தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இது தான் காதலா -தொடர்கதை 2
3 posters
Page 1 of 1
இது தான் காதலா -தொடர்கதை 2
இதுதான் காதலா -2 !
நாம் ஒரு வழியைத் தேடிப் போனால் விதி ஒரு வழியை அமைத்துக் கொடுக்கும் ..முயற்சி என்றும் கடின உழைப்பு என்றும் அதிஷ்டம் என்றும் பலரால் பல விதமாக கூறினாலும் நமக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது தான் வந்து அமைகிறது ...நாம் முட்டினாலும் மோதினாலும் கதறினாலும் கெஞ்சினாலும் ஒன்னும் ஆகிவிடப் போவதில்லை ...
தேர்வுமுடிவுகள் வரும் வேளையில் எத்தனை எத்தனைப் பிள்ளைகள் இன்றும் தற்கொலை என்ற முடிவை எடுத்துக் கொள்கின்றன..தேர்வில் தோல்விக் கண்டால் தற்கொலை தான் முடிவா ?? என்ன பைத்தியக்காரத் தனம்?? இதற்கெல்லாம் காரணம் யார் ?? மாணவர்களா பெற்றோர்களா ஆசிரியர்களா ??யார் மேல் பழி சுமத்தினாலும் சென்ற உயிர் திரும்பி வருமா??
எந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதைக் காணும் பெற்றோர் பிள்ளைக்கு எந்தத் துறையில் ஆசை அதிகம் என்பதைக் காண மறுக்கின்றனர் ..
பெரும்பாலான குழந்தைகள் தனக்கு எந்தத்துறைப் பிடிக்குமென்றேத் தெரியாமல் எதோ ஒன்றோடு வாழ்க்கையை ஐக்கியமாக்கிவிடுகின்றனர்.
பெண்பிள்ளைகளுக்குஒதுக்கப் பட்டது டீச்சர் என்பதும், மெக்கானிக்கல் என்பது ஆண்பிள்ளைகளுக்காக வரையறுக்கப்பட்டதாக இருந்தது ...அப்படியே ஒருப் பெண் மெக் படிக்க ஆசைக் கொண்டாலும் குடுமபத்தை சமாளித்து அதுவும் சொந்தக் காரங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்குள் விளங்கிடும் வாழ்க்கை ...
கனிமொழியின் பள்ளிப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வின் முடிவுகளும் வந்தது..௧௨௦௦ க்கு ௧௧௫௫ மதிப்பெண் எடுத்திருந்தாள் கனிமொழி. அவளின் எதிர்கால துறையும் அவளின் பெற்றோர் ஆசைப்படியே மருத்துவத்துறை.கனிமொழிக்கோ மியூசிக்கல் படிக்க அவ்ளோ ஆசை. தனது ஆசையை அம்மாவிடம் சொல்ல ,"மியூசிக் படிக்கப் போறியா என்னாது அது படிச்சி என்னப்பண்ணுவ ஒழுங்கா மெடிக்கல் காலேஜ் ல சேர்ந்துப் படி" என்று ஒரே பேச்சில் முடித்து விட்டார் கனியின் அப்பா வேதநாயகம் ..
மருத்துவப் படிப்பிற்கான கவுன்சலிங் கார்டும் கனியைத்தேடி வந்தது..அதே சமயத்தில் அப்பாவிற்குத் தெரியாமல் திருச்சி யில் அறிவியல் கல்லூரியில் BA மியூசிக் கிற்கு விண்ணப்பித்து இருந்தாள்.
கவுன்சிலிங் செல்லவும் மனமில்லை அப்பாவின் சொல்லை மீறவும் முடியவில்லை தன் லட்சியம் BA மியூசிக் என வெளிக்காட்டவும் இயலவில்லை ..
தந்தையின் ஆசைப்படி வேண்டாவெறுப்பாகத்தான் மருத்துவப் படிப்பிற்க்கான கவுன்சிலிங்கிற்காக திருச்சியிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்தாள்.
சிங்காரச் சென்னை கனியையும் வரவேற்றது...ஒவ்வொருவருக்கும் சென்னை எதோ ஒருக் காரணத்தில் பிடித்தோ பிடிக்காமலோ இருக்கலாம் ..ஆனால் வந்தாரை வாழவைப்பது தான் சென்னையின் அழகே!!
தமிழ்நாட்டில் எந்த ஒரு மூலையில் இருந்து யார் இங்கு வந்து சென்றாலும் அவர்களின் நினைவில் வட்டமடிக்கும் ஒரு நிகழ்வை சென்னைக் கொடுப்பதில் தவறுவதே இல்லை..
காலைப் பேருந்து பயணநெரிசலில் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி அடையும் வேளை தனது மியூசிக் கனவைத் தொலைக்கும் தருணம் வருவதாய் உணர்ந்தாள் ..அலைமோதும் கூட்டம் மாணவர்களை விடப் பெற்றோரே எங்கும் தெரிந்தனர்..கூட்டத்தில் யாரேனும் தெரிந்த முகத்தை தேடும் கனிக்கு தந்தை வேதநாயகம் தவிர யாரும் பிடிபடவில்லை ..
கனிமொழிக்கானா பதினோரு மணிக்கான கவுன்சிலிங் நேரம் வர உள்ளே சென்றாள்.ஒவ்வொரு மாணவர்களின் முகத்திலும் எதோ கலவரம் காணப்பட்டது..அது கவுன்சிலிங்க்கான கலவரமா இல்லை நம்மைப் போல் வேண்டா வெறுப்பாக நிர்பந்திக்கப் பட்டச் சூழ்நிலை நிலவரமோ என யோசித்தாள் .
ஒவ்வொரு முகங்களையும் நோட்டமிட்ட கனிக்கு யாரோ ஒருவர் தம்மைப் பார்ப்பது போல் பிரம்மையில் திரும்பிப் பார்க்க, கனிக்கு பின்புறம் நின்ற ஒருவன் அவளையேப் பார்த்தான் ...
கனிமொழி அவளைப் பார்த்ததும் அவன் வேறு திசையை நோக்கித் திரும்பினான் ..கனியும் திரும்பித் திரும்பி அவனையேப் பார்க்க,
(ஸ்டாப் ஸ்டாப் எல்லாரும் காதைக் கொடுங்க ஒரு இரகசியம் சொல்லணும் கனிமொழி அந்தப் பையனை சைட் அடிச்சி இருக்கா )
பெண்கள் ஆண்களை சைட் அடிப்பாங்களா ன்னு கேட்டா இல்லை பொண்ணுங்க சைட் அடிக்கவே மாட்டோம் ன்னு தான் சொல்லுவாங்க ...உண்மையில் ஆண்கள் பார்க்காத நேரம் அவர்களைப் பார்ப்பது என்னவோ பெண்களுக்குப் பிடிக்கும்.ஆண்கள், "நீ என்ன சைட் அடிச்சதானேன்னு கேட்டா, இல்லையே சும்மா பார்த்தேன்"ன்னு சொல்லுவாங்க ...இதே பையன் பண்ணினா சைட் அடிக்கிறதுன்னு பெயர் ஒருப் பொண்ணுப் பார்த்தா casual லுக் ....
கனிமொழியும் அந்தப் பெயர் தெரியாத பையனை சைட் அடிச்சி கொண்டிருக்க சாரி casual லுக் ல பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பையனும் சட்டென்று கனிமொழியின் பக்கம் தன் பார்வையைப் பதித்தான் ..அவன் பார்வையறிந்த அவள் வேறு திசையை நோக்கி தனதுப் பார்வையைத் திருப்பினாள்.அது என்னவோ பெரும்பாலான காதல் தோன்றுவதற்குக் கண்களே அடிப்படைக் காரணமாகின்றன. இந்தக்கண்கள் செய்யும் சேட்டைக்கும் அளவே இருக்காது.
"பொறுக்கிப் பய எப்படிப் பார்க்குறான் பாரு கவுன்சிலிங் வந்து இருக்க மாறியா இருக்கான் ..ஆளும் சைஸ் உம் ட்ரீஸ்உம்" ன்னு முனங்கிக் கொண்டே திரும்பியவளுக்கு அதிர்ச்சி அவன் அங்கே இல்ல்லை ..
பருவவயதில் பெண்கள் பொய்யாய் திட்டினாலும் உள்ளுக்குள் மற்றவர்கள் பார்ப்பதில் எதோ சின்ன சந்தோசம் இருக்கத்தான் செய்யும் ..
கவுன்சிலிங் உள்ளே சென்றவளுக்கு கட் ஆப் மார்க்கில் waiting list ல சென்றவள் மருத்துவப் படிப்பிற்க்கான இடம் கிடைக்கவில்லை என்ற அந்த இன்ப அதிர்ச்சியுடன் தந்தையிடம் வராத சோகக் கீதம் ஒன்றை இசைக்க ஓடிச் சென்றாள்.. தந்தையிடம் கட் ஆப் மார்க்ப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க சற்றுத் தொலைவில் அந்தப் (பொறுக்கிப் )பையனும் அவனின் பெற்றோரிடம் எதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாள் ..அவனின் பெற்றோரின் சந்தோஷ முகம் அவனுக்கு மெடிக்கல் சீட் கிடைத்ததை உறுதி செய்தது ..
கனிமொழிக்கோ அதைப் பார்த்ததும் கொஞ்சம் பொறாமையும் வந்தது.இருந்தாலும் தனக்குப் பிடித்த மியூசிக் படிக்க இனிமேல் தடையில்லை என்றக் கனவோடு திருச்சியை நோக்கிப் பயனித்தாள்..
கண்களின் குறும்பு இதயத்தை மட்டுமா தாக்கும் தூக்கத்தையும் அல்லவாப் பறிக்கும்...இரவின் சென்னை டு திருச்சிப் பயணம் தூக்கத்தைப் பறித்து பெயரில்லா அவனின் நினைவுகளை இறைத்துச் சென்றது ........

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இது தான் காதலா -தொடர்கதை 2
பொன்னு கதை எல்லாம் எழுதுதே சரிலயே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இது தான் காதலா -தொடர்கதை 2
தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இது தான் காதலா -தொடர்கதை 1
» இது தான் காதலா -தொடர்கதை 3
» இது தான் காதலா -தொடர்கதை 4
» இது தான் காதலா -தொடர்கதை 5
» இது தான் காதலா!!!!!!!!!!!!
» இது தான் காதலா -தொடர்கதை 3
» இது தான் காதலா -தொடர்கதை 4
» இது தான் காதலா -தொடர்கதை 5
» இது தான் காதலா!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum