தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines திருமணம் - கவிதை போட்டி முடிவு

+5
kowsy2010
ஹிஷாலீ
yarlpavanan
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 01, 2012 11:57 am

திருமணம் - கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 31, 2012 12:00 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Oct 02, 2012 9:39 am

நேற்று நீ யாரோ
நான் யாரோ
யென்று இருந்த உள்ளங்கள்
உறவுக்குள் இணைந்து
கலந்தன
புதிய விடியலுக்கு...

கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by yarlpavanan Thu Oct 04, 2012 7:17 am

திருமணத்திற்குப் பின்...

குடி, வெறி, புகையை நிற்பாட்டிட்டான்.
திருமணம் என்றதும் வேலைக்கும் போறான்.
எந்தப் பொண்ணு தலையை நீட்டுவாளோ?
மணமான மறுநாளே பொடியன் கூத்தாடுவானே!
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு"

ஆடின ஆட்டமென்ன தேடின நட்டமென்ன
கூடின மனைவி, சொத்து எல்லாமே
மனைவி கோடுகீற மாட்டினான் மன்னன்
தேட்டமோ தேட்டம் மன்னவனும் மாறினான்
"மனைவி சொல்லே பொன்வாக்கு (மந்திரம்) ஆச்சு"
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Thu Oct 04, 2012 5:44 pm

விருந்தோம்பலாய் சிறக்கிறேன்
மருந்தோம்பலைக் காண
வருந்தோம்பலாய் கேட்டனர்
வரதச்சனை

இருந்தோம்பல் இல்லா வீட்டில்
இரு கரம் பிடிக்கும் திருமணம்
கேள்விக்குறியாய் நிற்கிறது
கேளடி பெண்ணே

அருந்தோம்பல் இல்லாவிடில்
ஆருயிர் அவதரித்து இருக்காது
என் அன்னமே அவரவர் வாழ்க்கை
அவரவர் கையில் என்று

ஆண்டவன் உரைத்துவிட்டான்
அடியேன் கேட்கிறேன்
ஆறடி மண்ணில் ஈரடிப் பாதம்
பதிக்க திருமண பந்தமே முடிவானது...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty திருமணம்

Post by kowsy2010 Wed Oct 24, 2012 2:33 amகளவினில் குற்றம் கலந்தது
கடிமணம் உலகினில் விதந்தது
உறவினில் கலங்கங்கள் புகுந்தது
உதவிட பிரிவுகள் எழுந்தது
இருமனம் இணைவதே திருமணம் - இதை
உணர்த்திட மார்பினில் மாங்கல்யம்
உணர்த்திடும் அவசியம் புரிந்ததால்
திருமணம் உலகினிலின் றவசியம்.

மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
மதமது சடங்கது தேவையில்லை
கலாசார பண்பாடு களத்திலில்லை
எழுதாத சட்டமது திருமணமும்
எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.

குணமது தெரியணும் நெறியது புரியணும்
வளமது பெருகிட வாழ்வது சிறக்கணும்
பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்
தெளிவிலா மனதுடன் திருமணம் வெறுக்கணும்
நாளைய உலகினை நாடிய வாழ்வினை
நாளுமே எண்ணியே வாழ்வினை நடத்தணும்
அன்புடன் துணையினை ஆதரவாய் நடத்தணும்
பிறரது வாழ்வது சிறந்திட திருமணவாழ்வும் சிறக்கணும்
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty மணமகள் மாங்கல்யம்

Post by kowsy2010 Sat Oct 27, 2012 2:40 pm


கொழுமை கொஞ்சும் கோமளமேனிக்
கோதை கொண்டாள் திருமணக்கோலம்
கயல் இரண்டு களிநடம் புரியும் சாயலிலே
காரிகை கவின்மிகு கண்கள்
நித்திலமாய் நெற்றியிலே
கச்சிதமாய் ஒரு குங்குமப் பொட்டு
வனப்பும் வாளிப்பும் வார்த்தெடுத்த ஆக்கை
சிவப்பும் செம்மஞ்சள் பட்டும் சீர் உடுத்து
புனைபல புனைந்து அணிபல அணிந்து
இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க
பட்டுவிரலாலே பல வண்ணச் சரமெடுத்து
பக்கம் வந்தடைந்தாள் ஏந்திழையாள்
பாதிவழித் துணை நாயகன் நாடி
நறவம் அனைய குரலாள்
நலங்கள் அனைத்தும் காக்கும்
ககனம் வாழ் காதலனோ! எனக்
கடைக்கண் பார்வை கணக்கெடுக்க
அம்மி மிதித்தோர் அருந்ததி பார்த்து
அண்டம் ஆய பொறை அவணியில் காக்க
சங்குக் கழுத்தில் தொங்கவோர்
தங்கச் சரட்டை அங்கமாய் அணிந்து – தன்
சொந்தச் சிறையில் பந்தலிட்டான்
சொந்தப் பெயரில் திருமதி இட்டான்

avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty விவாகரத்து செய்யுங்கள்

Post by puthuvaipraba Sun Oct 28, 2012 2:05 am

அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்

குறட்டைவிடுகிறார் என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து
விவாகரத்து கோரும் மனைவி-
அரட்டை அடிக்கிறாள் என்ற
ஆதங்கத்தோடு
பிரித்துவைக்கச் சொல்லும் கணவன்-
தொலைக்காட்சி பார்க்கும் தகராறில்
தொடர்பை முறித்துக்கொள்ள நினைக்கும் இருவர்
" பீட்சா " பிரச்சனையில்
பிரிந்துவிட நினைக்கும் இணையர்

இன்னும்..இன்னும்…

இப்படிப்பட்டவர்களால்
அவமானப்பட்டு நிற்கிறது திருமணங்கள்.

அட..அவசரத்திற்கு பிறந்தவர்களே..!!!

திருமணம் என்பது
வெறும் வார்த்தையென்று நினைக்காதீர்
வாழ்க்கையென்று நினையுங்கள்.
ஆணவம் அகங்காரம் தவிர்த்து
மனதால் ஒன்றிணையுங்கள்

சுயநலம் என்னும் சொல்லை
தயவுசெய்து மறந்துவிடுங்கள்
தொண்ணூறு விழுக்காடாவது
உண்மையாய் இருந்துவிடுங்கள்

நல்லதானால் " நான் " காரணம்
கெட்டதானால் " நீ " காரணம்
என்று பேசுவதை தவிர்த்து
எதற்கும் " நாம் " காரணம்
என்று பேசுங்கள்
குடும்பத்திற்கு
" தற்பெருமை " ஆகாது
அதை தூக்கி தூர வீசுங்கள்

விவாகரத்து என்னும் வார்த்தையை
விவாகரத்து செய்யுங்கள்
புரிந்துணர்வோடு வாழ்க்கை நடத்தி
உங்கள் திருமணத்தை வாழவையுங்கள்

புதுவைப்பிரபா
puthuvaipraba
puthuvaipraba
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 49
Location : புதுச்சேரி

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 31, 2012 11:58 am

முதல் இடம் (தலைப்பை ஒட்டியே இருந்ததால்)

திருமணம்
by kowsy2010 on Wed Oct 24, 2012 1:03 am


களவினில் குற்றம் கலந்தது
கடிமணம் உலகினில் விதந்தது
உறவினில் கலங்கங்கள் புகுந்தது
உதவிட பிரிவுகள் எழுந்தது
இருமனம் இணைவதே திருமணம்...

இரண்டாம் இடம்

விவாகரத்து செய்யுங்கள்
by puthuvaipraba on Sun Oct 28, 2012 12:35 am

அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்...

மூன்றாம் இடம்

by yarlpavanan on Thu Oct 04, 2012 5:47 am

திருமணத்திற்குப் பின்...

குடி, வெறி, புகையை நிற்பாட்டிட்டான்.
திருமணம் என்றதும் வேலைக்கும் போறான்.
எந்தப் பொண்ணு தலையை நீட்டுவாளோ?
மணமான மறுநாளே பொடியன் கூத்தாடுவானே!
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு"...

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 01, 2012 11:25 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Oct 31, 2012 3:17 pm

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள் [Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by kowsy2010 Thu Nov 01, 2012 4:33 am

தலைப்புக்களை வழங்கி பரிசுகளும் வழங்குகின்ற நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி. பரிசு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள்
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by sarunjeevan Thu Nov 01, 2012 2:34 pm

பரிசு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 36
Location : சென்னை

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Thu Nov 01, 2012 4:08 pm

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 03, 2012 11:22 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Nov 03, 2012 11:29 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

_________________
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

திருமணம் - கவிதை போட்டி முடிவு Empty Re: திருமணம் - கவிதை போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum