தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
3 posters
Page 1 of 1
அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம். இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’
பிரஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த பார்வை குறைபாடு கொண்ட 70 மாணவர்களுக்கு அண்ணா நூலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பிரைல் பகுதி இரண்டாவது வீடாக மாறியிருக்கிறது. தமிழ் செவ்விலக்கியத்தில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் கே. சுதன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் இங்கே செலவிடுகிறார். ‘நற்றினை பற்றிய நூல்களைத் தேடும்போது, பேராசிரியர் பொற்கோவின் ஆடியோ ரிக்கார்டிங் ஒன்று கிடைத்தது. என்னால் விரைவாக குறிப்புகள் எடுக்கமுடியாது என்பதால் இந்த ஆடியோ பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. நல்ல பல பிரைல் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமான இடம் இது.’ (தி இந்து, நவம்பர் 11).
பார்வைத் திறன் தேவைப்படாத தொடுதிறை கணிணிகள் (NVDA : Non-visual Desktop Access) இப்பகுதியின் முக்கியமான ஓர் அம்சம். எழுத்துகளை ஒலிகளாக மாற்றியமைக்கக்கூடிய மென்பொருளைப் பயன்படுத்தி பல நூல்களை கேட்டு மகிழ்கிறார்கள். ‘ஜெயகாந்தனின் நாவலை டெக்ஸ்ட் டு ஸ்பீச் முறையில் வாசித்தேன். மறக்கமுடியாத அனுபவம்.’ என்றார் ஒரு மாணவர்.
[You must be registered and logged in to see this link.]இரண்டாவது மாடியில் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தளம் அமைந்துள்ளது. சில நிமிடங்கள் சுற்றிவர அனைவரும் தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள் என்றாலும், எதிர்காலத்தில் ஒரு குழந்தையுடன் ஒரு மூத்தோர் மட்டுமே உள்நுழையலாம். குளிர் அறையின் நடுவே கண்ணைப் பறிக்கும் அழகுடன் படர்ந்து விரிந்திருக்கும் அந்த பிளாஸ்டிக் மரத்தின் அடியில் சுகமாக குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கங்களில் விரிந்திருந்த ஒரு காண்டாமிருகத்தின்மீது தன் இரு கைகளையும் படரவிட்டு ரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு அடுக்கும் குழந்தைகள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் ‘டாம் அண்ட் ஜெர்ரி இடம்’ எங்கிருக்கிறது என்றும் ‘அமர் சித்ர கதா வரிசை’ எங்கிருக்கிறது என்றும் ‘ரோபோ நாய் புத்தகம்’ எங்கிருக்கிறது என்றும் அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. சென்றமுறை படிக்க ஆரம்பித்து இடையில் நிறுத்திய பக்கத்தைத் தேடிப்பிடித்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்கள்.
கார்டூன்ஸ், பஞ்ச தந்திரக் கதைகள், நாடுகள், தலைவர்கள், அறிவியல், பொது அறிவுக் களஞ்சியம், தேவதைக் கதைகள் என்று ஆயிரக்கணக்கான நூல்கள் பொந்து போன்ற அடுக்குகளில் சீராக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. கட்டைவிரல் அளவுக்கு எழுத்துகள் கொண்ட பெரிய புத்தகங்களைக் கண்கள் விரிய குழந்தைகளும் பெரியவர்களும் ஒருங்கே எடுத்து பார்க்கிறார்கள். வண்ண வண்ண எபிசிடி, ஸ்பைடர் மேன், டின்டின், கோஸ்ட் ரைடர் தொடங்கி டால்ஸ்டாய், ஆஸ்கர் ஒயில்ட், மார்க் ட்வைன் வரை வயதுக்கேற்ற புத்தகங்கள் காணக்கிடைக்கின்றன.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்குள் கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் திரண்டுவிட்டார்கள். பள்ளி மாணவர்கள் பலர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கே தவறாமல் வந்துவிடுகிறார்களாம். மினி சறுக்கு மரம், சீசா என்று சிறு விளையாட்டுத் திடலும் உள்ளது. குழந்தைகள் பிரிவில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலானவை ஆங்கிலம். தமிழ் மற்றும் பிற மொழி ஆக்கங்கள் சில ஆயிரம் இருக்கும். பிரிக்கப்படாத புத்தகக் கட்டுகள் ஒரு சிறு மலை போல் ஓரத்தில் காத்திருக்கின்றன. ‘மேலும் பல புத்தகங்களை ஆர்டர் செய்திருக்கிறோம், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.’ என்றார் அந்தப் பகுதியின் பொறுப்பாளர்.
குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற புத்தக அடுக்குகள், அமர்ந்து வாசிப்பதற்கு ஏற்ற வட்ட மேசைகள், பல வண்ண நாற்காலிகள் என்று கவர்ந்திழுக்கும் அம்சங்கள் பற்பல. பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தனியோர் உலகம் அது. டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றே வளர்ந்து பழகிய ஒரு தலைமுறைக்கு வாசிப்பின் ஈர்ப்பை இதைவிட சிறந்த முறையில் அறிமுகப்படுத்தமுடியாது.
நூலகப் பதிவேட்டின்படி ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 2500 பேர் வருகை தருகிறார்கள். முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகரிப்பு. முதல் முறையாக வருபவர்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது ஒரு காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து, குடும்பமாக வருபவர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 26,500 பேர் நூலகத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். (தி இந்து, நவம்பர் 9.)
[You must be registered and logged in to see this link.]செய்தித் தாள்கள், பத்திரிகைகள் தனியே ஒரு தளத்தில். கொண்டுவரும் புத்தகங்களைப் படிக்க ஒரு பிரிவு. மற்ற நூலங்களில் இல்லாத ஒரு வசதி இது. எப்போது சென்றாலும் இங்கே கூட்டம் நிரம்பியிருக்கிறது. ஒரு தளம், தமிழ் நூல்களுக்கானது. குடும்ப நாவல்கள், துப்பறியும் கதைகள், இலக்கியம், கவிதை, பயண நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், செவ்விலக்கியம், இலங்கைத் தமிழர் படைப்புகள், ஆன்மிகம், அம்பேத்கர் தொகுப்புகள் (பெரியார் அகப்படவில்லை!), வரலாறு என்று மாறுபட்ட ரசனைகளுக்கேற்ற தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. நியூ செஞ்சுரி, கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, அலைகள், விடியல் என்று பல்வேறு பதிப்பாளர்களின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது நான்கு பிரதிகள் துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் எழுத்தாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளதால், வண்ணதாசனையோ, ஜெயமோகனையோ, ஜெயகாந்தனையோ, பொன்னீலனையோ தேடியெடுப்பது சிரமமாக இருக்காது.
‘பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். நூலகத்தை மாற்றப்போவதாக அறிவிப்பு வந்தவுடன், உடனே பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன்.’ எம். சரண்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஃபார்மகாலஜி படிக்கும் மாணவி. ‘நான் பெரும்பாலும் ஐந்தாவது தளத்தில்தான் இருப்பேன்’ என்கிறார் டாக்ஸிகாலஜி படிக்கும் பொற்பாதம். ‘என் துறை சார்ந்த புத்தகங்கள் என் கல்லூரி நூலகத்தைவிட அதிகமாக இங்கே இருக்கின்றன.’ ‘நூலகங்கள் மட்டுமல்ல, புத்தகக் கடைகளிலும்கூட கிடைக்காத பல எஞ்சினியரிங் புத்தகங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன!’ என்கிறார் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவர், செல்வம். (தி இந்து, நவம்பர் 9).
‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது. வீடு, ஆபிஸ் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணிக்கணக்கில் இங்கே வந்து படிக்கமுடியும்.’ என்கிறார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பார்கவி. ‘எனக்குத் தெரிந்து, சாஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், புரோகிராமிங் என்று என் பணிக்குத் தேவைப்படும் அத்தனை புத்தகங்களையும் இப்படி ஒரே இடத்தில் இதற்கு முன்னால் பார்த்ததில்லை. ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும். வசதியில்லாதவர்களுக்கு இது பொக்கிஷம்.’
நூலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள குறைந்தது நான்கைந்து முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன். தமிழுக்கான தளம் தவிர்த்து பிற தளங்களில் துறை வாரியாக ஆங்கில நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மதங்கள் என்னும் பிரிவில், சூஃபிஸம் பற்றிய களஞ்சியம் மட்டும் இருபது பாகங்களில் உள்ளது. இந்தியத் தத்துவம் என்றால் வேதங்கள், உபநிஷத்துகள், லோகாயதம், நியாயா தத்துவம், வைசேஷிகம், சாங்கியம், சமணம், பௌத்தம், பகவத் கீதை, யோகம், வேதாந்தம், பக்தி இயக்கம் என்று ஒவ்வொரு தலைப்பிலும் நூற்றுக்கணக்கான பிரதிகள் உள்ளன. எந்தவொரு தேவாலயமும் பொறாமை கொள்ளும் வகையில் கிறிஸ்தவம் குறித்தும் தேவாலயங்களின் வரலாறு குறித்தும் பல ஆயிரம் நூல்கள். Baptists, Calvinism, Adventists, Puritans, Mormons, Pietism, Methodists, Lutherans, Anglicanism, Syrian Malabar Nasranis, Oriental Orthodox, Assyrian Church, Syrian Rites, Saint Thomas Christian groups, Vatican Council History, Restorationism என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
[You must be registered and logged in to see this link.]ஐந்தாவது தளத்தில் உள்ள துறைகள் இவை. Natural Sciences, Mathematics, Astronomy, Physics, Chemistry, Earth Sciences, Palaeontology, Biology, Medicine & Health, Botany, Zoology. கன்னிமரா உள்ளிட்டநூலகங்களிலும் இந்தத் துறைகள் கிடைக்கும் என்றாலும் இங்குள்ள வகைகளும் பிரிவுகளும் பிரமிக்க வைக்கக்கூடியவை. வேறு எங்கும் காணவியலாத பல துறைகள் இங்கே அநாயசமாக நிறைந்துள்ளன. உதாரணத்துக்கு, Metal Working, Lumber (Wood) Technology, Paper Technology, Elastomers, Precision Instruments, Printing Technology, Beverage Technology, Design Source Books, Video Production, Stenciling, Glass Art, Remote Sensing, Military Engineering, Calligraphy. பெயருக்கு ஒரு சில நூல்கள் அல்ல, ஒவ்வொன்றையும் பற்றிய மிக விரிவான சேகரிப்புகள் இங்குள்ளன. Metal Working என்று எடுத்துக்கொண்டால், Casting, Mechanical Working, Welding என்று உள்ளுக்குள் புகுந்து தலைப்புகள் விரிகின்றன.
இசை என்று எடுத்துக்கொண்டால், Instruments, Classical, Pop, Jazz, Country, Blues, Instrumental Ensembles, Keyboard Instruments, Electrophones, Percussion Instruments, Stringed Instruments, Wind Instruments, Recreational and Performing Arts என்று பிரிவுகள் படர்கின்றன. ஒவ்வொன்றிலும் குறைந்தது சில நூறு நூல்கள். மேஜிக் பற்றி எந்தவொரு புத்தகத்தையும் இதுவரை நான் பார்த்ததில்லை. இங்கே பி.சி. சர்க்கார் தொடங்கி பல நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்கள் பற்றியும் அவர்களுடைய கலை பற்றிய விவரங்களும் வரலாறுகளும் தனி அடுக்குகளில் உள்ளன.
கன்னிமராவில் வரலாற்றுக்கு ஒரு வரிசை இருக்கும். அதில் தோராயமாக பத்து அடுக்குகள் இருக்கும். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என்று பிரித்து வைத்திருப்பார்கள். இங்கே வரலாற்றுக்குத் தனியொரு தளம். ஏழாவது மாடி முழுவதும் வரலாற்று நூல்கள். Historical Periods என்னும் வகையில் நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என்று தேடிக்கொண்டே போகலாம். லிபியா, எகிப்து, சூடான், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, காமன்வெல்த் நாடுகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது நூறு, நூற்றைம்பது நூல்கள். அல்ஜீரியா பற்றியும் மொராக்கோ பற்றியும் பெரு பற்றியும் பாலினேஷியா பற்றியும் ஆர்க்டிக் தீவுகள் பற்றியும் இங்குள்ளது போன்ற நூல்களை வேறு எங்கும் கண்டதில்லை. நூற்றாண்டுகள் அடிப்படையிலும் காலவரிசையிலும்கூட பிரிவுகள் உள்ளன. 6th century to 12th centuries, 13th century, 14th century என்று தொடங்கி Modern History வரை தனித்தனி வரிசைகள். இரண்டாம் உலகப் போர் என்று எடுத்துக்கொண்டால் சில நூறு நூல்கள். படங்களும் வரைடபங்களும் அடங்கிய பெரிய அளவு புத்தகங்கள் தனி.
[You must be registered and logged in to see this link.]சிறிது நடந்தால், Earth – Physical Geography, Historical and persons treatment. நாடு வாரியாக, லோன்லி பிளாணட் வழிகாட்டிகள். அது போதாது என்றால் வேறு இரு பதிப்பகத்தாரின் நாடு வாரியான வழிகாட்டிகளை நாடலாம். அரசியல் அறிவியல் பிரிவில் Local Government, City Government, Political Situation & Conditions போன்ற தலைப்புகள் கிடைக்கின்றன. Political Situations என்னும் பிரிவில், ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், கிரீஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரான், மத்திய ஆசியா, பிலிப்பைன்ஸ், போலந்து என்று நாடுவாரியாக வரிசைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலப் புதினப் பிரியர்களுக்கு ஒரு மாடிப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ், லத்தீன் அமெரிக்க, இந்திய இலக்கியங்களுக்கு இணையாக, ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், மொராக்கோ, ஜெர்மன் நாட்டுப் படைப்புகளும் நிறைந்துள்ளன. மற்ற தளங்களைக் காட்டிலும் இங்கே கூட்டம் அதிகம்.
Immigration Law and Procedure, Law of Income Tax, Commentaries on Indian Constitution என்று பல ஆயிரம் பக்க நூல்களின் அணிவகுப்புகள் ஒரு பக்கம். சட்டம், பொருளாதாரம் இரண்டுக்கும் தனிப் பெரும் தடுப்புகள். மலைப் பாம்பு போல் நீண்டு விரிந்திருக்கிறது தத்துவத்துறை. Knowledge என்னும் அடக்கமான தலைப்பின் கீழுள்ள பகுதிகள் இவை. Structure of Knowledge, Origin and Sources of Knowledge, Belief, Causation, Determination and indeterminism, Chance, Freedom, Necessity, The Self, Soul, Mind, Attributes and faculties.
இங்குள்ள ஹிப்னாடிசம் பிரிவை ஒருமுறை வெறுமனே கடந்து சென்றிருந்தால்கூட ஏழாம் அறிவு போன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இது ஒரு சுருக்கமான பட்டியல் மட்டுமே. Perceptual Processes, Will (Self Contol), Intelligence and Aptitudes, Reasoning, Subconscious and altered states and process, Daydreams, fantasies, reveries, Sleep phenomena, Differential and developmental psychology, Individual psychology.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காணப்படுவதைப் போன்ற வரவேற்பறைகள் ஒவ்வொரு தளத்திலும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை இங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு அறையிலும் நுழைவுப் பதிவேடும் ஆலோசனைப் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. பத்து பக்கங்களைப் புரட்டினால் நூலகத்தை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மென்பொருள் பணியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக்காரர்கள், ஓவியர்கள்… இன்னும் பலர். மாணவர்களும் ஆய்வாளர்களும் அதிக எண்ணிக்கையில் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
[You must be registered and logged in to see this link.]நூலக இடமாற்றத்தை எதிர்க்கும் ஆயுதமாக ஆலோசனைப் புத்தகம் மாறியிருந்தது. ‘தயவு செய்து நூலகத்தை மாற்றாதீர்கள்’ என்னும் மென்மையான ஆதங்க வெளிப்பாடுகள் தொடங்கி, ‘சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது’, ‘நூலகத்தை மாற்றினால் ஒன்றிணைந்து தடுப்போம்’ போன்ற போராட்டக் குரல்களும் பதிவாகியுள்ளன. ‘It’s senseless to shift this beautiful library’ என்றும் ‘நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு பாசிஸ்ட் கூட சிந்திக்கமாட்டான்.’ என்றும் பலர் சீறியிருக்கிறார்கள். ஆ.சுப்பிரமணியன் என்பவர் இவ்வாறு எழுதியிருந்தார். ‘நூலகம் மாற்றுவது, என் கண்ணின் பார்வையை பிடுங்குவது போலிருக்கிறது. மாற்ற வேண்டாம்.’
இடிக்கவேண்டும் என்று சொல்பவர்கள் மட்டுமல்ல, இருக்கவேண்டும் என்று சொல்பவர்களும் ஒருமுறை நூலகத்தை வந்து பார்த்துவிடவேண்டும். முதல் பார்வையிலேயே அதன் பிரமாண்டமும் வீச்சும் முக்கியத்துவமும் விளங்கிவிடும். ஒரே ஒருமுறை, ஒரு சில தளங்களை மட்டும் பார்த்துவிடுங்கள். புத்தக அடுக்குகளைக்கூட நீங்கள் நெருங்க வேண்டியதில்லை. எந்தவொரு பிரதியையும் தீண்டவேண்டியதில்லை. பரந்து விரிந்திருக்கும் கார்பெட் தரையில் அமைதியாக நடை போட்டால் போதும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திருத்தியமைக்கவேண்டும் என்று ஜெயலலிதா துடித்துக்கொண்டிருப்பது ஏன் என்பது விளங்கிவிடும்.
[You must be registered and logged in to see this link.]நூலகத்தைவிட்டு வெளியேறி, சிறிது தூரம் நடந்தபோதுதான் சட்டென்று உறைத்தது. எம்ஜிஆர் பேட்டிகளும், வாழ்க்கை வரலாறுகளும், நினைவுக் குறிப்புகளும் இருந்தன. ஜெயமோகனின் புனைவுகளும் அபுனைவுகளும் இருந்தன. ஜெயகாந்தன், வாலி, வைரமுத்து ஆய்வுக் கோவை தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை பல்லாயிரம் பிரதிகள் இருந்தன. கருணாநிதி பெயர் தாங்கிய ஒரு புத்தகத்தையாவது பார்த்தேனா? அல்லது கவனக்குறைவால் கடந்து வந்துவிட்டேனா? அல்லது அவர் நூல்கள் இன்னமும் அடுக்கப்படவில்லையா? அல்லது அவற்றுக்கான அடுக்குகள் தயாராகவில்லையா? அல்லது ஆர்டர் செய்து இன்னமும் வரவில்லையா? அல்லது இன்னமும் திறக்கப்படாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சில பகுதிகளில் அவருடைய புத்தகங்களும் தேங்கிக்கிடக்கின்றனவா?
தெரியவில்லை. ஆனால், ஒரு புத்தகம், ஒரே ஒரு புத்தகம்கூட அவர் பெயரில் பார்த்த நினைவில்லை. எந்தவோரிடத்திலும் அவர் முகம் பார்த்த நினைவில்லை. அமர்ந்துவாசிக்கும் அண்ணாவின் உருவச்சிலை முகப்பில் இருக்கிறது. திறந்து வைத்தவர் என்னும் முறையில் முதல்வர் கருணாநிதியின் பெயர். அவ்வளவுதான்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
அரசியலுக்கு நல்லது கெட்டது தெரியாது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» எல்லாரும் எப்படி இருக்கீங்க ,, யூஜின் அண்ணா , கலை அக்கா , ரமேஷ் அண்ணா , ஹிசாலீ அக்கா , பகீ அண்ணா , ஐயா , ராஜப்டீன் அண்ணா , மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» எல்லாரும் எப்படி இருக்கீங்க ,, யூஜின் அண்ணா , கலை அக்கா , ரமேஷ் அண்ணா , ஹிசாலீ அக்கா , பகீ அண்ணா , ஐயா , ராஜப்டீன் அண்ணா , மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum