக அரசு பாடத்திட்டத்தில் பின்பற்றப்படுகிறது. மாணவ மாணவிகளை ஆறு பேர் குழுவாக அமைத்துக்கொண்டு பேசுபவரையும் கேட்பவரையும் இடையில் தடுப்புத்திரை ஏற்படுத்தி பேசுபவரின் குரலை மட்டும் கேட்பவருக்குக்கேட்கச்செய்தல் வேண்டும். இதன்மூலம் குரல் வேறுபாட்டை அறிந்து கொள்ளும் பயிற்சி, ஆண்,பெண், குரல் வேறுபாடு அறியும் பயிற்சி, பேச்சின் கருத்து முதலியவற்றை வினாக்களின் மூலம் கேட்டு கேட்டல் திறனின் ஆற்றலை வளர்க்க முடியும்

வழக்குச்சொற்களை அறிதல்
நாம் அன்றாடம் வீடுகளில், கல்வி நிலையங்களில் புது இடங்களில் பேசப்படுகின்ற பேச்சுக்களை எல்லாம் பதிவு செய்து மாணவரை வகுப்பரைகளில் கேட்கச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்து, வழக்குச்சொற்களில் திருந்தாதச்சொற்கள், வெற்றொலிகள் {ஆங்,ஊங், வந்து} முதலியவற்றை தனியாகக் கூறும்படி செய்தல் வேண்டும்

மயங்கி ஒலிக்கும் சொற்களை அறியச்செய்தல்
வாழை, வாலை – இழை,இலை முதலிய சொற்களை பட்டியலிட்டு அவற்றை ஒலிக்கும் முறையினையும் ஒலி வேறுபாடுகளால் பொருள் மாறுபாடு அடைவதை உணர்த்த வேண்டும்.

அறிவிப்புகள் வாயிலாக கேட்டல்திறன்
விமான நிலையம், பேருந்து நிலையம், திருமண மண்டபம் முதலிய இடங்களில் செய்யப்படுகின்ற அறிவிப்புகளை ஒலிப்பதிவு செய்து அவற்றை மாணவர்களைக்கேட்கச் செய்து அவற்றில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளின் உட்பொருளைக்கூறச் செய்தும் மேற்கண்ட வழிமுறைகளை எல்லாம் பின்பற்றுதலின் வாயிலாக மாணவர்களின் கேட்டல் திறனை மிகுதிப்படுத்தி மொழிப்பாடங்களில் ஆர்வமடையச் செய்து சிறந்த வகையான மாணவர்களை உறுவாக்க முடியும்.

இசையின் வாயிலாக கேட்டல் பயிற்சி அளித்தல்
இயல், இசை, நாடகம் என்று தமிழை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதில் நடுநாயகமாக விளங்கும் இசை மனிதனின் வாழ்வு நிலைகளில் ஒன்றிப்போய் இருப்பது மனித வாழ்விற்கு இசையின் பங்கின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எனவே இசையின் வாயிலாக கேட்டல் திறனை எளிதில் வளர்த்திட முடியும். இசைப்பாடல்கள், தாலாட்டு, மெல்லிசை, நாட்டுப்புறப்பாடல்கள்முதலிய பாடல்களை ஆசிரியர்கள் பாடிக்காட்டி அல்லது ஒலிநாடாக்களில் பதிவு செய்து மாணவர்களைக் கேட்கச் செய்து அதன் வாயிலாக மாணவர்களின் கேட்டல் திறனை உயர்த்திக்காட்ட இயலும்.

முடிவுரை
மொழியே மனிதனுக்கு விழி, மொழி இல்லையேல் மனிதனின் இன்றைய நாகரீக வளர்ச்சி இத்தனை சிறப்பாக அமைந்திருக்க முடியாது. மொழியின் முதுகில் ஏறிக்கொண்டுதான் மனிதன் அசுர வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றான். மொழியறிவின் மூலம் அவனது கலாச்சாரமும் பண்பாடும் கால வெள்ளத்தில் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. உலகில் எத்தனையோ மொழியிருந்தாலும் சீரிளமை திறத்தோடு விளங்குவது தமிழ் மொழியாகும். எத்திசையும் புகழ்மணக்க ஏற்றமிக தமிழனங்காய் விளங்குபவள் தமிழ்த்தாய். அத்தகைய தமிழ் மொழியை உலகில் எத்தனையோ வாழுகின்ற மக்கள் பேசி வருகின்றனர். அதற்குக் காரணம் கேட்டாரைப் பிணிக்கும் வண்ணம் தமிழில் அமைந்திருக்கும் சொல் வளமும், கருத்து நலமுமே ஆகும். பாரதியின் ஆணைப்படி எட்டுத்திக்கும் உள்ள கலைச்செல்வங்கள் யாவும் தமிழில் பொதிந்து இருப்பதால் அம்மொழி அறிவு என்பது வாழ்வைச்செம்மைப் படுத்தும். உலகைத்தமிழால் ஒன்று சேர்ப்போம். இதை ஒவ்வொரு செவியிலும் கொண்டு சேர்ப்போம்.

‘உலக மொழிகளுக்குப்போட்டி வைப்போம்
அதில் ஒண்டமிழ் மொழியை செயிக்க வைப்போம்’

என்றார் தமிழ்க் கவிஞர் பூவை சாரதி. அத்தகைய தமிழ்மொழியில் கேட்டல் திறனை மாணவர்களிடத்தில் பெருகச்செய்து தமிழுக்கு வளமும் நலமும் சேர்ப்போம்.

கேட்டல் திறனில் மேலும் சில வழிமுறைகளை
விளையாட்டு முறையில் சொல் மாளிகை அமைத்து விளக்கும் முறைகள் அவையாவன. கேட்டல் திறனில் வருணனை விவரிப்புகள், சொல் விளையாட்டுப்புதிர்கள், - சொல்மாளிகை அமைத்தல் முறைகள்;


1. தலையில் சூடலாம் பூ
2. மேகம் தரும் ம ழை
3. பட்டை தீட்டிய ஆபரணம் வை ர ம்
4. தாகம் தீர்ப்பது த ண் ண £ர்
5. மேடையில் நடிப்பது நா ட க ம்
6. தண்டு உள்ள மரம் வா ழை ம ர ம்
7. அழகிய தீவு சி ங் க ப் பூ ர்

மேற்கண்டவாறு கட்டங்களையும் எதிரே புதிர்ச் சொற்களையும் அமைத்து அவற்றைப் படித்துப் பதில் சொல்லுமாறு சொல்வதன்மூலம், குழுக்களிடையே கேட்டல் திறன் வளர்கிறது.

வெள்ளை அலைகள் விளையாடும்
விரிந்து எங்கும் பறந்திருக்கும்
அள்ள அள்ளக் குறையாது
அளந்து பார்க்க முடியாது
என்ன தெரியுமா? உனக்குச்சொல்லத்தெரியுமா?

மேற்கண்ட சொற்களை ஓசை நயத்தோடு ஒரு குழுவினர் சொல்ல எதிர்க் குழுவினர் விடை சொல்ல வேண்டும்.(பதில் - கடல்)
இவ்வாறு தொடர்ச்சியாகப்பாடல் அமைக்கலாம்.

திறன்வளர் பயிற்சிகளில் எல்லா நிலைகளிலும் கேட்டல் திறன் பயிற்சிக்குச் சில குறிப்புகள்
1. தமிழறிஞர்கள் (சிறந்தவர்கள்) ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிநாடா, குறுந்தகடு (CD) முதலியவைகளின் வழியாக மாணவர்களை உற்றுக் கவனித்துக் கேட்கச் செய்தல்.
2. எளிய, கனிய தமிழ் இலக்கிய, திரையிசைப் பாடல்களை ஆசிரியர் திரும்த் திரும்பக் கூறி மாணவர்களைக் கேட்கச் செய்து மாணவர்களின் கேட்கும் திறனை ஆய்வுச் செய்தல் வேண்டும்.
3. ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்ற திருவள்ளுவரின் கூற்றுப் படி, கேள்வியறிவினை வளர்க்க வேண்டும்.
4. தவறாமல், வானொலி, தொலைக்காட்சிகளில் வரும் நல்ல செய்திகளைக் கேட்கச் செய்து அவற்றை வகுப்பறையில் உரையாடும் சூழல் அமைத்துக் கொடுக்க வேண்டும். இத்தகைய திறனுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வேண்டும்.
5. வெளியிடங்கள் நடைபெறுகின்ற இலக்கியக் கூட்டங்களைக் கேட்டு வந்து அவற்றைப் பற்றிய சிந்தனைகளை வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்ளச் செய்தல் வேண்டும்.
இதனால் மாணவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதே, இதை நாளை வகுப்பறையில் சொல்ல வேண்டுமே என்ற நோக்கில் கூர்ந்து கவனித்துக் குறிப்புகள் எடுத்து வருவார்கள். இதன் மூலம், மாணவனுக்கு நினைவாற்றல், குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கம், கூர்ந்து கேட்கும் திறன் ஆகியவை வளர்கிறது.
6. ல, ள, ழ, ண, ந, ன, ர,ற வேறுபாடுகள் அமைந்த சொற்களைப் பட்டியல் தயார் செய்து அவற்றை வகுப்பறையில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்.
எ.டு மழை, மலை, மலையாளம்
தோரணம், நடனம், நன்மை
மரம், உரம், வீரம், ஈரம்
பறவை, உறவு, திறவு
7. மேற்கண்டவாறு உள்ள எழுத்துகளின் உச்சரிப்பு வேறுபாடுகளை விளையாட்டு முறையில், சொல் அட்டைகளைப் பயன் படுத்தியும் கட்டங்களையும் பயன்படுத்துதல்.
8. திசையிசைப் பாடல்களில் மாணவர்களுக்குப் பிடித்த பாடலாசிரியர்களின் பாடல்களைக் கேட்கச் செய்து அதில்வரும் கருத்துகளை ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் விவாதிக்கலாம்.
9. நாட்டுப்புறப் பாடல்களில் வரும் மையக் கருத்துக்களை விளக்கிக் கூறச் செய்யலாம்.
10. கேள்வி ஞானம் மாணவர்களுக்கு நிலைபெறச் செய்ய வேண்டும்.
‘செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்’
என்ற குறள் கருத்து இங்கே எண்ணிப் பார்க்கத்தக்கது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


பார்வை நூல்கள் விவரம்
• தாமஸ் கெங் சூன், (1975), சிங்கப்பூர் பள்ளிகளில் கேட்டல்
கருத்தறிதல் ஓர் ஆய்வு, RELC, சிங்கப்பூர்.
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம்
வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000

• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002

• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 9:07 pm

பகிர்வுக்கு நன்றி முனைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by manjubashini Tue Sep 20, 2011 12:26 am

அருமையான பகிர்வு ஐயா..

உண்மையே..

உச்சரிப்பில் ழ ள ல சரியாக உச்சரிக்கும் குழந்தைகளை நான் இன்னும் பார்க்கலை...

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தமிழ்மொழி கற்பித்தலில் எழுத்துத் திறனின் பங்குசிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளிகளின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum