தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Advanced Technology

Post by ராஜேந்திரன் Wed Jul 23, 2014 8:53 pm

Advanced Technology

              உலகத்தில் உள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

               அவர்கள், என்னையா ஒரே போரா இருக்கு.

               எனக்கு இந்த புதுவிதமான மாத்திரையை சாப்பிட வேண்டும்போல ஆசையா இருக்கு?  சும்மா எப்படி சாப்பிடுவது, அதுக்கு நோய் வேண்டுமே கண்டுபிடித்த மாத்திரைக்கு வாழ்வு கொடுக்கனுமே 

                அதற்காக, ஏற்ற வியாதியை அல்லது பாதிப்பை எனக்கு ஏற்படுத்தி தாங்க doctor , என்று சொல்லும் அளவிற்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்படுமா?  அப்படி சவால் விடும் அளவிற்கு டெக்னாலஜி வளருமா?    கனவு காணுங்கள்.

                 ஏங்க நீங்க வேர, மாத்திரை, சிகிச்சை போன்றவை எல்லாம் நல்ல லாபம் அடையவேண்டும் என்பதற்காக சீக்கிரம் குணப்படுத்தாம, குணப்படுத்த முடியாதுனும் சொல்லாம இழுபொறி செய்து, இழுத்தடிப்பது ஏன்?
service எங்க இருக்கு, பிசினஸ் பண்ண வேண்டியவர்கள் எல்லாம், doctor ஆக மாறி, கொள்ளை லாபத்திற்காக நோயை ஊதி பெரிதுபடுத்தலாமா? 
இப்படியெல்லாம் பண்ணும்பொழுது எனக்கு நோய் வேண்டும் doctor என்று சவால் விட ஆரோக்கியசாலிகள் வருவார்களா? டாக்டர் கிட்ட விருந்துக்கா போறாங்க?    

                 உலகம் முழுவதும் ஒரே cooling ஆக இருக்கனும், A /C வைக்கனும் என்ற ஆசை மாறிபோய் warm ஆக இருக்க புரட்சி வருமா?
சூரியனை கொஞ்சம் கிட்ட வர சொல்லுங்கப்பா வெப்பம் பத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்த கனவு நிஜமாகுமா?

                ஆதிமனிதன், தனக்கு எற்படுத்திக்கொடுத்த துணைவியினால்தான்,  இந்த பாவம் செய்யும்படி நேர்ந்தது என்று சாக்கு போக்கு சொல்ல ஆரம்பித்தபிறகுதான், தப்பிக்கும் வழிகளை தேட ஆரம்பித்திருக்கிறது இந்த உலகம், தவறை தான் பொறுப்பேற்றுக்  கொள்ள முன் வரவில்லை, இந்த தவறுக்கு கடவுள் மேல பாரத்தை மறைமுகமாக வைத்த ஆதிமனிதன் போல தீர்வு வழிகளின் தேடல்  வளர்ந்துகொண்டிருக்கிறது.


                  தற்பொழுது தான் உருவாக்கிய மனிதன் பண்பட்டு கடவுளும், மனிதனும் பாரத்தை பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சி நெருக்கிவிட்டதால் பாரம் பஞ்சை சுமப்பது போல் மாறிவிடும். சுமை என்ற பெயர் பளுவாக தூக்கப்பட்டு, பளு தூக்கிய பலசாலியான பயில்வான்கள் ஆவார்களா இறைவனும், மனிதரும்.  மனிதன் தன் பங்கிற்கு சுமையை பகிர்ந்த  நிலையில் தான் தெரிந்தது தன்னால் உண்டான தவறை தெளிவாக ஏற்றுக்கொண்டு விடுதலையடைந்தான் என்று.                      (ஞான அமர்வு பாரம்)

              உலகம் தோற்ற முதல் பல கட்டங்களாக கட்டுகள் அவிழ்க்கப்பட்டு விடுதலை வளரும் காலம் முன்னேறுகிறது.  பயன்பட்டோர்களின் எண்ணிக்கை வித்தியாசபடலாம், தீர்வுகள் தோன்றிவிட்டனவே, எதிர்காலத்தில் இத்தீர்வுகள் அனைவரின் மீதும் அமரும்.    

                இறைவனே, நீர் எனக்கு துணையாக கொடுத்த கை, கால், கண், அறிவு போன்றவைகள் மூலம் பாவம் வந்தது-(பண்படாத நிலையில்).  துணையை தெரிந்து, புரிந்து வாழ்க்கை நடத்தும்பொழுது எனக்கு துணையாக கிடைத்த கை, கால், கண், அறிவு இதன் மூலம் பாவம் நீங்கி சுகமானேன்-(பண்பட்ட நிலையில்)

                இடம், பொருள், ஏவல் இவைகளை பொறுத்து

                எதிர்ப்பவர் எதிரி அல்ல, எதிர்க்கும் காரணிகளே எதிரிகள்.

                எதிர்க்கும் காரணிகள் எதிரி அல்ல. எதிர்ப்பவர்தான் எதிரி.


                ஏன்?  ஆம். சுதந்திரமும், கட்டுப்பாடும் சேர்ந்தே இருப்பதால்.    



              இறைவனுக்கு பயப்படுதலே நன்மைக்கு ஆரம்பம்.

              பயப்படாதே நான் உன் இறைவன். 

              பயப்படனுமா? பயப்படக் கூடாதா?
 


             
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty குரூப் தம்பதியர்

Post by ராஜேந்திரன் Fri Jul 25, 2014 9:35 pm

குரூப் தம்பதியர்

             ஒருவர் நான்கு மனைவியை திருமணம் செய்யக்கூடாதா?

             ஆனால், ஒருவருக்கு ஒவ்வொரு மனைவியும், சிறிது காலம் வாழ்ந்து விட்டு, இறந்தனர்.  அப்படி இறந்தவர்கள் மூன்று பேர்.  தற்பொழுது இருக்கும் நான்காவது மனைவி, உயிருடன் இருக்கிறார். 
இத்தகைய நிலையில், ஒருவருக்கு நான்கு மனைவி அமைவது, தவறல்ல என்று அதை நீதி என்கலாமா?   
(இறப்பு அல்லது விவாகரத்து)

            அப்படியென்றால், ஒருவருக்கு நான்கு மனைவி வேண்டும் என்றால், மூவர் பலியாக வேண்டுமா?

            ஒருவருக்கு ஒருத்தர் என்பதால் தான், ஒரு துணை அமைந்தாலும் இளமையாய், அழகாய், படிப்பிலும், சம்பாத்தியத்திலும், அந்தஸ்த்தையும் பார்த்து, நிறைய நிபந்தனைகள் நிறைவேறப்பட்டால், அவர்களை திருமணம் செய்து கொள்வது,

              தற்பொழுது வேகமாக வளர்ந்து வருகிறது.  இப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற நடைமுறை வளர்த்துவிடுகின்றனர், மேலும் இதுபோன்றதை, ஆதரிப்பதையும் கௌரவம் என்று பலரை பலியாக்குகின்றனர்.

           ஆம். கொஞ்சம் அழகில் குறைந்த, கொஞ்சம் குள்ளமாக உள்ள, கொஞ்சம் குண்டாக உள்ள, கொஞ்சம் படிப்பு ஏறாத, கொஞ்சம் வசதி குறைந்த, கொஞ்ச வரதட்சணை மட்டுமே கொடுக்க முடிந்த,

            படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்காத, ஜாதகம் பொருந்தாத போன்ற எவ்வளவோ ஆண்கள், பெண்கள் திருமணம் ஆகாமல் பலியாக்கப்படுகின்றனறே.  

          வயது அதிகமாகி குழந்தைகள் பிறக்காமல், திருமணம் தள்ளி போனதால், ஏதோ சரியில்லாத யாரோ ஒருவரை திருமணம் பண்ணி கஷ்டப்படும் சூழ்நிலை வருவது ஏன்?
     
            ஒருவருக்கு மூன்று மனைவிகள் இறந்து போனால்தான் நான்காவதை திருமணம் பண்ணி நான்கு மனைவி அமைந்தவர் என்று பெயர் பெறலாமா?
              
          சில தகுதிகள் இறந்துபோன நான்கு பேர் ஒருவருக்கு மனைவியாக வாழக்கூடாதா? தகுதிகள் குறைந்த,  உயிருள்ள நிலையில் நான்கு மனைவி அமைந்தால் தவறா?

         திருமண வாழ்க்கைக்கா எவ்வளவோ கண்ணீர்கள் நடைமுறையில் பெருகி வருகிறதே?

         குழந்தைபிறப்பு - பாரம்பரிய ஜீன்கள் குழந்தைக்கு வருகிறது,  அக்காலத்தில் 40, 50 வயது வரை குழந்தைகள் பிறக்கும், அப்பொழுது மனப்பக்குவம் அடைந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளாக கடைசி தம்பி, தங்கைகள் இருப்பார்கள்.   

           அதனால் சமூகத்தில் உடல்பக்குவம் மட்டுமே பெற்ற நிலையில் குழந்தைகளை பெற்ற பெற்றோராகவும், மனபக்குவம் சேர்ந்த நிலையில் குழந்தைகளை பெற்ற பெற்றோராகவும் இருந்ததால்
             
            குழந்தை பிறப்பு விதைகள் வீரியமாய் உடல், மனம் பக்குவம் கலக்கப்பட்டு சமுதாயம் உருவெடுத்தது  தற்பொழுது அதற்கு பாதிப்புகள் பெருகிவருகிறது.


         உடல் பக்குவம் மட்டுமே பெற்ற பெற்றோர்களின் குழந்தைகள்தான் பெருகி வருகிறது.  சுக பிரசவங்கள் குறைந்து வருகிறது,  பல சிக்கல்கள் ஆதலால் ஒன்றி, ரெண்டோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.  

          மனப்பக்குவமும், உடல்பக்குவமும் அடைந்த வயோதிக பெற்றோர்களின் குழந்தைகள் பிறப்புகள் குறைந்து வருகிறது.

           இளம் வயது ஆண், பெண் 1-set , வயோதிக ஆண், பெண் 1-set  ஆக நான்கு பேர்கள்  கலந்த தம்பதியர்கள் முறைப்படி திருமணம் ஒப்பந்தம் ஏற்பட்டு group  தம்பதியர்களாக சேர்ந்து ஒன்டிகட்டையா கஷ்டபடாம சுமையை ஒருத்தருக்கு நான்கு பேராக சுமந்தால் எளிதல்லவா?  

          அதற்காக group  ரொம்ப பெரிதானால் பிரச்சனைகள் கூடலாம்?  இரண்டு தம்பதிக்கு, நான்கு தம்பதி என்றால் கொஞ்சம் பிரச்சனைகள் கூடலாம், இது சமாளிக்கும் அளவுதான் ரொம்ப பெரிதல்ல,  அதே நேரத்தில் கூடி வாழ்வதால் கோடி நன்மையாக சௌகரியங்களும் அதிகம்.  

            இத்தகைய நான்கு பேர் கொண்ட தம்பதியரில் உடல்பக்குவம், மனபக்குவம் குறைகள் அகற்றபடுகின்றன, இதில் சில தகுதிகள் குறைந்தவர்களை இணைத்துக்கொள்வதால் பெரிய பாதிப்பல்ல, இவை நிறைவாக்கப்படுகின்றன.    மனித பாரம்பரியத்தில் உடல்பக்குவமும், மனப்பக்குவமும் கலக்கப்பட்டு மீண்டும் சந்ததி தொடருமே.

             வாருங்கள் பள்ளங்கள், மேடுகள் நிறைவு செய்வோம், கருடுமுரடை சமமாக்குவோம். 


காரணங்களின் சந்தான இறப்பு

ஓரின சேர்க்கை திருமணத்தை எல்லாம் ஆதரிக்கிறீங்க, என்னைய நீங்க (நாலு பேர் சிறப்பு தம்பதி)

பாஞ்சாலி - பாண்டவர் application  நடைமுறைக்கு?

நான்கு பேர் சேர்ந்த ஒரே திருமண பந்தத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள் / நன்கு பாராட்டுபவர்கள்

வள்ளி, தெய்வயானை துணைகளை மணந்த முருகன் இறைவனை கடுமையாக விமர்சிப்பார்களா? / நன்கு பாராட்டுவார்களா?

பாஞ்சாலி-பாண்டவர்கள் சேர்ந்த ஒரே திருமண பந்தத்தை கடுமையாக விமர்சிபார்களா?/ நன்கு பாராட்டுவார்களா?

ஆபிரஹாம், முகமதுவை கடுமையாக விமர்சிப்பார்களா?
/ நன்கு பாராட்டுவார்களா?


நான்கு பேர் சேர்ந்த, ஒரே தம்பதிகளான, திருமண பந்தத்தில் உள்ள, ஒரு ஆணுக்கு, ஒரு இளவயது மனைவியும், ஒரு முதிர் வயது மனைவியும் அமைகின்றனர்.   ஒரு பெண்ணுக்கு, ஒரு இளவயது கணவரும், ஒரு முதிர் வயது கணவரும் அமைகின்றனர்.

          இதனால், விதவை நிலைக்கான காரணிகள் குறைக்கபடுகிறது.   கார், லாரி போன்றவைகளுக்கு டயர் ஸ்டெப்னி இருப்பது போல், ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது நல்லதாய் கருதுவது போல், ஒருத்தருக்கு இரு வாழ்க்கை, துணை அமைந்தால் என்ன?

      இப்பொழுதெல்லாம், பெற்ற பிள்ளைகள் வயோதிக பெற்றோரை கவனிப்பது குறைந்து வருகிறது.

     கணவன், மனைவி பந்தம் எவ்வளவு நெருக்கமானது, வயோதிக காலத்தில் ஒரு இளவயது மனைவியின் உதவியிருக்குமே, கிளை கணவர் இருப்பாரே. (தடுமாறும் நிலையில் சிறுநீர், மலம் கழிக்க உதவும் அந்நியோநியம்)  

       வயோதிகரின் புத்திமதிகள், அனுபவங்கள் இளையர்களுக்கு உதவுமே.       
 


Last edited by ராஜேந்திரன் on Sun Jul 27, 2014 4:47 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty குரூப் தம்பதியர் - II

Post by ராஜேந்திரன் Sat Jul 26, 2014 6:13 pm

குரூப் தம்பதியர் - II

Business ல உள்ள ஒரு நன்மை, திருமண அமைப்பிலும் apply ஆகுமா?
ஆம். ஒருவரிடம் உள்ள,  நாலு business  நல்லா லாபமா போனா?  ஒரு business  loss ல போனா பாதிப்பு தெரியாது, சேவை செய்து மற்றவற்றால் லாபம் இருக்கும்பொழுது கொஞ்சம் செல்வம் இழந்தாலும் அது வேறு விதத்தில் நன்மை,  இதை திருமண அமைப்பில் சிந்திக்கலாமா?

லாபத்தை எல்லாம் ஒருத்தவன் தலைல கட்டுறது,  நஷ்டத்தை எல்லாம் ஒருத்தவன் தலையில கட்டுறது,  ஆம் திருமண வாழ்க்கையிலும்.  இதற்கு ஒரே வழியை நம்பியிருப்பது தான் காரணமா?  ஆம் ஒருத்தருக்கு ஒருத்தி திருமணம்.


தெய்வ நிலையில் இருந்த முருகன் தெய்வ நிலையில் தெய்வானையை மணந்தார், ஒரு தாழ்த்தப்பட்ட குலமகளான (குறத்தி) வள்ளியை மணந்தார்.

தெய்வமே குறத்தியை மணந்திருக்கும் பொழுது,  உயர் ஜாதி, பணக்காரர் எத்தனை தாழ்த்தப்பட்டோரை, ஏழைகளை மணந்து சமுதாயம் செழிப்பாக உள்ளது?

உலகத்தில் பிறந்த குறைவுள்ளோரும் நல் வாழ்க்கை வாழ உரிமையிருக்கிறது,  அவர்கள் அடிமைகள் அல்ல, உயர்ந்த வாழ்கைக்காக செழிப்புள்ளோரை கவர்ந்து செல்ல உரிமையிருக்கு.     

ஒருத்தர் நல்லவனாக இருக்கிறார்,  அவர் நல்லா sales ஆகனும் என்றால் யார் வேண்டும். குறைகள் மாறவேண்டி திருத்துபவர்களுக்கு  குறை உள்ளவர்கள் வேண்டும்  (அயோக்கியங்கள் மாறவேண்டி திருத்துபவர்களுக்கு அயோக்கியர்கள் வேண்டும்)  அதுபோல் குறையுள்ள மணமக்கள் எல்லாம் பிச்சை பெறவேண்டாம், விருந்து பெறவேண்டும். இல்லையென்றால் பாலுணர்வு சக்தியும், உள்ளத்தின் சக்தியும் sales ஆகவில்லை.  

யாரும் பெருமைப்பட வேண்டாம்.  உலகில் உள்ள அனைவரும் அயோக்கியர்கள்,  என்ன ஒவ்வொருவரிடமும் அயோக்கியதன்மை மெஜாரிடியாகவோ, மைனரிடியாகவோ அமைந்திருக்கும். எழிப்பிவிட  வேண்டிய நல்ல குணமும் மெஜாரிடியாகவோ, மைனரிடியாகவோ அமைந்திருக்கும்.

குரூப் தம்பதியர் யோசனையை வெறுப்பவர்கள் முதலில் ஒரு அருவருப்பான பெண்ணை திருமணமாக்கி கொண்டவர்களா அல்லது ஊனமான பெண்ணை திருமணமாக்கி கொண்டவர்களா அல்லது பிச்சைக்காரரை திருமணமாக்கி கொண்டவர்களா அப்படியிருந்தால் இந்த விவாதத்தை பேச அருகதை இருக்கு.


யார் இவர்கள் உலக இயல்பின் குறைகள், பள்ளங்கள், சவால்கள் இவைகளை நமக்கு சிரமம் இல்லாமல் வெளிச்சம் போட்டு காண்பித்தவர்கள்.   கற்பனையில் காட்டியவர்கள் அல்ல, உடலை கிழித்து ரத்தத்தை பார் என்று காண்பிப்பது போல் அறிவின்மையை, சோம்பலை, நோய்களை, ஊதாரித்தனம் போன்ற குறைவை காண்பிக்க ஒரு ஜென்மம் எடுத்தவர்கள், இவர்களை ஒதுக்கி தள்ளுவது ஏன்? 


இந்த குரூப் தம்பதியர் யோசனை வேண்டாம் என்பவர்கள், திருமணபந்தமே வேண்டாம் அப்படியிருப்பது ரொம்ப, ரொம்ப  கற்புகரசியாகவும், கற்புகரசராகவும் இருப்பதாகும். இதனால்  எல்லாரும் நூற்றுக்கு, நூறு திடம் உள்ளவர்கள் ஆவார்கள் என்று சுவர் இல்லாமல் சித்திரம் வரைவதா?  

கணக்கில 0,1,2,3 என்று தொடர்கிறது.  இதில் ஒருத்தருக்கு, ஒருத்தி என்று 1 இருந்தால் சிறந்த கற்புக்கரசி, கற்புகரசன்,

                    0 என்று வாழ்க்கை துணை ஒன்றும் இல்லாமல் இருந்தால் ரொம்ப, ரொம்ப கற்புகரசன், கற்புகரசியா?  

இந்த கற்புகரசன், கற்புக்கரசி light அ காண்பித்தா நிறைய விடியல்கள் வருமா?

              1000, கோடி என்று வாழ்க்கை துணை இருந்தால்  உலகம் எல்லாம் நாற்றமும், அருவருப்பான வாழ்க்கை முறையா? 

             உலகில் கோடிக்கணக்கான ஆண்களுக்கு இரண்டே, ரெண்டு பெண்கள் இருக்கட்டும் இருந்தால் என்ன வேகம் உங்க வேகம் திருமண பந்தத்திற்கு?
   

             குரூப் தம்பதியருக்கான கற்பு சூத்திரம் வகுப்போமே 


             25 வயதில் ஆண்,23 வயதில் பெண் இவர்களுக்கு முதன்மை திருமணம் நடைபெறலாம்.  திருமணம் ஆகி 40 வயது ஆண், 38 வயது பெண் ஆன இவர்களுக்கு புதிதாக 25 வயது ஆண், 23 வயது பெண் ஆனவர்களுக்கு முதன்மை திருமணமும் 40,38 வயது தம்பதிகள் அவர்களோடு கலந்து கிளை திருமணம் அமைந்திட வேண்டும்.


புதிதாக முதன்மை திருமணம் அடைந்தவர்கள் ஏற்கனவே முதன்மை திருமணம் நடந்து 40 வயது ஆணாகவும், 38 வயது பெண்ணாகவும் இருப்பவர்களுக்கு கிளை கணவனாக 38வயது பெண்ணுக்கு, கிளை மனைவியாக 40 வயது ஆணுக்கும் இளஞ்சோடிகள் இருக்கலாம். 


60 வயது ஆணுக்கும், 58 வயது பெண்ணுக்கும் வயதாகும் பொழுது இளைய முதன்மை ஜோடிகளுக்கு (40, 38 வயது ) கிளை திருமணம் அமையலாமே.


இதில் மூன்று stage , நான்கு stage தம்பதிகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு கிளை ஜோடிகள் மட்டுமே சொந்தமாக கொண்டு எல்லாவற்றுக்கும் சேர்த்து 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையை குறைக்கலாம், இடை,இடையே 1 அல்லது 2 குறைபாடு உள்ள ஆண், பெண்களை இந்த குரூப் தம்பதியர் நிலையில் சேர்த்து கொண்டு குறை உள்ளோருக்கும் வாழ்வழிக்கலாம்.  நமக்கு திருமண நிலையில் உள்ள மகன், மகளை மற்ற குடும்பங்களுக்கு கொடுத்துவிடலாம்.  


Last edited by ராஜேந்திரன் on Tue Jul 29, 2014 2:48 pm; edited 3 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 26, 2014 8:25 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty குரூப் தம்பதியர் - III

Post by ராஜேந்திரன் Mon Jul 28, 2014 3:59 pm

குரூப் தம்பதியர் - III

நன்றி. தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே.

                எல்லாம் நல்லாருக்கு, இந்த ரிப்பன் மேட்சாகவில்லை, இந்த வளையல் கலர் அடிக்கிறாமதிரி இருக்கு, இது மாதிரி வாட்ச்ச கட்டாத, வழுக்கை தான் குறை, ஒரு interview பதில் சரியில்லாதனால வேலை கிடைக்கல, அழகு ஆனா கொஞ்சம் குண்டு இப்படிதான் reject ஆகி நமக்குரிய வாய்ப்பு இகழப்ப்படும்படி reject ஆனதா? ஆதரிக்க ஆளில்லையா?

ஒருத்தருக்கு, ஒருத்தி என்ற தம்பதி முறையில் ஒன்று, ரெண்டு குறைகளால் எவ்வளவோ வாய்ப்புகள் இழக்கப்பட்டதே, மற்ற நல்ல விஷயங்கள் பயன்படுத்த முடியாமல் ஒழிக்கப்பட்டதே.  நல்ல பொறுமை, நல்ல விட்டுகொடுக்கும் மனப்பான்மை, நல்ல அனுபவங்கள், சமையலில் திறமை, நல்ல அறிவு, நல்ல உழைப்பு இவைகள் புதைக்கபடலாமா?

ஒருத்தருக்கு பக்கத்திலே இருந்து உதவி செய்யனுமுனா அவர்கள் பிட்சை போல் ஒருநாள் மட்டும் அங்கீகரிக்கப்படாமல் வீட்டிலே ஏற்றுகொள்ளபட்டு நம் குடும்ப்பத்தோடே இருக்க, இந்த சின்ன குரூப் தம்பதியில் ஒரு துணையாளராக நம் வீட்டு ராணியாகவோ, ராஜாவாகவோ அமைக்கலாமே.       

பூமியில் தாதுக்களை பிரித்து எடுக்க, தேவை இல்லாததை மற்றும் கசடுகளை நீக்கி விட்டு நாம் பயன்படுத்துகிறோம்.

ஒரு தாதுவை தனித்து பெற, மற்ற தாது சேர்ந்து இருக்கும் பொழுது அது கசடாக கருதப்படுகிறது, ஆனால் ஒவ்வொன்றும் தேவைப்படும்போழுது அது மதிக்கபடுகிறது தேவைப்படாதது கசடாக கருதப்படுகிறது, வாருங்கள் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் மதிப்போம். 

ஆண் குழந்தை இல்லையென்றால், இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வோம் அதாவது ஆண் குழந்தையாக இருக்காதா? என்று குடும்பக்கட்டுப்பாடு  தேவைப்படும் காலத்தில் குழந்தைப்பெற்று கொள்வதை அதிகப்படுத்துகிறோம். 

          குரூப் தம்பதியர் நிலையில் ஆண் குழந்தை இல்லையென்றாலும் முதன்மை, கிளை தம்பதிகளால் ஆண் வர்க்கமே இல்லை, பெண் வர்க்கமே இல்லை என்ற குறைவு அகற்றப்படுகிறது.  அது அவர்களே குடும்பத்தில் இளவயது கிளை தம்பதியர் ஆண் வர்க்க, பெண் வர்க்க உறுப்பினர்களாக  இருப்பதால், அந்த குறைவை கண்டுக்கொள்ள வேண்டியது இல்லை, ஏதோ ஒரு குழந்தை இருந்தாலும் நாமே சமாதானம் படுத்திக்கொள்ளலாம்.

         குரூப் தம்பதியர் திட்டத்தை தவறு என்று பூதாகரமாக நினைத்து அகற்ற நினைப்பவர்கள், பாம்பே, சென்னை போன்ற பெரிய நகரங்களின் விபச்சார நிலையங்களை அகற்ற முடியுமா?  குரூப் தம்பதியர் திட்டத்தை முறைப்படுத்துவோமே.


         நீங்கதான் டென்ஷன் ஆகிறீர்கள், ஏன் சாப்பாட்டுக்கு தகுந்த உழைப்பை குடுக்காமல் இதயம், ஜீரண மற்றும் உள் உறுப்புகளை டென்ஷன் ஆக்கி சாப்பாட்டு பிரியராக மட்டும் இருக்கீறீர்கள்.


             மொழிகளில் உள்ள எழுத்துகள் யார் பக்கம் சாயும், அவைகளில் நல்ல எழுத்துக்கள், கெட்ட எழுத்துகள் என்றில்லை.

              நாம் தான் அவ்வெழுத்துக்களை கொண்டு நல்ல கண்டிப்பாய் உணர்த்தும் வார்த்தையாகவோ, கெட்டதை தூண்டிவிடும் வார்த்தையாகவோ வாக்கியங்களாக சேர்த்து வடிவமைக்கிறோம்.  எழுத்துகள் கூடி நிக்கும் நிலையை பொறுத்து அப்படி அமைகிறது.  அதுபோல இந்த குரூப் தம்பதியர் திட்டத்தை நல்ல திட்டமாகவோ, கெட்ட திட்டமாகவோ பயன்படுத்துவது நம் பொறுப்பில் இருக்கிறது.  


            நம் business  நல்லபடியாக அமைய எவ்வளவோ புத்திசாலித்தனமான திட்டங்களை தீட்டுகிறோம், அதில பிராடு இருந்தாக்கூட அது ஒன்னுமில்லை இதுதான் business  என்கிறோம்.  

            இதுவே இப்படியென்றால், மிக உயர்ந்த மனித நேயமாகிய, மனித வாழ்க்கை முறை, குறை உள்ளோருக்கு, நம் உதவிகளை சிறப்பு புத்திசாலிதனமாய் அமைய புத்தியை தீட்டுகிறோமா, குரூப் தம்பதியர் என்பது ஒரு பெரிய தவறா? 

              விஞ்ஞானம் சொல்லும் சொந்த இரத்தத்திற்குள் திருமண பந்தம் வேண்டாம், குறைகளை காண்பித்து விவாகரத்து வாங்குகிறோம், வேலை வாய்ப்பு , பேருந்துகளில் முடியாதவர்களுக்கு சீட்டு,  கல்விக்கு என்று பலதுறைகளில் தாழ்ந்த சாதி, மாற்று திறனாளிகள் இதற்கெல்லாம் குறை உள்ளோருக்கு சலுகைகள் கொடுக்கிறோம்.   ஏன் இவர்களுக்கு இப்படிப்பட்ட சலுகைகள்? குறைகளை கண்டு வாழ்க்கைக்கு விவாகரத்து வழங்கபடுவது போல, எதிர்காலத்தில் சமுதாயத்திலும் வேலை போன்ற சலுகைகளுக்கு விவாகரத்து வழங்குவீர்களோ,

         பாதிக்கபட்டவங்களுக்குதான் நிழலின் அருமை வெயிலில் தெரியுமா?
அருமையான வாழ்க்கை துணை அமையாமலிருக்கும் பொழுதுதான் தன் குறையை கண்டு, கண்டு வாழ்க்கை முழுவதும் அழுது, வருந்த வேண்டுமா? துன்பத்தின் கெட்ட அருமை தன்னுடைய குறையினால் தெரிந்தால் ஈடு செய்யப்பட வேண்டாமா?

          குறையுள்ளோருக்கு எவ்வளுவு காலம் பெற்றோர்கள் கூட வருவார்கள். வயதான காலத்தில் பெற்றோருக்கே உதவி தேடும்பொழுது தன் குறையுள்ள பிள்ளைகளுக்கு என்ன செய்ய முடியும். 

           வேலைகளில் சலுகை கொடுப்பவர்கள், குரூப் தம்பதியர் என்று திட்டத்தை நடைமுறைபடுத்தி சலுகை கொடுக்கலாமே.

            வேலை சலுகையினால் கிடைக்கும் சம்பளம், அவர்கள் வேதனையை தீர்த்திடுமா?   ஒரு ஜானுக்குத்தான் இந்த பொழப்பு என்கிறோம்.

சம்பளம் கிடைத்து பிரோஜனம், கிடைக்கும் சம்பளத்தை தனக்கு  வேலையாள் எல்லாம் வைத்து கொண்டால் அந்த அந்நியோனியம், பாசம் கிடைக்குமா?  

             வாழ்க்கையில் முக்கியமான நல்ல துணை கிடைக்க அவர்களுக்கு சலுகைகள் காண்பிக்கப்பட்டு வாழ்க்கை துணைவர்களாக ஏற்றுக்கொள்கிறோமா?   எந்த சலுகை முக்கியம்.  நாம், ஒருத்தனுக்கு, ஒருத்தி என்ற ஒரே வழியை வைத்திருபதால்தான் குறை உள்ளவர்களை reject பண்ணுகிறோம்.

              நீ செத்தாலும், சாவு, குறை உள்ளவர்களுக்கு நல்ல வாழ்கைக் கூடாது என்று முடிவெடுப்பது ஏன்? 


             நம் அன்பு பெரியது அதற்கு தேவைப்பட்டால் உயிரைக்கூட மற்றவர்களுக்காக கொடுக்கலாம் என்று முன்வரும்பொழுது, அதைவிட சற்று சிறிதோ வாழ்க்கையில் முக்கிய பங்கிற்கு துணைவர்களாக (கணவன், மனைவி) அமைத்துக்கொள்வது. அதற்கென்று ஒரு ஒழுங்கை உருவாக்கக்கூடாதா? குரூப் தம்பதியர் திட்டத்தை போல.      


Last edited by ராஜேந்திரன் on Tue Jul 29, 2014 2:31 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 29, 2014 11:24 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty குரூப் தம்பதியர் ......

Post by ராஜேந்திரன் Tue Jul 29, 2014 3:45 pm

குரூப் தம்பதியர் ......
                
        சிலர் உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து விட்டார்கள்.  ஆனால் குறை உள்ள ஏழை, மாற்றுதிறனாளிகள் உள்ளே நுழையவே அனுமதி இல்லை.   அப்படியிருப்பதால் முதல் நிலையிலேயே reject  ஆகிவிட்டார்கள், அப்புறம் எப்படி வாழ்க்கையில் நுழைந்து விவாகரத்து ஆனார்கள் என்ற பேச்சு எப்படி வரும்.     

                மனைவிகள் வேண்டும் என்றால் ஒன்று இறப்பு, அல்லது விவாகரத்து ஆக வேண்டுமா?
    

                குறையில்லாத மனிதர் உண்டா?  மற்றவர்தான் குறை, தான் குறையில்லை என்று தீர்ப்பிட்டு விவாகரத்து வழங்கப்படுவது ஏன்?

               ஒடுக்கப்படுவோர்கள் பிறரிடம் மனம் விட்டு அழக்கூட தெரியாமால் புழுங்கி, புழுங்கி சாகிறார்கள்.

              இவர்கள் அழுகை நாம் உணரும்படி கேட்காததால், இதெல்லாம் நமக்கு பிரச்சனையாக தெரியாமல் சத்தம் கேட்காதபடி விழுங்கி சமாதானம் பெற்றதாய் நினைக்கிறோம்.     
                 
              நோயாளிக்கு இன்னொரு நோயாளி எப்படி குணப்படுத்துவார் மருத்துவரின் தலைமையில் சிகிச்சை வேண்டுமே.


               மாணவனுக்கு இன்னொரு மாணவன் சந்தேகத்தை நீக்கி  தெளிவுப்படுத்த முடியுமா?  குரு தேவைப்பட மாட்டாரா?

              குறையுள்ளோரை மணக்க இன்னொரு குறையுள்ளோர் சேர்ந்தால் நிலை என்ன?  குருடனுக்கு இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டுவார்?    பிரச்சனைய தீர்க்க கொஞ்சம் பிரச்சனையை குறைத்தால் கூட பரவாயில்லை எனலாம்.  இன்னும் அதிகப்படுத்துவது ஏன்?   அடிமேல் அடி, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது இவற்றை tour ஆக பார்த்து மகிழ ஏற்பாடுகளா?    


                குறையில்லாத மனிதேரே இல்லைதான்.  எந்த நிலையில் குறை என்று சொல்வதற்கு தேர்ச்சி பெறுகிறது என்று பார்த்து அவற்றை சரிசெய்ய வழிகளை ஆராய்ந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

                முக்கியத்துவம் கொடுப்பதை பொறுத்து செயல்களில் உடலை விட உயிர் சிறக்க வேண்டியிருக்கலாம், உயிரை விட ஒழுக்கம் சிறக்க வேண்டியிருக்கலாம், தாம்பத்தியத்தில் ஆடையை விட ஈடுபாடு சிறக்க வேண்டியிருக்கலாம், குளிரின்போது ஆடை அணிவது சிறக்க வேண்டியிருக்கலாம்.

          குரூப் தம்பதியர் திட்டத்தில் நாம் நினைக்கும் கற்பை விட அன்பு சிறக்கபட்டு கற்பு 40 சதவீதம் என்றால் அன்பு 60 சதவீதம் இருக்கும்படி பார்த்துகொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது போல் அனைவரின் நன்மைக்கு ஈடுபடுவோம்.

          பணம் உள்ளவர்கள், இன்னும் சொத்து வேணும், கார் வேணும், செல்வம் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் பொழுது.

         ஏழைகள், மாற்றுதிரனாளிகள் நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டமாட்டார்களா? நாம் அவர்களை ஒடுக்கி மேலும், மேலும் நம் கை ஒங்க நினைப்பது ஏன்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty converted - மதம்

Post by ராஜேந்திரன் Fri Aug 01, 2014 9:15 pm

converted - மதம் 

          சிலர் christian லிருந்து Hindu க்கு கன்வெர்ட் ஆகிறோம். சிலர் hindu  லிருந்து முஸ்லிம் க்கு கன்வெர்ட் ஆகிறோம்  சிலர் புத்த மதத்திலிருந்து christian க்கு கன்வெர்ட் ஆகிறோம்.  சிலர் வேறு மதத்திலிருந்து புத்த மதத்திற்கு கன்வெர்ட் ஆகிறோம். 

        இப்படியெல்லாம் போட்டிகள்.

        இப்படி பேட்டிகள் கொடுக்கும் நாம் அன்பை பகிர்ந்துக்கொள்கிறோமா?

         அன்பு எதையும் சகிக்கும்


         தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு conversion , ஆங்கிலத்திருந்து ஹிந்தி மொழி conversion செய்துக்கொள்கிறோம்.  
  
       வீடியோ file  to  audio  file  conversion , word to pdf  , pdf to word  conversion என்று வசதிகளை தேடிக்கொள்கிறோம்.

        ஒரு முக்கியமான உதவி, சிலரை பார்க்க பேச தோனுகிறது,  சிலரை பார்க்க பேச அசட்டை பண்ணுகிறது. 

      ஒரு வேலைக்காரன் மேனேஜரை பார்த்து டே இதை செய்யுடா? என்றோ,

     ஒரு அம்மா மகனிடம் டே தண்ணிக்கொண்டு வாடா என்றோ சொன்னால்

     ஒன்றை ஈசியாகவும் , ஒன்றை வெறுப்புடனும் எடுத்துக்கொள்வது ஏன்?

      தண்ணிக்கொண்டு வாடா என்று சொல்லப்பட்ட மகன் வேறு யாருமில்லை இதை செய்யுடா என்று வேலைக்காரனால் சொல்லப்பட்ட அந்த மேனேஜர் தான்.     

    ஒரு ஐந்து, ஆறு தலைமுறைக்கு முன்னர் வேலைக்காரர் , மேனேஜர் முன்னோர்கள் சம்பந்திகள்

     ஏன் நாம் ஒரு உதவி கோருவதை தனக்கு நெருங்கிய அம்மா, அண்ணன் சொன்னதாக convert செய்து உதவி செய்தால் என்ன?

    அந்த உதவி கோரியது பார்க்க, பேச பிடிக்காத மதிப்பு குறைந்த ஆளாக இருக்கலாம்.      

     ஏன் நாம் ஒரு உதவி கோருவதை தான் பார்த்து, பேச பிடித்த நெருங்கிய அப்பா, மனைவி சொன்னதை, மதிப்புக்குறைவாக கருதுவோரை வெறுப்பதை போல செய்யாமல் வெறுக்கும்படி convert  செய்து மறுதலித்தால் என்ன? 

     பார்த்து, பேச பிடித்த நெருங்க்கிய அப்பா, மனைவி செய்ய சொன்னது ஒரு சமுதாயத்திற்கு பெரிய தீங்கை ஏற்படுத்தும் கோரிக்கையாக இருக்கும்பொழுது?

    convert பண்ணுவதில் மனிதநேய technology வளர்ப்போமே.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty ஆற்றில் தண்ணீர் வருமா?

Post by ராஜேந்திரன் Mon Aug 04, 2014 5:12 pm

ஆற்றில் தண்ணீர் வருமா?

ஆற்றிலே ஒரு காலு, சேற்றிலே ஒரு காலு

             இப்படி இருந்தா, எதுல மாட்டிக்குவோம்

ஆற்றிலே எந்த அளவுக்கு, தண்ணீர் வருகிறதோ

            உழவனுக்கு வேண்டிய வயலுக்கான சேறு, ஆற்றிலிருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ந்து நிரப்புவதை பொறுத்து, அமையும். 


           சேறு அமைவதும், அமையாததும், ஆற்றில் வரும் தண்ணீர், கால் உயரத்தை விட போதுமான அளவு அதிகமாக, வேண்டும். குதிகால் உயரம் கூட, தண்ணீர் வரவில்லையென்றால், ஒரு திட்டம் உதவும். கொஞ்சம் வறண்டு இருந்தால் ஊற்று, உதவும்.

         நிலத்தடி நீர் நிலைகளை பாருங்கள். 

          ஆறு ஓடும் உயரமும், வயல் இருக்கும் உயரமும் எந்தளவிற்கு ஏறி இறங்குகிறது.

         சமுதாயத்திற்கு சந்தோசம் அமைவது மனித உள்ளங்களின் ஏற்ற, இறக்கங்களின் பாடுதான்.  மூழ்கி எதிர்த்து நீந்தனுமே.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 05, 2014 11:40 am

அருமையான பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty எங்கும் பல ஒரே வழிகள் தானா?

Post by ராஜேந்திரன் Thu Aug 07, 2014 9:13 pm

எங்கும் பல ஒரே வழிகள்  தானா?

வணக்கம் கே. இனியவரே

               நகர்களில் உள்ள வீடுகளை கண்டறிய வழி கேட்கிறோம். அந்த சரியான வழியை கண்டறிய எங்கெங்கு விசாரிக்கிறோம்.

              வயிற்று வலியின் வழியை கண்டறிய எவ்வளவு முயற்சி எடுக்கிறோம்.

               நம்முடைய கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால், தலை, இடுப்பு, பாதம், அணியும் உடை, அணியும் செருப்பு, நடையின் பல முக கோணங்கள், ஸ்டைல், உணவு, உள்ளத்தின் உணர்வுகள், பேச்சு,

             எதிர் பேச்சு, விட்டு கொடுக்கும் பேச்சு (விட்டு கொடுக்கிறோமோ இல்லையோ ஆனால் அப்படி ஒரு ஸ்டைல்), வித விதமான வேலைகள், படிப்பு (பார்த்து, கேட்டு), மனப்பாடம் செய்தல், பாடல்,

               கதை சொல்லுதல், கதை கேட்டல் (ஆம் என்றும், ஏன் என்றும், ம் என்றும் பழகுதல்) , மற்றவரிடம் சண்டை போடுதல், மற்றவரிடம் சமாதானமாய் பேசுதல், கிள்ளுதல், இதமாய் தடவி கொடுத்தல்,

                உணவு பழக்கம், உறங்கும் பழக்கம், கண் விழிப்பு, பாலுணர்ச்சி மேம்பாடு, மருந்துகள், குளியல், காற்றில் பழகுதல், வெப்பத்தில் பழகுதல், ஓய்வு, உறைவிடம், பயணங்கள், குறு குறுப்பு, பயம் 

                இப்படி பலவித கோணங்களில் வழிகளை விசாரித்து கண்டறிந்து இளைப்பாறினால் வயிற்று வலி  என்று மட்டும் அல்ல எல்லா வலிகளையும் ஒரு வழிக்கு கொண்டு வரலாம். 

           மருத்துவ சிகிச்சையை வேண்டும் என்றால் விழ போகும் நிலையில் இருந்த பணம் பழத்தை காக்கை உட்கார பணம் பழம் விழுந்ததா எடுத்துக்கொள்ளலாமே, ஏன் அதற்கும் ஆபரேஷன்....

            ஆம். தொப்பை ஒரு சரியான வயிற்று வலி, கண் ஒடுங்கி சரியான ஒடுக்க நஷ்டம்.

             ஏயான் , ஏமா  தண்ணீ அடிக்கிறவர் லாம் இதுதான் சொர்க்கம் என்று நினைக்கும்பொழுது

              நல்ல பழக்க வழக்கங்களில் மெஜாரிடி யாக இருந்தா அந்த குடி சொர்க்கத்தை விட சிறந்து இருக்காதா?

             வாழும் கலை பயிற்சி வாழ்க வளமுடன்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty குரூப் தம்பதியர்...

Post by ராஜேந்திரன் Fri Aug 08, 2014 3:52 pm

குரூப் தம்பதியர்




            பகவான் ராமருக்கு ஒரு மனைவிதான்.  பகவான் ராமரின் தந்தைக்கு சொல்லும்படியாக 3 மனைவிகள். என்ன பெருமை பகவான் ராமரின் முன்னோர்கள் எல்லாம் ஒரு மனைவிக்காரரா?




             ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தவர் இயேசு ராஜா .  பல தலைமுறைக்கு முன்னாள் உள்ள இயேசுவின் தாத்தாவான ஆபிரஹாமுக்கு 2 மனைவிகள்.   என்ன பெருமை இயேசு ராஜாவின் முன்னோர்கள் எல்லாம் கன்னியரா?




           கன்னி, ஒரு மனைவி, இரு மனைவி என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 13, 2014 3:19 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty கடவுள் சைவமா? அசைவமா? எதை ஆதரிக்கிறார்?

Post by ராஜேந்திரன் Tue Aug 19, 2014 4:03 pm

கடவுள் சைவமா? அசைவமா? எதை ஆதரிக்கிறார்?

             சைவம்தான் ஏற்புடையது என்றால் சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இறைச்சியை உணவாக அளித்திருப்பது ஏன்?     அறிவில்லாமலா அனுமதித்திருப்பார்.

             அசைவமாகிய சிங்கத்தையும் அதில் அமர்ந்திருந்து அதில் காட்சியளிபது ஏன்?

             அசைவம்தான் ஏற்புடையது என்றால் ஆடு போன்ற விலங்குகளுக்கு புல்லை உணவாக அளித்திருப்பது ஏன்? அறிவில்லாமலா அனுமதித்திருப்பார்.

             சைவமான பசுவை (கோமாதா) அதில் சாய்ந்திருந்து அதில் காட்சி அளிப்பது ஏன்?

              மீன் கழிவையும் உண்கிறது, கடல் பாசியையும் உண்கிறது.

             மீனை போல நாமும் கழிவை உண்டு உயிர் சத்துக்களை உண்டால் என்ன?

             கழிவை சுவாச உணவாக உண்டால் என்ன? கழிவை நறுமணமாக மாற்றி நல்ல சுவாசத்திற்கு உணவாக்கிடுவோம். 

            (சுற்றுச்சூழல் மாசுபாட்டை அகற்றி சரி செய்ய ஒரு கை பார்த்திடுவோமே)
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty கண்ணுக்கு கண்-பல்லுக்கு பல்.

Post by ராஜேந்திரன் Thu Aug 21, 2014 7:42 pm

கண்ணுக்கு கண்-பல்லுக்கு பல்.

            ஒருத்தருக்கு ஒரு கண் போனால் அடுத்தவருக்கும் ஒருக்கண் போகனும் என்றோ, ஒருத்தருக்கு ஒரு பல் போனால் அடுத்தவருக்கும் ஒரு பல் போகனும் என்றோ அர்த்தம் அல்ல.

              ஒருவர் மற்றவர் கண்ணை பாதிக்கச் செய்தால் மற்றவர் கண்ணும் பாதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் அல்ல.


              அப்படி பாதிக்கச்செய்து விட்டால் பாதிப்படைந்தவர் கண் சரியாகி விடுமா?  

               தவறை உணர்ந்து இரண்டு பேரும் நல்ல முறையான ஒப்புரவாகி எந்தளவுக்கு நன்மை கிடைக்க வேண்டுமோ அதற்கு முயன்றால்தானே நல்லது. 

              கண் போன அவருக்கு தான் அவருக்கு செய்த தவறை உணர்ந்து இவர் கண்ணாக இருந்து உதவ வேண்டும் அதைத்தான் கண்ணுக்கு கண்.

             ஆம்.  தன்னால் மற்றவர் கண் பார்வை இழக்கும் அளவுக்கு தான் தவறு செய்திருந்தால், கண் பார்வை இழந்த அவருக்கு, கண் இல்லாமல் செய்ய முடியாத பணிகளை,  தான் எவ்வகையில் உதவ முடியுமோ தன் கண் பார்வையை கொண்டு அவருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து உதவ வேண்டும். 


             இவ்வுதவி எத்தனை சதவிகிதம் வேண்டும் ஆனாலும் இருக்கலாம், ஆனால் உதவாமல் இருக்காதே.

           பல் எல்லாம் தன்னால் மற்றவருக்கு விழச்செய்து விட்டால், தான் உணவை அவருக்கு மென்று குடுக்கலாம் அல்லது மசித்தோ, திரவ ஆகாரமாகவோ  அவருக்கு தந்து உதவலாம்.        

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 22, 2014 10:57 am

தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty விட்டு கொடுக்குறத விட்டு கொடுக்கனும்

Post by ராஜேந்திரன் Thu Aug 28, 2014 8:16 pm

விட்டு கொடுக்குறத விட்டு கொடுக்கனும்

வாழ்க. தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே.

           ஆபத்துக்கு உதவலாம்.

           ஆனா, உதவுரதே ஆபத்தாகக் கூடாது.  

           சில கையேந்துபவர்களும், பிச்சை கேட்பவர்களும் இப்படித்தான்.

           செய்து முடிகிற நிலையில் தம்மை தவிர்க்கும் நிலையில் உதவி
           கேட்பதையே ஒரு குணமாக கொண்டிருக்கக்கூடாது.


           இதனால் முயல மாட்டோம் பிறகு ஏன் நமக்கு அறிவு, கை, கால்
           எல்லாம்.  

            விட்டு விட்டு கொடுக்கனும், விட்டு விட்டு கொடுக்கனும்
            என்றால்

             பிரச்சனை வந்தால்தானே விட்டு கொடுக்கனும். 

             விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து, விட்டு கொடுக்கிறதே
             பிரச்சனையை தந்துட்டா. 

              ஆகவே விட்டு கொடுப்பதை, விட்டு கொடுப்போமே விட்டுகொடுப்பது அவசியமில்லாத அளவுக்கு நிறுத்த.


               எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வு இருக்கும் அன்பர்களே.

               இன்னொரு முறையா ஆண்டவர் இந்த பூமியை உருவாக்க         
                போகிறார்.

இல்ல, இன்னும் இந்த மனிதனுக்கு நோய் நொடி, கவலை,  ஏமாற்றம் போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்க சில மூலிகைகளை

இப்பூமியில் படைக்க தவறிட்டேன் , சில கனிம, கரிம, உயிரின, உணவு, வேதி பொருள்கள் படைக்க தவறிட்டேன் என்றா என்று தம் படைப்பில்

தவறு நேர்ந்து விட்டது என்று உடனடியாக step எடுக்க இறைவன் தயாராகிறாரா?

            இதுவரை படைத்தவைகளுக்கு போராட்டத்திற்கான நல்ல தீர்வுகளையும் உருவாக்கி வைத்து விட்டு அடுத்த காரியத்தில் ஈடுபட மாட்டாரா? 

            நாம் மட்டும் எதிர்காலத்திற்கு இன்சூரன்ஸ்க்கு மேல இன்சூரன்ஸ் வருமுன் காப்போம்.  ம் safety .

            முதலில் நம்மை உணர்வோம்.  பிறகு என்ன?

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ந.க.துறைவன் Fri Aug 29, 2014 5:25 pm

புதுமையான சிகிச்சை வளரட்டும்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 30, 2014 1:47 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty ஆசிரியர் தினம்

Post by ராஜேந்திரன் Fri Sep 05, 2014 4:20 pm

வலியும் வழியும்  (மனித உறுப்புகள்)

கற்பித்தலால் மாணவருக்கு தலைவலியா? தலையாய வழியா? (தலை)

கற்பித்தலால் பாடத்தை முடித்ததன் வலியா? முடிந்ததன் வழியா?  (முடி)

சந்தேகத்தை தயங்குதலால் வலியா? மனதில் தங்குதலின் வழியா? (மனம்)

பாடத்தை கவனிக்காததால்  வலியா? கவனத்தின் வழியா? (கவனம்)


படிப்பு அமைவது போட்டியின் வலியா? போற்றுதலின் வழியா? (பொறாமை, பொறுமை)

கற்பித்தல் அவசரத்தின் வலியா? சுவாரசத்தின் வழியா? (சுவாசம்)

கற்பித்தல் அமைவது படிப்பின் வலியா? பயின்றதன் வழியா? (அனுபவம்)

கற்பித்தல் அமைவது வாதத்தின் வலியா? வார்த்தலின் வழியா? (கீழ்படிதல்)

பாடம் தேங்குதலால் வலியா? மனதில் ஏங்குதலின் வழியா? (குப்பை)

சந்தேகம் துண்டிப்பின் வலியா? சந்தேகம் துடைப்பின் வழியா? (அக்கறை)

விளக்கங்களை நீட்டுதலின் வலியா? விளக்கங்களை காட்டுதலின் வழியா? (முகம்)

புரியாமை இருக்கிறதன் வலியா? புரியாமை இறுத்தலின் வழியா?

புரியாமை உருத்துதன் வலியா? புரிவதை உறுத்தும் வழியா?  (நெரடல்)

புரியாமை தப்புவதன் வலியா? தப்பியதன் வழியா? (பிழைப்பு)

விளக்கங்கள் மறந்ததன் வலியா? மறவாததன் வழியா? (மூளை)

வகுப்பில் ஒழுக்கங்கள் நெரிக்கட்டலின் வலியா? நெறிக்காட்டுதலின் வழியா? (தொடை)

ஆசிரியர் மாணவரிடையே இடைவெளியா? இடைவேளையா? (அந்நியோனியம்)

ஆசிரியர் மாணவர் உறவு வலுத்ததா? வழுவாததா?  (நெருக்கம்)

பயில்வதில் தேக்கத்தின் வலியா? ஆக்கத்தின் வலியா?

விளக்கங்கள் சொல்லாததன் வலியா? சொல்லின் வழியா?

சிந்தனைகள் தப்புவதன் வலியா? தற்காப்பின் வழியா?

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty ராணுவ வீரம்

Post by ராஜேந்திரன் Wed Sep 10, 2014 8:18 pm

மதிப்பிற்குரிய ந.க.துறைவன் மற்றும் மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்) தங்களின் பதிலுரைகளுக்கு நன்றி.

ராணுவ வீரம்

             அண்டை நாடுகள், நம் நாட்டின் எல்லையை மீறி, நம் இறையாண்மையை கெடாதபடி பாதுகாக்க, மக்கள் ஆதரவுடன் அரசும், ராணுவ வீரர்களும் செயல்படுகிறார்கள்.

            அதுபோல் நம்மை அண்டி வரும் நோய்கள், நம் ஆரோக்கிய எல்லையை மீறி, நம் ஆரோக்கியத்தை கெடாதபடிக்கு பாதுகாக்க, இயற்கையின் ஆதரவுடன் மனதும், உடலும் ஆரோக்கிய வீரர்களாக செயல்பட்டு இறைவனுடன் உறவு கொள்ள ஆற்றலை பெறவேண்டும்.  

           செக்ஸ் ஒரு புனிதமானது என்கிறார்கள், அதை முரண்பாடாய் பயன்படுத்தும்பொழுது அந்த புனிதம் கெட்டுவிடுகிறது.


           கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனை தர வேண்டும் என்கிறோம். இந்த குற்றம் செக்ஸ்ஐ முரட்டுதனமாய் பயனபடுத்தியதாய் இருக்கிறது.

           சாமியார்கள், துறவிகள் என்று சொல்லி, புனிதத்துவமான செக்ஸ்ஐ முறைப்படி பயன்படுத்தாமல் இருக்கிறார்களே, இவர்களை ஏன் அனைவரும் மெச்சி கொள்கிறார்கள். நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளாத வகையில் கற்பழிப்பு போல மாற்றான குற்றம் அல்லவா?

            இதை குற்றம் என்று சொல்லுவதா? குற்றமில்லாத உயர்வானது என்று சொல்லுவதா?

             உயர்வானது என்றால் மக்கள் எல்லாம் குற்றவாளிகளா, சாமியார், துறவிகள் போல உயர்வடையவில்லை என்று?

             வச்சா குடுமி, சரைச்சா மொட்டையா? normal ஆக இருக்கலாமே.   
 
            தீர்க்க சுமங்கலியாய் இருக்கனும் என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தராமல் ஒரு துணையோடு மட்டும் அமர்த்தலாமா?


           இறைவன் நமக்கு ஏன் இரண்டு கண், இரண்டு கால், இரண்டு கை மட்டும் கொடுத்திருக்கிறார். 

            தான் கைப்பட, நேரிடையாக பலருக்கு தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல நூறு கண், பல நூறு கால், பல நூறு கை போன்றவைகளை தன் விருப்பத்திற்காக மனிதன் தான் ஒருவருக்கு மட்டும் இறைவன் தருவாரா?

            அறிவைக்கொண்டு நாம் பலரோடு சேர்ந்து பலருடைய கண், பலருடைய கைகளாக பல நூறு கண், பல நூறு கைகளாக சேர்ந்து செயல்படுகிறோம். 

             முக்கியமான செக்ஸ் உறுப்பு ஒன்றுதான் உள்ளது பலருடன் செக்ஸ் வேண்டுமென்று சொல்லியா இறைவன் நமக்கு முக்கியமான செக்ஸ் உறுப்பு பலவற்றை இறைவன் அனுமதித்திருக்கிறாரா?

               கற்பைக்கொண்டு நாம் தற்கால சூழலுக்கு ஏற்ப பல குருப் தம்பதியர்களாக உதவி செய்துக்கொள்வதிலும், ஆபத்தை விளைவிக்கும் வசதிகளை குறைத்துக்கொள்ள வேண்டி சுற்றுச்சூழலை காக்கும் விதத்தில் குழந்தைகளை பெற்றுக்கொண்டால் என்ன?

             நான்கு பேருக்கு ஒரு குழந்தை.   மக்கள் பெருக வேண்டும் என்று சூழல் வரும்பொழுது எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயம் செய்து பெருக்கிக்கொள்ளலாமே.


             அல்லது சுற்றுச்சூழலை கெடுக்கும் வசதிகளை குறைத்து ஒடுங்கி வாழ்வோம்.
     
             ஒருவனுக்கு ஒருத்தி என்பது நல்லது என்றால்,  குரூப் தம்பதியர் நல்லதல்ல என்று எவ்வகையால் சொல்ல முடியும்.  அதிலும் நன்மைகள் இருக்கிறது நல்ல திட்டமிட்டால்.

             இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுரை தூங்கி கொண்டிருக்கிறதா?

              இக்காலம், அக்காலம் போன்று மாறாமல் இருக்கிறதா?

               பெரிய குரூப் தம்பதியர் திட்டம் தற்பொழுது வேண்டாத நிலைதான்?

                ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதுதான் நல்லது, திருமண நாட்டம் இல்லாத துறவி என்று இருப்பதுதான் நல்லது, குரூப் தம்பதியர் என்று இருப்பதுதான் நல்லது, பெரிய குரூப் தம்பதியர் என்று இருப்பதுதான் நல்லது என்று கருதுவது அவரவர் சுதந்திரம்.


                ஒருவர் சுதந்திரமும், மற்றவர் சுதந்திரமும் சங்கமிக்க வேண்டும்.  அது சுற்றமும், சுற்றுச்சூழலும் நன்முறையில் காக்கப்படுவதில்தான் இருக்கிறது.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 11, 2014 8:33 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty சுகர்

Post by ராஜேந்திரன் Mon Sep 22, 2014 6:22 pm

சுகர்

         விளக்கு, கற்பூரம், மெழுகுவர்த்தி என்றெல்லாம் எரியவிடுகிறோம் சாமிக்கு,

          அதுபோல் நாம் உண்ணும் உணவை நல்ல கலோரி சக்தியாக எரிந்தால் தானே நல்லது.

          அப்படி எரியும்பொழுது அது சந்தோஷ உழைப்புக்கு (மனம்+உடல்) பயன்பட்டால் நாம் பிறந்ததன் அர்த்தம் புரியும் அல்லவா.  

            நாம் சந்தோசமாகவே இருக்கக்கூடாது என்று இறைவன் விரும்புவாரா?


             பிறகு ஏன் நாம் கடவுளிடம், இது எனக்கு நடைபெற்றால் இந்த கடினமுள்ளதை இறைவனுக்கு செய்வதாக அர்ப்பணிப்பேண் என்று கஷ்டப்பட்டு பொருத்தனை செய்துக்கொள்வது ஏன்?

             சரக்கு என்று சொல்லி, தண்ணி அடிப்பவர்கள், சந்தோசம் என்று அவர்களே தண்ணி அடிப்பதை எண்ணும்பொழுது,

             இறைவன் தண்ணி அடிப்பதை எந்த அளவுக்கு தடை பண்ணுகிறார்.

             இப்படியெல்லாம் தண்ணி அடிப்பவர்களே அதை சந்தோசம் என்று நினைக்கும்பொழுது, நாம் இறைவனுக்காக நல்லப்பழக்கவழக்கங்களுடன் இருக்கும்பொழுது சந்தோசம் தருவதை தடைப்பண்ணுவாரோ.

              நாம் இறைவனுக்காக எதைத்செய்தாலும் சந்தோசத்துடனே செய்யும்படி நம்மை தயார் செய்வது இறைவனே.  

              இதை எப்படி உணரலாம் என்றால் நாம் கடவுளிடம் எவ்வளவுக்கு எவ்வளுவு உண்மையாக இருக்கிறோம் என்பதை பொறுத்துதான்.  முடியல என்றால் முடியவில்லை என்று open ஆக இறைவனிடம் சொல்லனும்.

கெட்டவன் என்றால், நான் இவ்வளவுக்கு கெட்டவன் என்னை மாற்றும்  என்று தன் மனதில் பட்டதை, மனதில் பேசும் இறைவனிடம் open  ஆக சொல்லனும்.

               கடினம் என்று ஒன்றும் இல்லை.  கடினத்தை நிறுத்துப்பார்த்து அதை சமாளிக்கும் தகுதியை வளர்த்துவிட்டால்.  கடினம் என்று சொல்வது இல்லைதானே. 


              கடினத்தை உச்சரிக்கும் நிலை அது எளிமையை செயல்படுத்தும் தகுதி குறைவுபடுவதை பொறுத்துதான் அமையும்.

              இறைவன் நம் குறைவை நிறைவாக்குவார். அறிவில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்.


சாமிக்கு, தீபங்களை எரிய வைப்பதெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம்

நாம் உண்ணும் உணவை நல்ல சக்தியாக எரிய வைக்க தெரிந்திருக்கிறோமா.  

நம்ம முதுகில முதல்ல என்ன இருக்கு என்று பார்க்காமல் விடுவதென்ன?    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 29, 2014 3:11 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty எண்ணம்போல் தீர்வு (எண்ணம்போல் வாழ்க)

Post by ராஜேந்திரன் Mon Sep 29, 2014 6:13 pm

எண்ணம்போல் தீர்வு (எண்ணம்போல் வாழ்க)

           பசியுடன் இருக்கும்பொழுது, நமக்கு விருப்பமான உணவு கிடைத்தால் என்ன செய்வோம்.

            கையில் எடுத்து ஒரு கை அளவு சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் சாப்பிட நினைக்கும்பொழுது

            1.   TV நியூஸ்ல ஒருவர் தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி வருகிறது
            இப்பொழுது உடனே சாப்பிடுவதை நிறுத்துவோமா?

            2.  உயிருக்கு உயிரான அம்மாவோ, துணைவரோ, மகனோ, மகளோ, நண்பனோ, தலைவரோ

             தன் வாயிலிட்ட உணவு தொண்டையில் இருக்கும்பொழுது  மேற்குறிப்பட்ட அன்பர்களில்  யாரோ  ஒருவர் இறந்துவிட்டால் உணவை விழுங்கிடுவோமா?


             3. விருந்து உண்ணும்பொழுது விருந்தளிப்பவர் நம்மை அவமானப்படுத்தும்படி பேசிவிட்டால்

             நாம் உடனவே வாயிலிருந்த உணவை துப்பிவிட்டு கோபப்படுவோமா?
  
         இப்படி நாம் சாப்பாட்டை நிறுத்துவதோ, உடனே நிறுத்துவதோ, தொடர்வதோ அமைவதற்கு சம்பவ காரணிகளின் முக்கியத்துவ நிலைமையை பொறுத்து இருக்கிறது. 
 
       எப்படிப்பட்ட முக்கியத்துவம் என்று நிர்ணயிப்பது நாம் எண்ணுவதில் இருக்கிறது. 

       இந்த சம்பவங்களே நிகழாமல் ஒரு பயிற்சியை மேற்க்கொள்வதுபோல எண்ணத்தால் மட்டும் நிகழ்வதாக கருதி

         நாம் சாப்பாட்டை நிறுத்துவதோ, உடனே நிறுத்துவதோ, தொடர்வதோ முடியாதா? 

      ஏனெனில் நம் அடிமைத்தனங்களான மதுபானம் அருந்துவது, புகை பிடிப்பது, கெட்ட வார்ததைகளை பேசுவது, கெட்ட கோபம், அபகரிப்பது, திருடுவது, 

          மற்றவரை கொடுமைப்படுத்துவது, கெட்ட செயல்கள் இவைகளை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பல கடினமான தண்டனைகள் நமக்கு நிகழ்ந்தால்தான் நாம் நிறுத்துவோமா?

     இச்சம்பவங்கள் நிகழாமலே, எண்ணங்களால் நாம் பயிற்சி மேற்கொண்டு தீயச்செயல்களை உதறினால் என்ன? 

    நமக்கு நெருங்கியவர்களுக்கோ, நமக்கோ, பூகம்பம், வெள்ளம் பாதிப்பு தினந்தோறும் நடந்தால்தான் பரிதாபப்படவேண்டிய உணர்வு வருமா?  இல்லை இந்த நிகழ்வுகள் ஒருக்கட்டதில் போரடிக்குமா?


     ஒரு திருந்த வேண்டிய நல் உணர்வு வரவேண்டுமானால் வாழவும் முடியாம, சாகவும் முடியாம கொடுமைகள் நடந்தால்தான் திருந்துவோமா?

       சில உதாரணங்களை கண்டு அதை தியானமாய் ஆய்ந்து, அறிந்து நம் தீய குணங்களின் கட்டுகளை உடைக்கக்கூடாதா?

      அறிவை எந்தளவுக்கு நாம் முடக்கி வைத்திருப்போம்.

தன்னை அறியாமலே அதிகமாக உண்ணுவதற்கு எந்தச்சூழல் தேவைப்பட்டது.

தான் கிறிஸ்தவ நாடு,  தான் முஸ்லிம் நாடு, தான் புத்த நாடு, தான் இந்து  என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள்

அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்க வில்லை என்று அழிவுதரும் பேராயுதங்களோடு ஒருவரை, ஒருவர் கொண்டு பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆசைப்படுவது ஏன்? 

இந்த நாடுகளின் மதங்கள் எத்தகைய வளர்ச்சியடைந்துள்ளன, அன்பை கையாளவில்லையே, தான் நாடு இந்த மத நாடு என்று சொல்லி  என்ன பெருமை.

எல்லை பிரச்சனைக்காக விட்டுக்கொடுக்கும் நோக்கில் போட்டிபோட்டுக்கொண்டு,


அவரவர் நாட்டு பிரதமரோ, அதிபரோ, ராணுவதளபதிகளோ, ராணுவவீரர்களோ, மக்களோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ

மற்ற நாடு தவறை உணரவேண்டும் என்று சொல்லி நான் இக்கருத்தை வலியுறுத்தி இரண்டு நாள் உண்ணாவிரதம் இருக்கிறேன், மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அமைதி போராட்டம், பேச்சு வார்த்தை நடத்தி 

அமைதியான முறையில் தனது மதத்தில் உள்ள அருமையான அன்பை வெளிப்படுத்த போட்டிபோடுகிறார்களா? 

அன்பை சொல்லாதவைகள் வல்லரசு அல்ல, வளர்ந்த நாடு அல்ல, வளர்ச்சியடைகிற நாடு அல்ல.

அன்பில்லாதவன் மனிதனே இல்லை, பெருமைக்கொள்ளும் நாடுகளில் மனிதர்கள் இருக்கிறார்களா, பச்சிளம் குழந்தைகளாக இருக்கிறார்களா? 

மனிதன் என்பதற்கு அன்பில் ஒரு மெச்சூரிட்டி வயது வேண்டும் குழந்தை நிலை அகன்று.  அது ஆண்டுகளின் வளர்ச்சியல்ல.  அன்பில் ஆண்டு (ஆட்சி)  கொள்ளும் வளர்ச்சியில். 

உடல் வளர்ச்சியில் அல்ல, மன வளர்ச்சியில்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 17 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum