தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

4 posters

Go down

என் இனிய பொன்நிலாவே!               பகுதி 7 Empty என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

Post by thaliranna Wed Oct 12, 2011 7:06 pm

என் இனிய பொன்நிலாவே!
பகுதி 7
‘ப்ரியம்வதா’
[You must be registered and logged in to see this link.]


முன்கதை
சுருக்கம்} இண்டர்வியூவிற்கு வந்த மதுமிதாவை அபிஷேக் விரும்புகிறான். அவள்
சம்மதம் வேண்டி அவளை துரத்துகிறான். அதே சமயம் அவனது முறைப்பெண் ஸ்வேதா
குறுக்கிட்டு மதுமிதாவை ஏளனம் செய்து அனுப்ப வீட்டிற்கு வரும் மதுமிதா
வேலைக்கு போகப் போவதில்லை என்கிறாள். இனி }

நல்லா
தூங்கு! குட்நைட்! என்று ஒளிர்ந்த எழுத்துக்களை படித்த மதுமிதா செல்போனை
தூக்கி அடித்தாள். இவன் யார் என்னை தூங்கச் சொல்ல கொஞ்சம் இடம் கொடுத்தால்
மடத்தை பிடுங்குகிறானே? அந்த முறைப்பெண்ணுக்கு சொல்ல வேண்டியதுதானே
குட்நைட்டை! சே நிம்மதியாக தூங்க கூட முடியாமல் செய்து விட்டானே என்று
மனதில் திட்டி தீர்த்தாள்


அடுத்த நொடி என்ன மடத்தனம் இது எதற்கு கோபப்பட்டு நம் நிம்மதியை
கெடுத்துக் கொள்ள வேண்டும் அவன் யாரோ நாம் யாரோ அவன் குட் நைட் அனுப்பினால்
அதை ஏன் பெரிது படுத்த வேண்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் எல்லாம்
சரியாகப் போகும்.பதிலுக்கு பதில் பேசினால் தானே பேச்சு வளர்கிறது இனி அவன்
முகத்தில் முழிக்கப் போவதும் இல்லை அப்புறம் எதற்கு அவனுடைய நினைப்பு என்று
நினைத்து கொண்டாள்.


அந்த ஸ்வேதா வேறு வந்து அவளை தொல்லை படுத்தினாள் சே என்ன பெண் அவள்
நாகரீகம் என்று அரை குறையாய் ஆடை அணிந்து கொண்டு நடு ரோட்டில் நாலு பேர்
முன் உலவிக் கொண்டு சினிமா நடிகைகள் கூட கெட்டார்கள் போல அப்படி ஒரு
அலங்காரம் இவளை மனைவியாக அடையும் புருஷன் பாடு திண்டாட்டம் தான் என்ன
பேச்சு பேசி விட்டாள்.


பிச்சைக்காரி என்றல்லவா சொல்லிவிட்டாள்! போகட்டும் அவள் பார்வைக்கு நாம்
பிச்சைக்காரியாக இருந்துவிட்டோம் போல என்று ஏதேதோ நினைவு படுத்திக் கொண்டு
தூங்க மறுத்தது அவள் மனம் பின் எப்படியோ தூங்கிப் போனாள்.


விடியற்காலையில் அன்னை எழுப்புவாள் என்று எதிர்பார்த்தாள் ஆனால்
அன்னபூரணியோ அவள் தான் வேலைக்கு போகப் போவது இல்லையே எதற்கு எழுப்புவது
என்று விட்டுவிட அவள் லேட்டாக தூங்கியதாலோ என்னவோ ஏழரை மணிக்குத்தான்
எழுந்தாள்.

என்னம்மா காலையில எழுப்ப மாட்டியா?
ஏண்டி இன்னிக்கு என்ன பண்ண போறே வேலைக்குதான் போக போறது இல்லேன்னு சொல்லிட்டியே?
ஆமாமா ஆனா வேற ஏதாவது கம்பெனிக்கு போய் ரெஸ்யூம் கொடுக்கிலாமுன்னு நினைச்சேன்!

அதுக்கு எதுக்கு அர்ஜெண்ட் நிதானமா செய்யலாம்! நேத்து நைட் சரியா தூங்கலை
போல கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு! அப்படி என்னதான் நேத்து நடந்தது என்கிட்ட
சொல்ல கூடாதாம்மா?

சொல்லத் தான் போறேன் ஆனா குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டுகிட்டே சொல்றேன் என்று குளியலறையில் நுழைந்தாள் மதுமிதா.


அபிஷேக்கின்
இல்லம் அவன் தாயார் என்னடா அபி ஆபிஸுக்கெல்லாம் ஒழுங்கா போக மாட்டே!
இன்னிக்கு என்னடா காலையிலேயே குளிச்சு ரெடியாயிட்டே! என்று கேட்டாள்.


போம்மா! உனக்கு எல்லாம் விளையாட்டுதான். நான் என்னிக்கு ஆபிஸ் போகாம்
இருந்திருக்கேன். உங்களை கவனிச்சுக்க ஆள் இருந்தாலும் நான் கிட்ட இருந்து
கவனிச்சிகிட்டாதான் ஒரு திருப்தி கிடைக்கிறது அதான் நீங்க எழுந்து குளிச்சு
முடிச்சு டிபன் சாப்பிடறவரைக்குமாவது கூட இருக்க பார்ப்பேன். நீங்களும்
வேண்டாம் நான் என் வேலையை பார்த்துக்கத் தெரியும் நீ ஆபிஸ் போன்ன்னு
சொல்லுவீங்க !

சரி இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரமா கிளம்பலாம்னு பார்த்தா! இப்படி கிண்டல் பண்றீங்களே?

அபி உன்னை பத்தி எனக்குத் தெரியாதா? அப்பா போனப்புறம் நட்டாத்துல இருந்த
நம்ம கம்பெனியை உன்னோட திறமையால வளர்த்து இந்த நிலைமைக்கு கொண்டு
வந்திருக்கே கூடவே என்னையும் கவனிச்சிக்கிற ஆனா நான் சொன்ன பேச்சைத்தான்
கேட்க மாட்டேங்கற?

என்னம்மா கேட்காம் போயிட்டேன்?
அந்த
ஸ்வேதா பொண்ணு உன் பின்னாடியே சுத்தி வருது .அவ நம்ம தூரத்து உறவும் கூட
தொழிலும் உன்னோட தொழில் தான் அவங்க வீட்டுலயும் உன்னை விரும்பறாங்க ஆனா
நீதான் பிடி கொடுத்து பேசமாட்டேங்கற!

எப்படிம்மா அவளை உங்க மருமகளா ஏத்துக்க தோணுது? அவளும் அவ உடையும் நடையும் கொஞ்சம் கூட சகிக்கலை?
எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தப்புறம் சரி பண்ணிட்டா போச்சு?
நாய் வாலை நிமிர்த்த முடியாதும்மா! ஆனா உனக்கு கூடிய சீக்கிரமே ஒரு நல்ல நியுஸ் சொல்றேன் இப்ப ஆள விடு!
ஏண்டா அத இப்பவே சொன்னாத்தான் என்ன?
இன்னும் கன்ஃப்ர்ம் ஆகலையேம்மா?
என்னடா? காதலா? யாரு அந்த தேவதை?
தேவதையேதான்மா!
பார்த்தா உனக்கு ரொம்பவே பிடிச்சு போகும் நம்ம ஆபிசுக்கு இண்டர்வியுவிக்கு
வந்தா! எனக்கு பிடிச்சு போச்சு வேலையும் கொடுத்திட்டேன் என்னோட மனசையும்
கொடுத்திட்டேன்

சரி அப்ப போயி பொண்ண பார்த்திட வேண்டியதுதான்!
அவசரப்
படாதேம்மா! அவ என்னை விரும்பறாளா இல்லியான்னு தெரியனுமே கொஞ்ச நாள்
போகட்டும் எங்க ரெண்டு பேர் மனசும் இணைஞ்சா உடனே உனக்கு மருமக ரெடி!
என்றான் அபிஷேக்.


அதுக்கு நான் இன்னும் எத்தனை காலம் காத்து கிடக்கணுமோ என்றாள் அவன் தாய்.
ரொம்பதான் அவசரப் படறேயே சரி சரி இப்ப ஆபிசுக்கு கிளம்பறேன் என்று
அலுவலகம் கிளம்பினான் அபிஷேக்.

அவன்
ஆவலுடன் அலுவலகம் சென்ற போதும் அவன் ஆவலை நிறைவேற்ற மதுமிதா அங்கு
வரவில்லை! ஏன் வரவில்லை? என்னாயிற்று ? என்று பலவாறு யோசித்தவன் மதுமிதாவை
செல்லில் அழைத்தான். ரிங் சென்று எடுக்கப் பட்டது

அலோ யாரு? என்றாள் மதுமிதா
நான் அபிஷேக் ஏன் இன்னும் வேலைக்கு வரலை? என்றான்
இந்த பிச்சைக்காரிய இன்னும் ஞாபகம் வைச்சிகிட்டு இருக்கீங்களா? உங்க பணக்காரி எங்கே போனாள் என்று குத்தலாக கேட்டாள் மது.
ஷிட்! என்றவன் மது அவள் ஒரு முட்டாள் இதற்காகவா வேலைக்கு வரவில்லை? ப்ளீஸ் மது நீ உடனே கிளம்பி வா என்றான் அபிஷேக்.
அலோ மிஸ்டர் நான் ஒன்றும் உங்கள் வீட்டுக்காரியல்ல அழைத்தவுடன் வருவதற்கு?
அப்படியானால் அந்த பதவியை தந்துவிட்டால் போயிற்று என்றான் அபிஷேக்.
நிலவு வளரும்(7)
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே!               பகுதி 7 Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 12, 2011 7:51 pm

நல்லா இருக்கு கதை பகிர்வுக்கு நன்றி நண்பரே... தொடரட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே!               பகுதி 7 Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 12, 2011 8:38 pm

பகுதி 8ஐ எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே!               பகுதி 7 Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 12, 2011 8:42 pm

பகுதி 8ஐ எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே!               பகுதி 7 Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

Post by தங்கை கலை Wed Oct 12, 2011 8:44 pm

:héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே!               பகுதி 7 Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum