தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 14 of 21 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 25, 2014 2:21 pm

மிக்க மகிழ்ச்சிமிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Wed Jan 29, 2014 7:26 pm

தட்சணை

               சாமியின் பெயரில் சாமிக்கு, தட்சணை, அர்ச்சனை, காணிக்கை, வருமானத்தின் பத்தில் ஒரு பாகம் என்று செலுத்துகிறோம்.

               சாமியின் பெயரில் சாமிக்கென்று வருமானத்திலிருந்து செலுத்துவது போல, சாமியின் பெயரில் சாமியிடமிருந்து வருமானத்தை பெறுவதும் வேண்டும்.


                சிலர் கடனைத்தான் வருமானமாக வைத்திருப்பர்.  இத்தகையவர்களுக்கு சாமியின் பெயரில் சாமியிடமிருந்து கடனை போக்கும் வருமானம் கிடைக்க வேண்டும்.  கடனை போக்கும்  வருமானத்தின் பத்தில் ஒரு பாகமோ, தட்சனையின் பலனோ பெற வேண்டும்.    

                 பூகம்பம், மாரடைப்பு போன்றவற்றால் சொத்தை, உறவை இழந்து வருமானத்தின் வழி மூடப்பட்ட கடனை வருமானமாக உள்ளவர்கள் கடனை காணிக்கையாக செலுத்தும்பொழுது கடன் தீர்ந்து சுபிச்சமாக இருக்க வேண்டும்.     

                  கடன் வருமானத்தை போக்குவது அத்தியாவசிய தேவையாகும்.  அது யாதெனில், சுபிச்ச வருமானத்தை பெருக்கும் மூலதனங்கள் கிடைக்க வேண்டும்.   அதற்க்கு First  Aid  (முதலுதவி), உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் போன்றவற்றிற்கான வழி தர  வேண்டும். உதாரணத்திற்கு புத்தி, உணவு, உடை, உறைவிட, வேலை திறன் சம்பாத்திய ஆரோக்கியம்.

                   உதாரணத்திற்கு பொன்னும், பொருளும் கொடுப்பது மட்டும் தேவை இல்லை, முடவன் சுபிச்ச வருமான பெற வேண்டும்.  

                   முடவனுக்கு கால் சரியில்லாமல் அது மட்டும்தான் சோம்பலாக இருக்கு  நாம் அதை கவனித்து மற்ற ஆரோக்கியத்தை தடை செய்து  அவருக்காக பிச்சை என்ற பெயரில் செலவு செய்தால்.    

                    முடவனுக்குள்ள கண் திறனையும், வாய் திறனையும், கை திறனையும், அறிவு திறனையும் சோம்பேறியாக்கும் அளவுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை.  மற்ற திறன்களை நாமே முடமாக முடவனாக்கி கெடுக்க வேண்டாம்.  ஆரோக்கிய திறனால், ஆரோக்கிய வருமானத்திற்கு வழி செய்யவேண்டும்.   ஆரோக்கியம்தான் செல்வம். Health  is  wealth   . 

                      சரியாக செலுத்துவதும், சரியாக பெறுவதும் நடந்தால்தான் நன்மை நடந்ததாகும்.   தட்சணை, அர்ச்சனை, காணிக்கை, வருமானத்தின் பத்தில் ஒருபாகம் என்ற நிகழ்வுகள் முழுமையடைய வேண்டும். அதற்க்கு செலுத்துவதும், பெறுவதும் சரியாக சேர வேண்டும்.


Last edited by ராஜேந்திரன் on Thu Jan 30, 2014 1:25 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by அ.இராமநாதன் Thu Jan 30, 2014 6:06 am

மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Fri Jan 31, 2014 9:20 pm

மதிப்பிற்குரிய அ. இராமநாதன் அவர்களே நன்றி.


சீட்டு போடலாமா? (எனக்கொரு யோசனை)

      இது ஒருவிதமான நகை கடை சீட்டு போல ஆனால் வித்தியாசமான
      புன்னகைக்கான சீட்டு.

      ரூ 1க்கு 5காசு வட்டி அல்ல

       ரூ10வந்த வருமானத்தில், 1ரூபாய் நிதான தானம்.

       பணம் தேவைப்படாதவர் ஒருவருமில்லை

        எந்த தேவையை பரிமாறனும் என்றாலும் பணம் என்ற அலகால்
        பெறுவதோ கொடுப்பதோ அமைகிறது.

        நாம் பணத்தை பிறருக்கு கொடுத்தால் அவர் வேண்டியதை
       அவரே வாங்கிக்கொள்வார்.

       ஆனால் நன்மையானதை அவர் வாங்கிக்கொள்ள அவருக்கு
       தெளிவு வேண்டும்.

          திருடனைப்போல ஒரு வருகை ஆம்.

          கெட்ட திருடர்கள் தங்களுடைய தேவைக்காக பிறரை
          கொள்ளையடிக்கிறார்கள் வன்முறையாக.

           நல்ல திருடர்களாக தன்னைத்தான் கொள்ளையடித்து, 
           மற்றவர்கள் தேவைக்கு நாம் நம்முடையதை கொடுத்து 
           உதவலாமே? இன்முறையாக.

           12 வருடத்திற்கு ஒரு மகா மகம்.  1 வருடத்திற்கு 12 மாதங்கள்
            இந்த 12 மாதத்தையும் நாம் ஆட்சி செய்வோம்.

           நம் மாத வருமானத்தில் 10 சதவீதம் மற்றவர்களுக்கும், பொது
           நலத்திற்கும் தொண்டாக ஆண்டுக்கு நன்மை செய்வோம், மாதந்தோறும். 

           அந்த 10 சதவீதத்தில், ஒரு பாதி, பொதுவாக உள்ள கோயிலுக்கும்
           மறு பாதி, மனித இதயங்களின் கோயிலுக்கும் காணிக்கை
           செய்யலாம்.

           பொதுவாக உள்ள கோயிலின் வருமானம் சுற்றுச்சூழல்
            பாதுகாப்பு, இயற்கை சீற்றம், விபத்து, நோய் இப்படி கண்ணுக்கு
            எதிரே நடக்கும் இழப்புக்கு தொண்டு செய்ய காணிக்கை
            செய்தல்.

           நடமாடும் மனித இதய கோயிலுக்கு செலுத்தும் வருமானம், அது
           நம் சுற்றத்தார் நல்ல வாழ்க்கை அனுபவத்தை பெறுவதற்கு
           அவரவர் மனதில் நடக்கும் கவலையை மாற்றும்
           தொண்டுக்கான காணிக்கை செய்தல். மனக்கோவில் கொண்ட
           மாணிக்க வாசகர் ஆகவே இறைவன் வாழ்வதற்கு இதயம் ஒரு
           இடம்.  மனதின் இதயமே ஆலயம்.

            இக்காலத்தில் பணம், பொருள் தேவைப்பட்டால் வெறுப்பு      
            போட்டி போடுகிறது. கடன் அன்பை முறிக்கும் என்பர்.

            பணம் தேவைப்படுபவர் அல்லது பொருள் தேவைப்படுபவர் 
            இனாமாக கிடைக்குமா என்றே எதிர்ப்பார்ப்பார்.  பணம்
            கொடுப்பவர் அல்லது பொருள் கொடுப்பவர் வட்டி கொடுத்து
            சரியாக முதலை அடைப்பீரா, பொருள் என்றால் அதற்கு விலை
            கொடுத்து வாங்குவீரா, என்றே எதிர்ப்பார்ப்பார். 

            இனாமாக கொடுப்பதோ, வாங்குவதோ என்றால் மனது இடம்
            கொடுக்காமல் ஒருவருக்கொருவர் வெறுப்பை
            செலுத்திகொள்வர்.

             ஆகவே பிளாஸ்டிக் உபயோகத்திற்கு நல்ல தீர்வு காணுதல்
             அல்லது நலிந்தவருக்கு உதவுதல் போன்ற ஒழுங்கை 
             காக்கவேண்டிய இழப்புகளுக்கு புத்துயிர் அளிக்க வரவேற்புகள்
             வறட்சியாக உள்ளது.

              இக்காலத்தில் மற்றவர்களுக்கு இனாமாக கொடுக்கக்கூடாது
              என்பதற்கு ஆலோசனை தேவைப்படுவதில்லை.
              உதவக்கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்கி
              வைத்திருப்பார்.

               நாம், நம் பணத்தேவையை நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம்
               குடும்ப வாரிசுகளுக்கு என்று ஒரு தொடராக நீள்கிறது.

               நம்முடைய பிள்ளை பிறகு பேரப்பிள்ளை பிறகு அதனுடைய
               பேரப்பிள்ளை என்றே நீள்வதால் நமக்கு மட்டும்தான் பணம்
               வேண்டும் என்பதே நீள்கிறது.

               கெட்ட திருடனால் அல்லது சுரண்டல் காரரால்,
               ஏமாற்றுக்காரரால்   அல்லது இயற்கை சீற்றத்தால்
              பெரிய இழப்புகள் வரும் அதற்கெல்லாம் நாம் நம்மை சமாதான
               படுத்திக்கொள்கிறோம்.      


                ஆனால், பிச்சைக்காருக்கு ஒரு ரூபாய் கொடுப்பதே அதிகம்
                என்று நினைக்கிறோம்.  இதற்கு மேல் நமக்கு
                அத்தியாவசியமான சுற்றுச்சூழலை காக்க வேண்டுமானால்
                 இன்னும் வெறுப்பு. இதற்கு செலவு செய்வதென்றால் அதைத்தான் இழப்பு என்கிறோம், நம்மை மீறி செலவானால், போனால் போகட்டும் என்போம், ஒழுங்கு பராமரிப்புக்கு உதவுவதை போனால் போகட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாதா?

                  லேட்டாக அல்லது சரியாக வேலை செய்யாத
                 கத்துக்குட்டிக்கும், நன்கு வேலை செய்கிற அல்லது சீக்கிரம்
                  வேலைக்கு வருகிறவர்களுக்கு சம்பளங்கள் வேறுபடலாம்.

                  ஆனால் இத்தகைய இரண்டு பேருக்கும் வாழ்க்கையில்
                  இழப்பு என்று வரும்பொழுது வேறுபடுத்தி பார்க்காமல்
                  முடிந்த உதவியை பாரபட்சமில்லாமல் முதலாளி உதவ
                   வேண்டும்.

                  அதுதான் அன்பு.  அன்பிலே வேற்றுமையை
                   நுழைக்காதீர்கள். 

                   நல்லது செய்ய போக தீமை நடக்கலாம்.
                   ஒவ்வொருவருக்கும் உதவுவது என்றால் நல்லதாக
                   இருக்கலாம் அல்லது கெட்டதாக இருக்கலாம்.
                    உதவாது இருப்பது சிலருக்கு நல்லதாக இருக்கலாம்.
                    அல்லது கெட்டதாக இருக்கலாம். 

                     எது நல்லது, எது கெட்டது என்று எல்லாம் அறிந்த
                     இறைவனுக்குத்தான் தெரியும்.

                    நம் நினைவில் நல்லது என்று நினைத்து போராடுவதும்,
                    கெட்டது என்று போராடுவதும் வாழ்கையில் ஞானத்தை
                    அறிய அனுபவங்கள் அப்படி அமைந்துள்ளது புதியவைகளை
                    அறிய,

                    பிறருக்கு இனாமாக கொடுக்கக்கூடாது என்பதில் அனுபவங்களை பெற்று
                    இருக்கிறோம்.

                     ஆகவே இனாமாக கொடுப்பதற்கான அனுபவங்களையும் பெறுவோம்.

                    நாம் குறிப்பிட்ட தெரிந்தவர்களை சீட்டு குலுக்கி குழுக்கள்
                    முறையில் தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவோம்.

                     அதில் எதிரியும் இருக்கலாம், நண்பனும் இருக்கலாம், நம்
                     கருத்தில் நல்லவனாகவும் இருக்கலாம், கெட்டவனாகவும்
                     இருக்கலாம் சிலரை தெரிந்துகொண்டு சிறப்பாக
                     பாதுகாப்பாக உதவுவோம்.

                     மனிதன் எப்படிப்பட்டவன் என்று நாம் தீர்ப்பளிக்க
                     முடியாது. 

                      அறிவுக்கு எட்டும் வரை ஒரு உதவியும், எட்டாத
                       வகையில் (இறைவனுக்கு எட்டும்) ஒரு உதவியும்
                       செய்வோம். 

                        நம் கள்ளம் கபடமில்லா செய்கையால் திருந்துபவர்களும்
                       உண்டு.

                         ஊதாரி திருந்துவதற்கு தந்தையின் சொத்து
                         இழக்கப்பட்டது.

                      தனக்கு இன்னது தேவை என்று  வெளிப்படையாக 
                      சொல்பவர்களும் உண்டு, சொல்லமுடியாமல்
                      தவிப்பவர்களும் உண்டு.  தமிழ் அறியாத அமெரிக்கரிடம்
                      தம் தேவைக்கு உதவியை கேட்க தெரியாதவருக்கு
                       புலம்பல்தான் வாழ்க்கையா? அன்பின்
                       கண்காணிப்பாளர்கள் எங்கே?

                       வெளிப்படியாக சொல்பவர்கள் நம் உதவியை தவறாகவோ
                       பயன்படுத்தலாம்.

                       சொல்லமுடியாமல் தவிப்பவர்களுக்கு நம் உதவியால்
                       சமுதாயத்திற்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கலாம்.

                     பிறருக்கு உதவவேண்டும் என்பதில் வறட்சியாக இருக்கும் இக்காலத்தில் மற்றவர்களுக்கு
                     உதவ வேண்டும் என்ற எண்ணங்களுக்கு ஊக்கமளிப்போம்.


                      நம் உதவியை பெற்றவருக்கு, உதவ வேண்டும் என்ற
                      எண்ணம் வளர்க்கப்பட்டு, அவர், நம் உறவினர் அல்லது
                     யாரோ விபத்தில் சிக்கியிருக்கும்போழுது காசு என்று
                     பாராமல் முதலுதவியாக உதவட்டுமே இத்தகைய 
                     திட்டத்தால்.

நாம் பிறருக்கு உதவ வேண்டும் என்ற திட்டத்தில், இத்தனை ஆண்டுகள் என்று, மனதில் பதிவு செய்திருந்தால், மற்றவர் இனாமாக கொடுத்தால், நாம் இத்தனை ஆண்டுக்கு, உதவ வேண்டும் என்ற திட்டத்தில், விரதமாக பதிந்திருக்கிறேன் என்று அவரிடமிருந்து விடுவித்துகொண்டால் தான், நாம் உதவி செய்தற்கு பலன்.  கொடுத்ததே இனாமாக திரும்ப கிடைத்தால் நாம் பிரத்தியோகமாக ஒன்றும் செய்யவில்லை.  மீண்டும் ஒரு வியாபாரமா?

மற்றவர்களுக்கு கொஞ்சம் உதவ வேண்டுமானால் யோசிக்கிறோமே
நம் குடும்பத்தில் புதியதாக ஒரு குழந்தை பிறந்தால் செலவாகுமே
அதுபோல் ஒரு கூடுதல் செலவாக மற்றவர்களுக்கு உதவுவதை எடுத்துக்க கூடாதா?

பிறந்த குழந்தை கொஞ்ச நாளில் இறந்தால், ஆகா செலவு இல்லை, லாபம் என்று சிரித்து மகிழ்வோமா?

தர்மம் தலை காக்கும் என்பர்.
குழந்தை நல்ல படியாக வளர்ந்தால் ஏற்ற காலத்தில் நமக்கு உறுதுணையாக இருக்காதா?

மற்றவர்களுக்கு உதவி செய்தால் உடனே நமக்கு பலன் கிடைக்க வேண்டும், இது ஒரு செலவு என்றும் யோசிப்பது ஏன்?

உதவி என்ற விதை வளரட்டும், பெருகட்டும். கனி தரட்டும்

உதவி செய்கிறவர்கள் கொஞ்சம் பெரிய குழுவாக சேர்ந்து கொண்டு, ஒரு சின்ன குழுவுக்கு சீட்டு குலுக்கி போட்டு திருப்திகரமாய் உதவலாமே. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை குழுவை கலைத்து புதிய குழுவுக்கு பரிசிலிக்கலாமே. 



நாம் நடுத்தர பெரியகுழுவாக இருந்தால் நமது கொடுக்கும் சுமையும் கொஞ்சம் குறையும்.  சின்ன குழுவாக இருந்தால் பணம் குறைவாக வசூலாகும்.   பெரிய குழுவாக இருந்தால் அதிக நபர்களை கவர் பண்ண முடியாது.

விலை நிர்ணயம், உழைப்பு, ஊதியம் இவைகளை வழங்குவது மற்றும் பெறுவதில் போட்டி இருக்கலாம். இவைகள் இனாமமாக இல்லாமல்  இருந்தால்தான் திறமைகள் வெளிப்படும்.  புதியவைகளை, புதிய உக்திகளை அறிவதில் வாய்ப்பு உருவாகும். தரம் உள்ளதையும், தரம் இல்லாததையும் பகுத்து அறிய முடியும். 






ஆனால், இவைகளில் மனித நேயம் அமையும்பொழுது வேற்றுமைகள் அகற்றப்பட்டு அனைவரும் இறைவன் முன் சமம் என்பது முழுமையடையும்.  அதற்கு எதிர்பாராத இழப்புகள், ஒழுங்கு பராமரிப்பு போன்றவைகளை அறிந்து அதற்கு நாம் சம்பாதித்த வருமானம் இதுபோன்ற சீட்டு திட்டங்களால் தொண்டு செய்ய வேண்டும்.




ஏமாற்றப்படுகிறது என்று அறிந்து மனம் விரக்தி யடைவதை கேள்விப்படுகிறோம். பகுத்து உண்பதற்கு திடீரென்று உதவி வருகிறது என்றால் எவ்வளுவு மனம் மகிழ்ச்சியடையும். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty ஆட்சி மாற்றங்கள்

Post by ராஜேந்திரன் Tue Feb 04, 2014 9:28 pm

ஆட்சி மாற்றங்கள்

            நல்லவர், கெட்டவர் என்று பாரபட்சமில்லாமல் தமது சூரிய உதயத்தை நல்லவர், கெட்டவர்களுக்கு வைத்திருக்கும் இறைவனை போல நாமும் அன்பை கவனிப்போம்.  கொஞ்சம் சுதந்திரமா, கொஞ்சம் கட்டுப்பாடா செயல்படுவோம். 

            படிக்கனும், வேலை செய்யனும், கொஞ்சம் மன மகிழ்ச்சிக்காக விளையாடனும் எப்பொழுதும் சீரியசா இருக்கக்கூடாது இயந்திர வாழ்க்கை போல.

            கணிதத்தை மனப்பாடம் பண்ணி படித்தால், புதிய தீர்வுக்கு நம்மால் பதிலளிக்க முடியாது.   ஆராய்ந்து,  அறிந்தால்தான் நம்முடைய அறிவு பயன்படுத்த முடியும்.   ஆராய்ந்து கொண்டே இருந்தால் கால நிபந்தனைகளில் செயல்படுவது சிக்கலாகும், மனப்பாடமும் வேண்டும்.        

             ஜாதகம் பார்த்தே செயல்களை செய்தோம் என்றால் நல்லதும், இருக்கு கெடுதலும் இருக்கு.

              5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுத்து ஆட்சி அமைவது போல,

            5 ஆண்டுக்கு ஜாதகம் பார்ப்பது, 5 ஆண்டுக்கு ஜாதகம் பார்க்காமல் எதையும் எதிர்க்கொள்வது.

             பசிக்கும்பொழுது பணத்தை கொடுத்து உணவை பெற்று பசியாற்றிக்கொள்வது செலவா? அது முதலீடா?

              உணவை சாப்பிட்டது பயன்படும்படி உழைப்பால் சாம்பாதித்தால் நாம் சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்தது முதலீடு.

              உணவை சாப்பிட்டது பயன்படுத்தாதபடி சோம்பேறியாக இருந்தால் அது செலவு?

              உழைப்பவர் உழைத்துக்கொண்டே இருப்பாரா? ஏதாவது உடம்புக்கு வரதா? 


              மது அருந்தும் குடியை நிறுத்துவதற்கெல்லாம் வழி கண்டறிந்திருக்கிறோம்.

               சோம்பேறி மாற முடியாதா?

              ஆகவே செலவை முதலீடாக மாற்ற முடியும். அதற்கு வழி காணுவோம். 

              நாம் இனாமாக உதவுவது செலவாக அமைவது போல் இருக்கலாம், முதலீடாக அமைவது போல் இருக்கலாம்.

              ஆனால் இக்காலத்தில் தனிநபராக நாம் இனாமாக கொடுப்பது வறட்சியாக உள்ளது.  உதவக்கூடாது என்ற எண்ணம்தான் அதிகமாக உள்ளது.

               பணக்காரர் மேல, மேல பணக்காரரா போவதும்,  ஏழைகள் மேல, மேல ஏழையாக போவதும் சரியா?
   

               ஆகவே 5 வருடம் இனாமாக உதவுவோம், 5 வருடம் உதவ வேண்டாம்  என்று இரண்டிலும் நம் அனுபவத்தை பெறுவோம்.

              பணக்காரர் ஒரு 5 வருடத்திற்கு கொஞ்ச ஏழையாக செயல்பட்டால் என்ன?   கொஞ்சம் ஏழையாக போகும் அளவிற்கு செல்வத்தை ஆரோக்கிய சமுதாயத்திற்காக செலவிட்டால் என்ன?

              அடுத்த 5 ஆண்டுக்கு பழைய தீர்மானமோ அல்லது வேறு தீர்மானமோ எடுத்துக்கொண்டால் என்ன?  

              நாம் இறந்ததும் இறைவன் என்னய்யா நீ மேல, மேல பணக்காரரா போகாமல் இறந்து விட்டாயே உன் இறப்பு செல்லாது என்பாரோ பிறகு ஏன் மேல, மேல பணக்காரராக ஆ
வேண்டும் என்று முடிவெடுப்பது ஏன்?
            
               ஏழை நீர், என்ன மேல, மேல ஏழையாக தான் இருக்கனுமா?  உதவி கேட்டே இருக்கனுமா முன்னேற வழி இருக்குமே?

               ஏழையே நீர், 5 வருடத்திற்கு கொஞ்சம் பணக்காரராக முன்னேறு, அடுத்த 5 வருடத்திற்கு உன்னைவிட ஏழையாக இருப்பவருக்கு உதவு.

               பணக்காரர் எல்லாம் முழு ஏழையாக மாறுவது கொஞ்சம் கடினம்.    ஏழைகள் எல்லாம் முழு பணக்காரர் ஆவது கொஞ்சம் கடினம்.


              ஆற்றலுக்கு தகுந்தவாறு, ஒவ்வொருவரும் கொஞ்சம் சுமைகளை அதிகப்படுத்துவோம், கொஞ்சம் மகிழ்ச்சிக்
கானதை குறைத்து சமூக இடர்பாடுகளை நிவர்த்தி செய்து balance பண்ணுவோம். 

              5 வருடம் என்று குறிப்பிடுவது ஒரு உத்தேச கணக்கிற்காக.

             மனதிலும், உடலிலும், அறிவிலும், ஆரோக்கிய சமுதாயத்தை பராமரிப்போம்.

             ஓட்ட பந்தயத்தில் அனைவரும் First  prize  வாங்க முடியாது? 

            எல்லாரும் பணக்காரர் ஆவதும் முடியாது, எல்லாரும் ஏழையானாலும் தாங்காது?

           நான் 5 ஆவது prize ,  நான் கடைசி prize .   நான் 5 ஆவதாக வருவதில் First என்று மகிழ்ச்சியடைவதும்.  நான் கடைசியாக வருவதில் First என்று மகிழ்ச்சியடைவதும் மனதிற்கு நாம் நிகழ்த்துவது ஏன் கடினமாக உள்ளது?  இப்படி முடியாமல் போகும் இதுவும் ஒருவிதமான மன நோய்தான்.   

             ஒரே செயலை ஒருவர் கடினம் என்பார், ஒருவர் எளிமை என்பார்?    எல்லாத்திற்கும் மனதுதான் காரணம். 

                கடினம் என்ற காரணம், எளிமை என்றவருக்கு நிகழும்படி அவர் ஆற்றல்கள் விபத்தானால் என்ன ஆவது?

                எளிமைக்கான காரணம், கடினம் என்றவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லையா?   

               ஆகவே இக்காலத்தில் உள்ள மன நோய்களை போக்கி ஆரோக்கிய சமுதாயத்திற்கு ஈடுபடுவோம்.

               நான் First - எனக்கு சுமை குறைவு, சுமையை குறைப்பதற்கான வழி கண்டேன், என்னோடு மகிழுங்கள்.  

                நான்தான் சுமக்கனுமா, நான் கடைசியா -  வலியை கண்டு மிரளாமல் வலிமையை பெருக்கினேன், என்னோடு மகிழுங்கள் உங்களுக்காக சுமக்கிறேன்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 05, 2014 11:13 pm

[You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Thu Feb 06, 2014 8:37 pm

மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களின் பதிலுக்கு நன்றி.

நேயம்

             எல்லாருக்கும் நல்லது செய்யுங்க, நமக்குள் மத நல்லிணக்கம் வேண்டும், மனித நேயம் பெருகனும், தாகமாயிருக்கிற எதிரிக்கும் பானம் கொடு  என்றெல்லாம் கேள்விப்படுகிறோமே.

              நாமே, இப்படி இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்பொழுது, வெவ்வேறு மதங்களின் தெய்வங்களும் தங்களுக்குள் நல்லது செய்கிறார்களா, தெய்வ நல்லிணக்கம் இருக்கிறதா?, தெய்வ நேயம் பெருகியிருக்கா? 


             நல்ல குணங்கள் மனிதர்களுக்குள் இல்லையா?  தெய்வங்களுக்குள் இல்லையா?

             ஏன் நமக்குள் இத்தனை வேறுபாடுகள்? எதிலே நாம் ஒன்றுபடனும்?  யார் ஒன்றுபடனும்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 08, 2014 3:22 pm

உங்கள் சிந்தனை தொகுப்புகள் சிந்திக்க தூண்டுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Thu Feb 13, 2014 9:18 pm

மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் யூஜின் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி.

பொருளில்தான் குற்றம் இருக்கக்கூடாது - நக்கீரன்

          கடவுளானவர் தான், இறந்தோருக்கு கடவுளாக இராமல், முக்தியடைந்தோருக்கு கடவுள்.   

முருகன், பிள்ளையார், சிவன், காமாட்சி, இயேசு, அல்லா போன்ற பெயர்களில் குற்றம் இருக்கிறதா?  இப்பெயர்களால் மனிதர்களும் தங்களை அழைத்துக்கொள்ளவில்லையா?  

இப்பெயர்களின் கடவுள் தன்மையின் பொருளில் குற்றம் இருக்கக்கூடாது?

எது? எப்படியோ?  நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்ற இரு கடவுள்களில் யாரோ ஒருவரை வணங்குபவர்களில்

ஒருவர் நல்ல குணங்களில் ஓங்கி இருந்தால் - இவர் முக்திக்கு நல்ல கடவுள் கடவுளாவார்.

ஒருவரிடம் நல்ல குணங்கள் இறந்து விட்டால் -  இவருக்கு நல்ல கடவுள் கடவுளாக இரார், கெட்ட கடவுள் கடவுளாக இருப்பார்.

தெய்வத்தின் பெயர்களில் வெவ்வேறாகவும் கடவுள் தன்மையில் நல்ல குணங்களும் உள்ள நல்ல கடவுள், தன் பக்தனக்கு நல்லவன் என்ற முக்தியை அருளினால் முருகன் கடவுள் , பிள்ளையார் கடவுள், சிவன் கடவுள், காமாட்சி கடவுள், இயேசு கடவுள், அல்லா கடவுள் என்று நல்ல கடவுள் என்று அவருக்கு வணக்கத்திற்குரியவர்.


ஒரு மனிதனையே, அப்பா என்றும், மகன் என்றும், தாத்தா என்றும், பேரன் என்றும், கணவன் என்றும், நண்பன் என்றும், ஆசிரியர் என்றும், கலெக்டர், போலீஸ், மாணவன் என்றும் அழைக்கபடுவது போல

கடவுள் முருகன், பிள்ளையார், சிவன், காமாட்சி, இயேசு, அல்லா என்று பல நிலைகளில் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

முருகனை வணங்குபவர்களில் நல்லவர்கள் இல்லையா,  பிள்ளையாரை வணங்குபவர்களில் நல்லவர்கள் இல்லையா, சிவன், காமாட்சி, இயேசு, அல்லா போன்ற பெயர்களில் உள்ள தெய்வத்தை  வணங்குபவர்களில் நல்லவர்கள் இல்லையா?

இத்தகைய முக்தியடைந்த நல்ல குணசாலிகளுக்கு (ஜீவனுள்ளோருக்கு) நல்ல கடவுள் கடவுளாக இருக்கிறார்.


கெட்ட கடவுளின் பிள்ளைகளான பாவிகளை, நல்ல கடவுள் நல்லவனாக முக்தியடையும்படி மீட்டு எடுக்கிறார் தன் மெஜாரிட்டி பலத்திற்கு.        

கிறிஸ்துவுக்கு அந்தி கிறிஸ்து இருப்பது போல், நல்ல கடவுள் தன்மை,  கெட்ட கடவுள் தன்மை என்று இரு வேறு சக்திகள் வெவ்வேறு பெயர்களில் உள்ள தெய்வங்களுக்கு அமைந்து இருக்கலாம்.

கடவுளானவர், யாராவது, கடவுளின் நல்ல குணங்களின் தன்மையில் அவதூறு போன்ற ஏதோ ஒன்றை கூட்டினால் அவரோடு அதை கூட்டுவார், நல்ல தன்மை ஏதாவது ஒன்றை யாராவது எடுத்துவிட்டால் அவரோடு அந்த பங்கை எடுத்துவிடுவார். 


இப்படி நல்ல குணங்களில் முருகன், பிள்ளையார், சிவன், காமாட்சி, இயேசு, அல்லாவுக்கு, யாராவது, தீமை தன்மையை கூட்டியோ, நல்ல தன்மையை எடுத்தோ இருந்தால் அது அவருக்கு கூட்டப்படும் அல்லது பங்கு எடுக்கப்படும்.  புடமிட்டு (பகுத்தறிந்து) - மனதில்  சோதித்தறிந்து  வணங்குவோம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 14, 2014 12:28 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty வீரியம்

Post by ராஜேந்திரன் Wed Feb 19, 2014 9:45 pm

வீரியம்

             ஒரே ஒரு மாத்திரைக்கு இருக்கும் வீரியம் போல, பசிக்கு ஒரு தட்டு சாப்பாட்டுக்கு, பதிலாக ஒரே ஒரு சோறு பசி போக்கும் வீரியமாக,  இருக்குமா?

                ஒரே நேரத்தில் ஒரு எல்லைக்கு மேல சாப்பிட்டால், நல்லதா?
குறிப்பிட்ட வலிக்கு மேல இறப்புத்தான் முற்றுபுள்ளி.   ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உப்பின் சாரமும், இனிப்போ, புளிப்போ, துவர்ப்போ சேர்க்க, சேர்க்க அதிகரித்து கொண்டே இருக்குமா?

                 குறைந்த தண்ணீரில் உப்பு கரிக்கும் அளவுக்கு உப்பு இடப்பட்டும் மூட்டை அளவுக்கு உப்பு சேர்ப்பதை அதிகரித்தாலும் சேர்ப்புகேட்ப்ப  மடங்குகளில் உப்பு கரிப்பும் பெருகுமா?


                   உலகிலேயே முதல் பெரிய கோடீஸ்வரரால், தன்னுடைய அத்தியாவசிய தேவை பூர்த்தியடையாமல் பசியினால் தற்கொலைக்கு போகும்  அளவுக்கு உள்ள ஏழையின், நிலையை மாற்ற முடிகிறதா?

                    மழை நல்லது ஆனால் மழையின் வெள்ளத்தால் வருவது துன்பம் தானே அதுபோல் நம்பர் 1 கோடீஸ்வரர் இருப்பதால் பகிர்ந்து வாழ்வதற்கு பிரோஜனம் இல்லை?

                    வீடு கட்ட உதவியாளாய் வேலை செய்ய விருப்பம் கொள்ளும் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு வெவ்வேறு இடங்களில்  ஆயிரம் வீடுகளில் ஒரு ஒரு செங்கல்லை எடுத்துக்கொடுத்து வேலை செய்தால் அவ்வேலைக்கு அந்நாளைக்கு நல்ல கூலி கிடைக்குமா? 

                    ஒரு கோடி ரூபாயை ஒரு, ஒரு பைசாவாக பலருக்கு கொடுத்தால் அந்த உதவி வீரியம் பெறுமா?

                    ஏழைக்கு என்று ஒரு வீரியம் வேண்டும், பணக்காரருக்கு என்று ஒரு வீரியம் வேண்டும்.


                     ஒரு ஏழைக்கு, தமக்கும் தன் குடும்பத்திற்கும் அத்தியாவசிய தேவையை கவனிக்கும் அளவுக்கு சம்பாத்தியம் வேண்டும் என்று தான் ஏழை ஆரம்பிக்கப்படனும், இந்த வீரியத்திற்கு குறைவாக ஒரு ஏழை இருப்பது அவரை உலகம் தான் கொல்கிறது.


                     அடுத்து இரண்டு பேருக்கோ, ஐந்து பேருக்கோ, ஒரு தெருவுக்கோ, இரண்டு தெருவுக்கோ, ஒரு ஊராட்சி, ஒரு நகரம், ஒரு எம்.பி தொகுதி அந்த அளவுக்கு அந்த, அந்த நிலைகளில் ஏற்படும் அத்தியாவசிய தேவையை கவனிக்கும் அளவுக்கு சம்பாதிக்கும் பணக் காரர்கள் வேண்டும்.

                       இந்த நிலைக்கு மேல் பணக்காரர்கள் இருப்பது, ஒரு நிலைக்கு மேல் உப்புகரிப்பு அதிகமாகமாகாதது போல பிரயோஜனமில்லை.  

                       பணம் ஒரு கடன் சீட்டு, அதன் மதிப்புக்கு பொருள் கொடுக்கப்படனும்.
                       பணம் ஒரு வருமான சீட்டு, அதன் மதிப்புக்கு பொருள்
வாங்கப்படனும்.

                        உணவை விளைவிக்காமல், முடங்கிஇருக்கிற கோடீஸ்வரர் பணம், உணவாகுமா?


                         உணவையும், சேமிப்பையும், ஒழுங்கையும் ஓட்ட நிலையிலே இருக்க வேண்டும்.   

                          நம் சம்பாத்தியத்தின் வீரியம் சோம்பியும் இருக்கக்கூடாது, மழுங்கியும் போகாதவகையில் அவ்வப்போது முடுக்கி விடப்படவேண்டும்.

                          உலகின் நம்பர் 1,2 என்று பெரிய கோடீஸ்வரர்  வேண்டாம்.   பல எம்.பிக்கள் ஒரு பிரதமரை தேர்ந்தெடுத்து தலைமையை உருவாக்குவதுபோல

                           பெரிய அளவில், நம் தலையாய பிரச்சனை அல்லது முன்னேற்றதிற்கு குறிப்பிட்ட வீரிய நிலை பணக்காரர்கள்  (எம்.பி தொகுதி) ஒன்று சேர்ந்து தலையாய பிரச்சனையை தீர்ப்பதோ, தலையாய முன்னேற்றத்திற்கோ செயல்பட வேண்டும்.

                           ஒவ்வொரு நிலையில் வீரியத்தை பராமரித்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். 

                    தெய்வத்திற்கு ஆயிரம் சுலோகம் சொல்வது ஒரு வீரியம் என்றால்,  தினமும் நூறு அல்லது போதுமான தோப்புக்கரணம் செய்தால் கடவுளை உடல் ஆரோக்கியத்தால் வணங்கும் வீரியம் செயல்படுகிறது.

                    நடராஜரை போல் நடனத்தால் தெய்வத்தை வணங்குவோம். தலையால் தரையை தொடுவதும், முழங்கால் இடுவதும், கை தட்டுவதும் இந்த நிலைகள் தவிர மற்ற அவையவங்களை வணங்க பயன்படுத்துவது பேய்களுக்கு உரியதா?

                 முழு மனதோடு, முழு உடல் ஆரோக்கியத்தோடு இறைவனை வணங்குவோம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty வீரியம்

Post by ராஜேந்திரன் Thu Feb 20, 2014 2:27 pm

வீரியம்

            LIC போன்ற இன்சுரன்சில்  சிறிய குழந்தைக்கு பாலிசி போட்டால் அதிக பெனிபிட்டும்,
             வயதானவர்கள் பாலிசி போட்டால் குறைந்த பெனிபிட்டும் அமலாக்குவது ஏன்? 
             வரவை வைத்து (பிரிமியம்) தீர்மானிக்கப்படுகிறதே

             பலகோடி ரூபாய்க்கு சொந்தக்கார பணக்காரர்கள் தங்கள் சொத்தை அனுபவிப்பதற்கு,
               தங்கள் நெருங்கிய சில சொந்தக்காரர்களுக்கு சில காலங்களுக்கு அந்த சொத்து மதிப்பை
                சில உழைப்பாளிகளுக்கு உழைப்பாக மாற்ற வேண்டும் என்று கொடுக்கப்பட்டால்
                 ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைப்பது போதுமானதாக இருக்காது
                  அது ஒரு நாளைக்கு 48 மணி நேரம் உழைப்பு தேவைப்படும். 


இன்னும் இந்த திட்டத்தை பல வழிகளில் சுருக்கினோம் என்றால் ஒரு நாளைக்கு  240 மணி நேரமும் போதுமானதாக இருக்காது

                  இது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது இந்த எல்லைகளில் வீரியத்தை நுழைப்பது ஏன்?

               ஓஹோ வென்று பெரிய பணக்கார தன்மையில் உதவி வேண்டாம்,  normal ஆன வழிகளில் பணக்காரர்களும், normal ஆன பயன் பெறுபவர் அளவில்,  normal  ஆன காலத்தில் (எதிர் காலத்திற்கும்) உழைப்பாக, பொருள் கொள்முதலாக  பணத்தை பங்கிடலாமே.

                மனிதனின் சராசரி உழைப்பு வாழ்வை கண்டுகொள்ள வேண்டும்.

                வரவை வைத்து (பிரிமியம்) தீர்மானிக்கப்படுவது போல உழைப்பின் வரவை வைத்தும், கனிம, கரிம நிலையை பொருத்தும் பணக்காரர்கள் சொத்து சேர்க்கலாமே. 


               பண சீட்டை உழைப்புக்கும், கொள்முதலுக்கும் அனுமதிக்கலாமே.   எதிர்காலத்தை சரிக்கட்ட சேமிக்க வில்லை, எதிர்காலத்திற்கு பிரச்சனையை சேமிப்பு என்ற பெயரில் தேக்கிவைக்கலாமா? ஒன்றும் இல்லாததும் உடைப்படலாம்.

கொஞ்ச நேரம் பேரம் பேசி லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கிறார், புரோக்கர்

மாடு மாதிரி 12 மணி நேரம் உழைத்து 500 ரூபாய் சம்பாதிக்கிறார், வறியவர்

அப்படியென்றால் எங்கோ பிரச்சனை தானே.

இப்படியோ, அப்படியோ சம்பாதிக்கட்டும், இதை பகிரும் பொழுது சரியாக ஒத்து போவோமே பிரச்சனை போகும் அளவுக்கு. 

உதாரணத்திற்கு, நோயின் போது கண்டுகொள்ளலாமே, மகிழ்ச்சி பெறும் அளவுக்கு.



Last edited by ராஜேந்திரன் on Mon Feb 24, 2014 12:45 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 24, 2014 12:28 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty வீரியம்

Post by ராஜேந்திரன் Mon Feb 24, 2014 8:13 pm

மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களின் பதிலுக்கு நன்றி.

வீரியம்

            மருந்துக்கு expired date,  தயாரித்த உணவுக்கு expired date, மனிதன் பூமி, சூரியன் இவைகளுக்கும் expired  date இருக்கும் பொழுது பணக்காரர் சேர்க்கும் பணம் சேர்ப்பின் அளவுக்கும் expired இருக்க வேண்டுமே.

            ஒரு stage க்கு மேல் தனிப்பட்ட நபரின் பணம் சேர்ப்பின் அளவுக்கும், ஏழைகளுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவை இல்லாமையின் இருப்புக்கும் expiration ஐ கண்டறிந்து தக்க வாழ்வு நிலையை தக்க வைத்துக்கொள்வோம். 

            ஒரு stage க்கு மேல் ஏழையாய் இருப்பதை பரிதாபம் என்பது போல் ஒரு stage க்கு மேல் பணக்காரராய் இருப்பது அபாயம் அல்லவா?  தனிப்பட்ட(சர்வாதிகாரம்) பரிதாப, அபாயத்தை மாற்றி கூடி செயல்படுவோம். (ஜனநாயகம்)  


             பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதும், பூக்களால் அர்ச்சனை செய்வதும் கவனித்து பாருங்கள்.

            தோப்புக்கரணத்தில் வலது கை இடது காதுக்கும், இடது கை வலது காதுக்கும் மாற்றி பிடிக்கும் நிலையை போல் அவ்வப்போது மாற்றம் தேவைப்பட்டால் மாற்றம் செய்ய வேண்டும். 

            இடம், பொருள் அறிந்து ஏவல் வேண்டும் என்ற நீதி சொல் இக்காலத்திற்கு நடைமுறையில் இருக்கிறதா?  இல்லை, இக்கூற்று தவறு என்றால் இடம், பொருள் அறிந்து ஏவல் வேண்டாம் என்று பிரச்சாரம் பண்ணலாமே?

             குருக்கள், ஜோதிடர் சொல்லும் பரிகாரங்கள் இன்னும் அந்த காலத்தில் சொன்னது போலவே இப்பொழுதும் செய்ய வலியுறுத்த படுவது ஏன்?
   

             (இக்காலத்தில் தீபம் ஏற்றுவது)  வெப்பமயமாதலை அதிகரிப்பததான ஒரு வழியல்லவா? இடம், பொருள் அறிந்து ஏவல்.

              (நறுமணத்திற்காக    பூக்களை அர்ச்சனைக்கு எடுத்துகொள்வது போல) உலக துர்நாற்றத்தை எதிர்த்து நறுமணத்திற்கான(தூய காற்று) வழிகளால் வெல்லலாமே?  இடம், பொருள் அறிந்து ஏவல்.    
             
              ஒரு சட்டம் pass ஆக வேண்டும் என்றால் சட்ட மன்றத்திலோ, நாடாளும் மன்றத்திலோ தீர்மானம் வெற்றி பெற வேண்டும்.

             குருக்கள், ஜோதிடர்களால் தற்போதைய மாற்றத்திற்கு ஏற்ப பரிகாரங்கள் தீர்மானமாக pass ஆகாததால் இன்னும் பழைய நிலைக்கும் தன் இரக்கத்தை பொருட்டு இறைவன் செவி சாய்க்கிறார்.     


               நாலு பேர் மரக்கன்றை நட்டால்.   ஏழு பேர் மரத்தை வெட்டுகிறார்.   ஓட்டை பையில் பணம் சேருமா ?  எல்லாரும் ஒன்று பட்டு தீர்மானங்களை pass பண்ணி செயல் படுத்துவோம்.

               நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் பலத்தை விட எதிரியின் பலத்தை குறைக்கலாம்.  அல்லது எதிரியின் பலத்தை விட நம் பலத்தை அதிகரிக்கனும். 

                நல்ல சுற்றுச்சூழலுக்கும், நல்ல சுற்றத்தாருக்கும் நன்மையின் பலத்தை பெருக்குவோம்,  தீமையின் வீரியத்தை குறைப்போம்.    

(ஏழை) பரிதாபமா? (பணக்காரர்) வயிறு நிரம்பி இன்னும் என்ன?  நிம்மதிக்கான முயற்சிக்கு அதிக சிரமமும் வேண்டாம்?  மிகவும் எளிமையும் வேண்டாம். நல்லதொரு போராட்டம்.  வாய்ப்பை உருவாக்கி நல்ல சூழலை அமைப்போம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty முனிவரும், பயில்வானும்

Post by ராஜேந்திரன் Tue Feb 25, 2014 3:55 pm

முனிவரும், பயில்வானும்

             ஏழை வறுமையினால் அல்சர் வந்த நோயாளி போல அல்லாமல் முனிவரைபோல் மகிழ்ச்சியாய் இருக்கனும்.

            முனிவர் பணக்காரரை போல் பண வசதி இல்லை ஆனால் மன மகிழ்ச்சியில் சிறப்பாய் இருக்கிறார்.  இதுபோல் ஏழையின் வறுமை பயம் நீக்கப்பட்டு குறைந்த வசதியிலும் மகிழ்ச்சியாய் இருக்கனும் முனிவரை போல்.


            வயிறு நிரம்பி தொப்பையாய் இருப்பவர் உழைப்பை பயன்படுத்தமாட்டார்.

             பணக்காரர் நல்வழிக்கு பயன் படுத்தாத சொத்தும் தொப்பைகாரர் ஒவ்வொரு நோயாய் வரவழைத்து கொள்வது போல்
பாவத்தை வரவழைத்து கொள்வார்.

              தொப்பைக்காரரைவிட  அதிகமாய் வயிறை நிரப்பும் பயில்வான் பளு தூக்கும் பயில்வானாய் இருப்பது போல

               ஏழைகளுக்கு வரும் எதிர்பாராத சுமைகளை பணக்காரர் தம் உதவியால் தூக்கி விட வேண்டும்.

               அதிகமாய் சாப்பிடுவது தவறா? அதிகமாய் சாப்பிடுவது மட்டும் இருந்தால் தொப்பை, தொல்லை


               அதிகமாய் சாப்பிட்டு அதை சக்தியாய் மாற்றினால் பயில்வான்.  பளுவை தூக்குவதுபோல், பணக்காரர் செல்வம், ஏழைகளை தூக்கி விட வேண்டும்.

பணக்காரர்களே, ஏழைகளே வெயிட்ட காட்டுங்க
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 26, 2014 5:59 pm

சிறப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty யார் கேட்பது

Post by ராஜேந்திரன் Fri Feb 28, 2014 3:10 pm

யார் கேட்பது

             குடிசையை  கொளுத்தக்கூடாது, நகைக்கடையை கொளுத்தக்கூடாது, நியூயார்க் இரட்டை கோபுரத்தை கொளுத்தக்கூடாது என்று சொல்லி, வல்லரசுகளும் கொளுத்தியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறதே

             இறைவனுக்கு விசுவாசமாய் இருக்கும், சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில்
சுற்றுச்சூழல் நல் உணர்வுகளை கொளுத்துவது ஏன்? 

கேட்பதற்க்கு ஆள் இல்லையா?

இந்த சுற்றுச்சூழல் இறை பக்தர் இஸ்தலம் காக்கப்பட  வேண்டாமா? 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 02, 2014 9:46 am

ம் அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty 123

Post by ராஜேந்திரன் Tue Mar 04, 2014 9:38 pm

மகிழ்ச்சி

         ஒரு முக்கியமான தலைவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்க்காக தொண்டர்கள் சென்றனர்.

          அந்த தொண்டர்கள் ரயிலில் பயணம் செய்தனர்.  நிறைய பேர் ரயில் பெட்டியின் மேலே அமர்ந்து பயணம் செய்தனர்.  ரயில் பெட்டியின் இருக்கைகள் எல்லாம் பயணிகளால் நிறைந்திருந்ததால் மேலே அமர்ந்து பயணித்தனர்.


          ரயிலானது மலை குகைகளின் வழியாக போனது. ரயில்  பெட்டியின் மேல் அமர்ந்து பயணம் செய்தவர்கள் கவனித்து பயணம் செய்ய வேண்டிய சூழல் வந்தது. 

           குகைகளின் வழியாக செல்லும்பொழுது தலை குனிந்து சென்றால்தான் ரயில் பெட்டியின் மேல் அமர்ந்து சென்றவர்கள் பாதுகாப்பாய் செல்ல முடியும். 

           குகை வரும்பொழுது தலை குனிந்து விட்டனர்.  குகையின் உள் ரயில் சென்று கொண்டிருக்கும்பொழுது.  சிலர் குகை முடிந்து விட்டது என்று தவறுதலாக சொன்ன உடன் பலர் தலையை நிமிர்த்தினார். 
               
            தலையை நிமிர்த்திய மேலே அமர்ந்து பயணித்தவர்கள் தலை அடிப்பட்டு பலர் இறந்தனர்.     

    
            சுற்றுச்சூழலை காக்க செயல்படும் அன்பர்கள்.  ஒரு பெரும்பான்மை விழிப்புணர்வை மக்கள் பெறவேண்டும். தக்க தருணங்களில் போராடி வெற்றிபெற வேண்டும்.  சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற செயலுக்கு தேவையானவைகளை தயார்படுத்தி செயல் பட வேண்டும்.

             Ready  take one , two , three என்று சொல்லி போராட்டத்தை ஆரம்பித்து செயல்பட்டு வெற்றியடைய வேண்டும்.   one , two , three சொல்லும்பொழுது எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.     

             சமையலுக்கு வேண்டியவைகளை தயாராக வைத்திராமல் சமைக்க முடியாது.

              தவறாக ready  சொன்னதால்தான் ரயிலில் பயணித்தவர்கள் இறந்தனர்.

                நாம் பிரச்சனைய அமர்த்த நினைத்தோம். ஆனால்   அறியாதவர்கள் பிரச்சனையை கொளுத்தி தீமையை உண்டாக்குவர்.   ஆகவே நாம் செய்வதெல்லாம் வீணாகிவிடும். 


                ஆகவே நல்ல விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும்.

                  நாம் செயல்படுத்தாமல் சும்மா இருந்தாக்கூட இன்னும் கொஞ்சம் நிம்மதி இருந்திருக்கும்.  சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்த நிலைக்கு தள்ளப்பட வேண்டாம்.

                   விழிகளில் வலி காட்டி வழி திறப்போம். 

               உனக்கெல்லாம் எதுக்குடா புள்ள, புள்ளைய கண்டிச்சி ஒழுங்கா நல்ல முறையில் வளர்க்க தெரியல. என்பர்.

               நாம விதைக்காமலே இருந்திருக்கலாம்.  எவ்வளவு மரக்கன்றுகள் கருகி போனதே. 

                 மழையில்லாமல், வெயில் கொளுத்துவதற்கு காரணமானவர்களின் காரணங்களை அகற்றுவோம்.

                  நல்ல சூழலை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நடுவது போன்ற செயல்களால் சுற்றுச்சூழலை காப்போம்.

                  வாயும், வயிறுமா இருக்கும் கர்ப்பிணிகளுக்கு நல்லதெல்லாம் வாங்கி போடணும், சந்தோசமா வச்சிருக்கணும் என்று
சொல்கிறோமே


                    நல்ல சூழலை பெற்று கொடுக்க போகும் வனங்களுக்கு நல்லதை வாங்கி போடாமல் இருக்கலாமா விழிப்புணர்வையும் கொடுக்காத சுற்றுச்சூழல் காப்பவர்களே. 

உலகெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 06, 2014 9:14 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty இட ஒதுக்கீடு

Post by ராஜேந்திரன் Fri Mar 07, 2014 2:52 pm

இட ஒதுக்கீடு

           வாழ்க்கை தரம் உயர, தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு,   பிற்படுத்தபட்டோருக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு இடஒதுக்கீடு என்றெல்லாம் இருக்கிறதே,


            உலக வாழ்வு மேம்பட இயற்கை அன்னைக்கு (சுற்றுச்சூழல்) இட ஒதுக்கீடு உண்டா?  இந்த ஒதுக்கீடுக்கு போராடுவது யார்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty இது உங்கள் சொத்து

Post by ராஜேந்திரன் Fri Mar 14, 2014 7:15 pm

இது உங்கள் சொத்து

              நாம் வைத்திருக்கும் சொத்துக்கள் எல்லாம் நம்முடையதல்ல.  இந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறது.

              ஆம். எல்லா சொத்துக்களிலும் இயற்கை அன்னையின் பிள்ளைகலான பஞ்ச பூதங்கள் நீர், நெருப்பு, காற்று போன்றவற்றின் மனப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பத்திரம் வேண்டும்.  இந்த பத்திரம் நல்ல மன சாட்சிக்கு சம்பந்தப்பட்டது. 


              அப்பொழுதுதான் இச்சொத்துகள் அதிகாரப்பூர்வமாய் நமக்கு உரியது.

                இயற்கை ராணிக்கு, நாம் செலுத்த வேண்டிய மன சாட்சிக்குரிய tax எங்கே? இயற்கை வளங்களை auditing செய்து பொது வாழ்க்கைக்கு நல்ல மகிழ்ச்சிக்குறிய லாபம் கிடைத்திருக்கிறதா?   

                இது உங்கள் சொத்து என்று அரசு பேருந்தை வைத்து படமாக்கப்பட்ட சினிமா படத்தில்  நடிகர் வடிவேல் ஜோக் பார்த்திருப்போம்.

                  இதில் ஜோக்காக அடித்து கொள்வர்.


               ஆனால் இயற்கை அன்னைக்குரிய சொத்தை நாம் பிற மனிதர்களிடம் இது உங்கள் சொத்து என்று செல்லாத பத்திரத்தை மற்றவர்களிடம் காண்பித்து இது யாருடைய சொத்து என்று ஒருவருக்கொருவர் மற்றவர்களிடம் காண்பிக்கிறீர்கள்.

              ஒருவர்க்கொருவர் ஏமாற்றி ஜோக்குக்காக அல்ல உண்மையாகவே மனதிலே சண்டை போட்டு தாங்களும் ஏமாறுகின்றனர், புண்ணியம் செய்வதில்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 26, 2014 10:59 am

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty விரக்தி ஏன்?

Post by ராஜேந்திரன் Fri Mar 28, 2014 4:16 pm

விரக்தி ஏன்?

           மனிதன் ஐம்பூதங்களால் ஆனவன். ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.  ஒருவகை ஆற்றல் வேறு வகை ஆற்றலாக மாறலாம் என்பது விஞ்ஞானம் கண்டறிந்த உண்மை. 

         இறப்புக்கு பிறகு ஒன்றுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கா?
ஒன்றுமில்லை அல்லது செயலற்ற தன்மை என்பதற்கு அர்த்தம் கண்டறியப்பட்டு உள்ளதா? இறப்புக்கு பிறகு ஒன்றுமில்லை என்றால் ஆற்றலை பற்றிய தத்துவம் என்ன?  ஜீரோ என்றால் அது மற்ற எண்களோடு இருக்கும்பொழுது?  

          கல் ஒரு செயலற்ற தன்மையா? நாம் நகர்த்தினால் மட்டும் நகர்கிறது என்கிறோமே? கல்லுக்குள் என்ன நடைபெறுகிறது. கல் மண்ணாகும்பொழுது அல்லது மணலாகும்பொழுது அதில் தாவரங்கள் விளைகிறதே.

         இறப்பிற்கு பிறகு ஒன்றுமில்லை என்று நாமே தீர்மானம் எடுப்பது சரியா? நிரூபிக்க முடியுமா?   உயிர்த்தெழுதலை நம்புவோரும் பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று தவறான முடிவெடுப்பது ஏன்?


          ஐயோ, நான் ஏழையாக பிறந்து விட்டேன், ஐயோ அழகான மனைவி இல்லை, அழகான கணவர் இல்ல, ஒரு மனைவிதான் இருக்கு, எனக்குனு சொந்த வீடு கட்ட முடியல? நான் நிறையா படிக்கல,  வேலை வேலை என்றே இருக்கு entertainment  இல்ல, என் மகன், என் தம்பி, என் கணவர் விபத்தில் இறந்து விட்டார், விபத்தில் என் கால், கை இழந்து விட்டது, பூகம்பத்தில் பலரை இழந்தேன்  என்று பல நெருக்கடிகளை சொல்லி விரக்தி அடைவது ஏன்?  இவைகள் எல்லாம் இறந்ததற்கு பிறகு ஒன்று மில்லை, நாம் துன்பத்தை மட்டும் அனுபவிக்கிறோம் என்று சொன்னால். 

              இதற்கு இறைவன் பொறுப்பாகட்டும் என்று சொல்பவர்கள்  இறைவனை தேட வேண்டியது இல்லை.

               இறைவன் நல்ல அருமையான நன்மைகளை நமக்கு தர வல்லவர்.    ஒன்றுமில்லாதவற்றில் உன்னத உலகை படைத்தவர் நம்மை உலகுக்கு தந்து விட்டு,  நம்மை இழந்து தவிப்பவர் அல்ல.  அவர் தம்முடைய நன்மைகளில் சேர்த்துக்கொள்பவர். 

              இரு காரணங்களில், நமக்கு கொடுக்கப்பட்டதால் மற்ற பிறப்புக்கு ஒரு காரணமான நாமே இழப்புக்குகாக வருந்தும் பொழுது,  ஆதி காரணர் வருந்த மாட்டாரா என்ன? 

 
               ஆதி காரணர் இறைவன், வருந்த மாட்டார்.  நம்மை இப்புவி வாழ்வின் இறப்பினால் நம்மை இழக்கவில்லை. நாம் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம்.  அவர் நம்மை கைவிடுவதில்லை.

                 நாம் உலக துவக்கத்திலிருந்தே இறைவனோடுதான் இருக்கிறோம்.   தற்பொழுது, நாம் புவி வாழ்வுக்கு விழித்திருக்கிறோம்.  நாம் எப்பொழுதும் அவரோடுதான் இருக்கிறோம்.

                  நான் என்று உணர்ந்தது எவ்வளவு காலத்தில்,  நாம் கோமா stage அடையும்பொழுது நான் எங்கே?

                  எண்ணெய் உள்ள விளக்கு திரி பற்ற வைக்கும்பொழுது  எரிகிறது.  எண்ணெய் குறைவில்லாது இருக்கும் பொழுது எரிந்து கொண்டே இருக்கும்.  நாம் பிறப்பு என்ற பெயரில் தூண்டி விடப்பட்டோம்.

                   ஒரு stage க்கு பிறகு, நம் உயிரை நீட்டி, தடைபடாமல் நமக்கு, மகிழ்ச்சி எண்ணையை செழிப்பாக பார்த்து கொள்பவர் இறைவன்.           


                   நிலத்தில் வேர் ஊன்ற வேண்டும் என்பதற்காக சிறிது நேரம் தண்ணீர் இல்லாமல் காயும் நெற்பயிர் போல, நம் புவி வாழ்வு இறப்பு, இழப்பு உள்ளது.    

                    இழப்புகள் நமக்கு ஞானத்தை அறிவதற்கான வரவேற்புகள்.

                    புவியின் செழுமை, வறட்சி அளவுகள் என்ன,  அதற்கு நம் விருப்ப அளவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்து இந்த புவி வாழ்க்கை ஒரு கை பார்ப்போம்.   வேகம், வேகம் என்று ஏன் பதட்டம்.  மந்தம், மந்தம் என்று ஏன் அலுப்பு.      

                  ஐம்பூதங்களால் ஆனா நாம் உடலை மண் அரிக்கிறது.  நிலம் நம்மை எடுத்துக்கொள்கிறது.   மற்ற நான்கு பூதங்களின் செயலை நாம் அறிவோமா?


விரக்தி ஏன்?           

           வாழ்க்கை ஒரே தரம் என்று கருதி கிடைக்காததற்கெல்லாம் விரக்தி அடைவது ஏன்?  

            புவி வாழ்க்கை ஒரு தரமாக இருக்கெலாம், நாம் வேறு ஆற்றலாக உயிர் பெறுவோமே.

            நம் அப்பா, அம்மாவே நமக்கு சொத்து சேர்த்து வைப்பார்கள்,  நம் பிறப்புக்கு ஆதி காரணராகிய இறைவனாகிய தந்தை நமக்கு என்று சொத்து சேர்த்து வைத்திருக்க மாட்டாரா?

              இறைவன் வாடகை தாய் அல்ல.  உரிமை அவருக்குத்தான் அதிகம்.   

               தாயாகிய இறைவன் நம்மை மறப்பதில்லை, தாய் கூட மறக்கலாம்.

               யார் என் தாய் என்று நாம் சரியாக புரிந்துக்கொள்வோம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 01, 2014 7:51 pm

சிறப்பான சிந்தனைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 14 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 21 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum