தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

3 posters

Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by ரௌத்திரன் Fri Mar 01, 2013 11:31 pm

பஞ்சணை மீதில் இன்பப்
-------பழவுடல் கிடக்கும்; சோகம்
நெஞ்சணை உடைக்கும்; உள்ளே
-------நெருக்குமோர் நினைவி னாலே!
அஞ்சன விழியி ரண்டும்
-------அழுதிடும் கேணி தன்னை
மிஞ்சிட நினைத்தாற் போல
-------முப்போதும் நீர்சு ரந்து!

காவியம் பேசும் கண்கள்
-------கவலைகள் பேச; ஆண்கள்
ஆவியைப் பறிக்கும் பார்வை
-------ஆற்றாமை பேச; சிரிப்பு
ஓவியம் தீட்டு கின்ற
--------இதழ்களோ வாட்டம் பேச
நீவிட விரல்கள் இன்றி
-------நீள்குழல் வெளுக்கப் பார்க்கும்!

ஆறுதல் சொல்வ தற்கு
---------அன்புள உறவும் இல்லை!
ஆறுதல் சொன்னால் கூட
---------ஆறிடும் காய மில்லை!
ஆறுதல் தானே கொள்ள
---------அத்தனை முதியள் இல்லை!
ஆறுதல் அவளுக் குண்டேல்
---------அதன்பெயர் சாவின் எல்லை!

ஓர்ஆளன் இன்றி நாளும்
--------ஒடிவாளைத் தனிமை மேலும்
ஓர்வாளைப் போல வாட்டும்!
--------நிராயுத பாணி யாகப்
போர்வாளின் முன்த விக்கும்
--------போர்வீரன் போல நின்றாள்!
கூர்வாளாம் கண்கள் கூட
--------மழுங்கிய வள்என் செய்வாள்?

இச்சித்து வாழு கின்ற
-------இனிதான வாழ்வு இல்லாள்
இச்சென்ற ஒன்றி னின்று
-------இதயத்தை மீட்கப் பார்த்தால்
"இச்"சென்று பல்லி கூட
-------இசைத்திடும் வேண்டு மென்றே!
கச்சணி மாது நெஞ்சைக்
--------கசக்கிடும் எண்ணம் கொண்டே!

தாகமே தீரு முன்பு
-------நீர்க்குடம் கவிழ்ந்தாற் போல
ராகமே இசைக்கு முன்பு
-------வீணைதான் எரிந்தாற் போல
வகையைச் சூடு முன்பு
-------கழுத்துதான் அறுந்தாற் போல
சோகமே வடிவாய்க் கொண்டு
--------சேயிழை நின்றா ளம்மா!

நகையினை இழந்த பாவை
--------நெஞ்சத்து பாரம் தன்னில்
முகையிதழ் மேனி சற்று
--------மெலிந்தனள்; எனினும் கூட
புகையது நெருப்பு இன்னும்
---------அணைந்திட வில்லை யென்று
பகர்வது போலக் காமம்
---------பாவையைப் படுத்தி வைக்கும்!

இருபத்து ஏழு அந்த
--------இனியவள் வயது; கொஞ்சம்
முறுவலை இழந்த தாலே
---------முப்பத்து நான்கு போல
ஒருபெருந் தோற்றம் காட்டும்!
---------ஓ!அவள் முடிந்த தெல்லாம்
பருவத்துத் தோட்டந் தன்னில்
---------பகல்கனா பூக்க ளென்பேன்!


கட்டிலின் சுகத்தைக் கண்டு
-------கனியுடல் சிலிர்த்தா ளில்லை!
கட்டிய கணவன் மார்பில்
-------கண்மூடிக் கிடந்தா ளில்லை!
கட்டிய கணவன் உண்டு
--------கழுத்தினில் தாலி இல்லை!
விட்டமே பார்த்தும் பார்த்தாள்
--------விசனமே குறைய வில்லை!

மயக்குறு வாழ்வு பெற்று
--------மனமது நிறையா பெண்ணாள்
வயிற்றினை நிரப்ப வேண்டி
--------வேலைக்குப் போவாள்; ஆங்கே
"வயப்படு வாளா?" என்றே
--------வடிவுடல் சுவைக்கப் பார்க்கும்
நயவஞ்ச எண்ணங் கொண்ட
--------நாய்களால் இதயம் நைவாள்!

எட்டிய வாழ்வை விட்டு
--------எட்டியே சென்ற நாளை
எட்டிய வாழ்வு தன்னில்
--------ஏங்கியே நின்ற நாளை
எட்டிய வாழ்வு முற்றும்
--------எட்டியாய் ஆன நாளை
சொட்டிய விழியின் நீர்தான்
--------சுட்டியே காட்டக் காண்பாள்!





(காவியம்-தொடரும்)

-------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 02, 2013 10:54 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 2:46 pm

தொடருங்கள்... காத்திருக்கிறோம்... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum