தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



+2 கணிதம் திணறல்

Page 2 of 2 Previous  1, 2

Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 4:32 pm

First topic message reminder :

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், "சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை சரி வதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணிதம், விலங்கியல் தேர்வுகள், நேற்று நடந்தன. பொறியியல், "சீட்' கிடைக்க, கணிதத்தில் பெறும் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். "கட்-ஆப்' மதிப்பெண்களில், 0.25, 0.5 மதிப்பெண்கள் குறைந்தால் கூட, பல ஆயிரம் மாணவர் களை விட, பின்னுக்கு தள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

மாணவர்கள் அதிர்ச்சி: இதுவரை நடந்த தேர்வுகள், எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் கேள்விகள், கடினமாகவும், எதிர்பார்க்காததாகவும் அமைந்து இருந்ததாக, மாணவ, மாணவியர், அதிர்ச்சியுடன் கூறினர். ஆறு மதிப்பெண் பகுதியில், 12 கேள்விகள் தரப்பட்டு, அதில், 10 கேள்விகளுக்கு, விடை அளிக்க வேண்டும். இதில், 55வது கேள்வி, கட்டாய கேள்வி. இதற்கு, விடை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆறு மதிப்பெண், "கட்' ஆகிவிடும். இந்த கேள்வி, மிக கடினமாக இருந்ததாக, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், 70வது கேள்வி, கட்டாய கேள்வி. இந்த கேள்வி, இதுவரை, கேட்கப்பட்டதே கிடையாது என்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த பகுதியை நடத்துவது கிடையாது என, கணித பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர்.

இது குறித்து, கணித பாட ஆசிரியர்கள் இருவர், மேலும் கூறியதாவது: "வகை நுண்கணிதம் பயன்பாடுகள்' என்ற பாடத்தில் இருந்து தான், ஆறு மதிப்பெண்களுக்கான கட்டாய கேள்வியும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்: 10 மதிப்பெண்களுக்கான கேள்வி, முதலில், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பின், பாடத் திட்டங்களை மாற்றி அமைத்தபோது, இந்த பகுதியை சேர்த்துவிட்டனர். பாடத்திட்டம், அறிமுகப் படுத்தப்பட்ட, 2006ல் இருந்து, இந்த கேள்வியை கேட்டதே கிடையாது. இப்போது, திடீரென கேட்டதால், மாணவர்கள் திணறிவிட்டனர். பல மையங்களில், இந்த கேள்விக்கு, மாணவர்கள், விடை எழுதவில்லை
என்பது, உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. ஆறு மதிப்பெண் பகுதியில், இடம்பெற்ற 49, 50வது கேள்விகள் கூட, யாருமே எதிர்பார்க்காதது தான். மொத்தத்தில், 200க்கு 200 எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, கண்டிப்பாக சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாடத்தில், தோல்வி அதிகம் இருக்காது. இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு: கடந்த, 2011ல், 2,720 பேர், கணிதத்தில், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு, 2,656 என, குறைந்தது. 2011ஐ விட, 2012ல், 200க்கு, 200 வாங்கிய மாணவர் எண்ணிக்கை, 64 ஆக குறைந்தது. இந்த ஆண்டு, மேலும் சரியும் அபாயம் எழுந்து உள்ளது. கணிதத்தில், சென்டம் சரிவு ஏற்பட்டால், பொறியியல் கட்-ஆப் மதிப்பெண்கள், கணிசமாக குறையும்.

மாணவர்கள் கண்ணீர்: பல மையங்களில், கணக்கு தேர்வுக்கான வினாத்தாளை படித்து பார்த்த மாணவர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ஆங்கில வழியில் பயின்ற மாணவ, மாணவியரே அதிகம் அதிர்ச்சியடைந்தனர். பல வினாக்கள் கடுமையாக இருந்ததாகவும், கட்டாய பிரிவுகளில் குழப்பமான கேள்விகள் இருந்ததாகவும் மாணவ, மாணவியர் புலம்பினர். கணக்கு வினாத்தாள் கடினமாக இருப்பதாக கூறி, பல தேர்வு மையங்களில், ஆங்கில வழி மாணவியர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கணக்கு வினாத்தாளை பார்த்து, ஒரு மாணவன் தேர்வு எழுதவே மறுத்து, தேர்வு அறையிலிருந்து வெளியேறினார். அவரை ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் சமரசம் செய்து, தேர்வெழுத வைத்தனர். இதற்கு நேர்மாறாக தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவியர், கணக்கு வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், ஏற்கனவே முந்தைய தேர்வுகளில் கேட்கட்டப்படிருந்த கேள்விகள் பல, மீண்டும் கேட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன்

Advertisement
தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி: மதுரையில் பிளஸ் 2 தேர்வில், கணக்கு பாடத்தின் கேள்விகள் கடினமாக இருப்பதாக கருதிய, பிளஸ் 2 மாணவர், பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவர், இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று கணக்கு தேர்வு எழுதினார். கேள்விகள் கடினமாக இருப்பதாக கருதினார். தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, சிறுநீர் கழித்து விட்டு வருவதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, வெளியில் சென்றார். பின், பள்ளி மாடிக்கு சென்று, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்தவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் கூறுகையில், "கணக்கு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. பத்து மார்க் கேள்விகளில், இரண்டு மட்டும் தான் எனக்கு தெரியும். மற்ற கேள்விகள் தெரியாது. தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என முடிவு செய்தேன். இதனால், தற்கொலைக்கு முயன்றேன்' என்றார்.

கணித தேர்வில் "பிட்': 43 பேர் "அவுட்!' கணித தேர்வு, கடினமாக இருந்தது என, மாணவர்கள் புலம்பியதற்கு ஏற்ப, 43 மாணவர்கள்,"பிட்' அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, தேர்வு அறைகளில் இருந்து, வெளியேற்றப்பட்டனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 3:59 am

naagai jagathratchagan - nagapattinam ,இந்தியா
16-மார்-201315:57:21 IST Report Abuse
மனப்பாடம் பண்ணி வாந்தி எடுப்பது மட்டுமே பள்ளிகளில் தற்போது சொல்லிக்கொடுக்கும் முறை ...இதை யார் சரியாக செய்கிறார்களோ அவர்களே அதிக மதிப்பெண் வாங்கமுடிகிறது ....இதையே தங்கள் பள்ளிகளில் கடைப்பிடித்து கல்வி நிறுவனம் வியாபரத்தை விருத்தி செய்கிறது ...இவ்வாறான மாணவர்களுக்கு சுய சிந்தனை இல்லாமல் போகிறது ...சுயமாக சிந்தித்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளும் கல்வி அமைய முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:00 am


Hari - tnj,இந்தியா
16-மார்-201309:19:26 IST Report Abuse
கணிதத்தை மனப்பாடம் செய்து படித்து 200 வாங்கும் மாணவர்கள் உயர் வகுப்புகளில் தேர்ச்சி கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் வெறும் மதிப்பெண்களுக்காக படிக்காமல் இது தான் அடிப்படை என்று புரிந்து படிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:00 am


Ravikumar S - ambur,இந்தியா
16-மார்-201305:59:05 IST Report Abuse
மிக மிக உண்மையான விஷயம் தேர்ச்சி விழுக்காடு மட்டுமே ஒரு பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும் என நினைக்கும் பெற்றோர்களுக்கு சரியான பாடம். தேர்ச்சி விழுக்காட்டை மட்டுமே எதிர்பார்க்கும் கல்வித்துறைக்கு ஏற்ப செயல்பட்ட ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி. தேர்ச்சி விழுக்காட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆசிரியர்களும், பள்ளிகளும் தரமான மாணவர்களை உருவாக்குவதில்லை. இவ்வாறு பல வருடங்களாக நடைபெற்று வருவதன் விளைவு தான் சமீபத்திய அண்ணா பல்கலைகழக மாணவர்களின் தேர்ச்சி குறைவுக்குக் காரணம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர பிளஸ் டு மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படை என்பதால், அதிக மதிப்பெண்கள் பெற எங்களிடம் வாருங்கள் என கடை விரிக்கும் க்ல்வி வியாபார நிறுவனங்கள், அவர்களிடம் ஏமாறும் பெற்றோர்கள், பகடைக் காய்களாகவும், ரோபோக்களாகவும் மாறும் மாணவர்கள் என பலரும் சேர்ந்து சமூக வியாதியை உருவாக்கி வருகிறார்கள். இதைத் திருத்த யார் வருவார்களோ? எப்போது வருவார்களோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:28 pm

"பல, பெரிய தனியார் பள்ளிகள், மறைமுகமாக, குண்டர் படையை வைத்திருக்கின்றன. இது போன்ற பள்ளிகளில், கடும் கண்காணிப்பை மேற்கொண்டால், தேர்வுக்குப் பின், சம்பந்தபட்ட அதிகாரிகளை தாக்குவர். இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன' என, கல்வித் துறை அதிகாரி ஒருவர், அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், கடுமையான போட்டி இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும், பெரிய பள்ளிகள் வரிசையில், 100 பள்ளிகள் வரை இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பள்ளிகளுக்கிடையே, அதிக மாணவர்களை இழுப்பதில், கடும் போட்டி நிலவுகிறது. இது போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிக்கின்றனர். இதனால், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், "சீட்' கிடைத்து விடுகிறது. இந்த விளம்பரத்தை வைத்தே, பெரிய பள்ளிகள், மாணவ, மாணவியரை இழுக்கின்றன.

நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள, முன்னணி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே, பொறியியல், மருத்துவப் படிப்புகளில் இடம் பிடிப்பதால், இது போன்ற பள்ளிகளில், பிள்ளைகளைச் சேர்க்க, பெற்றோர் முட்டி மோதுகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, விடுதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை, மேற்கண்ட தனியார் பள்ளிகள், கட்டணம்

வசூலிக்கின்றன. பொதுத் தேர்வில், முக்கிய பாடங்களில், 200க்கு 200 பெற வேண்டும் என்பதில், தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டுகின்றன. இதனால், பள்ளிகளுக்கிடையே, பலத்த போட்டி எழுந்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டையாக யாராவது நின்றால், அவர்களை, "சரி கட்டும்' வேலைகளும், ஜரூராக நடப்பதாக, கல்வித் துறையில் கூறப்படுகிறது. நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு தராத பறக்கும் படை அதிகாரிகளை, தேர்வுக்குப் பின், அடியாட்கள் கும்பலை வைத்து, தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என, கல்வித் துறை அதிகாரி ஒருவர், அதிர்ச்சியுடன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: தனியார்

பள்ளிகளுக்கிடையே, கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்வில், மாணவர்கள் மதிப்பெண் களை குவிக்க வேண்டும் என்பது மட்டுமே, நிர்வாகத்தினரின் நோக்கமாக உள்ளது. இதற்காக, எந்த நிலைக்கும் செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த எனக்கு தெரிந்த நண்பரின் மகனை, சரியாக படிக்கவில்லை எனக் கூறி, கடுமையாக தாக்கியதில், அவனது கால்கள் முறிந்தன. பறக்கும் படை அதிகாரிகள், பெரிய தனியார் பள்ளி களில், கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டால், தேர்வுக்குப் பின், தாக்குதல் நடத்துகிற சம்பவங்களும் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தேர்வு மையத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்திய ஒரு ஆசிரியரை, ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. சில தனியார்

Advertisement
பள்ளிகள், மறைமுகமாக குண்டர் படைகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவை எல்லாம், வெளியில் தெரியாது. பல பள்ளிகளை, அரசியல்வாதிகளோ அல்லது அவர்களது பினாமிகளோ தான் நடத்துகின்றனர். இதுபோன்ற பள்ளிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால், அதிகாரிகள் நிலைமை என்ன ஆகும் என்பதற்கும், பல சம்பவங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.

முன்னாள் மந்திரி ஒருவர், பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறார். அவர் நடத்தும், ஒரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும், "காப்பி' நடக்கிறது என்று வந்த தகவலை அடுத்து, நேர்மைக்கு பெயர் பெற்ற ஒரு உயர் அதிகாரியின் மேற்பார்வையில், சிறப்பு பறக்கும் படை குழு, சம்பந்தபட்ட பள்ளியில், தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. இதன் காரணமாக, பிளஸ் 2 கணிதப் பாடத்தில், அந்த பள்ளியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், தோல்வி அடைந்தனர். இதனால், பறக்கும் படை குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் பலரும், தென் மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். குழுவிற்கு தலைமை ஏற்ற, அந்த அதிகாரிக்கு, ஓய்வு பெறும் வரை, நல்ல பதவி கிடைக்கவே இல்லை. இது போன்ற நிலைமையில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான், தேர்வை கண்காணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி, வேதனையுடன் தெரிவித்தார்.

- நமது நிருபர் - தினமலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:28 pm

mvv - kandahar,ஆப்கானிஸ்தான்
18-மார்-201300:04:06 IST Report Abuse
இன்னும் 5-ல் இருந்து 10 வருடங்களுக்குள் 500/500, 1200/1200 வாங்கும் மாணவர்கள் பள்ளிக்கு பத்து பேராவது இருப்பார்கள். 200, 300 மாநில முதல் மாணவர்கள் இருப்பார்கள். உலகத்திலேயே கல்வியில் கரை கண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கப் போகிறது. அதற்குள் இங்கிருந்து தப்பித்து ஓடிவிடுபவர்கள் புண்ணியசாலிகள். நீயா நானாவில் educational mafia என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திருடர் கூட்டம் இப்போது என்ன சொல்லப்போகிறது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:29 pm


Karthick - bangalore ,இந்தியா
17-மார்-201316:33:53 IST Report Abuse
திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பெற்றோகளையும் சேர்த்துதான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:29 pm


vasan - doha,கத்தார்
17-மார்-201314:00:40 IST Report Abuse
மக்களும் திருந்த மாட்டார்கள்.......அரசியல் வாதிகளும் திருந்த மாட்டார்கள் அதனால் தான் படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றி தெரியும் இளைஞ்சர்கள் கூடம் பெருகி வருகிறது.........சர்வதேச அளவில் நம் கல்வியின் மதிப்பு குறைகிறது......வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்கள் இ உருவாக்கி வருகிறோம்...............குறைந்த பட்ச சிந்தனை திறன் கூட கிடையாது......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:29 pm

Shankar G - kuwait,குவைத்
17-மார்-201313:56:47 IST Report Abuse
இதுக்கலாம் மாணவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள் ஏன்? உங்கள் படிப்புதான் உங்கள் எதிர்காலம்.இதுவும் தமிழ் நட்டு முக்கிய பிரச்சனை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:30 pm


g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201313:41:43 IST Report Abuse
கல்வியை நாசமாக்கி விட்டார்கள் படு பாவிகள் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:30 pm


Karuppiah - dammam,சவுதி அரேபியா
17-மார்-201312:22:01 IST Report Abuse
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கினால் தான் இதற்க்கு விமோசனம் கிடைக்கும், அரசு இதை செய்யுமா? இல்லை செய்ய விடுவார்களா? காலம் பதில் சொல்லும் வரை காத்திர்ப்போம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:30 pm


நரேந்திரன் - குட்டி ஜப்பான் ,இந்தியா
17-மார்-201311:19:40 IST Report Abuse
காமராஜர் இப்போது இருந்திருந்தால் குண்டர்கள் போன்றவர்கள் இருக்க மாட்டார்கள் ...கல்வி இன்று தனியார்மயம் மாயம் ஆனதால் தான் இந்த பிரச்சனை ???/ சுய நலமான , மனிதநேயமற்ற, பணம் ஒன்றே மட்டுமே தம் குறிக்கோளாக கொண்ட செல்வந்தர்கள் நாட்டில் பெருகிவிட்டார்கள் ....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:30 pm


Tamilan - chennai,இந்தியா
17-மார்-201310:03:06 IST Report Abuse
திருசெங்கோடு VVHSS ஸ்கூல் போய் பாருங்க................ நீங்க சொலுறது அதனையும் நடக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:31 pm

Varanavasi Rajamanickkam - erode,இந்தியா 17-மார்-201311:00:46 IST Report Abuse
உண்மை இது மிகவும் உண்மை ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:31 pm


Packirisamy Subramaniam - doha,கத்தார்
17-மார்-201309:28:20 IST Report Abuse
கல்வி வியாபாரமாக வேறு என்ன சாட்சி வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:31 pm

venkat - ngr,இந்தியா
17-மார்-201308:41:57 IST Report Abuse
தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிப்பு இலக்கு சில சமயம் பள்ளிகள் தேவை பட்டால் குண்டர் வைத்து மிரட்டுகிறார்கள், செய்வேன் என்று மிரட்டி இருக்கிறார்கள்,உண்மையே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:32 pm


Srinath - new york city,யூ.எஸ்.ஏ
17-மார்-201308:33:41 IST Report Abuse
கல்வி மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுத் தந்து ஒரு சமுதாயத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய கல்விச் சாலைகளே ஒழுக்கம் கேட்டு, பேராசை பிடித்து அலையும் அவலம் இந்தியாவில் மட்டுமே காணக்கூடியது. இந்தக் கூட்டங்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு ஒரு சங்கத்தையும் அமைத்துக் கொண்டு ரவுடித் தனம் செய்து வருவது இந்தியர்கள் அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. வெட்கங்கெட்ட இந்தக் கூட்டத்துக்கு மலத்தின் மீது கரன்சி கிடந்தாலும், நாக்கால் நக்கி எடுத்துக் கொள்ளும் போலும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:32 pm


K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா
17-மார்-201308:23:19 IST Report Abuse
உண்மை..அரசியல் வியாதிகளின் பிடியில் கல்விக்கூடங்கள்..எப்புடி உருப்படும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 18, 2013 9:32 pm


Venkatesh - singapore,சிங்கப்பூர்
17-மார்-201307:35:33 IST Report Abuse
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதினால் தானே இது போன்ற தொல்லைகள் ஏற்படும்? ஒரு மாவட்டத்துக்குள் உள்ள பல தேர்வு மைய்யங்கள்ளுக்கு பிரித்து அனுப்பினால் இதனை குறைக்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

+2 கணிதம் திணறல் - Page 2 Empty Re: +2 கணிதம் திணறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum