தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Today at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா

Go down

நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா   Empty நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா

Post by eraeravi Sat Aug 07, 2010 11:13 pm

நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா
ஆசிரியர்:கவிஞர் இராம் மோகன்

நுழைவாயில்:
தேசம் எனும் வட்டத்திற்குள் சுழன்று வரும் 'யாரிவன்?' - எனும் கவிதை நூல்,
'இந்தக் கவிஞர் யார்?' என்பதனை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர்
அற்புத நூல். நீள்கவிதை, குறுங்கவிதை, புதுக்குறள், வழக்காடு மன்றம் என
சற்றே வித்தியாசமான கலவையுடன், அவ்வப்போது அந்நிய மொழியாம் ஆங்கிலமொழியின்
தலை காட்டுதலுடன் புத்தகங்களின் பக்கங்கள் நகர்கின்றன.


நரம்போட்டம்:

நிலமகளும் வானமகளும் கை கோர்க்கின்றனர் இந்நூலின் பல பக்கங்களில்,
தேசத்தைப் பற்றிய கவிஞரின் உள்மனத் தகிப்பு கவிதை நூலில் தீக்கங்குகளாய்க்
கொட்டுகின்றன. ஆம்! 'சமூகம்' குறித்த அவரது மனக்குமுறல்கள்
கதிர்வீச்சுக்களாய்ப் பாய்கின்றன பக்கம் பக்கமாய். கவிஞரின் கரங்களில்
கடவுள் பந்தாடப்படுகின்றார்! சில நேரங்களில் பக்கவாத்தியமும்
வாசிக்கின்றார் 'சாபக்கேடுகள்' - கவிதை நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்ட
'நச்'- என்ற கவிதை. தகவல் களஞ்சியத்தை மிஞ்சுகின்றது கவிஞர் இராம் மோகனின்
'அகவல் களஞ்சியம்' எனும் தலைப்பில் அமைந்த கவிதை. "வாய்பேசுகிறது" -
கவிதையைப் படித்த எவரும் திருந்தாமற் போவதற்கு வாய்ப்பே இல்லையெனலாம்.
"ஒளிப்பரிமாற்றமா? சில்லறை பரிமாற்றமா?" திகைக்க வைக்கிறது "வானம்"- எனும்
கவிதை. "இருந்தென்ன" - எனும் தலைப்பிலான கவிதை குறைகளையும், கறைகளையும்
பட்டியலிட்டாலும், மனதிற்கு நிறைவான கவிதை. ~இருப்போரும் இல்லாதவரும்"
கவிதையோ இத்தொகுப்பில் ஈடு இணையற்ற கவிதை. குறியீட்டு உத்தியில்
"தூக்குமரங்கள்" - எனும் கவிதையும் படிம உத்தியில் "உறவும் பிரிவும்" -
கவிதையும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதயப்பகுதி:
வயலைப் பொற்கொல்லனாக எண்ணி ஒப்பிட்டுப் பார்க்கும் கவிஞனின் பார்வை
பாராட்டத்தக்கது. பாரதி பக்கத்திற்குப் பக்கம் உலா வந்து இந்த நூலுக்கு
உயிரோட்டம் அளிக்கின்றார். ஜல்லிக்கட்டும் பெண்களின் புகுந்த வீட்டு
இக்கட்டும் கவிஞரால் கவினுறப் பொருத்திக் காட்டப்பட்டுள்ளது. எய்ட்ஸ்
நோய்க்கு மலர்வளையம் வைக்கக்கோரும் கவிதை உண்மையிலேயே ஓர் உருப்படியான
கவிதை. வறுமையை கூட அழகியல் உணர்வோடு சொல்லிச் செல்லும் கவிஞரின்
சாமர்த்தியம் இதோ!


"ஒழுகும் மழைநீரை வரவேற்க
என் வீட்டில் நடக்கும்
பானை அணிவகுப்பைப்
பார்க்க வர்றேளா?" (ப.30)


ஆச்சர்யமும் வினாக்களுமாக கவிஞரின் கவிதைகள் அனைத்தும் முடிக்க
மனதில்லாமல் முடிக்கப்பட்டிருக்கின்றன இந்நூலில். காலத்திற்கும்
இடத்திற்கும் தகுந்தாற்போல ஆங்காங்கே கவிதையைச் சமர்ப்பணம் செய்திருக்கும்
விதத்தில் அவரின் சமூக அக்கறை, நன்றியுணர்வு புலப்படுகின்றது.


உதாரணத்திற்கு ஓரிரண்டு

நிறுத்தற் குறியீடுகள் பயணம் விடாமல் தொடர்கின்றன ஆதி முதல் அந்தம் வரை.
சிற்சில இடங்களில் நாட்டுப்புறப் பாடலின் வடிவம் பளிச்சிடுகின்றது.
கவிதையின் தலைப்புகள் சில, கவிநயத்தில் கவிதைகளையும் மிஞ்சுவனவாக உள்ளன. 'வெள்ளிரதம்', 'அட்டில் புகை', 'நகுக', 'பொழியாக் கருமுகில்'
என்பன உதாரணத்திற்கு இங்கே சொல்லப்பட்டத் தலைப்புக்கள். இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தார்'- என முன்னோர் சாதி குறித்துச் சொல்லிச் செல்ல,
கவிஞரோ


சம்பளம் வாங்குவோர் ஒரு சாதி
மற்றையோர் மறு சாதி"



என சமூகம் இரு சாதிகளை உள்ளடக்கியது என்கிறார்.

சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டும் வரிகள் இதோ!

"நாற்றங்காலை கருக விட்டு
அறுப்புக்கு ஆள் அனுப்புகின்றோம்"
(ப.38)


முற்றிலும் முரணான குறுங்கவிதை :

"கரிசல் காட்டில்
உலா வந்த
வெள்ளைப் புறா "
(ப.11)


மனதில் பதிந்த கல்வெட்டுக் கவிதை :

"யாருக்கும் தெரியாமல்
புக்ககம் போனவள்
வான வேடிக்கை
மேள தாள
நாதஸ்வரக் கச்சேரியுடன்
பிறந்தகம் வருகின்றாள்"
(ப.39)


எனும் கவிதையில் மழையும் மங்கையும் வாழ்வியல் முரண் நயத்துடன் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது.


மனமார....
சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் கவிஞர் இராம்மோகன் படைத்த 'யாரிவன்?' -
கவிதை நூலை வாசிப்போர் திருந்தியாகணும்! வாசிக்காதாரோ கண்டிப்பாய்
வருந்தியாகணும்! ரூ.40 விலையுள்ள இந்த நயமான நூலை இலக்கிய ஆர்வலர்
அனைவரும் வாங்கிப் படித்து பலன் பெறுங்கள்! அடுத்தடுத்து நூல்கள்;
அடுக்கடுக்காய் வெளியிட்டு நூலாசிரியர் இலக்கிய வானில் உலா வர மனமார்ந்த
வாழ்த்துக்கள்!. நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா   Icon_bounce
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நூல் :உள்த்திலிருந்து , திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
» நூல்:தானாய் கழிந்தது பொழுது , திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum