தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தாண்டவம் !
நடிப்பு விக்ரம் .
இயக்கம் விஜய் .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தெய்வத்திருமகள் தந்த சிறந்த இயக்குனர் விஜய் , நடிகர் விக்ரம் கூட்டணியில் படம் .படத்தில் அதிக எதிர்ப்பார்ப்புடன் சென்றேன் .ஆனால் தெய்வத் திருமகள்
அளவிற்கு இல்லாவிட்டாலும் ,படம் பார்க்கும் படி உள்ளது .வழக்கம் போல தீவிரவாதி கதைதான் .காவல் உயர் அதிகாரி விக்ரம் .அவரது
நண்பன் காவல் உயர் அதிகாரியே துரோகியாக மாறும் மசாலா கதைதான் .கதை நடப்பது
லண்டனில் என்பதால், லண்டனை மிக நன்றாக படம் பிடித்து உள்ளார் . லண்டனில் பாம் வெடித்த காட்சிகளை இணைத்து உள்ளது தெரின்றது .ஆங்கிலம்
பேசும் காட்சிகளில் அலுப்பு தட்டுகின்றது.நடிப்பில் சிவாஜி கணேசன் ,கமல
ஹாசன் இருவருக்கும் அடுத்து விக்ரம் தான். என்று அறுதி இட்டுக் கூ
றலாம்.பார்வையற்றவர்கள் கண்களில் பார்வை இல்லாததால் காதுகளே விழிகள். ஒலியை
வைத்தே யார் என்று சொல்லி விடுவார்கள் .நான் மதிக்கும் மாற்றுத்
திறனாளிகள் பார்வையற்றவர்கள். பார்வை இழந்த விக்ரமை கொலைக்காரனாக காட்டியது
வருத்தமே .ஒரு கொலை அல்ல வருசையாக படம் முழுவதும் கொலை செய்கிறார் .
கொலை செய்வது தீவிரவாதிகளைத்தான் என்றாலும் பார்வையற்றவர்கள் மனிதாபிமானம்
மிக்கவர்கள் .ராஜபார்வை படத்தில் கமலை பார்வையற்றவராக மிக கண்ணியமாக காட்டி
இருப்பார்கள் .
திருமணம் வேண்டாம் நன்கு பார்த்து ,தெரிந்து, புரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த விக்ரமை
கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்கிறார் அவர் அம்மா சரண்யா. மழையில் தான் நனைந்து கொண்டு நாய் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் மணப்பெண் அனுஷ்காவை பார்த்து வியந்து போகிறார் விக்ரம்.அவரசக்
கல்யாணம் ஆகி விட்டதால் இருவரும் உடன் தம்பதியாகமல் உடன்படிக்கை
செய்கின்றனர் .இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பராகி
காதலித்து பிறகு தம்பதியாவோம் என்று .ஒப்பந்தப்படி இருவரும் நடந்து கொள்கின்றனர் .இப்படி புரிந்து நடந்தால் நாட்டில் மணவிலக்கு வராது .
படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணவன் மனைவி புரிதல் பற்றி
,விட்டுக் கொடுக்கும் நல்ல குணம் பற்றி கருத்து உள்ளது .இன்றைக்கு பல
தம்பதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தகவல் படத்தில் உள்ளது .பாராட்டுக்கள்
.மனைவியின் ஓவியத்தை காட்சிப் படுத்தி நிதி திரட்டி ,மனைவி ஆசைப்பட்ட கண்
அறகட்டளை தொடங்க உதவுகிறார் கணவன் . ஓவிய கண்காட்சி திறக்க முக்கிய
பிரமுகர்கள் வந்த நேரத்தில் ,என்னவென்று சொல்லாமல் உடன் வா ! என்று
செல்லிடப் பேசியில் அழைக்கிறார் . மனைவி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் வர மறுக்கிறார் .பிறகுதான் தெரிகிறது ஓவிய
கண்காட்சி என்பது இருவருமே கோபப்படாமல் புரிந்து கொள்கின்றனர்
.விருந்துக்கு ஒரு பெரிய உணவகத்தில் முன் பதிவு செய்து விட்டு ,மனைவியை
காரில் அழைத்து செல்கிறார் .மனைவியோ எனக்கு தூக்கம் வருகிறது உணவகத்திற்கு
வரவில்லை என்கிறார் .உணவக வாசல் வரை வந்து விட்டு திரும்ப வீட்டிற்கு
செல்கிறார் .பதிவு செய்து விட்டு வராமல் போனதால் உணவகத்தினர் திட்டுகின்றனர் . மனைவியுடன் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்வார் . தெய்வத்
திருமகள் படத்தில் நன்றாக நடித்த அனுஷ்கா மனைவியாக இந்தப்படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .பொதுவாக கணவன்
எழுதர்ராக இருந்து கொண்டு அலுவலர் என்று போய் சொல்வதுதான் வழக்கம் .ஆனால்
காவல் உயர் அதிகாரியாக இருக்கு விக்ரமை மனைவி காவல் உதவி ஆய்வாளாரா ?
என்றதும் ஆம் என்கிறார் .பிறகுதான் காவல் உயர் அதிகாரி என்பது
மனைவிக்கு தெரிகின்றது .
மனைவிக்கு பியானோ வாசிக்கத் தெரியும் .கணவருக்கு தெரியாது .ஆனால் மனைவிக்காக பியானோ வாசிக்க கற்று ,பியானோ
வாசிப்பில் தேறி விடுகிறார் .
பார்வையற்றோர் ஒலி எழுப்பி அதன் எதிரொலி வைத்து வவ்வால் போல உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் .பார்வையற்றோர் பள்ளியில் பயின்று இந்த ஆற்றலைக்
கற்றுக் கொண்டு விக்ரம் தீவிரவாதிகளை கொலை செய்கிறார் .கடைசி காட்சியில்
துரோகியாக மாறிய காவல்துறை நண்பன் இரைச்சல் ஒலியை மிகைப் படுத்தி வைத்து
விட்டு விக்ரமிற்கு காதில் எதுவும் கேட்க முடியாதபடி செய்து விட்டு ,
பார்வையற்ற விக்ரமை கொடூரமாக தாக்கும் காட்சி
பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகின்றது .நாடகர் விக்ரம்
பார்வையற்றவராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். கடைசியில் விக்ரம் இறந்து
விட்டாரா ? என்று தொட்டுப் பார்க்கும் கையை பிடித்துக் கொண்டு
விக்ரம் தாக்கும் காட்சி அபாரம் .மனதிற்கு பாரம் . படத்தின் பெரும் பகுதி லண்டனில் நடப்பதால் லண்டன் காரர்கள் ஆங்கிலம் பேசுவதால் படம் சில காட்சிகளில் அந்நியப்படுகின்றது. விக்ரம் காயம் பட்டதும் மருத்துவமனைக்கு வந்து அனாதை
விடுதி குழந்தைகள் வந்து பார்க்கும் காட்சி நெகிழ்ச்சி .படத்தில் நடிகர் சந்தானம் கார் ஓட்டுனராக நடித்து
உள்ளார். நகைச் சுவைக் காட்சிகளில் இயக்குனரின் கட்டுப்பாடு உணர
முடிகின்றது .நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து
உள்ளார் .நடிகர் நாசர் இலங்கைத் தமிழ் பேசும் லண்டன் காவல் அதிகாரியாக
நடித்து உள்ளார் .
ஜி .வி .பிரகாசின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று . எமி ஜாக்சன் சமுதாய அக்கறை இல்லாத போது லண்டன் அழகியாக வென்ற போது நீ அழகு இல்லை என்கிறார் .விக்ரம் .பார்வையற்றோர்
துன்பம் உணர எமி ஜாக்சன் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து விழுந்து காயம் ஆன
முகத்தைத் தடவி நீ அழகு என்கிறார் . நெகிழ்ச்சியான காட்சி .சில காட்சிகள் போரடித்தாலும் பல காட்சிகள் மிக நன்றாக உள்ளது.
அனுஷ்காவை மிக ஆபாசமாக காட்டாமல் மிக மேன்மையான, மென்மையான மருத்துவராக காட்டிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் . அரைத்த மாவையே அரைத்த தீவிரவாதி கதை . இந்தக் கதைக்கு என் கதை! உன் கதை !
என்று சண்டை வேறு .பஞ்சாயத்து வேறு ,வழக்கு வேறு .நினைத்தால் சிரிப்பு
வருகிறது .
நடிகர் விக்ரம் மிக நன்றாக நடித்து உள்ளார் .தமிழ்த் திரைப்படத்
துறையினருக்கு ஒரு வேண்டுகோள் .தயவு செய்து தீவிரவாதி கதையை விட்டு
விடுங்கள் .பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது . [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விமர்சன பகிர்விற்கு நன்றி...!
படம் பரவாயில்லை...!
படம் பரவாயில்லை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» சிகரம் தொடு ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நடிப்பு விக்ரம் பிரபு ,சத்தியராஜ் ! இயக்கம் கெளரவ் !
» அப்பா ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பு ,இயக்கம் சமுத்திரக்கனி !
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum