தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Tue Feb 23, 2021 10:55 am

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm

» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm

» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm

» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm

» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm

» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழ் அகராதி

Page 36 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36

Go down

தமிழ் அகராதி - Page 36 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:25 pm

உய்வனவு - ஈடேற்றம் : சீவனம் : தழைவு : வாழ்வு.
உய்விடம் - உயிர் கொண்டுபிழைப்பதோரிடம்.
உய்வித்தல் - உய்யச் செய்தல் : ஈடேற்றுதல் : பிழைப்பித்தல்.
உய்வை - காடு.
உரகடல் - கொந்தளிக்குங் கடல்.


உரகம், உரகதம் - பாம்பு.
உரககேது - துரியோதனன்.
உரகம் - நாகமல்லிகை : பாம்பு : உரங்கம் : உரகதம்.
உரகவல்லி - வெற்றிலைக் கொடி.
உரங்கர், உரங்கமம் - பாம்பு.


உரகாதிபன், உரகேந்திரன் - ஆதி சேடன்.
உரகாரி - கருடன் : மயில்.
உரங்காட்டல் - அன்பு பாராட்டல் : வலிகாட்டல்.
உரங்கொள்ளல் - கடினமுறல் : பலங் கொள்ளல் : வலியுண்டாகுதல் : உக்கிரமாதல் : கெட்டியாதல்.
உரசிதம், உரசிருகம் - மார்பிலுள்ளது : முலை : தனம் : கொங்கை : பயோதரம் : இயம் : கொம்மை : மார்பு.


உரசுதல் - உரிஞ்சல் : உராய்தல்.
உரஞ்சுதவ் - தேய்த்தல்.
உரணம் - ஆட்டுக்கடா : முகில்.
உரண்டம், உரண்டை - காக்கை கரடம் : அரட்டம் : கரும்பிள்ளை : கொடி : வாயசம்.
உரத்தல் - இறுகுதல் : முருடாதல் : வலுத்தல் : கொந்தளித்தல் : மிகுதல்.


உரந்தை - துன்பம் : இன்னல் : வருத்தம் : வலி.
உரப்பம் - பெருங்காயம்.
உரப்பல் - அடரொலி : திரட்டோசை.
உரப்பியடித்தல் - பேச்சால் வெல்லுதல்.
உரப்பிரம் - வெள்ளாடு.


உரப்புதல் - அதட்டுதல் : திரண்டொலித்தல் : அச்சுறுத்தல்.
உரமுண்டாக்கல் - வலிவுண்டாக்கல்.
உரம்புகுதல் - விசையொடு புகுதல்.
உரம் விழுதல் - குழந்தைகளுக்குச் சுளுக்குண்டாதல்.
உரலடி - யானை.


உரலாணி - உலக்கை : உரலின் அடிக்கிடும் மரத்துண்டு.
உரவக்காடு - மலைப்பயிர்.
உரவம் - வலிமை : அறிவு.
உரவன் - அருகில் அறிவுடையோன் : பலமுடையவன்.
உரவுதல் - பலனுறுதல் : உலாவுதல் : வலியுறுத்தல்.


உரவுநீர் - உப்பு நீர் : கடல் : யாறு.
உரவோர் - அறிஞர் : முனிவர்.
உரறல் - இடித்தல் : பெருஞ்சினங் கொள்ளல் : மிக மூர்க்கங் கொள்ளுதல் : முழங்குதல்.
உரறு - ஒலி : முழங்கு.
உரறுதல் - உரறல்.


உரற்களம் - அறிஞரவை.
உரற்றல் - ஒலித்தல் : பேரொலி.
உரற்றுதல் - முழுங்குதல் : உரற்றல்.
உரனர் - மனவலியுடையோர்.
உராய்தல் - உரிஞ்சுதல் : பெயர்தல்.


உராய்போதல் - உரைதல்.
உரால் - ஓடுகை : உலாவுதல்.
உராவல் - உலாவல்.
உராவுதல் - பரத்தல் : பெயர்தல் : செல்லுதல் : வலியடைதல்.
உரிசை - தீஞ்சுவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:25 pm

உரிஞதல் - உரிஞ்சுதல்.  
உரிஞ்சுதல் - தேய்த்தல் : வற்றச் செய்தல் : உராய்தல் : பூசுதல்.
உரிதல் - சுழலுதல் : கலைதல் : முளைத்தல் : சீலையைக் களைதல்.
உரித்தல் - கழற்றுதல்.
உரித்தாளி - உரித்தானவன் : சொத்துக்குரியவன்.


உரித்திரம் - மரமஞ்சள் : மஞ்சள்.
உரித்து வைத்தல் - வெளிப்படுத்தி வைத்தல் : நேரொப்பாதல்.
உரிப்பொருட்டலைவன் - கிளவித் தலைவன்.
உரிமைக்கட்டு - இனக்கட்டுப்பாடு.
உரிமைசெப்புதல் - மணம் பேசுதல்.


உரிமைப்பள்ளி - அந்தப்புரம்.
உரிமைப்பாடு - உரித்து : உரிய கடமை.
உரிமைப்பிள்ளை - சுவீகார புத்திரன்.
உரிமையிடம் - வீட்டில் மகளிர் உறையுமிடம்.
உரியர் - உரியவர்.


உரியவன் - கணவன் : தக்கவன் : தாயத்தான்.
உரியள் - உரிமையானவள்.
உரியார் - அறிவுடையார் : தாயத்தார் : உரிய மாட்டார் : தோல் விற்பவர்.
உரியியற் சொல் - இயற்சொல்லாய் வரும் உரிச்சொல்.
உரியோன் - உரியன்.


உரிஇ - உருவி.
உருகம் - பிறப்பு : தோற்றம்.
உருகுதல் - மனங்கரைதல் : இளகுதல் : ஒழுகுதல் : மெலிதல் : உருகல்.
உருகை - புல்லூரி : அறுகம்புல்.
உருக்காங்கல் - உருகிப் போன செங்கல்.


உருக்குதல் - இளகி விழச் செய்தல் : மன நெகிழ்த்துதல் : மெலியச் செய்தல் : 
அழித்தல் : வருத்துதல்.
உருக்குத் தட்டார் - பொற்கொல்லர்.
உருக்குத்துதல் - அம்மை குத்துதல்.
உருக்குமம் - பொன்.
உருக்குருக்கு - கற்பூரம்.


உருக்குலைதல் - முன்னுருவம் மாறுதல்.
உருங்குதல் - உண்ணுதல் : மெலிதல்.
உருசி - சுவை : இன்சுவை.
உருசிகாட்டல் - இனிப்புக் காட்டல்.
உருசு - அத்தாட்சி.


உருடி - முனி.
உருடை - வண்டி.
உருட்டல், உருட்டுதல் - உருளச் செய்தல் : வருத்துதல் : வெல்லுதல் : மருட்டுதல் : இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று : உருண்டை செய்தல் : கவறெறிதல் : தருக்கம் பேசிப் பிதற்றல் : புரட்டித் தள்ளல் : மத்தளத்தை விரைவாக அடித்தல்.
உருட்டிப்பார்த்தல் - சினத்துடன் பார்த்தல்.
உருட்டிப் போடுதல் - பேச்சால் மருட்டி வெல்லுதல் : அழித்து விடுதல்.


உருட்டுப்புரட்டு - வஞ்சகச் செயல்.
உருண்டுபோதல் - சாதல்.
உருத்தரித்தல் - வடிவங்கொள்ளல்.
உருத்தல் - கடுஞ்சினங் கொள்ளுதல் : வெப்பமுறச் செய்தல் : அழலுதல் : முதிர்தல் : ஒத்தல் : தோன்றுதல் : நினைத்தல் : அரத்தல்.
உருத்திதம் - அழுகை : உரிய பொருள் : தொழிலின் இலாபம் : வளர்ச்சி : முன்னேற்றம்.


உருத்திரகணம் - சிவகணம் : சிவனடியார்.
உருத்திரகணிகை - தேவடியாள் : சிவன் கோயில் தாசி.
உருத்திரகன்னியர் - உருத்திர கணத்தைச் சேர்ந்த மகளிர்.
உருத்திரசடை - திருநீற்றுப் பச்சை.
உருத்திரசாதனம் - உருத்திராக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:26 pm

உருத்திரபஞ்சமம் - ஒரு பண்.
உருத்திரம் - பெருஞ்சினம் : அச்சுறுத்தல் : ஒருமறை : சுவையலங்கார வகைகளுள் ஒன்று : மஞ்சள்.
உருத்திரரோகம் - மாரடைப்பு.
உருத்திராகாரம் - பெருஞ்சினத்தோற்றம்.
உருத்திராணி - சத்தமாதரில் ஒருத்தி : உருத்திரை : சங்கரி : பரமேசுவரி.


உருத்திரி - ஒரு வீணை : பரமேசுவரி : பார்வதி : வடிவம் வேறுபாடு என்னும் ஏவல்.
உருத்திரிதல் - மாறுகோலங் கொள்ளல்.
உருபகதீவகம் - ஓர் அணி.
உருபு - உருவம் : வேற்றுமையுருபு முதலிய இடைச்சொல் : நிறம் : வடிவம்.
உருபுகம் - ஆமணக்கு.


உருபுத்தொகை - வேற்றுமையுருபுகள் தொக்கு நிற்றல்.
உருபு புணர்ச்சி - வேற்றுமையுருபுகள் புணர்ந்து நிற்பது.
உருபு மயக்கம் - ஒரு வேற்றுமையுருபு தன் பொருள் கொடாது வேறு உருபின் பொருளைத் தந்து நிற்றல்.
உருப்படல் - உருவமாதல் : சீர்படல்.
உருப்படியாதல் - உருவாதல்.


உருப்படுதல் - சீர்ப்படுதல் : உருவாதல் : உருவேறல் : சந்நதங் கொள்ளல்.
உருப்படுத்தல் - உருவாக்கல்.
உருப்பம் - வெப்பம் : சினம்.
உருப்பிடித்தல் - படம் பிடித்தல்.
உருப்பு - நிறைவு : மிகுதி : வெப்பம் : சினம் : கொடுமை.


உருமகாலம் - கோடைக்காலம்.
உருமணி - கருவிழி.
உருமம் - நடுப்பகல் : வெப்பம்.
உருமவிடுதி - நண்பகலில் நிறுத்துதல்.
உருமாறுதல் - கோலம்மாறுதல் : உடல்வேறுபடுதல் : வேற்றுருக் கொள்ளல்.


உருமித்தல் - வெப்பங்கொள்ளல்.
உருமிளை - நமன்மனைவி.
உருமுக்குரல் - இடியோசை.
உருமுதல் - கர்ச்சித்தல் : முறுமுறுத்தல்.
உருமுத்துவசன் - இந்திரன்.


உருமேனி - மெய், வாய், கண், மூக்குச் செவி என்னும் இவற்றையுடைய வடிவம்.
உருமை - சிக்கிரீவனுடைய மனைவி : உப்பு விளையும் பூமி.
உரும் - அச்சம் : இடி.
உரும்பரம் - பாம்பு : செப்பு : பெருங்காயம்.
உரும்பு - கொடுமை : கொதிப்பு.


உருவங்காட்டி - கண்ணாடி.
உருவசாத்திரம் - உறுப்பமைதி நூல் : அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று.
உருவரை - செழிப்புள்ள நிலம்.
உருவாணி - அச்சாணி : தேய்ந்து போனது : மெலிந்தவுடல்.
உருவாதல் - வடிவுறுதல் : சீர்ப்படுதல்.


உருவாரச்சம்மட்டி - வீழி.
உருவாரு - வெள்ளரிக் கொடி.
உருவாளர் - உருவம் உடையவர்.
உருவி - செம்முள்ளி : நாயுருவி : புல்லுருவி : முள்ளி : ரூபி : உருவுடையவள் : 
உருவுடையது : அழகி : உறைகழித்து : தடவி : அவிழ்த்து : ஏங்கி.
உருவியழுதல் - விம்மியழுதல்.


உருவிலாளன், உருவிலாளி, உருவிலி - காமன்.
உருவிழுத்தல் - வடிவமிழத்தல்.
உருவினகோலம் - கதியற்ற நிலைமை.
உருவுதடம் - சுருக்குக் கயிறு.
உருவுதல் - உறைகழித்தல் : தடவி : விடுதல் : ஊடுருவுதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:27 pm

உருவெளி,உருவெளிக்கட்சி, உருவெளித் தோற்றம்,உருவெளிப்பாடு - இடைவிடா நினைப்பினால் எதிரில் உள்ளது போல் தோன்றும் போலித் தோற்றம்.
உருவேறல் - தெய்வ ஆவேசம் ஏறல் : மந்திர எண்ணிக்கை மிகுதிப்படல்.
உருவை - சூரைச் செடி : முள்ளிப் பூண்டு.
உருவொளி - கண்ணாடி முதலியவற்றில் காணப்பெறும் நிழல்.
உருளரிசி - கொத்துமல்லி.


உருளல் - உருளுதல்.
உருளாயம் - சூதாட்டம் : சூதாட்ட ஆதாயம் : உருள்கவறு : உருளுங்கவற்றின் கட்டப்பட்ட வரவு.
உருளிப்பெயர்வு - எலும்புப் புரட்சி.
உருளிபேர்தல் - பொருத்து விலகுதல்.
உருளுதல் - அழிதல் : உருண்டையாகத் திரளுதல் : கீழ்மேலாக வருதல்.


உருளைக்காந்தம் - ஒருவகைக் கல்.
உருள் - தேருருள் : வண்டி : உரோகிணி : உருளென்னேவல்.
உரூடி - இடுகுறி : பகாப்பதம்.
உரூடியார்த்தம் - இயற்சொல்.
உரூபகாரம் - அத்தாட்சி : மேற்கோள்.


உரூபகாலங்காரம் - உருவக அணி.
உரூபம் - உருவம் : அடையாளம் : இனம் : சுபாவம்.
உரூபித்தல் - மெய்ப்பித்தல்.
உரூப்பியம் - அழகானது.
உரேந்திரன் - வீரன்.


உரைகலங்குதல் - பேச்சுத் தடுமாறுதல்.
உரைகல் - பொன்னுரைக்குங் கல்.
உரைகட்டுதல் - நூலுக்கு உரை செய்தல்.
உரைகாரர் உரையாசிரியர் - வண்ணார்.
உரைகாரன் - உரையாசிரியன்.


உரைகோளாளன் - உரையை விரைவில் ஏற்கும் அறிவுடையோன்.
உரைக்கிழத்தி - கலைமகள்.
உரைக்கேன் - சொல்லுவேன் : சொல்லமாட்டேன்.
உரைக்கோள் - உரைகாரன் கருத்து.
உரைசல், உரைசுதல் - உரிஞ்சுதல் : தேய்தல் : தேய்த்தல்.


உரைச்செய்யுள் - கட்டுரை.
உரைஞ்சல் - உரிஞ்சுதல்.
உரைத்தல் - சொல்லுதல் : ஒலித்தல் : தடவல் : தேய்த்தல் : பூசுதல் : 
மெருகிடுதல் : மாற்றறிய உரைத்தல்.
உரைத்தாம் என்றல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று : 
அஃதாவது முன்னே கூறியுள்ள ஒரு செய்தியைப் பின்னர்க் கூறாது விடுதல்.
உரைத்தீவார் - கூறுவார்.


உரைத்தைக்காண் - சொல்லிக் காண்.
உரைத்தழுத்தல் - பேச்சுத் தடுமாறல்.
உரைபெறு கட்டுரை - காவியங்களில் உரைநடையில் அமைந்த தொடர்.
உரைப்படல் - உரைக்கப்படல்.
உரைப்பாட்டு - கட்டுரை நடை.


உரைப்பு - தேய்ப்பு : உரைத்தல் : தேய்த்தல்.
உரைமானம் - தேய்ப்பு.
உரைமுடிவு - மறைத்தீர்ப்பு.
உரையசை - பெரும்பான்மை : ஆற்றலிழந்த இடைச்சொல்.
உரையல் - உரைத்தல் : சொல்லுகை.


உரையளவை - ஆகமப்பிரமாணம்.
உரையாடல் - பேசுதல்.
உரையிடல் - நூலுக்குரை செய்தல்.
உரையிற்கோடல் - மூலத்திற் சொல்லாதவற்றை உரையிற் சொல்லுதல்.
உரைவன்மை - பேச்சுவல்லமை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:27 pm

உரோகதி - நாய்.
உரோகம் - நோய் : இறங்குதல் : உயர்தல் : எழும்புதல் : ஏறுதல் : பூவரும்பு : தளிர் : ஒளியின்மை.
உரோகி - நோயாளி.
உரோகிதம் - இந்திரதனு : சிவப்பு.
உரோசம் - சினம் : பெருமை : மானம் : முலை : வெட்கம்.


உரோசமானம் - முள்ளிலவு.
உரோசனை - கடுகு : கோரோசனை : செந்தாமரை.
உரோஞ்சல் - உரிஞ்சுதல்.
உரோடம் - சினம்.
உரோணி - உரோகிணி : ஒரு நோய்.


உரோதனம் - அழுகை கண்ணீர்.
உரோபணம் - இறங்குதல்.
உரோபம் - அம்பு : பாணம் : பகழி : கணை.
உரோமகூபம் - மயிர்ச்சிலிர்ப்பு : உரோமபுளகம்.
உரோமக்கிழங்கு - வசம்பு.


உரோமபூமி - தோல்.
உரோமரேகை - மயிரொழுக்கு.
உரோமலம்பம் - வண்டு.
உலகங்காத்தான் - அவுரிச் செடி : அரி : திருமால்.
உலகசயன் - புத்தன்.


உலகசீலம் - உலக நோன்பு.
உலகஞானம் - உலகத்தைப் பற்றிய அறிவு : கருவி நூலறிவு.
உலகத்தார் - உலகிலுள்ளார் : உயர்ந்தோர் : உலகப் பற்றுடையார் : மாந்தர் : மனிதர் : மக்கள்.
உலகபாரணன் - திருமால்.
உலகப்புரட்டன் - மிகுபுரளிக்காரன்.


உலகமலைவு - நூற்குற்றங்களுள் ஒன்று.
உலகமுண்டோன் - திருமால்.
உலக வழக்கம் - உலக நீதி உலகாசாரம் : உலகமுறை.
உலகவறவி - எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்குரிய தருமசாலை.
உலகவிடைகழி - ஊர்வாயில்.


உலகவிருத்தம் - உலகவழக்கோடு மாறுபடுதல்.
உலகளந்தோன் - திருமால்.
உலகாசாரம் - உலக வழக்கம்.
உலகாயதம் - உலக இன்பமே மேலான தென்னும் நரீச்சுரவாதம்.
உலகாயிதம் - உலகாயதம்.


உலகிகம் - இலௌகீகம்.
உலகியற்கை - உலகியல்.
உலகுரை - உலகவாதம்.
உலகோர் - பெரியோர்.
உலக்கைக்கழுந்து - உலக்கைப் பிடி. 


உலக்கைக்கொழுந்து - அறிவு குறைந்தவன்.
உலக்கைப்பாட்டு - வள்ளைப் பாட்டு.
உலக்கைத்திங்கள் - ஆவணி மாதம்.
உலக்கைப்பாலை - பாலை மரவகை.
உலக்கையாணி - பூட்டின் நடுவாணி.


உலங்கலம் - கற்பாத்திரம்.
உலங்கு - கொசுகு : திரண்ட கல் : உலம் : கீடம்.
உலண்டம், உலண்டு - கோற்புழு : பட்டு.
உலத்தல் - குறைதல் : நீங்குதல் : அழிதல் : வற்றுதல் : கெடுதல் : சாதல் : முடிதல்.
உலந்தவர் - அழிந்தவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:28 pm

உலப்பேறி - திருத்தப்பட்ட நிலம்.
உலமரல் - அலமரல் : சுழற்சி : துன்பம் : வருத்தம் : அச்சம்.
உலம்புதல் - அலப்புதல் : முழங்கல் : இரைதல் : அஞ்சுதல்.
உலம்வரல் - சுழலல்.
உலரல் - காய்தல்.


உலர்தல் - அழிதல்.
உலர்ந்தபுல் - திரணம்.
உலர்ப்பெலி - ஓர் எலி.
உலவமரம் - இலவமரம்.
உலவாக்கிழி - எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன் முடிப்பு.


உலவாநிற்றல் - பரத்தல்.
உலவுதல் - உலாவல்.
உலவை - தழை : கிளை : மரக் கொம்பு : உடைமரம் : கிலுகிலுப்பை : விலங்கின் கொம்பு : காற்று : 
குடி : முல்லை நிலக் கான்யாறு.
உலவையான் - காற்றுக் கடவுள்.
உலறல் - கடுஞ்சினம் : வற்றல்.


உலறுதல் - உலருதல் : வற்றுதல் : சிதைதல் : பொலிவழிதல் : சினத்தல் : காய்தல் : சிலம்புதல் : உரைதடுமாறல்.
உலாத்துக்கட்டை - கதவு நின்றாடும் சுழியாணி.
உலாத்துதல் - உலாவுதல் : உலாவச் செய்தல் : பரவச் செய்தல்.
உலாமடல் - நூல் வகை.
உலாம் - ஓர் உவமச் சொல்.


உலாய் - இயங்கி : சூழ்ந்து.
உலாவரல் - உலாவுதல்.
உலாவுதல் - சஞ்சரித்தல் : பவனி வருதல் : இயங்குதல் : ஓடிப்பரவுதல் : சூழ்தல் : நிறைதல்.
உலு - தினை முதலியவற்றின் பதர்.
உலுக்கல் - உலுக்குதல்.


உலுக்குதல் - குலுக்குதல் : நடுங்குதல்.
உலுக்குமரம் - மிண்டிமரம் : நெம்பு கட்டை.
உலுண்டணம் - உருட்டுதல் : களவு செய்தல் : கொள்ளையிடுதல் : மருட்டல் : கூட்டுண்ணல்.
உலுத்தல் - உதிர்த்தல்.
உலுப்புதல் - உதிர்த்தல்.


உலுப்பை - அடைந்தோர்க்களிக்கும் ஊன் பண்டம் : காய் வருக்கம் : கோயில் முதலியவற்றிற்கு அனுப்புங் காணிக்கை : சாமான்பை : சிறு காய் : பெரியவர்களுக்கு அனுப்பும் ஊன் பண்டம்.
உலும்பினிவனம் - கௌதம புத்தர் பிறந்தவிடம்.
உலுவம் - வெந்தயம்.
உலுவா - பெருஞ்சீரகம்.
உலூகம் - கோட்டான் : ஒருவகைப் பரி : குங்கிலியம் : கூகை.


உலூகலம் - உரல்.
உலூகன் - இந்திரன் : சகுனி மகன்.
உலூகாரி - காக்கை.
உலூதம் - சிலந்திப் பூச்சி : உலுதைப் பூச்சி.
உலூபி - அருச்சுனனை மணந்த நாக கன்னிகை : ஒருவகை மீன்.


உலைதல் - நிலைகுலைதல் : வருந்துதல் : அஞ்சுதல் : அழிதல் : அலைதல் : கலைந்து போதல் : கெடுதல் : சீரழிதல் : பலங்குறைதல் : மனங்கலங்கல் : வருந்தித் திரிதல்.
உலைத்தல் - கெடுத்தல் : கலைத்தல் : வருத்துதல் : முறியடித்தல் : அழித்தல் : மனங்கலங்கச் செய்தல் : அலைத்தல்.
உலைப்பு - அலைப்பு : அழித்தல் : வருந்துதல் : முறியடிக்கை.
உலைமுகம் - கொல்லன் உலை இடம்.
உலைமூக்கு - கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் துவாரம்.


உலோகதருமிணி - போககாமிகட்குச் செய்யப் படுவதான தீட்சை.
உலோகபாலர் - அரசர் : திக்குக்காவலர் : இந்திரன் : அக்கினி : இயமன் : நிருதி : வருணன் : வாயு : குபேரன் : ஈசானன்.
உலோகாதீதம் - உலகத்திற்கு எட்டாதது : மேற்பட்டது : எல்லாங் கடந்தது : கடவுள் மயம்.
உலோகராட்டு - கடவுள்.
உலோகிதம் - இரத்தம் : சிவப்பு : செவ்வாய் : மஞ்சள் : யுத்தம் : சந்தனம் : சூதாட்டம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:28 pm

உலோகிதன் - செவ்வாய்.
உலோசனம் - கண்.
உலோகிதம் - சந்தனமரம்.
உலோச்சுதல் - தன் தலைமயிரைத் தானே பறிக்கை.
உலோட்டம் - ஓடு : மண்கட்டி.


உலோத்திரம் - வெள்ளிலோத்திரமரம்.
உலோபத்துவம் - உலோபத்தன்மை.
உலோபம் - பேரவா : கடும்பற்றுள்ளம் : தானும் நுகராது பிறர்க்கும் ஈயாக்குணம் : அகப்பட்ட பொருளைக் கைவிடாமை : 
அற்பம் : அவா : குறைவு.
உலோபர் - பேரவா உடையவர்.
உலோமம் - ஒழுங்கு : வால் : வால் நுனி : புறமயிர்.


உலோலம் - அசைவு : விருப்பம் : ஆசை : அவா.
உலோலன் - மிகுகாமி.
உல் - கழு : தேங்காயுரிக்குங் கருவி.
உல்பகம் - மறைப்பது.
உல்லங்கனம் - மீறுகை : அவமதிப்பு : கடக்கை : கலக்கம் : நிந்தை.


உல்லரி - தளிர்.
உல்லாடி - மெல்லிய ஆள்.
உல்லாப்பியம் - கயமை : வஞ்சகத் தன்மை : யானை.
உல்லி - ஒல்லி : மெல்லிய ஆள்.
உல்லிங்கனம் - அவமதிப்பு : கடக்கை : கலக்கம் : சண்டைமிகுதி : நிந்தை : அலட்சியம்.


உல்லியம் - கிணறு.
உல்லியர் - கூபநூலோர்.
உல்லு - உல்.
உல்லுகம் - கொள்ளி.
உல்லோசம் - மேற்கட்டி : கூடாரம்.


உல்லோலம் - கடற்பெருந்திரை.
உவகுருவாணன் - இல்லறத்தையடையும் நிலையிலிருக்கும் பிரமசாரி.
உவகைப்பறை - மங்கலப் பறை.
உவக்காண் - உப்பொழுது : உங்கே : உவ்விடம்.
உவச்சர் - ஓச்சர்.


உவட்சி - தவளுகை : அசைப்பு.
உவட்டி - அருவருப்பு.
உவட்டுதல் - அருவருத்தல் : தெவிட்டுதல் : மிகுதல் : நீர்ப்பெருக்கு : குமட்டுகை.
உவட்டுரை - இகழ்ச்சிச் சொல்.
உவட்டுறல் - பெருகுதல் : தெவிட்டல்.


உவணர் - கருடர்.
உவணவூர்தி - திருமால்.
உவணி - வாட்படை.
உவணை - உவ்விடம் : தேவலோகம்.
உவதி - பதினாறாட்டைப்பெண்.


உவிதை - மலையின் வீழருவி.
உவத்தல் - மகிழ்தல் : அவாவல் : விரும்பல்.
உவமன் - ஊமன் : உவமை.
உவமானிலம் - சுவர்.
உவமேயம் - உபமேயம்.


உவமையுருபு - உவமை : அற்று : அனைய : அன்ன : இகல : இன்ன : என்ன : ஏய்ப்ப : ஒப்ப : கடுப்ப : கேள் :
செத்து : தூக்கு : நிகர : நேரபுரை : பொருவ : போல : மான் : ஒன்ற : ஒடுங்க : ஓட : ஆங்க : வென்ற : வியப்ப : எள்ள : 
விழைய : நிகர்ப்ப : கள்ள : காய்ப்ப : மதிப்ப : திகைய : மருள : மாற்ற : மறுப்ப : வெல்ல : வீழ : நாட : நடுங்க முதலியன.
உவமையுருவகம் - ஓர் அணி : அஃது உருவகஞ் செய் பொருளைத் திரும்பவும் ஒரு சிறப்பினால் ஒன்றோடு ஒப்புமைப் படுத்துவது.
உவமைவிரி - ஓர் அணி : அஃது உவமைச் சொல் விரிந்து நிற்பது.
உவராகம் - கிரகணம்.
உவரிக்கெண்டை - ஒருவகை மீன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:29 pm

உவரோதம் - உப்புக்கடல் : இடையூறு.
உவர்க்கம் - கடற்கரை.
உவர்த்தல் - அருவருத்தல் : உப்புக் கரித்தல் : வெறுத்தல்.
உவர்நிலம் - உவர் சேர்ந்த நிலம்.
உவர்மண் - உப்புச் சேர்ந்த மண்.


உவலை - ஓட்டை : தழை : சருகு : இழிவு : பொய்.
உவல் - தழை : சருகு.
உவவனம் - உபவனம் : பூங்காவனம் : சோலை : உய்யானம்.
உவவு - உவப்பு : மதிநாள் : உவா : தவம்.
உவவேசம் - இருத்தல்.


உவளகம் - அந்தப்புரம் : இடைச்சேரி : சிறைச்சாலை : மதில் : ஒரு பக்கம் : அகழி : 
உப்பளம் : பள்ளம் : குளம் : பிரித்தல் : வாயில்.
உவளம் - சோறு : யானைக்கவளம்.
உவளித்தல் - தூய்மை செய்தல்.
உவளு - தவளு.


உவளுதல் - துவளுதல் : நடுங்கல் : பரத்தல்.
உவள்தல் - கம்பித்தல் : துவளுதல்.
உவறுதல் - சுரத்தல் : ஊற்றுதல்.
உவற்றுதல் - சுரக்கச் செய்தல்.
உவனாயம் - துவைத்துக் கட்டுமருந்து.


உவனி - வாள்.
உவனித்தல் - வில்லை எய்யத் தொடங்கல் : தூய்மை செய்தல்.
உவனிப்பு - ஈரம்.
உவன் - பின்புறத்துள்ளவன் : முன் நிற்பவன்.
உவன்றி - நீர்நிலை.


உவாதி - எல்லை : கடுந்துன்பம்.
உவாதை - வேதனை.
உவாத்தி - கற்பிப்போன்.
உவாநாடி - கிரகணபரிசனநாடி : இளநாடி : உபநாடி.
உவாந்தம் - பௌர்ணிமை : அமாவாசை.


உவாந்தி - சக்தி.
உவாய் - ஒரு மரம்.
உவாளி - பூட்டை : அறுகு.
உவிதல் - சாதல் : நீர் வற்றியவிதல் : நெருக்கத்தினாலவிதல் : காற்றில்லாமற் புழுங்கல்.
உவித்தல் - அவித்தல்.


உவியல் - சமைத்த கறி.
உவைச்சன் - உவச்சன் : ஓச்சன் : கணக்கன்.
உவையம் - உபயம்.
உவ் - உவை.
உவ்வி - தலை : தலைவி.


உவ்விடம் - நடுவிடம்.
உவ்வு - தவம்.
உவ்வை - உப்பை.
உழ - பழக : முயல் : வேலை செய்ய : உழவுத் தொழில் நடத்த : வருந்த : உழவென்னேவல்.
உழக்கல் - உழக்குதல்.


உழக்கால் - உழவுகோல்.
உழக்குதல் - கலக்குதல் : உழுதல் : வெல்லல் : விளையாடுதல் : மிதித்தல்.
உழக்குருட்டுதல் - சூதாடுதல்.
உழக்கோல் - தாற்றுக்கோல் : உழவு கோல்.
உழச்சியர் - உழத்தியர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:29 pm

உழத்தல் - வெல்லுதல் : வருந்துதல் : துவைத்தல் : பழகுதல் : செய்தல் : முயலுதல் : புரளல் : பட்டனுபவித்தல்.
உழத்தொறும் - நுகருந்தோறும்.
உழத்திப்பாட்டு - நூல் வகைகளில் ஒன்று.
உழத்தியர் - மருத நிலப் பெண்கள்.


உழப்பல் - குழப்பிப் பேசல் : பழகல் : நட்டல்.
உழப்பாளி - முயற்சியுள்ளவன் : கள்ள நியாயம் பேசுவோன்.
உழப்புதல் - மழுப்புதல் : போலிவாதஞ் செய்தல் : காலங் கடத்துதல் : பழகுதல் : குழப்பிப் பேசுதல்.
உழமண் - அழுக்கெடுக்கும் மண்.
உழம்பு - ஒலி : குழம்பு.


உழம்புதல் - பல ஒலிகள் கலந்தொலித்தல் : குழம்புதல்.
உழலைமரம் - மாட்டின் கழுத்திற் கட்டுங் கட்டை.
உழலைவேலி - வழிநடைப்பட்டுப் போகிறவர்களுக்கு இடங் கொடுத்துப் பின் உழன்று கொண்டு
தன் நிலையில் நிற்கும் உழலைமரம் பொருந்திய வழியினையுடைய வேலி.
உழவடை - உழவு நிலத்தின் குடியுரிமை.
உழவர் - மருதநில மக்கள்.


உழவுகட்டல் - உழுதல்.
உழவுகுண்டை - உழவுமாடு : உழவெருது.
உழவுமழை - உழுதற்கு வேண்டிய மழை.
உழறுதல் - கலக்குதல் : கலங்குதல் : சுழலுதல் : உலாவல் : அளைதல் : மோதும்படி தள்ளுதல்.
உழற்சி - அலைகை : சுழற்சி : வருத்தம் : ஆடுகை : திரிதல் : சுற்றித் திரிகை.


உழற்றி - மிகுதாகம் : சுழற்சி.
உழற்றுதல் - உழலச் செய்தல் : அலையச் செய்தல் : சுழற்றுதல் : உடம்பு நோயாற் புரளுதல்.
உழன்றறுத்தல் - கடின வேலை செய்தல் : பழகித் தேர்தல்.
உழன்றி - மாட்டின் கழுத்திலிருந்து உழலும் கட்டை.
உழாநாஞ்சில் - நாஞ்சில் மலை.


உழால் - உழுதல் : கிண்டுதல்.
உழிஞை - எண்வகை மாலைகளில் ஒன்று : கொற்றான் : சிறுபூனை.
உழிதரல் - கழலல் : திரிதல்.
உழிதல் - அலைதல்.
உழுதல் - நிலத்தைக் கிளைத்தல் : கிண்டுதல்.


உழுதுண்போர் - வேளாளர்.
உழுதூண் - பயிர்த்தொழில் செய்து வாழ்தல்.
உழுத்தல் - பதனழிதல்.
உழுத்து - ஓர் அணி.
உழுநர் - உழவர்.


உழுபடை - கலப்பை.
உழுபடைச்சால் - சீதை.
உழுவம் - எறும்பு : பீலிகை.
உழுவல் - இடைவிடா அன்பு : முறை : குணம் : முறைமை : உழுவேன்.
உழைக்கண்ணாளன் - தோழன் : உடனிருப்போன்.


உழைக்கலம் - பொன் : வெள்ளியாலான ஏனங்கள்.
உழைச்செல்வான் - நோய் தீர்த்தற் பொருட்டுச் செல்லும் மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன்.
உழைஞர் - ஏவலாளர்.
உழைதல் - துன்பமுறல் : இரைதல்.
உழைத்தல் - பாடுபடுதல் : வருந்துதல்.


உழைநின்றார் - ஏவல் செய்வார்.
உழைப்பறித்தல் - சேற்றிலுழலுதல் : வருந்தி முயலுதல்.
உழைப்பு - முயற்சி : ஈட்டம்.
உழைமை - வரிக்கூத்தில் ஒன்று.
உழையிருந்தான் - அமைச்சன் : உடனிருப்போன் : நோயாளிக்கு உதவி புரிபவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:31 pm

உழையோர் - உழையர்.
உழைவு - யாழின் உள்ளோசை.
உளகர் - உள்ளானவர்.
உளகு - யாழின் தண்டு : கிராம ஒழுங்கு.
உளதாதல் - தோன்றியிருத்தல்.


உளது - மெய்ம்மை.
உளபடி - உள்ளபடி.
உளப்படுதல் - ஒப்புக் கொள்ளுதல் : இணங்குதல் : உட்படுத்துதல்.
உளப்படுத்தல் - உட்படுத்தல்.
உளப்பு - நடுக்கம்.


உளமிகுதி - மனச்செருக்கு.
உளமை - உண்மை.
உளம்புதல் - அலைத்தல் : ஓலமிகுதல்.
உளரு - உளர்.
உளர்செரு - எடுப்புஞ் சாய்ப்புமான போர்.


உளர்ச்சி - உளர்வு : உளர்தல் : சுழற்சி : உளர்ப்பு.
உளர்தல் - கோதுதல் : கிண்டுதல் : தலைமயிராற்றுதல் : அசைத்தல் : சிதறுதல் : பரப்புதல் : பூசல் : தடவுதல் : யாழ் முதலியன வாசித்தல் : தாமதித்தல் : சுழலுதல் : உறுதியற்றாடுதல்.
உளர்த்தல் - உணரச் செய்தல்.
உளர்ப்பு - அலைக்கை : உதிர்ப்பு : குரவை.
உளர்வு - அசைகை : யாழ் வாசிக்கை : சுழலுகை : ஈடாட்டம்.


உளவன் - துப்பாள் : உளவுகாரன்.
உளவாடம் - முன் பணம் : அச்சாரம் : உறுதிப் பணம்.
உளறல், உளறுதல் - குழறுபடையான மொழி : தடுமாறிப் பேசுதல் : ஆரவாரித்தல்.
உளறுபடை - பேச்சிற் குழறுகை.
உளிஞை - கோபுரவாயில் படை.


உளித்தலைக்கோல் - இருப்புப் பாரை : உளிப்பாரை.
உளிநர் - எண்ணுபவர்.
உளு - அரிக்கும் புழு : உளுத்தது.
உளுக்காத்தல் - இருத்தல்.
உளுக்குதல் - நெளிதல் : மெருகிடுதல் : சுளுக்குதல்.


உளுத்தல் - மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல்.
உளுவை - மீன்வகை.
உளைக்கால் - மயிர்க்கால்.
உளைச்சல் - உளைவு.
உளைதல் - மிகவருந்துதல் : குடைச்சல் : நோயடைதல் : விடுபடுதல் : சிதறிப் போதல் : 
அழிதல் : தோற்றம் : ஊளையிடுதல்.


உளைத்தவர் - வெறுத்தவர்.
உளைத்தல் - வருத்துதல் : வெறுத்தல்.
உளைந்து பேசுதல் - மனம் நொந்து பேசுதல்.
உளைப்பறித்தல் - சேற்றிற் புரளல் : போராட்டப்படல்.
உளைப்பு - அழைப்பு : ஒலிப்பு : வருத்தம் : தேகக் குடைச்சல்.


உளைப்பு - விரிந்தபூ.
உளைமந்தை - கடுநோய்.
உளைமயிர் - பிடரிமயிர்.
உளைமான் - சிங்கம் : குதிரை.
உளைய - வெறுப்ப.


உளைவு - உடல் வருத்தம் : மனவருத்தம் : வலி : குடைவு : வலிப்பு : வயிற்றுளைவு.
உள்கல் - உள்குதல்.
உள்குதல் - உள்கல் : நினைத்தல் : உள்ளழிதல்.
உள்படுதல் - மனமொப்பி நடத்தல் : அறிதல்.
உள்வட்டம் - நாணயமாற்றிற் பெறும் ஊதியம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:31 pm

உள் வணக்கம் - மன வணக்கம் : அந்தரங்க வழிபாடு.
உள்வரி - வேற்றுவடிவங் கொள்ளல்.
உள்வலிப்பு - ஒரு நோய்.
உள்வழக்கு - உள்ளதை உண்டென்பது.
உள்வழி கடந்தோன் - கடவுள்.


உள்வாசல் - முற்றம்.
உள்வாரம் - அந்தரங்கச் சார்பு : மேல்வாரம்.
உள்விழுதல் - உள்ளே போதல் : நட்புக் கூடுதல் : குறைதல் : காரியத்தின் பொருட்டு நட்புக் கொள்ளுதல் :
உள்ளாதல் : உள்வீழ்தல் : அடங்குதல்.
உள்வீழ்தல் - சுருங்குதல் : குறைதல்.
உள்ளகம் - நெஞ்சு.


உள்ளக்காட்சி - மானதக்காட்சி.
உள்ளடி - மறைவு : உள்ளங்கால் கட்டி : நெருங்கிய சுற்றம்.
உள்ளடிக்குள் - வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே.
உள்ளடியார் - உறவர்.
உள்ளது - உடையது : உண்மை : ஆன்மா.


உள்ளத்துறைவோன் - கடவுள்.
உள்ள நிகழ்ச்சி - மனக்கருத்து.
உள்ளந்தண்டு - கழுத்தெலும்பு.
உள்ளந்தாள் - உள்ளங்கால்.
உள்ளப்படிறு - மனவஞ்சகம்.


உள்ளப் புணர்ச்சி - தலைவனும் தலைவியும் உள்ளத்தாற் கூடும் கூட்டம்.
உள்ளமிகுதி - ஊக்கம் : உள்ளக்கிளர்ச்சி.
உள்ளரங்கம் - அந்தரங்கம்.
உள்ளரவம் - மனக்கலக்கம்.
உள்ளறிவு - விஞ்ஞானம்.


உள்ளவன் - பொருளுடையவன்.
உள்ளளவு - உண்டான மட்டும்.
உள்ளாங்கு - உள்ளபடி.
உள்ளார் - உடையவர் : வாழ்ந்திருப்போர் : நினையார் : பகைவர்.
உள்ளாளம் - இசைவகை : கூத்துவேறுபாடு.


உள்ளாள் - உள்ளாகப் பயிலும் ஆள்.
உள்ளாற்றுக்கவலை - ஆற்றிடைக் குறை.
உள்ளான் - ஒரு குருவி : பொருளுள்ளவன்.
உள்ளிடுதல் - உள்ளடக்குதல் : உட்படுதல் : தொகைக்குட்படுதல்.
உள்ளிடை - உள்ளிடம் : மறை : அந்தரங்கம் : உட்காரியம்.


உள்ளிட்டார் - கூட்டாளிகள் : முதலானவர்கள்.
உள்ளிந்திரியம் - மனம்.
உள்ளிப்பல் - பூண்டின் உரி.
உள்ளிருப்பு - வைப்புநிதி.
உள்ளுடை - கோவணம்.


உள்ளுடைதல் - மனங்கலங்குதல் : மனம் முறிதல்.
உள்ளுபு - நினைத்து : உள்ளி.
உள்ளுயிர் - கடவுள்.
உள்ளுதல் - நினைதல் : ஆராய்தல் : நன்குமதித்தல் : இடைவிடாது நினைத்தல்.
உள்ளுயிர்க்குன்று - நத்தை.


உள்ளுருகல் - மனங்கரைதல்.
உள்ளுவது - உளதாயிருப்பது : கருதுவது.
உள்ளுறுத்தல் - உட்செலுத்தல் : உட்கருதுதல் : உள்ளிடுதல்.
உள்ளுறையுவமம் - வெளிப்படையாகக் கூறாது கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம் தோன்றாமல் உவமித்தல்.
உள்ளூர் - ஊர்நடு : சொந்தவூர். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:32 pm

உள்ளூன்றல் - கடுஞ்சொற் சொல்லல்.
உள்ளெரிச்சல் - பொறாமை.
உள்ளொற்றுதல் - உண்ணிகழ்ச்சியை உற்றறிதல்.
உள்ளோசை - அகவொலி : உள்ளொலி.
உள்ளோர் - உள்ளவர்.


உற - மிக : கிட்ட : உறவென்னேவல்.
உறக்கு - உறக்கம் : உறக்கென்னேவல்.
உறக்குதல் - தூங்கச் செய்தல் : இமையை மூடச் செய்தல் : நாசப்படுத்துதல் : கிள்ளியெடுத்தல்.
உறங்காப்புளி - இரவில் இலை குவியாத புளியமரம்.
உறங்கி - புளியமரம் : முழுச் சோம்பேறி : தூங்கி : மடிந்து.


உறங்குதல் - தூங்குதல் : ஒடுங்குதல் : சோர்தல் : தங்குதல்.
உறட்டவன் - வறண்டவன்.
உறட்டுதல் - வறட்டுதல்.
உறட்டை - தீநாற்றம்.
உறண்டு - முரட்டுக் குணம்.


உறண்டை - உறண்டு.
உறத்தல் - கிள்ளியெடுத்தல் : பிளத்தல் : அழுத்துதல் : உறிஞ்சுதல் : சிறிதாதல் : செறிதல்.
உறந்தை - உறையூர்.
உறப்பு - செறிவு.
உறமுறை - உறவின் முறை.


உறவன் - உறவுடையவன்.
உறவாடுதல் - உறவுகொண்டாடுதல் : நட்புச் செய்தல்.
உறவாளி - உறவு கொண்டவன்.
உறவி - உயிர் : எறும்பு : உறவு : கிணறு : நீரூற்று : உலைக்களம் : பிரவிருத்தி : 
பொருத்தம் : சுற்றம் : நட்பு : உறுகை : விருப்பம் : ஊறுபுனல் : ஒரு புழு : மலை முருங்கை.
உறவின் முறையார் - உறவர்.


உறவோர் - சுற்றத்தார் : நண்பர் : அடைந்தோர் : இனத்தார் : தக்கார் : நட்டோர் : தாயம்.
உறழ - ஓர் உவம உருபு [ ஒப்ப] : காலம் : பெருக்கல் : பொது : இடையீடு : உறழவென்னேவல்.
உறழல் - ஒத்தல் : எண்கூட்டிப் பெருக்கல்.
உறழ்கலி - கலிப்பா வகை.
உறழ்குறித்தல் - வாது செய்யக் கருதல்.


உறழ்ச்சி - மாறுபாடு : திரிகை : உறழ்வு : விகற்பம்.
உறழ்தல் - பெருக்குதல் : ஒத்தல் : எதிராதல் : மிகுதல் : செறிதல் : விகற்பித்தல் : வீணை நரம்பு தெறித்தல்.
உறழ்பொரு - உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்பு.
உறழ்பொருள் - ஒப்பு மாறுபடக் கூறுவது.
உறழ்ப்பு - காந்தார பஞ்சமம்.


உறன்முறை - உறவுமுறை.
உறாதவன் - நொதுமலன்.
உறாமுதல் - கிடைக்காத காரணம்.
உறாமை - நிந்தனைச் செயல்.
உறாவரை - முற்றூட்டு : பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம்.


உறாவுதல் - சோர்தல்.
உறான் - உறவினன் அல்லான் : பகைவன்.
உறிக்கா - இரு பக்கமும் உறிதொங்கும் காவடி.
உறிஞ்சுதல் - உள்ளிழுத்தல்.
உறிதல் - உறிஞ்சுதல்.


உறியடி - கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறிவெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள்.
உறீஇ - அழுத்தி : உறுவித்து.
உறுகணாளன் - வறிஞன் : தீவினையாளன்.
உறுகை - உறுதல்.
உறுகோள் - பற்றுக்கோடு : நிகழ்ச்சி.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:33 pm

உறுக்கல் - உறுக்குதல் : அதட்டல் : கடத்தல் : சினத்தல் : அச்சுறுத்தல்.
உறுக்குதல் - அதட்டுதல் : சினத்தல் : தண்டித்தல் : தாண்டுதல்.
உறுசுவை - சாராலங்காரம்.
உறுசூது - பெருவஞ்சகம்.
உறுதல் - இருத்தல் : தங்குதல் : நேர்தல் : பொறுத்தல் : வருந்துதல் : பயன்படல் : நிகழ்தல் : பொருந்துதல் : மிகுதல் : சேர்தல் : தொடுதல் : ஒத்தல் : நினைத்தல்.


உறுதரல் - தீண்டல்.
உறுதிக்கட்டுரை - கழறல் : இடித்தல் : நெருங்கல்.
உறுதிச் சுற்றம் - உற்றதுணைவர் : நட்பாளர் : மறையவர் : மருத்துவர் : நிமித்திகப் புலவர்.
உறுதிப்பாடு - திடப்படுத்தல்.
உறுதிப் பொருள் - கடவுள் : அறிவு : உண்மைப்பொருள்.


உறுதுணை - உற்றதுணை.
உறுத்துதல் - உண்டாக்குதல் : அமைத்தல் : அடைவித்தல் : ஒற்றுதல் : பதித்தல் : அழுத்துதல் : 
வருத்துதல் : மிகுத்தல் : விரித்தல் : செலுத்துதல் : உண்பித்தல் : சீறுதல் : நாட்டுதல்.
உறுத்தை - அணில்.
உறுநர் - சேர்ந்தவர்.
உறுந்தறுவாய் - தற்சமயம்.


உறுபடை - பெரும்படை.
உறுபு - பாலையாழ்த்திறம் : மிகுதி.
உறுபொருள் - உடையவன் இன்மையால் தானே வந்தடையும் பொருள்.
உறுப்படக்கி - ஆமை.
உறுப்பணங்கெட்டவன் - அங்க ஈனன் : மூடன்.


உறுப்பறை - அங்கவீனன் : உறுப்புக் குறைத்தல்.
உறுப்பா - ஒரு மரம்.
உறுப்பில்பிண்டம் - உறுப்பற்ற தசைத்திரள்.
உறுப்பினகவல் - ஒரு பொருண் மேல் பத்திசைப்பது.
உறுப்புத்தோல் - பூணூலிற் கட்டிய மான்தோல்.


உறுப்பு நலன் அழிதல் - பிரிவால் துன்பப்படுவோருடைய உறுப்புகளின் அழகு கெடுதல்.
உறுப்புள்ளவன் - திறமுடையவன்.
உறுமல் - ஒரு பறை : தோற் கருவி.
உறுமாலை, உறுமால் - மேல் வேட்டி : உருமால்.
உறுமு - முறு முறு : உருமல்.


உறுமுதல் - உறுமென்று ஒலித்தல் : குமுறுதல் : எழும்புதல்.
உறும் - உறுதியுடைத்து.
உறும்பு - உலர்ந்த கரம்பை மண்ணின் கூரிய சிறுகட்டி.
உறுவது - வரற்பாலது : இலாபம் : ஒப்பது.
உறுவரர் - தேவர்.


உறுவர் - அடைந்தோர் : அருகக்கடவுள் : எதிர்ந்தவர் : முனிவர்.
உறுவலி - மிக்க வலியுடையோன்.
உறுவல் - துன்பம் : உறுவேன்.
உறுவன் - அருகன் : உறுவேன் : முனிவன்.
உறுவித்தல் - பொருத்துதல்.


உறுவை - ஔவை உடன் பிறந்தாள் : அடைவாய்.
உறூஉ - உறுத்தல்.
உறைகாலம் - மழைக்காலம் : வாணாள்.
உறைகுத்துதல் - பாலுக்குப் பிரை குத்துதல்.
உறைகோடல் - பெய்ய வேண்டுங் காலத்துப் பெய்யாமை.


உறைகோடுதல் - பருவ மழை கெடுதல்.
உறைக்கப்பார்த்தல் - உற்றுப் பார்த்தல்.
உறைக்கிணறு - சுடுமண் உறையிட்ட கிணறு.
உறைச்சாலை - மருத்தில் : மருத்தகம்.
உறைதல் - தோய்தல் : தங்குதல் : வசித்தல் : இறுகுதல் : ஒழுகுதல் : செறிதல் : உறுதியாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:33 pm

உறைத்தல் - உதிர்த்தல் : நீர் சொரிதல் : துளித்தல் : பெய்தல் : உறுதியடைதல் : தாக்கிப் பயன் விளைத்தல் : 
மோதுதல் : மிகுதல் : அதட்டுதல் : அமுக்குதல் : ஒத்தல் : அழுந்தல் : எரிதல் : தாக்கல் : உறுத்தல் : சுவையுறைத்தல்.
உறைத்துளி - மழைத்துளி.
உறைநாதி - வெட்டியான் மானியம்.
உறைபதி - உறைவிடம்.
உறைபனி - இறுகின பனி.


உறைமோர் - பாலில் இடும் பிரை மோர்.
உறையல் - பிணக்கு : மாறுபாடு.
உறையிடம் - இருக்கும் இடம் : உள் வீடு : தங்குமிடம்.
உறைவி - உறைபவன் : வசிப்பவள் : இறுகச் செய் : உறையச் செய்.
உற்க - எரிந்து வீழ.


உற்கடம் - செருக்கு.
உற்கட்டிதம் - ஒருவகை இருக்கை.
உற்கணம் - தட்டை.
உற்கண்டிதம் - துக்கப்படல்.
உற்கண்டினி - ஒரு சக்தி.


உற்கமம் - ஒரு நாடு.
உற்கம், உற்கை - விண்வீழ் கொள்ளி : அனல் திரள் : கடைக் கொள்ளி.
உற்காரம் - தூற்றுத்தானியம்.
உற்கிருட்டம் - மேன்மையானது.
உற்சங்கம் - இணைக்கை வகை : உற்சங்கக்கை.


உற்சர்ப்பிணி - வாணாள் போகம் முதலியன பெருகும் காலம்.
உற்சவமூர்த்தி - திருவுலாவரும் படிவம்.
உற்சாகப்பிழை - ஊக்கமின்மை.
உற்சாதனம் - அழித்தல் : உழுதிரட்டித்தல் : போதல் : வாசனையூட்டல் : செல்லல் : கெடுத்தல்.
உற்சேதம் - உடல் : உயர்ச்சி : காயப்பட்ட சரீரம் : கொலை.


உற்சேபம் - அலை புரளுதல் : அனுப்புதல் : எறிதல் : கக்குதல் : மோதுதல்.
உற்பதம் - தப்பு : பறவை : பிழை : மேலேபோதல்.
உற்பத்தி - பிறப்பு : தோற்றம்.
உற்பலபத்திரம் - பெண்கள்தனம் : திலகம்.
உற்பலவரை - திருத்தணி.


உற்பலவனம் - நடந்தது.
உற்பாதபிண்டம் - மேதாவி.
உற்பாதம் - தீக்குறி : கொடுமை.
உற்பாதனம் - பிறப்பித்தல்.
உற்பிச்சம், உற்பீசம் - வித்து : வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன.


உற்பிராசனம் - நிந்தை.
உற்பிரேட்சை - தற்குறிப்பேற்றம்.
உற்றபடி - நிகழ்ந்தவாறு.
உற்றவன் - உறவன் : சேர்ந்தவன்.
உற்றளவு - உள்ளளவு : சரியளவு.


உற்றவிடம் - நட்டவிடம்.
உற்றறிதல் - பயின்றறிதல் : ஆராய்ந்தறிதல் : சேர்ந்தறிதல்.
உற்றன்று - உற்றது.
உற்றாண்மை - நெருங்கிய உரிமை.
உற்றாண்மை பேசுதல் - பரிந்து பேசுதல்.


உற்றாராய்தல் - உறவோர் : நண்பர் : தேடலுற்றவர் : முயல்பவர் : உடையவர்.
உற்றான் - கணவன் : உரியவன்.
உற்றிடம் - துன்பம் நேர்ந்த காலம் : உற்ற சமயம்.
உற்று - ஓர் உவம உருபு.
உற்றுக் கேட்டல் - கருத்துடன் கேட்டல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:34 pm

உற்றுணர்தல் - ஆராய்ந்தறிதல்.
உற்றுநோக்கல் - உற்றுப்பார்த்தல்.
உற்றுழி - ஒன்று நேர்ந்த சமயம்.
உற்றோர் - உற்றார்.
உனகன் - இழிந்தவன்.


உன் - மனம் : விரைந்தெழும்பு : உந்து : உன்னை : இழுப்பு : உனது.
உன்மணி - உயர்ந்த மணி.
உன்மதம் - அறிவுமயக்கம் : கழிகாமம்.
உன்மனி - உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் : உன்மனை.
உன்முகன் - கருத்தாயிருப்பவன்.


உன்மேதை - கொழுப்பு.
உன்மை - தசை பிடுங்குங் குறடு.
உன்னமனம் - எழுச்சி.
உன்னம் - ஒரு மரம் : கருத்து : தியானம் : மனம் : அன்னப் பறவை வகை : ஈரம் : தசை பிடுங்குங் குறடு.
உன்னலர் - பகைவர்.


உன்னல் - நினைக்கை : மனம் : விரைந்தெழுதல் : ஆராய்வாக நினைதல்.
உன்னாயம் - உயர்வு.
உன்னி - அழிஞ்சில் : குதிரை : தியானத்திற்குரிய பொருள் : உன்னிப்பு : செடிவகை.
உன்னித்தல் - உயர்தல் : தியானித்தல்.
உன்னியம் - அய்க்கம் : உரிமை.
உன்னியர் - உறவினர் : சுற்றத்தார். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:46 pm


அற்புதமான அவசியமான காலத்துக்கும் தேவையான 

இந்த அகராதி பதிவை மீள் பதிவு பதிந்துள்ளேன் 

இதனை மீள் பதிவு செய்யவே நான் பல சிரமப்பட்டேன் ...
இதனை உருவாக்கிய நிலா முற்றம் 

தளத்துக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 

 தமிழ் தோட்டம் தளத்தில் இதை பதிவதற்கு ஊக்கிவித்த 

அனைவருக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி - Page 36 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum