தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலக்கியங்கள் ஓருவக மனப்பான்மையை வளர்க்கின்றன. – சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
2 posters
Page 1 of 1

எழுத்து : டாக்டர். மா. தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை,
தேசிய கல்விக் கழகம்,
நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் -677616 drthyagarajan2010@gmail.com
முன்னுரை:
உலகில் வாழும் மனிதனின் மனத்து உணர்ச்சிகளை, எழுச்சிகளை, நெகிழ்ச்சிகளை, வாய்வழியாக வெவிக் கொண்ர்வதே மொழியாகும், மொழியின் உதவி கொண்டு மனிதன் சிந்தனையைச் செயல்பாடாக மாற்றிக் காட்டினான். இச் செயல்பாட்டின் சிகரமாய் ‘இலக்கியம்’ அமைந்துள்ளது.
“இலக்கியம் என்பது மனிதன் கண்ட கனவுகள், கொண்ட குறிக்கோள்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், அடைந்த வெற்றி தோல்விகள்ம் கொண்ட ஆசைகள், பெற்ற அனுபவங்கள் இவற்றையெல்லாம் சேர்த்து வைத்திருக்கும் பதிப்வேடுகளாக நம்பப்படுகிறது” என்கிறார் லேலின்.
“இலக்கியம் என்பது நுன்கலைகளில் ஒன்று. அறிவும் மனோபாவமும் கலந்து தொழிற்பட்டு மக்களுக்கு இன்பத்தை விளைவிக்கும் சிறந்த கலைகள் நுண்கலைகள் எனப்படும். இலக்கியம் என்பது அழகுணர்ச்சி ததும்ப எழுதியனவற்றையே குறிக்கும்” என்பது திரு. வையாபுரிப்பிள்ளை அவர்களின் கருத்து,
இது போன்று, மனித மனத்தில் எழுந்து, மானிடம் பேசி, மனிதனுக்கு நல்வழி காட்டும் இலக்கியத்தைப் பல பிரிவாய்ப் பிரிக்கலாம். பல பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டிருந்தாலும். இலக்கியம் உலக சமுதாயத்திற்கு ஒருமைப் பாட்டுணர்வினை ஊக்குவிக்கின்றது. இலக்கியம், மனத்திற்கு இன்பம் தருவதோடல்லாமல் முழுப் பயனையும் அளித்தல் வேண்டும் அரிஸ்டாட்டில் என்ற பேரறிஞரும், வேறாரஸ் என்பாரும், ‘இலக்கியம், நற்பயனை மனித குலத்திற்கு அளிக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டில் உறுதியாய் இருந்தனர்.
தமிழ் இலக்கியத்தில் ஒருவக மனப்பான்மை:
ஒருவக மனப்பான்மை என்றும் பயனை அளிக்கும் தமிழ் இலக்கியத்தை கீழ்க்காணும் பிரிவுக்குள் அடக்கலாம்:
1. தொல் காப்பியம்
2. சங்க இலக்கியம்
3. நீதி நூல்கள்
4. பக்திப் பாடல்கள்
5. சிற்றிலக்கியங்கள்
6. கவிதை
7. புதுக்கவிதை
தொல்காப்பியம்: மனிதனால் படைக்கப்பட்ட இலக்கியம், அம்மனிதனுக்கே, நன்மையை அளிப்பதாக இருக்க வேண்டும்.
“இது நனி பயக்கும் இதனானென்னும்
தொகை நிலைக்கிளவி பயனெனப்படுமே”
என்ற தொல்காப்பியர், அந்தப் பயனை
‘அன்பே அறனே இன்பம் நாணொடு
துறந்த ஒழுக்கம் பழித்தான்றாகலின்’
என அறம், பொருள், இன்பம் ஆகிய மூவகை பொருட்களை உரைக்கிறார். மனிதன் வாழ்வில் அடையத்தக்க பேறுகள் ஆகக் கருதப்படுபவை அறமும், பொருளும், இன்பமும், வீடுமேயாகும். இந்நான்மைக் கொண்டு ஒருவன் வாழ்ந்தால், உலகம் என்ற படகு, அன்பு என்ற நதியினில் அமைதியாக ஓடும்.
மனித உள்ளத்தில், அடியில் அமிழ்ந்து இருக்கின்ற ஒருமைப்பாட்டுணர்வு, மன மாசினால் மறைந்து போயுள்ளது. மக்கள்தம் மன மாசுகளைப் போக்கி, உள்ளத்தைத் தெளிவடையச் செய்வதே நூல் மாண்பு என்று பவணிந்தியார் உரைக்கிறார்.
“உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தில்
கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தார்
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு”
என நன்னூல் சூத்திரம் உரைக்கிறது.
2. சங்க இலக்கியங்கள்: ஐம்பெருங் காப்பியமும், ஐஞ்சிறு காப்பியமும், உலகம் ஒன்றே என்ற கருத்தைக் தெரிவிக்கும் காலக் கண்ணாடிகளாக விளங்குகின்றன. எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சமுதாய ஒற்றுமையை எட்ட வைக்கும் ஒன்றாகப் பாடுகின்றன.
அகமும், புறமும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்ப தோடல்லாமல் வாழ்க்கை நெறியினையும் கூறுகின்றது. ஐங்குறுநூறு என்ற அகத்தினை நூலில் தலைவனைப் பிரிந்த தனிவழி, தலைவன் விரைவில் வர வேண்டும் என வேண்டாமல், வீடு வாழ வேண்டும் என்ற சுயநலம் இல்லாமல், நாடோங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும் என வேண்டிப் பாடுகிறாள்.
“நெல்பல் பொலிக! பொன் பெரிது சிறக்க
விளைக வயலே! வருக இரவலர்!
பகைவர் புல் ஆர்க! பார்ப்போர் ஒதுக!
பசி இல்லாகுக! பினி சேன் நீங்குக
வேந்து பகை தனிக! யாண்டு பல நந்துக!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளம் நவி சிறக்க!”
என தன்னலமற்று, உலக நலம் வேண்டிப் பாடுகிறாள் ஐங்குறுநூற்றுத் தலைவி.
நமக்கு என முயலாநோன்தாள்
பிறர்க்கு என முயறுநர்
என்றபடி வாழ்ந்த தலைவியின் பொதுநலம் பாராட்டப்பட வேண்டியது.
புறமோ, ஓருவக மனப்பான்மையை வளர்ப்பதில், அகத்தைவிட முன்னே சென்றுவிடுகிறது. நிலம் என்பது இடத்தால் அறியப்படுவதில்லை. அது, ஆண்மக்கள் குணத்தால் தெரியப்படுகின்றது.
‘எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை: வாழிய நிலனே’
என ஆடவர்க்கு அறிவுரை கூறி, நிலத்தையும் வாழ்த்தும் சிறப்பு, புறத்தில்தான் உள்ளது.
பொன் போன்று சிறப்புடைய புறநானூறு, ஒருமைப் பாட்டின் உறைவிடமாகத் திகழ்கின்றது. கனியன் பூங்குன்றனார் என்ற புலவர், உலக உயர்கள், அமைதியாக, அன்போடு வாழும் வழியைத் தெரிவிக்கின்றார்.
‘யாதும் ஊரே: யாவரும் கேளிர்”
என்றுப் பாடலைத் தொடங்குகின்றார். “இந்த உலகத்தில் இருக்கின்ற அத்துணை ஊர்களும் நம்முடையதே. உலகமக்கள் அனைவரும் நம்முடைய சுற்றத்தவரே” என்கின்றார். ‘கேவிர்’ என்ற சொல், உறவினரையும், நண்பரையும் குறிக்கும். இவ்விட்த்தில் நண்பர் என்ற பொருளில் கொள்வது பொருத்தம் உடையதாக அமையும். துன்பம் வரும் காலத்தில்கூட, நம்மைக் கைவிடாமல் சுற்றி நின்று ஆதரவு அளிப்பவர்கள் நண்பர்களேயன்றி, உறவினர்கள் அல்லர். ஆதலின், எப்பொழுதும், துணையாக, ஆதரவாக இவ்வுலக மக்களைக் கருத வேண்டும்.
திரு. மு-மு-இஸ்மாயில் என்பார், ‘இந்தப் பாடலின் முதல்வரி, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தத்துவ நெறியின் ஓர் அங்கம்’ என்று கூறுகிறார். எனவே, இப்புலவரின் இந்தக் கருத்து மனித வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாக எவையெவை அமைய வேண்டுமென்று அவர் கருதினார் என்பதையே காட்டுகிறது.
கனியன் குங்குன்றனார் மேலும்,
“தீனும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தனிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே: வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றாலும் இலமே…
….. மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
என்ப்பாடி முடிக்கின்றார். இவ்வாறு, மாவிட சமுதாயத்திற்கு வேண்டிய கருத்தினை எடுத்துக்கூறி, உலக ஒருமைப்பாட்டை வளர்க்கும் ஒப்பற்ற இலக்கியமாக, சங்க இலக்கியம் அமைந்துள்ளது.
அடுத்து, காப்பிய வரிசையை ஆராய்ந்தால் மணிமேகலை, அறநெறி வரிசையிலும் சரி, ஒற்றுமை உணர்விலும் சரி, முதலிடம் பெறுகின்றது. இக்காலத்தில், மனிதன் வாழும் கால அளவு மிகக் குறுகியது. ஆனால், அச்சிறிய காலத்திற்குள்ளாகவே, அவன் பிற மனிதரிடம் வேற்றுமையை வளர்க்கிறான். அன்பினை மறக்கிறான். அறத்தினை வெறுக்கிறான். ஆகவே, மணிமேகலை நிலையாமையை அறிந்து நல்லறம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.
“பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும்
இறத்தலும் உடையது இடும்மைப் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரி”
என்றார் சாத்தனார்.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதல்”
என அறத்தின் திறத்தினை உரைக்கின்றார். ‘மன்னுயிர்க்கு’ என்ற சொல்லினைக் கொண்டு ‘உலக் மக்களிடத்தில் அன்பைக் காட்ட வேண்டும்’ என்ற பரந்த நோக்குடைய கருத்தைக் கூறுகிறார்.
இராசாமாதேவிக்கு அறிவுரை புகட்டும் மணிமேகலை,
‘அனைவரையும் நேசி’ எனக் கூறுகின்றாள்.
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்’ என்ற அரிய கருத்தைக் கூறி, அதன் காரண்த்தை,
“பூங்கொடி நவிலாய் பொருந்தாது செய்தனை
உடற்கு அமுதனையோ? உயிக்கு அமுதனையோ?
உடற்கு அமுதனையேல் உன் மகன் தன்னை
எடுத்துப் புறங்காடு இட்டனர் யாரோடு?
உயிர்க்கு அமுதனையேல், “உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வரியது
அவ்வுயிர்க்கு அன்பினை, ஆயின், ஆய்தொடி
எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்.”
என்று உரைக்கிறார்.
‘உலகையே நேசி’ என்ற உன்னதமான கருத்தைக் கறும் காவியம் மணிமேகலை ஆகும்.
3. நீதி நூல்கள்: நீதி நூல்கள் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றியும், நீதி, ஒழுங்கு, வாய்மை, நேர்மை, நன்றி மறவாமை, நிலையின்மை ஆகியவற்றைப் பற்றியும் பேசுகின்றன.
“எம்மிதமும் எவ்வினமும் எந்நாழும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ் வேதம்”
ஆக விளங்குகின்ற திருக்குறள்,
‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான்’
என ‘உலக உயிர்களின் சமநிலையை’ உரைக்கிறது. “உலக இலக்கியங்களில் திருக்குறளைப் போலச் சிறந்த அறம் உரைக்கும் நூல் வேறு இல்லை” என ஆல்பர்ட் சுவைட்சர் என்ற அறிஞர் உரைக்கிறார்.
உலகப் பொதுறை,
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’.
என உலகம் முழுவதிற்கும் இறைவன் ஒருவனே என்பதை விளக்கி, ஒன்றான இறைவன் ஆட்டுவிக்கின்ற இவ்வுலகும், ஒன்றாக ஒருமைப் பாட்டுக் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்ற மறைவான பொருளைக்கூறுகிறது. இவ்வாறு, உலக மறை, உலகம் பொதுவானதான வாழவும் வழிகாட்டும் கருவியாகத் திகழ்கிறது.
நீதி நூல்கள் ஒன்றான முதுமொழிக் காஞ்சியும், உலகப் பொதுவியலை உரைக்கின்றது.
‘ஆர் கூறி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை’
‘வண்மையின் சிறந்தன்று, வாய்மை, உடைமை’
‘இளமையின் சிறந்தன்று, மெய்பிணி இன்மை’
‘கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று’
என இப்புவி மாந்தர் அனைவரும் ஒழுக வேண்டிய நெறிமுறைகளை அழகுற எடுத்துக்கூறி. இவையே ஓருலகம் அமையத் தேவையானவை என்கின்றது.
4. பக்திப் பாடல்கள்: ஆதியும், அந்தமும் ஆகி நின்ற பரம் பொருள் ஒன்றே. படைப்புகள் அனைத்தையும் உருவாக்கி, காத்து நிற்கும் வல்லமை படைத்தவன் இறைவன். அவனால் படைக்கப்பட்ட உயிர்கள், பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். ஆதரவு அளிக்க வேண்டும்’ என்ற கருத்தைக் கூறுவதற்காக எழுதப்பட்ட பக்தி நூல்கள், ‘உலகம் ஒன்றே’ என்ற தாத்பரியத்தை எடுத்துக் கூறுகின்றனவாகவும் அமைந்துள்ளன.
“ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்கிறது திருமந்திரம். மனிதன் எத்தனையோ சமயங்களைப் படைத்தாலும், எத்தனையோ கடவுளர்கள் வணங்கினாலும், இருக்கின்ற சக்தி ஒன்றுதான்.
“வேறுபல சமயமெலாம் புகுந்து பார்க்கின்
விளங்கி பரம்பொருளே நின் விளையாட்டலால்
மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதில் திரன் போல் வயங்கிற்றம்மா”
என சமய ஒற்றுமையைப் பற்றி பாடும் பாடலும் உள்ளது.
கம்பன் இயற்றிய இராமாயணத்தைப் புராணமாகக் கொண்டாலும், பக்தி நூலாகவும் கொள்ளலாம். அயோத்தி மாநகரத்தின் சிறப்பினைச் சொல்ல வந்த கம்பர்,
“வான்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இல்லாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”
என்கிறார். “இதன்படி இந்த உலகமும் இருந்தால், ஞாலம் வளம் பெறுமே, உலகம் உன்னதம் அடையுமே” என்ற சிந்தனை நாதமாய் இப்பாடலில் ஒளிப்பதைக் காணலாம்.
கந்த புராணத்தில், அறத்தின் பயனைப்பற்றி ஒரு பாடல் வருகிறது.
“தருமமென்று ஒரு பொருள்ளுது: தாவிலா
இருமையின் இன்பமும் எளிதில் ஆக்குமால்
அருமையில் வரும் பொருள் ஆகும் அன்னதும்
ஒருமையின் ஓர்க்கலால் உணர்தற்கு ஒண்ணுமோ”
என அறம் செய்யும் சிறப்பினை உரைத்து, உலகம் முழுவதும் அறம் என செய்து, அன்பு காட்டி வாழ வேண்டும் என்ற கொள்கையினையும் செப்புகின்றது.
கம்பர் மேலும் தன்னுடைய நூலில், “கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நித்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈதென்னத் தொல்லையில் ஒன்றேயாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்பல்பெருஞ்சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்த்தன்றே” என்று மழையோடு இறையை ஒப்புமைப் படுத்துகின்றார். உலக மக்கள் வழிபடும் இறைவன், வெற்வேறானவன் ஆக இருந்தாலும், அனைவரின் வழிபாடு செல்லும் இடம், சேருமிடம் ஒன்றே. பக்திப்பாடல்கள் கூடி ஓருலக மனப்பான்மையை வளர்க்கின்ற தூண்டுகோலாக அமைந்துள்ளன.
5. சிற்றிலக்கியங்கள்:
சிறிய இலக்கியங்களான தூதும், கோவையும், உலாவும், பரணியும், மக்கள் மனதிலே ஒற்றுமை விளைவிப்பனவாக
அமைந்துள்ளன.
“வானுலகம் மேன்மை பெற மண்ணுலகம் செம்மாப்ப
ஈன இடர் முற்றும் இரிந்தோட – ஆன
அறம் தழைப்ப அன்பர் அகம் நுழைப்ப அன்பின்
திறம் தழைப்ப செல்வம் தழைப்ப….”
விடுகின்ற தூதினை, கச்சியப்பமுனிவர், பரந்த நோக்கத்தோடு பாடுகின்றார். காதலர்களுக்கிடையில் விடப்படும் தூதில், கூட மண்ணும் விண்ணும் சிறப்புற வாழ்த்தும் நிலை வியப்பிற்குரியதல்லவா?
6. கவிதை: கவிதை என்ற மாபெறும் கருவியின் மூலம், மாவிடத் தலைவிதியை மாற்றிக் காட்டுகின்ற மகத்தான புலவர்களில் பாரதியும் ஒருவன்.
“பாரதி கிணற்றுத்தவளையாக இல்லாமல் உலக் குடிமகனாகத் தன்னைக் கண்டார். அப்படியே ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும், ஏன், ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும். வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். மனிதனை உயிர் வர்க்கத்தின் பிரதிநிதியாக காண வேண்டும் என ஆசைக்கொண்டார்”
என உலக்க கவிஞனான பாரதியை மு.மு. இஸ்மாயில் பாராட்டிக் கூறுகிறார்.
பாரதியின் படைப்புகள், ஆத்ம சக்தியோடு இயற்றப் பட்டிருந்தால், அவரின் ஒவ்வொரு பாடலிலும் ‘ஒருமைப் பாட்டுணர்வு’ பிரதிபலிக்கிறது.
இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தவியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என உலக சமுதாயக் கண்ணோட்ட்த்தோடு பிரச்னையை அணுகிப் பார்க்கின்றார். ‘வாழ்வு தாழ்வும் அனைவருக்கும் உரித்தாகட்டும்’ என்ற கொள்கையின்படி பாரதியின் பாடல்கள் அமைத்துள்ளன.
“தன்னுயிர் போல தனக்கழிவென்னும்
பிறனுயிர் தன்மையும் கணித்தல்
மன்னுயிறெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென்றுணர்தல்”
என்ற பாடலில் உள்ள கருத்தினை, மனிதன் கடைபிடிக்கத் துவங்கிவிட்டால், உலகம் அமைதிப் பூக்கள் நிறைந்த சோலையாகிவிடும் என்று கனவு கண்டார் உலகக் குடிமகன்.
பாரினுக்கே தூய நேசனான பாரதிதாசன்.
“துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக்கெனும்
துட்ட மனோபாவம்
அன்பினை மாய்க்கும் அறங்குலைக்கும் புவி
ஆக்கந்தனைக் கெடுக்கும்
இன்பம் எல்லார்க்கும் என்பதே சொல்லிப்பேரிகை
எங்கும் முழக்கிடுவாய்”
என்று பாடுகிறார். அன்பே இன்பம் என்ற கருத்தினை மாந்தர் கைக் கொண்டால், உலகத்தில் ஒருமைப்பாடு ஓங்கும். துன்பம் அழியும்.
7. புதுக்கவிதை: கவிதையில் புதுமையான புதுக்கவிதை, உலகிற்கே புதுமை அளிக்க வல்லது. புதுமைக் கவிஞர்கள், புத்துணர்ச்சியோடு புதுவிதமானக் கருத்துகளை எடுத்துச் சொல்லி, ஓருலக மனப்பான்மையை வளர்க்கின்றார்கள்.
“எங்கள் ஆலமரத்தில் எத்தனையோ விழுதுகள்
அவற்றில் இளைய விழுதுகள் நாங்கள்
இந்த விழுதுகள் வேர் பிடித்து விட்டால்
ஆணி வேரைப்பலப்படுத்தும் அணி வகுப்பாகும்.
அப்போது – இந்த விழுதுக் கொடி மீது ஒரு
வெற்றிக் கொடி பறக்கும்
அதன் நெற்றியில் மூன்று பொட்டிருக்கும். அவை:
சுதந்திரம்,
ஜன்நாயகம்,
சோஷலிசம்”
என்ற புதுக் கவிதையில் மூலமாக, உலகம் சுதந்திரம் பெற்று, ஜன்நாயகத்தில் வாழ வேண்டும் என்ற கருத்தினை அறியலாம்.
பாவேந்தர் பாரதிதாசன், புதுக் கவிதையில்
“புதியதோர் உலகம் செய்வோம்
கெட்டப் போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்”
எனப் போரினை எதிர்த்து எதிர்த்து, அன்புலக்த்தைப் படைக்கின்றார்.
இவ்வாறு, தமிழ் இலக்கியங்கம் முற் காலந் தொட்டு, இக்காலம் வரை, உலக ஒருமைப்பாட்டினையே அடிநாதமாக வைத்தொலிக்கிறது.
பிறமொழி இலக்கியங்களில் ஒருமைப்பாடு:
அமிழ்தினும் இனிய மொழியான தமிழில் மட்டுகிறது. பிறமொழியில் இயற்றப் பட்ட இலக்கியங்கள் கூட ஓருலக மனப்பான்மையை வளர்க்கின்றன.
மனித குலத்திற்கு வழிகாட்டும் அறநெறிகளை, ‘காவியப் பிரயோஜனா’ என்று பாமரர் கூறுவர், “தர்மம் அதர்மம், காமம்” என்ற மூன்று வர்க்கமே காவியப் பிரயோஜனமாகும். வடமொழிக் காவியத்தின் பயனாக, இம்மூன்றும் அமைந்திருந்தன”, என்பது அறியத்தக்கது.
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தை உள்ளடக்கியதாக, வால்மீகி இராமாயணம் அமைந்துள்ளது. இக்கருத்து உலகம் அனைத்திருக்கும் பொதுவானதாகும். ஹோமர் என்ற கிரேக்க கவிஞரின் இலியட், ஒடிசி போன்ற காப்பியங்கள், வீரமும், காதலுமே, வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த ஆபரணங்கள் என்ற கொள்கையினை உள்ளட்க்கியுள்ளது. உலகம் ஒன்றாக, அமைதியாக வாழ வீரமும், காதலும் முக்கியமன்றோ!
இவ்விதம், பிறமொழி இலக்கியங்கள், ஓருலக மனப்பான்மையை வளர்த்து, நேசம், சகோதரத்துவம், பாசம், அன்பு, கருணை ஆகிய எண்ணங்களைத் தோற்றுவித்து, ஒற்றுமை உணர்ச்சியை, மக்கள் மனதில் உண்டாக்கியுள்ளன.
முடிவுரை: சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை, ஒவ்வொரு இலக்கிய வகையும், அது உருவாகிய காலகட்ட்த்துச் சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. அச்சமூக உணர்வுகள் அத்தனையிலும், ‘ஒரே உலகம்’ என்ற முக்கிய உணர்வு மேலோங்கி தெரிகின்றது.
ஜார்ஜ் எலியட் என்பார் கூறியது போல, “இலக்கியம் வாழ்க்கையோடு மிக நெருங்கிய ஒன்றாக இருக்கிறது. அனுபவங்களை விளக்கிக் காட்டும் வழியாகவும், தனி மனித நலம் என்றும் எல்லையையும் கடந்து சக மனிதர்களோடு நம் தொடர்பினை விரிவுபடுத்திக் கொள்ளும் வழியாகவும் இருக்கிறது”.
ஒவ்வொரு இலக்கியத்திற்கும் பின்னாலும் ஒவ்வொரு மனிதன் இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒவ்வொரு இனம் இருக்கிறது. ஒவ்வொரு இனத்திற்குப் பின்னாலும் சமுதாயம், உணர்வு கடந்த நிலையில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது,
ஆக, இலக்கியம் என்பது மனிதனின் முயற்சியில் உருவானது. மனிதனின் இன்ப, துன்பங்கள் பேசுவது, மனித வாழ்க்கையோடு இணைந்தது. மனித வாழ்க்கைக்கு வழிக்காட்டும் கருவியாகவும் அமைந்திருப்பது. மனிதன், முன்னேறிச் செல்ல வழிகாட்டும் இலக்கியம், முன்னேற்றத்தின் இலக்கிய ஓருலக மனப்பான்மையையும் வளர்க்கின்றது.
இராமலிங்க அடிகளார் கூறுவது போன்று,
‘அன்பெறும் பிடியில் அகப்படும் மலையே அது
அன்பெனும் வலைக்குட்படும் பரம் பொருளே
அன்பெனும் குடி புகுத் அரசே
அன்பெனும் கரத்தமர் அமுதே’
என அன்பு நிலையில் ஒழுகி நின்றால் உலகம் ஒருமையடையும் உன்னதமடையும்; பெருமையடையும்.
* * *

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: இலக்கியங்கள் ஓருவக மனப்பான்மையை வளர்க்கின்றன. – சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி முனைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum