தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

+3
ருக்மணி
கலீல் பாகவீ
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 04, 2012 6:33 pm

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 10:28 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Mon Jun 04, 2012 6:40 pm

மழை நீரின் சுழற்சி

பெர்னாட் பால்ஸி என்பவர் தான் முதலில் 1580-ல் நீரின் தொடரான சுழற்சியைப் பற்றிச் சொன்னார்.

இந்த நீரின் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் சுழற்சியினுடைய பல நிலைகளைக் குறிப்பிடுகின்றது.

பூமியிலிருந்து தண்ணீர் மேலே சென்று, மேகங்களை உருவாக்கி, மேகங்கள் குளிர்ச்சியடைந்த அந்த நேரத்தில் மின்னல், இடிகளுடன் மழை பெய்வதை பின்வரும் வசனங்களில் விவரிக்கிறது.

அத்தியாயம் 23, வசனம் 18ல் "இன்னும் வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், பூமியில் தேக்கி வைத்தோம். நாம் அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றல் உடையவராவோம்."

மேலும், அத்தியாயம் 39 வசனம் 21ல் "நீர் பார்க்கவில்லையா? (அல்லாஹ் தான்) வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச்செய்கிறான்".

அத்தியாயம் 24 வசனம் 43ல் "நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன் பின் ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர்....."

மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 30 வசனம் 43ல் பார்த்தால், "அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவன் காற்றுகளை அனுப்பி வைக்கின்றான் பின்னர் அவை மேகங்களை ஓட்டுகின்றன. பிறகு தான் நாடியவாறு அதனை வானத்தில் பரத்துகிறான். அதனை பல துண்டுகளாகவும் ஆக்கிவிடுகின்றான், அதன் மத்தியிலிருந்து மழை வெளிவருவதை நீர் காண்கிறீர்..." எனக் கூறுகிறது.
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Mon Jun 04, 2012 6:46 pm

மழை கற்றுத்தரும் பாடம்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக….

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.

சரி முதலில் மழை (றைன்) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.

வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி என்று குறிப்பிடுவர்.

மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்ல தேவைஇல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.

கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.

இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 க்ம்ப்க்) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்.

இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (ஆஇர்பொர்னெ) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.

“அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)”

- கார்பன் கூட்டாளி
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty அனுபவம்

Post by ருக்மணி Tue Jun 05, 2012 11:44 am


மழை என்றால் சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்த ஒன்று. மழையில் நனைய வேண்டும் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் மழையில் நனைய தடை. காய்ச்சல் அடிக்கும், சளி பிடிக்கும் என தடுத்தாலும் மனம் ஏனோ நனையவே துடிக்கும். அப்படியே காய்ச்சல் வந்தால் என்ன!! ஆசை தீர மழையில் நனைந்து விட்டு இரண்டு நாட்கள் காய்ச்சலில் படுத்தாலும் பரவாயில்லை என்று என்ன தோன்றும். ஆனால் நனைய விட்டதே இல்லை . கல்லூரியில் படிக்கும் போது மழையில் நனைந்து கொண்டு வீடு திரும்பியதற்கு எக்க சக்கமாக திட்டு வாங்கினேன். அத்துடன் நனைவதை நிறுத்தி வைத்திருந்தேன்.

முதுநிலை பட்ட படிப்புக்காக விடுதியில் தங்கும் படி ஆனது எனக்கு மிகவும் வசதியாக அமைந்தது. என்னுடன் இருந்த தோழிகள் சிலருக்கும் என் போலவே ஆசை இருந்தது. எங்கள் விடுதி கட்டடமானது முற்றம் அமைந்த வீட்டை போல அமைப்புடையது. மழை பொழியும் நாட்களில் அந்த முற்றத்தில் தான் எங்கள் ஆட்டம் பாட்டம் கச்சேரி எல்லாமே. மிக அருமையான நாட்கள். கல்லூரி காலம், அழகிய நட்பு, இனிமையான இசை, அத்துடன் பெண்கள் அனைவரும் விரும்பும் மழை அரசி. நினைத்து பார்க்கவே அத்தனை இனிமை. எங்கள் சீனியர் அக்காகளுக்கும், ஜூனியர் தங்கைகளுக்கும் மழை பொழியும் நாட்களில் நாங்களே மிக சிறந்த பொழுதுபோக்கு... மறுநாள் காய்ச்சலில் சிரமபட்டதும் உண்டு. எனினும் அடுத்த மழையையே மனம் எதிர் நோக்கும் ஆவலுடன். .


ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 37
Location : சூரத்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty எனது மூணார் மற்றும் கொடைக்கானல் அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

Post by ஹிஷாலீ Sat Jun 16, 2012 5:22 pm

எனது மூணார் மற்றும் கொடைக்கானல் அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்:

எனது தோழிகள் மொத்தம் ஐந்து பேர் ஒரு தனியார் கம்போனியில் பணி புரிந்தோம் பொங்கல் லீவு என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் ஏன் தெரியுமா ...? அபோது தான் 5 நாட்கள் லீவு வரும் அந்த லீவில் எங்கள் MD & Madam சுற்றுலா செல்ல அனுமதிப்பார்கள் அதற்கான செலவுகளையும் அவர்களே தந்திடுவார்கள் உடனே நாங்கள் ஒரு காரை வாடகைக்கு பிடித்து சென்றுவிடுவோம் கூடவே துணைக்கு ஒருவர் அப்பா மற்றொருவர் அத்தை உடன் வருவார்கள். அப்போது நடந்த நிகழ்வுகள் இதோ உங்கள் பார்வைக்கு

சுமார் மதியம் 2 மணி அளவில் அவரவர் வீட்டுக்கு வந்து கார் அழைத்து சென்றது.
ரெம்ப ஜாலியாகவும் சந்தோசமாகவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கார் சென்றது திடிரென்று பாதி வழி செல்கையில் கார் நின்றுவிட்டது. அதில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என கலந்து இருந்தோம்.

உடனே அண்ணா என்னாச்சு என்று கேட்டோம் அவர்கள் இஞ்சின் சூடானதால் கார் நின்றுவிட்டது தண்ணீர் இருந்தால் நல்லது என்று கூறினார் உடனே அக்கம் பக்கம் பார்த்தோம் தண்ணீரே காணும்
இரவு வேற நெருங்கியது சுற்றிலும் மலை எங்கள் காரைதவிர வேற எந்த காரும் அங்கு வரவில்லை
பயம் கண்ணில் யாரையும் நம்ப முடியவில்லை என்ற சந்தேகம் ஒரு பக்கம்.

என் தோழியின் அப்பா வேற எங்களை திட்டிக்கொண்டே இருந்தார் இந்த டிரைவர் தெரிந்தவரா இல்லையா இதுக்கு தான் நான் சொன்ன டிரைவரை அழைத்திருக்கலாம் என்றார் உடனே அவரவர் இறைவனை வேண்டினோம் "மழை" வந்தது தண்ணீர் பிடித்து காரில் ஊற்றினோம் கார் கிளம்பியது
மீண்டும் சந்தோசத்தில் அனைவரும் அவரவர் இறைவனுக்கு நன்றிகள் கூறினோம்.

இடையில் அந்த டிரைவர் அண்ணா இருவரும் எங்களிடம் உங்கள் அப்பா பேசியது முற்றிலும் தவறு.நாங்களும் அக்கா தங்கையுடன் தான் பிறந்திருக்கிறோம் என்றார் இதை கேட்ட என் தோழியின் அப்பா அந்த டிரைவர் அண்ணாவிடம் சாரி கேட்டார்.அவர்களும் அதை பொருட்படுத்தவில்லை

மகிழ்ச்சியுடன் கொடைக்கானலை அடைந்தோம் ஒரு நாள் முழுவதும் சந்தோசமாக சுற்றி பார்த்தோம் அத்துடன் "மழையும் "எங்களை வரவேற்றது படகுப் பயணத்தில் அந்த ஒரு கனம் எங்கள் இதயம் லேசாகியது தென்றல் தாலாட்டியது வர்ண பகவான் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தது ரோஜா குட்டன்கள் எங்கள் ராஜாக்கள் போல் தோன்றியது கனவில் மிதந்தோம் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் சுதந்திரமாய் எந்த தொந்தரவும் இல்லாமல் மழையில் நனைந்து கொண்டே ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டபடியே ரூம்புக்கு திரும்பினோம். எங்களுடன் இருந்த டிரைவர் அண்ணாவும் எங்களை கவனமாக கவனித்துக் கொண்டார்கள். சிறிது நேரம் ஒய்வு எடுத்தோம்.

பின் அன்று இரவு மூணார் செல்ல முடிவு செய்தும் இரவு முழுவதும் கார் பயணத்தில் இருந்தது நாங்கள் காரிலே துங்கிக்கொண்டோம்.அங்கும் எங்களை ஒரு துன்பம் வரவேற்றது. இரவு என்பதாலும் பாசை தெரியவில்லை என்பாதாலும் சரியான பாதை வழி கிடைக்கவில்லை.
காரில் வெறும் பெண்கள் மட்டுமே இருப்பதால் டிரைவர் அண்ணா யாரிடமு ரூட் கேட்டகவில்லை சாலையில் இருக்கும் கைகாட்டியை வைத்தே எங்கள் கார் மேலே சென்றது.

வந்த பாதையிலே திரும்ப திரும்ப போய்கொண்டிருந்தோம் உடனே என் தோழியின் அப்பா சந்தேக பட ஆரம்பித்தார் கார் மின்னல் வேகத்தில் பறந்தது கொஞ்சம் பிசைந்தாலும் மேலிருந்து கிழே விழ வேண்டியதுதான் இதற்கிடையில் எனக்கு ஒரே வாந்தி காரை நிறுத்தி நிறுத்தி வாந்தி எடுத்தேன் அப்போ அந்த இடமே குகை போல் இருந்தது யாரும் எங்களை கடத்தினால் கூட கேட்பதற்கு ஆளில்லை அந்தமாதிரி ஒரு நிலைமை என்ன செய்வது மறுபடியும் கடவுளை வேண்டினோம்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு செக் போஸ்டில் தமிழ் பேசும் ஒருவரை கண்டோம் அவரிடம் என் தோழியின் அப்பாவும் டிரைவர் அண்ணாவும் சென்று வழி கேட்டார்கள் பின் அவர்கள் சொன்னபடியே எங்கள் கார் சென்றது சரியாக காலை 5 மணி மூணாரில் இறங்கும் போதே மழை நணைந்த படியே ஒரு விடுதிக்கு சென்றோம் அங்கு குளித்து முடித்து கிளம்பினோம் மணி 9 மூணார் மலையை சுற்றி பார்த்தோம் போட்டிகிங் போனோம் மழையில் நணைந்த படியே கேரட் சாப்பிட்டோம் வெளிநாட்டு நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டோம் ஒவ்வொரு அனுபமும் அருமையாக இருந்தது இரவு நிம்மதியாக தூங்கினோம்.

மறுநாள் காலையில் எங்கள் கார் (veegaland ) சென்றது அங்கே ஒரு நாள் முழுவதும் ஜாலியாக விளையாண்டோம் மாலை 5 மணிஆகியது வெளியே வருகையில் ஒரே மழை எங்களிடம் வேறு மாற்று உடையும் இல்லை என்ன செய்வது ஈரத்துடனே காரில் அமர்ந்தோம் பசி வேறு என்ன செய்ய ஒரு 5 கிலோமீட்டர் வந்தாள் தான் ஹோட்டல் எதாவது பார்க்க முடியும் என்ற நிலை என்ன செய்வது ஐந்து கிலோமீட்டர் கழித்ததும் ஒரு ஹோட்டல் அங்கே தோசை சாப்பிட்டோம் நல்லாவே இல்லை எதோ பசிக்காக உண்டோம்.

பிறகு எங்கள் கார் எங்கள் ஊரை நோக்கி பயணித்தது. அனைவரும் தூங்கிவிட்டோம் கார் அமைதியாக சென்றது நான்காம் நாள் காலையில் அவரவர் வீட்டை அடைந்தோம். அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது இந்த மூன்று நாட்கள் இன்னும் முடியாமலே இருந்தால் நன்றாக இருக்குமே என்று.

ஆனால் எங்கள் பெற்றோர்கள் எங்களிடம் தொலை பேசியில் பேசமுடியவில்லை எங்களுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று நினைத்து பயந்திருகிறார்கள் ஆனால் நாங்களோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாகவும் நிமதியாகவும் இருந்தோம் என்பதை அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தோம். பின் அங்கு எடுத்த போட்டோக்கள் மற்றும் உணவு பண்டங்கள் சில ஷாப்பிங் செய்த பொருட்கள் எல்லாம் காண்பித்து குசிபடித்தினோம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் எங்கு சென்றாலும் முதலில் அதற்கான வழிகளை முன்னவே தெரிந்துகொள்ள வேண்டும் பின் கார் டிரைவர் இவர்களை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். என் தோழியின் அப்பா போல் சந்தேகம் கொள்ளக்கூடிய நபரை அழைத்து செல்லாமலே இருபது நல்லது. அதிக தூரம் என்பதால் அதற்கான தேவைகளை கூடுதலாகவே எடுத்து சொல்ல வேண்டும் தன்னுடன் வரும் டிரைவரை தனது அண்ணனாகவே பாவித்து பழகினால் அவர்களும் நம்மளை பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் என்று உணர்ந்தோம்.

மொத்தத்தில் நாங்கள் அடுத்த சுற்றுலாவை அன்றே தேர்வு செய்தோம் அது மட்டுமில்லை அடுத்த டிரைவரும் இதே அண்ணாக்கள் தான் இதே கார் தான் என முடிவெடுத்து அவர்களின் தொலைபேசி விலாசம் வாங்கி வைத்துகொடோம்.

அவர்களும் எங்களுக்கு நன்றி கூறினார்கள் எப்படி தெரியுமா எங்களை ஒரு டிரைவராக நினைக்காமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து நீங்கள் வாங்கிய பொருட்கள் முதல் உணவுகள் வரை வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுட பழகியதில் மிக்க மகிழ்ச்சி கொண்டோம் தங்கைகளே இதே போல் ஒரு ட்ரிப் எங்கள் வாழ்வில் சுற்றுலா அழைத்து செல்லவில்லை என்று புகழ்ந்தார்கள்.

எங்கள் முன் நினைவுகளை பின் கொண்டுவர உதவியது இந்த மழை அனுபவ தொடர் அதற்கு என் தோழிகள் ஐவரின் சாட்சியாக நன்றிகள் பல .

வணக்கம்.
அன்புடன் உங்கள் ஹிஷாலீ






ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by சதாசிவம் Sat Jun 23, 2012 7:36 pm

கட்டுரைத் தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் மழை

முன்னுரை:
ஆழி சூழ் அகிலத்தில் அவனின்றி அணுவும் அசையாது என்ற வாக்கியத்தைவிட மழையின்றி மண்ணுயிர்கள் வாழாது என்பதுமிகவும் பொருத்தமாக இருக்கும். திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பை கூறி மழையை வள்ளுவனும் சிறப்பித்துப் போற்றுவதால், மழை கடவுளுக்கு அடுத்து நாம் கண்ணில் காணும் கடவுள் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் இலக்கியங்களில் மழையின் சிறப்பு, மழை எப்படி உருவாகிறது, எவர் பொருட்டு மழை பொழிகிறது, மழை பொழியாமல் தவறுவது எதனால் போன்ற செய்திகள் பல உள்ளன. இக்கட்டுரை வாயிலாகத் தமிழ் இலக்கியச் சுவையை ருசிக்க தங்களை ஆவலுடன் அழைக்கிறேன்.

மழையின் சிறப்பு
அமிர்தம் என்பது ஒருவரைச் சாகாவரம் பெறச் செய்யவும், இறந்தவரை மீண்டும் உயிரூட்டவும் பயன்படும் அற்புத அருமருந்து. ஆனால் இவ்வமிர்தம் அனைவருக்கும் கிடைக்காது, ஆயினும் இவ்வுலகில் உள்ள உயிர்கள் இறக்காமல் இருப்பதற்கு உறுதுணையாக இருப்பது மழையாகும், ஆதலால் வானத்தில் இருந்து பொழியும் இம்மழையை அமிர்தம் என்று அழைக்கலாம். வள்ளுவனும், இதை

வான்நின்று உலகம் வழங்கி வருததால்
தானமிர்தம் என்றுணரற் பாற்று

மேலும் மழை இல்லையெனில் இவ்வுலகில் தானமும் தவமும் நிலைக்காது
, பெரிய கடலும் வற்றிப்போகும், வானத்தில் இருந்து ஒரு துளியும் விழவில்லையெனில் பூமியில் ஒரு சிறிய புல்லும் தலை தூக்காது என்று மழையின் அவசியத்தை நமக்கு ஆழமாகவும், அழகாகவும் எடுத்துக் கூறுகிறார். திருமந்திரத் திருமூலரும் கீழ்கண்டப் பாடலில் மழைக்கு மேலும் சிறப்பூட்டுகிறார்.
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசைத் தோற்றம்
கமுகூறு தெங்கு கரும்போடு வாழை
அமுதூறு காஞ்சிரை ஆங்கது வாமே

மழையின் தோற்றம்

இன்றைய அறிவியல் உலகில் அனைத்திற்கும் காரண காரியங்கள் கூறவேண்டி உள்ளது. மேற்கத்திய அறிவியல் 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் அசுர வளர்ச்சி அடைந்தது. ஆனால் இவர்கள் காட்டுவாசியாக இருந்த காலத்தில் நம் தமிழர்கள் கப்பல் கட்டி கடல் கடந்து வணிகம் செய்து வாழ்ந்துவந்தனர். கணக்கு, வானியல், ஜோதிடம், மருத்துவம் என்று அனைத்திலும் சிறப்புடன் ஓங்கி வளர்ந்து பொலிவு பெற்றிருந்தனர். மழை எப்படி பொழிகிறதென்று இன்றைய அறிவியல் உலகம் மழையின் தோற்றத்தை விளக்குவதற்கு முன்னரே, சூடிகொடுத்த சுடற்கொடி ஆண்டாள் கடல் நீர் ஆவியாகி அதன் பின்பு மேகமாகி, இடியிடித்து, மின்னல் மின்னி உலகம் தழைக்க பூமியில் பெய்கிறது என்று நமக்கு தன்னுடைய திருப்பாவைத் திருப்பாசுரத்தில் அழகான உவமையுடன் தெளிவாக விளக்குகிறார்.

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


மாதம் மும்மாரி

ஒரு நாடு வளம்பெற வேண்டுமானால் மழைத் தப்பாமல் பெய்ய வேண்டும். கடந்த தலைமுறையில் வாழ்ந்த நம் மூத்தோர்கள் ஒருவரை விசாரிக்கும் போது, கேட்கும் கேள்விகளில் முக்கியமானது ஊரில் மழை பொழிந்ததா ? கம்மாயில் நீர் வரத்து உயர்ந்ததா என்று. இதன் மூலம் மழை முறையாகப் பொழிவது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்பது புலனாகிறது. தமிழ் சொல்வழக்கில் இருக்கும் ஒரு சிறப்பானச் சொல் மாதம்மும்மாரி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், மன்னனின் பெருமைக்கும் கூறுவது மாதம்மும்மாரி பெய்யும் வளமான பூமி தான். அதுசரி மாதம் மும்மாரி எப்பொழுது பொழியும், அதற்கான விளக்கத்தை விவேக சிந்தாமணி கூறுகிறது.

வேதம் ஓதிய வேதியற்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியருக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையருக்கு ஓர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே

வருடம் மும்மாரி
மாதம் மும்மாரி நாம் அனைவரும் கேள்விப்பட்டதே
, ஆனால் அது என்ன வருடம் மும்மாரி. மேற்சொன்னப் பாடலில் ஒவ்வொருவரும் தன் கடமையைச் செம்மையாகச் செய்வதால் மழை தப்பாமல் பொழிகிறது என்று பார்த்தோம். இவர்கள் தங்கள் கடமையில் இருந்து தப்பினால் மழை குறைந்து வருடம் மூன்று முறை மட்டுமே பொழியும் என்றும் விவேக சிந்தாமணி கூறுகிறது.

அரிசி விற்றிடும் அந்தனருக்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையற்கு ஓர் மழை
வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே

இது மட்டுமா, மழையை குறைப்பவர் இவர்களே என்று இப்பாடல் மேலும் கடிந்து கூறுகிறது.

கொள்பொருள் வெக்கி குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையருக்கும் கோள் - திரிகடிகம்

மழையின் குணம்
மழை சிறப்பான ஒன்று தான்
, ஆயினும் அது நாம் கேட்கும் நேரத்தில் கிடைப்பதில்லை. எப்படி அரசுத் துறை வங்கிகள் சிறு விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் பெரிய பணம் படைத்த வணிகருக்கு மேலும் மேலும் பணம் கொடுப்பது போல், மழையில்லாமல் நீரின்றி வாடும் வயல்களுக்குப் பொழியாமல், நீர் நிரம்பி வழியும் கடலில் பொழிந்து வீணாகிவிடுகிறது. மழைமட்டுமல்ல பணம் படைத்தப் பலரும் ஏழைகளுக்கு உதவாமல் பணம் கொழிக்கும் வணிகருக்கும் கோவில்களுக்கும், மேலும் மேலும் பணம் அளித்து ஏழையிடம் பாராமுகமாக உள்ளனர். இதை விவேக சிந்தாமணி சீர்மிகு பாடலில் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலம் கண்டு சென்றே கொதிதிரைக்
கடலில் பெய்யும் கொள்கைபோல் குவல யத்தே மதிதனம்
படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார் நிதிமிகப்
படைத்தோர்க் கீவார் நிலையிலார்க் கீய மாட்டார்!

மழைக்கு போட்டியாளன்
உலகில் மக்களுக்கு பயன் தருவது மழைமட்டுமா
? இல்லை மழைக்குப் போட்டியாளனும் உண்டு என்று இந்தப் புறப்பாடல் புகல்கிறது

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புறப்பதுவே

மழை பொழியச் செய்பவர்கள்
நாட்டின் வன வளம் குறைந்தால் மழை குறையும்
, அதுமட்டுமா மனிதநேயமும், நல்ல குணமும் குறைந்தாலும் மழை குறையும். நாட்டை வளமாக்கச் செய்யும் மழை மும்மாரி பொழியவில்லை என்றாலும் அவ்வப்போது பொழிந்து வருகிறது. யாருக்குக்காக இம்மழை பொழிகிறது என்பதை ஔவை அழகாகச் சொல்கிறார்,

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லாருக்கும் பொய்யும் மழை மூதுரை

மேலும் எவர் சொன்னால் மழை பொழியும். இக்கேள்விக்கான விடை

கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீ இ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை திரிகடிகம்

முடிவுரை
தமிழ் இலக்கிய மழையில் நனைந்த நாம்
, மழையின் முக்கியத்துவத்தையும் மழையின்றி மண்ணுயிர்கள் வாழாது என்பதையும் உணரவேண்டும். நம்மால் இயன்ற வரை மரங்களை வளர்க்க முயற்சி செய்யவேண்டும். மாதம் மும்மாரி பொழிந்து நாடு வளம் பெற இறைவனை வணங்கி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

நன்றி
க. சதாசிவம்



Last edited by சதாசிவம் on Sat Jun 23, 2012 9:19 pm; edited 7 times in total
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Sat Jun 23, 2012 8:35 pm

மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...

மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.

மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.

மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.

அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?

அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.

சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.

மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.

தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.

-அமிர்தவர்ஷினி அம்மா
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 30, 2012 10:27 pm

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

முதல் இடம்
சதாசிவம் on Sat Jun 23, 2012 6:06 pm
கட்டுரைத் தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் மழை


இரண்டாம் இடம்
ஹிஷாலீ on Sat Jun 16, 2012 3:52 pm
எனது மூணார் மற்றும் கொடைக்கானல் அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்:


மூன்றாம் இடம்
ருக்மணி on Tue Jun 05, 2012 10:14 am
மழை என்றால் சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்த ஒன்று...


நண்பர்களுக்குப் பாராட்டுகள்.

குறிப்பு:

நண்பர் கலீல் பாகவீ -ஆல் பதியப்பட்டுள்ள படைப்புகள் பிறருடையது என்பதால் முதல் மூன்று இடத்துக்குத் தேர்ந்தெடுக்கவில்லை.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 11:16 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Jun 30, 2012 10:35 pm

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..
மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Rain
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Jun 30, 2012 11:43 pm

வெற்றி பெற்ற இருவருக்கும் பாராட்டுக்கள். எனது அனுபவத்தை தேர்ந்தெடுத்த தமிழ்தோட்டத்திற்கு நன்றி மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 37
Location : சூரத்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Sun Jul 01, 2012 1:39 pm

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றியோருக்கும் எனது பாராட்டுகள்...
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Mon Jul 02, 2012 2:54 am

மழை நீரின் சுழற்சி என்ற கட்டுரையை போட்டியில் இடம் பெறச் செய்திருக்கலாம்....
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 02, 2012 7:09 am

கலீல் பாகவீ wrote:மழை நீரின் சுழற்சி என்ற கட்டுரையை போட்டியில் இடம் பெறச் செய்திருக்கலாம்....

இது உங்கள் சொந்த படைப்புதான். போட்டிக்கும் பரிசீலிக்கப்பட்டது... என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பரே... இக் கட்டுரை இன்னும் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். திருக்குர்ஆன் என்ற ஒன்றில் மட்டும் எடுத்துக்காட்டி கட்டுரையை முடித்துவிட்டீர்கள். பிற மத நூல்களில் ஒன்றிரண்டை எடுத்துக்காட்டி இருப்பின் சிறப்புப் பெற்றிருக்கும். மேலும் கட்டுரைக்கான ஒன்றிரண்டு சிறப்புக்கூறுகளும் விடுபட்டுள்ளது. அதனால் தேர்வு செய்ய முடியாமல் போனது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Mon Jul 02, 2012 12:16 pm

நன்றி
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 02, 2012 4:01 pm

வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 02, 2012 7:43 pm

கலீல் பாகவீ wrote:நன்றி
புரிதலுக்கு மகிழ்ச்சி நண்பரே...

தொடர்ந்து இணைந்திருந்து இந்த மாத போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by சதாசிவம் Mon Jul 02, 2012 9:27 pm

என் பதிவை முதல் இடத்துக்குத் தேர்ந்தெடுத்தத் தேர்வுக் குழுவுக்கும், பாராட்டிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 35578

நான் அறிந்த தகவலை உங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

அனைத்து போட்டிகளிலும் பரிசு பெற்ற, பங்குப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

வகை வகையாகத் தலைப்புத் தந்து
அழகழகாகப் போட்டி வைத்து
மணிமணியாக முடிவு செய்து
மலர்கள் அனைவரையும் மலரச் செய்து
மகிழ்வுடன் நடத்தும் தோட்டம் வளர்க
மலர்கள் அனைவரும் பரிசு பெறுக
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 03, 2012 8:05 am

சதாசிவம் wrote:
வகை வகையாகத் தலைப்புத் தந்து
அழகழகாகப் போட்டி வைத்து
மணிமணியாக முடிவு செய்து
மலர்கள் அனைவரையும் மலரச் செய்து
மகிழ்வுடன் நடத்தும் தோட்டம் வளர்க
மலர்கள் அனைவரும் பரிசு பெறுக

இப்பாராட்டுகள் அனைத்தும் தோட்டத்து மலர்களுக்கே சொந்தம்... சிறந்த பங்களிப்பை நல்கும் அவர்களுக்குத் தோட்டம் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறது.

நீங்களும் வளர்ந்து தோட்டத்தையும் வளர்த்திடுங்கள்...
மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 509975 இணைந்திருப்போம்... மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 509975 மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 509975 மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 579418
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Jul 03, 2012 12:55 pm

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 04, 2012 11:46 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
சதாசிவம் wrote:
வகை வகையாகத் தலைப்புத் தந்து
அழகழகாகப் போட்டி வைத்து
மணிமணியாக முடிவு செய்து
மலர்கள் அனைவரையும் மலரச் செய்து
மகிழ்வுடன் நடத்தும் தோட்டம் வளர்க
மலர்கள் அனைவரும் பரிசு பெறுக

இப்பாராட்டுகள் அனைத்தும் தோட்டத்து மலர்களுக்கே சொந்தம்... சிறந்த பங்களிப்பை நல்கும் அவர்களுக்குத் தோட்டம் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறது.

நீங்களும் வளர்ந்து தோட்டத்தையும் வளர்த்திடுங்கள்...
மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 509975 இணைந்திருப்போம்... மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 509975 மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 509975 மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 579418
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum