தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவிby eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
+2 கணிதம் திணறல்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
+2 கணிதம் திணறல்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், "சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை சரி வதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணிதம், விலங்கியல் தேர்வுகள், நேற்று நடந்தன. பொறியியல், "சீட்' கிடைக்க, கணிதத்தில் பெறும் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். "கட்-ஆப்' மதிப்பெண்களில், 0.25, 0.5 மதிப்பெண்கள் குறைந்தால் கூட, பல ஆயிரம் மாணவர் களை விட, பின்னுக்கு தள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
மாணவர்கள் அதிர்ச்சி: இதுவரை நடந்த தேர்வுகள், எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் கேள்விகள், கடினமாகவும், எதிர்பார்க்காததாகவும் அமைந்து இருந்ததாக, மாணவ, மாணவியர், அதிர்ச்சியுடன் கூறினர். ஆறு மதிப்பெண் பகுதியில், 12 கேள்விகள் தரப்பட்டு, அதில், 10 கேள்விகளுக்கு, விடை அளிக்க வேண்டும். இதில், 55வது கேள்வி, கட்டாய கேள்வி. இதற்கு, விடை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆறு மதிப்பெண், "கட்' ஆகிவிடும். இந்த கேள்வி, மிக கடினமாக இருந்ததாக, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், 70வது கேள்வி, கட்டாய கேள்வி. இந்த கேள்வி, இதுவரை, கேட்கப்பட்டதே கிடையாது என்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த பகுதியை நடத்துவது கிடையாது என, கணித பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர்.
இது குறித்து, கணித பாட ஆசிரியர்கள் இருவர், மேலும் கூறியதாவது: "வகை நுண்கணிதம் பயன்பாடுகள்' என்ற பாடத்தில் இருந்து தான், ஆறு மதிப்பெண்களுக்கான கட்டாய கேள்வியும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டம்: 10 மதிப்பெண்களுக்கான கேள்வி, முதலில், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பின், பாடத் திட்டங்களை மாற்றி அமைத்தபோது, இந்த பகுதியை சேர்த்துவிட்டனர். பாடத்திட்டம், அறிமுகப் படுத்தப்பட்ட, 2006ல் இருந்து, இந்த கேள்வியை கேட்டதே கிடையாது. இப்போது, திடீரென கேட்டதால், மாணவர்கள் திணறிவிட்டனர். பல மையங்களில், இந்த கேள்விக்கு, மாணவர்கள், விடை எழுதவில்லை
என்பது, உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. ஆறு மதிப்பெண் பகுதியில், இடம்பெற்ற 49, 50வது கேள்விகள் கூட, யாருமே எதிர்பார்க்காதது தான். மொத்தத்தில், 200க்கு 200 எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, கண்டிப்பாக சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாடத்தில், தோல்வி அதிகம் இருக்காது. இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு: கடந்த, 2011ல், 2,720 பேர், கணிதத்தில், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு, 2,656 என, குறைந்தது. 2011ஐ விட, 2012ல், 200க்கு, 200 வாங்கிய மாணவர் எண்ணிக்கை, 64 ஆக குறைந்தது. இந்த ஆண்டு, மேலும் சரியும் அபாயம் எழுந்து உள்ளது. கணிதத்தில், சென்டம் சரிவு ஏற்பட்டால், பொறியியல் கட்-ஆப் மதிப்பெண்கள், கணிசமாக குறையும்.
மாணவர்கள் கண்ணீர்: பல மையங்களில், கணக்கு தேர்வுக்கான வினாத்தாளை படித்து பார்த்த மாணவர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ஆங்கில வழியில் பயின்ற மாணவ, மாணவியரே அதிகம் அதிர்ச்சியடைந்தனர். பல வினாக்கள் கடுமையாக இருந்ததாகவும், கட்டாய பிரிவுகளில் குழப்பமான கேள்விகள் இருந்ததாகவும் மாணவ, மாணவியர் புலம்பினர். கணக்கு வினாத்தாள் கடினமாக இருப்பதாக கூறி, பல தேர்வு மையங்களில், ஆங்கில வழி மாணவியர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கணக்கு வினாத்தாளை பார்த்து, ஒரு மாணவன் தேர்வு எழுதவே மறுத்து, தேர்வு அறையிலிருந்து வெளியேறினார். அவரை ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் சமரசம் செய்து, தேர்வெழுத வைத்தனர். இதற்கு நேர்மாறாக தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவியர், கணக்கு வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், ஏற்கனவே முந்தைய தேர்வுகளில் கேட்கட்டப்படிருந்த கேள்விகள் பல, மீண்டும் கேட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன்
Advertisement
தெரிவித்தனர்.
தற்கொலை முயற்சி: மதுரையில் பிளஸ் 2 தேர்வில், கணக்கு பாடத்தின் கேள்விகள் கடினமாக இருப்பதாக கருதிய, பிளஸ் 2 மாணவர், பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவர், இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று கணக்கு தேர்வு எழுதினார். கேள்விகள் கடினமாக இருப்பதாக கருதினார். தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, சிறுநீர் கழித்து விட்டு வருவதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, வெளியில் சென்றார். பின், பள்ளி மாடிக்கு சென்று, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்தவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் கூறுகையில், "கணக்கு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. பத்து மார்க் கேள்விகளில், இரண்டு மட்டும் தான் எனக்கு தெரியும். மற்ற கேள்விகள் தெரியாது. தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என முடிவு செய்தேன். இதனால், தற்கொலைக்கு முயன்றேன்' என்றார்.
கணித தேர்வில் "பிட்': 43 பேர் "அவுட்!' கணித தேர்வு, கடினமாக இருந்தது என, மாணவர்கள் புலம்பியதற்கு ஏற்ப, 43 மாணவர்கள்,"பிட்' அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, தேர்வு அறைகளில் இருந்து, வெளியேற்றப்பட்டனர்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
தினமலர் வாசகர் கருத்துகள்
Ponn Mano - coimbatore-tamilnadu,இந்தியா
15-மார்-201312:59:12 IST Report Abuse
எப்படியோ +2 எழுதிய 8.5 லட்சம் மாணவர்கள் கண்ணில் கண்ணீர் துளியை வரவழைத்து விட்டார்கள்... என்ன பாவம் செய்தனர் 2013-ல் வெளியேறும் இந்த + 2 மாணவர்கள்... சொல்லுங்கள் பார்க்கலாம்... நாளைக்கு பொறியியல் படிக்க கல்லூரியில் சேர்வதில் இருந்து...வேலை வாய்ப்பு தேடும் வரையிலும் இந்த மதிப்பெண் பட்டியல் தான் அவர்கள் கையில் உள்ள எதிர்காலம் காட்டும் கருவி... தயவு செய்து பாடத்திட்டம் தயாரிக்கும் ஆசிரியர்களும் சரி வினாத்தாள் எடுக்கும் சரி...அவர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் சரி .... கொஞ்சம் மாணவர்களின் எதிர்காலத்தை சிந்தித்து செயல்படுங்கள் என்பதுவே என் விருப்பம்... இது அவர்களின் எதிர்கால வாழ்க்கை பிரச்சனை....என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள் மொத்த மதிப்பெண் 100-க்கு என்றால் ஒரு 50 மதிப்பெண்ணுக்கு சிறிது கடினம் இல்லாமலும்... ஒரு 20 மதிப்பெண்ணுக்கு எளிதாகவும் மீதமுள்ள 30 மதிப்பெண்ணுக்கு யோசித்து எழுதுவது போன்றும் வினாத்தாள் எடுப்பதுதான் நன்று... இது என் தாழ்மையான கருத்து... நான் இப்படித்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை... மனதில் பட்டதை சொல்கிறேன்... தயவு செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடதீர்கள்

arumugam - madurai,இந்தியா
15-மார்-201312:48:01 IST Report Abuse
நாமக்கல் தனியார் பள்ளிகள் யாரையும் சரியா கவனிக்கவில்லை() என்று தெரிகிறது. வினாத்தாள் கடினமாக இருந்தால் தான் மாணவர்களின் உண்மையான தரம் தெரியும். தயாரித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

sitaramenv - hyderabad,இந்தியா
15-மார்-201312:17:18 IST Report Abuse
ஆசிரியர்களைத்தான் குறை கூறவேண்டியதாக உள்ளது. பாட திட்டத்தில் உள்ள அனைத்தையும் கற்பிக்க வேண்டியதுதான் கடமை. மார்க் வாங்குவதற்காக குறிகிய வழிகளில் மாணவர்களை நடத்திசெல்வது தவர். பழைய காலத்தில் காம்போசிட் மற்றும் ஜெனரல் என்று இரு பிரிவுகள் மட்டுமே இருக்கும். ஆசிரியர்கள் மிக ஈடுபாட்டுடன் கற்பித்தார்கள். டியுஷன் வெறிகள் இல்லை. அவர்களிடம் பயின்ற மாணவர்கள் இன்று பலர் உலகளாவிய நிலைகளில் கணிதம் கலந்த பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். ஆகையால் குறை மாணவர்களிடத்தில் இல்லை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
kadavul - nagpur,இந்தியா
15-மார்-201312:09:08 IST Report Abuse
இதே போன்ற பிரச்சனை மகாராஷ்டிராவில் கூட இந்த வருடம் ஏற்பட்டது. இயற்பியல் பாடத்தில் முழுக்க முழுக்க பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் தினறிப்போயினர். மாணவர்கள் பெரும் கூக்குரல் எழுப்பினர். காரணம், இங்கு பெரும்பாலான மாணவர்கள் IIT மற்றும் பல அகில இந்திய தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதால் அந்த பயிற்சி நிறுவனங்களும் மாணவர்களும் அந்த பாட திட்டத்திலேயே கவனம் செலுத்தியதால் ஏற்பட்ட விளைவு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Mullai Periyaar - thekkadi,இந்தியா
15-மார்-201312:04:24 IST Report Abuse
ஆங்கில வழி கணக்கிற்கும் தமிழ் வழி கணக்கிற்கும் வெவேறு விதமான பாடங்கள், மற்றும் கேள்விகள் தான் இருக்கிறது. அதனால் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை போல் இருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
PRAKASH - chennai,இந்தியா
15-மார்-201311:55:54 IST Report Abuse
எப்படி கேட்டா என்ன.. எல்லாம் புக்ல இருந்து தானே வந்துருக்கு அப்புறம் என்ன ???
15-மார்-201311:55:54 IST Report Abuse
எப்படி கேட்டா என்ன.. எல்லாம் புக்ல இருந்து தானே வந்துருக்கு அப்புறம் என்ன ???
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Vamanan Nair - dallas,யூ.எஸ்.ஏ 15-மார்-201313:30:46 IST Report Abuse
சரியாக சொன்னீங்க. புஸ்தகத்துல உள்ள எல்லாத்தையும் படிச்சா ஏன் அழணும்?. எல்லாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினா பரீட்சைக்கு அர்த்தம் இல்லாமலே ஆயிரும். இந்த பரிட்சையிலும் நூறு மார்க்கு பல புத்திசாலிகள் எடுப்பாங்க பாருங்க....
சரியாக சொன்னீங்க. புஸ்தகத்துல உள்ள எல்லாத்தையும் படிச்சா ஏன் அழணும்?. எல்லாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினா பரீட்சைக்கு அர்த்தம் இல்லாமலே ஆயிரும். இந்த பரிட்சையிலும் நூறு மார்க்கு பல புத்திசாலிகள் எடுப்பாங்க பாருங்க....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
karai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மார்-201311:55:35 IST Report Abuse
When i was writing +2 there is something called entrance exam for applying BE and Medical. The beauty is pupil who used to get high marks in +2 exam will get low mark in entrance exam. In the news editor have written that students cried after reading the question paper .. this is too much ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
S Madhavan - chennai,இந்தியா
15-மார்-201311:37:22 IST Report Abuse
// பாடத்திட்டம், அறிமுகப் படுத்தப்பட்ட, 2006ல் இருந்து, இந்த கேள்வியை கேட்டதே கிடையாது. இப்போது, திடீரென கேட்டதால், மாணவர்கள் திணறி விட்டனர். // பாடத்திட்டத்தில் இருந்தால், எந்த வகையிலும் கேள்விகள் கேட்கப் படவேண்டும்.. அப்போது தான் மாணவர்களில் புரிதல் வெளிப்படும். நமது ஒட்டு மொத்த தரவு முறையில் மாற்றம் வர வேண்டும். படிக்கும் செய்திகளை/பாடங்களை சரியாக வாழ்க்கைக்கு உதவுமாறு பயன் படுத்துதல் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். மதிப்பெண்களுக்காக படித்தால் இப்படித்தான் இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
rajaguru - chennai,இந்தியா
15-மார்-201311:24:17 IST Report Abuse
எதிர் காலம் எளிமையானதல்ல. கடினமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருகிறது. தயார் படுத்தி கொள்ளுங்கள் .எதையும் தேவை இல்லை என்று விட்டு விடாதீர்கள். எல்லாம் தேவை படும்.

v.sundaravadivelu - tiruppur,இந்தியா
15-மார்-201310:34:55 IST Report Abuse
கமெண்ட் கொடுப்பது ஈசி மச்சி.. ஆனா, படிச்சிட்டிருக்கிற பிள்ளைங்களுக்குத் தான் அதனோட அவஸ்தை என்னான்னு புரியும்.. கஷ்டப்பட்டு ராப்பகலா டிவி சினிமாவை மறந்து மெனக்கெட்டு படிச்சிட்டுப் போனா , அட்ரஸ் இல்லாத கேள்வியக் கேட்டு கடுப்படிக்கிறாங்கோ.. முந்திப் பிந்தி அந்தக் கேள்வியக் கேட்டாவது வச்சிருக்கணும்.. அல்லது கணக்கு வாத்திங்கலாவது "இந்தக் கேள்வி வரக்கூடிய வாய்ப்பு இருக்கு.. ஜாக்கிரதையா ப்ரிப்பேர் பண்ணி வச்சுக்கங்க" ன்னு ஆவது வார்னிங் கொடுத்திருக்கணும்.. எதுவுமே இல்லாம , நீச்சத் தெரியாத பயல நடுக்கடல்ல புடிச்சு தள்ளி வுட்ட மாதிரி கேள்வி கேட்டாங்கன்னா?.. குவெஸ்டீன் பேப்பர் ரெடி பண்ற மேதாவியை ரவுண்டு கட்டினா எல்லாம் கரெக்டாயிடும் மச்சி.. அதச் செய்யுங்க..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
சூப்பர்ஸ்டார் - delhi,இந்தியா
15-மார்-201310:34:24 IST Report Abuse
இன்னும் எவ்ளோ நாள் தான் அரச்ச மாவயே, அரச்சிட்டு இருப்பீங்க. கண்டிப்பாக இந்த மாதிரி மாற்றம் தேவை. நேரடியாக பதில் அளிக்க முடியாதபடி, சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் வினாக்கள் கண்டிப்பாக அமைய வேண்டும். புரிந்து படித்து இருக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக எளிதாக தான் இருந்து இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Linux - gudal ,இந்தியா
15-மார்-201310:27:46 IST Report Abuse
அக்கறை எடுத்து நல்லா படிக்கிற பசங்க, வாத்தியார் சொல்லிதரலைன்னாலும் படிப்பாங்க. அரகொற கேசுங்க தான் செலக்ட் பண்ணி படிக்கும். கண்டிப்பா இனி மேல இந்த மாதிரிதான் கேள்வித்தாள் தயாரிக்கணும். நல்ல முயற்சி. திருந்துங்கடா... பள்ளிக்கூடம், கல்விய வாரி வழங்கணும், ஆனா நீங்க எங்ககிட்ட இருக்கிறதா வாரிகிட்டு போறீங்களே..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Abilash D Nair - thiruvananthapuram,இந்தியா
15-மார்-201310:17:09 IST Report Abuse
நூற்றுக்கு நூறு எடுத்து என்ன பயன் ...? காசு இருந்தால் மேற் படிப்புக்கு செல்லலாம் ...
15-மார்-201310:17:09 IST Report Abuse
நூற்றுக்கு நூறு எடுத்து என்ன பயன் ...? காசு இருந்தால் மேற் படிப்புக்கு செல்லலாம் ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
BLACK CAT - marthandam.,இந்தியா
15-மார்-201310:10:21 IST Report Abuse
பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதப் பாட வினாத் தாளை தயர் பண்ணுனவர் ஒருவேளை தமிழ் நாட்டு சம்பளம் வாங்கும் மலையாளி யோ .....?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Rangarajan Pg - chennai,இந்தியா
15-மார்-201310:02:48 IST Report Abuse
SURVIVAL OF THE FITTEST என்பதற்கேற்ப இதை போன்ற கடினமான தேர்வுகள் அவ்வபோது வரும் தான். அதற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவனின் கடமை. அதை விட்டு கடினமாக இருக்கிறது, தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் உயிரையே விட துணிவது எந்த விதத்தில் ஏற்று கொள்ள முடியும்? அது எப்படி இந்த பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கபடமாட்டாது என்று ஆசிரியர்களே முடிவெடுத்து அந்த பிரிவை புறக்கணிக்கலாம்?. இது மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகி விடாதா? ஆசிரியர்களாவது சோம்பேறிதனத்தால் மாணவர்கள் எதிர்காலம் பாழாகிறது. இதை போல மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடலாமா? தற்போது மாணவர்கள் எல்லோரும் அதிகமாக மதிப்பெண் எடுக்கிறார்கள். ஏதோ ஒரு பந்தயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஏகப்பட்ட மன உளைச்சலில் இருக்கிறார்கள். இதை நிலைமையை உடனே சரிபடுத்த வேண்டும். நான் போது தேர்வு எழுதிய போது அறுபது சதவிகிதம் எடுத்தாலே பாராட்டுவார்கள். FIRST கிளாசில் பாஸ் செய்திருக்கிறான் என்று பெற்றோர் பூரித்து போவார்கள். ஆனால் தற்போது தொண்ணூறு சதவிகிதம் எடுத்தாலும் போதவில்லை என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சாடுகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Linux - gudal ,இந்தியா
15-மார்-201309:45:31 IST Report Abuse
"எதிர்பார்க்காத கேள்விகள்" அப்படின்னா? "நடத்த படாத பகுதி" வெளங்கிடும்... மார்க், மார்க், மார்க், மார்க், மார்க், மார்க், ன்னு சாவுறானுங்க.... முதல்ல அறிவ வளருங்க, அப்புறம் மார்க் தன்னால வரும். இப்படியே போச்சுன்னா மாணவர்கள் மெசின் மாதிரி ஆகிடுவாங்க. எல்லாத்தையும் படிக்கணும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Anantharaman - chennai,இந்தியா
15-மார்-201308:25:47 IST Report Abuse
வரும் தலைமுறைகள் தோல்வியை தாங்கமுடியாத தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும் இல்லையென்றால் தற்கொலைகள் இன்னும் அதிகரிக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Tamil Madayan - வெத்தலப் பாக்கம் (bethel park),யூ.எஸ்.ஏ
15-மார்-201307:23:31 IST Report Abuse
நான் பழைய படமுறையில் 10 மற்றும் 11 வகுப்புகளில் அல்ஜிப்ரா & ஜியாமெட்ரி தமிழில் படித்தேன். பிறகு பி யு சி யில் கெமிஸ்ட்ரி இயல்பியல் எல்லாம் ஆங்கிலத்தில் படித்தேன். இத்தனை வருடம் ஆங்கிலத்திலேயே பழகிய பிறகு இப்போது ஞானோதயம்: தமிழில் படித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகவே புரிந்திருக்கும் என்பதுதான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Seema - bali,இந்தோனேசியா
15-மார்-201305:46:34 IST Report Abuse
வருடா வருடம் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல ஆனால், அதுவே எழுதப்படாத நடைமுறை ஆகிவிட்டதால் ஆசிரியர்களும் இந்த பகுதியிலிருந்து கேள்விகளே வராது என்று சொல்லித்தராமல் விட்டுவிடுகின்றனர். பாடத்திட்டம் என்பது தேர்வுக்கு மட்டுமானது அல்ல மாணவர்களின் அறிவை விசாலப்படுத்துவது. ஆக, தேர்வில் வரும் கேள்விகளுக்கான பகுதிகளை மட்டும் நடத்தினால், அந்த மாணவன் மற்ற பகுதிகளைக் கற்காமலே வெளியேறுகின்றான். அவனே, மீண்டும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேரும்போது பள்ளிப் பாடத்திட்டத்தில் நடத்தாமலே விட்டுச் சென்ற பாடங்கள் வரும்போது சிரமப்படுகின்றான். ஆக, தேர்வு என்பது இந்த முறை நடந்ததைப் போல வினாக்கள் எந்தப் பகுதியிலிருந்து வரும் என்பதைக் கணிக்க முடியாமல் இருக்க வேண்டும். மேலும் நேரடி வினாக்கள் கூடாது. அப்போதுதான் மாணவர்களின் சிந்திக்கும் திறம் வலுப்பெறும். ஆ'சிறியர்'களும் திருந்துவர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Thangairaja - dammam,சவுதி அரேபியா
15-மார்-201305:04:22 IST Report Abuse
வடிகட்டறாங்க போலிருக்கு......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
Vettri - coimbatore,இந்தியா
15-மார்-201302:33:55 IST Report Abuse
புரிந்து படித்தால் எப்படிப்பட்ட கேள்விக்கும் பதில் அளிக்க முடியும். கணக்கை கூட மனப்பாடம் செய்தால் அழுகை தான் வரும். இது மாணவர்களின் தவறல்ல. பணத்தை வாங்கி கொண்டு எப்படியாவது மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்று செயல் படும் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளின் தவறே.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
15-மார்-201301:13:14 IST Report Abuse
ஆங்கில வழி, தமிழ் வழிக்கு ஒரே கேள்வித் தாள்தானே? அப்புறம் எப்படி இருவேறு கருத்துகள் இருக்க முடியும்? தவிர, பாடத் திட்டத்துக்கு வெளியே கேள்வி கேட்டால்தான் தவறு.......பாடம் நடத்தாதது ஆசிரியர்கள் தவறு......கடந்த ஆண்டுகளில் கேட்கப்படாத கேள்விகள் இந்த ஆண்டு வரக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லையே......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: +2 கணிதம் திணறல்
arnie - bangalore,இந்தியா 15-மார்-201311:14:03 IST Report Abuse
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. பழைய கேள்வித்தாள்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடங்களையும் வினாக்களையும் வைத்தே பாடங்கள் தேர்வு செய்யப்படுவது காலம் காலமாக நடக்கும் கலாச்சாரம்தானே. இந்த மாதிரி பாடம் படிப்பதற்கு பதில் மாணவர்கள் சும்மாவே இருந்து விடலாம். இவர்களின் யோசனை திறன் கண்டிப்பாக பாதிக்கப்பட்டு விடும் இந்த மாதிரி பாடம் நடத்தும் முறையினால்....
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. பழைய கேள்வித்தாள்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடங்களையும் வினாக்களையும் வைத்தே பாடங்கள் தேர்வு செய்யப்படுவது காலம் காலமாக நடக்கும் கலாச்சாரம்தானே. இந்த மாதிரி பாடம் படிப்பதற்கு பதில் மாணவர்கள் சும்மாவே இருந்து விடலாம். இவர்களின் யோசனை திறன் கண்டிப்பாக பாதிக்கப்பட்டு விடும் இந்த மாதிரி பாடம் நடத்தும் முறையினால்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2

» திணறல்
» போலீசார் திணறல்!!!
» காதல் கணிதம்
» எண்ணற்ற கணிதம்
» ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
» போலீசார் திணறல்!!!
» காதல் கணிதம்
» எண்ணற்ற கணிதம்
» ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|