தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
திரை இசையில் விஞ்சி நிற்பது
சமூக விழிப்புணர்வு பாடல்களே!
அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால்
அழகு இருக்காது.
காலம் மாறிப் போச்சு!
ஊசியைப் போட்டா உண்டாகுமென்கிற
உண்மை தெரிஞ்சு போச்சு!
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க – நீங்க
மதம் சாதி பேதம் மனசை விட்டு நீங்கலே – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே!
நான் சொல்லப் போற வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அது தான் நீ தரும் மகிழ்ச்சி
தூங்காதே தம்பி தூங்காதே
இப்பாடலில் முக்கியமான வரி
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துள்ளி கூட்டுகிறாய்
உனது புன்னகை போதுமடி
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டமே
நண்டூறும் நரிஊரும் கருவேலங்காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டமே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழடு கடும் வெயில் கூட அழகு
கடைசியாக
கவலை மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு
என்று முடித்திருப்பார்.
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோம்
கடைசியாக இப்படி முடித்திருப்பார்.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே.
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கு என்னடா வேகத்தடைகள்
போர் செய்வோம்
சமூக விழிப்புணர்வு பாடல்களே!
கவிஞர் இரா. இரவி.
******
திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் என்று பலவகை உண்டு. காதல் பாடல்கள் நிறைய வருவதுண்டு. சமூகப் பாடல்கள் அத்தி பூத்தாற் போல, குறிஞ்சி பூத்தாற் போல வந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெறும். காலத்தால் அழியாத வரம் பெற்றவை சமூகப் பாடல்கள்.
உடுமலை நாராயணன் என்ற கவிஞர் திரைத்துறையில் 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். அவர் பலவகைப் பாடல்கள் எழுதினாலும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் சமூகப் பாடல்கள்.
ஆடிப்பாடி வேலை செஞ்சாஅலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால்
அழகு இருக்காது.
பெண்கள் பதவியில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் இன்று கேட்கின்றனர். ஆனால் அன்றே கவிஞர் ஆண் பெண் இருவரும் வேலை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அன்றே பாட்டில் விதைத்து உள்ளார். உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
காசிக்குப் போனா கரு உண்டாகுமென்றகாலம் மாறிப் போச்சு!
ஊசியைப் போட்டா உண்டாகுமென்கிற
உண்மை தெரிஞ்சு போச்சு!
சோதனைக்குழாய் குழந்தை அதை இன்று அறிவியல் வளர்ந்து விட்டது. இந்த முற்போக்கு சிந்தனையை அன்றே பாடி விழிப்புணர்வு விதைத்தது சிறப்பு.
உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – நீங்கசும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க – நீங்க
மதம் சாதி பேதம் மனசை விட்டு நீங்கலே – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே!
இன்றைக்கும் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை நடக்கின்றது! காந்தியடிகள் சொன்ன அகிம்சையை கடைபிடிக்க-வில்லை என்று அன்று அவர் பாடியது இன்னும் பொருந்துவதாக உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சரானவுடன் எம்.ஜி.ஆர். சொன்னார், எனது முதல்வர் நாற்காலியில் மூன்று கால் என்னவென்று தெரியாது. ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். முதல்வராவாதற்கு உதவியது சமூக விழிப்புணர்வுப் பாடல்களே!
சின்னப்பயலே சின்னனப்பயலே சேதி கேளடாநான் சொல்லப் போற வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அது தான் நீ தரும் மகிழ்ச்சி
மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பகுத்தறிவை விதைக்கும் விதமாக பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள். பொதுவுடைமை சிந்தனையாளரான அவரது மற்றும் சில பாடல்கள்
திருடாதே பாப்பா திருடாதேதூங்காதே தம்பி தூங்காதே
இப்படி பல பாடல்கள் சமூக விழிப்புணர்வை விதைத்து சமூகத்திற்கு புத்துணர்ச்சி தந்தன.
வாலிபக் கவிஞர் வாலி திரைத்துறையில் கடுமையாக முயற்சி செய்து மனம் நொந்து இனி சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி இருந்த போது கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலைக் கேட்டு விட்டு மனம் மாறி திரும்பவும் முயன்று வென்று மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதினார்.
கவியரசு கண்ணதாசன் பாடல்!
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?இப்பாடலில் முக்கியமான வரி
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
விரக்தியில், கவலையில் உள்ள பலரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். காலணி இல்லையே என கவலைப்படுகின்றாய். காலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார். ஆடிக்காரில் அமைதியின்றி கவலையில் செல்லும் இணை உண்டு. மிதிவண்டியில் மகிழ்ச்சியாகச் செல்லும் இணையும் உண்டு.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பல பாடல்கள் எழுதி உள்ளார். அவற்றில் ஒன்று.
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
இந்தப்பாடலில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக எழுதி இருப்பார். இப்பாடலைக் கேட்பவர்கள் உள்ளத்திலும் மனிதநேயம் நன்கு பதியும்.
உலகில் 41 ஆண்டுகளே வாழ்ந்தவர் நா.முத்துக்குமார். இவர் சின்ன வயதில் அம்மாவை இழந்து அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். இவர் பல காதல் பாடல்கள் எழுதி இருந்தாலும் மகள் பற்றி, தந்தை பற்றி எழுதிய பாடல்களே நிலைத்து நின்றன. தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தன.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துள்ளி கூட்டுகிறாய்
இந்தப் பாடலில்
கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி
என்பார். கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல் இது. மற்றொரு பாடல்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!
அம்மாவைப் பற்றி பலரும் பாடி உள்ளனர். ஆனால் நா. முத்துக்குமார்அவர்கள் தான் அப்பா பற்றி உயர்த்தி பாடி அப்பா பாசத்தை விதைத்து இருப்பார்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடிவெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டமே
நண்டூறும் நரிஊரும் கருவேலங்காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டமே
கவிஞர் நா. முத்துக்குமார் கிராமத்து வாழ்க்கையை உழைப்பாளிகளின் உழைப்பை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
நா. முத்துக்குமாரின் மற்றொரு பாடல் :அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழடு கடும் வெயில் கூட அழகு
கடைசியாக
கவலை மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு
என்று முடித்திருப்பார்.
எல்லாவற்றையும் ரசியுங்கள். இலையும் அழகு தான். அன்போடு பாருங்கள் என்று சமூகக் கருத்தை விதைத்து இருப்பார். இயற்கை தேசத்தை வலியுறுத்தி இருப்பார்.
காதல் பாடல் எல்லாக் கவிஞர்களும் எழுதுவார்கள். ஆனால் சமூக விழிப்புணர்வு பாடல்கள் சிலருக்குத் தான் நன்றாக வரும். அது தான் சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதேவாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
இந்தப் பாடல் பள்ளிகளில் காலையில் இறைவணக்கப் பாடலுக்கு அடுத்தபடியாக பாடி வருகின்றனர். தன்னம்பிக்கை விதைக்கும் அற்புதமான பாடல்.
பா.விஜய் அவர்களின் மற்றொரு பாடல்.
இன்னும் என்ன தோழா எத்தனை நாளாநம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோம்
கடைசியாக இப்படி முடித்திருப்பார்.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே.
மனிதனின் மனத்திற்கு உரமூட்டும் அற்புத வரிகள். தோல்விக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முயன்றால் வாழ்க்கையில் சாதிக்கலாம் வெல்லலாம் என்பதை மிக நன்றாக உணர்த்தி இருப்பார்.
வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் அண்மையில் எழுதிய பாடல் ஒன்று.
விதி ஒரு விதி செய்வோம்தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கு என்னடா வேகத்தடைகள்
போர் செய்வோம்
இந்த பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை நன்கு விதைத்து இருப்பார்.
அன்னம் என்ற பறவை தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்துமாம். அதுபோல நாமும் தள்ள வேண்டிய தரமற்ற பாடல்களைத் தள்ளி, நெஞ்சில் அள்ள வேண்டிய சமூக விழிப்புணர்வுப் பாடல்களை அள்ள வேண்டும்.
சமூக விழிப்புணர்வு பாடல்கள் நிலவு போன்றவை. காதல் பாடல்கள் நட்சத்திரங்கள் போன்றவை. என்ண முடியாது. எண்ணத்தில் நிற்காது. அனால் நிலவை மறக்க முடியாது. அதுபோல சமூக விழிப்புணர்வு பாடல்கள் அன்றும் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கொலைவெறிப் பாடல்களையும் ஆங்கிலம் கலந்து வரும் தமிங்கிலப் பாடல்களையும் புறந்தள்ளி நல்ல விழிப்புணர்ப் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி)
» உலகமுதியோர் அவமரியாதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி , கவிஞர் இரா.இரவி
» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உலகமுதியோர் அவமரியாதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி , கவிஞர் இரா.இரவி
» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum