தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிகரம் தொடு ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நடிப்பு விக்ரம் பிரபு ,சத்தியராஜ் ! இயக்கம் கெளரவ் !
Page 1 of 1

சிகரம் தொடு ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நடிப்பு விக்ரம் பிரபு ,சத்தியராஜ் !
இயக்கம் கெளரவ் !
தூங்கா நகரம் என்ற வெற்றிப்படம் தந்த இயக்குனர் கெளரவ் இயக்கிய இரண்டாவது படம் .தூங்கா நகரம் சில விருதுகள் பெற்ற படம். எதிர்ப்பார்போடு சென்று பார்த்தேன் .இயக்குனர் கெளரவ் ஏமாற்றவில்லை .இவர் கே .எஸ் .இரவிக்குமார் ,மகராஜன் போன்ற பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றி திரைப்படம் பற்றிய தொழில் நுட்பம் நன்கு அறிந்து படம் இயக்கி உள்ளார் .இயக்குனரின் கடின உழைப்பை உணர முடிந்தது. காடு , மலை, இயற்கை நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள் .
விக்ரம் பிரபுவிற்கு நான்காவது படமும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது. படத்தின் வெற்றிக்கு திரு சத்தியராஜ் அவர்களும் காரணம் என்றால் மிகை அன்று .படத்தின் பலமாக உள்ள்ளார் .பெரியார் படத்தில் பெரியாராக வாழ்ந்தது போலவே .இந்தப்படத்தில் ஒரு தந்தையாக வாழ்ந்து காட்டி உள்ளார் .மனதில் நிற்கிறார் .
திரு சத்தியராஜ் காவலராக பணி புரிகின்றார் .ஒரு கலவரம் நடக்கின்றது .அவரது நண்பர் காவலரை ரவுடி வெட்ட வரும் போது தடுத்து காப்பாற்றுகின்றார் .அவன் இவரது காலை வெட்டி விடுகிறான் இந்த செய்தி அறிந்த அவர் மனைவி படியில் தவறி விழுந்து இறந்து போகிறார் .தனது ஒரே மகனை பாசமாக வளர்க்கிறார் .ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வருகிறார். மனைவி இறந்ததும் மறுமணம் புரியாமல் மகனை தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்ப்பது சிறப்பு .
கால் வெட்டப்பட்டதால் மாற்றுத் திறனாளியாகி காவலர் வேலையை இழக்கிறார் .மகன் விக்ரம் பிரபுவிற்கு சோக சம்பவங்களால் காவல்துறை மீது வெறுப்பு வருகிறது .
வங்கி அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகிறான் .ஆனால் திரு சத்தியராஜ்க்கு மகன் காவல் ஆய்வாளர் ஆக வேண்டும் என்று விரும்பி அவனை ஆயத்தப்படுத்துகிறார் .வேண்டா வெறுப்பாக பயிற்சியில் இடம் பெறுகிறான் இதற்கு இடையில் காதல் அரும்புகிறது .காதலி காவல் அதிகாரி மகள் .அவளுக்கும் காவல் துறை என்றால் வெறுப்பு .தனது கணவன் வங்கி அதிகாரியாக இருப்பது நலம் வின்று விரும்புகிறாள் .
விக்ரம் பிரபுவிற்கு காவல் ஆய்வாளர் பயிற்சிக்கு ஆணை வருகின்றது .தந்தையின் ஆசைக்கு இணங்க அங்குசென்று நடக்கும் பயிற்சிகளில் வேண்டும் என்றே சொதப்புகின்றான் .இதை அறிந்த காவல் அதிகாரி அழைத்து கண்டித்து புத்தி சொல்கிறார் .முன்பு சத்தியராஜால் காப்பற்றப்பட்ட காவலர்தான் பதிவு உயர்வு பெற்று உயர் அதிகாரியாக இருக்கிறார் .நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே உன் தந்தைதான் என்று விளக்கி தன்னம்பிக்கை தருகிறார். பயிற்சியை முடித்து விட்டு ஒரு மாதம் காவல்துறையில் பணியாற்று பிடிக்கவில்லை என்றால் விளக்கிக் கொள் என்று நிபந்தனை விதிக்கிறார் .ஒரு மாதம் பணியாற்றி விட்டு வெளியேறி விடலாம். என்ற நினைத்து பணி புரிந்து வருகிறான் .
எ .டி.எம் . கொள்ளை வழக்கு காவல் நிலையம் வருகின்றது.
எ .டி.எம். இயந்திரத்தில் பணம் வைத்தல் போன்ற தொழில் நுட்பம் மிக பிரமாண்டமாக படம் பிடித்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் .
வித்தியாசமான கதைக்களம் எடுத்துக்கொண்டு படமாக்கி உள்ளார் . போலி பாஸ்போர்ட் , ரேசன் கார்டு ,பட்டச் சான்றிதழ் தயாரித்து மாட்டிக் கொண்ட செய்தி தினசரி செய்தித் தாளில் படிக்கிறோம். இந்தபடத்தில் எ .டி.எம் .இயந்திரத்தில் கேமிரா பொருத்தி .எ. டி .எம் கார்டை படம் பிடித்து ரகசிய குறியீடு எண்ணையும் படம் பிடித்து, போலி எ .டி. எம் கார்டு செய்து கொள்ளையடிக்கும் திருடர்களை மடக்கி பிடித்து கைது செய்ய உதவுகிறார் மாற்றுத் திறனாளியான சத்தியராஜ் .
எ .டி .எம் . இயந்திரம் காவல் காக்கும் முதியவர்களை கொலை செய்து கொள்ளை அடிக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து வருகின்றது. அதனை கருவாகாக் கொண்டு படம் இயக்கி உள்ளார் .
காவல் நிலைய கைதி அறையில் இருக்கும் போது புகைபிடிக்க தீப்பெட்டி வாங்கி சக கூட்டாளியின் சட்டையில் தீப்பெட்டி குச்சி மருந்துகளை தடவி தீ பிடிக்கச் செய்து காவலரை திறக்க வைத்து கைதிகள் தப்பிக்கின்றனர் .அங்கு வந்த சத்தியராஜ் கொள்ளையர்களுடன் முடிந்தளவு போராடுகின்றார் .அவரை கடுமையாக தாக்கி விட்டு தப்பித்து விடுகின்றனர் .காதலியுடன் திரைப்படம் பார்க்க சென்ற விக்ரம் பிரபுவிற்கு தகவல் வர உடன் வந்து தந்தையை பார்க்கிறார் .கண்ணீர் வடிக்கிறார். கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக இயங்கி பிடிக்கிறார் .இதுதான் கதை .
இயக்குனர் கெளரவ் படத்தை இயக்கியதோடு கொள்ளை யடிக்கும் வில்லனாகவும் திறம்பட நடித்துள்ளார் .ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் பயணிப்பது போல இயக்குனர் , வில்லன் என்ற இரட்டை குதிரையில் திறம்பட பயணித்துள்ளார் .இயக்குனர் கெளரவ் அவர்களின் அப்பா திரு .இருளப்பன் அவர்களும் ஒரு காட்சியில் வந்து கொள்ளை நடக்கின்றது காவல் துறை என்ன செய்கின்றது என்று கேட்கிறார் . வி .என். சிதம்பரம் அவர்கள் துங்கா நகரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் . அவரது மகன் இந்தபடத்தில் வங்கி அதிகாரியாக ஒரு காட்சியில் வருகிறார் .பாடல் , இசை, சண்டைக்காட்சி , ஒளிப்பதிவு யாவும் மிக நன்று .ஈரோடு மகேஷ் விக்ரம் பிரபு நண்பனாக வந்து சிரிப்பு மூட்டி உள்ளார் .
.
திரு .சத்தியராஜ் அவர்களின் நடிப்பு மறக்க முடியாமல் படம் முடிந்து வெளியில் வந்த பின்னும் நினைவில் நிற்கிறார் .இது இயக்குனரின் வெற்றி .கதாநாயகி அழகாக வந்து போகிறார் .இனி வரும் படங்களில் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .இறுதியில் நடக்கும் சண்டைக் காட்சி மிகவும் இருட்டாக இருப்பதால் யார் யாரை அடிக்கிறார் என்பது குழப்பமாக உள்ளது .மலையில் போலி சாமியாரின் முகத் திரை கிழித்து பகுத்தறிவு ஊட்டி உள்ளார்.
கொள்ளையடிக்கு திருடர்கள் அனாதை என்றும், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள் என்று சொல்வது நெருடலாக இருந்தது. ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்பவர்கள் மிக ஒழுக்கமாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்பது என் கருத்து .மற்றபடி படத்தில் குறை எதுவும் இல்லை.
முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி நடராஜ் படத்தில் நடித்து இருப்பது சிறப்பு .காவல்துறை கேமிரா மூலம் சாலைகளை கண்காணிப்பது ,விமான நிலையத்தில் ,விமானத்தில் ,எ .டி.எம் . இயந்திரத்தில் உண்மையிலேயே படபிடிப்பு நடத்தி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் இயக்குனர்.
சிகரம் தோடு என்ற பாடல் கடைசியில் ஒலிக்கின்றது .படம் பிடித்த விதம் காட்டி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .பாராட்டுக்கள். குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .
--

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அப்பா ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பு ,இயக்கம் சமுத்திரக்கனி !
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum