தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சத்குரு பதில்கள்
Page 1 of 1
சத்குரு பதில்கள்
பதிவு செய்த நாள்
01 அக்2014
00:00
உமாதேவிபலராமன், திருவண்ணாமலை: உங்கள் முற்பிறவிகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். யாராலும் முந்தின பிறவி பற்றியெல்லாம் நினைவு வைத்திருக்க முடியாது என்று என் தோழி அடித்துச் சொல்கிறாள். உங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகும்?
முடியும், முடியாது என்பதெல்லாம் நபருக்கு நபர் மாறுபடும். நூறு மீட்டர் தொலைவை பத்து விநாடிக்குள் ஓடிக்காட்டுங்கள் என்று சொன்னால் முடியாது என்று நீங்கள் கை விரிப்பீர்கள். அதைவிடக் குறைந்த நேரத்தில் அதை அநாயாசமாகச் செய்து முடிப்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் உங்கள் அனுபவத்தில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, எதையும் மறுக்காதீர்கள். என் அனுபவத்தை நான் சொன்னேன். அதை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. சொல்லப்போனால், யார் சொன்னதையும் அப்படியே நீங்கள் நம்பி ஏற்காமல், அனுபவ பூர்வமாக உணர முற்படுவதே நல்லது. அப்போதுதான் உங்கள் வாழ்க்கையை ஆழமாக, அழுத்தமாக வாழ்ந்து பார்க்க முடியும்.
மல்லிகா அன்பழகன், சென்னை-78: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் அது இறந்த காலமாகத்தான் இருக்க வேண்டும் எனறு முடிவு செய்து விட்டது போலிருக்கறதே? உண்மையில், நிகழ்காலத்தில் கடவுளை அனுதினமும் ஒவ்வொரு கணத்திலும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கடவுளைத் தவிர வேறு எதையும் எங்கேயும் காணவில்லை.
எப்படி என்கிறீர்களா? கடவுள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? உங்களைச் சுற்றி படைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது? எங்கெல்லாம் படைப்பு நிகழ்கிறதோ, அங்கெல்லாம்தானே?
அதாவது அதோ அந்த மரத்தில், இந்தப் பூவில், உங்களில், என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத் தவிர வேறு எதை நீங்கள் காணமுடியும்?
காலையில் நீங்கள் சாப்பிட்ட சிற்றுண்டி மாலைக்குள் உங்கள் உடலின் ஒரு பகுதியாக மாறுகிறதே, இந்த அற்புதத்தை யார் நிகழ்த்துவது? உங்களைப் படைத்தவர் தானே? அதை அவர் வெளியில் இருந்து கொண்டா செய்கிறார்? உங்களுக்குள் இருந்து கொண்டு அல்லவா செய்கிறார்? அப்படியானால் கடவுள் உஙகளுள் இருக்கிறார் அல்லவா?
ஒவ்வொரு படைபபிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான் என்று புரிந்துகொண்டதால் தினம் தினம் கணத்துக்குக் கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காண்கிறேன். கண்டுகொண்டே இருக்கிறேன்.
வெ.கணேசன், அருப்புக்கோட்டை: ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் ஈஷா யோகாவில் பலனடைய முடியுமா?
கிடையவே கிடையாது. நீங்கள் ஒரு கார் வாங்குகிறீர்கள், நீங்கள் கிறிஸ்தவராக இருநதால்தான் அது ஓடுமா? முஸ்லிம் இனத்தவர் என்றால் அதை இயக்க முடியாதா? நீங்கள் புத்தர் வழி நடப்பவரா, ஜைன மதத்தைச் சேர்ந்தவரா என்று இயக்கப்படும் இயந்திரம் பாகுபாடு பார்க்கிறதா? யோகாவும் அப்படித்தான். அது ஒரு விஞ்ஞானம். ஆண், பெண், மொழி, நாடு, மதம் என்று எந்தப் பிரிவினையும் அதற்குக் கிடையாது.
மதங்கள் தங்களுக்குள் ஒற்றுமை இன்றி பிரிந்து கிடக்கின்றன. ஒன்றை ஒன்று முட்டி மோதுகின்றன. சண்டையில் இறங்குகின்றன. யோகாவோ, பிரிவை மறந்து மற்ற ஒன்றுடன் ஐக்கிமாவது எப்படி என்று வழிகாட்டுகிறது. யோகா பயின்ற பிறகுதான் தங்கள் மதத்தின் வேர்களை முழுமையாக உணர முடிகிறது என்று பல மதத்தினர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
வெறும் நம்பிக்கைகளின் மீது நீங்கள் எழுப்பியிருக்கும் உங்கள் மதத்தின் உண்மை உருவை நீங்கள் தரிசித்ததில்லை. யோகா உங்கள் மதத்தின் ஆழங்களை அனுபவ பூர்வமாக உணர உங்களுக்குக் கதவுகளைத் திறந்து விடும்.
தேவகி வாசுதேவன், வில்லிவாக்கம்: பெண்கள் ருத்திராட்சம் அணியலாமா?
ஆண்கள் பெருமையுடனும், சுதந்திரத்துடனும் அணியக் கூடியவற்றை ஒரு பெண்ணும் அணியட்டுமே!
அதற்காகப் பத்து சங்கிலிகள் அணிந்து அதற்கு மேல் ருத்திராட்ச மாலையையும் ஓர் ஆபரணமாக அணிவதில் அர்த்தமில்லை. ஆண் ஆனாலும், பெண் ஆனாலும், தங்களை அடிமைப்படுத்தும் விலங்குகளைத் தகர்த்து விட்டதன் அடையாளமாகக் கருதி ருத்திராட்சத்தை அணிய வேண்டும். ருத்திராட்சம் அணிகையில், வாழ்க்கையின் அற்பத்தனமான விஷயங்களைக் கடந்து சென்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
அலங்காரத்துக்காக அணிவதும், நினைத்த போது கழற்றி வைப்பதுமாக கையாளக்கூடியதல்ல ருத்திராட்சம்.
எஸ். அஸ்வின் குமார், தஞ்சை: ஒரு குருவின் கடமை என்ன?
நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஒரு குருவின் நோக்கம் அடிப்படையில் அழிப்பதுதான்.
உங்களின் இன்றைய நிலையை அழித்தால்தான், இன்னும் பெரிதான ஒன்றை அனுபவிக்க நீங்கள் தயாராவீர்கள். சிறைப்பட்டுக் கிடக்ம் உங்கள் தளைகளை அவர் அறுத்தால்தான், எல்லையற்ற தன்மையை நீங்கள் ருசிக்க முடியும். உங்கள் அகங்காரத்தைத் தொடர்ந்து சிதைத்தால்தான் சில உயரங்களை உங்களால் தொடர முடியும். உங்களை உன்னத அனுபவங்களுக்கு எடுத்துச் செல்ல, இப்படி உங்கள் அடிப்படைகளை அழிக்கும் நண்பரே உங்கள் குரு.
வண்ணை கணேசன், சென்னை-110: நேரத்தை திறம்படத் திட்டமிட்டுப் பயன்படுத்துவது எப்படி?
நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன் சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை.
நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்?
மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள். நேரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் செய்து கொண்டிருப்பதால் சரியான பலனின்றிப் போகிறது.
ஆண்ட்ரூ கார்னகி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருந்தவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் பணக்காரரானது அமெரிக்க அரசுக்கு சந்தேகத்தை உண்டு பணணியது. புலன் விசாரணைகள் நடத்தியும் அவர்களால் குற்றங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரடியாகச் சந்தித்தனர். எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்? என்று கேட்டனர்.
கார்னகி சொன்னார், என்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க முடியும். உங்களால் முடியுமா என்று பாருங்கள்!
அவர்கள் முயற்சி செய்தார்கள், தோற்றுப் போனார்கள்.
கார்னகி சொன்னா, உங்களால் ஐந்து நிமிடங்களுக்குக்கூட மனதை ஒருமுகப்படுத்தி வைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட மனதுடன் இருக்கும் நீங்கள் அமெரிக்காவை ஆள்வது எப்படி சரியாக இருக்கும்?
உங்கள் மனம் மிக அற்புதமானதோர் கருவி. நீங்கள் சொன்னதிலிருந்து தவறாமல், முழுமையாகச் செயல்பட உங்கள் மனதைத் தயார்ப் படுத்திவிட்டால், எந்தத் தொழிலையும் எந்த சிரமும் இல்லாமல், மிக எளிதாக செய்து முடிக்க இயலும்.
நன்றி-- குமுதம் பக்தி செய்திகள்:
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» யோகா என்றால் என்ன ? - சத்குரு
» உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ்
» மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
» குருவியார் கேள்வி - பதில்கள்
» உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ்
» மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
» குருவியார் கேள்வி - பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum