தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 33 of 36 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:24 pm

அவுதா _ யானைமேல் உள்ள இருக்கை: அம்பாரி
அவுரி _ நீலீச்செடி: மீன்வகை: 
அவுரிப்பச்சை _ பச்சைக் கருப்பூரம்
அவுல்தார் _ சிறு படைக்குத் தலைவன்
அவுனியா _ வெளவால் மீன்


அவேதம் _ நூற்கொள்ளைக்கு மாறுபட்டது: அசதி: மறதி
அவேத்தியன் _ அறியப்படாதவன்
அவை _ சபை : புலவர்குழு: பன்மைச்சுட்டு: நாடக அரங்கு
அவைத்தல் _ நெல் முதலியவற்றைக் கையால் குத்துதல்: அவித்தல்: நெரித்தல்
அவைப்பரிசாரம் _ சபை வணக்கம்


அவையடக்கம்  _  அவையின் முன்னர் தாழ்ந்து பேசுதல்: வழிபடு கிளவி
அவையம் _  நியாயம் உரைக்கும் அறிஞர்கூட்டம்
அவையல் _ குற்றலரிசி: திரள்: அவல்
அவ் _ சுட்டுச்சொல்: அவை
அவ்வது _ அவ்வாறு


அவ்வாறு  _  அப்படி
அவ்விடம் _ அங்கு
அவ்வித்தல் _ மனம் கோணுதல்: பொறுமை இழத்தல்
அவ்விதழ் _ பூ இதழ்
அவ்வியக்தம் _ அறியப்படாத எண்: 108 உபநிடதங்களுள் ஒன்று: மூலம் பிரகிருதி: ஆன்மா பீடத்தோடு கூடிய சிவலிங்கம்


அவ்வியக்தன் _ கடவுள்
அவ்வியம் _  மனக்கோட்டம்: அழுக்காறு: வஞ்சகம்
அவ்வை _ தாய்: கிழவி: தவப்பெண்: ஒளவை
அழகம் _ பெண்டிர் கூந்தல்
அழகி _ அழகிய பெண்


அழகியவாணன் _ ஒருவகை நெல்
அழகு _ சிறப்பு: நூல் வனப்புள் ஒன்று: நற்குணம்: கண்ட சருக்கரை
அழக்கு _ அழாக்கு: ஒரு அளவு வகை
அழக்குடம் _ பிணக்குடம்
அழக்கொடி _ பேய்ப்பெண்


அழத்தியன் _ பெருங்காயம்
அழம் _ பிணம்
அழலல் _ சினத்தல் : எரிதல்
அழலம் பூ _ தீம் பூ மரம்
அழலவன் _ அக்கினி தேவன்: சூரியன்: செவ்வாய்


அழலாடி _  கையில் நெருப்புடன் ஆடும் சிவன்
அழலி _ நெருப்பு
அழலிக்கை _ எரிச்சல்: பொறாமை
அழலேந்தி _ சிவன்
அழலை _ தொண்டைக்கரகரப்பு: களைப்பு


அழலோம்புதல் _ அக்கினி கரியம் செய்தல்:
அழலோன் _  அக்கினி தேவன்
அழல் _ நெருப்பு: தீக்கொழுந்து: வெப்பம் : கோபம்: நஞ்சு: உரைப்பு: கார்த்திகை நாள்:கேட்டை : செவ்வாய்: கள்ளி: எருக்கஞ்செடி: நரகம்
அழல் _ வண்ணன்: சிவன்
அழறு _ சேறு


அழற் கண்ணன் _ சிவன்
அழற்கதிர் _ சூரியன்
அழற் காய் _ மிளகு
அழற்குட்டம் _ கார்த்திகை நாள்
அழற்சி _ கால் நடைகளுக்குச் சுரம் உண்டாகும் ஒரு வகை நோய்: எரிவு: அழுக்காறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:25 pm

அமரியோன் - போர் வீரன்.
அமரிறை - இந்திரன்.
அமரேசன் - இந்திரன்.
அமரை - அறுகு : இந்திரன் நகர் : கருப்பை : கொப்பூழ்க் கொடி : வீடு : தேவாமிர்தம் : தெய்வமகள் : துர்க்கை.
அமரோர் - அமரர்.




அமா - போர் : விருப்பம் : மதில் : அமைதி.
அமர்தல் - அடங்குதல் : அமைதல் : மனம் ஒன்றுதல் : ஒப்பாதல் : பொருந்துதல் : விரும்புதல் : வாய்த்தல்.
அமர்த்த - மாறுபட்ட : பொருந்தின.
அமர்ந்தான் - மேற்கொண்டான்.
அமர்வு - சேர்க்கை : இருப்பிடம் : விருப்பம்.



அமலம் - அழகு : அழுக்கின்மை : தூய்மை.
அமலகம் - நெல்லி.
அமலல் - அதிகரித்தல் : மிகுதல்.
அமலன் - கடவுள் : அருகன் : சிவன் : மலமிலி : சீவன் : முக்தன்.
அமலா - நெல்லிமுள்ளி : நெல்லி வற்றல்.



அமலுதல் - நெருங்குதல் : பெருகுதல்.
அமலை - ஆரவாரம் : கூத்து : திரளை : மிகுதி : பார்வதி :  திருமகள் :  ஒலி : கடுக்காய் : காளி : கொப்பூழ்க் கொடி :
சுத்தம் :  அழுக்கின்மை :  அழுக்கின்மையை உடையவள் :  நெல்லி மரம்.
அமல் - நிறைவு : அதிகாரம் : மேல் விசாரணை.
அமளி - படுக்கை : ஆரவாரம் : மிகுதி.
அமளி பண்ணுதல் - சச்சரவு உண்டாக்குதல்.



அமளை - கடுகு ரோகணி.
அமறல் - மிகுதி : பொலிவு : அதிகம் : மிகை.
அமனி - தெரு :  வீதி : மன்றம் : மார்க்கம்.
அமன் - பன்னிரு கதிரவர்களுள் ஒருவன்.
அமன்ற - நெருங்கின.



அமன்றன்று - நெருங்கிற்று.
அமாத்தியன் - அமைச்சன்.
அமானத்துச்சிட்டா - பொதுக்குறிப்பேடு.
அமானம் - அளவின்மை : கணக்கின்மை.
அமானி - பொது : பொறுப்பு : புளியாரை : வரையறுக்கப்படாதது.



அமிசம் - சிறுபங்கு : பங்கு : அதிருட்டம் : அன்னப் பறவை : செல்வாக்கு : தாயபாகம் : நேர்மை.
அமிசுகம் - இலை : நல்லாடை : உயர்ந்த ஆடை.
அமிசை - அமைப்பு.
அமிஞ்சி - கூலியில்லாமல் வாங்கும் வேலை.
அமிதம் - அளவின்மை.



அமித்திரன் - ஒரு முனிவன் : பகைவன்.
அமிருதம், அமிர்தம், அமிர்து - பால்  : தேவர் உணவு  :  உயிர் தரும் மருந்து  : இனிப்பு  : அழவில்லாதது : இனிய பொருள்  : சோறு  : நீர்  : நெய்  : மோர்  : வீடுபேறு  : வேள்விப் பொருள்களின் மிஞ்சியவை  : உப்பு  : திரிகடுகு.
அமிர்தகலை - சந்திரகலை.
அமிர்தை - பார்வதி : சீந்தில் : நெல்லி : வெள்ளைப் பூண்டு : கள் : அழிவின்மை.
அமிழ்தல் - ஆழ்தல் : தாழ்தல் : தணிதல்.



அமிர் - முகமதியச் செல்வன் : தலைவன்.
அமுக்கன் - மறைவாகக் காரியஞ் செய்பவன்.
அமுங்கல் - அழுந்தல் : தாழ்தல் : முங்குதல் : மூழ்கல்.
அமுதம் - அமிர்தம் : ஆகமம்.
அமுதசம்பூதன் - திங்கள்.



அமுதவல்லி - சீந்தில்.
அமுதவெழுத்து - மங்கலவெழுத்து [அ, இ, உ, எ, க், ச், த், ந், ப், ம், வ் என்பன]
அமுதவேணி - சிவன்.
அமுதாசநர் - தேவர்.
அமுதன் - கடவுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:26 pm

அழனம் _பிணம் :வெம்மை: தீ
அழனாகம் - ஒரு வகை நச்சுப்பாம்பு
அழாஅல் - அழுகை


அழி _ கேடு: வைக்கோல் : வண்டு் :மிகுதி: வருத்தம் :கிராதி
அழிகட்டு _ பொய்ச்சீட்டு:வீண்போக்கு: தடை: மந்திரம்
அழி கரப்பான் _ படர் தாமரை நோய்
அழிகரு _ கரு அழிவு


அழிகிரந்தி _ கிராந்தி நோய் வகை
அழிகுரன் _ தோற்றவன்
அழிஞ்சில் _ ஒரு வகை மரம் : செம்மரம்.


அழிதகை _ தகுதிக் கேடு
அழிநோய் _ குட்டம்


அழிபடுதல் _ சிதைதல் :வீணாதல்: நாசமாதல்
அழிபாடு _ அழிவு: கேடு 
அழிபுண் _ அழுகு: இரணம் : ஆறாத புண்.



அழிப்பாளன் _ தட்டான் : பொற்பொல்லன்
அழிமதி _ கெடுமதி 
அழிம்பு _ தீம்பு: அவதூறு: நீதியற்ற வழக்கு: வெளிப்படையான பொய்


அழியல் _  மனக்கலக்கம்
அழியாமுதல் _ நிலையான மூல நிதி: இறைவன்
அழிவது _ கெடுவது
அழிவழக்கு _ இழிந்தோர் வழக்கு: வீண் வாதம்
அழிவி _ கழி முகம்


அழிவு _ கேடு: தீமை: செலவு : வறுமை: தோல்வி
அழிவு காலம் _ கெட்ட காலம் : ஊழி
அழுகல் _ பதன் அழிந்தது: அசுத்தம்
அழுகள்ளன் _ பாசாங்கு செய்பவன்
அழுகுணி _ அழும் தன்மையுடையவன்


அழுகுதல் - பதன் அழிதல்
அழுக்கணவன் _ ஒருவகைப்புழு
அழுக்கம் _ கவலை: சஞ்சலம்
அழுக்காறு _ பொறாமை: தீய நெறி
அழுக்கு _ மலம் : மாசு: ஆணவம் முதலிய தீக் குணங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:26 pm

அன்று - அந்த நாள்; 'அது இல்லை' என்னும் பொருள்படும் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
அன்றில் - இணைபிரியாத கிரவுஞ்சம் என்னும் பறவை; மூல நட்சத்திரம்
அன்றியும் - மேலும்
அன்றி - அல்லாமல்; அல்லாமலும்; மேலும்
அன்றன்று, அன்றாடம், அன்றாடு - நாள்தோறும்

அன்மை - அல்லாத தன்மை; தீமை
அன்புகூர் - மிகவும் விரும்பு அல்லது மிகவும் நேசி [அன்புகூர்தல்]
அன்பு - பிரியம்; பற்றுதல்; நட்பு; அருள்; பக்தி; நம்பிக்கை
அன்பன் - நண்பன்; பக்தன்; நேசிப்பவன்
அன் - ஆண்பால் பெயர் விகுதி (எ.கா - நாடன்); ஆண்பால் வினை விகுதி (எ.கா - செய்தனன்); தன்மையொருமை வினை விகுதி (எ.கா - நான் செய்வன்); ஒரு சாரியை (எ.கா - செய்தனன்)

அறைகூவு - போருக்கு அல்லது போட்டிக்கு அழை; வலிய அழை [அறைகூவுதல்]
அறைக்கீரை - ஒருவகைக் கீரை
அறை - அடித்தல் செய்; பேசு; சிறிது சிறிதாக வெட்டு; ஒலி செய்; மோது [அறைதல்]; அடித்தல்; மோதுதல்; ஓசை; பேசிய சொல்; விடை; வீடு; வீட்டின் உள்ளிடம்; ஒரு கட்டம்; குகை; சுரங்கம்; வஞ்சனை; பாறை; திரைச் சீலை; துண்டு; பாசறை; அலை : காற்று முதலியன அறைதல் : ஒலித்தல் : துண்டித்தல் : பறை முதலியன கொட்டுதல்.
அறுவை - ஆடை; சீலை; தோளில் தொங்கவிடும் உறி
அறுவடை - கதிர் அறுப்பு

அறுமுகன் - ஆறு முகங்களுடைய குமரக் கடவுள்
அறுபது - ஆறு பத்துக்கள்
அறுப்பு - அறுத்த துண்டு; கதிர் அறுத்தல்
அறுதியிடு - தீர்மானம் செய்; முடிவுறச் செய்
அறுதி - முடிவு; நாசம்; வரையறை; எல்லை; உரிமை

அறுதலி, அறுத்தவள் - தாலி இழந்தவள்; அமங்கலி : விதவை : கைம்பெண்.
அறுத்துக்கட்டுதல் - தாலியறுத்தவள் மறுபடியும் மணத்தல்
அறுகோணம் - ஆறு கோண வடிவம்
அறுகை - அருகம்புல்
அறுகு - அருகம்புல்; சிங்கம்; புலி; யாளி; ஒரு குறுநில மன்னர்.

அறு - அறுந்து போ; முடிந்து போ; இல்லாமற் போ; ஊடறு; இல்லாமற் செய்; வளை தோண்டு; ஜீரணம் செய்; முடிவு செய்; நீக்கு [அறுதல், அறுத்தல்]; தீர்தல் : பாழாதல் : அறுந்தது; எதற்குங் கூடாததாதல் : கைம்பெண் : நூல் கயிறு முதலியன அறுதல் : பயனற்றதாதல் : அற்றுப் போதல் : கொலையுண்டல் : தங்கல் : வகை செய்தல்.
அறிவுறுத்து - அறிவு புகட்டு; தெரிவி [அறிவுறுத்துதல்]
அறிவு கொளுத்துதல் - புத்திபுகட்டுதல்; ஞானம் பிறக்கச் செய்தல்
அறிவு - கல்வியறிவு; புத்தி; உணர்வு; ஞானம்
அறிவினா - சோதனைக்காகத் தெரிந்து கொண்டே கேட்கும் கேள்வி (எதிர் மொழி - அறியான் வினா)

அறிவிலி - அறிவில்லாதவன்
அறிவி - பிறார் அறியச் சொல்; பலர் அறியச் செய் [அறிவித்தல், அறிவிப்பு]
அறிவாளன், அறிவாளி - புத்திசாலி; அறிஞன்
அறிவன் - அறிவுடையவன்; புத்தன்; அருகன்; புதன் கிரகம்; செவ்வாய்க் கிரகம்; கம்மியன்; கணி அல்லது சோதிடன்
அறியாமை - மடமை; எதையும் அறிந்து கொள்ளாமல் இருப்பது

அறிமுகம் - (பிறருடன்) பழக்கம்; தெரிந்த முகம்; தன்னைப்பற்றி கூறுதல்
அறிமடம் - குழந்தைப் பருவத்து அறியாமை; அறிந்தும் அறியாது போலிருத்தல்; அறிந்தும் அறியாது போன்றிருத்தல் : விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை
அறிதுயில் - யோக நித்திரை; விழிப்புடனேயே உறங்கும் ஒரு வகைத் தியானம்; அஃதாவது தூங்காமல் தூங்குதல்.
அறிஞன் - அறிவுடையவன்; புலவன்; புதன் கிரகம்
அறிகுறி - அடையாளம்

அறிக்கை - அறிவிப்பு; வெளியீடுதல்
அறி - உணர்; அனுபவி; பயிலுதல் செய்; மதித்தல் செய்; நிச்சயி [அறிதல், அறிகை]; அறிவு
அறுவிலை - அளவு மீறிய விலை
அறன் - அறம்; வேள்வி செய்பவன்
அறவோன் - தருமவான்

அறவன் - தருமவான்; முனிவன்; கடவுள்; புத்தன்
அறல் - அறுந்து பிரிதல்; ஓடும் நீர்; நீரலை; கருமணல்; நெளிவுகளுள்ள மயிர்; குறுங்காடு; நீர் , புனல் , திரை , அரித்தோடுகை சிறுதூறு : நெறி : திருமணம் : அறுக்கப்பட்ட தன்மை : அறுதல்: இல்லாமற்போதல்.
அறம் - தருமம்; புண்ணியம்; மதம்; நோன்பு; ஒரு செய்யுளில் தீய பலன் விளைவிக்கும் சொல்; இயமன்; தரும தேவன்
அறநிலை - தரும நெறிக்குப் பொருந்திய நிலை; பிரம மணம்
அறத்துறை - தரும நெறி
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:27 pm

அமுது - அமுதம்  : சோறு  : நீர்  : பால்  : இனிப்புப் பொருள்  : நிவேதனம்  : வீடுபேறு  : உப்பு  :  இனிப்புள்ள சாப்பாடு  : பாயசம்.
அமுதுகுத்துதல் - உறைமோர் பாலில் ஊற்றுதல்.
அமுதுபடி - அரிசி.
அமுதுசெய்தல் - உண்டல்.
அமுரி - சிறுநீர்.



அமூர்த்தன் - சிவன்.
அமேத்தியம் - மலம்.
அமேயம் - அளவிட முடியாதது  : பிரமேயம் ஆகாதது.
அமை - மூங்கில் : அழகு : அமாவாசி : நாணல் : தினவு : திங்களினுடைய பதினாறாங்கலை : அமையென்னும் ஏவல் : தலை : தவிர் : பொது : அடங்கு : அம்மை : தணி : தகு : தங்கு: பொறு.
அமைச்சன் - மந்திரி  : வியாழன். 



அமைச்சு - மந்திரித் தொழில்  : மந்திரிமார்.
அமைதல் - அடங்கல்  : பொருந்துதல் : தகுதியாதல்   : போதியதாதல்  : நிறைதல்  : சிறத்தல்  : உண்டாதல்  : தங்குதல்  : உடன்படுதல்  : மேவுதல் :முடிதல்.
அமைதி - அடக்கம்  : சமயம் : தன்மை.
அமைப்பு - ஊழ்  : ஏற்பாடு : நிலை.
அமையம் - காலம் : இலாமிச்சை.



அமையாமை - மனநிறைவு கொள்ளாமை : கீழ்ப்படியாமை : கிடைத்தற்கருமை.
அமையான் - ஆறான்  : பொருத்தமில்லாதவன் : அடங்கான் : தவிரான்.
அமைவரல் - அமைந்து வருதல்.
அமைவன் - முனிவன்  : கடவுள் : அடக்கமுடையோன் : அருகன் : அறிவுடையவன் : துறவி : ஒழுக்கமுடையவன் : உடன்படுவோன்.
அமைவு - இயல்பு : நிறைவு : பெருமை : ஆறுதல் : அடக்கம் : சேர்த்தல் : பொருந்துகை :
புலனடக்கம் : பொறுமை : மனவமைதி : ஒப்பு.



அமோகபாணம் - மருளகற்றுங்கணை.
அமோகம் - பெருகும் தன்மை : மழுங்குதலின்மை : இலக்குத்தப்பாமை.
அம் - அழகு : நீர் : முகில் : ஒரு சாரியை.
அம்பகம் - கண் : எழுச்சி : விடை : செம்பு.
அம்பகை நெறித்தழை - அழகிய மாறுபட்ட முழுநெறியை உடைய தழையுடை.



அம்பணத்தி - துர்க்கை.
அம்பணம் - நீர் : கூடல்  : வாய் : துலாக்கோல் : மரக்கால் : வாழை : யாழ்வகை.
அம்பணவர் - பாணர்.
அம்பரம் - வான் : திசை : கடல் : சீலை : துயிலிடம்.
அம்பரவாணம் - எண்காற்புள்.



அம்பரை - நிமிளை.
அம்பர் - ஓர்க்கோலை : அவ்விடம் : ஒரு மரப்பிசின் : ஒரு மருந்து : ஓர் ஊர் :
வாசனைத் தூள் : அப்பால்.
அம்பலக்காரன் - ஊர்த்தலைவன் : கள்ளர் குலப் பட்டப்பெயர்.
அம்பலம் - சபை : வெளி : சபை கூடுமிடம் : பொதுவிடம் : தில்லை.
அம்பலி - முட்டை வெள்ளைக்கரு : களி : ஒரு வாச்சியம்.



அம்பல் - பழிமொழி : புறங்கூற்று : சிலர் அறிந்த அலர்.
அம்பறாத்தூணி - அம்புக்கூடு : அம்புப் புட்டில்.
அம்பாயம் - உபாதி : பிரசவ வேதனை.
அம்பாரம் - பெருங்குவியல்.
அம்பாரி - யானைமேல் தவிசு.



அம்பாலிகை - அழகிய சிறு பெண் : உமையவள் : தரும தேவதை : பாண்டுவின் தாய்.
அம்பால் - தோட்டம்.
அம்பாள் - உமை : துர்க்கை.
அம்பாவனம் - சரப்பறவை.
அம்பி - இறை கூடை : நீர்ப்பொறி : தாம்பணி : ஓடம் : மரக்கலம் : மிடா : கள்.



அம்பிகை - பார்வதி : காளி : திருதராட்டிரன் தாய் : தரும தேவதை  : தாய்.
அம்பியகமணை - தெப்பத்தின் உட் கட்டை.
அம்பு - நீர் : முகில் : தளிர் : எலுமிச்சை : மூங்கில் : திப்பிலி : வளையல் : உலகம் : பாணம்.
அம்புசாதம் - தாமரை.
அம்புசாதன் - நான்முகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:27 pm

அறக்கடை, அறங்கடை - பாவம்; தீவினை
அற - முழுதும்; மிகவும்; நீங்க
அற்றை - அந்த நாளுக்குரிய; அந்த நாளில்; நாள்தோறும்
அற்று - இல்லாமற் போ; அத்தன்மையது; 'அது போன்றது' என்று பொருள்படும் ஓர் உவம உருபு; ஒரு சாரியை (எ.கா - அவற்றை)
அற்றார் - பற்று ஒழித்தவர்; பொருளற்ற வறியோர்

அற்றம் - அழிவு; சோர்வு; அவமானம்; மறைக்கத் தக்கது; வறுமை; தருணம்; பொய்; பிரிவு
அற்புதன் - (வியக்கத்தக்கவரான) கடவுள்
அற்புதம் - அதிசியம்; வியக்கத்தக்க பொருள்; அழகு; ஆயிரங்கோடி என்ற எண்; நவரசங்களில் அற்புதரசம்
அற்பாயு, அற்பாயுசு - குறைவான வாழ்நாள்
அற்பன் - கீழ்மகன்

அற்பம் - இழிவு; சிறுமை; நாய்
அளை - துழாவு; கலந்திரு; அனுபவி; தழு [அளைதல்]; தயிர்; வெண்ணெய்; மலைக்குடை; புற்று; வளை
அளியன் - எளியவன்; அன்புமிகுந்தவன்
அளி - கொடுத்தல் செய்; அருள் செய்; சிருட்டி செய்; ஈனுதல் செய்; காத்தல் செய்; விருப்பமுண்டாக்கு; சமைத்தலில் குழைவாகு; நன்கு கனி; கலந்து பழகு [அளித்தல், அளிதல்]; அன்பு; அருள்; ஆசை; கொடை; குளிர்ச்சி; எளிமை
அளாவு - கலந்து பேசிப் பழகு; கல; துழாவு; எல்லை வரை சென்று பொருந்து [அளாவுதல்]

அளறுபடு - சேறாகு; நிலை கலங்கு [அளறுபடுதல்]
அளறு - சேறு; நரகம்
அளவைநூல் - தருக்க சாஸ்திரம்
அளவை - எண்ணிக்கை, நீளம், பருமன், எடை போன்ற பரிமாணம்; எல்லை; நாள்; தன்மை; அறிகுறி; தருக்கப் பிரமாணம்
அளவு - எண்ணிக்கை, நீளம், பருமன், எடை போன்ற பரிமாணம்; தன்மை; இயல்பு; தர்க்க விதிகள்

அளவிடு - மதிப்பிடு; ஆராய்ந்தறி [அளவிடுதல், அளவிடை]
அளவளாவு - கலந்து பேசு; நெருங்கிப் பழகு [அளவளாவுதல்]
அளம் - களர் நிலம்; உப்பளம்; நெய்தல் நிலம்; நெருக்கம்; கடல்; கூர்மை


அளப்பறிதல் - பிறர் கருத்தைத் தந்திரமாய் அறிதல்
அளகு - கோழி, மயில்,  கூடை இவற்றின் பெண்
அளகாபுரி, அளகை - குபேரனின் நகரம்
அளகம் - ஒரு பெண்ணின் கூந்தம்; மயிர்க்குழற்சி; நீர்; முள்ளம்பன்றியின் முள்
அளக்கர் - பூமி; சேறு; கடல்; உப்பளம்

அள - அளவிடு; ஓர் எல்லையைத் தொடு; வரையறை செய் [அளத்தல்]
அள்ளு - பற்றிரும்பு; காது; மாந்தம் என்ற குழந்தை நோய்; உள்ளங்கையால் முகந்தெடு; பேரளவில் வாரிக்கொண்டு போ; செறிந்திரு; மகிழ்ச்சியை அனுபவி [அள்ளுதல், அள்ளல்]
அள்ளல் - அள்ளுதல்; சேறு; நெருக்கம்; ஒருவகை நரகம்
அள் - நெருக்கம்; கூர்மை; பற்றிரும்பு; கையால் அள்ளப்படுவது
அழை - கூப்பிடு; உரத்துக் கூவு [அழைப்பு, அழைத்தல்]
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:28 pm

அம்புதம் - முகில் : கோரை : நீர் : நீரைக் கொடுப்பது.
அம்புதி - கடல்.
அம்புயம் - தாமரை : இறைகூடை.
அம்புராசி - கடல்.
அம்புலி - திங்கள்.



அம்புலிப்பருவம் - குழவிக்குத் திங்களைக் காட்டும் பருவம் : பிள்ளைத் தமிழ் உறுப்புகளில் ஒன்று.
அம்புலிமணி - சந்திரகாந்தக் கல்.
அம்புவாசினி - எலுமிச்சை : பாதிரி.
அம்புவி - கடல்.
அம்புளி - இனியபுளிப்பு.



அம்பை - பார்வதி : துர்க்கை : தாய் : வெட்டிவேர்.
அம்போதரங்கம் - கலிப்பாவின் ஓர் உறுப்பு.
அம்போதரம் - முகில்.
அம்போதி - கடல் : காற்று.
அம்போருகம் - தாமரை.



அம்ம - கேளெனல் : ஓர் அசைச் சொல்.
அம்மம் - குழந்தையுணவு.
அம்மனை - அம்மானை : தாய் : நெருப்பு.
அம்மாமி - மாமன் மனைவி.
அம்மார் - கப்பற் கயிறு.



அம்மாறு - பெருங்கயிறு : வடக்கயிறு : வடம்.
அம்மானை - கலம்பகவுறுப்பு.
அம்மானை வரி - மகளிர் அம்மானையாடும் போது பாடும் பாட்டு.
அம்மான் - தந்தை : கடவுள் : தாயுடன் பிறந்தவன் : மாமன்.
அம்மி - அம்மிக்கல் : மாமி.



அம்முக்கள்ளன் - தீயவன்.
அம்முதல் - வெளிக்காட்டாது ஒளித்தல் : பரவிப் படர்தல்.
அம்மை - தாய் : பார்வதி : அமைதி : அழகு : முற்பிறப்பு : வருபிறப்பு : வைசூரி.
அம்மையப்பர் - உமாபதி.
அயநம் - போதல் : வழி.



அயக்கம் - நோயின்மை : நிராமயக்கம்.
அயக்காந்தம் - ஊசிக்காந்தம்.
அயக்குதல் - அசைத்தல்.
அயமகம் - அசுவமேதயாகம்.
அயமுகம் - ஓர் இருக்கை.



அயம் - ஆடு : குதிரை : இரும்பு : குளம் : சேறு : நீர் : நிலம் : நல்வினை : விழா : ஐயம் : பள்ளம்.
அயணம், அயநம் - போதல் : வழி : செலவு : ஆண்டிற்பாதி : வாசஸ்தலம்.
அயர்கம் - செய்வோம்.
அயர்ச்சி - உணர்வழிவு : செய்தல் : சோம்பல் : பலவீனம் : மறதி : வருத்தம் : வெறுப்பு.
அயர்தல் - உணர்வழிதல் : இளைத்தல் : செய்தல் : சோர்தல் : விரும்புதல் : விளையாடுதல்.



அயர்பதி - செலுத்துவாயாக.
அயர்ப்பிய - கையறவு எய்துவிக்க.
அயர்மார் - செய்தற்கு.
அயர்வு - அகலம் : உன்மத்தம் : சோர்வு : மனக்கவர்ச்சி : வருத்தம் : வெறுப்பு.
அயர்வுயிர்த்தல் - சிந்துதல் : தளர்ச்சி : நீங்குதல் : வருத்தம் நீங்குதல்.



அயலவர் - பக்கத்தார்.
அயலி - வெண்கடுகு.
அயலுரை - அயலார் ஒருப்பட்டவுரை.
அயல் - அருகிடம் : பக்கம் : வேறு : அயலார்.
அயவனம் - ஒட்டகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:29 pm

அயவந்தி - ஓர் ஊர்.
அயவி - சிற்றரத்தை.
அயறு - புண்வழலை : புண்ணிலிருந்து வடியுஞ் சீழ்.
அயற்படல் - விலகிச் செல்லல்.
அயனம் - வழி : ஆண்டிற் பாதி.



அயனாள் - உரோகினி நாள் : நான்முகன் வாழ்நாள்.
அயன் - நான்முகன் : அருகன் : மகேசுவரன்.
அயன்மணம் - பிரசாபத்தியம் : எண்வகை மணங்களுள் ஒன்று.
அயன்மை - அந்நியம்.
அயா - வருத்தம் : தளர்ச்சி.



அயாவுயிர்த்தல் - நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல் : வருத்தம் நீங்குதல் : அறிவு மயக்கமாக விருந்து எழுதல் : இளைப்பாறுதல்.
அயிக்கம் - ஒன்றுபடுகை.
அயிங்கிதை - கொல்லாமை.
அயிஞ்சை - வருத்தாமை.
அயிந்திர திசை - கிழக்கு.



அயிந்திரம் - ஐந்திரம்.
அயிராணி - இந்திராணி.
அயிராபதம், அயிராவதம் - இந்திரன் யானை.
அயிரை, அயிலை - அசரை : ஒரு வகைச் சிறு மீன் : நுண்மணல் : சேர நாட்டில் உள்ள மலை : ஓர் யாறு.
அயிர் - சருக்கரை  : நுண் மணல் : நுண்மை : ஐயம் : அயிரென்னேவல் புதைக்கும் வாசனைப் பொருள் : வெல்லம் : ஊதுவத்தி.
அயிர்க்கல் - ஐயப்படல்.



அயிர்ப்பு - சந்தேகம் : மறதி : மந்தம் : சோம்பல்.
அயிலவன் - முருகன்.
அயிலுழவன் - வீரன்.
அயில் - அழகு : கூர்மை : இரும்பு : வேல் : கோரை : கலப்பை உண்ணென்னேவல் வேலம்பட்டை : எஃகு சூலாயுதம்.
அயில்தல் - உண்ணுதல்.



அயிற்பெண்டு - ஒரு வகைக் கூத்து.
அயினி - சோறு : நீராகாரம் : ஆலத்தி.
அயுதம் - பதினாயிரம்.
அயுத்தம் - தகுதியின்மை.
அயோநி - யோநியிற் பிறவாதது.



அர, அரவு - பாம்பு.
அரக்கர் - இராக்கதர்.
அரக்கல் - தேய்த்தல் : அரைத்தல் : அழுத்தல் : வருத்துதல் : துடைத்தல் : 
அரக்கம் - அவலரக்கு : நன்னாரி :  இரத்தம் : பாதுகாப்பு.
அரக்காம்பல் - செவ்வாம்பல்.



அரக்கு - செம்மெழுகு : சிவப்பு : சாதிலிங்கம் : தேன் : சாராயம்.
அரங்க - முற்றாக : முடிவாக : ஈறாக : ஒருமிக்க : தேய : குறைய : கெட : அரங்கத் தொடர்பான.
அரங்கபூசை - வெற்றித் திருமடந்தையாகிய அரங்க தேவதைக்குச் செய்யும் பூசை : களப்பூசை.
அரங்கம் - சிலம்பக்கூடம் : சபை : நாடக சாலை : போர்க்களம் : சுடுகாடு : ஆற்றிடைக்குறை : சீரங்கம்.
அரங்கி - வஞ்சகம் உடைவள்.



அரங்கு - நாடகசாலை : நடனசபை மன்றம் : சூதாட்டறை.
அரங்குதல் - தைத்தல் : அழிதல் : அழுந்துதல்.
அரங்கேற்றுதல் - சபையார் ஏற்கச் செய்தல்.
அரசம் - சுவையின்மை : மூலநோய்.
அரசவாகை - வேந்தன் இயல்பு கூறும் புறத்துறை.



அரசவாரியன் - குதிரை நடத்துவோரிற் சிறந்தவன்.
அரசவிலை முருகு - காதணி வகையில் ஒன்று.
அரசவை - அரசனுடைய அவை.
அரசாட்சி - அரசு புரிதல்.
அரசாணி - அரசி : மணப்பந்தலில் அரசங்கால் நாட்டுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:29 pm

அரசியல் - அரசாட்சி முறை.
அரசிருக்கை - அரசு வீற்றிருக்கும் இடம்.
அரசிலை - அரைமூடி : மிருகங்களுக்கிடும் சூட்டுக் குறி.
அரசிறை - அரசர்க்கரசன் : கப்பம்.
அரசு - அரசியல் : அரசன் : நாடு : அரசமரம் : திருநாவுக்கரசு நாயனார்.



அரசு கட்டில் - அரியணை.
அரசுவா - அரச யானை : பட்டத்து யானை.
அரசோனம் - வெள்ளைப் பூண்டு.
அரட்டமுக்கி - குறும்பர்களை ஒடுக்குபவன்.
அரட்டம் - பாலை நிலம் : விரிந்த மணற்காடு : வெருட்டல் : புரட்டல்.



அரட்டர் - குறும்பர் : ஆறலைப்பார்  : குறுநில மன்னர்.
அரட்டல் - அச்சுறுத்தல்.
அரட்டல்புரட்டல் - நோய்முற்றலால் நிகழும் வலி.
அரட்டன் - மிடுக்கன்.
அரட்டி - அச்சுறுத்தி  : நடுங்கச் செய்து  : வெருட்டி.



அரட்டு - செருக்கு  : குறும்பு.
அரணம் - கோட்டை  : காவற்காடு மதில்  : வேலி  : கவசம் : வேல் : கதவு : மஞ்சம் : செருப்பு : கருஞ்சீரகம்.
அரணம் வீசுதல் - கவசம் அணிதல்.
அரணாம்பரம் - மதில் : வேலி : கோட்டை.
அரணி - காடு : மதில் : சூரியன் : கவசம் : தீக்கடை கோல் : தீத்தட்டிக் கல்  : மதில்.



அரணித்தல் - காவல் செய்தல் : உரத்தல் : சிறப்பித்தல் : மறைத்தல் : ஆட்சிபுரிதல் : காத்தல்.
அரணிப்பு - படைப்பு : அழகு : காவல் : சிறப்பிக்கை : முறைப்பு : வைரிப்பு : சேமிப்பு.
அரணியன் - அடைக்கலமானவன் : காட்டிலிருப்பவன்.
அரணை -  பல்லியினம்.
அரதனம் - இரத்தினம்  : சிலம்பணி.



அரதி - வேண்டாமை : துன்பம்.
அரதேசி - உள்ளூரில் திரிபவன்.
அரத்தகம் - அரத்தம் : அலத்தகம்.
அரத்தம் - செம்மெழுகு : செம்பஞ்சு : செம்பட்டு : செம்பரத்தம் : சிவப்பு : பவளம் : குருதி : செங்கழுநீர் : பொன் : கடம்பு : துகில்.
அரத்தை - பேரரத்தை : முடக்கொற்றான்.



அரந்தை - துன்பம் : குறிஞ்சி : யாழிசை : நீர்நிலை.
அரப்பிரியை - உமை.
அரப்பொடி - இரும்புத்தூள்.
அரமகள், அரமங்கை, அரமாதர் - தெய்வப் பெண்.
அரமாரவம் - நாயுருவி.



அரமி - கடுக்காய்.
அரமியம் - நிலா முற்றம் : அரண்மனை : நாயுருவி.
அரம் - அராவும் கருவி : பாதலம்.
அரம்பு - குறும்பு : தீமை.
அரம்பை - வாழை : தெய்வப் பெண் : ஓமம்.



அரரி - கதவு.
அரர் - தீர்த்தங்கரருள் ஒருவர்.
அரலை - விதை : ஒரு குன்றம் : பரல் : குற்றம் : கழலை : கடல் : கொடும்பு : கோட்டை : மணல் : பொடிக்கல் : அரளி : அலரி.
அரவக்கிரி - வேங்கடமலை.
அரவக்கொடியோன் - துரியோதனன்.



அரவங்கலக்கம் - சாகுங்காலத்துண்டாகும் தெளிவு.
அரவணை - சேடசயனன் : சர்க்கரைப் பொங்கல் : ஆதரிப்பு : பாம்பு போல் தழுவல்.
அரவணைத்தல் - தழுவுதல் : ஆதரித்தல்.
அரவப்பகை - கருடன்.
அரவம் - ஒலி : சிலம்பு : ஆரவாரம் : பாம்பு : ஆயிலியம் : கலக்கம் : பதஞ்சலி முனிவர் : பேரொலி : படையெழுச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:30 pm

அரவதண்டம் - யமதண்டனை.
அரவாட்டிப்பச்சை - தொழுகண்ணி.
அரவாய்க் கடிப்பகை - அரம்போன்ற விளிம்புடைய வேப்பிலை.
அரவாள் - பழைய நாணய வகை.
அரவித்தல் - ஒலி செய்தல்.



அரவிந்தம் - தாமரை : நாரைப் பறவை : செம்பு : காமன் கணைகளுள் ஒன்று.
அரவிந்தப்பாவை - திருமகள்.
அரவிந்தராகம் - பதுமராகம்.
அரவிந்தன் - நான்முகன்.
அரவிந்தை - இலக்குமி.



அரவு - பாம்பு : ஒலி : ஒரு தொழிற் பெயர் விகுதி.
அரவுக்கிளர்ந்தன்ன - பாம்பு படம் எடுத்தாற் போன்ற.
அரவுருட்டுதல் - வைக்கோற்புரியை உடைப்பிற் செலுத்துதல்.
அரளி - பீநாறி.
அரளுதல் - பீதியடைதல் : மிக அஞ்சுதல்.



அரளைசரளை - பருக்கைக் கல்.
அரறுதல், அரற்றுதல் - அழுதல் : ஒலித்தல் : கதறுதல்.
அரனெறி - திருவாரூர்க் கோவி்லுக்குள் உள்ள மற்றொரு கோயில்.
அரன் - சிவன்.
அரனாள் - திருவாதிரை.



அரா - பாம்பு.
அராகம் - அடங்காமை  : முடுகியல் : அவா : அவாவின்மை : பாலை யாழ்த்திறம் : சிவப்பு : கலிப்பாவின் ஓர் உறுப்பு.
அராக்கோள் - இராகுகேதுக்கள்.
அராசகம் - தேசம் அரசியலற்றிருக்கை.
அராசித்தல் - இடையறாது கடுகிச் செல்லுதல்.



அராந்தாணம் - சினாலயம் : சைனப் பள்ளி.
அராபதம் - வண்டு.
அராமம் - பைங்கூழ் :  சோலை.
அராமி : கொடியோன்.
அராமுனிவர் - பதஞ்சலி முனிவர்.



அராமை - கீழ்மக்கள் : தீயவர்கள்.
அராவணை - பாம்பிருக்கை.
அராவல் - அராவுதல் : உராய்தல்.
அராவாரம் - கொடிமுந்திரி.
அராளகடகாமுகம் - நிருத்தக்கை முப்பதனுளொன்று.



அராளம் - இருவாட்சி : குங்கிலியம்.
அரிகண்டம் - கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் : தொந்தரை.
அரிகயிறு - தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி.
அரிகரன் - திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி.
அரிகல் - மகாமேருமலை.



அரிகால் - அரிந்து விட்ட தாள்.
அரிகிணை - கிணைப்பறை வகை.
அரிகுரல் - கரகரத்த குரல்.
அரிகூடம் - கோபுர வாயில் மண்டபம்.
அரிகேசரம் - கதிரவன் கதிர்களுள் ஒன்று. 



அரிக்கஞ்சட்டி - அரிசி களையுஞ் சட்டி.
அரிக்கரியார் - சிவன்.
அரிக்குரல் - அரித்தெழும் ஒலி.
அரிசந்தனம் - ஐந்தருவில் ஒன்று : ஒரு வகைச் சந்தன மரம் : தாமரைப் பூந்தாது : நிலவு : மஞ்சள்.
அரிசமயதீபம் - ஆழ்வாராதிகள் சரித்திரம் கூறும் நூல்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:30 pm

அரிசம் - மகிழ்ச்சி : அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள்.
அரிசயம் - சரக்கொன்றை : எலுமிச்சை.
அரிசனம் - மஞ்சள்.
அரிசிக்காடி - புளித்த கஞ்சி.
அரிசிப்புல் - மத்தங்காய்ப் புல்.



அரிசில் - சோழ நாட்டில் உள்ள ஓர் ஊர் : ஓர் ஆறு.
அரிசு - மிளகு.
அரிச்சந்திரம் - கூரைக் கைதாங்கும் கட்டை.
அரிச்சுவடி - நெடுங்கணக்குச் சுவடி.
அரிடம் - அதிட்ட கீனம் : கேடு : மூலத்திலே வரும் ஒருவகை நோய் : விடாமழை : களிப்புக் குணம் : 
வேப்ப மரம் : தீங்கு.



அரிட்டம் - கேடு : கொலை :  கள் : காக்கை : முட்டை : மோர் : வேம்பு.
அரிட்டை - கடுகு ரோகணி : தீங்கு : கந்தருவர் :  ஆயிரவர் தாய்.
அரிணம் - சிவப்பு : பொன் :  மான் :  யானை : வெள்ளை : கடல் : கதிரவன் ஒளி :  வெய்யில்.
அரிணி - சித்திநி சாதிப் பெண் : பெண்மான் : பொன்னாலய வுருவம் : மான் சாதிப் பெண் : வஞ்சிக் கொடி.
அரிணை - கள்.



அரிதகி - கடுக்காய் மரம்.
அரிதம் - திசை : பசும்புல் நிலம் : பொன்னிறம்.
அரிதாட்புள்ளி - கதிர் அறுத்த தாளைக் கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு.
அரிதாரம் - ஒரு மருந்து : திருமகள்.
அரிதாள் - கதிரறுபட்ட தாள்.



அரிதினம் - ஏகாதசி.
அரிதொடர் - துவக்குசங்கிலிகளுள் ஒரு வகை.
அரித்தல் - தினவெடு்த்தல் : மாபிரித்தல் : தூசு போக்கல் : பசையறக் காய்தல் : மேய்தல் : வருத்துதல் : அறுத்தல்.
அரித்துவசன் - சிங்கக் கொடியை உடையவன் :  வீமன்.
அரித்தை - துன்பம் :  கிலேசம்.



அரிநர் - நெல்லறுப்போர்.
அரிநூற்பொறி - தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி.
அரிந்தமன் - பகைவரை யடக்குவோன்.
அரிப்பரித்தல் - கொழித்தெடுத்தல்.
அரிப்பனி - இடைவிட்ட துளி.



அரிப்பறை
 - அரித்தெழும் ஒலியையுடைய பறை.
அரிப்பிரத்தம் - இந்திரப்பிரத்தம்.
அரிப்பு - தினவு :  சினம் :  குற்றம்.
அரிப்புக்கூடை - சல்லடை :  கரிப்பெட்டி.
அரிப்புழுக்கல் - அரிசிச்சோறு.


அரிமஞ்சரி - குப்பைமேனி : பூனை வணங்கி.
அரிமந்திரம் - சிங்கக் குகை.
அரிமர்த்தநன் - ஒரு பாண்டியன்.
அரிமா, அரிமான் - ஆண் சிங்கம்.
அரிமாநோக்கு - முன்னுக்குப் பின் தொடர்புபடுத்துவதாகிய சூத்திர நிலை : சிங்கப்பார்வை.



அரிமுகவம்பி - சிங்கமுக ஓடம்.
அரிமுகன் - சிங்கமுகாசுரன்.
அரியகம் - காற்சரி என்னும் அணிகலம் : கொன்றை மரம் : சிங்கங்கள் தங்கும் மலைக்குகை : 
பாடகம் : பரியசம் : கசாப்புக் கடை : பலிபீடம்.
அரியசாரணை - மாவிலங்கு மரம்.
அரியமான் - பிதிரர் தலைவன்.



அரியணை - சிங்காசனம்.
அரியம் - வாச்சியம்.
அரியர் - கிடைத்தற்கருமையானவர்.
அரியல் - கள் : அரிதல் : அரித்தல்.
அரியாசம் - ஒரு மணப் பொருள்.  
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:31 pm

அரியாயோகம் - அரைப்பட்டி : மருந்து.
அரியெடுப்பு : கிராம ஊழியக்காரருக்கு களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம்.
அரியேறி - துர்க்கை.
அரியேறு - ஆண்சிங்கம்.
அரில் - குற்றம் : பகை : பிணக்கு : சிறு தூறு : மூங்கில் : தூறுபட்ட காடு : பின்னல்.



அரில்வலை - முறுக்குண்டு கிடந்த வலை.
அரிவரி - அரிச்சுவடி.
அரிவருடம் - ஒன்பது கண்டத்துள் ஒன்று.
அரிவாட்டாயர் - திருத்தொண்டர் புராணத்தில் வரும் ஒரு சிவனடியார்.
அரிவாள்மணை - கறியரி கருவி.



அரிவி - அரிகதிர் : அறுக்குங்கருவி.
அரிவிமயிர் - வீரர் வேல் நுனியில் அணியும் பறவை மயிர்.
அரிவை - இருபத்தைந்து வயதுடைய பெண்.
அரிள் - பயம் : திகில் : கலக்கம் : நடுக்கம்.
அரு - உருவற்றது : அணு : கடவுள் : காணப்படாத தன்மை : காயம் : புண் : மாயை.



அருகசரணம் - அருகனைச் சரண்புகும் வகை.
அருகணி - பிரண்டைக் கொடி.
அருகந்தம் - அதீதம்.
அருகந்தர் - சமணர்.
அருகந்தாவத்தை - வீடுபேற்று நிலை.



அருகம் - சமண் மதம் : தக்கது.
அருகர் - அருக சமயத்தவர் : அருகில் இருக்கிறவர் : இருடிகள் : தக்கோர்.
அருகல் - அருகு : பக்கம் : குறைவு.
அருகன் - சைனன் : பக்குவி : பூச்சியன் : தோழன்.
அருகன் எண்குணம் - கடையிலா அறிவு : சடையிலாக் காட்சி : கடையிலா வீரியம் : கடையிலா இன்பம் : காமம் இன்மை : கோத்திரம் இன்மை : ஆயுலின்மை : அழியாவியல்பு.



அருகாசனி - திருஞானசம்பந்தர்.
அருகாழி - கால்விரல் மோதிரம்.
அருகிய வழக்கு - குறைந்த உபயோகமுள்ள வழக்கு.
அருகு - அடுத்த இடம் : அண்மை : ஓரம்.
அருகுதல் - குறைதல் : அஞ்சுதல் : கெடுதல் : நோவுண்டாதல் : குறிப்பித்தல்.



அருக்கம் - எருக்கு : சூரியன் : பொன் : அருமை : குறைவு : நீர்க்காக்கை : தாமிரம் : தீயநிமித்தம் : நெருப்பு : படிக்கல் : சுருக்கம் : சொற்பம் : வெயில் : ஒளி : செந்நிறம்.
அருக்களிப்பு - அருவருப்பு.
அருக்கன் - சூரியன் : சுக்கு.
அருக்காணி - அருமை : அழுத்தம்.
அருக்கியம் - மந்திர நீர் இறைத்தல்.



அருக்கு - அஞ்சுகை : அருக்காணி : அருக்கென்னேவல் :  அருமை : எருக்கு : சுருக்கம் : தடங்கல் : பாராட்டு.
அருக்குக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம்.
அருக்குதல் - தவிர்தல் : நீக்குதல் : பாராட்டுதல் : அச்சமுறுதல்.
அருங்கலச் செப்பு - அணிகலப் பேழை. 
அருங்கலம் - அணிகலம்.


அருங்கலை விநோதன் - நூலாராய்ச்சியே விளையாட்டாக உடையவன்.
அருங்கிடை - கடும்பட்டினி : நோய்வாய்ப்பட்டிருக்கை.
அருங்கு - அருமை : சிறந்தது : உயர்ந்தது.
அருங்குரைய - அரிய.
அருங்கேடு - கேடின்மை.



அருங்கோடை - மிகுந்த வெப்பமுடைய கோடைக்காலம்.
அருசி - சுவையின்மை : விருப்பமின்மை.
அருச்சனை - கோயிற் பூசை : ஆராதனை.
அருச்சிகன் - சந்திரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:31 pm

அருச்சுனம் - வெண்மை : எருக்கமரம் :  மருதமரம் : பொன்.
அருஞ்சிறை - கடுங்காவல்.
அருஞ்சுரம் - நிழலற்ற நீளிடம்.
அருஞ்சோதி - ஒருவகை நெல்.
அருட்குறி - சிவலிங்கம்.



அருட்சித்தி - பாதரசம்.
அருட்சோதி - கடவுள் : கௌரி பாஷாணம்.
அருட்டல் - அச்சுறுத்தல்.
அருட்டுதல் - ஏவிவிடுதல்.
அருட்குடையோன் - அருகன் : கடவுள் : பதி.



அருட்கொடையோன் - கடவுள்.
அருணம் - மிகு சிவப்பு : எலுமிச்சை : மான் : ஆடு : ஒரு மொழி : சிந்தூரம் : ஒரு நீர் நிலை : விடியல்.
அருணவம் - கடல்.
அருண வூரி - இந்திரகேயம்.
அருணன் - சூரியன் தேர்ப்பாகன் : சூரியன் : புதன்.



அருணி - மான்சாதிப் பெண்.
அருணை - திருவண்ணாமலை.
அருணோதயம் - வைகறை.
அருண்முனி - அருகதேவன்.
அருத்தம் - சொற்பொருள் : பாதி : பொன் : பொருள்.



அருத்தநாரீசுவரன் -  உமையொரு பாகன்.
அருத்த இலக்கணை - விட்டுவிடாத இலக்கணை.
அருத்தபதி - அரசன் : குபேரன் : கலைவல்லோன்.
அருத்தல் - உண்பித்தல்.
அருத்தாபத்தி - சொல்லிய ஒன்றைக் கொண்டு சொல்லாத ஒன்றை அறிதல்.



அருத்தி - இரப்போன் : கூத்து : செல்வமுடையவன் : புசிப்பு : விருப்பம் : பணியாளர்கள்.
அருநிலை - கடந்து செல்லற்கரிய நிலம் : பாலை நிலம்.
அருநெல்லி - சிறுநெல்லி.
அருநெறி - பாலைவனம்.
அருந்ததி காட்டுதல் - அருந்ததி போலக் கற்புடையவள் ஆகுக என்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல்.



அருந்தல் - உண்டல்.
அருந்தவர் - முனிவர்.
அருந்திறல் - அரிய திறமையை உடையவர்.
அருந்துதன் - வேதனை செய்வோன்.
அருந்தானை - வெல்லுதற்கரிய படை. 



அருந்துதி - அருந்ததி.
அருந்தேமாந்த - உண்ண அவாக் கொண்ட.
அருப்பம் - அருமை : மருத நிலத்தூர் : காடு : வழுக்கு நிலம் : மலைமேற் கோட்டை : கள் : நோய் : 
கொலை : பிட்டு : மோர் : சிறிது : அரண் : நெற்கதிரின் கரு : பிள்ளை : கீரை : பனி.
அருப்பலம் - அனிச்ச மரம் : பூங்கணை மரம்.
அருப்பு - கிளைத்தல் : அரும்பு : கொலை : துக்கம் : அருப்பம் : காட்டரண்  : தயிர் : திண்ணம்.



அருமணவன் - ஒரு தீவு : அத்தீவின் யானை.
அருமந்தது - அருமருந்தன்னது.
அருமருந்து - தேவாமிர்தம்.
அருமவதி - ஒரு பண் : ஓர் இராகம்.
அருமறை - அரியமறை : இரகசியம்.



அருமிதம் - அளவின்மை.
அருமை - எளிதிற் கிடைக்கக் கூடாமை : பெருமை : இன்மை : சிறுமை : கொடுமை : 
ஆற்றாமை : முடியாதது : எளிதிற்கிடைக்காதது.
அருமை செய்தல் - பேராண்மை காட்டுதல்.
அரும்பதம் - அரிய செவ்வி : அரிய உணவு : விளங்கற்கரிய சொல்.
அரும்பல் - முகைத்தல்  : முளைத்தல் : விரிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:32 pm

அரும்பாலை - பாலைப் பண்வகை.
அரும்பாவி - பெருந்தீவினையாளன்.
அரும்பிஞ்சு - மிக இளங்காய்.
அரும்பித்தல் - தோன்றுதல்.
அரும்பு - முகை : இண்டை : பூவரும்பு போன்ற வேர்  :  அணிகல ஒட்டு : 
மெல்லிய மலர்.



அரும்பெறல் - பெறுதற்கரியது.
அரும்பொருள் - முயன்று உணரும்படியாக அமைந்துள்ள சொல்.
அருவம் - உருவமில்லாதது.
அருவருப்பு - மிகு வெறுப்பு.
அருவர் - தமிழர்.



அருவல் - கிட்டிப் போதல் : மெல்ல மெல்லப் போதல்.
அருவாதல் - பிறப்பறுதல்.
அருவாவசு - கதிரவன் பக்கலில் நின்று பாட்டயர்வோரில் ஒருவன் : 
கதிரவன் கதிர்களுள் ஒன்று.
அருவா - அருவா நாடு.
அருவாட்டி - அருவா நாட்டுப் பெண்.



அருவாணம் - செப்புத் தாலம் : கோயிற் பிரசாதம்.
அருவாணாடு - கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று.
அருவாவட தலை - கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று.
அருவாளர் - ஒரு சாதியார்.
அருவி - மலை வீழாறு : சிற்றாறு : நீரோட்டம் : ஒழுங்கு : தினைத்தாள் : உருவமில்லாதது.



அருவுடம்பு - சூக்குமவுடல்.
அருவுதல் - கண்கரித்தல்  : நெருங்கல்.
அருளகம் - வெள்ளெருக்கு.
அருளறம் பூண்டோன் - புத்தன்.
அருளல் - காத்தல்  : கெடுத்தல் : படைத்தல் முதலிய கடவுளரின் தொழில்கள்.



அருளன்மாறு - அருளுதலால்.
அருளிச் செய்தல் - அருளுடன் உரைத்தல்.
அருளிப்பாடியன் - கட்டளை நிறைவேற்றுவோன்.
அருளிப்பாடு - ஆக்ஞை : ஆணை.
அருளின்மாறு - மறம்.



அருளீயல் - அருளுதல்.
அருள் - கருணை : சக்தி : ஆசிரியர் : அறிவுரை : கடவுளின் அருட்பேறு : ஈயென்னேவல்.
அருள்வாக்கு - இறைவன் அருள் பெற்றவரின் வாக்கு.
அரூபம் - ஆகாயம் : உருவமற்றது : குறைவு : வெறுமை : இல்லாதது.
அரூபை - அழகில்லாதவன் : உருவமற்றவன் : ஒப்பில்லாதவன்.



அரூவி - கடவுள் : கற்பூரம் : சிவன்.
அரேசிகம் - வாழை.
அரேனுகம் - கடுக்காய் வேர் : வால்மிளகு : அரேணுகை.
அரை - பாதி : மரத்தின் அடிப்பக்கம் : தண்டு : வயிறு : அடியிடம் : மேகலை : உடம்பின் நடுவிடம் : அரசியல் : அரையென்னேவல்.
அரைகல் - அம்மிக்கல் : ஆட்டுக்கல்.



அரைகுலையத் தலைகுலைய - மிக்க விரைவாய்.
அரைகுறை - முற்றுப் பெறாமை.
அரைக்கச்சு - இடைப்பட்டிகை.
அரைக்காசுத் தொண்டன் - மிகவும் எளியவன்.
அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.



அரைக்கால் - எட்டில் ஒரு பங்கு.
அரைக்குநர் - அரைப்போர்.
அரைசபாரம் - அரசு நடத்துங்கடமை.
அரைசர் - அரசு செய்வோர்.
அரைச்செலவு - மசாலைச் சாமான்.   
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:32 pm

அரைஞகரம் - நானாழி.
அரைஞாண், அரைநாண் - இடுப்புக் கயிறு.
அரைதல் - அரைபடல் : தேய்தல்.
அரைத்தல் - தேய்த்தல் : அழித்தல்.
அரைநாள் - நடுநாள் : நாளிற்பாதிநாள் : நள்ளிரவு.



அரைப்படிப்பு - நிரம்பாக்கல்வி.
அரைப்பட்டிகை - மாதர் இடையணி.
அரைப்பணம் - அல்குல் : பாதிக்காசு.
அரைப்பு - சாந்து : அரைத்தல் : இருப்பைப் பிண்ணாக்கு : அரப்பு.
அரைப்பை - இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை.



அரைமதியிரும்பு - பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்கம்.
அரைமனிதன் - பெருமை குறையப் பெற்றவன்.
அரைமா - நாற்பதில் ஒரு பங்கு.
அரையலன் - சோம்பேறி.
அரையன் - அரசன் : அரோசனம் : மகிழ்ச்சியின்மை.



அரோ - ஓர் அசைச் சொல்.
அரோக திடகாத்திரம் - சுகமும் வலிமையுமுள்ள உடல்.
அரோசிகம் - அருவருப்பு : ஒக்காளம்.
அர்க்கம் - எருக்கு : செம்பு : பளிங்கு : விலைப்பொருள்.
அர்க்கன் - இந்திரன் : ஞாயிறு : ஞாயிற்றுக் கிழமை.



அர்ச்சிதன் - பூசிக்கப்படுவோன்.
அர்ச்சிய சிட்டர் - பரிசுத்தர்.
அர்ச்சை - மூர்த்தி.
அர்த்தக் கிரகணம் - பாதிக் கிரகணம்.
அர்த்த சாத்திரம் - பொருள் நூல்.



அர்த்தபுஷ்டி - பொருட்பொலிவு.
அர்த்தம் - இரந்து கேட்டல் : ஒரு கூறு : சடப்பொருள் : சம்பத்து.
அர்த்தரதன் - ஒரு வகைத் தேர்வீரன்.
அர்ப்பணம் - ஒப்பித்தல் : அடுதல் : உரியதாக்கல்.
அர்ப்புதம் - ஆயிரங்கோடி : மேகம் : பாம்பு : ஊன்மொத்தை : புதம் : விந்தை.



அலகம் - யானைத் திப்பிலி : வேப்பலகு.
அலகம்பு - அம்புவகை.
அலகரி - பெருக்கு : அதிகம் : மிகை : கணக்கற்றது.
அலகிடல் - சீர் பிரித்தல் : தூசு போக்கல் : கணக்குப் பார்த்தல் : துடைப்பத்தாற் பெருக்குதல்.
அலகின்மாறு - விளக்குமாறு.  



அலகு - பறவை மூக்கு  : அளவு : அளவுகருவி :அம்பிலை : ஆயுதம் : 
ஆயுதத்தின் அலகு : ஆண்பனை : இலை வடிவம் : இலகுவல்லாதது : இலட்சம் பாக்கு : எண்  : கதிர் : கூர்மை : துடைப்பம் : பொன்னாங்காணி : மின்மினி : விசாலம்  : மகிழம் விதை : வீட்டினுறுப்பு : நுளம்பு : தாடை.
அலகுகட்டை - வண்டிச்சக்கர வட்டை.
அலகுசோலி - அறுகு : கணக்கான காரியம்.
அலக பருப்பு - பட்டானிக் கடலை.
அலகுஞ்சம் - மின்மினி : நுளம்பு.



அலகுபோடுதல் - நா முதலிய உறுப்புகளில் கம்பிகளைக் குத்திக் கொள்ளும் வழிபாட்டு முறை.
அலகை - கற்றாளை : உரையாணி : தலையளவு : பேய் :பேய்க்கொம்மட்டி.
அலகைக்கொடியாள் - காளி.
அலகைத்தேர் - பேய்த்தேர் : கானல் தேர் : போலியான தோற்றம்.
அலக்கண் - துன்பம்.



அலக்கலக்காய் - தனித்தனியாய்.
அலக்கழித்தல் - துன்புறுத்தல்.
அலக்கியம் - இலக்கியமற்றது : சிறப்பற்றது.
அலக்கு - வரிச்சு : துறட்டுக்கோல் : தனிமை.
அலங்கடை - அல்லாதவிடத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:33 pm

அலங்கமலங்க - பொறிகலங்க.
அலங்கம் - அரண் : கொத்தளம்.
அலங்கல் - பூமாலை : நெற்றி மாலை : தளிர் : அசையுங் கதிர் : ஒழுங்கு.
அலங்கனாரி - முத்துச் சிப்பி : இப்பி : கிளிஞ்சல்.
அலங்காந்தள் - அசைந்து விளங்குங் காந்தள்.



அலங்கழித் தொழில் - அலவலைத் தொழில்.
அலங்கார பஞ்சகம் - வெண்பா : கலித்துறை : அகவல் : விருத்தம் : சந்த விருத்தம் ஆகிய இவ்வைந்தும்
அந்தாதியாக வரப்பாடும் நூல்.
அலங்காரம் - அணி : சிறப்பு : அழகு : சிங்காரம் : அணிகலன் : பெருமாள் கோவில்களில் படைக்கப்படும்
சோறு குழம்பு முதலிய உணவுகள்.
அலங்கிருதம் - சிங்காரம்.
அலங்கு -  அலங்குதல் : அலங்கென்னேவல்.



அலங்குதல் - அசைதல் : தத்தளித்தல் : ஒளி் செய்தல் : இரங்குதல்.
அலங்கை - துளசி.
அலங்கோலம் - ஒழுங்கின்மை : சீர்கேடு.
அலசடி - துன்பம்.
அலசம் - மந்தம்.



அலசல் - இழை நெருக்கம் இல்லாத ஆடை : அநுகூலமாகாத வேலை : நீரிற் கழுவுதல் : வருந்துதல் : 
வெட்கும்படி பலபடப் பேசுதல்.
அலசி - நத்தை வகை.
அலசுதல் - அலசல் : சோர்தல்.
அலட்டல் - அங்கலாய்த்தல் : வருந்துதல் : துன்புறுத்தல் : வறுமையடைதல்.
அலட்டு - தொந்தரை : வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை.



அலதிகுலதி - அலங்கோலம்.
அலத்தல் - அலட்டல் : அலைதல் : அங்கலாய்த்தல் : துன்பப்படுதல் : வறுமைப்படுதல் : பேராசைப்படுதல் : சிதைத்தல்.
அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தற்காலை - வறுமைக்காலம்.
அலத்தி - நுளம்பு : மின்மினி.



அலந்த - வாடிய.
அலந்தலை - துன்பம் : கலக்கம்.
அலந்தோர் - துன்பமுற்றோர்.
அலபதுமம் - நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று.
அலப்படி - கலப்பையாயுதம்.



அலப்பாட்டுதல் - மனஞ் சுழலுதல்.
அலப்பிய - அலைத்த.
அலப்பு - அலட்டு : வீண்பேச்சு.
அலப்புடை - தசநாடியில் ஒன்று.
அலப்புதல் - அலைத்தல் : அலட்டுதல் : ஆரவாரித்தல் : குழப்புதல் : 
வீண்பேச்சுப் பேசுதல்  : பகட்டுதல்.



அலமரல் - சுழலல்  : அசைதல் : தடுமாறல் : வருந்தல் : அச்சங்கொள்ளல் :
இளைத்தல் : துன்பமுறல் : கலங்குதல்.
அலமரல்நோய் - சுழலுதலையுடைய காமநோய்.
அலமருதல் - அலமரல்.
அலமலக்குறுதல் - மிகுந்த கலக்கத்தையடைதல்.
அலமலத்துதல் - கலக்கமுறச் செய்தல்.



அலமாப்பு - துன்பம் : கவலைப்படல்.
அலமாரி - பேராசையுள்ளவன் : சாமான் வைக்குந்தட்டுள்ள சுவர் மாடம்.
அலமுக விரும்பு - கலப்பைக் கொழு.
அலம் - அமைவு : கலப்பை : சஞ்சலம் : தேள் : நீர் : அடைதல் : அலமரல் :
தேளின் வால் கொடுக்கு : பொன்னரி தாரம் : மிகுதி : முழுவதும்.
அலம்பல் - கழுவல் : ஒழுகல் : ததும்பல் : ஒலித்தல் : கத்துதல் : பல கிளைகளையுடைய
மரக்கொப்பு : கொள்ளை நோய் : அலக்குத்தடி : துன்பம்.



அலம்பு - வறுமை.
அலம்புடை - பத்து நாட்களுள் ஒன்று.
அலம் வருதல் - வருந்துதல் : சுழலுதல்.
அலயம் - அழியாமை : தோற்றம் : ஒடுங்காமை : நிலைமை : மனக்கலக்கம் : 
அமைவு : கலப்பை.
அலரவன் - நான்முகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:34 pm

அலராகின்று - அலராயிற்று.
அலராங்கட்டு - பழமொழியை அங்கே உடையது.
அலரி - பூ : கண்வரி : ஞாயிறு : தேனீ : நீராவி : கோதுமை : அழகு : பூப்பொது.
அலரியோன் - கதிரவன்.
அலர் - பூ : பூமாலை : நீர் : பலர் பழி தூற்றுகை : மகிழ்ச்சி : மஞ்சள் : மிளகுக்கொடி.



அலர்தல் - மலர்தல் : விரிதல் : மகிழ்தல்.
அலர்த்துதல் - மலரச் செய்தல்.
அலர்மகள் - திருமகள்.
அலவர் - உழு தொழிலாளர் : வேளாளர் : அல்லாதவர்.
அலவலை - அற்பன் : புலம்பன் : கலக்கம் : விலக்கமாய் நெய்யப்பட்டது : ஆராயாது செய்வது : விடாது பேசுவோன் : மனச்சஞ்சலம்.



அலவல் - அலமரல் : கந்தைச்சீலை : அலவலை : சந்தை : மனச்சஞ்சலம் : ஆராயாதசெயல் : எண்ணாதகாரியம் : அலவற்க : அலவுக.
அலவன் - ஆண் நண்டு : திங்கள் : கடகராசி : பூனை.
அலவாங்கு - கடப்பாரை : குத்துப் பாரை.
அலவாட்டு - வழக்கம்.
அலவாநிற்றல் - அங்கலாய்த்தல்.



அலவான் - பல்லாங்குழியாட்டக் காய்கள்.
அலவு - மனத்தடுமாற்றம்.
அலவுதல் - அலைதல் : சுழலல் : சிந்துதல் : வருந்துதல் : அலம்வருதல்.
அலவை - வியபிசாரம் : விடாது பிதற்றுபவர் : அல்லவை.
அலறல் - கத்துதல் : அழுதல் : புலம்பல் : ஒலி்த்தல்.



அலறுதலை - காய்ந்த தலை : விரிந்த தலை.
அலற்றுதல் - இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல்.
அலன் - பலராமன்.
அலன்றல் - சாதல் : உழலல் : சுழலுதல் : திரிதல்.
அலாக்கு - தனிமை.



அலாதம் - கொள்ளி : கரி.
அலாதி - முதலில் மெய்யெழுத்துக் கொண்டு வருஞ்சொல்.
அலாபத்திரம் - இணையாவிணைக் கைவகை.
அலாபம் - அடையாளம் : இடையூறு : பொருளிழப்பு.
அலாயுதன் - பலராமன்.



அலி - ஆண் பேடி : நமன் : உழவன் : நறுவிலிமரம் : உழவுசால் : காகம் : 
குயில் : தேள் : நெருப்பு : பலராமன் : விருச்சிக ராசி : வேளாண்மை. 
அலிகம், அலீகம் - பொய் : வானம் : வெதுப்பு : நெற்றி.
அலிக்கிரகம் - சனி : புதன் என்னுங் கிரகங்கள்.
அலிக் கை - அலிச் செயல்காட்டும்  அபிநயக்கை.
அலிபகம் - கருவண்டு : தேள் : நாய் : குக்கல்.



அலிப்பேடு - அல்லியம் என்னும் கூத்து.
அலி மரம் - வயிரமில்லா மரம்.
அலியர் - அலித்தன்மையுடையவர்.
அலியன் - கடுக்கை.
அலியா நிலை - சலியாத நிலை.



அலியெழுத்து - ஆய்தம் ( ஃ )
அலுக்குதல் - பிலுக்குப் பண்ணுதல் : சிறிது அசைத்தல்.
அலுக்குத்து - முகமதியப் பெண்கள் காதணி.
அலுத்தல் - இளைத்தல் : சலித்தல்.
அலுத்தன் - அவாவற்றிருப்பவன்.



அலுப்பு - அயர்வு : சலிப்பு.
அலுவல் - வேலை : பணி.
அலை - நீரலை : கடல் : மிகுதி : வருத்துகை : அலையச் செய்தல் : அலைதல் :
கொலை : திரையடித் தொதுக்கிய கரு மணல் : நிலம் : மது : கண்டனம்.
அலைகுலையாக்குதல் - நிலைகுலையச் செய்தல்.
அலைக்கழித்தல் - அலைத்து வருத்துதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:35 pm

அலைசல் - அலைவு : சோம்பு : தொந்தரை : துயர்.
அலைதல் - அசைதல் : திரிதல் : ஆடுதல் : சோம்பல் : துன்பம் : வருந்துதல் : அசைத்தல்.
அலைதாங்கி - அலையைத் தடுக்கும் செய்கரை.
அலைதாடி - ஆவின் கழுத்துத் தாடி.
அலைத்தரல் - அலைத்தல்.



அலைத்தல் - அசைத்தல் : அடித்தல் : அலையச் செய்தல் : கெடுத்தல் : திரையடித்தல் : நீரைக் கலக்குதல் : வருத்துதல்.
அலைநீர் - கடல்.
அலைபடுதல் - இழுபடல் : வருந்துதல் : ஊசலாடுதல் : தொங்குதல்.
அலைப்பு - வருத்தம் : அசைப்பு : அலைத்தல் : ஒன்பது வகைக் கூத்துக்களில் ஒன்று.
அலைமகள் - திருமகள்.



அலைமான் - திருமகள்.
அலையல் - அலைதல் : சோம்பல் : துன்பம் : அலைகை : அலையற்க.
அலைவாய் - திருச்செந்தூர் : கடல் : ஏவல்.
அலைவு - சஞ்சலம் : அசைவு : இயக்கம் : அலைதல்.
அலோகம் - காணப்படாத வுலோகம்.



அலோமம் - ஏற்றல் : ஒப்புக் கொள்ளுதல்.
அல் - இருள் : அல்லல்  : வறுமை  : அன்மை : ஒரு விகுதி : இராக்காலம் :  
ஒரு சாரியை : ஒரு தொழிற் பெயர் விகுதி : சுக்கு : மதில் : மயக்கம் : மெய்யெழுத்து.
அல்கந்தி - அந்திப்பொழுது.
அல்கல் - இரா : வறுமை : நாள் : இராக்காலம் : சுருங்குதல் : குறைதல் : தங்குதல் : தினம் : வற்றல் : நேற்று.
அல்கா - இழிவான.



அலகுதல் - தங்குதல் : நிலைத்து நிற்றல் : சுருங்குதல் : அழிதல்.
அல்குல் - பெண்குறி : பக்கம் : நிதம்பம்.
அல்கு கழி - உப்பங்கழி  : சிற்றாறு.
அல்லகண்டம் - துன்பம் : தொல்லை.
அல்லகம் - உற்பலச் செடி.



அல்லகாத்திரி - தணிகை மலை.
அல்ல குறிப்படுதல் - இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல்.
அல்லங்காடி - அந்திக்கடை.
அல்லமன் - பிரபுலிங்க லீலைக் கதைத் தலைவன்.
அல்லம் - இஞ்சி.  



அல்லல் - துன்பம் : முடைதல்.
அல்லது - அல்லாமல்.
அல்லவை - ஒழிந்தன : தீமை : தீயன : பயனில்லாப் பொருள் : தீயோர் கூட்டம் : புல்லவை : கொடுமை : தீவினைகள் : அல்லாதன.
அல்லறை சில்லறை - மிச்சத் தொகை.
அல்லா - அல்லாந்து : வருத்தம்.



அல்லாகியர் - அல்லவாக.
அல்லாட்டம் - அலைச்சல்.
அல்லாதவர் - தகாதவர் : தீயவர் : முன் சொல்லப்படாதவர் : இல்லாதவர் : 
வறிஞர் : பொல்லாதவர்.
அல்லாத்தல் - துன்புறுதல் : கவலுதல்.
அல்லாந்தவர் - துன்புற்றவர்.



அல்லாப்பு - வருத்தம்.
அல்லாமை - கெட்ட குணம் : தீக்குணம்.
அல்லாரி - வெள்ளாம்பல் : சுவரின் ஆரல் தாங்கும் முளை : அடர்த்தியின்மை.
அல்லி - அகவிதழ் : பூந்தாது : ஆம்பல் : அல்லியரசி : தாமரை : காயாமரம்.
அல்லிகம் - பேய்க்கும்மட்டி.



அல்லித்தண்டு - ஆம்பல் தாள்.
அல்லித்தாள் - அகவிதழ் உறுப்பு வகை.
அல்லிப்பாவை - அல்லியக் கூடத்தில் ஆட்டும் பிரதிமை.
அல்லிப் பிஞ்சு - பூவிழாத பிஞ்சு.
அல்லி மாதர் - திருமகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:35 pm

அல்லிமூக்கு - சில்லிமூக்கு : இரத்தம் ஒழுகும் மூக்கு.
அல்லியம் - கொட்டி : இடையரூர் : திருமால் கூத்து : அவலட்சணம் : 
உழக்கூடியது : உழுதல்.
அல்லியன் - குழுவைப் பிரிந்த யானை.
அல்லியா மரம் - படகு வலிக்கும் தண்டு.
அல்லியான் - நான்முகன்.



அல்லுச்சில்லுப் படுதல் - சிறிது சிறிதாகக் கெடுதல்.
அல்லும் பகலும் - இரவும் பகலும்.
அல்லோலகல்லோலம் - ஆரவாரம்.
அல்லுழி - அல்லாதவிடத்து.
அல்லை - அல்லாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை ஒருமைக்குறிப்பு வினைமுற்று.



அல்வழக்கு - தகுதியில்லாத வழக்கம்.
அல்வழி - வேற்றுமையல்லாத வழி : தகாத வழி.
அல்வான் - வர்ணத்துணி.
அவ - நிறைவு : உறுதி : வெறுப்பு : நிந்தை : சுத்தம் : அப்பால் முதலிய பொருள்களை யுணர்த்தும் வடமொழி இடைச் சொல் : அறிவு : கட்டளை செய்தல் : குறைத்தல் : சுத்தி செய்தல் : திருத்துதல் : நிந்தை : நீக்கம் : புறம்பு : நிறைவு : ஆதாரம் : தோல்வி.
அவகடம் - தாறுமாறு : கபடம் : வஞ்சகம் : அலட்சியம் : பொல்லாங்கு : நன்றியற்ற செயல்.



அவகாசமுறி - பாகபத்திரம்.
அவகாசம் - சமயம் : தக்கவிடம் : வீண் : இசைந்த காலம் : இடம் : 
இடையேயிருக்கும் இடம் : ஓய்ந்திருக்கும் நேரம் : பரந்த இடம்.
அவகாயம் - ஆகாயம்.
அவகாலம் - வீண்காலம்.
அவகீர்த்தி - புகழ்க்கேடு : இழிவு.



அவகீனம் - தேள் : தீக்குணம் : தீமை : தீது : சிதறுக.
அவகுண்டனம் - மூடுகை : இழுத்தல் : சூழ்தல்.
அவகேசி - பூத்துங்காயா மரம்.
அவக்கிரகம் - எடுத்தல் : ஏற்றுக் கொள்ளுதல் : இயற்கை : தடை : நிந்தை : 
பற்றுதல் : மழையின்மை : யானைத்திரள் : யானை நெற்றி.
அவக்கொடை - வீண் கொடை : வெறுந்தருமம் : பயனற்ற தருமம்.



அவசம் - பரவசம் : தன்வயப் படாமை.
அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்.
அவசரம் - விரைவு : மிகுதேவை : கோலம்.
அவசன் - தன்வசமிழந்தவன்.
அவசானம் - முடிவு.



அவசித்தாந்தம் - தவறான முடிவு.
அவசிந்தம் - சிந்திக்க முடியாதது.
அவச்சாவு - துர்மரணம்.
அவச்சின்னம் - குறிப்பிட்டு வேறு படுத்தப்பட்டது.
அவச்சுழி - கெட்டவிதி : கேடு காலம்.



அவடி - இடுதிரை.
அவடு - கிணறு : குழி : பிடர் : பள்ளம் : மடு.
அவச்சேதகம் - வேறுபடுந்தன்மை.
அவணம் - இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு.
அவணன் - திண்ணியன் : தீயபுகழுடையோன் : வீணன் : பெற்றோர்க்கடங்காதவன் : சண்டி : அங்குள்ளோன்.



அவண் - அவ்விடம் : அவ்விதம்.
அவதந்திரம் - சதியோசனை.
அவதாரம் - பிறத்தல் : இறங்குகை : உயர்ந்த பிறப்பு.
அவதாரிகை - முகவுரை : முன்னுரை.
அவதானம் - மறப்பின்மை : மேன்மைச் செயல் : கவனம் : 
நினைவுத் திறமைச் செயல் : சாதுரியம்.



அவதானித்தல் - பிறத்தல் : நினைப்பூட்டிக் கொள்ளுதல் : மனத்தில் அமைத்தல்.
அவதானி - கருத்துள்ளவன் : மறைகளில் தேர்ச்சியுள்ளவன் : அவதானஞ் செய்வோன்.
அவதி - வருத்தம் : எல்லை : முற்பிறப்பு : முக்காலம் : அளவு : இறுதி : கணக்கு : கவனம் : கிடங்கு : துன்பம்.
அவதிகத்தம் - கடல் நுரை.
அவதிஞானம் - சேய்மையில் உள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:38 pm

அவதூதன் - முற்றத்துறந்தவன் : நிர்வாண சந்நியாசி.
அவதூறு - பழிச்சொல்.
அவதோதகம் - பால் : அமிழ்து : கீரம் : துத்தம்.
அவத்தம் - அபத்தம் : பயனற்றது : நாய்வேளை.
அவத்துறை - தீய வழி.



அவத்தை - வேதனை : நிலை : துன்பம் : தன்மை : ஆபத்துநிலை.
அவநம் - அலங்கரித்தல் : இருத்தல் : காத்தல் : கொல்லல் : செய்தல் : தழுவுதல் : தாங்குதல் : தரும்படி கேட்டல் : போதல்.
அவநிகேள்வன் - திருமால்.
அவநீதன் - நீதியற்றவன்.
அவநுதி - துதித்தல் : புகழ்தல் : ஒன்றின் தன்மையை மறுத்து வேறொன்றின் தன்மையை ஏற்றிக் கூறும் அணி.



அவநெறி - தீயவழி.
அவந்தன் - தலை குனிந்து வணங்குவோன் : குனிந்தவன் : தலைகவிந்தவன்.
அவந்தி - ஓர் ஊர்  : கிளி : ஓர் ஆறு.
அவந்திகை - உச்சயினி : கிளி : தமக்கை : புளித்தகாடி : வாசவதத்தை : அவந்திநாடு.
அவவிரதம் - வேள்வியின் முடிவில் நீராடுகை.



அவப்படுதல் - பயனற்றதாதல்.
அவமதி - நிந்தனை : அவமானம் : இழிவு.
அவமழை - கேடு விளைவிக்கும் மழை.
அவமிருத்து - தீச்சாவு.
அவம் - பயனின்மை : தீமை : அசுபம் : குற்றம்  : வீண் : ஆகாயத்தாமரை : கேடு.



அவயம் - அடைக்கலம் புகுவோன் : புகலிடம் : அடைகாக்கை : வெட்டி வேர்.
அவயங்காத்தல் - அடைகாத்தல்.
அவயவம் - உடலின் உறுப்பு.
அவயவி - உறுப்புடையது : உடல்.
அவயோகம் - தீய நிகழ்ச்சி.



அவரகாத்திரம் - கடைசியானது : கீழ்மையானது : முதன்மையல்லாத : பின்புறம் : பின்வருவது.
அவராகம் - இச்சையின்மை : இசையின்மை.
அவராத்திரி - வீணான இரவு.
அவரை - ஒரு கொடி.
அவரோகணம் - இறங்குதல் : திருப்பிச் செல்லுதல் : விழுது.



அவரோதநம் - அந்தப்புறம்.
அவரோதம் - அடைக்கப்பட்ட இடம்.
அவர்ணியம் - உபமானம்.
அவர்வயின் விதும்பல் - பிரிவின் கண் தலைமகனுந் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல்.
அவலச் சமர்த்து - பெருஞ் சமர்த்துடையவன் போல் போலியாக நடித்தல்.



அவலச்சுவை - சோகரசம்.
அவலம் - வருத்தம் : கேடு : துன்பம் : அழுகை : வறுமை : மாயை : குற்றம் : 
நோய் : பலவீனம் : பயனின்மை.
அவலம்பித்தல் - சார்ந்து நிற்றல் : பற்றுதல்.
அவலித்தல் - வருந்துதல் : அழுதல் : பதறுதல்.
அவலிடி - ஒரு கைவரிக்கூத்து.



அவலீலை - அவமரியாதை : நிந்தனை : விளையாட்டு : களிப்பு.
அவலுப்பு - அவரியினின் றெடுக்கும் உப்பு.
அவலை - கடுப்பு : காடு : பாழ்நிலம்.
அவல் - ஒருவகைச் சிற்றுணவு : பள்ளம் : விளைநிலம் : குளம்.
அவவாதம் - கடைப்பிடி : கற்பித்த கட்டளை : நிந்தனை : வீண்பேச்சு.



அவவு - அவா : ஆசை : வாஞ்சை.
அவளிகை - திரைச் சீலை.
அவளைதுவளை - கதம்ப உணவு.
அவனதி - குனித்தல் : தலைகவிழ்தல் : தாழ்மை : மரியாதை : மேற்குத் திக்கில் மறைதல்.
அவனி - உலகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:38 pm

அழற்பால் - எருக்கு : அருக்கம் : அருக்கு.
அழற்பிரபை - ஒரு நிரயம்.
அழற்புண் - சிவந்து குருதி வடியும் புண்.
அழற்றடம் - தீக்காய் கல்ம்.
அழற்றுதல் - வெம்மை செய்தல்.



அழன் - பிணம் : பேய்.
அழன்று - சிவந்து.
அழாக்கு - ஆழாக்கு.
அழாந்தை - அழானுக்குத் தந்தை.
அழிகடை - மிகக் கெட்டது.




அழிகண்டி - உலோபி. 
அழிகாலி - வீண் செலவு செய்வோன்.
அழிகுநன் - தோற்றவன்.
அழிகை - அழிவு : சிதைவு.
அழிக்கல் - அழித்தல்.  



அழிசெய்தல் - கெடுத்தல்.
அழிச்சாட்டியம் - அழிப்பு : அழிவழக்கு.
அழிஞ்சுக்காடு - பாலை நிலம் : பாழ்ங்காடு.
அழிதகவு - துன்பம்.
அழிதகன் - தீயோன்  : அழிக்கப்படத்தக்கவன்.



அழிதகை - தகுதிக்கேடு.
அழிதகையாள் - கற்பிழந்தவள்.
அழிதலை - தலையோடு.
அழிதரவு - அழிதல் : சிதைவுறல் : கெடுதல்.
அழிதல் - அழித்தல் : வருந்துதல் : நாசமாதல் : ஒழிதல் : தடைப்படுதல் : இகழ்தல் : வறுமைப்படுதல் : இரங்குதல் : கலங்குதல் : குலைதல் : கெடுதல் : சிதறுதல் : சிதைவுறுதல் : செலவாதல் :  தோல்வியடைதல் : நிலைகெடுதல் : மனங்கலங்கல்.



அழிதன் மாலைய - அழியுந்தன்மையுடையன.
அழிதுளி - மிகுந்த துளி.
அழிதூஉ - அலி : பேடு : ஆண் தன்மையற்றது.
அழித்தருதல் - அழித்தல்.
அழித்தல் - கெடுதல் : ஒழித்தல் : தடவுதல் : வருந்துதல் : இகழ்தல் : வறுமைப்படுதல்.



அழித்தழித்து - திரும்பத் திரும்ப : மீண்டும் மீண்டும்.
அழிபசி - மிகுந்த பசி.
அழிபடர் - மிகுந்த துன்பம்.
அழிபடல் - வருந்தல் : கலங்கல் : சிதறல்.
அழிபு - அழித்து : அழிதல் : கேடு : தோல்வி.



அழிபூங்கானல் - மிகுந்த பூக்களையுடைய சோலை.
அழிபெயல் - மிகுந்த மழை.
அழிப்படுத்தல் - நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல்.
அழிப்பன் - சங்கரிப்பவன் : கெடுப்பவன்.
அழிப்பாளி - பொருள் வீணாக அழிப்பவன்.



அழிப்பு - மிகுந்த செலவு செய்தல் : அழிவு செய்தல்.
அழிம்பன் - கடன் இறுக்காமல் புரட்டுகிறவன் : தீங்கு செய்பவன் : வீண் செலவு செய்வோன்.
அழிம்பு - அழிவு  : சேதம் : நட்டம்  : வம்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:39 pm

அழுங்காமை - அஞ்சாமை : அலையாமை : அழாமை : அழுந்தாமை : 
ஆரவாரியாமை : இரங்காமை : ஒலியாமை : ஒளிமழுங்காமை : கெடாமை : 
சோம்பாமை : வருத்தப்படாமை.
அழுங்கு - ஆமை : ஒரு வகை விலங்கு.
அழுங்குதல் - வாய்விட்டழுதல் : ஒழிதல் : மிகவருந்தல் : இரங்குதல் : ஒலித்தல் : கெடுதல் : தாழ்தல் : தாமதித்தல் : சந்தித்தல் : அஞ்சுதல் : அலைதல் : அழுந்தல் : சோம்பல் : துன்பப்படுதல் : உருவழிதல்.
அழுங்குவித்தல் - துன்பமுறச் செய்தல் : தவிர்த்தல்.
அழுங்குப்பிடி - விடாப்பிடி.



அழுத்தக்காரன் - அடக்கமானவன் : இறுக்கமுடையவன் : உலோபி : கண்டிப்பாளன்.
அழுத்தம் - இறுக்கம் : பிடிமானம் : பதிப்பு : உறுதி.
அழுத்தல் - நடுதல் : அழுந்தச் செய்தல் : பதித்தல் : உறுதியாக்கல் : வற்புறுத்தல் : 
அமிழ்த்துதல் : எய்தல்.
அழுத்தி - அழுந்தச் செய்கிறவள்.
அழுத்துகை - அழுத்தல்.



அழுந்தல் - இறுகல் : பதிதல்.
அழுந்து - நீராழம் : வெற்றிலை நடும் வரம்பு.
அழுந்துதல் - அமுக்குண்ணுதல் : உறுதியாதல் : அமிழ்தல் : அனுபவப்படுதல்.
அழுந்துபடுதல் - தொன்று தொட்டு வருதல்.
அழுந்தூர் - ஓர் ஊர்.



அழுந்தை - அழுந்தூர்.
அழுப்பு - சோறு : அழுந்தியிருக்கும் பொருள்.
அழுப்புகம் - விண்ணுலகம்.
அழுமூஞ்சி - பொலிவற்ற முகமுள்ளவன்.
அழும்பில் - ஓர் ஊர்.



அழும்புதல் - செறியக் கலத்தல்.
அழுவமாரி - பெருமழை.
அழுவம் - கடல் : துருக்கம் : நடு : ஆழம் : குழி : பரப்பு : காடு : நாடு : போர் : 
போர்க்களம் : முரசு : மிகுதி : பெருமை : அப்பவகை : அழுக்குநிலம் : நடுக்கம் : 
வழுக்கு நிலம்.
அழுவனன் - அழுவான் : அழுபவன்.
அழைத்தல் - கூப்பிடல்.



அழையுறுத்தல் - கூவுதல்.
அளகநாதர் - தீர்த்தங்கரரில் ஒருவர்.
அளகபந்தி - கூந்தலின் ஒழுங்கு.
அளகபாரம் - கூந்தல் தொகுதி.
அளகம் - பெண் மயிர் : முன்னுச்சி மயிர் : பனிச்சை : நீர் : மயிர்ச்சுருள் : 
வெள்ளெருக்கஞ் செடி.



அளகவல்லி - மயிர்மாட்டி.
அளகளப்பு - அளவளப்பு : ஐக்கம் : ஒன்றிப்பு.
அளகாதிபதி - குபேரன்.
அளகாபுரி - அளகை : குபேரநகர்.
அளகு - சேவல் : காட்டுக் கோழி : கூகைப்பெடை : கார்த்திகை நாள்.



அளகை - அளகாபுரி என்னுங் குபேர நகரம் : எட்டாண்டிற்கும் பத்தாண்டிற்கும்
இடைப்பட்ட பெண்.
அளகையோர் - செட்டிகள் : பணவணிகர்.
அளக்கரர் - உப்பமைப்போர்.
அளக்கர் - கடல் : உப்பளம் : சேறு : நீள்வழி : நிலம் : கார்த்திகை நாள்.
அளக்கர்த்திணை - கடலாற் சூழப்பட்ட நிலம்.



அளத்தி - நெய்தல் நிலப்பெண்.
அளத்துநிலம் - களர் நிலம்.
அளத்துப்புல் - முயிற்றுப்புல் : முசுறுப்புல்.
அளந்திடல் - அளத்தல்.
அளபு - அளபெடை  : அளவு : மாத்திரை  : அளவு  :  ஓர் எழுத்தின் ஓசை நீண்டு ஒலித்தல்.



அளபெடை - எழுத்து மாத்திரை : நீண்டொலித்தல்.
அளப்பளத்தல் - பிதற்றல் : வீண் பேச்சுப் பேசுதல் : முறுமுறுத்தல்.
அளப்பறிதல் - உட்கருத்தைத் தந்திரமாக அறிதல்.
அளப்பன் - வீணாகப் பேசுவோன் : குதர்க்கம் பேசுவோன்.
அளப்பு - அளத்தல் : அளவு : எல்லை : ஊழ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:39 pm

அளமரல் - அலமரல் : வருந்துதல் : கவலல்.
அளம்படுதல் - வருந்துதல்.
அளம்பற்றுதல் - உப்புப்பூத்தல்.
அளர்க்கம் - தூதுளங்கொடி.
அளவடி - நாற்சீரான்வரும் பாவடி.




அளவடி விருத்தம் - கலிவிருத்தம்.
அளவம் - ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல்.
அளவர் - உப்பமைப்போர் : அளக்கிறவர்.
அளவல் - கலத்தல் : பொருந்தியிருத்தல் : எட்டுதல் : அளவளாவுதல்.
அளவளாவல் - கூடி மகிழ்தல் : மனங்கலத்தல் : கலந்து பேசுதல்.




அளவறுத்தல் - அளந்தறிதல் : அளவு வரையறுத்தல்.
அளவன் - தானியம் நிலம் முதலியன அளக்கிறவன் : உப்பமைப்போன் : கோரபாடாணம்.
அளவி - அளவு.
அளவியற் சந்தம் - 4 முதல் 26 எழுத்து வரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள் வகை.
அளவியற்றாண்டகம் - இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த
அடிகளையுடைய செய்யுள் வகை. 




அளவிறத்தல்
 - எல்லைகடத்தல் : மீறல் : மிஞ்சல் : இகத்தல் : கையிகத்தல் : வரம்பழித்தல் : கைம்மிகல்.
அளவின்மை - மிகுதி.
அளவுகோல் - நிலம் முதலியவைகளை அளக்கும் கருவி.
அளவுபடுத்துதல் - எல்லை செய்தல்.
அளவுறல் - கலத்தல்.




அளவெண் - நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்பு வகை.
அளவை விளக்கம் - பிரமாணங்களை விளக்கும் நூல்.
அளவையாகுபெயர் - ஆகுபெயர்வகையுள் ஒன்று : அஃது எண்ணல், எடுத்தல்,
முகத்தல், நீட்டல் என்னும் அளவுகளுள் ஒன்றன் பெயர் : அவ்வளவையுடைய
பொருளுக்காகி வருதல்.
அளறுதல் - சிதறி வெடித்தல் : ஓயாதழைத்தல் : நெரிதல் : பின்னமாய்ப் பிளத்தல்.
அளாவல் - கலத்தல் : துழாவல் : மனங்கலந்துறவாடல் : ஓங்கியிருத்தல்.




அளிகம் - கட்டளகு : நெற்றி.
அளிதல் - அன்புகனிதல் : கலத்தல் : வருந்தல் : புண்படுதல் : இகழ்தல் : உருகுதல் : கரைய அவிதல்.
அளிது - அளிக்கத்தக்கது : இரங்கத்தக்கது.
அளித்தல் - ஈதல் : அருளல் : காத்தல் : சொல்லுதல் : தலையணி செய்தல்.
அளித்து - அளிக்குந் தன்மையுடையது : இரங்குதற்குரியது.




அளிந்தம் - கோபுர வாயில் : திண்ணை முற்றம்.
அளிந்தார் - அன்புடையோர்.
அளியன் - அளிக்கத்தக்கவன் : எளியன் : அன்புள்ளோன் : காக்கப்படத்தக்கவன்.
அளுக்குதல் - குலைதல்.
அளேருகம் - தூதுளை.




அளைதல் - துழாவுதல் : கலத்தல் : தழுவுதல் : அருந்துதல் : அனுபவித்தல் : 
புரளுதல் : வருடல் : குழைதல் : கூடியிருத்தல்.
அளைமறிபாப்பு - பாட்டின் ஈற்றின் நின்ற சொல் இடையிலும் முதலிலும்
சென்று பொருள் கொள்ளப்படும் முறை.
அளைவு - அளைதல்.
அள்வழுப்பு - காதுக்குறும்பி.
அள்ளாடித் தள்ளாடுதல் - தளர்ந்த நடையாதல்.




அள்ளாடுதல் - செறிதல்.
அள்ளாத்தி - ஒரு வகை மீன்.
அள்ளி - வெண்ணெய்.
அள்ளிக் கொட்டுதல் - மிகத் தேடுதல்.
அள்ளித்துள்ளுதல் - மிகச் செருக்குதல்.




அள்ளிருள் - கும்பிருட்டு.
அள்ளிவிடுதல் - மிகுதியாகக் கொடுத்தல்.
அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேற் செலவிடுதல்.
அள்ளுகொள்ளை - பெருங் கொள்ளை : மிகுதியான வரவு.
அள்ளுக் கட்டுதல் - பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:40 pm

அள்ளுக்காசு - கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம்.
அள்ளுதல் - அள்ளியெடுத்தல் : திரளாயெடுத்தல் : வாரியெடுத்தல்.
அள்ளூறல் - வாயூறல்.
அள்ளை - பேய்.
அறக்கடவுள் - நமன் : தருமதேவதை.




அறக்கழிவு - உலக வழக்கத்திற்குப் பொருத்தமில்லாமை.
அறக் களவழி - வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை.
அறக்கள வேள்வி - வேள்விச் செயல்.
அறக்கப் பறக்க - விழுந்து விழுந்து : விரைவாக.
அறக்கற்பு - அமைதி நிலை பொருந்திய கற்பு : மறந்தவிர்ந்த கற்பு.




அறக்காடு - சுடுகாடு.
அறக்குளா மீன் - சூரை மீன்.
அறக்கூழ்ச்சாலை - அறத்தின் பொருட்டு உணவிடும் இடம்.
அறக்கொடி - உமை.
அறங்கடை - தீவினை : அறன்கடை.




அறங்கூறவையம் - நியாய சபை.
அறச்சாலை - தரும சத்திரம்.
அறச்செட்டு - கடுஞ்செட்டு.
அறச்செல்வி - உமாதேவி.
அறச்சோறு - பிச்சைச்சோறு.




அறத்தவிசு - நியாயபீடம்.
அறத்தளி - அந்தப்புரம்.
அறத்தார் - நல்வினையாளர்கள்.
அறத்தின்சேய் - தருமன்.
அறத்துணைவி - மனைவி : தருமதேவதை.




அறத்துப்பால் - அறத்தைப்பற்றிக் கூறும் பகுப்பு.
அறத்துறத்தல் - முற்றத்துறத்தல்.
அறத்துறுப்பு - ஐயப்படாமை : வெறுப்பின்மை முதல் எட்டு.
அறத்தொடு நிற்றல் - களவினைத்தமர்க்கு முறையே தெரியப்படுத்துதல்.
அறநிலையின்பம் - ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம்.




அறப் பாடல் - கேடு விளைக்கும் சொற் பயிலும் பாட்டு : அறம் பாடுதல்.
அறப்புறங் காவல் - அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாத்தல்.
அறப்புறம் - அறச்சாலை.
அறம் பகர்ந்தோன் - புத்தன்.
அறம்பாடுதல் - வசைபாடுதல்.




அறவர் - அறஞ்செய்தலைத் தொழிலாகவுடையவர் : பெரியோர் : முனிவர் : 
அந்தணர் : அறத்தைக் கூறுவோர்.
அறவாணன் - கடவுள்.
அறவாழி - தருமசக்கரம் : அறக்கடல்.
அறவாழியந்தணன் - கடவுள் : அருகன்.




அறவாழி யாள்வோன் - புத்தன்.
அறவாழி வேந்தன் - அருகன்.
அறவாளன் - அறச்செயலுடையவன்.
அறவி - அறத்தையுடையது : பெண் துறவி : அறம் : நல்வினையோடு கூடியது : பொதுவிடம்.
அறவிடுதல் - முற்றாக நீக்குதல்.




அறவிய - அறத்தோடு கூடிய.
அறவியங் கிழவோன் - புத்தன்.
அறவியான் - அறத்தில் நிற்பவன்.
அறவிருத்தம் - அறத்திற்கு மாறுபட்டது.
அறவிலை - பொருளை விலையாகக் கொடுத்து அறங் கொள்ளல் : சுத்தகிரயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 03, 2013 8:40 pm

அறவு - அறுபட்டவிடம் : அறுதி : ஒழிகை : அறுதல் : தொலைதல் : அவா : நீக்கம்.
அறவுபாதை - அமைச்சரைத் தேர்ந்தெடுக்குஞ் சூழ்ச்சிகளில் ஒன்று.
அறவுரை - நீதிநெறி புகலல்.
அறவுளி - நோயாளி நோயறும்படி செபிக்கும் மந்திரம் : முடியும் இடம் : அறுமிடம் : தீரும் இடம்.
அறவூதல் - புடமிடுதல்.




அறவை - உதவியற்ற நிலை : தீமை : அறநெறி : ஆதரவற்றது : அறத்தையுடையாய்.
அறவைத்தல் - புடமிடுதல்.
அறவைத் தூரியம் - அனாதர்க்கு அளிக்கும் உடை.
அறவோர் - அறவர் : பார்ப்பார் : முனிவர் : இல்லறத்தார்.
அறளை - ஒரு நோய் : தொந்தரை.




அறனாக்கம் - இம்மை மறுமைச் செயல்கள்.
அறனின்பால் - தீவினை.
அறனோம்படை - தருமம் பாதுகாக்கும் இடம் : தருமம் போதிக்கும் இடம்.
அறன்கடை - தீவினை.
அறன்மகன் - தருமன்.




அறாக்கட்டை - மூடன் : உலோபி.
அறாமை - கவிழ்தும்பைப் பூண்டு : அறல் என்பதன் எதிர்மறை.
அறாவட்டி - அதிக வட்டி.
அறாவிலை - அளவுக்கு மேற்பட்ட விலை.
அறாவுதல் - அடித்தல்.




அறிகரி - கண்கூடான சாட்சி.
அறிகருவி - அறிதலுக்குரிய கருவிகளாகிய ஞானேந்திரியங்கள்.
அறிகிலாதார் - அறியத்தக்க அறிவில்லாதவர்கள்.
அறிகொல்லல் - அறிவுறுத்தியதைக் கொள்ளாமல் இகழ்ந்து கூறுதல்.
அறிசலம் - செஞ்சறிந்த குற்றம்.




அறிதுயிலமர்ந்தோன் - திருமால்.
அறிநன் - அறிபவன்.
அறிந்தீயார் - அறியார்.
அறிபயிர் - சங்கேத வொலி.
அறிபொருள் வினா - அறியப்பட்ட பொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்கும் கேள்வி.



அறிப்பு - உணர்கை : அறிவிப்பு.
அறியலுறவு - அறிதற்கண் விருப்பம்.
அறியலை - அறியாய்.
அறியாக்கரி - பொய்ச்சாட்சி.
அறியாவறிவு - அறிதற்கரிய அறிவு.



அறியாவினா - தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்குங் கேள்வி.
அறியுமோன் - அறியுமவன்.
அறிவச்சம் - அறிதலான் வரும் அச்சம்.
அறிவது - அறிவு : அறியத்தக்கது : அறிக.
அறிவரன் - அறிவிற் சிறந்தவன்.



அறிவர் சிறப்பு - இறைவர் பூசனை.
அறிவழி - மது : பேய்.
அறிவறிவாக - விளக்கமாக : தீர.
அறிவறை - அறிவற்றவன் : மனத்தெளிவின்மை.
அறிவறை போதல் - அறிவு முழுது மற்றுப் போதல்.



அறிவனார் - பஞ்ச மரபு என்னும் நூலாசிரியர்.
அறிவாகரன் - மிகுந்த கல்வியறிவையுடையவன்.
அறிவிற் பரிந்தான் - தோழன். 
அறிவு வரம்பிகந்தோன் - மிகுந்த அறிவினையுடையவன் : அருகன்.
அறிவுடைமை - உண்மையறிவுடையனாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 36 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum