தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 7 Empty இரத்த உறவு

Post by ராஜேந்திரன் Wed Mar 13, 2013 9:31 pm

இரத்த
உறவு

இரத்த உறவு
என்று தாய்
,
தந்தையரை சொன்னாலும்.

இந்த இரத்தம் தொடர்ந்து உற்பத்தியாக உணவு வேண்டும்.
உணவு
இறைவனால் உண்டாக்கப்பட்டது.


ஆகவே இறைவன்
உணவாக இருக்கிறார்.


வயிற்று பசிக்கும் இறைவன் உணவாக இருக்கிறார்.
ஒவ்வொன்றையும்
அறிந்துக்கொள்வதன் மூலம் ஞானபசிக்கும் உணவாக இருக்கிறார்.


தாவர உணவும், அறிவு உணவும் இரத்தமாக மாற்றம் பெற்று உடலுக்கும், மனதிற்கும் உயிராக இருக்கிறது.

தீங்கு
உயிரோடு இருப்பதற்கும்
,
நன்மை உயிரோடு இருப்பதற்கும்
அதற்கென்று
உணவு வேண்டும்.

உலகில் தீமை நன்மையை விழுங்க பார்க்கும், நன்மை
தீமையை விழுங்க பார்க்கும்.
உலகுக்கும், நமக்கும் இந்த போராட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். அதற்கென்று அறிகுறிகளும், பசியும், தாகமும், வாசனைகளும் உள்ளன உணவும் உள்ளன.

எல்லாம்
எதற்காக உலகம் ஒரு ஒழுங்குக்குள் இருப்பதற்கு
தீமையும், நன்மையையும் ஒன்றை ஒன்றை ஈர்ப்பதும், விலக்குவதும் நிகழ்ந்து ஒரு சுழற்சியின் சூழல் உருவாகிறது.

இந்நிகழ்ச்சியில்
ஓங்குவதும்
,
ஏந்தி தாங்குவதும் உண்டு. நீ சரியா இருக்க வேண்டும் என்று தீமையையும், நீ சரியாக இருக்க வேண்டும் என்று
நன்மையையும் ஒன்றை ஒன்று எச்சரித்து போராடி
சண்டையிடுகின்றன.

பலி
செலுத்தும் பொழுது இரத்தம் சிந்தப்படுகிறதே எந்த பலி நல்லது



இரத்ததானம்
செய்கிறோமே - உயிருள்ள பலி.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty ஈர்த்தல்

Post by ராஜேந்திரன் Wed Mar 13, 2013 9:50 pm

ஈர்த்தல்

தீமையை
விலக்குவது நன்மைக்கு சரியாக இருக்கும்.


நன்மையை
விலக்குவது தீமைக்கு சரியாக இருக்கும்.



இப்படி ஒரு ஈர்ப்பு உண்டு
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 9:08 am

ஈர்ப்பு எங்கும் உண்டு போல... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty கல்வி

Post by ராஜேந்திரன் Tue Apr 23, 2013 6:00 pm

கல்வி

வணக்கம்.

கல்விக்கு சரஸ்வதியா?
ஆனால் கல்விக்கு உரிமை உறவு கொண்டாடுபவர்கள்
லட்சுமி மற்றும் பார்வதியும் சேர்ந்து மூவரும்தான்

செவிச்செல்வம்
செல்வத்திற்கு லட்சுமி என்றால்
செவிச்செல்வம் என்பது கல்வி செல்வம் ஆகுமே

வீர வசனம்
வீரத்திற்கு பார்வதி என்றால்
வீர வசனம் என்பது கல்வியிலே வீரம் ஆகுமே

ஆகவே சிறந்த கல்விக்கு செல்வமும் உண்டு
வீரமும் உண்டு.

சரஸ்வதி, லட்சுமி, பார்வதி சேர்ந்த மூவரின்
உரிமை தெய்வத்தன்மை கல்விக்கு உண்டு.

விட்டு கொடுத்தல் என்பது எப்போது செயல்படும்

பிரச்சனை இருக்கும்பொழுதுதான்

பிரச்சனை இல்லாத இடத்தில் விட்டுக்கொடுத்தல் தேவைபடாதது.

ஆகவே கணவன், மனைவி சண்டை மற்றும் பிற
சண்டைகளுக்கு விட்டுகொடுத்து சமாதான உறவு பாராட்டுவோம்.

கடவுளிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது மனிதனிடம் நல்ல பெயர் வாங்குவதை பொறுத்து.

நல்ல பெயரை கடவுளிடம் வாங்க முக்கியத்துவ உரிமை எங்கு காட்ட வேண்டும் என்றால்
கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் நல்ல பெயர் வாங்கவேண்டும்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 04, 2013 2:55 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty எது நிஜம்?

Post by ராஜேந்திரன் Fri May 10, 2013 4:26 pm

எது நிஜம்?

நிலையற்ற வாழ்க்கையில் வாழ்க்கை பாதுக்காப்புக்காக பணத்தை ஈட்டுகிறோம்.

பணத்தை ஈட்டுவதற்காக வேலை செய்கிறோம்.

அதற்க்கு அடிக்கடி லீவு போடக்கூடாது.

வேலையில் கவனம் வேண்டும்.
அதிகாரிகளிடத்தில்
நல்ல பெயர் வாங்கணும்.

சம்பளம் வாங்க முதலாளியை அல்லது அதிகாரியை திருப்திபடுத்தும்படி வேலை செய்யணும் என்று இந்த நிலையற்ற வாழ்க்கைக்காக நம்மை ஈடுப்படுத்துகிறோம்.

என்னதான் மனித ஆளுகை அதிகாரங்களுக்கு பயந்துஅந்த அதிகாரங்களை உடையவர்களை திருப்திப்படுத்தினாலும் பூகம்பம், வெள்ளம், விபத்து,
நோய் என்று இவைகளிடம்இருந்து மனித ஆளுகை அதிகாரம் நம்மை காப்பாற்ற உத்தரவாதம் இல்லை.

பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய் போன்றவைகளால் நம் உடைமைக்கும் உடலின் உயிருக்குத்தான் சேதம்.

ஆனால் மனதிற்கு சேதம் இருக்க வேண்டாம்.
மனதிற்கு
மரணம் இல்லாதநிலைத்த அற வாழ்வுவேண்டுமே. இந்த அறவாழ்விற்கு தேவையான்புண்ணியத்திற்காக
எந்தவகையில்
இறைவனை திருப்திப்படுத்தி ஈடுபடுகிறோம்.
அடிக்கடி
அறம் செய்வதற்கு லீவு போடாம,
கவனத்தோடுஈடுப்பட்டு புண்ணியம் செய்துஇறைவனிடத்தில் அருள் வாழ்வுசம்பளம் பெறவேண்டுமே. நல்ல சம்பாத்தியம் வேண்டுமே.

பாதுகாப்பான
அற வாழ்வுக்கு அதிகாரியான இறைவனை புண்ணியத்தினால் எப்படி திருப்திப்படுத்த ஈடுபடுகிறோம். மனித ஆளுகை அதிகாரவாழ்க்கை பயணத்தில் இறைவனின் அறத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டாமா?


மனித ஆளுகை அதிகாரத்தில் குறைகள் இருக்கும் இக்குறைகளை இறைவனின் விருப்ப அதிகாரம்போல் சரி செய்ய வேண்டுமே.
மனித ஆளுகையில் குறைகளாக விளங்கும் மனதிற்கான பூகம்பம்,

மனதிற்கான
வெள்ளம், மனதிற்கானவிபத்து, மனதிற்கான நோய் இவைகளிலிருந்து விடுபடவேண்டும்.
இதற்க்கு புண்ணியம் சேர்ப்போம்.

பாலியல் பலாத்காரம்,
வஞ்சித்தல்,
கொலை , மது அடிமை, சூது, சூழ்ச்சி, பணத்தாசை போன்றவைகள்மனதிற்கான பூகம்பமாகவோ,
மனதிற்கான
வெள்ளமாகவோ, மனதிற்கான விபத்தாகவோ, மனதிற்கான நோயாகவோ இருக்கின்றன.

இத்தகு பூகம்பம்,
வெள்ளம்,
விபத்து, நோய், போர்போன்றவை கடைசிகால சம்பவமா!
மனதின் மரணமாக






பூகம்பம், வெள்ளம், விபத்து,
நோய் போன்றவைகளால் ஜனத்தொகை குறைகிறது.

மனதிற்கான பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய் போன்றவைகளில் பாதிக்கப்படாமல் இருப்பவர்கள் அதிகமானால் தீயவர்களின் ஜனத்தொகை குறைகிறது.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty War

Post by ராஜேந்திரன் Thu Jun 06, 2013 7:42 pm

வைக்கோல் போர்





நீ நிறுத்து, நான் நிறுத்துகிறேன் என்று
நிறுத்தி வைப்பதில் போர் நடக்கிறது என்றால் அது என்ன?






தவறு செய்பவர்களுள், முதலில் தப்பு செய்வதை
நீங்க நிறுத்தி (வை)ங்க பிறகு நான் தப்பு செய்வதை நிறுத்தி (வை)க்கிறேன் என்று பொறாமை கோலால் போர் நடக்கும் வை-கோல்
போரில் அவரவர் பொறுமை இல்லாததன் அளவில் போட்டி நடக்கிறது.






முதலாளி தொழிலாளிக்கிடையில் என்ன போர்
நடக்கிறது?






முதலாளி தொழிலாளிகளுக்குள் மனித நேயம்
இருக்கிறதா?






முதலாளி தொழிலாளர் நலனுக்காக முதலாளியே
தொழிலாளர் நலச்சங்கம் ஏற்படுத்தி தொழிலாளருக்கு நன்மை செய்கின்றனரா?






மேலும் தொழிலாளிகள் முதலாளிக்கு நலச்சங்கம்
ஏற்படுத்தி முதலாளி நலனுக்கு எவ்வகையில் உதவுகிறார்கள்?






மனிதநேயமதி வளராதவரை இறைவனின் கெடுபிடி
விதி தர்மசங்கட நிலையில் விதிக்கப்படுகிறது.
இனியாவது மனிதநேய மதி வளரட்டும்.






உலகில் அனைவரும் நான் பணக்காரராகனும்,
நான் முதலாளியாகனும், நான் பிரதமராகனும், நான் டாக்டராகனும் என்று தன விருப்பம்
நிறைவேற இறைவனை வேண்டினால்






ஒழுங்குபடுத்தும் வேலையை செய்ய தொழிலாளர்கள்
வேணாமா?






ஆகவே தர்மசங்கட நிலையில் உலக ஒழுங்கிற்கு
இறைவனின் கெடுபிடி விதி முதலாளி, தொழிலாளி என்ற இரு நிலையை ஏற்படுத்துகிறது. ஆகவே ஏழை, பணக்காரர், டாக்டர், விவசாயி என்ற
அவரவர் நிலையில் மனநிறைவு பெற்று விதியை மதியால் வென்று வாழ்வில் உயரவேண்டும்.






மனிதநேயமதி வளர்ந்தால் இறைவனின் கெடுபிடி
விதி தளர்வுபடும்.






ஏழையை மட்டமாகவோ, பணக்காரரை மட்டமாகவோ
நினைக்கும் நிலைமாறி மனிதநேயத்தால் நன்மை சேரவேண்டும்.






பணக்காரர் பொதுநலனுக்காக வசதிகளை
பேருக்கும் பெரிய contractor ஆகவும் ஏழைகள் பணிவிடை செய்யும் சிறிய
contractor என்றும் கருதி துன்பத்தை,
இன்பத்தை பகிர்ந்து கொள்ளலாமே. அதற்கு
தரமான பணக்காரர்களும், தரமான ஏழைகளும் வேண்டும். contract களை மாற்றிக்கொண்டு
தரத்திற்காக அனுபவம் பெறலாம்.






ஏழைகள், பணக்காரர்களில் ஒவ்வொருவரும்
செயல்படவேண்டிய இடத்தை பொறுத்து மிக முக்கியத்துவும் பெறுகின்றனர்.






ஆனால் இறைவன் முன் அனைவரும் சமம்.





பணக்காரர் என்பவர் உலகில் உள்ள அனைவரும்
பணக்காரர்களே. துறைகளுக்கேற்ப






ஏழைகள் என்பவர் உலகில் உள்ள அனைவரும்
ஏழைகளே. துறைகளுக்கேற்ப






பணக்கார நிர்வாக share ஏழைகளுக்கும்
வேண்டும். பணக்கார வசதி ஏழைகளுக்கு
களஞ்சியமாக.






ஏழைகளின் பணிவிடை நிர்வாக share
பணக்காரருக்கும் வேண்டும். ஏழைகள்
முடியாமல் இருந்தால் அவர்களுக்கு பணக்காரர் பணிவிடை புரிவதனால் அனைவரும் பணிவிடை
செய்யும் ஏழைகள் ஆவர்.






தேவைக்கதிகமாக ஆசிரிய பயிற்சி அளித்து
எவ்வளவு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
தேவைக்கதிகமாக தரமான விவசாயிகளை உருவாக்குகிறோமா நல்ல உணவு உற்பத்திக்கு,






சுதந்திரம் அளித்திருக்கும் இறைவன் ஊரடங்கு
உத்தரவு போல் விதியை நிர்ணயித்து கட்டுப்படுத்துகிறார். நாம் வளர்த்துக்கொள்ளும் மனிதநேயமதிபடி
நடந்துகொண்டால் ஊரடங்கு உத்தரவு போல் உள்ள விதியை இறைவன் தளர்த்தி விடுவார் நாமும்
நம் மதியால் இறை பரிந்துறை சுய ஆளுமை கொண்டு பயன் பெறலாம்.






நல்லோர் ஒருவருக்காக எல்லாருக்கும்
பெய்யும் மழை என்பார்கள். எந்த
குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறப்பதிலே என்பார்கள். அந்த குழந்தைகளை கருத்தில் கொண்டு பெய்யும் மழை
போல் நம் தப்புக்கு இறைவன் கடுமையான தண்டனையை கொடுக்காமல் பல தண்டனைகளுக்கு
விலக்கு அளித்துள்ளார்.






கடுமையான தண்டனையை விலக்கி பொறுமை
காக்கும் இறைவன் பணம் எனக்கு மட்டுந்தான் என்று பணக்காரர் கருதாமலும்.






நேர்த்தி எனக்கு வேண்டாம் என்று ஏழைகள்
கருதாமல், ஏழைகளும், பணக்காரரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு துன்பத்தையும்,
இன்பத்தையும் பகிர்ந்துக்கொள்வோம்.






பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.






இதில் உண்பது என்பது கலோரி உணவாகவும்
இருக்கலாம், செவி உணவாகவும் இருக்கலாம்,
சமூகத்திற்கான நல்ல நீதி வேண்டும் என்ற உணவாக இருக்கலாம்.






உலகில் சொத்தில் சமபங்கு என்பது என்ன?
(பகுத்துண்டு)



குழந்தைகள் 2 இட்லி போதும்
என்பார்கள், பெரியவர் 8 இட்லி போதும்
என்பார், நோயாளி கஞ்சி போதும் என்பார் எப்படி சம பங்கு.






இரக்கத்தை மையமாக வைத்து தேவைகளை கருத்தில்
கொண்டு பகிர்ந்திடுவோம்.






கம்யூனிஸ்ட் போல் பகிர்வதா?


முடி இருக்கிறத வச்சிதான் அள்ளிமுடிய
முடியும் என்பார்கள்.






பணக்காரர்களிடம் இருப்பதும் நமது என்று
அள்ளிமுடியக்கூடாதா?






பணக்காரர்கள் அனைவருக்கும் உதவும் வசதி
களஞ்சியங்களாக இருக்கட்டுமே?






தரமான பொருட்கள் விலை அதிகமாக
இருக்கிறது. மலிவு விலையில் உள்ளவைகள் use
and throw வாக உள்ளது.






மக்கள் மலிவு விலையில் உள்ளவைகளை வாங்கி
குப்பை சேர்க்கின்றனர். குப்பைகளை மறு
பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை கெடுக்கின்றனர்.






பிளாஸ்டிக் பொருட்கள் மலிவு விலையில்
கிடைப்பதால் அதனை அதிகமாக பயன்ப்படுத்துகின்றனர்.
தவறாக
பயன்ப்படுத்துவதால் வரும் ஆபத்தை
உணர்வதில்லை, பாதுகாப்பை ஏற்ப்படுத்தி
கொள்வதும் இல்லை.






தரமில்லாத பணக்காரர்கள் மலிவாக போனாலோ,
தரமில்லாத ஏழைகள் மலிவாகி போனாலோ அதனால் ஆபத்தல்லவோ?






எல்லையில் பதட்டம் என்றாலோ, ஊரில் பிரச்னை
வரும் என்றாலோ ஊரடங்கு உத்தரவால் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.






சுதந்திர நாட்டில் நாம் குடிமக்கள், யாரோ சிலரின் தீவரவாத பயங்கரத்திற்க்காக
பிரச்சனை செய்யாதவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த
நிலையில் அடங்கி கிடக்க வேண்டி இருக்கிறது.






எல்லாரும் மேற்பார்வை செய்யும் பணக்காரராக
விரும்பினால் பணிவிடை செய்யும் ஏழைகள் வேணாமா?






எல்லாரும் பணிவிடை செய்யும் ஏழைகள் ஆனால்
மேற்பார்வை செய்யும் பணக்காரர்கள் வேணாமா?
தரமான விவசாசாயி குறைவால் சுகாதார உணவு உற்பத்தி இல்லை.






தரமான ஏழை, தரமான மெக்கானிக், தரமான
கொத்தனார், தரமான எடுபிடி ஆள், தரமான பணக்காரர், தரமான விஞ்ஞானி, தரமான பிரதமர்,
தரமான ஆசிரியர், தரமான டாக்டர், தரமான
வக்கீல், தரமான சாமியார், தரமான கல்வி, தரமான உணவு, தரமான விவசாயி என்று
எல்லாவற்றின் தரத்திற்காகவும் பணத்தை முதலீடு செய்து, உழைப்பு பங்களித்து அனைவரும்
நலம் பெறுவோம்.






கம்யூனிஸ்ட் பகிர்வு வேண்டாம் என்றால், மன்னர் ஆட்சி வேண்டாம் என்றால், விரலுக்கேத்த
வீக்கம், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு.






பணக்காரருக்கு உள்ள வசதிகள் பஞ்சகாலத்தில்
ஏழைகள் மற்றும் அனைவருக்கும் உதவும் களஞ்சியமாக இருக்க வேண்டும்.






அது உணவு பஞ்சமோ, உயிர் காக்கும் மருந்து
பஞ்சமோ, வாழ்க்கை கல்வி பஞ்சமோ, உழைப்பு பஞ்சமோ, நீதி பஞ்சமோ எதுவாக இருந்தாலும்






பஞ்சம் போக்கும் அனைத்துவகை மக்களின்
களஞ்சியத்திலிருந்து பயன் பெறுவோம்.






ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டுமே உள்ளவர் 2
லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியுமா?
அதிகமாக வழங்கினால் அதிக புண்ணியமா?






ஒன்று செய்யலாம் ஒரு லட்சத்தை பயனுக்காக
விதைத்து பல லட்சமாக அறுவடை செய்து பயன் பெறலாமே.






வயிற்று பசிக்கு கலோரி உணவு அன்னதானம்.


நீதி பசிக்கு வாழ்க்கை கல்வி உணவு
அன்னதானம்.












Last edited by ராஜேந்திரன் on Fri Jun 07, 2013 12:58 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 06, 2013 8:43 pm

மேற்கண்ட பதிவில் எழுத்துவை மாற்றி பதியவும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty உலகில் அனைவரும் பணக்காரராக முடியுமா?

Post by ராஜேந்திரன் Thu Jun 06, 2013 9:05 pm

உலகில் அனைவரும் பணக்காரராக
முடியுமா?


அனைவருக்கும் சொந்தமாக ஹெலிகாப்டர் அப்படி இருந்தால் வசதி படைத்த பணக்காரரா?





அப்படி
என்றால் கோடிக்கணக்கான ஹெலிகாப்டர் உலகில் பயன்படுத்துவது சாத்தியமாகுமா?





அப்படி என்றால் உலகில் அனைவரும் பணக்காரராகினால் சிரமமா? இல்லையா?





எல்லோரும்
ஏழையானால் சிரமமா? இல்லையா?





முடி இருக்கிறதை வைத்துதான் அள்ளி முடிய முடியும்
என்றால்


நம் நிம்மதிக்கு எந்த வழியை தேடுவோம்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 06, 2013 10:12 pm

எந்த வழியிலும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதே வாழ்க்கை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by yarlpavanan Fri Jun 07, 2013 10:12 pm

"மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான் எதிரி." என்ற
எண்ணங்களோடு
சிறந்த பதிவாக விரிவதை
வரவேற்கிறேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty பயம்

Post by ராஜேந்திரன் Mon Jun 10, 2013 8:11 pm

அனைவருக்கும் வணக்கம்


பயம்

பணக்காரருக்கு ஏழையை கண்டால்
பயம் வேண்டும்.
ஏழைக்கு பணக்காரரை கண்டால்
பயம் வேண்டும்.

அந்த பயம் எந்தளவுக்கு?

இறைவன் நம்மை உள்ளத்தில்
வரைந்திருப்பது - விதி
அவரவர் உலகை அறியும் சுவைக்கு ஏற்ப இழுக்கப்பட்டு செயல்படுவது
-
மதி

ஞானம் எப்படி ஆரம்பிக்கப்படுகிறது?
நல்லது செய்யாமல் விடக்கூடாது என்று பயப்படுதலே ஞானத்தின்
ஆரம்பம்
கெட்டதை செய்து விடக்கூடாது என்று பயப்படுதலும் ஞானத்தின்
ஆரம்பம்

நாம் திகைத்தும் பயந்து விடக்கூடாது தைரியம் வேண்டும்.

வீரமும் வேண்டும், ஈரமும் வேண்டும்.

தாய் ஒரு தேர்ந்த அறுவைசிகிச்சை மருத்துவர். பிரியமான மகனுக்கு விபத்து
நடந்து விட்டது. மகனை காப்பாற்ற அம்மகனுக்கு ஆப்பரேஷன்
செய்யவேண்டிய கட்டாயம் தாய்க்கு
ஏற்படுகிறது.

அத்தாய் துயரப்பட்டு அழுது கொண்டே இருந்தால்
மட்டும் என்னாவது?
-
இதுவா இரக்கம் என்ற ஈரம்.

ஏதோ ஒரு கேஸ் எது நடந்தாலும்
நடக்கட்டும் என்று பொறுப்பில்லாமல் துணிவுகொண்டு
ஆப்பரேஷன் செய்யலாமா?
-
இதுவா தைரியம் என்ற வீரம்.

ஒவ்வொரு step -ம் கவனமுடன் சரியாக ஆப்பரேஷன் செய்ய பொறுப்பான பயம் கலந்த துணிவு வேண்டும்.

இந்த பொறுப்பான பயம் கலந்த துணிவு
ஒவ்வொரு நற்செயல் செய்வதற்கும் வேண்டும்.


மூட்டபூச்சிக்கு பயந்து வீட்டையா
கொளுத்த வேண்டும்.

அதிகமான பயம் இருந்தால் வாகனத்தை இயக்க தொடக்கூட மாட்டோம்.
பயமே இல்லாமால் கண்மூடித்தனமாக ஓட்டினால்
விபத்து ஏற்படும் வாய்ப்பு
அதிகமில்லையா?

ஆகவே ஏழை-பணக்காரர்,
முதலாளி-தொழிலாளி, மருத்துவர்-நோயாளி,
படித்தவர் - பாமரர் போன்ற ஒருவர்க்கொருவரிடையேயான உறவில்
வீர-ஈரம் போதுமானதாக இருக்கவேண்டும்.

ஊதாரிக்கு பணத்தை மட்டும் கொடுத்துகொண்டே இருந்தால் என்ன ஆகும்.
அவருக்கு எந்தவகையில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கவேண்டாமா?

சோம்பேறியை எந்த நிலையிலிருந்து மாற்றி வேலை கொடுக்கவேண்டும் என்று அறிந்திருக்கவேண்டாமா?

ஆற்றில் போட்டாலும் அளந்து
போடவேண்டும் என்பார்கள்?

மாசுவை ஆற்றில் கலந்தாலும் எந்தளவுக்கு போட்டால்
பெரிய பாதிப்பில்லை என்று அறியவேண்டும்.

அதுபோல் சோம்பேறி, ஊதாரியிடம் நடந்து
கொள்ளவேண்டும் அல்லவா?

ஏழை-பணக்காரர், முதலாளி-தொழிலாளி, மருத்துவர்-நோயாளி, படித்தவர்
-
பாமரர் போன்ற ஒருவர்க்கொருவரிடையேயான உறவில் நல்லது செய்யாமல் விடக்கூடாது என்றும்
கெட்டதை செய்து விடக்கூடாது
என்றும் பயத்தில் ஆரம்பித்த துன்பம் தைரியமான மகிழ்ச்சியில் தொடரவேண்டும் ஞானமாக.






ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty சமூக மனிதன்

Post by ராஜேந்திரன் Tue Jun 11, 2013 11:43 am

சமூக மனிதன்





ஒரு முழு மனிதன் எப்படி இருக்க வேண்டும்?





2 கண், 1 மூக்கு, ஒரு வாய், இரண்டு கை,
இரண்டு கால், ஒரு இருதயம், நல்ல மூளை திறன் இப்படி இருக்கலாம்.






கண் இல்லாமல் இருந்தாலோ, காது செவிடாக
இருந்தாலோ ஊனம் என்கிறோம்.






4 கண்கள் இருந்தாலோ, 4 காதுகள் இருந்தாலோ
அசௌகரியம். ஆம்



ஓர் உடலால் ஒட்டி பிறந்த இரட்டையர்.





அது போல், உலக சமுதாய மனிதனின் உடல்
துறையில் போதுமான ஏழை, பணக்காரர், முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி போன்ற உறுப்புகள்
இருக்கவேண்டும். போதுமான உலக இயக்க
உறுப்புகள் இல்லை என்றால் ஊன சமுதாயம்.
தேவையில்லாத உலக இயக்க உறுப்புகள்
இருந்தால் அதிகமாக இருந்தால் அசௌகரியம்.






தான் இருக்கும் முதலாளி துறை அதிகமாக
இருந்தால் அத்துறையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு எந்த தொழிலாளி துறை குறைவாக
இருக்கிறதோ அதில் சேர்ந்து பயன் தரவேண்டும்.






அரச குடும்பத்தில் ராஜ போகமாக வாழ்ந்து
விட்டு காட்டில் 16 ஆண்டுகள் வாழ்ந்த ராமனை போல் ஒரு புதிய அனுபவத்தை பெற்று
ஞானமாய் இருக்க வேண்டும் அல்லவா?






இந்த உலகத்தில் பிறந்ததன் நோக்கம். ஞானத்தை அறிவதே.





சுற்று சூழல் பாதுகாப்பு துறை போதுமானதாக இருக்கிறதா?





100 எஜமானன் 1 வேலைக்காரன் என்றோ, 100 வேலைக்காரன்
1 எஜமானன் என்றோ இருக்கலாமா? போதுமான வேலைக்காரன் போதுமான எஜமானன் என்றோ இருக்கலாம்
அல்லவா?




ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Jun 11, 2013 11:57 am

ஞானத்தை அறிவதே சிறந்தது ..இன்று பாணத்தை தேடிய
பயணமாய் ஞானிகள் போர்வையில் பல பேர்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty மேன்மை

Post by ராஜேந்திரன் Tue Jun 11, 2013 12:05 pm

மேன்மைமிகு தமிழ்த்தோட்டம் (யூஜின்),
கவியருவி. ரமேஷ்,

.இராமநாதன், [You must be registered and logged in to see this link.]
கலைநிலா, yarlpavanan, [You must be registered and logged in to see this link.]
மற்றும்
வாசகர்களுக்கு வணக்கங்கள். தங்கள்கருத்துக்களுக்கு
நன்றி.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty நலன்

Post by ராஜேந்திரன் Tue Jun 11, 2013 12:18 pm

நலன்





உலக நலனில் எத்தகைய பங்களிப்பு?





ஏழைகள்
என்றால் ஒரு தெருவில்
20
வீடுகள் அமைகின்றன.


பணக்காரர்
என்றால் ஒரு தெருவில்
2
வீடுகள் அமைகின்றன.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Jun 11, 2013 5:45 pm

20 யென்றால் அங்கு ஒற்றுமை இருக்கும்
இரண்டு யென்றால் அங்கு பொறாமை முளைக்கும்...

ஏழையின் குரல் தெருவெங்கும் கேட்கும்
பணக்காரனின் குரல் ஏசியே தடுக்கும்....
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty சுகர் பேசென்ட்

Post by ராஜேந்திரன் Tue Jun 18, 2013 3:00 pm

சுகர் பேசென்ட்
 
மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான்எதிரி.
 
அது போல்
நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள்.
 
சிலர் நம்மை துன்புறுத்தும் நிலை அவர் சாகும் வரை இருக்கும்.
அவர் குணத்தை மாற்ற முடியாது.
 
சுகர் பேசென்ட் என்றால் தொடர்ந்து மருந்து சாப்பிடனும் ஆகாரம் கண்ட்ரோல் வேண்டும் உடல்பயிட்சி வேண்டும்.
 
அதுபோல் சிலர் நம்மை தொடர்ந்து துன்புறுத்தும் நிலைக்கு தொடர்ந்து மருந்து கொடுப்பதுபோல் கவனமுடன் நடந்து நாம் கவலையடையாமல் இருக்கவேண்டும்.
 
ஏழையாகவோ, பணக்காரராகவோ, முதலாளியாகோவோ, தொழிலாளியாகவோ யாராகவோ நாம் இருந்தாலும் அதிலே திருப்தி கொள்ள வேண்டும், மன நிறைவு கொள்ளவேண்டும்.  
 
ஏனனில் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையில் இருப்பதே கூட நல்லதாக இருக்கலாம்.  உலகுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும் என்று  தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அவர்கள் குறிப்பிடுவது போல்

அமையட்டுமே 
 
முயற்சியும், வாய்ப்பையும் பயன்படுத்தி உலக நிலைக்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டிய சூழல் அமைந்தால் நாம் மற்ற நிலைக்கு மாறாமல் இருந்தால் அது நல்லதாக இருக்காது. 
 
அவசரப்பட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல் நாம் இருக்கவேண்டிய சூழலை தற்கொலை செய்து கொள்ளக்கொடாது. மாற்றம் வேண்டின் மாற்றம் வேண்டும்.
 
 
நாம் ஒவ்வொருவரும் நம்மை
நிர்வாகம்
பண்ணுகிறோம்.
உங்கள் நிர்வாகத்தில் கண், காது, வாய், கை, கால் போன்றவைகளை வேலைக்கு
அமர்த்தியிருக்கிரீர்கள்
.
இந்த வேலைக்காரர்கள் நன்கு வேலை செய்கிறார்களா?

கண், காது போன்றவற்றில் சிலரின் வேலை மட்டும் ஒழுங்காக
நடக்கிறதா
? மற்றவர்களுக்கு சரியான வேலை கொடுக்கவில்லையா? அல்லது அவர்களின் வேலையை சரியாக
கவனிக்கவில்லையா
? ஆகவே அவர்களின் வெட்டி வேலைக்காகவோ, ஏமாற்று
வேலைக்காகவோ
ஊதியம் கொடுத்து நிர்வாகம்
நஷ்டப்படவேண்டுமா
?

உடலும், மனமும்
நலமுடன்
இருக்கவேண்டாமா. அந்த நிர்வாகத்திற்கு ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாய் உள்ளன. சுழற்சி அடிப்படையில் சில நேரத்தில் கண்ணோ, காதோ, நிர்வாகியாய் இருக்கலாம்
அவர்களின்
ஆலோசனைக்கு கலந்து ஒரு முடிவு எடுக்கவேண்டாமா.

கால் ஏதோ
ஒரு
காரணத்தால் அடிப்பட்டு வலி கொடுத்ததானால் அதன் கோரிக்கை என்னவென்று அறிந்து அது சம்பந்தபட்ட துறைக்கு வேலையை சமாளிக்கும் விதத்தில் யார் யாருக்கு வேலையில்லா விடுப்பு அல்லது வேலைச் சலுகை, நீண்ட விடுமுறை போன்றவைகளை
தந்து
எல்லாரையும் அனுசரித்து நல்ல முறையில் நிர்வாகத்தை நிர்வகிக்கவேண்டும்.

அவசர, அவசிய நேரத்தில் சில வேலைக்கார
கண்
, காது போன்ற உடல் உறுப்புகளுக்கு
வேலை
பளுவை அதிகரிக்கும் பொழுது
அவர்களுக்கு
உற்சாக போனஸ் போன்றவைகளை வழங்கி மற்ற துறைகள் பாதிப்பானால் சலுகைகள் வழங்கவேண்டும்.

மனம் நல்லமுறையிலும், போதிய
சுவாச
உணவு, அறிவு உணவு , தன்னம்பிக்கை உணவு, நல்லொழுக்க உணவு, மனமகிழ்ச்சி உணவு, சாமர்த்திய உணவு, கலோரி உணவு போன்றவைகள் கிடைக்கவேண்டும்.
அப்பொழுதுதான்
இதய துடிப்பு வேலைக்காரர் நன்கு வேலை செய்வார், வயிறு நிர்வாகி நல்லமுறையில்
இருப்பார்
உடலும், மனமும் நல்ல முறையில் இருக்கும்.


Last edited by ராஜேந்திரன் on Mon Jun 24, 2013 7:43 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 22, 2013 11:19 am

மிக்க மகிழ்ச்சிமிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by அ.இராமநாதன் Sat Jun 22, 2013 5:34 pm

மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty வாழ்க்கை பகிர்வு

Post by ராஜேந்திரன் Thu Jun 27, 2013 8:56 pm

வாழ்க்கை பகிர்வு
 
நம்மிடம் உள்ள ரூ 50000 பணத்தை பண கஷ்டம் உள்ளவர்களுக்கு உதவிடலாம் என்று நினைக்கிறோம்
 
அதற்கு ரூ 50000 பணத்தை 50000 பேருக்கு பகிர்ந்து கொடுக்கிறோம் என்றால் ஒவ்வொருவருக்கும்  எவ்வளவு கொடுக்க முடியும்.
 
சமமாக பிரித்தால் ஒவ்வொருவருக்கும் ரூ 1 தான் கிடைக்கும்.  இந்த ஒரு ரூபாய் அவர்களுக்கு உரிய பண கஷ்டம் நீங்குவதில் பெரும் பயன் இருக்காது.
 
50000 பேருக்கு ஒவ்வொரு ரூபாய் மதிப்பு வீதம் வலி நீங்கும் மருத்துவ ஆலோசனையை நோட்டீஸ் ஆக விநியோகம் செய்தால்  கூட வலி ஏற்பட்ட 50000 பேருக்கும் வேண்டுமானால் உதவியாக இருக்கும்.
 
ஆனால் ரூ 10000 உடனடி அவசிய தேவையாக பண கஷ்டம் உள்ள 50000 பேருக்கு ஒரு ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் கொடுத்தால் பண கஷ்டம் நீங்குவதில் பெரும் பயன் இல்லை.
 
5 பேருக்கு ரூ 10000 வீதம் ரூ 50000த்தை வேண்டுமானால் பகிர்ந்திடலாம்.
 
நல்ல கோடைக்காலத்தில் திடீரெண்டு 1 நிமிடம் மட்டும் மழை பெய்தால் ஏதாவது நன்மை கிடைக்குமா
 
அந்த மழை சூட்டை கிளப்பிவிடும். பாதிப்புகளும் உண்டு.  வெள்ளம் அளவுக்கு மழை பெய்தாலும் ஒரு விதத்தில் தொல்லைதான்.
 
நல்ல பலன் பெறவேண்டிய தானிய தேவைக்கு என்ன செய்யலாம் விதைத்து அறுவடை முடியும் வரை நல்ல பராமரிப்பு அவசியம்.
 
விதையை விதைப்பது நீண்டாகால இடைவெளியில் காலம் கடந்து தண்ணீர், உரம்  இடுவது - ஏதாவது பலன் கிடைக்குமா?
 
நிர்பந்த பிச்சைக்காரருக்கோ, நிர்பந்த பண உதவி தேடுவோருக்கு தேவையான   உதவியை போதுமானவர் சரியான காலத்தில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.  
 
நாம் மதிப்பிடுவதெல்லாம் எப்படி இருக்கிறது?
 
இவ்வளவு உழைப்பு இருந்தால் ரூ 500 கொடுக்கலாம் என்கிறோம்.
 
ரூ 1 கோடி வைத்திருப்பவர் எவ்வளவு உழைப்பால் பெற்றிருக்க முடியும்.
 
ஒருவர் தன் உயிரையே காப்பாற்றி விட்டார் என்று ஒரு பெரும் தொகையை உதவி செய்தவருக்கு அளித்திருக்கலாம்.
 
ஆனால் வேறு ஒருவர் தன் உயிரை காப்பாற்றியதற்க்காக உதவி செய்தவருக்கு தேங்க்ஸ் மட்டும் சொல்லியிருக்கலாம்.
 
ஆனால் இந்த இரண்டு நடவடிக்கையில் ஒருவருக்கொருவர் அந்நியராகவோ அல்லது சொந்தகாரராகவோ இருந்திருக்கலாம்
ஆகவே இந்த உதவியை எப்படி மதிப்பிடுகிறோம்.
 
சொத்து தகராறில் பங்காளிக்கு சொத்தை விட்டு கொடுத்து சமாதானம் அடைபவரும் உண்டு.  சமமாக கேட்பவரும் உண்டு. அதிகமாக கேட்டு போராடுபவரும் உண்டு.
 
ஆகவே நாம் மதிப்பிடுவது மனதை பொருத்துதான்.  ஆகவே உலக நடவடிக்கைகள் சரியான விலை என்று நடவடிக்கைகளை நிர்ணயிப்பது சரியா?
 
நம் பகிந்து கொடுத்து வாழ வேண்டும் என்கிறோம்.
 
ஒவ்வொரு நடவடிக்கையும் அதற்குரிய மதிப்பாக எப்படி பகிர்ந்து கொள்வது.
 
பிறர் மனைவியிடம் எந்த முறையில் நாம் எதை பகிர்ந்து கொள்ளலாம்.
 
தேர்வின்போது ஆசிரியர், மாணவர் பகிர்வு எப்படி இருக்கவேண்டும்.
 
இறந்தவரிடம் எந்த நடவடிக்கை நிலுவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
தன் மகனின் தேவைக்கு இலவச பகிர்வா? தன் பெற்றோர், நண்பர் தேவைக்கு இலவச பகிர்வா?
 
அப்படியென்றால் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உழைப்பின் வலியை
எப்படி சரியாக விலை மதிப்பிட்டு செயல்படுத்துவது tally யாக இருக்கும். 
 
மருத்துவரிடம் நம்முடைய சுகமின்மையை எடுத்து சொல்லும்பொழுது அவர் நம்மை கலந்து ஆலோசித்து, பரிசோதித்து சிகிச்சை தந்து பலனளிப்பார். 
 
ஆனால் நாம் விபத்தில் சிக்கி சுய நினைவு இல்லாத போது மருத்துவர் நம்மை கலந்து ஆலோசிக்க இயலாது அவர் நல்ல அணுகுமுறையில் தகுந்த சிகிச்சை அளிக்கும்பொழுது பலன் கிடைக்கும்.
 
அதுபோல நம்மிடம் உதவி கேட்கும் பலரில் சிலருக்கு மட்டுமாவது அதிக அக்கறை கொண்டு இன்னதென்று அறியாமல் அவர் கோரும் உதவியை பரிசீலனை செய்து எது தகுமோ அதையே தந்து உதவிடலாம்.
 
நோயாளி எதை வேண்டுமானாலும் கேட்பார்.  ஆனால் மருத்துவர் எது தகும் என்கிறாரோ அதையே நோயாளி கைகொண்டால் நலம்.
 
அதுபோல் நம்மிடம் உதவி கோரும் சிலருக்காவது நடவடிக்கையை பொறுத்து உதவிடலாம். 
 
நாம் சக்திக்கு மீறி உழைக்க வேண்டுமென்றால் பிறர் உதவி, உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை உதவிக்கு வைத்துக்கொள்வது போல்
 
பலர் உதவி கேட்கும் பொழுது தேவையானோர் ஒன்றுகூடி திட்டமிட்டு உதவிடலாம்.
 
சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்ய இரக்கப்பட மாட்டார்கள்.   விசாரித்தல் கடன் இருக்கு என்பார்கள். 
 
இந்தியாவே கடன் வாங்குகிறது.  நாம் எம்மாத்திரம்?
 
நம்மிடம் கடன் இருந்தாலும் மற்ற சிலரின் அவசியத்திற்காக  இன்னும் கொஞ்சம் கடனை நாம் சேர்த்து கொண்டால் என்ன?
 
பிறர் தேவையை தன்னுடைய தேவையாகவோ, தன் உற்றார் தேவையாக கருதினால்.
 
பிறருக்கு கடன் பட்டது தன் கடன்தான் என்று சமாதானம் அடையலாம்.  ஓரளவுக்கு கடன் பட்டதை முடிந்தவரை கடனை அடைப்போம்.
 
நாம் இறந்ததும் இறைவன் நம்மை ஏன் கடனை திரும்ப செலுத்தாமல் இறந்தாய்.  நீ சாக வேண்டாம் கடனை அடைத்து விட்டு சாகலாம் என்பாரோ.
 
ஒரு கிராமத்தில் வங்கி இருந்தது.  அந்த வங்கியில் பலர் கடன் வாங்கியிருந்தார்கள்.  சிலர் சேமித்தும் வைத்திருந்தார்கள்.  பூகம்பமோ, வெள்ளத்தாலோ அந்த கிராமம் அழிந்தது.
 
கடன், deposit என்ன ஆனது மாற்று வழியை நாடலையா?
 
மற்றவர்களுக்கு உதவி என்றால் ஏன் சாக்கு போக்கு பயம்?   
 
 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Fri Jun 28, 2013 9:22 am

வளர்ப்பின் நிலை சொல்லும் 
ஈகையை...
ஈகையின் சிறப்பு 
பெற்றோகள் செய்கிற 
நிலையின் அமைப்பு..

கொடுங்கள் இருப்பத்தில் 
இல்லாமை போக்க 
கல்லாமை போக்க 
சொல்லித்தாருங்கள் 
இல்லை 
கற்க உதவுங்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty வாழ்க்கை பகிர்வு -1

Post by ராஜேந்திரன் Fri Jun 28, 2013 7:55 pm

வாழ்க்கை பகிர்வு -1

பந்த், முழு அடைப்பு போன்றவை முழுமையாக வெற்றி பெறுகிறதா?
சில கோரிக்கைகளுக்காக ஏழைகள் மட்டும் பணக்காரர்களுக்கு எதிராக முழு பந்த் நடத்தினால் எப்படியிருக்கும்?

அல்லது
 
சில நிறுவனங்களில் சம்பளத்துடன் கூடிய நீண்ட நாள் விடுமுறையை அந்நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அனுமதிக்கின்றனர்.

பணக்காரர்களை போன்று ஏழைகளும் மிக முக்கியமானவர்கள்.
அதுபோன்று ஏழைகளுக்கும் இவ்வாறு விடுமுறை அளித்தால் எப்படி இருக்கும்.


ஏழைகளுக்கு போதிய உணவும், போதிய மன மகிழ்ச்சிக்கென்றும், உடல் ஆரோக்கியத்திக்கென்றும் விளையாடுவதற்கு ஏற்பாடும், போதிய ஓய்வுக்கு ஏற்பாடும் செய்து விட்டு

உணவு உற்பத்திற்க்கும், வசதி ஏற்பாடுகளுக்கும் வேண்டிய போதிய உழைப்புக்கோ அவர்களுக்கு  விடுமுறையும் தந்தால் எப்படியிருக்கும்?

பணக்காரர்களை உணவு உற்பத்திற்க்கும், வசதி ஏற்பாடுகளுக்கும் வேண்டிய போதிய உழைப்புக்கு நிர்ப்பந்தம் செய்தால் எப்படியிருக்கும்?

அல்லது

பணக்காரர்களுக்கு இப்படி விடுமுறை அளித்தால் எப்படியிருக்கும்.


பணக்காரர்கள் எந்த வேலையையும் செய்யாமல் வேலைகளுக்கு விடுமுறையும்.

நல்லா பசிக்கென்று மாத்திரை போட்டு விதவிதமாக சாப்பிடுவதற்கும்,  மாத்திரை போட்டு நன்கு தூங்குவதற்கும் ஏழைகளால் ஏற்பாடு செய்யப்பட்டால் பணக்காரர்கள் எப்படி?

விலை உயர்ந்த உயிருடன் அதிக நாள் வாழ்க்கையை தக்க வைப்பவர்  யார்?
ஏழையா,  பணக்காரரா?
அப்படியென்றால் விலை உயர்ந்தவர் யார்?

குடிக்கிற தண்ணீர் மதிப்பு அதிகமா?
தங்கம் மதிப்பு அதிகமா?

குடிக்கிற தண்ணீரும், தங்கமும் அது தேவைப்படும் அவசிய நேரத்தை   பொறுத்து இரண்டும் விலை மதிப்பு உடையது.

குடிக்கிற தண்ணீர் போல தாகத்தை நீக்குபவர்கள் ஏழைகள்
தங்கத்தை போல ஜொலிப்பவர்கள் பணக்காரர்கள்


இந்த இரண்டின் அவசியத்தை பாருங்கள்
குடிக்கிற தண்ணீரை தங்கத்தை போல் நாம் மதிப்பிடுவதில்லை

நாம் என்ன கிரைண்டர், மிக்சியா மின்சாரம் கொடுத்து switch
போட்டால் அறைக்கனும் சுவிட்ச் ஆப் பண்ணினால் நிற்கணுமா?

சாப்பிடுவதும், தூங்குவதும் தான் வாழ்க்கையா?

நல்ல கல்வியால் உலகத்தை அறியவும், ஆராயவும், புத்தி, ஞானத்தோடு செயல்படவும், மன மகிழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும் நன்கு சாப்பிடவும், நன்கு ஓய்வு எடுப்பதும், வேலை செய்வதும் சேர்ந்து தானே வாழ்க்கை.

ஏழைகளுக்கும், பணக்கரர்களுக்கும் மேற்கண்டவற்றில் எதுவெல்லாம் கிடைக்கிறது.


ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் எதுமட்டும் கிடைக்கிறது மிக்சி, கிரைண்டரை போல் இயந்திரமான
இயந்திர வாழ்க்கை.   

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Muthumohamed Sat Jun 29, 2013 2:39 pm

ஏழைகள்
என்றால் ஒரு தெருவில்
20 வீடுகள் அமைகின்றன.


பணக்காரர்
என்றால் ஒரு தெருவில்
2 வீடுகள் அமைகின்றன.


நிதர்சனமான உண்மை தான் தொடருங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty தானம்

Post by ராஜேந்திரன் Sat Jun 29, 2013 9:44 pm

தானம்

வாழும் வரை இரத்த தானம்
வாழ்ந்தபின் கண் தானம்

வயிற்று பசிக்கு அன்னதானம்
காம பசிக்கு நிதானம்

வெள்ளத்தை கட்டுப்படுத்தி இரு கரையும் உயர்த்தப்பட்ட ஆறுகள், கால்வாய்கள் மூலம் பாசனம் செய்தால் விவசாய பசுமைக்கு நல்லது.

அதுபோல காம பசியை கட்டுப்படுத்த உயர்ந்த இரு அக்கறைகள் வேண்டும்.  ஒன்று சமுதாய ஒழுங்கிற்கும், மற்றொன்று தன்னுடைய ஒழுங்கிற்கும் கேடு இல்லாமல் நிதானமாய் காம பசி ஆற்றவேண்டும். வாழ்க்கை பசுமைக்கு   

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 7 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum