தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு - தாய்மை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

2 posters

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு - தாய்மை  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு - தாய்மை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 8:51 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு

தாய்மை

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

எழுத்து
டாகடர் மா.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை
தேசியக்கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616


பொருளடக்கம்

தலைப்பு பக்கம்
1. தாய்மை 1 - 6
2. காதல் 7 - 22
3. வீரம் 23 - 29
4. தத்துவம் 23 - 29
5. கற்பனை 44 - 49
6. சொல்வளம் 50 - 58
7. உவமை 59 - 66
8. உருவகம் 67 - 73
9. இயற்கை 74 - 79
10. அணிகள் - தொடைகள் 80 - 86
11. ஆடவர் கற்பின்மை 87 - 89
12. மகளிர்க்குக் கொடுமை 90 - 94
13. மகளிர் பண்பாடு 95 - 98
14. இசை 99 - 102
15. சோகம் 103 - 109
16. அரசியல் 110 - 114
17. மருத்துவம் 115 - 116
18. சினிமாவின் பயன் 117 - 118
19. சட்டம் 119 - 120
20. புராண இதிகாசச்
செய்திகள் 121 - 122
21. குடியின் கொடுமை மகிழ்ச்சி - 124
22. சமூக நிலை 125 - 128
23. தமிழ் 129 - 130
24. வரலாறு 131 - 132
25. மொழிக் கலப்பு 133 - 135
26. தேசிய ஒருமைப்பாடு 136
27. தொலைக்காட்சித்
தொடர்கள் 137
28. பிறகவிஞரைப்
போற்றுதல் 138
29. ஏழ்மை 139
30. அலர் 141 - 142
31. சாதி மதம் 143 - 144
32. பிறகாவியங்கள் 145
33. கருணை 146
34. பழமொழிகள் 147
35. பலதாரம் 148
36. பெருந்திணை 149
37. தூது 150


என்னுரை
இருபதாம் நூற்றாண்டு! தமிழ்க் கவிதை உலகின் ஒரு மறுமலர்ச்சிக் காலம்! அந்நியனுக்கு அடிமைப்பட்டு, விடுதலை உணர்வு கெட்டு, உறங்கிக் கொண்டிருந்த நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி விடுதலை உணர்வோடு சமுதாய உணர்வையும் இணைத்து ஊட்டிச் சென்றான் மகாகவி பாரதி !
பாரதியின் அடியினையொற்றி விடுதலை உணர்வு, சமுதாய உணர்வோடு தமிழின உணர்வையும் இழைத்து ஊட்டிச் சென்றான் புரட்சிக்கவி பாரதிதாசன்!
பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் அடியினையொற்றி திரைப்படம் என்ற திண்ணிய சாதனைத்தைக் கையிலே பற்றிக் கொண்டு, ‘பண்டைய இலக்கியங்களையும் இதிகாசங்களையும் புராணங்களையும் படித்தறிந்த புலவர்களாலே தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி பாமரர்களும் படித்துப் புரிந்து கொள்ளலாம்! இதோ!’ என்று பஞ்சு மெத்தையில் படுத்துறங்கிக் கொண்டிருந்த பைந்தமிழைப் பாமரப் பாய்க்குக் கொண்டு வந்து தவழ விட்டவர் கவியரசு கண்ணதாசன்!
கண்ணதாசனோடு தமிழ்க் கவிஞர்க் கருப்பை வற்றிவிடுமோ என்ற ஓர் அச்சம் தமிழர் உள்ளங்களில் எல்லாம் தலைதூக்கி வேரூட்டிக் கொண்டிருந்த வேளையில், கொடைக்கானல் மலைமுகட்டை நிமிர்ந்து நோக்கியபடியே வானத்தை விழித்துப் பார்க்கும் விழிகளோடு ஒரு கருப்பு உருவம் தரையில் தவழ்ந்து எழுந்து நின்றது. அது தான் வைரமுத்து என்ற வற்றாத கவிதையூற்று!
அந்தக் கவிதையூற்றில் கிராமத்து மண்வாசனை கரைந்து கலந்து மணம் பரப்புவதை சங்கத்தமிழ்த் தென்றல் ஊடுரூவிச் சென்று இங்கிதம் தருவதை உணர்ந்தேன்!
அந்த ஊற்றில் கொஞ்ச நேரம் நீராடலாமே, கொஞ்சம் அள்ளிப் பருகலாமே என்று எண்ணிக் கைகளை வைத்தேன். ஆகா! எத்தனை எத்தனை இன்பம்! எத்தனை எத்தனை சுகம்! அள்ள அள்ளத் தெள்ளும் தமிழ்ச்சுவை வந்துகொண்டே இருப்பதை உணர்ந்தேன்.
உடனே இந்தச் சின்னவனுக்குள்ளேயும் ஒரு சின்னச் சின்ன ஆசை எழுந்தது. அதன் விளைவு தான் இந்நூல்!
இன்றைய உலகில் படித்தவர் - பாமரர், செல்வர் - ஏழையர் என்ற எல்லா நிலையினரும் அனுபவிக்கும் ஓர் அறிவியில் சாதனம் திரைப்படம்! அந்தத் திரைப்பட ராஜாங்கத்தின் தனிப்பெரும் சக்கரவர்த்தியார்த் திகழும் கவியரசு வைரமுத்து அவர்கள் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
எனவே தான் இவ்வாய்வு முயற்சியில் ஈடுபட்டேன்! என்னுடைய ஆய்வு காயா? பழமா? என்பதை உங்களின் முடிஎவடுக்கே விடுகிறேன்.
நன்றி வணக்கம்!
இவண்
டாக்டர் மா.தியாகராசன்





கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு
தாய்மை
அன்பு என்பது அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவிக் கிடக்கும் பொதுப்பண்பு. அன்பு ஆசையோடு கலந்தபோது காதல் எனவும், பாசத்தோடு கலந்தபோது தாய்மை எனவும் வெளிப்படுகிறது. அத்தாய்மையின் வெளிப்பாடுதான் எப்படி எல்லாம் முகம்காட்டுகிறது. அம்முங்கள் தெளிவைத் தான் வைரமுத்து அவர்கள் திரைப்படப் பாடல்கள் வழி நமக்கு வழங்குகிறார்.
தாய்மையின் வெளிப்பாடுகள் எல்லாம் தாலாட்டின் வழியாகத்தான் அமைகின்றன. தாய்மை கொண்ட மகளிர் புனிதமாகக் கருதப்படுகிறார்கள். நெஞ்சறிந்து செய்யாத தவற்றால் ஒருத்தி தாயாக நேர்ந்துவிட்டால் அதற்காக அவளைத் தூற்றாமல் தேற்றுகிறார் கவிஞர்.
முழுகாத மகராசி அழுதாலே பாவம்
பெரியவங்க சொல்வாங்களே (1 - 36)
ஆறுதல் தொடர்கிறது.
பத்துமாதப் பூவரட்டும்
கண்ணுக்குள்ள நான் சுமப்பேன்
தொட்டிவிட்டால் நோகுமின்று
தோள்களிலே நாஞ்சுமப்பேன். (1 - 36)
இப்பாடல் யாருக்காகவோ பாடியதாகத் தெரியவில்லை. கவிஞரின் தாயுள்ளமே இதனைப் பாடுகிறது எனலாம்.
ஆயினும் பெண் உயர்ந்தவள் என்பதில் ஐயமில்லை. பத்துமாதம் சுமந்தெடுக்கும் துன்பம் இழையோடும் பேரின்பம் அவளுக்கு மட்டுமே உண்டு அவள் கோயிலாக மாறுகின்றாள்.
கருவில் தீபம் ஏற்றி - நானே
கோயிலாகிப் போனேன்
தாய்மை கொண்டதாலே - இன்று
ரெண்டு ஜீவன் ஆனேன். (2 - 163)
ஓருடலுக்குள்ளே இரண்டு உயிர்கள். இறைவன் விளையாட்டில் இது பெரும் விந்தையன்றோ!
தாயாக மாறிவிட்டாலும் அவளும் உணர்வுகள் குடிகோண்ட பெண் பிறவிதானே. இங்கே பருவத்திற்கும் பாசத்திற்கும் போராட்டம். அவனைத் தூங்க வைத்தான். ஆனால் அவன் தூக்கமோ மறைந்து போகிறது.
அவள் தூங்க வைத்தேன் அங்கே
என் தூக்கம் எங்கே
இந்த இரவு விந்துவிட வேண்டும்
இல்லை பருவம் கரைந்துவிட வேண்டும். (1 - 83)
‘‘காலைக்குச் செய்த நன்றென்கொல் என்கொலோ யான் மாலைக்இகுச் செய்த பகை’’ என வள்ளுவனையும் கவிஞர் தொட்டுக் கொள்கிறார்.
குழந்தை தூங்க வேண்டும் - தூங்க வைக்க வேண்டும்; ஏன்? தாயும் சற்று நேரம் உறங்க வேண்டும். அத்துடன் பாசமும் பாடலாய்ப் பொழிகிறது.
தாழம்பூவே கண்ணுறங்கு
தங்கத் தேரே கண்ணுறங்கு
ஆடி ஆயிரமாயிரம் பூவுறங்கு
அந்தப் பூவில ஆடிய தேனுறங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு - தாயுறங்க (1 - 83)
உன் அப்பன், அவன் தான் என் மச்சான் சும்மா இருப்பானா? அவசரப்படுவானே. தாய்க்குத் தெரியும்; குழந்தைக்குத் தெரியுமா?
மச்சானின் பாதிக்கண்ணு பாத்திருக்க
மாராப்புப் பொட்டுவச்சேன் பால் கொடுக்க
அடிபோதும் வீம்பு நீயும் தூங்கு (1 - 83)
கவிஞர் நம்மைச் சற்றே சிரிக்க வைத்து விடுகிறார்.
உலகில் வெளிப்படும் கண்ணீரில் தாயில் கண்ணீர் தான் உண்மையான கண்ணீர். ஏனெனில் அக்கண்ணீர் தன் சுகத்துக்காக வெளிப்பட்டதன்று.
அம்மாவே தெய்வம்
ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சைச் சுடும்.
.........
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை, குழந்தைக்காக அவள் படும் துன்பம் கொஞ்சமோ?
(1 - 60)
தாய்மையின் தவிப்பால் குழந்தையை எடுப்பாள்
பூக்களினால் முகம்துடைப்பாள்
சேலையின் தலைப்பால் காற்றினைத் தடுப்பாள்
காயம்படும் என நினைப்பாள்
துரும்பு விழுந்தால் முகஞ்சிவப்பாள்.
அவன் தன் மேனி கொடுப்பாள்
தன் கண்ணீரில் இனிப்பாள். (1 - 60)
குழந்தைக்காகத் தன்னையே கொடுத்து இணைக்கிறாள். விடுகின்ற உப்புக் கண்ணீரில் கூட அவள் இனிக்கிறாளாம்.
அத்தகைய தாய் அழுதால் இயற்கை கூட வாடும்.
தாய் விழி அழுதால் சூரியன் அழுமே,
பாறைகளும் கசிந்திடுமே (1 - 60)
எனவே அவள் தியாகங்கள் வானிலும் உயர்ந்து நிற்கின்றன என்பார் கவிஞர்.
அந்த ஆகாயம் சிறியதே
அவள் தியாகங்கள் பெரிதே (1 - 60)
ஏழ்மையிலும் தன் குழந்தையை பூமகனாகவும் சூரியனாகவும் எண்ணி விம்மலோடு தாலாட்டுகின்ற தாயையும் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாகப் பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை - உன்
தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூ மகனே
கண்ணுறங்கு சூரியனே. (1 - 6)
தன் கண்ணான கண்ணனை நீராட்ட அவள் கண்ணீரையே தேக்கி வைத்திருக்கிறாள்.
கண்ணிரு வச்சிருக்கேள்
கண்ணே உன்னை நீராட்ட (2 - 151)
அத்தகைய அன்னையர்க்கு இச்சமுதாயம் என்ன செய்யப் போகிறது? அழுகின்ற குழந்தையைப் பாலூட்டி உறங்க வைக்கலாம் அல்லது தாலாட்டி உறங்க வைக்கலாம். தாலாட்டுகிறாள்.
ஏனழுதாய் மகளே
ஏனழுதாயோ
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீயழுதாயோ
தொட்டில் இல்லையோ
தூக்கம் இல்லையோ (2 - 168)
‘இதயத்தில் உற்பத்தியாகும் ஒரு தாயின் கண்ணீர்’ எனக் காட்டுகிறார் கவிஞர். நெஞ்சுக்குள் சோகமெனும் தீ மூட்டித் தன் உள்ளங்கைகளில் சோறாக்கி இறக்கி வைக்கிறார். அம்மகன் எங்கே? அவளுக்கு யார் ஆறுதல் கூறமுடியும்?
கருவில் வந்த பந்தமெல்லாம்
கணக்குச் சொல்லவில்லை.
இடுப்பவிட்டுப் போன பின்னே
எனக்குச் சொந்தமில்லே
நெஞ்சுக்குள்ள தீ மூட்டி
உள்ளங்கையில் சோறாக்கி
இறக்கிவச்சேன்
மகனை மட்டும் காணவில்லை. (1 - 72)
எவ்வாறு அவள் தன் மகனை உறங்க வைப்பாள்? நீர்வழிப் போழிகின்ற ஓடம்போல திக்குத் தெரியாமல் அவளே ஓடிக்கொண்டிருக்கிறாள். அவள் இருப்பதனால் பயனுண்டா? இறப்பதற்கும் கூட அவளுக்கு வழி கிடைக்கவில்லை.
ஓடம்போல ஓடுகின்றேன்
நான் கரை சேரவில்லை
நீயும் வந்து பாரமானாய்
சுமைகொள்ள யாருமில்லை
பந்தபாசம் இங்கே பாரமானால்
இருப்பதில் லாபமில்லை - அட
இறக்கவும் நேரமில்லை (2 - 168)

கவிஞர் சொல்வது போல எந்தத் தாயும் கனவுகளில் ஏழையில்லை. சொர்க்கத்தை ஒரு தாய் கனவு காண்கிறாள். அப்படியாவது ஒரு தாய் மனம் மகிழட்டுமே.
கையிரண்டில் அள்ளிக்கொண்டு
காதோடு அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்
ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்
சிங்காரத் தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும். (1 - 198)
அவள் பாடும் தாலாட்டில் விண்மீன்கள் எல்லாம் உறங்குகின்றன. கனவுகளுக்கு அழைப்பு விடுக்கிறாள். தென்றலையும் துணைக்கு அழைக்கிறாள்.
தேனூறும் ராகம்
நான்பாடும் நேரம்
விண் மீன்கள் வானின் மேலே
தூங்குதே
கண்ணின் மணியே
நீயும் உறங்கு.

கனவுகளே கனவுகளே
இரவென்னும் தீபம்
எரிகின்ற நேரம்
வாசல் தேடி வாருங்கள்

தென்றல் வீசும்
கண்ணுறங்கு
உன்னை நீயே
மறந்துறங்கு
....
அன்னை நெஞ்சில்
சாய்ந்திருங்கள்
இன்னும் கொஞ்சம்
ஓய்வெடுங்கள். (2 - 49)
ஒரு குழந்தைக்கு அன்னை நெஞ்சைவிடச் சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்? ‘பசியாறப்பால் படி; களைப்பாறப் பஞ்சுமெத்தை’ என்பதை தான் கவிஞர் இவ்வாறு பாடினாரோ?
எந்தக் குழந்தை குடித்தாலும் ஒரு தாயின் மார்பு சுரக்கும். அக்குழந்தையும் அவளின் சொந்தம் குழந்தையாகி விடும்.
கண்ணீரில்
சந்தோஷம்
நானின்று காண்கிறேன்.

தாயாக இல்லாமல்
தாலாட்டும் பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண்மூடு
சுகமாய் இரு (1 - 182)
இனி, தான் பெற்ற பிள்ளைக்கும் பாலூட்டும் பேரின்பம் கிட்டாத தாய்மார்களும் உளவே. அவை பற்றிக் கவிஞர் எங்கும் பாடியதாகத் தெரியவில்லை.
ஆனால் தாய்ப்பாலுக்குப் பட்ட கடனை யாரால் தீர்க்க இயலும்? நன்றி கெட்டு ஓடுகின்ற பிள்ளைக் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது.
பெத்தபுள்ள தந்தபணம் உப்புக்கு அகுமா?
தாய்ப்பாலுக்குக் கணக்குப் போட்டாத் தாலி
மிஞ்சுமா?
காலில் ஒரு முள்ளுத் தச்சா கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு தூசு பட்டா கைதான் ஓடுது.

பாசத்துக்கு றெக்கை மெளச்சுப்
பறந்து போகுது தன்னாலே. (2 - 30)

இவ்வாறு கவிஞர் வைரமுத்து அவர்களில் பாடலில் தாய்மை எனும் பாசமும் பெருக்கெடுத்து ஓடும் நயத்தினையும் தாய்மை படும் துன்பத்தையும் நாம் தெளிவாகக் காண முடிகிறது.
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு - தாய்மை  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு - தாய்மை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 16, 2011 10:30 am

தேவையான பகிர்வு பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum