தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இடைக்கால இலக்கியங்களில அறவியல் சிந்தனைகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

2 posters

Go down

இடைக்கால இலக்கியங்களில அறவியல் சிந்தனைகள்  -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty இடைக்கால இலக்கியங்களில அறவியல் சிந்தனைகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Fri Feb 25, 2011 11:24 am

இடைக்கால இலக்கியங்களில அறவியல் சிந்தனைகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்


டாக்டர் மா.தியாகராசன் துணைப்பேராசிரியர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தேசியக் கல்விக்கழகம், சிங்கப்பூர்

முன்னுரை
“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல” (குறள் 39)
உலகில் உள்ள நல்லன எல்லாம் புண்ணியமெல்லாம் ஞானமெல்லாம் ‘அறம்’. எச்செயலெ யாவரானும் பாராட்டப் பெறுகின்றதோ அது அறமாகும். “விலக்கத்தக்கது ஒன்றும், உலகத்துப் பலராலும் பாராட்டப் பெறுமாயின் அறமாகலாம்” என்கிறது சுக்கிர நீதி. (அத் 5.சு35)
தமிழில் ‘அறம்’ வடமொழியில் தர்மம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையனவாக இருந்தபோதிலும் அவற்றின் தன்மை, வேறுபாடு உடையனவாகும். ‘தர்மம்’ என்ன சொல் ‘புருஷ தர்மம்’ ‘பத்தினி தர்மம்’ என்று பலவாறு வரையறுக்கப்பட்ட சில நியதிகளுக்குக் கட்டுப்பட்டது.’ அறம்’ என்ற சொல், விரிந்து பரந்து அதே சமயத்தில் ஆழ்ந்த கருவையும் தன்னிடத்தை நிலைபெறச் செய்வதாகும்.
``மனத்துக்கண் மாசிலனாதலே’’ அறம் என்ற வள்ளுவர் அறத்தை இல்லறம், துறவறம் என்று இருபெரும் கூறுகளாக்கினார். கவிச்சக்கரவர்த்தி கம்பனோ, வில்லறம், சொல்லறம் என்றும் அறக்கூறுகளை அதிகமாக்கினார்.
இத்தகைய அறவியல் சிந்தனைகள் இடைக்கால இலக்கியங்களில் பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளதை ஈண்டுக் காண்போம்.
இடைக்கால இலக்கியம்
இடைக்கால இலக்கியம் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற இருபெரும் பகுப்புக்களை உள்ளடக்கியதாகும்.
மூவர் தேவாரம், மாணிக்க வாசகர் பாடல்கள் ஆகியவை சைவத்திருமுறைகள். ஆண்டாள், தொண்டரடிப் பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் பாடல்கள் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தைச் சேர்ந்த வைணவ இலக்கியங்கள் . சைவ வைணவ சமயங்களைச் சேர்ந்த இவை அனைத்தும் பக்தி இலக்கியங்கள்` என்ற பகுப்பில் அடங்குபவை. தூது, உலா, பிள்ளைத்தமிழ், பரணி,கலம்பகம், அந்தாதி ஆகிய ஆறும் சிற்றிலக்கிய வகைகளாகும்.
``என் கடன் பணி செய்து கிடப்பதே’’ ``யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்று திருத்தொண்டர்கள் மூலம் பொதுத் தொண்டை வலியுறுத்தும் பக்தி இலக்கியங்கள் முழுமையிலும் `தானம், தவம், துறவு, ஞானம், இன்னாசெய்யாமை, அன்பு, ஒப்புரவு, நடுவு நிலைமை போன்ற அறவியல் கோட்பாடுகள் பெரிதும் காணப்படுகின்றன.
நாளைய துன்பத்திற்கு அஞ்சி, இன்றைய இன்பத்தைக் கைவிட்டுப் `பசி வந்தால் பத்தும் பறந்து போகும்` நிலையில் உள்ளவர்கட்கு அறம் விளங்காது.
அறத்தோடு வாழவும், அதை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் விளங்க வைக்கவும் சான்றோர் சிலரால்தான் முடியும். உண்மையே அறம்; அதனால்தான் ``அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்’’ என்றனர் ஆன்றோர். பாரதிகூட,
``அறம்ஒன் றேதரும்
மெய்யின்பம்; என்றநல்
அறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்!’’

என்று பாடினார். அபிராமி பட்டர் சுட்டும் அறங்கள்.
``மணியே, மணியில் ஒளிவிடும் ஒளியே, ஒளியினை உடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அணிகலனே, அணியப்படும் அணிகலனுக்கு அழகே’’ என்று அபிராமியைப் பணிந்து வணங்கும் பட்டர், சிவபெருமான் அளித்த இருநாழிநெல்லினைக், கொண்டு, வேளாளர் முதலியவர்களால் பயிர் செய்வித்து நாட்டின் வளத்தைப் பெருக்கி அதன் வாயிலாக முப்பத்திரண்டு அறங்களைச் செய்து உயிர்களைப் பிழைக்கச் செய்தவளும் காமாட்சியம்மை என்று போற்றுகின்றார். அவர் குறிப்பிடும் அறங்கள் மொத்தம் முப்பத்திரண்டு ஆகும். அவையாவன:
ஆதுலர்க்குச்சாலை (ஆதுலர்- வறுமையாளர்); ஓதுவார்க்குணவு; அறுசமயத்தார்க்குண்டி; பசுவுக்கு வாயுறை (வாயுறை புல், வைக்கோல் முதலியன) ; சிறைச் சோறு ; ஐயம்(பிச்சை); தின்பண்டம் நல்கல்; அறவைச் சோறு (அநாதைகளுக்குச் சோறிடுதல்); மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல்; மகப்பால் வார்த்தல்; அறவைப் பிணஞ்சுடுதல்; அறவைத் தூரியம் (தூரியம்-நல்லாடை அளித்தல்) சுண்ணம்; நோய்க்கு மருந்து;
வண்ணார்; நாதவிதர்; கண்ணாடி; காதோலை; கண்மருந்து; தலைக்கெண்ணெய்; பெண் போகம்; பிறர் துழர் காத்தல்; தண்ணீர்ப் பந்தல்; மடல்; தடம்; சோலை; ஆவுறிஞ்சுத்தறி (பசுக்கள் முதலியவற்றிற்கு உடம்பு அரிக்கும்போது தேய்த்துக் கொள்வதற்காகக் கட்டைகளை நட்டு வைத்தல்) விலங்கிற்குணவு; ஏறு விடுத்தல்; விலை கொடுத்துயிர்காத்தல். பறவை (முதலியவற்றைக் கொன்று உண்பதற்காக விற்கப்படும்போது அவற்றின் விலையைக்கொடுத்து விட்டு உயிரைக் காப்பாற்றுதல்) கன்னி காதானம் என்பனவாகும்.
அறம் உரைத்தல்
பொய் ஒழுக்கத்தை மேற்கொண்டு, மனதெளிவு இன்றி, மயங்கிக் கள் போதை, சூது, தீய நட்பு போன்றவற்றால் நாளும் அழிந்துவரும் மக்களைப் பொய்மை, திருட்டு, புறங்கூறல் போன்ற தீய செயல்களிலிருந்தும் மீட்டு, நல்வழிப்படுத்த ஆன்றோர்கள் மெய்யறிந்த சான்றோர்கள் கூறிய அறிவுரைகளே அறவுரைகளாகும். நல்லன செய்ய நல்வழிப்படுத்தத் தோன்றிய அறங்களை மறவாது போற்றலும், காத்தலும் இன்றியமையாதனவாகும்.
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்
உண்மைதான் உலகில் சிறந்தது; உயர்ந்தது. உண்மையான அனைத்திலும் அறம் விளங்கும். இயற்கை உண்மையானது, இறையருள் மிக்கது; இறைவடிவானது; அதனால்தான் இறைவனை மெய்ப்பொருள் என்றும் அழைக்கின்றோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாசகமே நம் திருவாசகம். மனிதகுலம் சிறக்க மாண்புநெறி காட்டியவர்கள் சங்கத் தமிழர்கள் விண்ணும் மண்ணும் தோற்றுவிக்கும் தேவன்ஒருவனே; அந்த இறைவன் இயற்கையாய் நிறைந்திருக்கும் தன்மையினை,
பாரிடை ஐந்தாய்ப் பரந்
தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்
தாய் போற்றி
வளியிடை இரண்டாய்
மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய்
விளைந்தாய் போற்றி

என்று மாணிக்க வாசகரும்,

பாரொடு விண்ணும் பகலு
மாகிப் பனிமலை வரை
யாகிப் பரவையாகி
நீரோடு தீயும் நெடுங்காற்று
மாகி நெடுவெள்ளிடை
யாகி நிலனுமாகி

என்று சுந்தரரும் பாராட்டி, பிரபஞ்சத்தைப் படைக்கும் மெய்ப்பொருளை உணர்பவருக்கே அறம் விளங்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
இறைவன்- அறம்
எல்லாம் வல்ல பரம்பொருளை அடைந்தபின் எத்தொழிலும் எளிதாகின்றது; இனிதாகின்றது; இனிய அறமாகின்றது. இவ்வுலகிலும் எவ்வுலகிலும் இதற்கு மேலும் வேண்டுவது ஏதேனும் உண்டோ? என்று வினவும் குலசேக ராழ்வார் இறைவனுக்கு எது அறம் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.
உலகியல் வட்டத்தில் எத்தகைய பெருவாழ்வுப் இறை வட்டத்தில் வாழும் புல்லுக்கும் நிகராகாது என்பதை உணர்ந்தவர். குலசேகரப் பெருமான் இறைவட்டதில் வாழத்துடிக்கும் துடிப்பைப் பாடிய இவர் தம்மை உய்விக்க இறைவன் எழுந்து
வரவில்லையே என்ற ஏக்கத்தைப் பாடத் தொடங்குகிறார். தம்மைக் கரையேற்றுதல் இறைவன் – அறம் என்பதையும் நினைவுறுத்துகின்றார். கரையேற்றுதல் என்பது பிறவியைவெல்லுதல் என்பதாகும்.
இறவாத இன்ப அன்போடு இறைவன் ஆடும் திருக்கூத்தை எதிலிருந்து என்றும் கண்டு கொண்டிருத்தல் வேண்டும் என்று காரைக்கால் அம்மையாரும்,
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தெ என்று அப்பர் அடிகளும் பாடியதன் மூலம் இவ்வுண்மை விளங்குகிறது.

அடியார்களுக்குஇணையாக ஆண்டவனே வந்து அறம் வளர்த்ததும் இத்தமிழ் மண்ணில் தான்! திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஐயாறப்பன் என்றும் இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி ( தர்ம சம்வர்த்தினி) என்றும் இன்றும் பெயர் வழங்கப்பட்டு வருவது இதற்குச் சான்றாகும்.



Last edited by Dr Maa Thyagarajan on Thu Mar 03, 2011 12:51 pm; edited 1 time in total
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

இடைக்கால இலக்கியங்களில அறவியல் சிந்தனைகள்  -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: இடைக்கால இலக்கியங்களில அறவியல் சிந்தனைகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Feb 27, 2011 6:20 pm

இலக்கிய பகிர்வுக்கு நன்றி முனைவரே... தொடர்ந்து உங்கள் இலக்கிய படைப்புகளை பருக தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum