தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

+2
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 01, 2012 11:48 am

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 31, 2012 11:52 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Thu Oct 18, 2012 1:27 pm

திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை


திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறையப் படங்களிலும் செய்திகளிலும் நேரிலும் கண்டு கழித்துள்ளேன்.அதை ஒரு புதிய கோணத்தில் கட்டுரையாக எழுதுகிறேன் தவறாக இருந்தால் மன்னியுங்கள்.

திருமணம் = மரணத்தின் முடிவுரை தான் இந்தத் திருமணம்

என்னடா ஆரம்பத்திலே அபசகுனமாப் பேசுறேன்னு தவறாக நினைக்க வேண்டாம் விவரமாகக் கூருகிறேன்.

மனிதனின் பிறப்பே திருமணத்தின் முகவரிக்காகத் தான் அப்படி ஒரு தருணம் இல்லாமல் இருந்தால் மரணம் என்ற ஒன்று நம்மை ஆட்டிப் படைத்திருக்காது. நாமளும் வயதுகள் எண்ணிக்கை இல்லாமல் வாழ்ந்திருப்போம் யோசியுங்கள்

ஒரு குடும்பத்தில் தாய் தந்தை இருவரும் முன் ஜென்மத்தைப் படிக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ?

முடியாது இருந்தும் படித்துப் பார்த்து உணரவே பிள்ளைகளாகப் பெற்றெடுக்கிறார்கள் இது தான் நீதி

அப்போது முன் ஜென் கர்மங்கள் பாவங்கள் எல்லாம் அவரவர் குழந்தைகளுக்குப் பரிச்சையாக நிகழ்கிறது .அதே போல் அக்குழந்தை வளர்ந்து படித்து எல்லா விதமானா இன்ப துன்பங்களையும் அனுபவித்துத் திருமணம் ஆகும் தருணத்தில் தன் தாய் தந்தையின் பின் ஜென்மத்தை படிக்கமுடிகிறது இதுவும் ஒரு பட்டாம் பூச்சி வாழ்க்கை போல் தான்

என்னங்க அப்படி என்றால் எத்தனை பேர் திருமணம் ஆகாமல் இறந்து விடுகிறார்கள் அதற்கு என்ன சொல்வது ? என்று கேட்கலாம்

சொல்கிறேன் நமக்கு மட்டுமா மறதி உள்ளது இல்லையே, நம்மைப் படைக்கும் இறைவனுக்கும் அந்த வியாதி உண்டு. அந்த வேளையில் படைத்த உயிர்கள் எல்லாம் இப்படி விபத்தில் முடிகிறது

விவரமாகக் கூறுகிறேன்

புள் பூண்டு கனிகள் காய்கள் இப்படி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை படைக்கும் போது மறதியாக ஆறறிவு மனிதனை படைத்துவிட்டதால் தன் தவறை திருத்திக்கொள்ளவே இறைவன் ஆகாய விபத்து பூலோக விபத்து
நோயில் மரணம் பேயால் மரணம் என்று தனது கணக்கை நிவர்த்திச் செய்கிறார்

அக்கணக்கு கூட ஒரு பாவத்தின் பலியாகும் அப்பாவம் கண்ணீரால் கழுவப்படும் போது கர்மம் கரைந்து அதர்மம் மெலிந்து ஞாயம் ஜெய்கிறது

ஒகே ஒகே திருமணம் என்ற ஐந்து எழுத்தில் இவ்வளவு காரணங்கள் அடங்குகிறதா என்று ஐயம் தோன்றுகிறதா இப்போது தெளிந்ததா நண்பர்களே

ஒரு சிலர் திருமணம் என்பதும் வேறு எண்ணத்தில் படிக்க வந்திருப்பார்கள்
கவலை வேண்டாம் அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

நன்றி

வணக்கம் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty திருமணம்

Post by kowsy2010 Sat Oct 27, 2012 2:36 pm



உலகத்தோற்றங்களில் உன்னதமான தோற்றம் மனிதத் தோற்றம். இதன் மூலமே குடும்பம், குழந்தைகள், நாடு, அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்கள், உலகமாற்றங்கள் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஆணும் பெண்ணும் மனதாலும் உடலாலும் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சிறப்பான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதியே திருமணநடைமுறை உலகில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஆதிகால மனிதனின் உறவுமுறையின் ஆரம்பமே இத்திருமணம்தான். மனிதர் கூட்டத்திலிருந்து மனிதக் குடும்பம் உருவாகவும் உடலுறவில் ஒழுங்குநிலை தோன்றவும் திருமணநடைமுறை தேவைப்பட்டது. முதலில் ஆளும் வர்க்கத்தின் தலைமுறைச் சொத்தை அநுபவிக்க அரசர் திருமணத்தை உருவாக்கினர்.

மனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூகஅமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை. விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை. பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது. நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை(குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர். இதற்குத் திருமணம் அவசியமாகியது.

விலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.(J.G.Frager,otemism&Progancy-1970 Vol. IVP .28).

இவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். பாண்டவர் ஐவரை மணந்து வாழ்ந்த திரௌபதி பற்றிய கதை ஒரு காலத்தில் இந்தியாவிலும் இப்பல கணவன்முறை இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இக்குழுமணத்தின் பின்னேயே ஒருவன் ஒருத்திமுறை உருவானது. விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவும் குடும்பம் நடத்தவும் எந்தவித தடையும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை. இதனையே களவுமணம் என்றனர். விரும்பிய ஒரு பெண் விரும்பிய ஒரு ஆடவனுடன் ஊரைவிட்டு வெளியேறிக் கூடிவாழ்ந்தமையையே உடன்போக்கு என்றனர். அக்காலத்தில் இத்தகைய மணமுறைகளில் எந்தவித தடையும் இருந்ததில்லை. இது பற்றிச் சங்ககால அகப்பாடல்களில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இதில் ஏற்பட்ட சிற்சில தவறுகளினால், திருமணச் சடங்குமுறை தோன்றியது. இனையே தொல்காப்பியர் தன் கற்பியல் என்னும் பகுதியில்

'பொய்யும் வழுவும் தோனிறிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப''

என்று கூறியிருக்கின்றார். அன்றைய திருமணங்களில் ஐயர் இல்லை, மந்திரங்கள் இல்லை, தீவலம் இல்லை. ஆரியர் தமிழ்நாட்டினுள் புகுந்தபின்பே இம்முறைகள் எல்லாம் கையாளப்பட்டது. அக்காலத் திருமணங்கள் பற்றி இரு அகநானுற்றுப் பாக்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. அறவாணன் தன்னுடைய தமிழர்மேல் நடந்த பண்பாட்டுப் படையெடுப்பு என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

திருமணத்திற்கு நல்ல நாள் தெரிவுசெய்யப்பட்டது.
வளர்பிறை நாட்களில் திங்களும் ரோகினியும் ஒன்றாக சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாகக் கருதப்பட்டது.
திருமணங்கள் விடியற்காலையில் நடத்தப்பட்டது.
மணநாளுக்கு முந்தியநாள் முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டது. பந்தல், தோரணங்கள் கட்டப்பட்டன.
முரசுகள் முழங்கின, விளக்குகள் ஏற்றப்பட்டது.
கடவுளைப் போற்றி வழிபட்டனர்
மணமகளை அலங்கரித்து பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
மங்களகரமான பிள்ளைகளைப் பெற்ற பெண்கள் பூவும், நெல்லும் நிறைந்த நீர்க்குடங்களைச் சுமந்து வந்தனர்.
குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் இக்குடங்களிலுள்ள நீரை மணமகளின் மேல் ஊற்றுவர். அப்போது கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்வாயாக என பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துவர்.
மணமகனிடம் மணமகளை ஒப்படைத்து வாழ்த்தொலி எழுப்புவர்.
அன்றிரவே மணமகளும் மணமகனும் தனியறையில் கூடிமகிழ விடப்படுவர்.
மணநாளன்று விருந்தினர்அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
இடையர்களின் திருமணத்தில் செம்மறியாட்டின் பாலை உறை ஊற்றி எடுத்த தயிர், வரகரிசிச்சோறு, பொரித்த ஈயல் ஆகியவை விருந்துணவாக வழங்கப்பட்டது.

பின் ஆரியர் வரவின் பின் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபும் சேர்ந்தது. பண்டைக்காலத்தில் தலிகட்டும் சடங்கு இருந்தில்லை. ஆண்பெண்ணுக்குத் தாலிகட்டும் முறை பிற்காலத்திலேயே பேசப்படுகின்றது. கந்தபுராணம் என்னும் நூலில் முருகன் தெய்வயானையின் கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகின்றது. அதுவும் தெய்வயானை ஆரியப்பெண்ணாகக் காணப்பட்டார். இப்பழக்கத்தைத் தமிழர்கள் ஆரியச்சார்பு பெற்ற மலையாளநாயர்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு நாம் திருமணநடைமுறைகள் மாற்றம் பெற்று வந்திருந்தமையை அறிந்து கொள்ளுகின்றோம். தற்காலத்தில் தமிழர் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற சூழ்நிலையில் அவர்கள் பழக்கவழக்கங்கள,; திருமணவாழ்க்கை முறைகள் போன்றவை அவரவர் வாழுகின்ற நாடுகளின் சூழலுக்கேற்ப மாறுபாடுபடுவதை அறியக்கூடியதாக உள்ளது.


[justify][justify]
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 31, 2012 11:50 am

முதல் இடம்

திருமணம்
by kowsy2010 on Sat Oct 27, 2012 1:06 pm


உலகத்தோற்றங்களில் உன்னதமான தோற்றம் மனிதத் தோற்றம். இதன் மூலமே குடும்பம், குழந்தைகள், நாடு, அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்கள், உலகமாற்றங்கள் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஆணும் பெண்ணும் மனதாலும் உடலாலும் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சிறப்பான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதியே திருமணநடைமுறை உலகில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Oct 31, 2012 3:19 pm

[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by kowsy2010 Thu Nov 01, 2012 4:31 am

மிக்க நன்றி . எத்தனையோ பதிவர்கள் கலந்து கொள்ளும் தமிழ் தோட்டத்தில் இருவர் மட்டுமே இப்பிரிவில் கலந்து கொண்டமையை நினைத்தால் கவலையாக இருக்கின்றது . இருந்தாலும் பரிசு பெற்ற ஹிஷாலிக்கும் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் . தலைப்புக்களைத் தந்து எமக்கு எழுதும் ஊக்கத்தையும் தந்து பரிசுகளை வழங்கும் நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Thu Nov 01, 2012 4:21 pm

நிஜம் தான் நானும் இப்பதிவில் எதுவுமே பதியாமல் இருந்ததால் தான் இக்கட்டுரையை பதிந்தேன் என் நோக்கம் வெற்றி பெருவதற்காக இல்லை என் திறமையை வெளிக்காட்டவும் என்னை இன்னும் வளர்த்துக் கொள்ளவு தான்.

இத்தோட்டத்தை ஒரு பாடம் காற்று தரும் கல்விக்கூடம் போல் தான் நான் பார்க்கிறேன் மற்றபடி ஒன்றும் இல்லை

நன்றிகள் கௌசி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by sarunjeevan Thu Nov 01, 2012 7:04 pm

ஹிஷாலீ wrote:நிஜம் தான் நானும் இப்பதிவில் எதுவுமே பதியாமல் இருந்ததால் தான் இக்கட்டுரையை பதிந்தேன் என் நோக்கம் வெற்றி பெருவதற்காக இல்லை என் திறமையை வெளிக்காட்டவும் என்னை இன்னும் வளர்த்துக் கொள்ளவு தான்.

இத்தோட்டத்தை ஒரு பாடம் காற்று தரும் கல்விக்கூடம் போல் தான் நான் பார்க்கிறேன் மற்றபடி ஒன்றும் இல்லை

நன்றிகள் கௌசி

[Only admins are allowed to see this image]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 36
Location : சென்னை

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Fri Nov 02, 2012 12:28 pm

sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:நிஜம் தான் நானும் இப்பதிவில் எதுவுமே பதியாமல் இருந்ததால் தான் இக்கட்டுரையை பதிந்தேன் என் நோக்கம் வெற்றி பெருவதற்காக இல்லை என் திறமையை வெளிக்காட்டவும் என்னை இன்னும் வளர்த்துக் கொள்ளவு தான்.

இத்தோட்டத்தை ஒரு பாடம் காற்று தரும் கல்விக்கூடம் போல் தான் நான் பார்க்கிறேன் மற்றபடி ஒன்றும் இல்லை

நன்றிகள் கௌசி

[img]

இதில் நீங்கள் என்ன கூறவிரும்புகிறேர்கள் என்று தெரியவில்லையே ? யோசி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by sarunjeevan Fri Nov 02, 2012 3:02 pm

நீங்கள் சொல்வது சரி தான்.. [Only admins are allowed to see this image]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 36
Location : சென்னை

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 03, 2012 12:15 pm

பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் ஒவ்வொருவரின் வளமையான பங்களிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: திருமணம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum