தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ்மொழி கற்பித்தலில் எழுத்துத் திறனின் பங்குசிங்கை டாக்டர் மா.தியாகராசன்
2 posters
Page 1 of 1

எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
drthyagarajan2010@gmail.com
முன்னுரை
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளாடு முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்க்குடி என்பது புறப்பொருள்வெண்பாமாலை. அத்தகைய பழமை சிறப்புமிக்க நம் தாய்மொழியாம் தமிழ்மொழி காலத்தில் அழியாத சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிடக் காரணம், அதன் இலக்கியத்திறமும் இலக்கண வளமுமே ஆகும்.
'தமிழுக்கும் அமுதென்று பேர்‘ என்றான் புரட்சி கவிஞன் பாரதிதாசன், அத்தகைய அமுதத்தமிழைச் செம்மையாக உணர உணர்த்த வகுப்பறைச் சூழலில், எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவது, எழுதுதல் பேசுதல் ஆகிய நிலைகளில் ஒரு மாணவனுக்குக் குறிப்பாக எழுத்துத் திறனைக் கற்பிக்க எம்முறையைக் கடைப்பிடிப்பது முதலிய வழிமுறைகளை இக்கட்டுரை விளக்குகிறது.
வரிவடிவம் :
வரிவடிவம் என்பது மொழியின் குறீயீடு ஆகும். கருத்துப் பரிமாற்றத்தைத் தூரத்திலிருப்பவருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் உணர்த்துவதற்கு இத்தகைய வரிவடிவம் பயன்படுகிறது.
உயர்தனிச் செம்மொழி:
தேர்ந்த வாழ்வுமுறையை இலக்கிய வளம் குன்றாது காலத்தின் நெகிழும் தன்மைக்கு ஏற்றவாறு ஈடு கொடுத்துத் தன்னை நிலைநிறுத்தி வருவதால் - தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியெனும் சிறப்புடன் விளங்குகிறது.
தமிழ்மொழித்திறன் வகைகள்:
தாய்மொழியை உணரும் திறனைப் பலவகைகளாகப் பாகுபாடு செய்யலாம்.
1. கேள்வித்திறன் 2. படிக்கும் திறன்
3. பேச்சுத்திறன் 4. எழுத்துத்திறன்
இவற்றில் கேள்வித்திறனையும் படிக்கும் திறனையும் உணர்திறன் என்றும் பேச்சுத்திறனையும்; எழுத்துத்திறனையும் ஆக்கத்திறன் அல்லது இயற்றுதல் திறன் என்று அறியலாம்.
எழுத்துத்திறனில் தனித்தமிழின் அவசியம்
ஒரு மொழி அதன் தனித்தன்மையோடு எழுதப்படவும் பேசப்படவும் வேண்டும். தமிழ்மொழியோடு வடமொழி கலந்துவிட்டது. காலப்போக்கில் ஆங்கிலம் உருது போன்ற மொழியிலிருந்தும் பேச்சு வழக்கில் சொற்கள் கலந்து, எழுதுமுறையிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. சங்கம் மருவிய காலத்தில் தமிழல்லாத களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். அப்போதுதான் வடமொழி தன் ஆதிக்கத்திற்கு கால்கோலியது. இதுபோன்ற காரணங்களினால் தமிழ்மொழியின் தன்னிலை சீர்கெடவில்லை என்றாலும் தமிழார்வலர்கள் அரிதின் முயன்று தனித்தமிழ்போற்றி வருகிறார்கள். தனித்தமிழின் படைப்புகள் தாய்மொழியின் சிறப்பை நிலைபெறச் செய்யும். '' காடுறையும்; விலங்காண்டி..... தலையாய தமிழர்கண்டீர்‘‘ என்றார் பாவாணர்.
எது தாய்மொழி:?
மனித இனம் தோன்றி ஏறத்தாழ 50லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்பது அறிவியலார் கருத்து. இப்புவியில் பல்வேறு காலச்சூழலில் தோன்றிய மனித இனம் ஆங்காங்கே தங்களுக்குள் அமைத்துக் கொண்ட குழுவின் வாயிலாக ஏற்படுத்திக்கொண்ட கருத்துப் பரிமாற்றக் கருவிதான் மொழி என்பது நாம் அறிந்தது. குழந்தைப் பிறந்தவுடன் தாயின் பாலைக்; குடிப்பதால் - தாய்ப்பால் என்கிறோம். அக்குழந்தை பிறந்ததுமுதல் பேசும்மொழி தாய்மொழி என்கிறோம்;. அன்றியும் தன் பெற்றோர்கள் மூதாதையர்கள் பேசும் மொழியும் தன்னுடைய தாய்மொழியாகும். இதனடிப்படையில் தமிழைத் தாய்மொழியாய்க்கொண்டவர்கள் அதில் புலமை பெறுவதன் மூலம் உயரிய சிந்தனையையும் கலாச்சார நுகர்வினையும் பகிர்வு செய்து கொள்ள முடியும். தனது எதிர்காலச் சந்ததியினருக்கும் அவற்றை விட்டுச்செல்ல முடியும்.
தமிழ் மொழியின் அசைநிலையானது உலகமொழிகளின் இயல்பில் ஓர் அருங்காட்சியாகும். இயற்கையாய் எளிதாக எழுப்பலாகும். குறைந்த ஒலிகொண்டு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் வாய்ந்தது தமிழ்.
''வடவேங்கடம்; தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்‘‘
(தொல்காப்பியம், பனம்பாரனா¡; பாயிரம் )
இன்று தன் தமிழ்மொழியின் பெருமையை உலகமுழுவதும் விரியச்செய்துள்ளமைக்குக் காரணம் தமிழின் எளிமையும் சிறப்புமே ஆகும். கடல்கொண்ட தென்னாட்டில் கால்கொண்ட தமிழினம் அதன் வரலாற்றுக் கருவூலத்தைக் கடல் பசிக்கு இரையாக்கிவிட்டது.
எழுத்துத்திறன் ஏன் வேண்டும்?
தாய்மொழி பழமைச்சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் தெளிவாக உணருகிறோம். அதன்; சிறப்பு மிக்க சமுதாய வாழ்வியல் நெறிகள் இலக்கியமாக உருப்பெற்று அவை மொழியின் கருவறையாகக் காட்சியளிக்கிறது.
இக்காட்சியை நாம் கண்டு களிப்பதற்குப் பயன்பட்டது ''எழுத்து‘‘ என்பதை நாம் எவ்வாறு உணராமல் இருக்கக்கூடும். ஆதலால் எழுத்துத்திறன் காலத்தின் அசைவுகளை அணுஅணுவாகச் சேகரித்து எதிர்காலத்திற்கு வழங்குகிறது என்பதை உணர்ந்து அதன் ஆற்றலை உயர்த்துவதை தக்கமுறைகொண்டு செயற்படுத்துதல் வேண்டுமல்லவா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு சமுதாயத்தை - அதன் கலாச்சாரத்;தை - பண்பாட்டு நெறிகள் எழுத்து வடிவமே நமக்கு வழங்குகிறது. இத்தகைய எழுத்தின் வாயிலாக ஒரு செய்தியை உலகிற்கு சொல்லிட தேர்ந்த எழுத்துவன்மை வேண்டும்.
படைப்பும் பயனும்
கலை, கலைக்காக என்பாரும், கலை சமுதாயத்திற்காக என்பாரும்; உண்டு. இரண்டாம்; கூற்றே பொருளுடையதாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று தமிழர் கலையைப் பாகுபாடுத்தினர். அத்தகைய அறுபத்துநான்கு கலைகளில் எழுத்துக்கலையும்; ஒன்று.
'சித்தரமும் கைப்பழக்கம்‘ என்பது அனுபவமொழி. இது எழுத்தைக் கையாளுமுறைக்கும் பொருந்துவதாய் அமைந்துள்ளது. சாதாரணமாக எழுதுவது எழுத்தாற்றல் என்று சொல்ல முடியாது.
''கேட்டார்ப் பிணிக்கும் என்பது போல்‘‘... , படிப்பவரைப் பரவசப்படுத்துவதே எழுத்தாற்றலின் வெற்றியாகும். அல்லது படைப்பின் தன்மையாகும். ''வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழ் என் அரும்பேறு‘‘ என்றார் புரட்சிக்கவி பாரதிதாசனார். இதனை வரிவடிவாய் மட்டுமே உணர்தல் இயலாது. இதனில் பொதிந்துக்கிடக்கும் உணர்வு வெளிப்பாடே படைப்பின் பயனாகும்.
''உயர் தமிழ்த்தாய் இவ்வுலகில் அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி தமிழா!‘‘
என்ற வரிவடிவிலும் 'பொருள்கோர்வையே‘ படைப்பாற்றலை அதாவது எழுத்தாற்றலை வெளிக்கொணர்கிறது.
இவ்வாறு இன்னும் பல்வேறு படைப்பின் பயன்களை எண்ணிக்கொண்டே செல்லமுடியும். ஒரு சிறந்த படைப்பு காலத்தை வென்று மானுட இனத்திற்குப் பயன்பட்டுக் கொண்டிருப்பதே அதன் பயனாகும்.
தமிழ்நாடு அல்லாத பிறநாடுகளில் உள்ளோர் பல்வேறு கலாச்சார - மொழி தாக்கத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் சூழலில் படைப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. சிங்கையில் தமிழ்மொழி உயர்வாக எண்ணிப் போற்றப்படுகிறது. அங்கீகாரம் கொண்ட மொழியாகச் சிறப்பிக்கப்படுகிறது.
இங்கு தமிழ்மொழி எல்லாத்திறன்களையும் மக்களுக்குச் சிறப்பாக வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளது. இனி மொழியை எளிநடையில் எழுதுதல் மற்றும் கற்றல் கற்பித்தலில் பயிற்றுவித்தல் என்பதை நடைமுறையோடு அறிவுறுத்தல் சாத்தியக் கூறுகளைக் காண்போம்.
பள்ளிகளில் எழுத்துதிறனைச் சிறப்பாக்கிடக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
1. அகராதி அமைத்தல்
2. சொல்கட்டம் அமைத்தல்
3. சிறுகதைகள் படைத்தல்
4. கட்டுரை எழுதுதல்
5. காட்சிகளை வர்ணணைச் செய்து எழுதுதல்
1. அகராதி அமைத்தல்
சொல் அகராதி¢ அமைத்தல் மூலம் எழுத்துத்திறனை உயர்த்த முடியும்;. சிங்கப்பூர் போன்ற தமிழை இரண்டாம மொழியாகக் கற்கக் கூடிய சூழலில் உள்ள இடங்களில் தமிழ்ச்சொற்களை அதிகமாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக் குறைவு என்பதை மறுக்க முடியாது.
ஆங்கிலம், சீனம், மலாய் முதலியவற்றிலுள்ள சொற்களைப் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதால் தமிழிலுள்ள சொற்களை அதிகம் அறிந்திட அல்லது மனதில் பதித்துக் கொள்ளுகின்ற வாய்ப்பு இயல்பாக இல்லாமலிருக்கிறது. தினசரி பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகின்ற தமிழ்ச்சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றை வைத்துப் புதிய சொற்களைப் பெருக்கலாம்.
எடுத்துக்காட்டாக,
'குட்டி இந்தியா‘ இந்தச் சொல் சிங்கப்பூரில் உள்ள பெரியவர் சிறியவர் அனைவரும் பேச்சில் பயன்படுத்தும் சொல். இதிலிருந்து சொல்லுருவாக்கும் திறனை ஏற்படுத்துவோம். குடி, குந்தி, குதி, தியாகு, இடி, இந்தி, இட்டி (குறுகிய), திட்டி (வசை), யா (யாவை - கட்டுதல் - ஒருமரம்). யா எனும் ஓரெழுத்து ஒரு மொழி மேற்கண்ட மூ:ன்று பொருள் தருகிறது.
இப்படி 'குட்டி இந்தியா‘ பத்துச் சொற்களைக் கொண்டுள்ளதைக் கண்டு எழுதும்படி சொல்லும் போது மகிழ்ச்சியாகச் சோர்வின்றிப் புதுப்புதுச் சொற்களை உருவாக்கி அதன் பொருளை மாணவர்கள் அறிந்து மகிழ்வார்கள். இவற்றில் புதிய சொற்களுக்குப் பொருள் தெரியாத சூழ்நிலையிலும், ஆசிரியரிடம் பொருளைக் கேட்டு அறிந்து தங்களின் திறனை வளர்த்துக்கொள்வார்கள். இதன் மூலம்; எழுத்தாற்றல்; வளரும்.
2.சொற்கட்டம்; அமைத்தல்
சொற்கட்டம் அமைத்தலில் முதலில் விளையாட்டாக மாணவர் உணரும் சொற்களை அமைக்கவேண்டும். ( எ-கா )
ப ட ஆ த டு ம் வா
ரு க கு உ இ ய ர
ந ல் றை நி ழு; சி த்
வீ வ ம் பு சு ம் யு
ம ர் க த து; ச து
படம்;, தடம், டம் டம், ஆம், ஆ, வா, பதம், தம், முதலிய சொல்லின் பொருள் உணரச் செய்தல். மேற்கண்ட கட்டத்தில் எழுத்துக்களை வரிசை மாற்றி எழுத வேண்டும். பிறகு குறுக்கு நெடுக்காக சொற்களுக்குரிய பொருளைக் கண்டு உணரச் செய்ய வேண்டும். இவ்வாறு எழுதச் செய்வதின் மூலம்; தாங்களாகவே ஒரு கட்டத்தை அமைத்து அதில் ஒழுங்கின்றி எழுத்தை நிரப்பி, பிறகு புதிய சொற்களைக் கண்டு எழுதி வரிசைப்படுத்தி, அதன் பொருள் உணரச்செய்தலின் மூலம் எழுத்தாற்றலை உருவாக்க முடியும். இவ்வாறு பயிற்சியளிப்பதில் மாணவர்கள் ஆர்வமுடன் உண்ர்திறனை வளர்த்துக்கொள்வர். கட்டத்திலுள்ள மேலிருந்து கீழ் வரிசைப்படி ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கட்டத்தைப் பிரித்துக் கொடுத்துப் புதிய சொற்களைக் கண்டெழுதச் சொல்லலாம்.
2. சிறுகதை படைத்தல்
மாணவர்களின் அறிவாற்றலுக்கேற்றவகையில் தலைப்புக்கொடுத்து அவற்றைச்சிறுகதையாக எழுதச்சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, தெம்பனிஸ் தொடக்கப்பள்ளி எதிரில் தினசரி பள்ளித்தொடங்கும்; நேரம்; - பள்ளி விடும் நேரம் தவறாது வந்து நிற்பான் அந்தத் தாடிக்காரன்...
இந்தச் செய்தியைக் கதையின் தொடக்கமாகக் கொண்டு மாணவன் சிந்தித்து ஒரு சிறுகதை எழுத முற்படும் போது அவன் சிந்தனை வளர்;;ச்சி, கற்பனை வளம் முதலியவற்றை வளர்க்க முடியும்.
இப்படிப்பட்ட தலைப்பில் ஒவ்வொரு மாணவனையும் எழுதத் து¡ண்டுதல் வேண்டும். இதன்மூலம் ஒரே சம்பவத்தை வெவ்வேறு மனநிலையில் மாணவர்கள் எவ்வாறு உணர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் உணரலாம்.
இவ்வாறு குழுக்களாகவோ, தனியாகவோ மாணவர்களை எழுதச்செய்து அச்சிறுகதையை அவர்களே மதிப்பீடு செய்ய வகை செய்ய வேண்டும்.
இதன் மூலம் தலைப்பு, சூழ்நிலை, கதாப்பாத்திரங்களின் தன்மை, கதைக்கரு, கதைப்போக்கு, தொடக்கம், முடிவு முதலியவற்றின் சிறப்பு - குறைபாடு முதலியவற்றை விவாதித்து உணரும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
3. கட்டுரை எழுதுதல்
மேற்கண்டவாறு முறைகளிலெல்லாம் நாம் எழுத்துப் பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பதின் மூலம்;, எளியமுறையில் அலுப்பின்றி, சிரமமின்றி எழுத்தாற்றலை வளர்க்க முடியும்; என்பதை நாம்; ஏற்றுக்கொள்வோம். இருப்பினும் எளிமை என்ற பெயரில் தரம் குறையக்கூடாது என்பதிலும் மொழியறிஞர்கள் கவனமாக இருந்து வருகிறார்கள். அதற்கு நாம் துணை போக வேண்டும்.
சிங்கப்பூர் போன்ற தமிழ்மொழியை இரண்டாவது மொழியாய் கொண்டுள்ள நாடுகளில் தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எல்லா வரிவடிவங்களும் பயன்பாட்டில், சொற்களில் நுழைகிறதா என்பது முதற்கண் ஆராய வேண்டிய செய்திகளாய் உள்ளது.
'ங‘ போல் வளை, என்ற ஔவையாரின் ஆத்திசூடியை ஆராயும் போது இரண்டு விதமான விளக்கத்தைக் கூறினார்கள்.
'ங‘ என்ற எழுத்து (வரிவடிவம்) நேராக மேலே சென்று பிறகு பக்கவாட்டில் நீண்டு, பிறகு கீழே இறங்கி பிறகு வளைந்து நெளிந்து மீண்டும் மேலே செல்கிறது. இவ்வாறு ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வளைந்துகொடுத்து வாழவேண்டும் என்பது ஒரு விளக்கம்.
'ங‘ என்ற வரிவடிவம் மட்டுமே வழக்கில் பயன்படுகிறது. ஆனால் அதுதான் வர்க்க எழுத்தாகிய ங,ஙா,ஙி,ஙீ முதலிய 17 எழுத்துக்களையும் நெடுங்கணக்கில் வளைத்து வைத்துள்ளது. அது போல் மனிதன் தன் சுற்றத்தாரை வளைத்துக் கொண்டு வாழவேண்டும் என்பது மற்றொரு விளக்கம். இங்கு 2வது விளக்கமே பொருந்தக்கூடியதாகும்.
இப்படி நெடுங்கணக்கிலுள்ள 247 எழுத்துக்களில் வழக்கில் பயன்பாட்டில் இல்லாத எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும் என்பது ஒரு சிலர் கருத்து. இது ஆராயப்பட வேண்டியதாகும்.
இருப்பினும் தொடக்க நிலையிலுள்ள மாணவர்களுக்கு நாம் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களை அறி[முகம் செய்வதால் அவர்கள் சலிப்பாகவும் சுமையாகவும் கருதிட வாய்ப்பிடுக்கிறது. பிறகு 'உள்ளதும் போச்சு‘ என்ற வழக்கிற்கிணங்க அவர்கள் தமிழ்மொழியையே சுமையாக கருதிடுவார்கள்.
சிங்கப்பூர் மாணவர்கள் கட்டுரை வடிவில் எழுத்துப்பயிற்சிப் பெறுவதைக் கல்வித்துறையும் ஊக்குவிக்கிறது.
கட்டுரை என்பது தான் சிந்தித்த அல்லது சேகரித்த சொல்லை ஒரு தலைப்பின் கீழ் வடிவமைப்பது என்று சொல்லலாம்.
அவ்வாறு வடிவமைக்கப்படும் சொற்கள் கோர்வையாக முன்னுரை - பொளுரை - முடிவுரை முதலிய அமைப்புகளோடு பகிர்ந்து எழுத வேண்டும்.
ஆரம்பக்காலத்தில் எளிய நடையில் சொற்களை அமைத்துக் கட்டுரை எழுதலாம். இது செய்திக்கட்டுரை. வர்ணணைக்கட்டுரை. பொதுக்கட்டுரை என்ற பாகுபாட்டுடன் எழுதப்படலாம்.
செய்திக்கட்டுரை
1. சிங்கையின் புதுநீர் - இதைப்பற்றி செய்தியைக் கட்டுரையாக்கலாம்.
2. சிங்கப்பூர் உலகின் தங்கப்பூர் - வர்ணனைக் கட்டுரை
3. உலகச்சந்தை சிங்கை: - பொதுக்கட்டுரை
இப்படிப்பட்ட தலைப்புகளில் கட்டுரை வடிக்கும் போது மாணவன் தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்வதோடு அல்லாமல் தான் வாழும் நாட்டின் சிறப்பையும் உணர முடிகிறது.
காட்சிகளைக் கட்டுரையாக்குதல்
''தேனாய் இனிக்கின்ற இனிப்பைத் தானாய் பெற்றதமிழே வாழ்க!‘‘ என்;றார் தமிழ்நாட்டுக் கவிஞர் பூவைசாரதி. அத்தகைய இனியதமிழைப் பேசினால் நா மணக்கும். சிந்தித்தால் உள்ளம் மணக்கும். வானளந்ததனைத்தும் தானளந்து வைத்துள்ள வண்டமிழ் மொழி இன்று சிங்கையில் உச்சி மோர்ந்து மெச்சிப் போற்றப் படுகிறது. சிங்கை இளைய சமுதாயமும் தமிழ்மொழியைச் சிறப்பாக கையாண்டு வருகிறார்கள்.
அவர்களின் ஆர்வநீர் ஊற்றுப் பெருகும் வண்ணம் 'ஜாய்புல் சிங்கப்பூர்‘ என்று போற்றக்கூடிய சிங்கையின் எழில் காட்சிகளைக் காணச் செய்து அவற்றை கட்டுரை வடிவாக்கச் செய்யலாம்.
இதன் மூலம் மாணவன் இயல்பாகப் படைக்கும் திறன் பெறுகிறான். இது எழுத்தாற்றலை அவனுக்குள் ஊற்றெடுக்கச் செய்து மொழியறிவையும் து¡ண்டும் என்பதில் சிறிதும் ஜயமில்லை.
வாழ்க தமிழ்!
பார்வை நூல்கள் விவரம்
• தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பம், டிசம்பர்2000
• நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன் சாந்தா
பப்ளிஷ்ர், சென்னை, 2002
• கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ் சென்னை
• சமயம் தந்த காப்பியத்தமிழ் 1992டாக்டர் பூவண்ணன்.சுடர் - 33/10 வெல்கம் காலணி அண்ணாநகர் மேற்கு, சென்னை- 600101
• தமிழ்நானு¡று - தொகுதி 2 டாக்டர். புலவர் பி.சி. கணேசன் 1997
60/4 சூரப்ப முதலீதெரு சென்னை – 600005
• தமிழ்ச் சமுதாயம். வெங்கடேசன் .1992 மே
NCBH 41- பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் சென்னை - 600098
• பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும் 2002 டாக்டர் இராசு. பவுன்துரை
காந்தி பதிப்பகம் 1/86 வடக்குத்தெரு. நாட்டுச்சாலை - 614906
தஞ்சாவூர்
• பொது மொழியியல் .1997.டாக்டர் பொற்கோ .பூம்பொழில்
சாத்திரி நகர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: தமிழ்மொழி கற்பித்தலில் எழுத்துத் திறனின் பங்குசிங்கை டாக்டர் மா.தியாகராசன்
பயனுள்ள நல்ல பகிர்வு முனைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல் திறனின் பங்கு சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தமிழ்மொழி கற்பித்தலில் வாசிப்புத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» பொங்கல் - டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum