தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 34 of 36 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:41 pm

அறிவு மடம்படுதல் - அறிந்தும் அறியோர் போன்றிருத்தல்.
அறிவுறுத்தல் - அறிவித்தல்.
அறிவுறால் - அறிவுகொளுத்துகை.
அறிவொப்புக் காண்டல் வினா - தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்பு நோக்கக் கேட்குங் கேள்வி,
அறீஇய - அறிய : அறிந்த.




அறுகரிசி - அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.
அறுகழி - நீரற்ற கழி.
அறுகால் - வண்டு : பாம்பு : அறுகிற பொழுது : இல்லாத போது : தேனீ.
அறுகாற் பீடம் - ஆறு கால்கள் அமைந்த பீடம்.
அறுகிடுதல் - திருமணத்தில் அறுகிட்டு வாழ்த்துதல்.



அறுகுணன் - கடவுள்.
அறுகுறை - கவந்தம் [ தலையற்ற முண்டம்].
அறுகெடுத்தல் - அறுகிட்டு வாழ்த்துதல்.
அறுசமயம் - சைவம்  :  வைணவம்  : சாக்தம்  : செளரம்  : காணாபத்தியம்  : 
கௌமாரம் ஆகிய ஆறு சமயங்கள்.
அறுசுவை - கைப்பு  :  இனிப்பு  :  புளிப்பு  :  உவர்ப்பு  : துவர்ப்பு  : கார்ப்பு.




அறுதல் - தீர்தல்  :  பாழாதல்  :  அறுந்தது  :  இல்லாமற் போதல்  :  எதற்குங் கூடாத
தாதல்  :  கைம்பெண்  :  நூல் கயிறு  முதலியன அறுதல்  :  பயனற்றதாதல்  : 
அற்றுப் போதல்  :  கொலையுண்டல்  :  தங்கல்  :  வகை செய்தல்.
அறுதிச் சாசனம் - கிரயப் பத்திரம்.
அறுதிப் பரிவட்டம் - கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுக்கும் பட்டு.
அறுதியிடுதல் - முடிவுக்குக் கொண்டு வருதல்  :  காலங் குறித்தல்.
அறுதொழிலோர் - பார்ப்பனர்.



அறுத்தல் - ஊடறுத்தல்  :  அரிதல்  :  இல்லாமற் செய்தல்  :  இடை விடுதல்  : 
முடிவு செய்தல்  :  வளை தோண்டல்  :  வெட்டுதல்.
அறுத்திசைப்பு - வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்பு  :  வழு.
அறுத்துப் பேசுதல் - முடிவாகக் கூறுதல்.
அறுத்து  முறி - மனைவியைத் தள்ளி விடுகை.
அறுத்துரைத்தல் - வரையறுத்துச் சொல்லுதல்  :  பிரித்துச் சொல்லுதல்.



அறுந்தருணம் - அறுந்தருவாய்  :  அவசர சமயம்.
அறுந்தொகை - மிச்சமின்றிப் பிரிக்கப் பெறும் எண்.
அறுபகை - காமம் முதலியன.
அறுபதம் - ஆறு கால்  :  வண்டு  :  ஒரு பூண்டு.
அறுபதாமாண்டுக் கலியாணம் - சஷ்டியப்த பூர்த்தி.



அறுபான் - அறுபது.
அறுபொருள் - பரம்பொருள்.
அறுப்புச் சுகம் - கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கைப் பொருள்.
அறுமணை - அரிவாள்மணை  :  அழகற்றவள்  :  சீர்கேடி.
அறுமர் - எண்ணெய் வகை.



அறுமான் - ஒருவகைப் புழு.
அறுமீன் - கார்த்திகை மாதம்  :  கார்த்திகை நாள்.
அறுமீன் காதலன் - முருகன்.
அறுமுறை வாழ்த்து - முனிவர்  :  பார்ப்பார்  :  ஆனிரை  :  மழை  :  முடியுடை வேந்தர்  :  உலகு என்னும் ஆறினையும் பற்றிக் கூறும் வாழ்த்து.
அறுமை - நிலையின்னை  :  ஆறு.




அறும்பு - கொடுமை  :  பஞ்சம்.
அறுவகைப்படை - மூலப்படை  :  கூலிப்படை  :  நாட்டுப்படை  :  காட்டுப்படை  : 
துணைப்படை  :  பகைப்படை.
அறுவடை மேரை - கிராம ஊழிய சுதந்திரம்.
அறுவாய் - வாள் முதலியவற்றால் அறுபட்ட விடம் : குறைவிடம் :  கார்த்திகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:41 pm

அறுவாப்போதல் - முற்றுஞ் செலவாதல்.
அறுவிதி - தீர்ப்பு.
அறுவு - முழுமை.
அறுவையர் - ஆடை நெய்வோர்.
அறைகாரன் - கோயில் உக்கிராணக்காரன்.




அறைகுறை - முடிவுபெறாதது.
அறைகூவல் - போருக்கழைத்தல்.
அறைதல் - அடித்தல் : அலை : காற்று முதலியன அறைதல் : ஒலித்தல் : துண்டித்தல் : பறை முதலியன கொட்டுதல்.
அறைநன் - அறுப்பவன்.
அறைபோக்கு - ஒதுங்குகை.




அறைபோதல் - கீழறுக்கப்படுதல் : கெட்டழிதல் : வஞ்சித்துச் செல்லல்.
அறைப்படுத்தல் - கீழறுத்துத் திறப்பித்தல்.
அறை முறையிடுதல் - குறைதெரிவித்தல்.
அறையல் - சொல்லல்.
அறையிடுதல் - அறைகூவுதல்.




அறையுண்ணல் - அடிக்கப்படுதல்.
அறையோ - முறையிடும் மொழி : ஒரு வஞ்சினச் சொல்.
அறையோலை - வரையறைசெய்யும் உறுதி மொழி.
அறைவனர் - சொல்லுவோர்.
அறைவாய் - மலைநெறி. 




அற்கம் - அடக்கம்  :  பொருள் விலை  :  அலரி  :  தும்பை  :  துளசி  :  முருக்கு  : 
வெள்ளெருக்கு   : வேம்பு.
அற்கன் - கதிரவன்.
அற்கா - நிலையாத.
அற்காமை - நிலையாமை.
அற்குதல் - அடைதல்  :  தங்குதல்  :  நிலைபெறுதல்.




அற்சிரம் - அச்சிரம்.
அற்சிரை - அற்சிரம்.
அற்பகேசி - வசம்பு.
அற்பக்கிலன் - சிற்றறிவுடையவன்.
அற்பசங்கை - ஒன்றுக்குப் போதல்  :  சிறுநீர் விடுதல்.




அற்பரம் - மக்கட் படுக்கை.
அற்புத உவமை - உவமையலங்கார வகையுள் ஒன்று.
அற்புதக்கண் - அபிநயக்கண் வகை.
அற்புதமூர்த்தி - கடவுள்.
அற்புத்தளை - நேசபந்தம்.




அற்றகாரியம் - முடிந்து போன வேலை.
அற்றவன் - பற்றற்றவன்   :  பொருளற்றவன்.
அற்றூரம் - மரமஞ்சள்.
அற்றேல் - அப்படியானால்.
அற்றைப் பரிசம் - விலைமாதர் அன்றன்று பெறுங்கூலி.




அன - அன்னம்  :  ஒப்பான்.
அனகம் - பாவமற்றது  :  புல்லுருவி.
அனங்கத்தானம் - காமன் கோட்டம்.
அனதிகாரி - உரிமைபெறாதவன்.
அனத்தம் - பயனற்றது  :  பொல்லாங்கு.




அனந்தசக்தி - வரம்பில்லாத ஆற்றல்.
அனந்தசுகம் - கடையிலா இன்பம்.
அனந்தஞானம் - கடையிலாவறிவு.
அனந்தரம் - பிறகு  :  பின்னர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:42 pm

அனந்தவிபவை - உமையவள்.
அனந்தை - பூமி : சிவசக்திகளில் ஒன்று : திருவனந்தபுரம் : அறுகு : சீந்தில் : 
செங்காந்தள் : சிறுகாந்தள் : சிறுகாஞ்சொறி : நன்னாரி : குப்பைமேனி : 
சோடச கலையுள் ஒன்றான யோகத்தானம்.
அனபை - ஓர் யோகம்.
அனலம் - தீ : கொடுவேலி.
அனலன் - தீக்கடவுள் : அட்டவசுக்களுள் ஒருவன்.




அனலாச்சியம் - ஒரு நரகம்.
அனலாடி - சிவன்.
அனலேறு - இடி.
அனல்காலி - சூரியகாந்தக்கல்.
அனவத்தை - முடிவு பெறாமைக்குற்றம்.




அனற்கல் - சிக்கிமுக்கிக் கல்.
அனற்றுதல் - தகித்தல்  : எரித்தல் : வயிறுளைதல் : சினத்தல் : வீணே உளறுதல் : முணங்குதல்.
அனனிலம் - பாலைநிலம்.
அனன்னியம் - வேறன்மை.
அனாகதம் - ஆறு ஆதாரங்களுள் ஒன்று.



அனாதரவு - உதவியின்மை.
அனாதிசைவம் - சைவம் பதினாறனுள் முப்பொருள் உண்மையை உறுதிப்படுத்துவது.
அனாமயம் - நோயின்மை.
அனாயாசம் - வருத்தமின்மை.
அனாவிதம் - வீணை வகை.



அனாவிருட்டி - மழையின்மை.
அனி - நெற்பொரி : பத்தாயப் பெட்டி.
அனித்தம் - அனிச்சம்.
அனிவன் - வாயுதேவன்.
அனீகம் - அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு.



அனீகினி - படை.
அனு - பிரதிசெயல் : மோனையெழுத்து : தாடை : அற்பம் : ஒழுங்கு : கதுப்பு :
கீழ் : கூட : அன்மை : தனிமை : பங்கு.
அனுகதம் - தொடர்ந்து வருவது.
அனுகம் - செஞ்சந்தனம்.
அனுகமனம் - உடன் கட்டையேறுதல்.



அனுகம்பம் - இரக்கம்.
அனுகரணம் - ஒன்றன் செயல் போல் செய்கை : அனுகாரம்.
அனுக்கம் - வருத்தம் : முணக்கம் : அச்சம் : நோய்.
அனுக்கிரமணி - நூற்பதிகம்.
அனுக்குதல் - வருத்துதல் : கெடுத்தல்.



அனுக்கை - அனுஞ்ஞை : தட்சிணை வகை.
அனுங்கல் - அசைதல் : இழுகல் : ஒன்றோடொன்று முட்டுதல் : கெடுதல் : புலம்பல் : வருந்தல் : வாடல் : முணுமுணுத்தல்.
அனுங்குதல் - அனுங்கல்.
அனுசந்தானம் - சிந்திக்கை : இடையறாது ஓதுகை.
அனுசயம் - கழிவிரக்கம் : பச்சாத்தாபம்.



அனுசரணம், அனுசரணை - சார்ந்தொழுகுதல்.
அனுசரிப்பு - பின்பற்றுகை : இணக்கம்.
அனுசாசனம் - உபதேசம்.
அனுசாரி - பின்பற்றுவோன்.
அனுசிதம் - தகாதது : பொய் : சத்தி செய்கை.



அனுசை - தங்கை.
அனுசைவர் - சிவதீட்சை பெற்ற சத்திரியர் : வைசியர்.
அனுச்சை - விடை.
அனுட்டானம் - அனுஷ்டானம் : வழக்கம் : தீக்கை பெற்றவர்கள் செய்யும் நாட்கிரியை : ஒழுக்கம்.
அனுதாத்தம் - படுத்தல் ஓசை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:43 pm

அனுபவை - பார்வதி.
அனுபூதன் - காரணன்.
அனுப்படி - கையிருப்பு : காரியங்கள் : கடந்த ஆண்டு வருவாய்.
அனுப்பிராசம் - வழியெதுகை.
அனுப்பத்தி - பொருத்தமின்மை.



அனுபோகம் - இன்பநுகர்ச்சி : பழக்கம் : கையாட்சி.
அனுமதை - ஒருவகைப் புல்.
அனுமாசக்காய் - பொன்னாங்கண்ணி.
அனுமானம் - கருதலளவை : ஐயம் : சமுசயம்.
அனுமிதி - அனுமானத்தால் உண்டாகும் ஞானம்.



அனுமேயம் - அனுமானத்தால் அறியத்தக்கது.
அனுமோனை - இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை.
அனுயோகம் - வினா.
அனுலோமன் - உயர்குல ஆடவனுக்கு இழிகுலப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை.
அனுவாதவொத்தி - மறு ஒத்தி.



அனுவெழுத்து - மோனையெழுத்து.
அனேகான்மவாதம் - ஆன்மாக்கள் பல உண்டென்னுங் கொள்கை.
அனை - அத்தன்மை : ஒரு மீன் : தாய் : அத்தனை.
அனைத்தும் - எல்லாம்.
அனைய - அன்ன : அத்தன்மையான.



அனையம் - அத்தன்மையினேம்.
அன்பிலி - அன்பில்லாதவன்.
அன்புகூர்தல் - பற்றுக் கொள்ளுதல். 
அன்புடைக்காமம் - ஐந்திணை பற்றி நிகழுங் காமம்.
அன்மயம் - மாறு.



அன்மொழித்தொகை - ஐந்தொகை மொழிமேற் பிற தொக்கு வரும் தொகை.
அன்வயம் - அந்நுவயம்.
அன்வியத்தல் - பின்தொடர்தல் :  செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு 
பொருட் பொருத்தமுறப் பொருத்துதல்.
அன்றியுரைத்தல் - மாறுபட்டுச் சொல்லுதல்.
அன்றினர், அன்றினார் - பகைவர்.




அன்றுதல் - மாறுபடுதல் : கெடுதல்.
அன்னக்கொடியோன் - நான்முகன்.
அன்னசாரம் - கஞ்சி.
அன்னசுத்தி - நெய்.
அன்னதாழை - அன்னாசி.



அன்னதானக் குறுவை - மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல்.
அன்னது - அப்படிப்பட்டது : போன்றது : ஒத்தது.
அன்னத் துவேடம் - உணவில் வெறுப்பு.
அன்னபானம் - சோறுந் தண்ணீரும்.
அன்னப்பால் - கஞ்சி.



அன்னப் பிராசனம் - சோறூட்டல்.
அன்னம்பாறுதல் - புலம்புதல்.
அன்னல் - புகை.
அன்னவத்திரம் - உணவு உடைகள்.
அன்னவம் - கடல்.



அன்னவூர்தி - நான்முகன்.
அன்னாய் - ஓர் அசைநிலை : தாயை விளித்தல்.
அன்னாள் - அத்தன்மையள் : அவள் : ஒப்பானவள்.
அன்னியபரன் - வேறோர் இடத்தில் மனம் பற்றியவன்.
அன்னியூர் - ஓர் ஊர்.




அன்னுவயம் - அன்வயம்.
அன்னுவயம்பண்ணுதல் - செய்யுட்டொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.
அன்னுழி - அப்பொழுது.
அன்னுழை - அவ்விடம்.
அன்னையோ - அத்தன்மையோ.
அன்னோன்றி - வலியற்றவன்.
அன்னோன் - அவன் : ஒத்தவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:46 pm

அகராதி பதிவில் "ஆ " தொடரில் சில முன்னர் விடுபட்டு விட்டது 
அதனை இங்கு பதிகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:47 pm

ஆய்ந்தோர் - அறிஞர் : பார்ப்பனர்.
ஆய்ப்பாடி - இடைச்சேரி.
ஆய்ப்பு - ஒடுங்குகை.
ஆய்மகள் - இடைப் பெண்.
ஆய்மதி - ஒளியற்ற மதி.


ஆய்மயில் - விசை குறைந்த மயில்.
ஆய்மை - ஆராயுந்தன்மை : நுண்ணிய பொருள்.
ஆய்வை - துயிலிடம்.
ஆரகட்டம் - ஆழமுடைய கிணறு.
ஆரகன் - அணாப்புவோன் : கள்ளன்.


ஆரகூடம் - பித்தளை.
ஆரகேரம் - வாகுவலயம் என்னும் கோளணி.
ஆரகோதம் - கொன்றை மரம்.
ஆரக்கம் - அகில் : சந்தனம்.
ஆரக்குவதம் - சரக் கொன்றை.


ஆரசகம் - அகில்மரம்.
ஆரட்சகன் - இடையன்.
ஆரணங்கு - அரிய தவப்பெண் : அரிய தெய்வம் : ஆறுதற்கரிய வருத்தம்.
ஆரணத்தான் - நான்முகன்.
ஆரணவாணன் - பார்ப்பான்.


ஆரண வுருவன் - சிவபெருமான்.
ஆரணன் - நான்முகன் : சிவன் : திருமால் : பார்ப்பான்.
ஆரணி - பார்வதி : மாகாளி : ஓர் அதிதேவதை.
ஆரணியகன் - காட்டில் வாழ்வோன்.
ஆரதக்கறி - மரக்கறி.


ஆரதம் - சைவவுணவு.
ஆரத்தியம் - ஒளி : மின்னல்.
ஆரநாளம் - கரடி.
ஆரபி - ஓர் இசைப்பண்.
ஆரமரோட்டல் - குறுநில மன்னரும் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டல்.


ஆரவம் - ஒலி : பகை.
ஆரவலம் - காட்டாத்திப் பூ.
ஆரலம் - பகை : விரோதம் : குரோதம் : கோபம்.
ஆரறிவு - நிறைந்த அறிவு.
ஆரற்சுவர் - மேலே மறைப்புடைய சுவர்.


ஆராக்கலவு - அமைதி பெறாத முயக்கம்.
ஆராட்டு - தாலாட்டு.
ஆராத - நிறைவு பெறாத.
ஆராதகர் - அர்ச்சகர்.
ஆராதநம் - வணக்கம் : வழிபாடு.


ஆராதூரி - ஊதாரி.
ஆராத்தியர் - வீரசைவப் பார்ப்பனர்.
ஆராய்தல் - தேடல் : விசாரணை செய்தல்.
ஆராய்ச்சி - சோதனை : துருவிப் பார்க்கை.
ஆராய்வு - நுண்ணறிவு : விசாரித்தல்.


ஆரார் - பகைவர். 
ஆராவமுதம் - தெவிட்டாத அமுதம்.
ஆரவம் - ஒலி : சத்தம் : அரவம் : தொனி.
ஆராவுணர்வு - சிற்றறிவு.
ஆரி - அருமை : அழகு : மேன்மை : சோழன் : கதவு : ஆத்திமாலை : துர்க்கை : 
தோல்வி : பார்ப்பனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:48 pm

ஆரித்தல் - ஒலித்தல். 
ஆரிடம் - பசு, எருதுகளின் முன்னிலையில் நீர் பெய்து கன்னிகையைக் கொடுக்கும் மணம் :  முனிவர் அருளிய நூல் : வழக்கு நிலம்.
ஆரிடர் - மிகுந்த துன்பம் : முனிவர் : சமணர் : குருமார்.
ஆரிடலிங்கம் - முனிவர்களால் அமைக்கப்பெற்ற இலிங்கம்.
ஆரிடை - அரியவழி.


ஆரிப்படுவர் - அரிதாய் இழியும் வழி.
ஆரிய - சிறிய.
ஆரியக்குச்சரி - மருத யாழ்த்திறத்தொன்று.
ஆரியக்கூத்து - கழைக்கூத்து.
ஆரியநாடு - ஆரியாவர்த்தம் : ஒரு நாடு.


ஆரியப் பாவை - பாவைக் கூத்து வகை.
ஆரியப்பூமாலை - அடங்காப் பெண்.
ஆரியம் - இமயமலை, விந்திய மலைகளுக்கு இடையேயுள்ள நாடு : வடமொழி : கேழ்வரகு : அழகு : செல்வப் பொருள் : தேடப் பெறுவது : நற்குணமுடையது : பூசிக்கப் பெறுவது.
ஆரியர் - அறிவாளிகள் : ஆசிரியர் : மிலேச்சர் : தொம்பர் : உயர்குலத்தோர் : தலைவர் : ஐயனார் : கழைக்கூத்தர் : குரு : சிவன் : சூரியன் : நண்பர் : வியாழன் : மருத்துவன்.
ஆரியாங்கனை - சமணத் தவப்பெண்.


ஆரியை - காளி : பார்வதி.
ஆரீதம் - பச்சைப்புறா.
ஆருணி - அயோதன் : பிரிவினைக்காரன் : தாழ்ந்தோன் : உபநிடதம் முப்பத்திரண்டில் ஒன்று : பாஞ்சாலராசன் : உதயணனோடு போராடி மாண்டவன்.
ஆருத்திரை - திருவாதிரை.
ஆருயிர் மருந்து - உணவு.


ஆரூபம் - ஒல்லாமை : நீங்காமை.
அரூரன் - சுந்தரமூர்த்தியார்.
ஆரூர் - திருவாரூர்.
ஆரூர்க்கால் - ஒரு வகைக் கர்ப்பூரம்.
ஆரோகம் - மறையோதும் முறைகளுள் ஒன்று.


ஆரோக்கியம் - நோயின்மை.
ஆரோசை - ஏற்றிப் பாடும் இசை.
ஆரோபணம் - அணிதல் : உயர்த்துதல் : ஏற்றுதல் : ஒப்புக் கொடுத்தல் : நாட்டுதல்.
ஆரோபிதம் - ஏற்பட்டது : கற்பிக்கப்பட்ட குற்றம்.
ஆரோபித்தல் - ஆரோபம்.


ஆர்கை - தின்னுதல்.
ஆர்கோதம் - கொன்றை : சரக் கொன்றை.
ஆரக்கம் - இலாபம்.
ஆர்க்கு - இலைக்காம்பு.
ஆர்க்கை - கட்டு : துரும்பு : வரிச்சு : ஈர்க்கு.


ஆர்ச்சவம் - ஒத்த நோக்கம்.
அர்ச்சனம் - சமாபத்தியம்.
ஆர்தல் - அடைதல் : பெறுதல் : ஒத்தல் : அனுபவித்தல் : குடித்தல் : நிறைதல் : பொருந்துதல் : புசித்தல் : தங்குதல் : அணிதல் : கட்டல் : தொடுத்தல் : பரவுதல் : உண்ணுதல்.
ஆர்த்தர் - எளியர் : நோயுற்றோர் : பெரியோர்.
ஆர்த்தல் - ஒலித்தல் : கட்டல் : பொருதல் : ஆரவாரித்தல் : கட்டிக் கொள்ளுதல் : கொக்கரித்தல்.


ஆர்த்தவம் - புட்பம் : விரிமலர் : தாமம் : பூ.
ஆர்த்தன் - நோயுற்றோன் : துன்புறுவோன்.
ஆர்த்தார்க்கோன் - சோழன்.
ஆர்த்தி - துன்பம் : அனுபவம் : கழிவு : விருப்பம் : சிவன் ஐவகை வடிவில் ஒன்று : விற்குகை.
ஆர்த்திகை - துன்பம் : துயரம் : வருத்தம்.


ஆர்த்தியம் - காட்டுத்தேன்.
ஆர்த்திரகம் - இஞ்சி.
ஆர்த்துதல் - ஊட்டுதல் : நுகர்வித்தல் : நிறைவித்தல் : கொடுத்தல்.
ஆர்பதம் - நிழல் : வண்டு : உணவு.
ஆர்ப்பரவம் - ஆரவாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:48 pm

ஆர்ப்பரித்தல் - ஆரவாரஞ் செய்தல்.
ஆர்மதி - கடகராசி : நண்டு.
ஆர்மை - கூர்மை : மதில் : நுண்மை.
ஆர்வமொழி - அலங்கார வகைகளுள் ஒன்று.
ஆர்வலன் - அன்புடையவன் : பரிசிலன் : கணவன்.


ஆர்வு - செல்வம் : நிறைவு : விருப்பம் : ஆராய்தல் : உண்ணல்.
ஆர்வை - கோரைப்பாய்.
ஆல - ஆரவாரித்து : அழைப்ப : ஆட.
ஆலகண்டன் - சிவன்.
ஆலகம் - நெல்லி மரம் : சோம்பு.


ஆலகாலி - காளி.
ஆலங்காடு - திருவாலங்காடு என்னும் ஊர்.
ஆலங்காட்டாண்டி - ஒருவகை வரிக்கூத்து.
ஆலச்சுவர் - சார்புச் சுவர்.
ஆலத்தரன் - சிவன்.


ஆலந்தை - ஒரு சிறு மரம்.
ஆலமர் கடவுள் - தென்முகக் கடவுள்.
ஆலமர் செலவன், ஆலமுண்டோன் - சிவபெருமான்.
ஆலமுற்றம் - புகாரில் சிவபிரான் எழுந்தருளியிருந்த கோயில்.
ஆலம்பம் - பற்றுக்கோடு : தூங்கல் : புகலிடம் : இலம்பகம்.


ஆலவன் - திருமால் : திங்கள்.
ஆலவனம் - திருவாலங்காடு.
ஆலவாய் - தென்மதுரை : பாம்பு.
ஆலவாலம் - மரத்தின் கீழ்ப்பாத்தி : விளை நிலம்.
ஆலவூணி - உமாதேவி.


ஆலா - கடற்பறவை.
ஆலாகலம் - நஞ்சு.
ஆலாசியம் - மதுரை.
ஆலாதலம் - நெருப்புக் கொள்ளி : தீக்கங்கு.
ஆலாத்து - கப்பலின் பெருங்கயிறு : ஒரு புள் : நீராஞ்சனம்.


ஆலாபனம் - இசைவிரித்துப் பாடுகை.
ஆலாபித்தல் - பன்னிப் பன்னிப் பாடுதல்.
ஆலாப்பறத்தல் - திண்டாடுதல்.
ஆலிகை - அகலிகை.
ஆலிடம் - தெருச்சிறகு.


ஆலித்தல் - ஒலித்தல் : களித்தல் : செருக்குதல்.
ஆலிநாடன் - திருமங்கையாழ்வார்.
ஆலிப்பு - ஆரவாரம்.
ஆலியப்பறை - பறையரில் ஒரு வகுப்பார்.
ஆலீடம் - வில்வீரர் நிலைகளுள் ஒன்று.


ஆலுதல் - களித்தல் : ஒலித்தல் : தங்குதல் : ஆடுதல் : நிறைதல்.
ஆலூகம் -வில்வம்.
ஆலேகிணி - எழுத்தாணி : வரை கோல்.
ஆலைக்குழி - கரும்பாலையிற் சாறேற்கும் அடிக்குழி.
ஆலை பாய்தல் - மனஞ்சுழலுதல் : அலைவுறுதல் : ஆலையாட்டுதல்.


ஆலையம் - ஆலயம்.
ஆலோகம் - ஒளி : பார்வை.
ஆலோசித்தல் - எண்ணமிடுதல்.
ஆலோபம் - வருத்தம்.
ஆலோன் - திங்கள் : வருணன் : சிவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:49 pm

ஆல்வாட்டுதல் - சிறிது காயச் செய்தல். 
ஆவ - ஓர் அபய இரக்கக் குறிப்புச் சொல்.
ஆவகன் - ஏழு மருத்துவர்களில் ஒருவன்.
ஆவசியகம் - இன்றியமையாதது.
ஆவசீவாளம் - முழுநிலைமை.


ஆவஞ்சி - ஒரு தோற்கருவி : இடக்கை.
ஆவடுதுறை - திருவாவடுதுறை என்னும் ஊர்.
ஆவட்டங்கொட்டுதல் - இல்லையென்று சொல்லித் திரிதல்.
ஆவட்டை - சோர்வு : ஒரு செடி.
ஆவணமாக்கள் - குடஓலை தேரும் மாக்கள் : பிரமாணம் வாங்குவோர்.


ஆவணவோலை - உரிமைப் பத்திரம்.
ஆவது - ஆகவேண்டியது.
ஆவத்து - ஆபத்து : இடர்.
ஆவநாழி, ஆவநாழிகை - அம்பறாத்தூணி.
ஆவம் - அம்பறாத் தூணி : குங்கும மரம் : நாணி : வேலுறை : ஆவேசம்.


ஆவயின் - அவ்விடம்.
ஆவரணம் - ஆணவமலம் : ஈட்டி : கேடகம் : தடை : புறவேலி : மதில் : மூடுதல் : ஆடை : சீலை : கோட்டை.
ஆவரணசத்தி - பசு, பதி, பாசம் மூன்றையும் பேதந்தெரியாமல் மறைக்கும் ஒரு சக்தி.
ஆவரணச் சுவர் - கோவில் திருமதில்.

ஆவரணீயம் - மறைப்பது.
ஆவரி - அம்பு.
ஆவரித்தல் - மறைத்தல்.
ஆவர்த்தனம் - மறுமணம் : ஆவர்த்தம் : உருக்குதல் : கடைதல் : கலக்குதல் : 
சுழற்றுதல் : பழக்கம்.
ஆவர்த்தி - தடவை : முறைமை : எல்லை.


ஆவலங்கொட்டுதல் - ஆர்த்துவாய் கொட்டுதல்.
ஆவலர் - உற்றார்.
ஆவலித்தல் - அழுதல் : புலம்பல் : ஆசைப்படுதல் : கொட்டாவி விடுதல்.
ஆவலிப்பு - செருக்கு.
ஆவறி - அங்கலாய்ப்பு : அவா : பேராசை : பற்று.


ஆவற்காலம் - இறுதி நாள்.
ஆவா - [ஆஆ] இரக்கக் குறிப்பு : வியப்பு.
ஆவாகனம் - தெய்வத்தை மந்திர முறையால் அழைத்தல்.
ஆவாசம் - நகரம் : மருதநிலத்தூர்.
ஆவாசித்தல் - ஆவாகனம்.


ஆவாரகம், ஆவாரம் - மறைப்பு : தாரகம் : மயக்குவது.
ஆவாரைப்பஞ்சகம் - ஆவாரஞ் செடியின் இலை : பூ : வித்து : பட்டை : வேர் என்பன,
ஆவார் - வாழ்வார் : உயர்வார் : பிழைப்பார் : உதவுவார் : தக்கார்.
ஆவிகை - பற்றுக்கோடு.
ஆவிச்சேர்த்தல் - கட்டியணைத்தல்.


ஆவிடையார் - ஆவுடையார்.
ஆவித்தல் - வாய்விடுதல் : கொட்டாவி விடுதல் : பெருமூச்சு விடுதல் : அங்காத்தல்.
ஆவிநன்குடி - பழநி.
ஆவிபத்திரம் - புகையிலை.
ஆவிபறிதல் - நீராவி யெழும்புதல் : இறத்தல்.


ஆவிபிடித்தல் - நீராவியால் வேது கொள்ளுதல்.
ஆவியர்கோ - பேகன் என்னும் வள்ளல்.
ஆவிரம் - இடையரூர் : யாதவர் கிராமம் : பாடி : இடைச்சேரி.
ஆவிருத்தி - திரும்பத் திரும்ப வோதுகை.
ஆவிர்ப்பவித்தல் - வெளிப்படுத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:50 pm

ஆவிர்ப்பாவம் - வெளிப்படுகை.
ஆவுடையார் கோவில் - திருப்பெருந்துறை.
ஆவுதல் - விரும்புதல்.
ஆவுதி - வேள்வி.
ஆவுரிஞ்சி - மந்தைக்கல் : ஆதீண்டு குற்றி.


ஆவெனல் - அழுதற் குறிப்பு : இரக்கக் குறிப்பு : வாய் திறத்தற் குறிப்பு.
ஆவேகி - ஆடுதின்னப் பாளை.
ஆவேச நீர் - கள்.
ஆவேசவாதி - கபாலி மதத்தான்.
ஆவேசனம் - அக்கசாலையார் தெரு.


ஆவேதனம் - அறிக்கை : எச்சரிக்கை : விளம்பரம்.
ஆவேலி - தொழுவம்.
ஆவேறு - இடபம்.
ஆழகம் - சுரைக்கொடி.
ஆழங்கால், ஆழாங்கு - பலகை தாங்கச் சுவரில் பதிக்குங்கட்டை : ஆழமில்லாத நீர்நிலை.


ஆழங்காற்படுதல் - அழுந்துதல்.
ஆழமுடைத்தாதல் - நூலழகு பத்தில் ஒன்று.
ஆழம்பார்த்தல் - ஆழத்தை யளந்தறிதல் : ஒருவன் அறிவு முதலியவற்றை ஆராய்ந்தறிதல்.
ஆழல் - ஆழமுடைத்தாதல் : ஆழுதல் : கறையான் : தாழ்தல் : அழுந்துதல் : மூழ்குதல் : பதிதல் : தளர்தல் : சோர்தல் : நெகிழ்தல் : அழல்.
ஆழாத்தல் - ஈடுபடுதல்.


ஆழாரம் - வட்டமான புதைகுழி.
ஆழிதிருத்துதல், ஆழியிழைத்தல் - கூடலிழைத்தல்.
ஆழிதொட்டான் - ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன்.
ஆழித்தீ - வடவையனல்.
ஆழித்தேர் - வட்டக் காலாற் சிறந்த தேர்.


ஆழிமால்வரை - சக்கரவாள கிரி.
ஆழிமுரசோன் - காமன்.
ஆழியளித்தோன் - சிவன்.
ஆழியான் - திருமால்.
ஆழிவித்து - முத்து.


ஆழும்பாழுமாய் - சீர்கேடாய் : வீணாக.
ஆழ்கடல் துயின்றோன் - திருமால்.
ஆழ்ச்சி - தாழ்ச்சி : பதிவு : அழுந்துகை : ஆழம்.
ஆழ்தல் - ஆழமாதல் : அழுந்துதல் : மூழ்குதல் : வருந்துதல் : சோம்புதல்.
ஆழ்த்துதல் - அமிழ்த்துதல்.


ஆழ்வார்கன்மி - திருமால் கோயில் அர்ச்சகர்.
ஆழ்வு - ஆழம் : பள்ளம் : படுகுழி : கிடங்கு : ஆழ்தல் : பதிவு.
ஆளடிமை - அடிமை.
ஆளமஞ்சி - கூலியின்றி வாங்கும் வேலை.
ஆளரி - ஆண்சிங்கம் : நரசிங்க மூர்த்தி.


ஆளல் - ஆளுதல் : ஒருவகை மீன்.
ஆளறுதி - தனிமை.
ஆளன் - ஆள்பவன் : கணவன்.
ஆளாபம் - ஆலாபனம்.
ஆளாழம் - ஓர் ஆள் ஆழம்.


ஆளானம் - யானை கட்டுந்தறி : தூண்.
ஆளியூர்தி - துர்க்கை.
ஆளுங்கணத்தார் - ஊர்ச்சபையதிகாரிகள்.
ஆளுடையபிள்ளையார் - திருஞான சம்பந்தர்.
ஆளுடையான் - அடிமை கொண்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:51 pm

ஆளுதல் - உடையராதல் : பயன்படுத்தல் : அரசு செய்தல் : வழங்குதல் : கைக்கொள்ளல் : அடிமை கொள்ளுதல் : ஓம்பல்.
ஆளெனல் - நாயின் கதறற் குறிப்பு.
ஆளொட்டி - காவற்கூடு.
ஆளோட்டி - வேலை வாங்குவோன்.
ஆளோலை - அடிமைச் சீட்டு.


ஆள்கை - ஆளுதல்.
ஆள்வணங்கி - அரசமரம் : தொட்டால் வாடி.
ஆள்வரி - தலைவரி.
ஆள்வழக்கற்ற - மனிதர் நடமாட்டமில்லாத.
ஆள் வாரம் - பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு.


ஆள்வினை வேள்வி - விருந்து புறந்தருகை.
ஆள்வு - ஆளுதல்.
ஆற அமர - அமைதியாய்.
ஆறங்கம் - வேதாங்கம்.
ஆறப்போடுதல் - காலந்தாழ்த்தல்.


ஆறலைத்தல் - வழிப்பறித்தல்.
ஆறலைப்பார் - வழியில் நின்றும் பறிப்பவர்.
ஆறல் பீறல் - பயனற்றது.
ஆறன் பட்டம் - தாள வகை.
ஆறாடி - தெருத்தோறும் அலைந்து திரிவோன் : தூர்த்தன் : வஞ்சகன் : காமுகன் : நிலை கெட்டவன் : சமயத்திற்கேற்றபடி பேசுபவன் : உறுதியற்ற பேச்சுக்காரன்.


ஆறாட்டம் - நோயுற்றோர் படும் வேதனை.
ஆறாட்டாடு - தீர்த்தவாரி விழா.
ஆறாதாரம் - மூலாதாரம் : சுவாதிட்டானம் : மணிபூரகம் : அனாகதம் : 
விசுத்தி : ஆஞ்ஞை.
ஆறாதூறு - அவதூறு.
ஆறாமீன் - கார்த்திகை.


ஆறாயிரப்படி - திருவாய்மொழி : முதல் விரிவுரை.
ஆறியகற்பு - அறக் கற்பு.
ஆறுகட்டி - சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம்.
ஆறுகாட்டி - வழிகாட்டி.
ஆறுகை - ஆறுதல்.


ஆறு சூடி - சிவன்.
ஆறுசெய்கையான் - பார்ப்பான்.
ஆறுதல் - மனவமைதி : தணிவு : சூடு குறைதல் : ஒழிதல்.
ஆறுமுகன் - முருகன்.
ஆறெறிதல் - வழிப்பறித்தல்.


ஆறெறிபறை - வழிப்பறி செய்வோர் அடிக்கும் பறை.
ஆற்றமாட்டாமை - முடியாமை : தாங்க முடியாமை.
ஆற்றலரி - கோடைச் சவுக்கு : பூடு வகை : முதலைப் பூண்டு : சேங்கொட்டை மரம்.
ஆற்றலை - வலியை உடையை.
ஆற்றறுத்தல் - இடையிற் கைவிடுதல் : வலியுறுத்தல்.


ஆற்றார் - வலியரல்லாதவர் : வறுமையுடையவர் : பொறுக்க மாட்டாதவர்.
ஆற்றிடல் - செய்தல்.
ஆற்றுக் காலாட்டியர் - மருத நிலப் பெண்கள் : பயிர்த்தொழில் செய்வோர்.
ஆற்றுக்கால் - வாய்க்கால்.
ஆற்றுதல் - செய்தல் : பொறுத்தல் : உய்தல் : கூடியதாதல் : போதியதாதல் : வலியடைதல் : தேடுதல் : உதவுதல் : சுமத்தல் : தணித்தல் : உலர்த்தல் : நீக்குதல்.


ஆற்றுநர் - உதவி செய்வார் : வன்மை யுடையார் : கைம்மாறு செய்வார் : ஆற்றுவார்.
ஆற்றுநெட்டி - நீர்ச்சுண்டி.
ஆற்றுபவர் - ஆற்றலுடையவர்.
ஆற்றுப்படுத்தல் - வழிப்படுத்தல் : போக்குதல் : வழிச் செலுத்தல்.
ஆற்றுப்படை - பரிசில் பெற்றான் ஒருவன் அதுபெறக் கருதிய ஒருவனை
ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் நூல் வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:51 pm

ஆற்றுப்பித்தல் - ஆற்றோரம்.
ஆற்றுவரி - இசைப்பா வகையுள் ஒன்று.
ஆற்றுவாய் முகம் - நதி சங்க முகம்.
ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம்.
ஆற்றொழுக்கு - ஆற்றின் நீரோட்டம் : சூத்திர நிலையுள் ஒன்று.


ஆன - அந்த.
ஆனகதுந்துபி - முரசு வகை.
ஆனகம் - துந்துபி : படகம் : தேவதாரு.
ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்.
ஆனதம் - சைனர்களுடைய கற்பலோகங்களுள் ஒன்று.


ஆனது - ஆகியது : அன்னது : நிகழ்ந்தது : பொருந்தியது.
ஆனந்த - ஓர் ஆண்டு.
ஆனந்தக் கண்ணீர் - மகிழ்ச்சி மிகுதியால் வருங் கண்ணீர்.
ஆனந்தக் களிப்பு - மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாட்டு.
ஆனந்தத் தாண்டவம் - சிவபெருமான் இயற்றும் திருக்கூத்து : ஆனந்த நிருத்தம்.


ஆனந்த தீர்த்தர் - மத்துவாச்சாரியார்.
ஆனந்தன் - சிவன் : அருகன்.
ஆனந்த நித்திரை - யோகநித்திரை.
ஆனந்த படம் - கூறைப்புடவை.
ஆனந்தப்பையுள் - கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் அறத்துறை : பிரிந்த தலைவன் தலைவி ஆகியவர்களது துன்பமிகுதியைப் பாட்டுடைத் தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம்.


ஆனந்தமயம் - இன்பம் நிறைந்தது.
ஆனந்த மயன் - கடவுள் : தன் வசமற்றிருப்போன்.
ஆனந்தரியம் - இவை ஆராய்ந்த பின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு.
ஆனந்தவுவமை - மிகுந்த இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம்.
ஆனந்தை - உமை : குறிஞ்சி யாழ்த்திறன்.


ஆனமானவன் - சிறந்தவன் : பெருமையுடையவன்.
ஆனம் - எழுத்துச் சாரியை : கள் : தெப்பம் : மரக்கலம்.
ஆனல் - நீங்கல்.
ஆனவன் - நண்பன்.
ஆனவை - ஆகியவை.


ஆனனம் - முகம்.
ஆனன் - சிவன்.
ஆனாமை - அமையாமை : நீங்காமை : உத்திராடம் : கெடாமை : குறையாமை : பொருந்தாமை.
ஆனாயகலை - வலை போன்ற வேட்டி.
ஆனாயர் - சிவத்தொண்டர்களுள் ஒருவர்.


ஆனாயன் - மாட்டிடையன்.
ஆனியம் - நாள் : பகல் : பருவம் : பொழுது : மூலநாள்.
ஆனிரை - பசுக் கூட்டம்.
ஆனிலன் - வாயுமகன் : அநுமான் : வீமன்.
ஆனிலை - தொழுவம் : பசுமந்தை நிற்குமிடம் : கருவூர்ச் சிவாலயம்.


ஆனிலையுலகம் - ஆனுலகு : கோலோகம்.
ஆனீகன் - வசுதேவன் தம்பி.
ஆனீர் - கோமூத்திரம்.
ஆனு - இனிமை : நன்மை.
ஆனுகூலியம் - அனுகூலம் : உடைமை.


ஆனுதல் - நீங்குதல் : விலகுதல் : பிரிதல்.
ஆனும் - ஆயினும்.
ஆனுருக்கு - பசுவின் நெய்.
ஆனுலகு - கோலோகம் : ஆனிலையுலகம்.
ஆனேறு - எருது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:52 pm

ஆனைக்கரடு - ஆனையறுகு பற்றிய கரட்டு நிலம்.
ஆனைக்கா - திருவானைக்கா.
ஆனைக்காரை - ஒதியமரம்.
ஆனைக்கொம்பு - யானைத்தந்தம்.
ஆனைச்சப்பரம் - யானை மேல் தவிசு.


ஆனைச்சிரங்கு - பெருஞ்சிரங்கு.
ஆனைச்சீரகம் - பெருஞ்சீரகம்.
ஆனைத்தடிச்சல், ஆனைத்தெல்லு - படர்கொடி வகை.
ஆனைத்தொழில் - பெருங்காரியம் : அரிய செயல் : ஆனைபயிற்றுந் தொழில்.
ஆனைத்தோட்டி - அங்குசம்.


ஆனைநெருஞ்சில் - ஆனைக்கால் வணங்கி : பெரு நெருஞ்சில்.
ஆனைப்பார்வை - கீழ் நோக்கிய பார்வை.
ஆனைப்புளி - பப்பரப்புளி.
ஆனைப்பேன் - கத்தரிச் செடியிலுண்டாகும் ஒருவகைப் பூச்சி.
ஆனைமலை - ஓர் ஊர் : ஒரு மலை.


ஆனைமீக்குவம் - கறுப்பு மருது வகை.
ஆனைமுகன் - மூத்த பிள்ளையார்.
ஆனையணைதறி - ஆனைகட்டுந் தறி.
ஆனையறுகு - ஒருவகையறுகம் புல்.
ஆனையறையும்புள் - ஆனையை அடிக்கும் ஒருவகைப் பறவை.


ஆனையாள் - யானை நடத்துபவன் : மாவுத்தன் : யானை போல் பெருத்தவன் : யானை வீரன்.
ஆனை வணங்கி - தேட்கொடுக்கி.
ஆனைவல்லார் - முல்லை நில மாக்கள்.
ஆனைவாழை - நீண்ட குலை கொண்ட ஒருவித வாழை : குளங்கோவை நெல்.
ஆனோன் - ஆனவன்.


ஆன்கொட்டில் - பசுத் தொழுவம்.
ஆன்பொருநை - ஓர் ஆறு.
ஆன்மசுத்தி - தசகாரியத்தொன்று.
ஆன்மஞானம் - மெய்யறிவு : தன்னறிவு.
ஆன்மதரிசனம் - தன்னையுணரும் அறிவு.


ஆன்மதரிசனை - ஆத்துமநிலை யறிதல்.
ஆன்மலாபம் - உயிர்ப்பேறு.
ஆன்மாச்சிரயம் - உயிர் நிலையை அறிந்து அடைதல் : தன்னைப் பற்றுதல்.
ஆன்மார்த்த பூசை - தன்பொருட்டுத் தானே செய்யும் பூசை.
ஆன்றது - மாட்சிமைப்பட்டது.


ஆன்றல் - அகலம் : மாட்சிமை மிகுதல் : அமைதல் : நீங்கல்.
ஆன்றமைதல் - அடங்கியமைதல்.
ஆன்றிசின் - அமைவாயாக.
ஆன்று - அடங்கி : நீங்கி.
ஆன்றோள் - மாண்புடையவள்.
ஆன்னிகம் - நித்திய கருமம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:53 pm

அகராதி பதிவில் "இ " தொடரில் சில முன்னர் விடுபட்டு விட்டது 
அதனை இங்கு பதிகிறேன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:56 pm

இந்தப்படிக்கு _  இப்படிக்கு.
இந்தம் _ புளிய மரம்: விறகு.
இந்தளங் குறிஞ்சி _ ஒரு பண்.
இந்தளம் _ மருத யாழ்த் திற வகை:தூபமுட்டி: கும்மட்டிச் சட்டி.
இந்தனம் _ விறகு : புகை.


இந்தனோடை  _ மேலாடை.
இந்தா _ இதனைப் பெற்றுக் கொள் என்னும் குறிப்பு மொழி: இதோ, இங்கே வா என்னும் குறிப்பு மொழி.
இந்தி _ பூனை: திருமகள்: இந்தியத் தேசிய மொழி.
இந்தியம் _  இந்திரியம்.
இந்தியன் _ இந்திய நாட்டைச் சேர்ந்தவன்.


இந்தியா _ பரத கண்டம்: பாரத நாடு.
இந்திரகணம் - செய்யுட் கணத்துள் ஒன்று: முதற் செய்யுளின் முதற் சீரினைத் தேமாங்காய் என்னும் வாய்  பாடாகக் கொண்டு பாடுவது.
இந்திரகம் _ சபா மண்டபம்.
இந்திரகாளியம் _ ஓர் இசைத்தமிழ் நூல்.
இந்திர கோடணை _ இந்திரவிழா.


இந்திரகோபம் _  தம்பலப்பூச்சி.
இந்திர சாபம் _  இந்திரனுடைய வில் வானவில்.
இந்திர சாலம் _  மாய வித்தை: அற்புதங்களைக்காட்டும் கண்கட்டு வித்தை: ஏய்ப்பு.
இந்திரசாலி _ அழிஞ்சில் :  இந்திரசாலை வித்தை செய்பவன்.
இந்திர சித்து _  இந்திரனை வென்றவன் : இராவணன் மகன்: கருடன் : கிருட்டிணன்.


இந்தர சுகந்தம் _ நன்னாரி.
இந்திர சேனை _  துரோபதை.
இந்திர ஞாலம் _  சூரபதுமனின் தேர்.
இந்திர தரு _ மருது.
இந்திர திசை _ கிழக்குத்திக்கு.


இந்திர திருவன் _ இந்திரனைப்போன்று செல்வமுடையவன்.
இந்திர நகரி _ தேவலோகம்:  திருத்தணிகை.
இந்திர நாள் _ கேட்டை நாள்.
இந்திர நீலம் _ சிறந்த நீலமணி.
இந்திரப் பிரியம் _  பொதியமலைச் சந்தனம்.


இந்திரபம் _ வெட்பாலை.
இந்திர புட்பம் _  வெண்தோன்றி.
இந்திர புரி _  இந்திரன் தலைநகராகிய அமராவதி.
இந்திர புரோகிதன் _  தேவகுரு வாகிய வியாழன்.
இந்திரம் _   மேன்மையானது :  இந்திரியம் :  இந்திர பதவி : ஆத்துமா : கடப்ப மரம்.



இந்திரர் _  தேவர்.
இந்திர லோகம் _  சுவர்க்கம் : துறக்கம்.
இந்திரவணி _  சங்க நிதி :  பதும நிதி.
இந்திர வதி _ ஓர் ஆறு.
இந்திரவல்லி _  பிரண்டை :  முடக்கொற்றான்.



இந்திரவாருணி _  பேய்க் கொம்மட்டி.
இந்திரவிகாரம் _  காவிரி பூம் பட்டணத்தில் இருந்த ஒரு பெளத்த பள்ளி.
இந்திரவில் _  வானவில்.
இந்திரவிழா _ இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள்.
இந்திரன் மைந்தன் _  சயந்தன் : வாலி : அருச்சுணன்.



இந்திரன் நாள் _  கேட்டை.
இந்திரா _  திருமகள்.
இந்திராக்கம் _  குதிரைக்காதின்  அடியில் காணப்படும் சுழி வகை.
இந்திராணம் _  நொச்சி.
இந்துமரம் _ கடம்பு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:57 pm

இம்பரும்பர் _ இவ்வுலகத்தில் தேவராக மதிக்கப்படுபவர் பூசுரர்.
இம்பர் _  இவ்விடம் : இவ்வுலகம் : பின்.
இம்பல் _  பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி.
இம்பி _ கருந்தினை.
இம்பில் _ பண்டைக்காலத்து விளையாட்டு வகை.


இம்பூறல் _ சாயவேர்.
இம்மடி _ யானை.
இம்மட்டும் _ இதுவரையும்.
இம்மி _ மத்தங்காய்ப் புல்லரிசி: அணு: ஒரு சிற்றெண் : ஒரு சிறு நிறை: பொய்மை : புலன் : பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து  இரு நூற்றில் ஒரு பங்கு.
இம்மிக்கணக்கு _ கீழ் வாய் இலக்கக் கணக்க.



இம்மியளவு _  அற்பம் குறிக்கும் ஓர் அளவு வகை.
இம்மெனல் _  விரைவுக்குறிப்பு.
இம்மை _  இவ்வுலக வாழ்வு: இப்பிறப்பு :இகபோகம்.
இயக்கம் _  இயங்குகை : குறிப்பு : வழி: சுருதி : இசைப்பாட்டு வகை : பெருமை: வடதிசை : ஒலி : மிகுதி.
இயக்கர் வேந்தன் _  குபேரன்.


இயக்கன் _  இயக்க கணத்தாள்: குபேரன் : தலைமையாக இருந்து நடத்துபவன்.
இயக்கி _  யட்சப் பெண் : கந்தருவப்பெண் : குபேரன் மனைவி : தருமதேவதை.
இயக்கினி _  கண்டங்கத்திரி.
இயக்குதல் _ தொழிற்படுத்துதல் : பழக்குதல் : செலுத்துதல்.
இயங்காத்திணை _  தனாக இடம் விட்டுப் பெயர இயலாத  நிலைத்திணைப்பொருள்.



இயங்கியற் பொருள் _  இடம் விட்டு இடம் செல்லும் உயிர்ப்பொருள் : சரப்பொருள்.
இயங்குதல் _  அசைதல் : போதல் : உலாவுதல்.
இயங்குதிசை _  மூச்சு இயங்கும் மூக்குத்துளை.
இயங்குநர் _  வழிப்போவோர்.
இயங்குபடையரவம் _  பகையரணை முற்றுகை இடும் படையால் உண்டாகும் ஆரவாரம்.



இயத்தல் _  நிகழ்தல் : கடத்தல் : நடத்தல்.
இயந்தா _  யானைப்பாகன் : சாரதி.
இயந்திரமயில் _  மயிற்பொறி.
இயந்திரி _ இத்திமரம்.
இயந்தை _  மருத யாழ்த்திறம் : செவ்வழி யாழ்த்திறவகை.


இயபரம் _  இம்மை மறுமை: இகபரம்.
இயமகணம் _ யமனின் தூதர் : யமங்கிரர்.
இயமகம் _  ஓரெழுத்து முதல் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல் நான்கு அடியும் வரப்பாடுவது: யமகம்.
இயமங்கியர் _  பரசுராமர்.
இயமதூதி _  பாம்பின் நச்சுப் பற்களுள்  ஒன்றான இயம தூதன்.


இயமபடர் _ யமதுதர்.
இயமம் _ யோகத்திற்குரிய எட்டு  உறுப்புக்களுள் ஒன்று :  கொலை களவு முதலியவற்றை நீக்கிப் புலன் அடக்குதல்.
இயமரம் _  பறைவகை.
இயமன் ஊர்தி _ எருமைக்கடா.
இயமானன் _  வேள்வித் தலைவன் : குடும்பத் தலைவன்: இந்திரன் : ஆன்மா : உயிர்.
 


இயம் _  சொல்: ஒலி: வாத்தியம் :ஈ : மிருதாரசிங்கி எனும் மூலிகை.
இயம்பல் _  சொல் : பழமொழி.
இயம்புதல் _  ஒலித்தல் : சொல்லுதல் : துதித்தல் .
இயர் _  வியங்கோள் விகுதி.
இயலசை _  நேரசை: நிரையசை.


இயலடி _  இயற்சீரால் அமைந்து வரும் பாடலடி.
இயலணி _  இயற்கை அழகு.
இயலறிவு  _  சொற்களின் பயிற்சி.
இயலாசிரியன் _  நாட்டிய நூல் கற்பிப்பவன்.
இயலாமை _ கூடாமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:57 pm

இயலுதல் _  கூடியதாதல் : உடன் படுதல் :  நேர்தல் : பொருந்துதல் : தங்குதல் : செய்யப்படுதல் : அசைதல் : நடத்தல் : உலாவுதல்.
இயலொழுக்கம் _   நல்லொழுக்கம்.
இயல்பு வழக்கு _  எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப்பெயரிலேயே  அப்பொருளைக்கூறுகை.
இயல்பளவை _ சொல்லின் பொருளைச் சந்தர்ப்பத்தால் துணிந்து உணர்கை.
இயல்பூதி _  வில்வம் : நாய் வேளை.


இயல்வாகை _  பெருங்கொன்றை.
இயல்வாணர் _  புலவர்.
இயல்வு _  இயல்பு.
இயவம் _  வாற்கோதுமை : நெல் .
இயவணன் _  யவனன் : ஓவியன் : கம்மாளன்.


இயவன் _  கீழ்மகன் : தோற்கருவியாளன்.
இயவாகு _ கஞ்சி.
இயவு _ ஊர் : காடு : வழி: செலவு: புகழ்: சோர்தல்.
இயவுள் _ தலைமை : எப்பொருட்கும் இறைவன் : வழி : தெய்வம் : புகழாளன்: பிள்ளை.
இயவை _  துவரை : வழி : காடு: மூங்கிலரிசி: மலை நெல்வகை.


இயறல் _  முத்தி : போதல்.
இயற்காட்சி _  நற்கட்சி : நல்ல நம்பிக்கை.
இயற்கை அறிவு _  இயல்பாக அமைந்த அறிவு.
இயற்கைப்புணர்ச்சி _ தலைமகனும் தலைமகளும் தெய்வ சங்கல்பத்தால் கூடும் முதல்சந்திப்பு.
இயற்கையளபெடை _  இசை, விளி, பண்ட மாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை.


இயற்கையின்பம் _ இயற்கை தரும் இன்பம் : இயற்கைப்புணர்ச்சியால் நேரும் இன்பம்.
இயற்கை உணர்வினனாதல் _ இறைவன் எண் குணங்களுள் ஒன்று.
இயற்சீர் _  அகவல் : உரிச்சீர்.
இயற்சீர் வெண்டளை _ மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை.
இயற்பட மொழிதல் _ இயல்பு பொருந்தச் சொல்லுதல் : தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை.


இயற்பலகை _ சங்கப்பலகை.
இயற்பழித்தல் _ தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை.
இயற்பா _ இயல்பான ஓசையுடைய பாட்டு : வெண்பா : நாலாயிர திவ்வியப்பிரபந்தத்துள் ஒரு பகுதி.
இயற்றி _  முயற்சி : ஆற்றல் : திறமை.
இயற்றியவர் _ செய்தவர்.


இயற்றும் வினை  _  தன்வினை.
இயனம் _ மரமேறிகளின் கருவியுறை.
இயனெறி _ நல்லொழுக்கம்.
இயன்மகள் _  கலைமகள்.
இயன் மணம் _ இயற்கையான மணம்.


இயற்றும் வினை  _  தன்வினை.
இயனம் _ மரமேறிகளின் கருவியுறை.
இயனெறி _ நல்லொழுக்கம்.
இயன்மகள் _  கலைமகள்.
இயன் மணம் _ இயற்கையான மணம்.


இயன் மொழி வாழ்த்து _  தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேல் ஏற்றி வாழ்த்தும் புறத்துறை.
இயாகம் _  கொன்றை : பாண்டம் : வேள்வி.
இயேசு _ கிறித்து நாதரின் பெயர்.
இயைதல் _  ஒத்தல் : பொருந்துதல் : இணங்கதல்.
இயைபுத் தொடை _ ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.



இயைபு வண்ணம் _  இடையெழுத்துக்கள் மிகுந்து வரும் சந்தம்.
இயைபு வனப்பு _  இடையின ஒற்றுகளும் மெல்லினத்தில் ங தவிர ஏனைய பதினோரு ஒற்றுகளும்  ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல்.
இயைமே _  வாழைமரம்.
இயைவது _ தக்கது.
இயைவு _  இணக்கம் : பொருத்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:58 pm

இர _ இரத்தல் : இரவு.
இரகசியம் _ மறைபொருள் : அந்தரங்கம் .
இரகு _ சூரியவமிசத்து அரசருள் புகழ் பெற்ற ஓர் அரசன்.
இரகுவமிசம் _ ஒரு நூல்.
இரக்கம் _ அருள் : மனவருத்தம் : ஒலி: துன்பம் : ஐயம்.



இரங்கல் _ அழுகை : உள்ளம் கசிந்து உருகுதல்.
இரங்கொலி _ முறையீடு.
இரசக்கட்டு _ இறுகச்செய்த பாதரசம்.
இரசக்களிம்பு _ புண் ஆற்றும் மருந்துவகை.
இரசக்குடுக்கை _ பாதரசம் அடைக்கும் குப்பி.



இரசக்குழி _ பாதரசம் எடுக்கும் சுரங்கம்.
இரசகம் _ பீர்க்கு.
இரசகருப்பூரம் _ பூச்சி மருந்து: ஒரு வகை மருந்துச்சரக்கு.
இரசகன் _ வண்ணான்.
இரசகி _ வண்ணாத்தி.


இரசகுண்டு _ அலங்காரமாகத்தொங்க விடும் இரசம் பூசிய கண்ணாடிஉருண்டை.
இரச குளிகை _ இரசத்தினால் செய்த மாத்திரை : சித்தர் குளிகை.
இரசச் சுண்ணம் _ பூச்சி மருந்து வகை.
இரச சுத்தி _ ஈயம்.
இரசதகிரி _ வெள்ளி மலையாகத்தோற்றம் பெறும் கயிலாயம்.



இரசதசபை _ வெள்ளியம்பலம் : மதுரையில் உள்ள நடராசர் சபை.
இரசதம் _ வெள்ளி : பாதரசம் : நட்சத்திரம் : யானைத்தந்தம் : வெள்ளை : முத்துமாலை : வெண்மாலை: பொன்.
இரசதாது _ பாதரசம்.
இரசதாளி _ ஒரு வகை வாழை: ரஸ்தாளி.
இரசபலம் _ இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது : தென்னை.



இரசபுட்பம் _ இரச கருப்பூரம்.
இரசப்பிடிப்பு _ முடக்குவாதம்.
இரசப்புகை _ பாதரசத்தின் ஆவி.
இரச மணி _ பாதரசம் கட்டிய மணி.
இரசமுறித்தல் _ பாதரசம் செய்தல் : உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல்.


இரசம் _ சுவை: செய்யுட் சுவை: சாறு : பாதரசம் : மிளகு நீர்: வாயூறு நீர் : வாழை வகை : மா மரம் : இன்பம்.
இரசலிங்கம் _ சாதிலிங்ம் : சிவலிங்க வகை.
இரசவாதம் _ தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை.
இரசவாதி _ ஓர் உலோகத்தைப் பிரிதொன்றாக மாற்றுபவன்.


இரச வாழை _ பேயன் வாழை.
இரச வைப்பு _ இரசத்தால் ஆகிய மருந்து.
இரசனம் _ பொன் : வெள்ளி: நஞ்சு : பிசின் : பழம் : கழாயம் : இலைச்சாறு : ஒலி : உணவு : நேயம் : பல்.
இரசனா _ அரத்தை வகை.
இரசனி _ மஞ்சள் : அவுரி: செம் பஞ்சு : இரவு.


இரசனி முகம் _  மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம்: சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை.
இரசனை _ சுவை : படையின் அணிவகை:  பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி.
இரசாதலம் _ கீழ் ஏழு உலங்களுள் ஒன்று.
இரசாபாசம் _ சுவைக்கேடு : சீர் கேடு.
இரசாயனம் _ நஞ்சு : இரசவாதம் : வேதியியல் : காயசித்தி மருந்து: மோர்.


இரசாலம் _ மாமரம் : கரும்பு : பலா : கோதுமை.
இரசாலை _ அறுகு : நா : வெள்ளீறில்  என்னும் மர வகை.
இரசிகம் _ குதிரை : கயமைத்தனம் : யானை.
இரசிகன்_ காமுகன் : சுவைஞன்.
இரசிகை _ நா : காமுகி : மாதர் இடையணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:58 pm

இரசிதநாள் _ வெள்ளிக்கிழமை.
இரசிதம் _ வெள்ளி: பொன்னின் பூச்சு : முழக்கம் : ஒலி.
இரசித்தல் _ சுவைத்தல் : விரும்புதல்.
இரசுவம் _ குறுகிய அளவு : குற்றெழுத்து.
இரசேந்திரியம் _ சுவையுணர் : உறுப்பு : நாக்கு.


இரசை _ பங்கம் பாளை : பூமி : ஆனை வணங்கி :தினை : நா.
இரசோகுணம் _முக்குணத்துள் ஒன்று : மத்திமமான அறிவு.
இரசோபலம் _ இருள் : முத்து: இரசமணி.
இரசோனகம் _ வெள்ளுள்ளி.
இரச்சு _ கயிறு.


இரச்சுப்பொறுத்தம் _  பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று.
இரச்சுலம் _ கவண் : கல்லெறி கயிறு.
இரச்சுவம் _ குற்றெழுத்து.
இரஞ்சகம் _  துப்பாக்கியின் பற்று வாய் மருந்து : துப்பாகிக் காது :மகிழ்ச்சி தருவது.
இரஞ்சகன் _ இயக்குகிறவன்: சாயமூட்டுகிறவன் : விருப்பம் வரச்செய்கிறவன்.


இரஞ்சணம் _ மகிழ்ச்சி தருவது : செஞ்சாந்து.
இரஞ்சனி _  அவுரி : கவுள்.
இரஞ்சிதம் _ இன்பமானது : சித்தரிக்கப்பட்டது.
இரட்சகம் _ இரட்சிப்பு : மீட்பு : காத்தல்.
இரட்சகன் _ உய்விப்பவன் : காப்பாற்றுபவன்.


இரட்சணியம் _ காப்பு : மீட்பு.
இரட்சாபந்தனம் _ காப்புக் கட்டுதல்.
இரட்சாபோகம் _ பாதுகாவல் வரி.
இரட்சித்தல் _ காத்தல் : உய்வித்தல்.
இரட்சை _ காப்பாக இடுவது : திருநீறு : மந்தி ராட்சர யந்திரக்காப்பு.


இரட்டகத்துத்தி _ கத்தூரி வெண்டை.
இரட்டர் _ இராட்டிர கூட அரசர்.
இரட்டல் _ இரண்டாதல் : அசைத்தல் : மாறி மாறி ஒலித்தல் : யாழ்நரம்போசை.
இரட்டாங்காலி _ இரட்டையாகக் கிளைக்கும் மரம்.
இரட்டி _ இரு மடங்கு : இணைக்கை.


இரட்டிதல் _  இருமடங்காக்குதல் : திரும்பச் செய்தல் : இகழ்தல்: மாறுபடுதல்.
இரட்டிப்பு _ இருமடங்கு.
இரட்டு _ ஒலி : முருட்டுத் துணி: இரட்டையாய் இருத்தல்.
இரட்டுதல் _ இரட்டித்தல் : மாறியொலித்தல் : ஒலித்தல் : அசைதல் : வீசுதல் : கொட்டுதல் .
இரட்டுமி _ பறை வகை.


இரட்டுறக்காண்டல் _ ஐயக் காட்சி: ஒன்றை இரு வேறு பொருளாகப் பார்க்கை.
இரட்டுற மொழிதல் _ இரு பொருள் படப் பேசுதல்:  ஓர் உத்தி.
இரட்டுறல் _ சிலேடை : இரு பொருள் படுகை.
இரட்டுறுதல் _ இரு பொருள் படுதல் : ஐயுறுதல் மாறுபடுதல்.
இரட்டை _ இணை : கணவன் மனைவியர் : இரட்டைப்பிள்ளைகள் : இரட்டை எண் : மிதுனராசி : ஆனிமாதம் : வேதம் ஓதும் வகைகளுள் ஒன்று , முத்து வகை.


இரட்டைக்கிளவி _ ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி.
இரட்டைக்குச்சி _ சிலம்ப வித்தை வகை.
இரட்டைக்குறுக்கு _ மாட்டுக்குற்றம் வகை.
இரட்டைக்கை _  இணைக்கை.
இரட்டைச்சின்னம் _ இரட்டையான ஊது குழல் வகை.


இரட்டைச்சுழி _ இரு சுழி : ஐகார ஒலியைக் குறிக்கும்  (  )   என்னும் சுழி.
இரட்டைத்தாளம் _ தாளவகை.
இரட்டைத்தொடை _ ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத்தொடுப்பது.
இரட்டை நாக பந்தம் _ சித்திரக் கவி வகை.
இரட்டை நாடி _ மிகப்பருத்த உடம்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:59 pm

இரட்டைப்படை _  இரட்டிப்பு : இரட்டைப்பட்ட எண்.
இரட்டைப்பாக்கு _  இரு கண்ணுள்ள பாக்கு.
இரட்டைப்பிள்ளை _ ஒரே கர்ப்பத்திலிருந்து தனித்தனியாக ஒரு சமயத்தில் பிறந்த இருவர் : இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு.
இரட்டைப்பூட்டு _  இருமுறை பூட்டும் பூட்டு: பாதுகாப்புக்காக இடும் இரு வேறு பூட்டு.
இரட்டைமணி _  அணிவகை.



இரட்டைமணிமாலை _ பிரபந்தவகை : வெண்பா கலித்துறை இரண்டும் மாறி மாறி வரும் நூல் வகை.
இரட்டையர் _  இரட்டைப்பிள்ளைகள்: இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முது சூரியர்.
இரட்டையாட்சி _  இரு திறத்தார் பகுத்துக்கொண்டு செய்யும் அரசாட்சி.
இரட்டையேணி _  கவை ஏணி : ஒன்றன் மேல் மற்றொன்று வைத்துக்கட்டப்பட் ஏணி.
இரட்டைவரி _  ஒரே நிலத்திற்காக இரு திறத்தார்க்குச் செலுத்தும் வரி.



இரட்டை விருத்தம்  _ பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இரணகளம் _  போர்க்களம் பெருங்குழப்பம்.
இரணகள்ளி _ கள்ளி வகை.
இரணகாளம் _  போரை நிறுத்த ஊதும் எக்காளம்.
இரணங் கொடுத்தல் _ காயம் உண்டாகுமாறு அடித்துத் தாக்குதல்.



இரணங்கொல்லி _  ஆடு தின்னாப்பாளை : தும்பை.
இரணசங்கம் _  போர் வென்று ஊதும் சங்கு: வெற்றிச்சங்கு.
இரண சன்னி _ புண்களால் உண்டாகும் சன்னி.
இரண சிகிச்சை _ அறுவை மருத்துவம்.
இரணசுக்கிரன் _  கண்ணோய் வகை.



இரணசூரன் _ போர்வீரன்.
இரண பத்திரகாளி _ துர்க்கை: போரில் வெற்றி தரும் தேவதை: கொற்றவை.
இரணபாதகம் _ நம்பிக்கைத் துரோகம் : கொலை.
இரணபேரிகை _ போர்ப்பறை.
இரணம் _ போர் : புண் : பொன் : மாணிக்கம் : கடன் : சுக்கிலம் : பலகறை.



இரணரங்கம் _ போர்க்களம் .
இரணவாதம் _ நோய் வகை.
இரண வீரன் _ போர் வீரன்:  அங்காளம்மை கோயிலின் பரிவாரதெய்வம்.
இரண வைத்தியம் _  அறுவை வைத்தியம்.
இரண வைத்தியன் _ அறுவை மருத்துவன்.


இரணி _  பன்றி மோத்தை.
இரணிய கசிபு _ ஓர் அசுரன்.
இரணிய கருப்பன் _ நான் முகன்.
இரணியகன் _ பொன்னுடையவன் .
இரணிய தானம் _  பொன்னைக் கொடையாகத் தருதல்.


இரணிய நேரம் _  அந்தி நேரம்.
இரணியம் _ பொன் : பணம்.
இரணிமரம் _  மரவகை.
இரணை _  இரட்டை : இரண்டு.
இரண்டகம் _ துரோகம் : இருமனம் : வஞ்சகம்.


இரண்டாந்தரம் _  முக்கியமில்லாதது.
இரண்டாம் பாட்டன் _ பாட்டனின் தந்தை.
இரண்டாம் போகம் _  இரண்டாம் முறை பயிர் விளைதல்.
இரண்டு நினைத்தல் _  கெடுதி நினைத்தல்.
இரண்டு படுதல் _  வேறுபடுதல் : ஐயுறுதல் : ஒற்றுமையின்னை .



இரண்டெட்டில் _  விரைவில்.
இரண்டை _ கைம் பெண்.
இரண்டொன்று _ சில.
இரதகம் _ இத்தி மரம்.
இரத சத்தமி _ மாசி மாதத்து வரும் வளர் பிறை ஏழாம் நாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:59 pm

இரதபதம் _  புறா.
இரதபந்தம் _  சித்திரகவி வகை.
இரதம் _ தேர் : பல் : சாறு : அன்ன ரசம் : சுவை : இனிமை : வாயூறு நீர் :வண்டு : பாதரசம் : இரசலிங்கம் : மாமரம் : அனுராகம் : நீர் : ஏழு தாதுக்களுள் ஒன்று : நஞ்சு : வலி : இத்தி : கால் : உடல் : வஞ்சி மரம் : வாகனம்.
இரதன் _ கிளி : கண்.
இரதனம் _  அரைஞான்.



இரதனை _ அரத்தை : நா.
இரதாங்கம் _ தேர்க்கால் : சக்கர வாகப்புள்.
இரதாரூடன் _ தேரூர்வோன் : தேர் செலுத்துவோன்.
இரதி _  இலந்தை : விருப்பம் : காந்தன் : பெண்யானை : மன்மதன் தேவி: பித்தளை : இரத்தல் : புணர்ச்சி.
இரதிக் கிரீடை _  புணர்ச்சி : சுரத லீலை.



இரதோற்சவம் _ தேர்த்திருவிழா.
இரத்த கமலம் _  செந்தாமரை.
இரத்த குமுதம் _ செவ்வாம்பல்.
இரத்தகம் _ செவ்வாடை.
இரத்த காசம் _  கோழையும் இரத்தமும் விழும் ஒரு நோய்.



இரத்தக்கட்டி _  புண் கட்டி வகை.
இரத்தக் கண்ணன் _ கோபம் உடையவன்.
இரத்தக் கலப்பு _ நெருங்கிய உறவு.
இரத்தக் கவிச்சு _ உதிர நாற்றம்.
இரத்தக் கழிச்சல் - பேதி வகை.



இரத்தக் கனப்பு _  இரத்தக் கொழுப்பு.
இரத்தக் காணிக்கை  _  போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம்.
இரத்தக் கொதி _ துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு :  காமக்கிளர்ச்சி.
இரத்தக் கொழுப்பு _ இரத்த நிறைவு : மதம் : செருக்கு.
இரத்தக் கோமாரி _ மாட்டுக்கு வரும் நோய்.



இரத்த சந்தனம் _ செஞ்சந்தனம்.
இரத்த சந்தியகம் _  செந்தாமரை.
இரத்த சாகம் _ செங்கீரை.
இரத்த சாரம் _ கருங்காலி.
இரத்தச் சிலந்தி _ புண் கட்டி வகை.


இரத்தச் சுரப்பு _  குருதி மிகுதி: செருக்கு.
இரத்த சூறை _ மீன் வகை.
இரத்த நரம்பு _ இரத்தக் குழல்.
இரத்தப்பலி _ கொலை : உதிர நைவேத்தியம்.
இரத்தப்பலை _ கோவைப்பழம்.


இரத்தப்பாரதம் _  சாதிலிங்கம்.
இரத்தப்பிண்டம் _  சீன மல்லிகை.
இரத்தப்பித்தம் _  உதிரம் கெட்டு ஒழுகும் ஒரு நோய் : ஆடாதோடை.
இரத்தப்பிந்து _  வயிரக் குற்ற வகை: இரத்த விந்து.
இரத்தப்பீனசம் _ மூக்கிலிருந்து இரத்தம் காணும்  நோய்.



இரத்த பூடம் _  முள்ளிலவு.
இரத்த போளம் _  ஒரு வகை மணப்பண்டம்.
இரத்தப்பலம் _ ஆலமரம் : ஆலம் பழம்.
இரத்தப்பழி _ கொலை : கொலைக்கு கொலை.
இரத்தப்பிரமேகம் _ இரத்த வெட்டை.



இரத்தப்பிரவாகம் _  இரத்தப்பெருக்கு.
இரத்தப்பிரியன் _ கொலை விருப்புடையவன்.
இரத்தப்புடையன் _ பாம்பு வகை.
இரத்த மடக்கி _  உதிரம் கட்டு மருந்து.
இரத்த மண்டலம் _ செந்தாமரை : இரத்தம் பரவிருக்கும் பகுதி.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:59 pm

இரத்த மண்டலி _ நச்சுப்பாம்பு வகை.
இரத்த மாரணம் _ காவிக்கல்.
இரத்த மேகம் _ இரத்த வெட்டை.
இரத்தம் _ உதிரம் : சிவப்பு : ஈரல் : பவளம் : குங்குமம் : தாம்பிரம் : கொம்பரக்கு்
இரத்தல் _ பிச்சை கேட்டல் : வேண்டுதல்.



இரத்த வடி _ அம்மை நோய்.
இரத்த வழலை _ நச்சுப்பாம்பு வகை.
இரத்த வள்ளி _ செவ்வள்ளி என்னும் கொடி வகை.
இரத்த விந்து _ மாணிக்க வகையாகிய குருவிந்தம்.
இரத்த விரியன் _ பாம்பு வகை.



இரத்த வீசம் _ மாதுளை.
இரத்த வுதிரி _ மாட்டு நோய் வகை.
இரத்த வெட்டை _ இரத்தம் கலந்து சிறுநீர் வெளிப்படும் நோய் வகை.
இரத்தாசயம் _ இருதயம்.
இரத்தாட்சி _ ஓர் ஆண்டின் பெயர்.




இரத்தாதி சாரம் _ சீதபேதி வகை.
இரத்தாம்பரம் _ செவ்வாடை: மரவகை.
இரத்தி _ இலந்தை : மரவகை : இத்தி.
இரத்தின கம்பளம் _ சித்திரக்கம்பளம்.
இரத்தின சபை _ திருவாலங் காட்டில் நடராசப்பெருமான் எழுந்தருளியிருக்கும் மணியம் பலம்.


இரத்தினசானு _ மகாமேரு மலை.
இரத்தினச் சுருக்கம் _ சில சொற்களால் பெரும் பொருளை விளக்குதல்: அழகுறுச் சுருங்கியது.
இரத்தினத் திரயம் _ நல்லறிவு: நற்காட்சி : நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகள்.
இரத்தின தீவம் _ இலங்கை.
இரத்தின பிரத்தம் _ கயிலை மலையின் தாழ்வரை.


இரத்தினப் பிரபை _ மகளிர் அணிவகை: ஏழு நரகத்துள் ஒன்று.
இரத்தின மாத்திரை _ ஒரு குளிகை.
இரத்தின மாலை _ மணிவடம்.
இரத்தினம் _ மணி : அரத்தை.
இரத்தினாகரம் _ தனுஷ் கோடிக்கு வடக்கில் உள்ள கடல்: மணிகளுக்கு இருப்பிடம்.


இரத்தினி _ முன்கைப்பேரெலும்பு.
இரத்தை _ சக்தி மூர்த்தங்களுள் ஒன்று : மஞ்சிட்டி வேர் : உமா தேவி.
இரத்தைச்சுருட்டை _ சுருட்டைப் பாம்பு வகை.
இரத்தோற்பலம் _ செந்தாமரை : செங்குவளை.
இரந்திரம் _ குழி : துளை : வெளி : சென்மலக்கினம் : இரகசியம் : சுருங்கை : நிந்தை.


இரந்தை _ இலந்தை.
இரப்பாளன் _ ஐயம் ஏற்பவன்.
இரப்பி _ இரக்கச்செய் : யாசிப்பவள்.
இரப்பு _ யாசிக்கை : பிச்சை : வறுமை.
இரப்புணி _ இரந்துண்ணி.


இரமடம் _ பெருங்காயம்.
இரமணம் _ இன்புறச்செய்கை : காம சேட்டை : சுரத விளையாட்டு : கழுதை.
இரமணன் _ கணவன் : மன்மதன் : தலைவன்.
இரமணியம் _ சரச விளையாட்டு : இன்பம் செய்வது.
இரமணீயம் _ அழகுள்ளது.


இரமதி _ காகம் : மன்மதன் : காமம் உடையவன் : காலம் : துறக்கம்.
இரமா _ திருமகள் : இன்பம் தருபவள் .
இரமாப்பிரியம் _ தாமரை.
இரமாபதி _ திருமால்.
இரமித்தல் _ மகிழ்தல் : புணர்தல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:00 pm

இரமியம் _ அழகு : மனநிறைவு : இரமிய வருடம் : நவ வருடத்துள் ஒன்று.
இரமை _ திருமகள் :செல்வம் : மனைவி.
இரம்பம் _ மரம் அறுக்கும் வாள் : கத்தூரி விலங்கு.
இரம்பிகம்இரம்பிலம் _ மிளகு.
இரம்பை _ இரம்பம் : கத்தூரி விலங்கு : தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி.



இரலை _ கலைமகள் : புல்வாய் : அசுவினி நாள் : துத்தரி என்னும் ஊது கொம்பு.
இரவச்சம் _ மானம் தீர வரும் இரத்தலுக்கு அஞ்சுவது.
இரவணம் _ ஒட்டகம் : குயில் : வண்டு : கழுதை : வெப்பம் : பரிகாசம் செய்தல் : வெண்கலம்.
இரவதம் _ குயில்.
இரவம் _ இருள் மரம் : ஒலி.


இரவரசு _ சந்திரன்.
இரவலன் _ யாசகன் : பரிசில் விரும்புவோன்.
இரவல் _ யாசகம் : திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள்: சொந்தமில்லாதது.
இரவறிவான் _ சேவற்கோழி.
இரவற் குடி _ குடியிருக்கும் குடும்பம்.



இரவற் சோறு _ பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு.
இரவன் _ சந்திரன்.
இரவி _ சூரியன் : மூக்கின் வலது பக்கத்துளை : மலை : எருக்கு :வாணிகத் தொழில்.
இரவி கன்னம் _ பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு.
இரவி காந்தம் _ சூரிய காந்தக் கல்: தாமரை.


இரவிகுலம் _ சூரிய குலம் : சூரிய மரபு.
இரவிக்கை _ மாதர் உடை வகை.
இரவி நாள் _ இரேவதி நாள்.
இரவி மது _ வெள்ளி.
இரவி மைந்தர் _ அசுவினி தேவர்.



இரவி வாரம் _ ஞாயிற்றுக்கிழமை.
இரவு _ இராத்திரி :இருள் மரம் : இரத்தல் : இரக்கம் : பன்றி வாகை: மஞ்சள்.
இரவுக்குறி _ இரவில் தலைவனும் ,தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம்.
இரவுபகல் _ இரவுற் பொழுதும் பகற் பொழுதும்.
இரவெரி _ இரவில் ஒளி மயமாக விளங்கும் மரவகை: சோதி விருட்சம்.


இரவேசு _ தளிர் வெற்றிலை.
இரவை _ நுட்பமான பொருள் : கோதுமைக் குறுநொய் : வயிரம் : துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு.
இரவோன் _ சந்திரன் : இரவலன் .
இரளி _ கொன்றை.
இரற்றுதல் _ அரற்றுதல் : ஒலித்தல் : சத்தமிடுதல் .



இரா _ இரவுப்பொழுது : இராத்திரி .
இராகங் கலத்தல் _ ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல்.
இராகதத்துவம் _ சுத்தா சுத்த தத்துவங்களுள் ஒன்று.
இராகப்பறவை _ கின்னரப் பறவை.
இராகமாலிகை _ ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்து வரப்பாடுவது.



இராகமெடுத்தல் _ ஆலாபனம் செய்தல்.
இராகம் _ பண் : இராகத்தத்துவம் : நிறம் : கீதம் : சிவப்பு : ஆசை.
இராகவம் _ திமிங்கிலத்தை விழுங்க வல்ல பெரிய மீன்.
இராகவர்த்தனி _ முப்பத்திரண்டாவது மேள கர்த்தா.
இராகவன் _ இரகு குலத்தில் தோன்றிய இராமன்.


இராகவி _ ஆனை நெருஞ்சி.
இராக விண்ணாடகம் _ சரக் கொன்றை.
இராக விராகம் _ வேண்டுதல் வேண்டாமை: விருப்பு வெறுப்பு.
இராகவேகம் _ ஆசை மிகுதல்.
இராகாதனம் _ யோகாசன வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:00 pm

இராகி _ கேழ் வரகு :பற்றாசு.
இராகினி _ வெற்றிலை.
இராகு _ கரும் பாம்பு : கோமேதகம் : ஒனடபது கோள்களுள் ஒன்று.
இராகு காலம் _ இராகுக் கோளுக்குரிய வேளை.
இராகு மண்டலம் _ பூமியின் சாயை.



இராக்கடைப் பெண்டிதர் _ பொது மகளிர்.
இராக்கதம் _ எண் வகை மணங்களுள் ஒன்று.
இராக்கதன் _ அரக்கன்.
இராக்கதி _ அரக்கி.
இராக்கதிர் _ சந்திரன்.



இராக்கினி _ அரசன் மனைவி: அரசி.
இராக் குருடு _ மாலைக்கண்.
இராச கனி _ எலுமிச்சம் பழம்.
இராச கன்னி _இளவரசி : அரிசிளம் பெண்.
இராச காரியம் _ அரசியல் :அரசர்க்குச் செய்யும் ஊழியம் : மேலான செயல்.



இராச கீரி _ வெண் கீரி.
இராச குஞ்சரம் _ அரசுவா : அரசர் தலைவன்.
இராச குமாரன் _ இளவரசன் : அரசன் புதல்வன்.
இராச குலம் _ அரச குடும்பம்.
இராச கேசரி _ சோழர் காலத்து அளவு கருவி: சோழ மன்னருள் சிலரின் பட்டப்பெயர்.



இராச கோலம் _ அரசன் திரு வோலக்க உடை.
இராச சக்கரம் _ அரசாணை.
இராச சபை _ அரசவை.
இராச சிங்கம் _ அரசரேறு.
இராச சின்னம் _ அரசர்க்குரிய முடி , குடை ,முரசு , கொடி முதலிய உறுப்புகள் : அரசர் சின்னம்.



இராச சூயம் _ வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி: தாமரை.
இராச சேகரன் _ அரசர் தலைவன்.
இராச தந்தம் _ முன்வாய்ப்பல்.
இராச தந்திரம் _ அரசியல் நூல் : அரசியல்.
இராசதம் _ முக்குணங்களுள் ஒன்று: இரசோகுணம் : அரச பதவி.



இராசதாலம் _ கமுக மரம்.
இராசதானி _ மாநிலம் : தலை நகரம்.
இராசத்துரோகம் _ அரசர்க்குச் எதிராக செய்யும் செயல்.
இராசத்துவாரம் _ அரண்மனை வாயில்.
இராச நாகம் _ நாகப்பாம்பு வகை.



இராசநீதி _ அரசன் அறநெறி.
இராசப் பிரிதி நிதி _ அரசனுக்குப் பதிலாள்.
இராச பக்தி _ இராசனிடம் வைக்கும் அன்பு.
இராச பட்டம் _ ஒரு வகைத் தலைப்பாகை : முடி சூட்டு.
இராச பத்திரம் _ அரசனுடைய ஆணை.



இராச பத்தினி _ அரசி : அரசன் மனைவி.
இராச பாட்டை _ பெரு வழிப்பாதை.
இராச பிளவை _ முதுகில் உண்டாகும் பெரும் புண்.
இராச புத்தி _ கூர்ந்த அறிவு.
இராச புத்திரன் _ அரசன் மகன் : கோமகன்.



இராச மகிஷி _ அரசன் தேவி.
இராசமணி _ நெல்வகை.
இராச மானியம் _ அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம்.
இராச முடி _ அரசன் முடி : தெய்வச் சிலைகளுக்குச் சாத்தும் கொண்டை.
இராச முத்திரை _ அரசன் இலச்சனை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 9:02 pm

இராச மோடி _ அரச மிடுக்கு.
இராச யோகம் _ அரசனாவதற்குரிய கோள் நிலை: பெரு வளப்பேரு : யோக நிலைகளுள் ஒன்று.
இராசராசன் _ மன்னர் மன்னன் : பேரசன் : சக்கரவர்த்தி : குபேரன் :இராசராச சோழன்.
இராசராசேச்சரம் _ இராசராசன் கட்டிய பெரிய கோயில் : தஞ்சைப் பெரிய கோயில்.
இராசராசேச்சுவரி _ உமாதேவி வடிவங்களுள் ஒன்று.




இராச ரிஷி _ அரசனாயிருந்து முனிவனானவன். விசுவா மித்திரன்.
இராசருகம் _ அகில் : வெள்ளைத்தும்பை.
இராச லட்சுமி _ எட்டு லட்சுமிகளில் ஒன்று.
இராசவரிசை _ அரசர்க்குச் செய்யும் சிறப்பு .
இராசவள்ளி _ கொடி வள்ளி வகை.





இராச வாகனம் _ அரசன் ஊர்தி : சிவிகை: கோவேறு கழுதை.
இராச வாய்க்கால் _ தலைமையான நீர்க்கால்.
இராச வாழை _ குலை ஒன்றிக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழை வகை.
இராச விருட்சம் _ கொன்றை மரம்.
இராச வீதி _ அரசர் உலா வருவதற்குரிய பெருந் தெரு.




இராச வைத்தியம் _ பத்தியம் இல்லாத மருத்துவம்.
இராசனை _ வெள்ளைப்பூண்டு.
இராசன் _ அரசன் : சந்திரன் : இந்திரன் : தலைவன் : இயக்கன் .
இராசாங்கம் _ அரசாட்சி.
இராசாணி இராசாத்தி _ அரசி.




இராசாதனம் _ முருக்கு : முரள் :அரியணை.
இராசாளி _ பறவை வகை: வல்லூறு.
இராசான்னம் _ ஒரு வகை உயர்ந்த நெல்.
இராசி - வரிசை : கூட்டம் : குவியல் : இனம் : மொத்தம் : அதிட்டம் : சுபாவம் : மேடம் முதலிய இராசி.
இராசிக்காரன் _ நற்பேருடையவன்.




இராசிகம் _ வரி : இயற் கணிதம் : அமிசம் : அரசனால் வருவது : குவியல் : நரம்பு : ஓர் இராசி.
இராசிகை _ வயல் :இரேகை : ஒழுங்கு : கேழ்வரகு .
இராசி சக்கரம் _ இராசிகளை எழுதி அடைத்த சக்கரம் : இராசி மண்டலம்.
இராசி பண்ணுதல் _ சமாதானம் செய்தல் .
இராசிப் படுதல் _ மனம் பொருந்துதல்.



இராசிப் பொருத்தம் _ கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று.
இராசிப் பொன் _ கலப்பில்லாத பொன்.
இராசியடி _ அளந்த பின் கிடக்கும் கள நெல்.
இராசியத் தானம் _ மறைவிடம் .
இராசியம் _ மறைவு : மாதர் மறைவுத்தானம் : தாமரை : அந்தப்புரம்.



இராசிலம் _ சாரைப்பாம்பு .
இராசீகம் _ அரசனால் வருவது.
இராசீவம் _ தாமரை: மான் வகை.
இராசை _ திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோயில் என்னும் தலம்.
இராசோத்துங்கன் _ அரசருள் சிறந்தவன்.




இராச்சியம் _ ஆளுகை : உலகு : அரசாளும் நாடு.
இராடம் _ பெருங்காயம் : வெண்காயம் : இலாடம் : கழுதை.
இராட்சச _ ஒரு தமிழ் வருடம்.
இராட்சசன் _ அரக்கன்.
இராட்டிரம் _ நாடு : நகரில் உள்ள மக்கள்.



இராட்டினம் _ நூற்கும் பொறி : நீர் இறைக்கும் கருவி : ஏறி விளையாடும் சுழல் தேர்.
இராட்டின வாழை _ வாழை வகை.
இராட்டு _ இராட்டினம் : தேன் கூடு .
இராணம் _ மயில் தோகை : இலை.
இராணி _ அரசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 36 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum